Monday, January 26, 2009

ப்ளீஸ்! இந்த பதிவை படிக்காதீங்க!

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ 60
பக்கங்கள் : 112

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். அப்படி ஒரு எழுத்து நடை. எழுத்து நடை என்பதை விட நம் அருகில் நின்று நம்முடன் ஒருவர் உரையாடுவது போன்று ஒரு தோணி புத்தகம் முழுவதும் நிரம்பி உள்ளது. பேச்சு வழக்கிலே எழுதியதிலே ஆசிரியர் வெற்றி பெற்று விட்டார். அதுவும் அந்த உரையாடல் நமக்கு படிக்கும் போது அவர் குரலிலே நம் மனதுக்குள் ஒலிப்பது தனிச்சிறப்பு. நீயா நானா நிகழ்ச்சி நம் மனக்கண்ணில் வந்து போகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பல பேச்சுகளை இந்த புத்தகத்தில் அச்சு ஏற்றி உள்ளார் என்பது அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு புரியும்.

பொதுவாக தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களை நான் படிப்பது இல்லை. ஏற்கனவே அளவுக்கு அதிகமாக இருப்பதாக ஒரு எண்ணம் தான் அதற்கு காரணம். அதையும் மீறி இந்த புத்தகத்தை வாங்குவதற்கு ஒரே காரணம் தலைப்பும், கோபிநாத்ம் தான். வாங்கி படித்து முடித்த பிறகு இப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு ஏற்பட காரணம் என் எண்ண ஒட்டங்களில் பலவற்றை அப்படியே பிடுங்கி பதிவு செய்தது போல் ஒரு மாயை. கூடவே ஒரு உற்ற நண்பனுடன் பல விசயங்களை கலந்தாலோசித்து பிறகு ஏற்படும் தெளிவு இதில் ஏற்படுகிறது. அந்தளவுக்கு எளிமையாக அன்றாட விசயங்களை தொகுத்து அதற்கு தகுந்த உதாரணங்களை மனவியல் நிபுணர் முதல் ஜனகராஜ் வரைக்கும் எடுத்து கையாண்டு உள்ளார்.

அட!

 • ஒவ்வொரு அத்தியானத்துக்கும் தலைப்பு ஏதும் வைக்காமல் அந்த பகுதியின் மையக்கருத்தை கட்டம் கட்டி போட்டு இருப்பது. அதே போல பல இடங்களில் முக்கிய கருத்தை BOLD பண்ணி இருப்பது.
 • எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான் - கவுண்டமணி. சீரியஸ் ஆகவே நமது வாழ்க்கையை இப்படித் தான் வைத்து இருக்கிறோம் என்று சொல்கின்றன ஆய்வுகள்.
 • நீங்கள் கவனிக்காமலும் கண்டுக் கொள்ளாமலும் விட்ட விஷயம் மெகாசைஸ் "என்னவோ மாதிரி இருக்குது" ஆக மாறி உறுத்திக் கொண்டே இருக்கிறது.
 • உங்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களை வைத்துக் கொள்வதில் குறையொன்றுமில்லை. வம்படியாய் எந்தக் சூழலிலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டு எல்லாரும் போய் விடுவார்கள்.
 • உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுத் தரமாட்டேன் என்று நீங்கள் சண்டை போட்டால் அதற்குப் பெயர் கொள்கை அல்ல மனோ வியாதி.
 • இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால் இந்த ஒட்டு மொத்த உலகத்திற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.
 • இழந்து போனது குறிந்த நினைவுகளையும், கவலைகளையும் உள்ளங்கைக்குள் வைத்து மூடிக் கொண்டு சிரமப்படுகிறோம். அதை விட்டு விட்டால் வெளியே வந்து விடலாம். ஆனால் விடமாட்டோம். குரங்குக்கு தான் அது தெரியாது. நமக்கும் கூடவா தெரியாது.

அட்ரா சக்கை!

