இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோ வக்கீல்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்து உள்ளார்.
வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்று வைகோ கூறியுள்ளார்.
வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டிய விசயம் தான் அதே போல் சுப்ரமணியசாமி மீது அழுகிய முட்டை வீசியதற்கும் சேர்த்து வக்கீல்களை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தால் இதை வரவேற்று நாமளும் போய் ஆதரவு குரல் கொடுக்கலாம். ஆனால் வக்கீல்கள் ஏதுவுமே தவறு செய்தாத மாதிரியும் போலீசாரும் மற்றவர்களும் சேர்ந்து வக்கீல்களுக்கு அவபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை எல்லாம் செய்தாக அறிக்கையில் கூறி உள்ளார்.
//சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய அடக்குமுறையைக் கண்டித்து பிப்ரவரி 23-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.//
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வக்கீல்கள் பாதுகாப்பு இயக்காமாக மாறாத வரை சரி. தோளில் கருப்பு துண்டு போட்டு இருப்பதற்காக கருப்பு அங்கி அணிந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை வைகோ அவர்களே.
//வழக்கறிஞர்கள் மீது இந்தத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று பல நாள்களாகவே திட்டமிட்டு வந்துள்ளனர். குறிப்பிட்ட 19-ஆம் தேதி அன்று இந்தத் தாக்குதலை நடத்த வேண்டுமென்று திட்டமிட்டதால் கறுப்புப் பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் போட்ட வன்முறைக் கும்பலை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.//
யாருனு சொன்னா எல்லாருக்கும் தெரியும்ல. நீங்க சொல்வது போல சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கலாம்.
// சாக்கு மூட்டையில் கற்களைக் கொண்டு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் இந்தக் கற்கள் கிடையாது.//
உண்மையாக இருக்கலாம். நீதிமன்றத்தில் அழுகிய முட்டை கிடைக்குதே அது எப்படிங்க!
// காவல்துறையின் தலைமை ஆணையர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தால் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். பொதுச் சொத்துக்களை நாசம் செய்தால் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; வழக்கு போடலாம். ஆனால், கண்டவுடன் துப்பாக்கியால் சுடுவோம் என்று காவல்துறை ஆணையர் கூறுவது சர்வாதிகாரம் ஆகும்.//
இது முதல் தடவையாக இருந்தால் வழக்கு போடலாம், ஆனால் இதே வாடிக்கையாக அல்லவா வைத்து இருக்கிறார்கள். சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அதை போட்டு மிதித்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேறா. வர வர உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி கொண்டே போகிறது.
//வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர், உயர் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். உண்மையை அறிவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். //
வாஸ்தவமான பேச்சு. அதே போல காவல் நிலையத்தை கொளுத்திய வக்கீல்கள் மீதும், பொது சொத்திற்குக்கும், காவலர்களை தாக்கிய வக்கீல்கள் மீதும் மீண்டும் அவர்கள் வழக்காடவே கூடாது என்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்து கேளுங்கள்.
//வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 23-ஆம் தேதி திங்கள்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழகம் எங்கும் நடத்துகின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தொண்டர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கருப்புக் கொடியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//
ஆனா ஊனா இந்த தமிழ் உணர்வாளர்களை விட மாட்டேங்குறீங்க. ஒன்று மட்டும் நிச்சயம். இது போன்ற அராஜகங்கள் அயோக்கியத்தனங்களும் தொடர்ந்தால் மக்கள் கண்டிப்பாக நீங்க நியாயமாக நடத்தும் போராட்டங்களை கூட புறக்கணிக்க தொடங்குவார்கள் என்பது நிச்சயம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டு பாருங்களேன், வக்கீல்கள் மீது மக்கள் அபிப்பிராயம் எப்படி உள்ளது என்று. காரித் துப்புவார்கள். சுப்ரீம் கோர்ட் தமிழக வக்கீல்கள் தொடர்ந்து இது போன்று நடந்து கொள்வது நல்லதல்ல என்று கவலை தெரிவித்து உள்ளது. அதை படிச்சீங்களா?
