மக்களே! இன்று என் மின் அஞ்சலுக்கு வந்த சில புகைப்படங்களை இங்கே கொடுத்து உள்ளேன். இந்தியா 2020வில் இப்படி இருக்கும் என கூறுகின்றார்கள். இது கிராபிஸ் திருவிளையாடலா இல்லை உண்மையில் இப்படி ஏதும் திட்டம் இருக்கா என்று தெரியவில்லை. ஆனா புகைப்படங்களை கானும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. தாமதமாக(2020) நடந்தாலும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சரி. "BETTER LATE THAN NEVER" ஆனால் இதுல வருத்தம் என்னா தமிழ்நாட்டை பத்தி ஒரு புகைப்படம் கூட இல்லை. நம்ம பத்ரி கூறியதை போல தமிழகத்தில் 2010க்குள் மெட்ரோ ரயிலை சென்னையில் செயல்படுத்த வேண்டும். சென்னையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தமிழகம் முழுவதும் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். சரி நம் தமிழகத்தை பத்தி பிறகு வேற ஒரு பதிவில் விரிவாக காணலாம்.
கனவுகள் (புகைப்படங்கள்) மெய்பட வேண்டும்..........வேண்டுவோம்!
புகைப்படங்கள் குறிப்பு:
1 - மும்பை
2 - பெங்களூர்
3 - கொச்சின்
4 - கோவா
14 comments:
ஏங்க, சென்னை இல்லேயா?
கடைசிப் புகைப்படத்தப் பார்த்தா எங்க ஊர் அமராவதிப் பாலம் மாதிரித் தெரியுதுங்க.. :)
கடைசி இரண்டு படம் எதுக்கு போட்டீங்க ஒன்னுமே புரியல
2020
அருமையா படம் காட்டறீங்க. எல்லாம் நடந்தா சரி :)
வாங்க மகேஷ்! பல புகைப்படங்கள் வந்தது. ஆனா ஒன்று கூட சென்னை இல்லீங்க
என்னங்க அருட்பெருங்கோ! இது அரசியல் பதிவு இல்லைங்க. இதில் போயி அமராவதி பாலத்த பத்தி பேசுறிங்க.(அமராவதி பத்தி பேசினாலே அரசியல் தான?)
உண்மையில் எனக்கு அது உண்மையா, அல்லது வேறு இடத்தில் இருந்து எடுத்த புகைப்படமா என்பது தெளிவாக தெரியவில்லை. அடுத்த முறை இது போன்ற தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றேன்.
அனாமி! நீங்க என்ன சொல்ல வருகின்றீர்க்கள் என்று எனக்கு புரியவில்லை.
நவீன சென்னையை காணலையே தலைவா?
ஆமாங்க அனு! எல்லாம் நடந்தா சரி
ஏன் தெரியலை, சிங் ஜெயகுமார், நவீன சென்னைய விட்டுடான்ங்க
இதே புகைப்படங்களை நானும் மின்னஞ்சல்களில் காண நேர்ந்தது. கனவு மெய்ப்பட வேண்டும்..
-குப்புசாமி செல்லமுத்து
ஆம், கண்டிப்பாக மெய்பட வேண்டும்
சென்னை ஏற்கனவே இந்த அளவு முன்னேறிட்டுதோ என்னவோ!! முன்னேறாத மாநிலங்கள பத்தி சொல்லி இருக்காங்க அப்படின்னு நம்மளே நம்மளே தேத்திக்க வேண்டியது தான்
பிரசன்னா
ஆமாங்க, இது போல் ஏதாவது சொல்லி நம்மள நாமே தேற்றி கொள்ள வேண்டியது தான்.
Post a Comment