இன்பத்தமிழன் தி.மு.க வில் நேற்று இணைந்த செய்தியை படிக்கவே வேதனையாக இருந்தது என்பதை விட மிகவும் ஆத்திர அடைய வைத்தது. தனக்கு இந்த தேர்தலில் போட்டி இட இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக அவர் கட்சி மாறினார் என்றாலும் இந்த கேடு கெட்ட அரசியவாதிகளின் வழக்கமாக செயல் தானே என எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் அவர் கூறி இருக்கும் காரணம் தான் என்னை அதிர்ச்சி அடைய செய்தது. அவர் கூறி காரணம்
"அ.தி.மு.க.வில் இருந்தவரை அடிமை போல் நடத்தினார்க்கள். தன் தந்தை தாமரைக்கனிக்கு இறுதி சடங்கு கூட செய்யவிடவில்லை. சர்வாதிகாரர் ஆன ஜெயலலிதா நான் வேண்டுமா இல்லை உன் தந்தை வேண்டுமா எனக் கேட்டார். அவர் தந்தைக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசியல் செய்ய நிர்ப்பந்திக்க பட்டார்."
என்னயா யார் காதுல பூ சுத்துரிங்க. எங்கள எல்லாம் கேண பய என நினைத்து விட்டிர்க்களா? நான் வேண்டுமா, தந்தை வேண்டுமா எனக் கேட்ட போது எனக்கு இரத்தமும், சதையும் கொடுத்த என் தந்தை தான் வேண்டும் எனக் கூற வேண்டியது தானே. உன் சுய புத்தி அப்பொழுது எங்க போச்சு. தந்தையை எதிர்த்து தானே போன தடவை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி அடைந்தீர்க்கள். தன் தந்தையின் பெயரை இன்சியலாக போடுவது பாவம் எனக் கூறியது நீங்கள் தானே, இல்லை இதுவும் ஜெயலலிதா சொல்லிக் கொடுத்து சொன்னீர்க்களா? இப்படி எல்லாம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன் என மிரட்டினார்க்கள் எனக் கூற போகின்றீர்க்களா? பெத்த அப்பனை எதிர்ப்பதற்கு பதில் இறப்பதே மேல் எனக் கூறி இருக்க வேண்டியது தானே. பெத்த தன் தந்தையின் பிணத்தின் மேல் வர்கார்ந்து பதிவிக்காக பிணந்திண்ணி அரசியல் நடத்தி விட்டு இன்று தி.மு.க.வில் இணைந்து உள்ளார். போன நாடாளுமன்ற தேர்த்தலில் நீங்கள் தி.மு.க வேட்பாளருக்கு எதிராக ஆடிய ஆட்டத்திற்கு தி.மு.க.விடம் விளக்கம் கொடுத்து விட்டிர்க்களா?
பெற்ற தந்தைக்கும், அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் இன்று வேறு கட்சியில் இணைந்து உள்ளார். அங்கே ஆவது தொடர்ந்து இருக்க வாழ்த்துவோம்!
இன்பதமிழா வாழ்க! வளர்க! உன் அரசியல் சேவை தொடர்க!
இந்த தேர்தலின் போது இவ்வளவு கேவலமாக, கீழ்தரமாக, மட்டகரமாக தமிழக அரசியல் போகும் என கனவிலும் நினைத்ததில்லை. உருபடியான ஏதாவது ஒரு கட்சி இங்க இருக்கா?
தனக்கு எல்லாரும் அடிமையாக இருக்கனும் என்று ஒரு கட்சி.
தன் குடும்ப மட்டும் தான் நல்லா இருக்கனும் என்று ஒரு கட்சி.
இந்த தடவை எப்படியும் சட்டசபையில் நுழைந்து விட வேண்டும் என்று ஒரு கட்சி
டில்லிக்கு காவடி தூக்கி அடுத்தவன் வேட்டியை உருவதற்காக ஒரு கட்சி
தன் பேத்தியை டில்லி கான்வெண்டில் படிக்க வைத்து இங்கு தமிழ் என முழங்கும் சாதிக்கட்சி.
நேற்று கட்சி தொடங்கி இன்று கோட்டையை பிடிக்க கனவு கானும் ஒரு கட்சி.
ரஷ்யாவில் மழை பெய்தால் இந்தியாவில் குடை பிடித்து ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு சித்தாந்தம் பேசும் இரு கட்சி.