இவர் தான் இப்படி என்றால் திருமாவளவன் அறிக்கை அதை விட மோசம். ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் நீங்க காட்டிய ஆர்வமும் உழைப்பும் அவர் மீது நல்ல மரியாதை வர வைத்தது. அதை அவரே அவரின் சமீபகால அறிக்கைகளின் மூலம் கெடுத்து கொள்கிறார்.
ஒரு இலக்கை வைத்து போராடும் போது அதை பற்றி மட்டும் கவலைப்பட்டு அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். முட்டையால் அடிப்பது, பொது சொத்துகளை சேதப்படுத்துவது என ஈடுபட்டு எதை நோக்கி தொடங்கினீர்களோ அதை விடுத்து இப்பொழுது கவனம் வேறு பக்கம் சென்று விட்டது. நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் பத்தாது அதை வழி நடத்தி செல்கின்ற ஆட்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.
நன்றி - விகடன்.
ஈழத் தமிழர்கள் ஆதரவாக அமெரிக்காவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி எஸ்.கே.
Sunday, February 22, 2009
வாழ்க சனநாயகம் - 4 (வைகோ அறிக்கை)
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Sunday, February 22, 2009
வகைகள் அறிக்கை, ஈழம், கண்டனம், வாழ்க சனநாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சிவா, நான் உங்கள் பதிவுகளை சில நாட்களாக ரசித்து படித்து வருகிறேன். உங்கள் அரசியல் ஆர்வமும், பகுப்பாய்வும் பாரட்டதக்கது.
உங்கள் இந்த பதிவை படிக்கும் போது உங்கள் கேள்விகளுக்கு, எனக்குள் தோன்றிய சில விடைகளை கூற விளைகிறேன்.
அடிப்படையாகவே, சுப்ரமணிய சாமி என்பவர் ஈழ போராட்டத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் எதிரானவர். மறுபுறம், வக்கீல்கள், அரசின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் ஈழ தமிழர்களுக்கு தொன்று தொட்டு ஆதரவு தருபவர்கள்.
கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், உங்களுக்கு இரு அணி உருவானது புலப்படும். ஒன்று, தமிழர்களுக்கு ஆதரவான, விடுதலை புலிகளை அங்கீகரிக்கிற அணி. இந்த அணியில் தான் வைகோ, திருமாவளவன் என (இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்), சீமான், வக்கீல்கள் உள்ளனர்...
இனொரு பக்கம் காங்கிரஸ், சுப்ரமணிய சாமி, ஸோ, போன்ற தமிழர் எதிரிகளும் உள்ளனர். சமீப காலமாக வக்கீல்கள் தொடர்ந்து தமிழகத்தில் ஈழ தமிழர்களுக்காக பல ஊர்களிலும் போராட்டங்கள், விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை தடுக்க கோரியும், அடக்க கோரியும், காங்கிரஸ் பல முறை ஆளும் தி.மு.க வை சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர்! அரசு ( தி.மு.க ) தன்னுடைய விஸ்வாசத்தை காட்டாக வேண்டிய சூழ்நிலையில், வக்கீல்களை தண்டிக்க காத்திருந்தது.
தி.மு.க வுக்கு சுப்ரமணிய சாமி மீது ராஜிவ் காந்தி காலத்தில் இருந்தே முரண்பாடு இருந்து வந்தது நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்...
மறு புறம் காவல் துறையும், இதற்க்கு முன்னர் சட்ட கல்லூரி விவகாரம் தொடர்பான அவதூறுகளை துடைத்து கொள்ள சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தது...
இந்த சூழ்நிலையில் கருப்பு புனை படை பாதுக்காப்பில் இருக்கும் சுப்ரமணிய சாமி, தன்னை வெறுப்பவர்கள் இருக்கும் இடத்திற்கே வருவது பஞ்சும் நெருப்பும் அருகருகே வருவதை போன்ற ஒரு நிகழ்வு... இது தன்னிச்சையாக நடப்பது காத்திருபவர்களுக்கு நல்ல சந்தர்ப்பமா இல்லையா?? (போலீஸ் அரசாங்கத்தின் (தி.மு.க + காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருப்பதை கவனத்தில் வைக்கவும்!)
