உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக ஒரு வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு
பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை குடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்
யுத்தம் சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்
பாட்டு எல்லாம் நல்லா எழுதுறாங்க நம்ம ஆளுங்க. ஆனா பாருங்க யுத்த சத்தம் கேட்டவுடன் ஈழத் தமிழர்களுக்காக பொங்கிட்டு இருந்த நம் மக்கள் முத்த சத்தம் வந்தவுடன் யுத்த சத்தத்தை சிறிதே மறந்து கொண்டாட்ட மூடுக்கு வந்துட்டாங்க போல. இது நமக்கு என்ன புதுசா என்ன. மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே ஒரு சோக நிலையில் ஆங்கில புத்தாண்டை எதிர்கொண்டால் சென்னையில் ஆட்டம் என்ன பாட்டம் என்னனு அசத்தின ஆளுங்க ஆச்சே நாம, இப்ப மட்டும் சும்மா விடுவோமா என்ன. வலைப்பதிவில் ஆரம்பிச்சு வார இதழ்கள் வரை ஏதுவும் மிஞ்சம் வைக்காமல் தடபுடலாக காதலர் தினத்தை கொண்டாடியாச்சு. அதிலும் ஒரு பத்திரிக்கையில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் காதலர் தினம் முடிந்ததுனு செய்தி வேற. ஏன்ய்யா காதலர் தினம் என்ன சுகந்திர தினமா இல்லை குடியரசு தினமா... இன்னும் போனா வரலாறு காணாத பாதுகாப்பு வேற போடுவீங்க போல. இந்தியா இலங்கையில் சென்று கிரிக்கெட் ஆடியதை மன்னிக்க முடியாத குற்றமாக தெரிந்த நமக்கு இதை மட்டும் கொண்டாட முடிகிறது. என்னத்த சொல்ல.
அது போகட்டும் ஈழம் என்னாச்சு, ஜனாதிபதியின் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது, அய்யோடா தேர்தல் நேரத்தில் இப்படியாகி போச்சே எப்படி சமாளிப்பதுனு டில்லி பயணம் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் பிச்சுக்கிட்டு போக நம் மக்களும் காதலர் தின வாழ்த்துக்கள், பிங்க் ஜட்டி னு தடம் புரண்டு திசை திரும்பிட்டுடாங்க. அடுத்து சிதம்பரம் கோவில், பட்ஜெட்
னு நூல் பிடிச்சு இனி நாடாளுமன்ற தேர்தலில் முழு கவனத்தையும் திருப்பிடுவாங்க. அங்க அவங்க நிலைமை எப்பொழுதும் போல திரிசங்கு நிலைமை தான்.
இதே நிலைமை தான் உலக அளவிலும். இந்தியா தேர்தலுக்கு என்பதை விட திருவிழாவிற்கு தயாராகி விட்டது, திருவிழா முடியும் வரை எதுவும் அவர்கள் காதில் விழாது. அத்வானி ஈழ தமிழர் ஆதரவு எந்த வகையிலும் தற்ச்சமயம் பயன் அளிக்க போவது இல்லை. உலக நாடுகளுக்கு தற்போதைய கவலை எல்லாம் காசா, ஆப்கான், பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, சூடான், ஜிம்பாவே, காங்கோ போன்ற நாடுகளின் மீது தான் உள்ளது.
ஏன் இலங்கை மேல் உலக நாடுகளோ, ஐ.நா.வோ இது வரை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கு. அங்கு நடக்கும் இன படுகொலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ? ஒரு வேளை இலங்கை ஆப்பரிக்க கண்டத்தில் இருந்து இருந்தாலோ எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் கொண்டு இருந்தால் ஏதும் நடவடிக்கை எடுத்து இருப்பார்களோ என்னவோ?
ஐ.நா. வும் ஏதோ சொல்லனும் என்ற காரணத்திற்காக சிவிலியன் யாரும் பாதிக்கப்பட கூடாது என இரு தரப்பிறக்கும் ஒரு வேண்டுகோளை வைத்து அமைதியாகி விட்டது. ஐ.நா.வின் தற்போதைய கவலை எல்லாம் சூடானின் டார்பூர் மீது தான் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஐ.சி.சி. அரெஸ்ட் வாரண்ட் குடுக்குமா குடுக்காதா? அப்படி கொடுத்தால் சூடானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் என்ன ஆகுமோ அதை எப்படி சமாளிப்பது என்று தான் உள்ளது.
WFP காட்டு கத்து கத்திக் கொண்டு இருக்கிறது, போரினால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொண்டு செல்ல இரண்டு வாரமாக முயற்சி செய்தும் முடியவில்லை என்று. கேட்கதான் நாதியில்லை.இந்நிலையில் கப்பல் மூலமாக உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. காயம்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்வதாக ஐ.சி.ஆர்.சி. கவலை தெரிவித்து உள்ளது. யுனிசெப் விடுதலை புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்து வருவதாக கவலை தெரிவித்து உள்ளது. இப்படி எல்லாரும் மாற்றி மாற்றி கவலை மட்டும் தான் தெரிவிக்குறாங்க. அதை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது முடியவில்லை என்பது தான் சோகம்.
