நேற்று வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோவின் கண்டன ஆர்பாட்ட அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு இட்டு இருந்தேன். அடேங்கப்பா அதை படித்து அதில் உள்ள விசயத்தை உள்வாங்கமாலே சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவாக எழுதி இருக்கேன் ஒரு சாரார் முடிவு பண்ணிட்டாங்க போல. வக்கீல்களுக்கு கண்டனம் என்றால் சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு யாருங்க சொன்னா? சுத்த அறிவிலித்தனமாக இல்லை? இருந்ததும் அதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் சிலர் மெயிலில் இது குறித்து கேட்டதால் இந்த விளக்க பதிவு.
சுப்ரமணிய சுவாமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஒரு மண்ணும் கிடையாது. அவர் அவ்வபோது தன் பேட்டிகளின் மூலம் மக்களை சந்தோசப்படுத்தும் ஒரு அரசியல் காமெடியன். இது தான் அவர் மீது எனக்கு இருக்கும் கணிப்பு.
சுப்ரமணிய சுவாமி விடுதலை புலிகள் ஏதிரானவர் என்றும் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுப்ரமணிய சுவாமி அன்று நீதி மன்றத்திற்க்கு சென்றது சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பாக வழக்காட அனுமதி கோரி. அது நியாயமா இல்லையா என்பது வேறு. ஆனால் அதற்கும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கோர்ட் புறக்கணிப்பில் இருக்கும் வக்கீல்களும் என்ன சம்பந்தம். தங்களுடைய வன்மத்தை அவர் மேல் காட்ட முற்பட்டது ஏன்?
அப்படியே அவருக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் நீதிமன்ற வளாகத்தில் அவரை எதிர்த்து குரல் எழுப்பி இருக்கலாம். கருப்பு கொடி காட்டி இருக்கலாம். ஏன் முட்டையால் கூட அடித்து இருக்கலாம். அதை எல்லாம் அப்பொழுது செய்யவில்லை. ஏன் என்றால் அவருடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். அதான் அடிக்க தைரியம் இல்லை. அதை விடுத்து ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் உள்ளே சென்று, கதவுகளை தாழ் இட்டு கொண்டு அதுவும் நீதிபதிகளின் முன்னே அவர் மீது முட்டை அடித்தும், கன்னத்தில் அறைந்தும் நீதிமன்றத்தையே அவமதித்து உள்ளார்கள் நம் வக்கீல்கள். அதை தான் தவறு என்று சொல்கிறேன்.
சரிங்க, அதை மீறி அவர் மீது முட்டை அடித்ததுக்கு காரணம் ஈழ தமிழர்களுக்கு எதிராக சுவாமி நடக்கிறார் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு முட்டை அடித்தோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்று நம்பும் வக்கீல்கள் தைரியமாக அடித்ததை ஒத்துக் கொண்டு ஆமாம் அடித்தோம் என்று சொல்லி சட்டப்படி அதை சந்திக்க வேண்டியது தானே. ஏன் ஒடி ஒளிய வேண்டும். சிலரை கைது செய்த பிறகு சுவாமி மீது ஜாதி பெயரை சொல்லி திட்டினார் அவரை கைது செய்த பிறகு எங்களை கைது செய்ய வேண்டும் என்ற ஏன் புகார் கொடுக்க வேண்டும். அப்படியே திட்டி இருந்தால் அன்றே புகார் கொடுத்து இருக்க வேண்டியது தானே. இதில் ஏதுவுமே செய்யாமல் பேடித்தனமாக நடந்துக் கொண்டார்கள் நம் வக்கீல்கள் என்பது தான் என் வாதம்.
போலீசார் தடியடி என்பதை விட கொலை தாக்குதல் நடத்தியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களாக நான் பரிந்து பேசவும் இல்லை. சோறு வைத்தால் வாலாட்டி கொண்டு போகும் நாய் போலவே தான் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் ஆசைப்படி நடந்து கொள்பவர்கள் நம் காவலர்களில் பலர். அதற்கு உதாரணம் மூன்று மணி நேரம் கலாட்டாக்களுக்கு பிறகு தான் கமிஷ்னர் வந்து தலையை காட்டுகிறார். இதை விட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருந்தது என்பது அவருக்கு தான் வெளிச்சம். சட்டக்கல்லூரியில் கை கட்டி வேடிக்கை பாத்தார்கள், இப்பொழுது கண்ணில் பட்டவர்கள் எல்லாம் தாக்கி இருக்கிறார்கள். மூளையையும், மனசாட்சியையும் கழட்டி விட்டு யூனிப்பார்ம் போடுவார்கள் போல.