இதற்க்கு மேல் என்ன நடந்திருக்கு, என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை...
காரியம் ஆகா வேண்டியவர்களுக்கு காரியம் முடிந்தது. இறுதியில் முட்டிக்கொண்டு மண்டை உடைத்துக்கொண்டு நிற்பவர்கள் போலீசும், வக்கீல்களும் தான். இது ஏற்க்கனவே 'ஆட்சியை தக்க வைக்க', பலர் காலில் விழுந்து ஆட்சியை பாதுகாத்து கொள்வதை விட, போதிய பலம் நிறைந்த காங்கிரஸ் காலை பிடித்தால் பல விதத்தில் லாபம் என்று கணக்கு போட்டு விட்ட தி.மு.க தமிழர் பிரச்சனையில் மெத்தனத்தை கடைபிடித்து பெரும் துரோகத்தை செய்வதை தாங்க முடியாத, எதிரணியில் (தமிழர்கள் பாதுகாப்புக்கு இயக்கம்) இருக்கும் அனைவருக்கும் கோபத்தை ஊட்டி இருக்கிறது...
நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் இதன் வெளிப்பாடுகளே..
பிழையிருந்தால் எடுத்து காட்டவும், சரியாக இருந்தால் ஏற்று கொள்வேன்...
நன்றி...
நல்ல வேளைப் பதிவாகப் போட்ட, தப்பிச்ச! இதுவே ட்விட்டரா இருந்தா - //இங்கே சு.சாமி என்ற பார்பான் அடிப்பட்ட்டவுடன் உள்ளேயிருந்த ஒநாய் முகம் வெளியே வந்துவிட்டது...// அப்படின்னு உம்ம புலி முகம் ஓநாய் முகமா மாறி இருக்கும். தப்பிச்சீரு!!
http://tamilarnesan.blogspot.com/2009/02/blog-post_22.html
for more info..
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
தமிழர் நேசன்! சிறிது நேரம் கழித்து வந்து உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கிறேன்.
நீங்கள் கூறுவதை அனைத்ததையும் ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய வாதமே வேறு.
@ தமிழர் நேசன்!
//சிவா, நான் உங்கள் பதிவுகளை சில நாட்களாக ரசித்து படித்து வருகிறேன். உங்கள் அரசியல் ஆர்வமும், பகுப்பாய்வும் பாரட்டதக்கது.//
மிக்க நன்றி. தொடர்ந்து இது போல வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
//நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் இதன் வெளிப்பாடுகளே..
பிழையிருந்தால் எடுத்து காட்டவும், சரியாக இருந்தால் ஏற்று கொள்வேன்...//
நீங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இதில் வக்கீல்கள் நேர்மையாக நடந்து இருந்தால் இன்னும் அவர்கள் மீது மதிப்பு ஏற்பட்டு இருக்குமா இல்லையா நீங்களே சொல்லுங்க. நீங்க சொன்ன மாதிரி பஞ்சும் நெருப்பும் பத்திக்குச்சு. முட்டையால் அடிச்சாச்சு, கன்னத்திலும் அறைச்சாச்சு. அதை தைரியமாக ஒத்துக் கொள்ள வேண்டியது தானே. தமிழனுக்கு ஏதிராக நடந்தால் இது தான் பரிசாக கிடைக்கும் என்று கர்ஜிக்க வேண்டியது தானே. ஆனால் அதை செய்யவில்லையே அவர்கள். ஒடி ஒளிந்தார்கள். பின்வாசல் வழியை தேடி கடைசியில் இதில் ஜாதியை கொண்டு வந்தார்கள். இது தான் தவறு என்கிறேன்.
நான் கூறியதில் ஏதும் தவறு என்றால் கூறுங்கள் திருத்தி கொள்ளகிறேன்.
@ கொத்தனார்!
ஒநாய் முகம் நமக்கு பொருத்தமாக இருக்குமா.. சரியா வராதே... வேறு மிருகம் கேட்டு பாருங்களேன்...
Post a Comment