விடுதலை புலிகள் மற்ற சமயங்களை போல் இந்த தடவை உக்கிரமான பதில் தாக்குதல் கொடுக்காமல் தற்காப்புக்கில் ஈடுப்பட்டது, உலக நாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு மிக கடுமையான கண்டனம் வரும் அதை வைத்து உலக நாடுகளின் நல்லுறவும் மீண்டும் கிட்டும் என்ற எண்ணத்தில் தான் போர் மரபுகளை மீறாமல் சண்டையிட்டு வந்ததாக நான் கருதுகிறேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எண்ணம் ஈடேறாத காரணத்தால் அவர்கள் மீண்டும் கொரில்லா யுத்தத்தில் இறங்கி விட்டார்கள். ஆளும் கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கொடுத்த வெற்றி இலங்கை ராணுவத்தை இன்னும் படுபாதக செயல்களை செய்ய தூண்ட வைக்கும் என்ற நிலையில் விடுதலை புலிகளின் நிலையை குறை சொல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் இலங்கை அரசால் மிக பெரிய அளவில் உலக மீடியாவில் பதிவு செய்கிறது. ஆனால் இலங்கை ராணுவத்தினர் செய்யும் இனப்படுகொலைகள் அந்த அளவில் உலக மீடியாவில் பதிவு செய்யபட வில்லை.
வேற என்ன தான் வழி! ஐ.நா.வும், உலக நாடுகளும் தான். அவர்களை விட்டால் வேற வழி இல்லை. அவர்களோ இந்தியாவோ மனது வைத்தால் ஒழிய அங்கு ஒரு நிரந்திர தீர்வு ஏற்படுவது வெறும் கனவாகவே இருக்கும். அது வரை விடுதலை புலிகள் தக்க ஆயுத பலத்தோடும், மக்கள் ஆதரவோடும் இருக்க வேண்டியும் மிக முக்கியம். அதை விடுத்து ஆயுத போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அதே ஜல்லியை அடித்தால் இதே நிலைமை தான் என்றும் தொடரும். விடுதலை புலிகள் போய் வேறு ஒரு அமைப்பு, ராஜபாக்சே போய் வேறு ஒரு ஜனாதிபதி. இது வரை நடந்த கொடூரம் போதும் உலக நாடுகளின் காதிலும், ஐ.நா.வின் காதிலும் ஊதி கொண்டே இருப்பது தான் இப்பொழுது நம் முன் இருக்கும் ஒரே வழி. அதற்கு ஈழ தமிழர்களும், விடுதலை புலிகளும் மற்ற தமிழர்களும் தொடர்ந்து முயல வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை முயற்சிக்க வேண்டும்.
38 comments:
என்னடா புலி இன்னும் காதலர் தினத்தை பற்றி ஒன்னும் எழுதலையேன்னு பார்த்தேன்.. :)
எழுதியாச்சா?.. 3 பதிவுகளாக பார்க்கிறேன்.. இடைவெளிவிட்ட நாட்களில் (அ) மாதங்களில் நடந்த விஷயங்களை மறக்காமல் தொகுத்து எழுதிடறீங்க.. :)
சரி சீரியஸாக சண்டை போட நிறைய மேட்டர் எழுதி இருக்கீங்க.. நிறைய வேல இருக்கு முடிச்சிட்டு வரேன்...
வந்து இருக்குடீ..!! :)
//என்னடா புலி இன்னும் காதலர் தினத்தை பற்றி ஒன்னும் எழுதலையேன்னு பார்த்தேன்.. :)//
ஆக மக்கள் நம்மகிட்ட இருந்து எதிர்பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க போல ;)))
//சரி சீரியஸாக சண்டை போட நிறைய மேட்டர் எழுதி இருக்கீங்க.. நிறைய வேல இருக்கு முடிச்சிட்டு வரேன்... //
சண்டை போடவா! சரி வாங்க. ஏதுவாக இருந்தாலும் சந்திக்க தயார். :)
Hi
உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.
உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.
வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
tamilblogger குழுவிநர்
சிவா
//வலைப்பதிவில் ஆரம்பிச்சு வார இதழ்கள் வரை ஏதுவும் மிஞ்சம் வைக்காமல் தடபுடலாக காதலர் தினத்தை கொண்டாடியாச்சு.//
* காதலர் தினம் :- உங்களை யாரும் கொண்டாட சொல்லவில்லை. உங்களை பார்த்து உங்களை சார்ந்தவர்கள் கொண்டாடுவதை உங்களை போன்றே நிறுத்துவார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷம் தரும் ஒரு விஷயத்தை நாம் ஏன் தடுக்கவேண்டும். ஏதோ ஒரு பெயரில் எதோ ஒரு காரணத்தை சொல்லி மனதளவில் சந்தோஷமாக இருக்கிறார்கள் இல்லையா. இருந்து விட்டு போகட்டுமே.. நமக்கு பிடிக்கலை செய்யவேண்டாம். இது செய்ய கூடாதா குற்றம் அல்ல..!! சரியா..:)
அடுத்து
//ஆனா பாருங்க யுத்த சத்தம் கேட்டவுடன் ஈழத் தமிழர்களுக்காக பொங்கிட்டு இருந்த நம் மக்கள் முத்த சத்தம் வந்தவுடன் யுத்த சத்தத்தை சிறிதே மறந்து கொண்டாட்ட மூடுக்கு வந்துட்டாங்க போல. இது நமக்கு என்ன புதுசா என்ன. மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே ஒரு சோக நிலையில் ஆங்கில புத்தாண்டை எதிர்கொண்டால் சென்னையில் ஆட்டம் என்ன பாட்டம் என்னனு அசத்தின ஆளுங்க ஆச்சே நாம//
சுனாமி சுனாமி ஒன்று வந்தது, குஜராத்தில் நிலநடுக்கம் வந்தது, முதல் இரண்டையுமே நாம் இப்போது மறந்தே விட்டோம் இல்லையா? உங்களிடம் கூட நான் கேட்டு இருக்கிறேன்.. சுனாமியில் நாகை மிக மோசமாக தாக்கப்பட்டது என்ன செய்தீர்கள் என்று? நீங்கள் சொன்னது "பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை, (இந்த பதிலில், உங்களால் செய்ய முடியவில்லை என்பதும் அடங்கும்)" உங்களின் இடத்தில் ஒரு மோசமான நிகழ்வுக்கு உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் எப்படி நாம் அனைவரையும் எல்லாவற்றிற்கும் அவர்கள் அப்படித்தான் ரியாகட் செய்யனும்னு நீங்க எதிர்ப்பார்க்கிறீர்கள்?