இந்த சம்பவத்தில் இரு தரப்பின் மீது தவறு உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது வக்கீலகள் என்பதை மறுந்து விட கூடாது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
இதை எல்லாம் நடக்க விட்டும் வேடிக்கை பாத்து கொண்டு இருக்கும் தமிழக அரசை கண்டால் கேவலமாக இருக்கிறது. பீகாரை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல் இருக்கிறது நம் அரசு. முதல்வர் மருத்துவமனையில் இருந்தால் மற்றவர்கள் எல்லாம் என்ன பண்ணுகிறார்கள். முதல்வரை அவர் குடும்பத்தாரும், டாக்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் வந்து அவர் அவர் வேலையை பாருங்கள்.
இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது உண்மையாக இருக்கலாம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் படித்த அதுவும் சட்டத்தை படித்த வக்கீலகள் ஏன் இதற்கு பலியாகி இப்படி நடந்துக் கொள்ள வேண்டும். ஆக இப்பொழுது பிரச்சனை திசை திரும்பி விட்டது. இதை எதிர்பார்த்தவர்களுக்கு ரொம்ப சுலபமாக வேலை முடிந்ததில் மகிழ்ச்சி. நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது வக்கீல்களும், போலீசாரும் பொது மக்களும் தான்.
போன பதிவில் பதிந்த என் கண்டனத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஈழ பிரச்சனைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். அதை தவிர்த்து மற்றவற்றில் கவனத்தை திசை திருப்பாதீர்கள். உங்கள் சுயலாபங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் ஆதரவை அசிங்கப்படுத்தாரீகள். இதில் உங்கள் சாக்கடை அரசியலை கலக்காதீர்கள்.
வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்தால் பார்ப்பான் என்று சொல்வதும், பார்ப்பான் அல்லாதவனை பார்ப்பான் அடிவருடி என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம் என்பது தான் எனக்கு புரியல. ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் கருத்துகளை எதிர் வைக்கவும். தனி மனித தாக்குதலை தவிர்க்கவும்.
எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. புரிந்தவர்களுக்கு நன்றி. புரியாதவர்களுக்கும் நன்றி.
Monday, February 23, 2009
வக்கீல்களுக்கு கண்டனம் - விளக்கம்
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Monday, February 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
//எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. //
சிவா :) அப்புறம் எதற்கு இந்த பதிவு?? இப்பவும் இந்த பதிவின் மூலம் உங்களால் எல்லோருக்கும் புரிய வைத்து விடமுடியுமா? இல்லை இந்த பதிவு உங்க திருப்திக்காகவா?
புரியாத சில நல்ல உள்ளங்களுக்காக!
புரிந்தாலும் புரியாத மாதிரி நடிக்கும் மிக சிறந்த நல்ல உள்ளங்களுக்காகவும். :)
// கவிதா | Kavitha said...
//எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. //
சிவா :) அப்புறம் எதற்கு இந்த பதிவு?? இப்பவும் இந்த பதிவின் மூலம் உங்களால் எல்லோருக்கும் புரிய வைத்து விடமுடியுமா? இல்லை இந்த பதிவு உங்க திருப்திக்காகவா?
//
ரிப்பீட்டே......
:)
சிவா, எதுக்கும் சீமாச்சு அண்ணன் பதிவின் பின்னூட்டத்தை ஒருமுறை பார்த்துட்டு இந்த பதிவை வெளி இட்டிருக்கலாம்.
ரவுடி வக்கீல்கள் நிலை இது தான்.. 2 வாரங்களுக்கு முன் ஈழத்தமிழருக்காக சாலை மறியல் செய்தனர் வக்கீல்கள்.. சைதாப்பேட்டை கோர்ட் எதிரில்.. ஒரு 12 - 14 வக்கீல்கள்..