 • சிரிப்பு வந்தால் சிரியுங்கள்! நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட... நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்
 • உங்கள் மனம் ஒரு தொட்டி. அதை குப்புறக் கவிழ்த்து வையுங்கள்... இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டி விட்டுப் போவார்கள். உங்கள் மனத் தொட்டியில் மேலும் மேலும் குப்பை கொட்டுபவர்.. உங்கள் நண்பராக இருக்க முடியாது.
 • முழு இட்லியை முழுங்க நினைத்தால் விக்கல் தான் வரும். அதை பிட்டு பகுதி பகுதியாக சாப்பிடுங்கள். அது தான் எளிது.
 • என்னமோ போடா... பின்றடா - ஜனகராஜ்
 • உங்களை இயக்க தான் கொள்கைகள் முடக்க அல்ல.
 • Nothing Interesting... Then make it interesting. வாழ்க்கை போரடிச்சா.. அதை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
 • வேலையாளாக இருப்பது . லாபம் வந்தால் நமக்கு. நட்டம் வந்தால் அவனுக்கு. இதிலிருந்து வெளியே வர வேண்டியது நமக்காக மட்டுமல்லாமல் நம் நாட்டுக்காவும் தான்.

உறுத்தல்!

 • தலைப்பு - எதிர்மறையான தலைப்பு தான் என்னை புத்தகத்தை புரட்டி பார்த்து வாங்க வைத்தது என்ற போதிலும் இவ்வளவு பாசிட்டிவான தகவல்களை புத்தகம் முழுவதும் கொடுத்து விட்டு தலைப்பை இது போல வைத்தது 13 ரீலில் கண்டதையும் காட்டி விட்டு 14 ரீலில் புத்தி சொல்லுவது போல் எடுக்கப்படும் தமிழ் சினிமாவை தான் ஞாபகப்படுத்துகிறது. புத்தகமும் வியாபாரம் தானே, அதனால் இருக்கலாம்
 • புத்தக்கத்தில் இருக்கும் புகைப்படங்கள். வண்ணத்தில் கொடுத்து இருக்கலாம் அல்லது குறைந்தபட்டம் புகைப்படத்தின் தரத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.

மொத்ததில் முன்னுரையில் என்ன சொல்லி இருந்தாரோ அதில் இருந்து சிறிது கூட மாறாமல் புத்தகத்தை முடித்து உள்ளார். புதுசாக ஏதும் அதில் இல்லை. ஆனால் நம்மை புதுபித்து கொள்ள உதவும். நம்பி வாங்கி படிக்கலாம். மற்றவர்களையும் வாங்க சொல்லாம்.

39 comments:

நாகை சிவா said...

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் :)

கபீஷ் said...

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!

சேரல் said...

நல்ல பதிவு. இன்றுதான் நண்பர் ஒருவர் இப்புத்தகத்தைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன கருத்துகள் சிலவற்றை உங்கள் பதிவிலும் கண்டேன். படிக்க வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்குகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

கீதா சாம்பசிவம் said...

அட, நான் தான் பர்ஷ்டுனு நினைச்சேன், பின்னூட்டம் வருதா? சொல்லுங்க!

நாகை சிவா said...

@ கபீஷ்!

நன்றி! வாழ்த்துக்களுக்கும் தொடர் வருகைக்கும். :)

நாகை சிவா said...

@ சேரல்!

கண்டிப்பாக படிக்கலாம். சிலாகித்துக் கொள்ள ஏதும் இல்லை என்ற போதிலும் மனதுக்கு இதமாக இருக்கும்.

படித்து விட்டு சொல்லுங்கள் உங்கள் கருத்தை.

நாகை சிவா said...

@ கீதா சாம்பசிவம்!

பின்னூட்டம் வருது வருது!

சென்ஷி said...

புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்திற்கு நன்றி சிவா..

கவிதா | Kavitha said...

ம்ம்..படிக்கனும்னு தோணுது!! எளிதான எழுத்து நடைன்னு வேற சொல்றீங்க.. :) கண்ணில் படும் போது வாங்கனும்...

தலைப்பு..?!! :)

ஷாலினி said...

intha booka plss enaku parcel la anupatheenga :P

ஷாலினி said...