மும்பை தாக்குதல்.. யாரைடைய தவறு...?!! பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்கள்..!! அதற்கான பதிவை நீங்களே போட்டு இருக்கிறீர்கள்.. (-பிரதமருக்கு. என்று தலைப்பில் என்று நினைக்கிறேன்) மும்பை நகருக்கு தீவரவாத தாக்குதலுக்கு பிறகு நான் சென்றேன்.. நமக்கு இருக்கும் அந்த சோக, பதட்ட உணர்வை கூட நாம் மும்பை மக்களிடம் பார்க்கவில்லை. மிக இயல்பாக -
அடுத்து என்ன? என்று தான் இலக்கு இருந்தது..
நாமும் அடுத்து என்ன? என்று யோசிக்கலாமே..?! பழைய விஷயங்களை நினைத்து நம்மை நாமே ஏன் ஒரு இடத்தில் தேக்கிவைக்க வேண்டும்?!!
once upon a time, we could rely on international media like BBC for true stories which are collected by credible journalists who actually go to the conflict zones even if it is dangerous and detrimental to their lives.
but nowadays the media is only interested in spinning stories.
take the example of war in srilanka.
the srilankan govt has ordered the internatinal and local media out of the conflict zone many months ago,not only that, they have put a strict censor in the local media and lot of journalists are killed ,arrested and intimidated by srilankan govt and army.
Instead of protesting these measures and raising their voice for media freedom ,these so called international media are just repeating the false propaganda of the srilankan govt.
srilankan army is killing nearly fifty people,injuring two hundred people and putting cluster and posphorous bombs on civilians
do these media report these atricities ?,no!
but when srilankan govt says that tigers are using the civilians as human shields and shooting civilians, these same media are putting the stories as truth without verifying the stories.
they are not in vanni
real journalism is about working in the field and gathering information from the people.
these jouralists go to govt controlled area and talk to some tamil people.how can they get the real news when the tamils are scared of army which is keeping an eye on them while these journalists are speaking with tamil people.
In my opinion these media are becoming the mouth piece of srilankan govt and their army spreading false propganda.
not just the media I have lost faith in UN as well.
Un is supposed to be for the people,but now it has become a club to satisfy some countries and their political and military agenda.
people are killed and a genocide is taking place in Srilanka and the UN is keeping queit.
They are again keeping a blind eye towards the state terrorism .
They are not condemning the action of the srilankan govt,but just condemning tigers about human shields , UN staff are not in vanni,they are sitting in colombo and issuing reports.
like many people ,I am annoyed with these so called custodians of human rights,democracy and freedom.
It looks only in name.
ithula nee sonnathukaga than.. nan election la nikuren... makkalku nallathu panren sollren . kekkuriya...
ithu than nee sonna. hot a na post a?
mmmm
//காதலர் தினம் :- உங்களை யாரும் கொண்டாட சொல்லவில்லை. //
அடுத்தவங்க கட்டாயப்படுத்தி எல்லாம் யாரையும் எதையும் கொண்டாட வைக்க முடியாது. தைத்திருநாளை புத்தாண்டாக கொண்டாட சொல்லியும் இன்னும் மனம் ஏற்கவில்லை.
//உங்களை பார்த்து உங்களை சார்ந்தவர்கள் கொண்டாடுவதை உங்களை போன்றே நிறுத்துவார்கள். //
என்னை பார்த்து அவங்க எதுக்கு நிறுத்தனும். கொண்டாடுவதும் கொண்டாடமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சம்பந்தப்பட்ட விசயம்.
//எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷம் தரும் ஒரு விஷயத்தை நாம் ஏன் தடுக்கவேண்டும்.//
நான் எங்க தடுத்தேன். ஏன் இந்த ஆர்பாட்டம் என்று தான் கேள்வியே!