சரசரவென சாலை குறுக்கே வேகமாக சாலைக்கு வந்து மறித்த்தார்கள்.. யாருக்கு தெரியும் இவர்கள் இப்படி வருவார்கள் என்று.. அந்த வழியே டீ வி எஸ் 50 ல் வந்த ஒருவர் அவசர அவசரமாக ப்ரேக் அடித்தும்.. இவர்களை தள்ளி 1 - 1.5 அடி சென்று வன்டி நின்றது.. நம் அருமை வக்கீல் ஒருவர் என்ன திருவாய் அருளினார் தெரியுமா?? டே தேவடியாபையா.. ஓத்தா .. தமிழனுக்கு நாங்கள் கஷ்டபடுறோம்.. நீ என்ன ஊம்பறதுக்கு இவ்ளோ அவசரம்.. இது அப்படியே அவர் சொன்ன வார்த்தை.. கத்தி நடுரோட்டில்.. இன்னொரு வக்கீல்.. கையில் இருந்தகட்டையை ஓங்கி ஒரு காரின் கண்ணாடியில் அடிப்பது போன்ற பாசாங்கு செய்தார் நாக்கை கடித்துக்கொண்டு... வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே.. ஒருவர் வந்து 4 பக்கமும் இருந்து தன் டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்தவுடன் , கலைந்து சென்று விட்டனர்.. அந்த ஒரு புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் வரவேண்டும் என்று இந்த வக்கீல்கள் காட்டிய தமிழ் உணர்விற்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல மற்றவர்களின் தமிழ் உணர்வு
இரண்டு பக்கமே தவறிருந்தாலும் பிரச்சனை ஆரம்பித்தது யாரால் என தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
சிவா
இப்படி பதிவு போட்டா நீ பார்பான் / பார்ப்பன அடிவருடி இல்லைன்னு ஆயிடுமா?
இதெல்லாம் நமக்குப் புதுசா? ஏன் இப்படி ரென்சன் ஆகிக்கிட்டு? :)
//ரிப்பீட்டே......
:)
சிவா, எதுக்கும் சீமாச்சு அண்ணன் பதிவின் பின்னூட்டத்தை ஒருமுறை பார்த்துட்டு இந்த பதிவை வெளி இட்டிருக்கலாம்.//
நன்றி கோவி.கண்ணன்.
நான் அந்த இடத்தில் சுப்ரமணியசுவாமி யை வைத்து பார்க்கவில்லை. யாராக இருந்தாலும் என் நிலை இது தான். நீதி மன்றத்தின் உள்ளே இது போல அநாகரிக செயலை ஊக்குவிக்கவது தவறு.
சீமாச்சு வின் பின்னூட்டத்தை படித்தேன். மனிதாபிமானம் என்பது முக்கியம் நான் இல்லனு சொல்லவில்லை. எதற்காக போராடுகிறோம் அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். இவர்கள் முட்டை விட்டு அடித்ததால் சுவாமி இலங்கை அரசுக்கு எதிராக மாற போகிறாரா? அப்படியே முட்டை அடித்தவர்கள் ஆமாய்யா அடிச்சேன் அவன் தமிழன துரோகி அடிச்சேன், அது எனக்கு தப்பா தெரியலனு நேர்மையாக நடந்துக்க வேண்டியது தானே. ஏன் ஒடி ஒழிய வேண்டும். பிரச்சனையை திசை திருப்ப வேண்டும்.
@ வினோத்!
அனானியாக வருவதை தவிர்க்கலாமே. உங்கள் பகிர்வுக்கு நன்றி!
@ வித்யா!
நன்றி வித்யா
@ இலவச கொத்தனார்!
டென்ஷன் எல்லாம் ஏதும் இல்லை. பழங்கதை தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வண்ணமாக மீண்டும் ஒரு விளக்கம் அவ்வளவே!
நம்ம கிட்ட இருந்து எதிர்பாக்குறாங்க, மக்கள் ஆசைப்பட்டா அதை செய்து தானே ஆகனும்.
ரெண்டு பதிவும் படிச்சேன் சிவா...
//எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. //
இதுதான் உண்மை..நிறைய விஷயங்களில் இந்த வார்த்தைகள் பொருத்தமாகிப் போகும்...
ஏதோ இப்டிப் புலம்பியே காலத்தைக் கடத்த வேண்டியதுதான் நம்ம வேலையாகிப் போச்சு இப்போ...
//இவர்கள் முட்டை விட்டு அடித்ததால் //
சிவா, முட்டையை விட்டு..........ட்டா...அப்புறம் எப்படி அடிக்கமுடியும்.. ?!! :)
கொஞ்சம் விளக்க முடியுமா?!
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
சிவா! அலுவலக பணி காரணமாக சட்ற்று தாமதமாக பதிலளிக்கிறேன், உங்கள் பதிவை உடனே பார்த்தேன். உங்கள் நேர்மையான, நடுநிலையான கருத்துக்களை நான் முதலில் வரவேற்கிறேன்.