உங்கள் மனம் ஒரு தொட்டி. அதை குப்புறக் கவிழ்த்து வையுங்கள்... இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டி விட்டுப் போவார்கள். உங்கள் மனத் தொட்டியில் மேலும் மேலும் குப்பை கொட்டுபவர்.. உங்கள் நண்பராக இருக்க முடியாது.///

exactly.... :))) intha oru vishayathukaagavey antha booka padikanum pola iruku... :)

well said!

ஷாலினி said...

இழந்து போனது குறிந்த நினைவுகளையும், கவலைகளையும் உள்ளங்கைக்குள் வைத்து மூடிக் கொண்டு சிரமப்படுகிறோம். அதை விட்டு விட்டால் வெளியே வந்து விடலாம். ஆனால் விடமாட்டோம். குரங்குக்கு தான் அது தெரியாது. நமக்கும் கூடவா தெரியாது.
அட்ரா சக்கை!
///

:))) etha padichaalum enakey solra maari iruku.. :P

//வாங்கி படித்து முடித்த பிறகு இப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு ஏற்பட காரணம் என் எண்ண ஒட்டங்களில் பலவற்றை அப்படியே பிடுங்கி பதிவு செய்தது போல் ஒரு மாயை. //

repeatuu :))

கோபிநாத் said...

நோட் பண்ணியாச்சி ;)

ஷாலினி said...
This comment has been removed by the author.
இராம்/Raam said...

வாசிச்சுறலாம்..

கீதா சாம்பசிவம் said...

அட, கவிதா!!!!!?????????, வாங்க, வாங்க, நல்வரவு, திரும்ப வந்ததுக்கு! மெதுவாப் படிச்சுட்டு வரேன் உங்க பதிவுகளுக்கு!

கவிதா | Kavitha said...

அட, கவிதா!!!!!?????????, வாங்க, வாங்க, நல்வரவு, திரும்ப வந்ததுக்கு! மெதுவாப் படிச்சுட்டு வரேன் உங்க பதிவுகளுக்கு!//

அடகடவுளே?!! கீதாஜி, நான் வந்து ரொம்ப நாள் (வருஷம்) ஆயிற்று.. இப்பத்தான் பார்க்கறீங்களா.. அடடா.. என்னோட எவ்வளவு பதிவை நீங்க மிஸ் பண்ணீட்டீங்க. .எல்லாத்தையும் படிச்சிடனும் சரியா?!! :)

பாச மலர் said...

நிறைய பேர் இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்..படிக்க வேண்டும்.

தமிழன்-கறுப்பி... said...

ஓகே பாஸ்..:)

தமிழன்-கறுப்பி... said...

என்ன புலி இப்பல்லாம் அடிக்கடி பதிவு போடுது...:)

நாகை சிவா said...

@ சென்ஷி!

உங்களுக்கு ஏத்த புத்தகமானு தெரியல சென்ஷி.. இருந்தாலும் முயற்சித்து பாருங்க. பிடிக்கலனா அப்படியே ப்ரீயா விடனும். கவிதை எல்லாம் போட்டு திட்டக் கூடாது சொல்லிட்டேன் ;)

நாகை சிவா said...

//ம்ம்..படிக்கனும்னு தோணுது!! எளிதான எழுத்து நடைன்னு வேற சொல்றீங்க.. :) கண்ணில் படும் போது வாங்கனும்...//

அதுக்கு புத்தக கடைக்கு போகனும். போய் கண்ணில் படலனு வந்துட கூடாது. கேட்கனும்! ;)

//தலைப்பு..?!! :)//

அந்த புத்தகத்தின் பாதிப்பு தான்! :)

நாகை சிவா said...

@ ஷாலினி!

//intha booka plss enaku parcel la anupatheenga :P//

கண்டிப்பா மாட்டேன் :P

//exactly.... :))) intha oru vishayathukaagavey antha booka padikanum pola iruku... :)//

இது போல நிறைய இருக்கு!

//well said!//

இது எனக்கா இல்ல கோபிக்கா?

நாகை சிவா said...

@ ஷாலினி!

//:))) etha padichaalum enakey solra maari iruku.. :P //

குரங்குனு போட்டு இருப்பதால் அப்படி ஒரு டவுட் வந்து இருக்கும். ப்ரீயா விடுங்க...