//ஏதோ ஒரு பெயரில் எதோ ஒரு காரணத்தை சொல்லி மனதளவில் சந்தோஷமாக இருக்கிறார்கள் இல்லையா. இருந்து விட்டு போகட்டுமே.. நமக்கு பிடிக்கலை செய்யவேண்டாம். இது செய்ய கூடாதா குற்றம் அல்ல..!! சரியா..:)//
குற்றம் னு நான் சொல்லவே இல்லை. நான் சொல்ல வந்த விசயத்தை நீங்க புரிஞ்சுக்கல. ஈழ தமிழர்களுக்காக பொங்கல் விழாவை புறக்கணிக்கனும், இந்தியா இலங்கையில் சென்று கிரிக்கெட் விளையாடியதால் இந்திய அணியை புறக்கணிக்கனும் னு எவ்வளவு பதிவுகள் எவ்வளவு காட்டு கத்தல்கள். அதில் முற்றிலும் புறக்கணிக்க முடியாத ஒரு நியாயம் இருந்தது. அதை எல்லாம் செய்ய முடிந்த நம்மால் இந்த காதலர் தினத்தை கொஞ்சம் அடக்கி வாசித்தால் தான் என்ன என்று தான் கேட்டேன்.
//சுனாமி சுனாமி ஒன்று வந்தது, குஜராத்தில் நிலநடுக்கம் வந்தது, முதல் இரண்டையுமே நாம் இப்போது மறந்தே விட்டோம் இல்லையா? //
விட்டோம்... எப்படிங்க நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீங்க. பாதிக்கப்பட்டவங்களை கேட்டு பாருங்க இப்பவும் உடம்பு சிலிர்க்கும், கண்களில் கண்ணீர் தானாக கோர்க்கும். என்னையும் சேர்த்து தான்.
//உங்களிடம் கூட நான் கேட்டு இருக்கிறேன்.. சுனாமியில் நாகை மிக மோசமாக தாக்கப்பட்டது என்ன செய்தீர்கள் என்று? நீங்கள் சொன்னது "பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை, (இந்த பதிலில், உங்களால் செய்ய முடியவில்லை என்பதும் அடங்கும்)" உங்களின் இடத்தில் ஒரு மோசமான நிகழ்வுக்கு உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் //
பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்பதற்க்கும் எதுவும் செய்ய முடியாத நிலை என்பதற்க்கும் நிறைய வேறுபாடு இருக்கு கவிதா!
//எப்படி நாம் அனைவரையும் எல்லாவற்றிற்கும் அவர்கள் அப்படித்தான் ரியாகட் செய்யனும்னு நீங்க எதிர்ப்பார்க்கிறீர்கள்?//
இது வரைக்கும் என்ன ரியாகட் பண்ணுனாங்க.. இதுக்கு என்ன ரியாக்ட் பண்ணுனாங்க என்று நீங்களே பொறுமையாக யோசித்து பாருங்க. என் எதிர்பார்ப்பு எல்லாம் வேறு.
//மும்பை தாக்குதல்.. யாரைடைய தவறு...?!! பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்கள்..!! அதற்கான பதிவை நீங்களே போட்டு இருக்கிறீர்கள்.. (-பிரதமருக்கு. என்று தலைப்பில் என்று நினைக்கிறேன்) //
ஆமாம் எழுதினேன். அதற்காக எல்லாத்தையும் இந்திய அரசே பாக்கனும். எனக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்று இருக்க சொல்லுறீங்களா? யாருடைய தவறு என்றால் நம் தவறு தான் மிக அதிகம் என்று சொல்வேன்.
//மும்பை நகருக்கு தீவரவாத தாக்குதலுக்கு பிறகு நான் சென்றேன்.. நமக்கு இருக்கும் அந்த சோக, பதட்ட உணர்வை கூட நாம் மும்பை மக்களிடம் பார்க்கவில்லை. மிக இயல்பாக -//
கவிதா! Ground Situation னு ஒன்னு சொல்லுங்க தெரியுமா? உதாரணத்துக்கு தேவர் மகன் படத்தில் கமல் சாப்பிடாமல் இருக்கும் போது சிவாஜி தன் குழந்தையை பறி கொடுத்த தாய் சாப்பிடுவதை காட்டி ஒரு வசனம் பேசுவார். ஞாபகப்படுத்தி பாருங்க. அதே போல தான் இதுவும்.
ஈராக்ல தினமும் பல குண்டு வெடிக்குது. ஆனாலும் அங்கு மக்கள் இயல்பாக தான் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். பதட்டமாக இருக்க இது ஒன்றும் முதல் தடவை இல்லையே!
//அடுத்து என்ன? என்று தான் இலக்கு இருந்தது..//
இங்கு இப்பொழுது அது இல்லை. அடுத்து எது என்று தான் இருக்கு. என் கணிப்பு, ஒட்டு எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கு தான்.
//நாமும் அடுத்து என்ன? என்று யோசிக்கலாமே..?!//
காதலர் தினம் முடிச்சாச்சு, அடுத்து தேர்தல் தான் என்று பார்த்தேன், அதுக்குள் நட்ராஜ் ரூபத்தில் சுப்ரமணியசாமி வந்துட்டார்.
கேவலமான ஒரு செயலை செய்து விட்டார்கள். அதற்கு காவடி தூக்கும் பல கூட்டம் கிளம்பிடுச்சு இங்க இப்ப. நடக்கட்டும் நடக்கட்டும்....