உங்கள் புரிதலுக்காக மேலும் ஒரு படத்தை நான் எனது பதிவில் சேர்த்திருக்கிறேன்..
உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது
//இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது உண்மையாக இருக்கலாம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் படித்த அதுவும் சட்டத்தை படித்த வக்கீலகள் ஏன் இதற்கு பலியாகி இப்படி நடந்துக் கொள்ள வேண்டும்.//
சிவா, நீங்கள் மாணவனாக இருந்தபோது போராட்டங்களில் கலந்துகொள்ளவோ நடத்தவோ தேவை இருந்ததா என்று எனக்கு தெரியாது... ஆனால் எனது அனுபவத்தில் நான் உணர்ந்தது "ஒரு குழுவாக நின்று கோசம் எழுப்பும்போது / திரளும்போது அதிலிருந்து எதிரி மீது கல் எரியும் ஒருசிலர் 'விசமிகள்' இருக்கவே செய்வர்.." இது போன்ற பதட்டமான சூழலை சந்தர்ப்ப வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தும்போது, பிரச்சினை மேலும் வெடிக்கும்... மோதல் உருவாகும் பொது ஆத்திரம், கோபம் எல்லாம் ஆக்கிரமித்த பிறகு M.A.BL என்ன I.P.S என்ன எல்லா
அறிவும் அமைதியாகி வன்முறை பிறக்கும்..
நான் இப்போது எந்த சாராரையும் குற்றஞ் சொல்ல வில்லை என்பதை கவனியுங்கள்..
//இந்த சம்பவத்தில் இரு தரப்பின் மீது தவறு உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது வக்கீலகள் என்பதை மறுந்து விட கூடாது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.//
பிரட்ச்சனை யாரால் முளைத்தது என்பதை என்னை கேட்டால் யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது என்பதே உண்மை... பல குழுக்களும் உட்பகைகளும் எல்லா தரப்பினரிடமும் உள்ளது என்பது கசப்பான உண்மை.. அதனால் வக்கீல்கள் என்றாலே காடையர்கள் என்றோ போலீஸ்காரர்கள் எல்லாம் காக்கி தரித்த கயவர்கள் என்றோ சொல்ல்வது சரியில்லை...
நாம் இப்போது யார் செய்தது தவறு என்று ஆராய தொடங்குவதே, இந்த கலவரத்தை ஏறப்படுத்தியவர்களுக்கு நாமாக தரும் வெற்றி... ஏனென்றால், 'நியாயம்' என்று பேச ஆரம்பிக்கும் நாம் 'நோக்கத்தை' விடுவோம்... அதாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கும், ஏன் ஒரு துரும்பை எதுத்துப்போடும் யாரையும் பகைத்துக்கொள்ளும் சூழலில் நாம் இல்லை. ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் குறிப்பாக வக்கீல்கள், அங்கும் இங்கும் சில வன்முறைகளில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் அதை கோடிட்டு காட்டி தண்டனை வழ்ங்கவேண்டும் என்று கூறி, ஒரு அணியாய் ஒன்று திரண்ட நாம் இப்போது, இவன் இப்படி செய்துவிட்டான் அவனை தண்டியுங்கள் என்று ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி பிரிவது நமது பலத்தை அழிக்கும் குள்ளநரிகளின் தந்திரம் பளிக்கும்..
சற்றே யோசித்துப்பார்த்தால், வக்கீல்களுக்கும் சரி போலீஸ் காரர்களுக்கும் சரி தத்தமது குடும்பம் என்று ஒன்று இருக்கிறது, அவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதின் மூலம் எந்த லாபமும் அடையபோவதில்லை... பாவம், கோர்ட்டை புறக்கணித்து பணிக்கு செல்லாமல், வருமானம் இழந்தும், நம் இனத்திற்க்காக குரல் கொடுக்க முன் வருகின்றனர்.. போலீசில் இருந்தாலும் கலவரம் என்றால் அடிவாங்கிக்கொண்டு அவச்த்தைப்படுகிரார்களே! தனிப்பட்ட முறையில் பார்த்தால் அனைவரும் நல்லவர்கள், இவர்களுக்கு இதன் மூலம் பதவியோ செல்வாக்கோ முளைக்க போவது இல்லை...
கொடுமை என்னவென்றால் இதற்க்கெல்லாம் எதிர்மறையாய் விளங்கும் அரசியல் முதலைகள் ஓட்டு பொறுக்க பலரை பலிகடா ஆக்குவது தான்...