அது போக மழையில் முளைத்த காளான் போல் பல கட்சிகள் தேர்தலின் போது தலைக்காட்டி உள்ளன.
(இதுல டில்லி காவடி பார்ட்டிகளை துரத்தி துரத்தி அடிக்கனும், அவர்க்களை பற்றி விரைவில் ஒரு பதிவு.)
என்னையா குறைச்சல் உங்களூக்கு? அரசியல்வாதி என்றால் எதையும் செய்யலாமா? உங்களுக்கு எல்லாம் மனட்சாட்சி என்பதே கிடையாதா? எப்படியா உங்களுக்கு எல்லாம் தூக்கம் வருகிறது. சாப்பிடும் சாப்பாடு ஜீரணம் ஆகுதா?எங்கடா அப்பா எங்கள இந்த கண்றாவிய எல்லாம் காண வைக்கிறிங்க. எப்படா தேர்தல் முடியும் என்று இருக்கிறது. போதுமடா சாமி உங்கள நம்பினது போதும், உங்கள ஒரு வார்த்தை தப்பா சொல்லுற அயல்நாட்டவர்களை நார் நாராக கிழித்து வக்காலத்து வாங்கியதும் போதும். ஆள விடுங்கடா சாமி.
வேதனையுடன்
நாகை சிவா
Wednesday, May 03, 2006
பிணந்திண்ணி அரசியல்
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Wednesday, May 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//பெத்த அப்பனை எதிர்ப்பதற்கு பதில் இறப்பதே மேல் எனக் கூறி இருக்க வேண்டியது தானே. பெத்த தன் தந்தையின் பிணத்தின் மேல் வர்கார்ந்து பதிவிக்காக பிணந்திண்ணி அரசியல் நடத்தி விட்டு //
சிவா,
உங்க மனசுலதான் எவ்வளவு கோபம் இந்த கட்சிகளைப் பாத்து!!! நேற்று செய்தி பார்த்தவுடன் எனக்கும் உங்களைப் போல கோபம்தான் வந்தது.... ஆன இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது, நம்ம நெலமை தேவலையே.... இவனுகளப் போல ஊருக்குள்ள திட்டு வாங்கத் தேவையில்லன்னு சந்தோஷமாகவும் இருந்திச்சு. முடிந்தால் அந்த ஆளுக்கு உங்க பதிவை அனுப்பி வையுங்க.. நாக்க புடுங்கிகட்டும்...
நல்லா ஒரு கலைஞர், ஒரு அம்மா, ஒரு கேப்டன், ஒரு ராமதாசு... இந்த நாடு உருப்புடுமா?
என்ன முத்து, வெறும் அமைதி தானா..............இதை பற்றி தமிழனின் பார்வை என்ன?
chithi, உங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி. இது போன்ற கேடு கேட்ட அரசியல்வாதிகள் எத்தனை பேர் வந்தாலும், இந்த நாட்டின் வளர்ச்சியை நிறுத்த முடியாது என்பது என் கருத்து.
Sankar from Nagai said
by the Way i Forwarded Your homepage to inbatamizhan and
thangamangani(Tamarikani younger son)
Dear Siva! we are very much pleased to see your website. Every alphabet of your website shows how much you are proud to say that you are the citizen of India. I mean your comments about the indian politics. (Inbath Thamaizhan)
Then part about the festival of Nellukadai mariammal kovil festival shows that every humanbeing must must not forget their soil. we liked your style of writing.
சங்கர்,
நண்பா நீ எதை செய்தாலும் என் நண்மைக்கு தான் செய்வாய் என்பது இத்தனை வருட நட்பில் எனக்கு தெரியாதா என்ன? உனக்கு ஒரு மேட்டர் தெரியாதா இன்பதமிழன் நம்ம ------ ஒரு வகையில் சொந்தம். ஏதா இருந்தாலும் அவர்களை மீறி தானே வரனும் பாத்துக்கலாம் விடு.
நன்றி செல்லஜினி(யாதவ்).
உங்களின் வருகையும் பின்னூட்டங்களும் எனக்கு மிக்க மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளித்து உள்ளது. அடிக்கடி விஜயம் செய்து ஊக்கபடுத்த வேண்டுகிறேன்
நல்ல பார்வை; நியாயமான கோபம். தொடர்ந்து நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும்.
-குப்புசாமி செல்லமுத்து
நன்றி குப்புசாமி செல்லமுத்து!
கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்.
Post a Comment