// பழைய விஷயங்களை நினைத்து நம்மை நாமே ஏன் ஒரு இடத்தில் தேக்கிவைக்க வேண்டும்?!!//
இது எதுக்கு சொன்னீங்க என்று சொல்லுங்க...
@ Vanathy!
மீடியாவை பற்றி நீங்கள் கூறியதை வழிமொழிகிறேன்! ஆனால்
//not just the media I have lost faith in UN as well.
Un is supposed to be for the people,but now it has become a club to satisfy some countries and their political and military agenda.//
ஐ.நா. வால் பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு இல்லாமல் ஏதும் செய்ய முடியாது. பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நாடுகள் விருப்பு, வெறுப்புடன் நடந்து கொள்வது தான் பிரச்சனையே!
//people are killed and a genocide is taking place in Srilanka and the UN is keeping queit.//
கண்டனம் எழுப்பி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அது அழுத்தம் தரக் கூடியதாக இல்லை என்பது என் கருத்து.
//They are again keeping a blind eye towards the state terrorism .
They are not condemning the action of the srilankan govt,but just condemning tigers about human shields //
இரு தரப்பினருக்கும் தான் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசின் மிக சிறந்த ராஜதந்திரத்தால் புலிகள் மீதான கண்டனம் அதிக அளவில் பதியப்பட்டுள்ளது.
//UN staff are not in vanni,they are sitting in colombo and issuing reports.
like many people//
இல்லங்க. ஐ.நா. ஊழியர்கள் 15 நபர்கள் அவங்கள் குடுபத்தை சேர்ந்தவர்கள் என 75 நபர்கள் இன்றைய வரை வன்னியில் தான் உள்ளார்கள். அவர்களை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப வேண்டும் என் ஐ.நா. இரு தரப்பிறக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளது. ஐ.நா. வால் ஒரு சில விசயங்களை மட்டும் தான் செய்ய முடியும். ஏன்னென்றால் ஐ.நா. இலங்கை அரசோடோ, புலிகளோடு ஏதும் உடன்படிக்கை (Mandate)ஏற்படுத்தவில்லை.
// ,I am annoyed with these so called custodians of human rights,democracy and freedom. It looks only in name.//
ஈழத்தில் அவர்கள் குரல் எந்த ஒரு விடிவையும் ஏற்படுத்தவில்லை என்பதை மட்டும் ஒற்றுக்கொள்வேனே தவிர உலக அளவில் பல இடங்களில் பலருக்கும் விடிவு அளித்து அளித்து கொண்டும் இருக்கின்றன என்பது என் கருத்து.
உங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி!
@ Raz!
Athu onnu than ippothaiku kurachal... Nee ozhunga sethukura velaiya paru! :)
// பழைய விஷயங்களை நினைத்து நம்மை நாமே ஏன் ஒரு இடத்தில் தேக்கிவைக்க வேண்டும்?!!//
இது எதுக்கு சொன்னீங்க என்று சொல்லுங்க...
//
எப்பவுமே ஒரு ரூல் இருக்கு சிவா, நடந்து முடிந்த விஷயங்களை நம்முடைய எடுத்துக்காட்டுகளாக கொள்ளலாமே தவிர்த்து, அதையே பேசிக்கொண்டு நேரத்தை செலவழிப்பது வீண். அந்த நேரத்தில் இப்போது என்ன செய்யலாம், இதற்கு பிறகு என்ன செய்யலாம்னு யோசித்து நடைமுறை படுத்தினால் பயன் தரூம்.
குறிப்பாக தேக்கி' என்று நான் சொல்லவந்தது.. ஒரு இடத்தில் நம்மையும் நம் சிந்தனை செயல் எல்லாவற்றையும் நிறுத்தி வைத்துவிடல். :)
//எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷம் தரும் ஒரு விஷயத்தை நாம் ஏன் தடுக்கவேண்டும்.//
நான் எங்க தடுத்தேன். ஏன் இந்த ஆர்பாட்டம் என்று தான் கேள்வியே! //
ஆர்பாட்டம் என்பது உங்களை பொருத்தவரை என்ன? நீங்கள் ஆர்பாட்டாமாக நினைக்கும் விஷயம் அவர்களுக்கு சாதாரணமாக இருக்க கூடம் இல்லையா? புதுவருடத்தை கொண்டாடவே வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவர் எத்தனையோ பேர்.
இதில் எதை நாம் இது சாதாரணம் இது ஆர்பாட்டம் என்று சொல்ல முடியும். ?! ஆராய ஆரம்பித்தால் பொருளாதாரம், தேவை, வளர்ப்பு, சூழ்நிலை என்று காரணங்கள் போய் கொண்டே இருக்கும்.
தனிமனிதனை பொருத்தது சிவா.. பிடிக்காத விஷயத்தில் நாம் ஒதுங்கி செல்லலாம்..
அதுவே குற்றமாக இருக்கும் பட்சத்தில் குரல் எழுப்பலாம், தட்டி கேட்கலாம்....
//என் கணிப்பு, ஒட்டு எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கு தான்.//
ம்ம் ஆமாம் வேறு என்ன இருக்கமுடியும்.. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று யோசியுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட நாம் என்ன செய்யவேண்டும் என்ன செய்தால் நிலைமை மாறும் என்று யோசியுங்கள்.. எதற்கு அவர்களை பற்றி கணித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டும்..