நம் நோக்கமான போர் நிறுத்தத்தை பெற ஒன்றாய் இணைந்து பாடுபடுவோம், நமக்குள் ஒருசிலர் தவறு செய்தால் சுட்டி காட்டி நல்வழிப்படுத்துவோம்... அங்கு சொல்லொனாத் துயர் தாங்கும் நம் இனத்தவரை மீட்டபின்னர், எல்லாவற்றையும் சரி செய்துகொள்வோம்..
இந்த சந்தர்ப்பத்தில் மூளையை தீண்டிவிட்டு யோசிப்பதை விட இதயத்தை முன்னிலைப்படுத்தி, ஒன்றிணைந்து நிற்ப்போம்...
நமக்குள் கருத்து பேதங்கள் இருப்பினும் உணர்வு ஒன்றே...
நன்றி.
//நமக்குள் கருத்து பேதங்கள் இருப்பினும் உணர்வு ஒன்றே... //
தமிழ் நேசன், உங்க பின்னூட்டம் அருமை, நல்ல பாசிட்வ் அப்ரோச்.. ஆனா நீங்க சொன்ன உணர்வை வெளிக்கொண்டு வரனுமே? உணர்வு மட்டும் இருந்து என்ன பயன்?!
உணர்வை வெளிக்கொண்டுவர போராடுபவர்களில் நானும் ஒருவன்... நீங்களும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இதுபோல், பலர் ஒன்று திரளும்போது உணர்வு வெளிவரும்... முக்கியமாக, நமக்குள் இருக்கும் கருத்துப்பேதங்களை முன்னிலைபடுத்தாமல், இன நலனுக்காக உறுதியுடன் நின்றால், பல நடுநிலையானவர்கள் கவனத்தையும், ஆதரவையும் பெறலாம்...
இவர்கள் நம் மக்கள் தானே.. நம் இனம் தானே.. நம் ரத்தம் தானே.. பல நூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டு, ஆரியர்கள், ஆங்கிலேயர்கள், பின் நம் சொந்த அரசியல்வாதிகளால் - பல சாதிவாரி பிரிவுகளாக வகுக்கப்பட்டு, வேற்றுமை உணர்வு தூண்டப்பட்டு சிதரிக்கிடப்பதால், இன்று நம்மால் நமது இனத்தில் பிறந்த குழந்தை கொல்லப்ப்படும்போது கூட, 'ஒன்று சேர்ந்து' குரல் கொடுக்க நாணி நிற்கின்றார்கள்...
இது சரி இது தவறு என்று முன் வந்து சொல்ல துணிவற்று இருக்கிறார்கள்..
இந்த நிலைமை ஒருநாள் மாறும் அந்த நாள் விரைவில் வர போராடுவோம்..
நன்றி..
ம்ம்ம்ம்ம்ம்ம்ம், என்னவோ போங்க, :((((((((( ஏண்டா தமிழ் நாட்டுக்கு வரோம்னு தான் இருக்கு ஒவ்வொரு சமயம்! :(((((((((((
//ஏண்டா தமிழ் நாட்டுக்கு வரோம்னு தான் இருக்கு//
தமிழ் நாட்டுக்கு வருவதே சங்கடமாக இருந்தால்.. உங்கள் ஊர் ஈழமாக இருந்தால்???!!
//தமிழ் நாட்டுக்கு வருவதே சங்கடமாக இருந்தால்.. உங்கள் ஊர் ஈழமாக இருந்தால்???!! //
எங்கே இருந்தாலும் அமைதியைத் தான் மனம் நாடும் நண்பரே, ஈழத்தில் சீக்கிரமாய் அமைதி நிலவி, ஈழத் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சி நிலவே வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை.
//சிவா, நீங்கள் மாணவனாக இருந்தபோது போராட்டங்களில் கலந்துகொள்ளவோ நடத்தவோ தேவை இருந்ததா என்று எனக்கு தெரியாது...//
இருந்தது.
// ஆனால் எனது அனுபவத்தில் நான் உணர்ந்தது "ஒரு குழுவாக நின்று கோசம் எழுப்பும்போது / திரளும்போது அதிலிருந்து எதிரி மீது கல் எரியும் ஒருசிலர் 'விசமிகள்' இருக்கவே செய்வர்.." இது போன்ற பதட்டமான சூழலை சந்தர்ப்ப வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தும்போது, பிரச்சினை மேலும் வெடிக்கும்...//
அந்த புல்லுருவிகளை கண்டு பிடித்து களைய வேண்டும் என்பது என் ஆசை. எங்கள் அனுபவத்தில் அப்படி நடந்து கொண்டோம்.