//repeatuu :))//

புத்தகத்தை படிச்ச நான் சொல்லுறதில் ஒரு அர்த்தம் இருக்கு. நீங்க ஏதுக்கு ரீப்பிட்டு போட்டீங்க??? :P

நாகை சிவா said...

@ கோபிநாத் & இராம்!

வாசிங்க வாசிங்க.. :)

நாகை சிவா said...

//என்ன புலி இப்பல்லாம் அடிக்கடி பதிவு போடுது...:)//

அடபாவிங்களா! அப்படி என்ன கொலவெறி என் மேல...

தமிழன் - கறுப்பி! பேசி தீர்த்துக்கலாம் வாங்க!

நாகை சிவா said...

@ பாசமலர்!

கண்டிப்பாக அவர்கள் கூறியது மிகையல்ல என்பதை படித்த பிறகு நீங்களே உணர்வீர்கள் !

அன்புடன் அருணா said...

Thanx for the information.
anbudan aruna

கவிதா | Kavitha said...

//அதுக்கு புத்தக கடைக்கு போகனும். போய் கண்ணில் படலனு வந்துட கூடாது. கேட்கனும்! ;)//

சிவா..நீங்க படிச்ச புக்'கையே சென்னை வரும் போது கொண்டுவாங்க.. அதையே படிச்சிக்கிறேன்..சரியா??! :)

Divya said...

\\"ப்ளீஸ்! இந்த பதிவை படிக்காதீங்க!"\\

commentachum podalama??

கீதா சாம்பசிவம் said...

http://sivamgss.blogspot.com/2009/01/blog-post_29.html
விருது கொடுத்திருக்கேன், நீங்களும் கொடுங்க, பதிலுக்கு. அப்புறமா இந்தப் பதிவைப் படிக்காதீங்கனு சொன்னதாலே இன்னும் படிக்கவே இல்லை! :P

நாகை சிவா said...

@ அருணா!

வருகைக்கு நன்றி அருணா! :)

நாகை சிவா said...

//சிவா..நீங்க படிச்ச புக்'கையே சென்னை வரும் போது கொண்டுவாங்க.. அதையே படிச்சிக்கிறேன்..சரியா??! :)//

நீங்க எந்த புக் கை பத்தி பேசுறீங்க? ;)

நாகை சிவா said...

@ திவ்யா!

//commentachum podalama??//

லாமே!!! :)

நாகை சிவா said...

@ கீதா!

//http://sivamgss.blogspot.com/2009/01/blog-post_29.html
விருது கொடுத்திருக்கேன், நீங்களும் கொடுங்க, பதிலுக்கு. அப்புறமா இந்தப் பதிவைப் படிக்காதீங்கனு சொன்னதாலே இன்னும் படிக்கவே இல்லை! :P//

ரொம்ப நன்றிங்க...

பதிலுக்கு உங்களுக்கே கொடுக்கனுமா இல்ல வேற யாருக்கும் குடுக்கலாமா?

கவிதா | Kavitha said...

//சிவா..நீங்க படிச்ச புக்'கையே சென்னை வரும் போது கொண்டுவாங்க.. அதையே படிச்சிக்கிறேன்..சரியா??! :)//

நீங்க எந்த புக் கை பத்தி பேசுறீங்க? ;)//

நீங்க எந்த புக்'கை பத்தி எழுதனீங்க?!! :)

Raz said...

:) iniya kudiarasu thina vazthukal. btw, nee eppadi ivalo nalla eluthure.. theedirnu ennaku oru gniyanothayam...

nanum padichen intha book. english la... tamil version kuda vanthu irunthuchu.

ennakum pudichi irunthuchu...

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

நாகை சிவா said...

//nee eppadi ivalo nalla eluthure.. //

machi.. ennaiya vachi ethum comedy kimadi pannalaiyey ;)

//theedirnu ennaku oru gniyanothayam...//

antha kodumai eppa nadanthuchu?

//nanum padichen intha book. english la...
ennakum pudichi irunthuchu...//

nee sollura nan namburen :)