//அதுக்குள் நட்ராஜ் ரூபத்தில் சுப்ரமணியசாமி வந்துட்டார்.
கேவலமான ஒரு செயலை செய்து விட்டார்கள். அதற்கு காவடி தூக்கும் பல கூட்டம் கிளம்பிடுச்சு இங்க இப்ப. நடக்கட்டும் நடக்கட்டும்....//
உங்களுக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் நிறையவே நடந்துவிட்டது.. நல்ல நாக்கு. .மச்சம் இருக்கா?!! :)
//விட்டோம்... எப்படிங்க நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீங்க. பாதிக்கப்பட்டவங்களை கேட்டு பாருங்க இப்பவும் உடம்பு சிலிர்க்கும், கண்களில் கண்ணீர் தானாக கோர்க்கும். என்னையும் சேர்த்து தான். //
காயங்கள் கண்டிப்பாக ஆரும் சிவா.. அது தான் இயற்கை.. சரியா..
//பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்பதற்க்கும் எதுவும் செய்ய முடியாத நிலை என்பதற்க்கும் நிறைய வேறுபாடு இருக்கு கவிதா!//
ம்ம் புரியுது.. அது தான் நானே சொல்லிவிட்டேன் செய்ய முடியாத நிலை என்று அதுவும் ஒரு நிலைதானே.. சூழ்நிலை.. அப்படி பலர் சூழ்நிலையில் மாட்டி இருப்பார்கள் இல்லையா?
//யாருடைய தவறு என்றால் நம் தவறு தான் மிக அதிகம் என்று சொல்வேன்.//
ம்ம் கண்டிப்பாக நம் தவறு இருக்கு..ஆனால்.. உண்மை நிலவரம், இழப்பின், இறந்தவர்களின் மதிப்பீடு இலங்கை அரசால் சரியாக இன்று வரை அபிஷியலாக சொல்லப்படவில்லை. தவறான எண்ணிக்கை வெளிவந்துள்ளது. அதுவே பிறநாடுகளின் கவனம் இதன் மீது திரும்பாமல் இருக்க காரணமாக சொல்லப்படுகிறது.
நண்பரே, உங்கள் உணர்வும் எழுத்தும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது!!
வாழ்த்துக்கள்!!
//எப்பவுமே ஒரு ரூல் இருக்கு சிவா, நடந்து முடிந்த விஷயங்களை நம்முடைய எடுத்துக்காட்டுகளாக கொள்ளலாமே தவிர்த்து, அதையே பேசிக்கொண்டு நேரத்தை செலவழிப்பது வீண். //
அதையே பேசி என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதை பேசி ஒரு முடிவுக்கு வருவதில் தவறு ஏதும் இல்லை என்பது என் அபிப்ராயம்.
//ஆர்பாட்டம் என்பது உங்களை பொருத்தவரை என்ன? நீங்கள் ஆர்பாட்டாமாக நினைக்கும் விஷயம் அவர்களுக்கு சாதாரணமாக இருக்க கூடம் இல்லையா? புதுவருடத்தை கொண்டாடவே வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவர் எத்தனையோ பேர்.//
வெளியூர், வெளிநாடு பயணம் செய்பவர் எல்லாம் ஆர்பாட்டம் செய்கிறார்கள் என்று சொல்லவில்லை.
மதுரையில் அழகிரி பிறந்தநாள் விழா எனக்கு ஆர்பாட்டமாக தெரிந்தது. அவர்களை பொருந்தவரை அது ரொம்பவே சாதாரணம்.
இடைத்தேர்தலில் ஜெயித்த பிறகு சென்னையில் விழா நடத்தியது எனக்கு ஆர்பாட்டமாக தெரிந்து. அவர்களுக்கு அது சாதாரணம் தான்.
அதே போல தான் இந்த வருடம் (நல்லா கவனிங்க) காதலர் தனி கொண்டாட்டமும், ஆங்கில வருட பிறப்பு கொண்டாட்டமும் எனக்கு ஆர்பாட்டமாக தெரிந்தது.
//இதில் எதை நாம் இது சாதாரணம் இது ஆர்பாட்டம் என்று சொல்ல முடியும். ?!//
மேலே சொன்னவற்றில் ஏது சாதாரணம் ஏது ஆர்பாட்டம் என்பது உங்கள் கணிப்புக்கே விடுகிறேன்.
//ஆராய ஆரம்பித்தால் பொருளாதாரம், தேவை, வளர்ப்பு, சூழ்நிலை என்று காரணங்கள் போய் கொண்டே இருக்கும்.//
அந்த அளவுக்கு எல்லாம் போய் ஆராய வேண்டாம். விடுங்க.
//தனிமனிதனை பொருத்தது சிவா.. பிடிக்காத விஷயத்தில் நாம் ஒதுங்கி செல்லலாம்..//
தனிமனிதனை பொருந்தது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அது பொதுவுக்கு வராத வரை. வந்து விட்டால் நாம் ஒதுங்கி போகனும் என்பது எப்படிங்க ஏற்றுக் கொள்வது.
//அதுவே குற்றமாக இருக்கும் பட்சத்தில் குரல் எழுப்பலாம், தட்டி கேட்கலாம்....//
குற்றம் னு சொல்ல... தவறு என்று தான் சொல்லுறேன். உனக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் சொல்லாத என்று தான் சொல்லுறேன்.