//அதனால் வக்கீல்கள் என்றாலே காடையர்கள் என்றோ போலீஸ்காரர்கள் எல்லாம் காக்கி தரித்த கயவர்கள் என்றோ சொல்ல்வது சரியில்லை...//
என்னுடைய வார்த்தை அது போல் அமைந்து இருந்தால் தவறுக்கு வருந்துகிறேன். குற்றச்செயலில் ஈடுபட்ட வக்கீல் மற்றும் போலீசாரை மற்றுமே சொல்கிறேன்.
//நாம் இப்போது யார் செய்தது தவறு என்று ஆராய தொடங்குவதே, இந்த கலவரத்தை ஏறப்படுத்தியவர்களுக்கு நாமாக தரும் வெற்றி... ஏனென்றால், 'நியாயம்' என்று பேச ஆரம்பிக்கும் நாம் 'நோக்கத்தை' விடுவோம்... //
அதை தான் நானும் சொல்கிறேன்.
//அதாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கும், ஏன் ஒரு துரும்பை எதுத்துப்போடும் யாரையும் பகைத்துக்கொள்ளும் சூழலில் நாம் இல்லை. ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் குறிப்பாக வக்கீல்கள், அங்கும் இங்கும் சில வன்முறைகளில் ஈடுபட்டிருக்கஆனால் அதை கோடிட்டு காட்டி தண்டனை வழ்ங்கவேண்டும் என்று கூறி, ஒரு அணியாய் ஒன்று திரண்ட நாம் இப்போது, இவன் இப்படி செய்துவிட்டான் அவனை தண்டியுங்கள் என்று ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி பிரிவது நமது பலத்தை அழிக்கும் குள்ளநரிகளின் தந்திரம் பளிக்கும்..//
தமிழர்நேசன், என்னுடைய இறுதியாக இப்படி வைக்கிறேன்
மக்கள் ஆதரவு இல்லாத் எந்த புரட்சியும் வெற்றி பெறாது, இது வரை வெற்றி பெற்றதும் இல்லை. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதின் மூலம் மக்களின் ஆதரவு நீர்த்து போகும் வாய்ப்புகள் அதிகம். பெருகி வந்த மக்கள் ஆதரவு சிறிது கலகலத்து வைக்கும் விதமாக தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இதை இப்போதே சரி செய்யாவிட்டால் பின் எல்லாமே வீண் தான்.
//தமிழ் நேசன், உங்க பின்னூட்டம் அருமை, நல்ல பாசிட்வ் அப்ரோச்.. ஆனா நீங்க சொன்ன உணர்வை வெளிக்கொண்டு வரனுமே? உணர்வு மட்டும் இருந்து என்ன பயன்?!//
உணர்வு வந்தால் உள்ளுக்குள் தீயாக எரியும். தீயாக எரிந்தால் என்ன வேண்டுமோ அது நடக்கும். ஆனால் அந்த உணர்வு ஏற்படாத வண்ணம் நம்மவர்களே பாத்துக் கொள்வார்கள்
@ சிவ்
உங்கள் கருத்துக்கு நன்றி!
//ம்ம்ம்ம்ம்ம்ம்ம், என்னவோ போங்க, :((((((((( ஏண்டா தமிழ் நாட்டுக்கு வரோம்னு தான் இருக்கு ஒவ்வொரு சமயம்! :(((((((((((//
வாங்க வாங்க... என்ன பண்ண... இது எல்லாம் புதுசா.. போக போக பழகிடும்...
//ஏண்டா தமிழ் நாட்டுக்கு வரோம்னு தான் இருக்கு//
தமிழ் நாட்டுக்கு வருவதே சங்கடமாக இருந்தால்.. உங்கள் ஊர் ஈழமாக இருந்தால்???!!//
தமிழர்நேசன், அவர் சில வாரங்கள் தமிழகத்தில் இல்லை. வந்துடன் நடந்த செய்திகளை கேட்டால் ஒரு வித சலிப்பும், வேதனையும் வருவது சகஜம் தான். அதை தான் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
//எங்கே இருந்தாலும் அமைதியைத் தான் மனம் நாடும் நண்பரே, ஈழத்தில் சீக்கிரமாய் அமைதி நிலவி, ஈழத் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சி நிலவே வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை.//
உண்மை!
Post a Comment