////என் கணிப்பு, ஒட்டு எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கு தான்.//
ம்ம் ஆமாம் வேறு என்ன இருக்கமுடியும்.. //
என்னங்க பேசுறீங்க நீங்க. ஆகா ஈழம் பற்றிய பிரச்சனை ஒரு பொழுது போக்கு மட்டுமே. அடுத்த பிரச்சனை(விசயம்) வந்தால் இதை விட்டு அதுக்கு தாவி விடுவது.
//அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று யோசியுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விட நாம் என்ன செய்யவேண்டும் என்ன செய்தால் நிலைமை மாறும் என்று யோசியுங்கள்.. எதற்கு அவர்களை பற்றி கணித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டும்..//
இது போன்று கணிப்பது எல்லாம் நேரம் விரயம் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கனும். அந்த நெருப்பு போயிடுச்சு என்றால் எல்லாம் போச்சு.
//அதுக்குள் நட்ராஜ் ரூபத்தில் சுப்ரமணியசாமி வந்துட்டார்.
கேவலமான ஒரு செயலை செய்து விட்டார்கள். அதற்கு காவடி தூக்கும் பல கூட்டம் கிளம்பிடுச்சு இங்க இப்ப. நடக்கட்டும் நடக்கட்டும்....//
உங்களுக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் நிறையவே நடந்துவிட்டது.. நல்ல நாக்கு. .மச்சம் இருக்கா?!! :)//
இதுக்கு மச்சம் வேற வேணுமாக்கும். முசு புடிக்குற நாய முஞ்ச பாத்தாலே தெரியுமாம். அது போல தான் இதுவும்.
அடுத்த பரபரப்பு ஆரம்பம் ஆகிடுச்சு. தமிழனுக்கு பொழுதுபோக்கு பஞ்சமே இல்லை. அனுபவிப்போம்...
//காயங்கள் கண்டிப்பாக ஆரும் சிவா.. அது தான் இயற்கை.. சரியா..//
சரி ஆனால் மறக்காது. இது சரியா இல்லையா?
//பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்பதற்க்கும் எதுவும் செய்ய முடியாத நிலை என்பதற்க்கும் நிறைய வேறுபாடு இருக்கு கவிதா!//
ம்ம் புரியுது.. அது தான் நானே சொல்லிவிட்டேன் செய்ய முடியாத நிலை என்று அதுவும் ஒரு நிலைதானே.. சூழ்நிலை.. அப்படி பலர் சூழ்நிலையில் மாட்டி இருப்பார்கள் இல்லையா?//
நான் சொல்ல வந்தது. நான் செய்து எல்லாம் ஒரு பெரிய விசயம் எனக்கு தெரியல. அந்த நேரத்தில் யாரு இருந்தாலும் அதை தான் செய்து இருப்பார்கள். அதனால் அந்த Credit எனக்கு வேணாம் என்பதுக்கு தான் நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று சொன்னேன். அதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க என்று தெரியல. சரி பரவாயில்லை விடுங்க.
//ம்ம் கண்டிப்பாக நம் தவறு இருக்கு..ஆனால்..//
அது மும்பைக்கு சொன்னது.
//
உண்மை நிலவரம், இழப்பின், இறந்தவர்களின் மதிப்பீடு இலங்கை அரசால் சரியாக இன்று வரை அபிஷியலாக சொல்லப்படவில்லை. தவறான எண்ணிக்கை வெளிவந்துள்ளது. அதுவே பிறநாடுகளின் கவனம் இதன் மீது திரும்பாமல் இருக்க காரணமாக சொல்லப்படுகிறது.//
பிறநாடுகளின் கவனம் இதன் மீது திரும்பாமல் இருப்பதற்கு காரணம் முன்காலங்களில் கற்றுக் கொண்ட பாடமாக இருக்கலாம்.
அது போக எந்த அரசும் தான் இனப்படுகொலை செய்கிறேன், இவ்வளவு பேரை கொன்று குவித்தோம் என்று சொல்லாது. போர் என்ற அளவில் புலிகளை பற்றிய தகவல்கள் மட்டும் தான் கொடுக்கும்.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேரும்.
இலங்கை அரசு கொடுக்கும் தகவல்களை எந்த மீடியாவும் நம்பாது. அவர்கள் சார்புடைய மீடியாவை தவிர்த்து. ஏனோ இலங்கை பிரச்சனை பிரதான படுத்த இந்த முறை மீடியா முயலவில்லை. அதுவும் போக மீடியாவுக்கு நிறைய தீனி மத்திய கிழக்கு நாடுகளில் கிடைப்பதால் கண்டுக்கவில்லை.
//தமிழர் நேசன் said...
நண்பரே, உங்கள் உணர்வும் எழுத்தும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது!!
வாழ்த்துக்கள்!!//
நன்றி தமிழர் நேசன் - வருகைக்கும் ஊக்கத்திற்கும்.
//என்னங்க பேசுறீங்க நீங்க. ஆகா ஈழம் பற்றிய பிரச்சனை ஒரு பொழுது போக்கு மட்டுமே. அடுத்த பிரச்சனை(விசயம்) வந்தால் இதை விட்டு அதுக்கு தாவி விடுவது.//
சிவா யாரு உங்களை ஒன்றை விட்டு அடுத்ததற்கு தாவ சொன்னது. சரியா புரிஞ்சிக்கோங்க..
பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கு. .அவரவர் தரப்பில் (உங்களையும் சேர்த்து) ஏதொ ஒரு வகையில் அதை தடுக்கவோ / எதிர்த்து குரல் கொடுக்கவோ செய்து கொண்டுத்தான் இருக்கிறோம்.
அடுத்த பிரச்சனை வந்தால் அதையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்குமே இருக்கு இல்லையா?. ஒன்றில் மட்டுமே நம் கவனத்தில் கொள்ளாமல் அதனால் நம் மனம் சோர்வு அடைந்து விடமால் இருக்க நம்மை பார்த்துக்கொள்ளனும்னு சொல்றேன்.
அதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க என்று தெரியல. சரி பரவாயில்லை விடுங்க.
//
அது எல்லாம் விடமுடியாது .. தெளிவாக என்ன செய்தேன் ன்னு சொல்லுங்க.. நீங்க சொன்னதை வைத்துத்தான் நான் சொன்னேன்.. இப்ப நீங்களே வேறு மாதிரி சொன்னா..திருப்பி நான் ஏதாவது அதற்கு சொல்லனும் இல்லையா அதனால முதல்ல இருந்து என்ன செய்தேன் னு சொல்லுங்க..
ஏதாச்சும் புரிஞ்சிதா?....:)
இலங்கை அரசு கொடுக்கும் தகவல்களை எந்த மீடியாவும் நம்பாது. அவர்கள் சார்புடைய மீடியாவை தவிர்த்து. ஏனோ இலங்கை பிரச்சனை பிரதான படுத்த இந்த முறை மீடியா முயலவில்லை. அதுவும் போக மீடியாவுக்கு நிறைய தீனி மத்திய கிழக்கு நாடுகளில் கிடைப்பதால் கண்டுக்கவில்லை.
//
ம்ம்ம் எனக்கு இது புது தகவல்..
//காயங்கள் கண்டிப்பாக ஆரும் சிவா.. அது தான் இயற்கை.. சரியா..//
சரி ஆனால் மறக்காது. இது சரியா இல்லையா?
//
ம்ம் சரி மறக்காது....
அது போக எந்த அரசும் தான் இனப்படுகொலை செய்கிறேன், இவ்வளவு பேரை கொன்று குவித்தோம் என்று சொல்லாது. போர் என்ற அளவில் புலிகளை பற்றிய தகவல்கள் மட்டும் தான் கொடுக்கும்.
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேரும்.
//
இதற்கு திரும்பி வரேன்.. உங்கக்கிட்ட சும்மா பேசினா.. இப்படி ஏதாச்சும் சொல்லியே என் வாயை மூடுவீங்க.. will come with source man..wait ok :)
//ஆனால் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் இலங்கை அரசால் மிக பெரிய அளவில் உலக மீடியாவில் பதிவு செய்கிறது. ஆனால் இலங்கை ராணுவத்தினர் செய்யும் இனப்படுகொலைகள் அந்த அளவில் உலக மீடியாவில் பதிவு செய்யபட வில்லை. //
Very true.Srilanka succeeded lobbying Europe,USA and other nations to their benefits.
:-)
என்ன என்னமொ சொல்ல வந்தேன்... ஆனா ஸ்க்ரால் பண்ணீட்டு கீழ வந்தா.. எல்லாம் மறந்த மாதிரி இருக்கு...
@ மங்கை
//என்ன என்னமொ சொல்ல வந்தேன்... ஆனா ஸ்க்ரால் பண்ணீட்டு கீழ வந்தா.. எல்லாம் மறந்த மாதிரி இருக்கு...//
ரொம்ப குழப்பிட்டேனோ? ;)))
@ ராஜ நடராஜன்
//Very true.Srilanka succeeded lobbying Europe,USA and other nations to their benefits.//
உண்மை தாங்க. எதிர் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க ஆள் இல்லை. காலம் கடந்து கூக்குரல் எழுப்பிக்கிட்டு இருக்கோம்....
//இதற்கு திரும்பி வரேன்.. உங்கக்கிட்ட சும்மா பேசினா.. இப்படி ஏதாச்சும் சொல்லியே என் வாயை மூடுவீங்க.. will come with source man..wait ok :)//
வெல்கம்... சீக்கிரம் வாங்க.... :)))
//அது எல்லாம் விடமுடியாது .. தெளிவாக என்ன செய்தேன் ன்னு சொல்லுங்க.. நீங்க சொன்னதை வைத்துத்தான் நான் சொன்னேன்.. இப்ப நீங்களே வேறு மாதிரி சொன்னா..திருப்பி நான் ஏதாவது அதற்கு சொல்லனும் இல்லையா அதனால முதல்ல இருந்து என்ன செய்தேன் னு சொல்லுங்க..
ஏதாச்சும் புரிஞ்சிதா?....:)//
எனக்கு புரிஞ்சுது. :)))
//ம்ம்ம் எனக்கு இது புது தகவல்..//
இன்று ஒரு தகவல் மாதிரி ஒரு புது தகவல் கொடுத்து இருக்கேன். நன்றி சொல்லுங்க. பீஸ் அனுப்புங்க...
Post a Comment