Friday, September 21, 2007

ஜெயிச்சோம்ல.. ஜெயிச்சோம்ல...

நான் இப்ப புதுசாக வேலைக்கு சேர்ந்து இருக்கும் இடத்தில் தென் ஆப்பெரிக்கர்கள் அதிகம். இன்று இந்தியாவிற்கும் தென் ஆப்பெரிக்காவிற்க்கும் நடந்த கிரிகெட் போட்டி 6 தெ. ஆ., 5 இந்தியர்கள்(நான் உட்பட), ஒரு அமெரிக்கன், 2 கனடா, 1 நைஜிரியன் உடன் பார்க்க நேர்ந்தது.

இந்தியாவால் மிக குறைந்த ரன்கள் தான் எடுக்க முடிந்தது 20 ஒவர்களில்.(153/5). அதனால் இந்தியர்களை தவிர மற்ற அனைவரும் தெ.ஆ. வெற்றிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். குறைந்த ரன் ஆக இருந்த போதிலும், இந்தியா தோற்றாலும், ஜெயித்தாலும், என்றும் இந்தியாவிற்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வந்த நாங்கள் வழக்கம் போல இந்தியா வெற்றி பெறும் என்று தெ.ஆ. பேட்டிங் செய்வதற்கு முன்பே அடித்து சொன்னோம்.. எங்கள் சொல்லை மெய்ப்படுத்தி காட்டினார் ஆர்.பி. சிங்.(4-0-13-4)

5 விக்கெட் விழ்ந்த பிறகு தெ. ஆ. செமி. பைனலுக்கு தகுதி பெற நாங்கள் ஆதரவு தருகிறோம், என்ன சொல்கின்றீர்கள் என்று தெ. ஆ. ஆதரவாளர்களிடம் கேட்டும் அவர்கள் தெ.ஆ. தான் வெற்றி பெறும் என்று அடிச்சு சொன்னார்கள். அவர்கர் சொன்ன வாக்கை பொய்க்காகி எங்களை பெருமிதம் படும்படி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்... மற்றும் நன்றிகள்....

பாகிஸ்தானை வென்றதை விட தெ. ஆ. வென்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.

வாழ்த்துக்கள் பல... கோப்பை வென்றதை விட மிக்க மகிழ்ச்சி அடைய வைத்த வெற்றி.. இந்த வெற்றியை வச்சு தெ. ஆ. களை பல நாள் மட்டம் தட்டம் மிக அருமையான வாய்ப்பு.... இது போதும் ராசா... நல்லா இருங்க.. நல்லாவே இருங்க....


இதன் மூலம் இந்தியா மற்றும் நியுசிலாந்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன... இதன் மூலம் தெ. ஆ. விற்கு அரைஇறுதி கனவு ஆப்பு அடிக்க பெற்றது...

41 comments:

Anonymous said...

எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

பாவம்ணே நாங்க!

Anonymous said...

வாழ்த்துக்கள்!

செமி ஃபைனல் மேட்சுலயும் கலக்குங்க!

Anonymous said...

Well Played Indians!

Great Cricket I was watching after a long back!

Anonymous said...

பார்த்தீங்களா!

கங்குலி இல்லைன்னா நல்லாவே வெளையாடுவாங்க இந்தப் பசங்க!

Anonymous said...

தோ பாருங்க சார்!

டிராவிட் ரிசைன் பண்ணிட்டாருதான்! அதுக்காக என்னைக் கூப்பிடுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிட்டேன்!

ஏதாச்சும் தீவிரவாதிகள் தப்பிச்சிட்டாங்களா! அப்ப என்னைக் கூப்பிடுங்க!

எங்கியாவது டைம் பாம் வெச்சிட்டாங்களா! அப்ப என்னையும் கூப்பிடுங்க!

கிரிக்கெட்டுக்கல்லாம் என்னைக் கூப்பிடக் கூடாது!

நம்ம தொழில் நடிப்பும் அரசியலும்தான்!

Anonymous said...

என்னை மாதிரியே உங்க கேப்டனும் ரன் அவுட் ஆகுறாராமே!

:)

நாகை சிவா said...

யாருங்கண்ணா இது இப்படி அடிச்சு விளையாடுவது... யுவராஜ் கூட இன்னிக்கு விளையாடுலயே...

ILA (a) இளா said...

கெலிச்சுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆ

Anonymous said...

//யாருங்கண்ணா இது இப்படி அடிச்சு விளையாடுவது... யுவராஜ் கூட இன்னிக்கு விளையாடுலயே...//

நல்லா உத்த்த்த்த்த்துப் பாருங்க!

நான் தான் இன்னிக்கு 50 அடிச்சேன்!

Avanthika said...

super annaa

Anonymous said...

கண்டு பிடி அவனைக் கண்டுபிடி!

பந்தைக் களவாடிச் சென்றவனைக் கண்டு பிடி!

Anonymous said...

// 5 விக்கெட் விழ்ந்த பிறகு தெ. ஆ. செமி. பைனலுக்கு தகுதி பெற நாங்கள் ஆதரவு தருகிறோம், என்ன சொல்கின்றீர்கள் என்று தெ. ஆ. ஆதரவாளர்களிடம் கேட்டும் அவர்கள் தெ.ஆ. தான் வெற்றி பெறும் என்று அடிச்சு சொன்னார்கள்

இந்தியா மேல அவங்களுக்கு இருந்த நம்பிக்கை கூட உங்களுக்கு இல்லை ;)

// இந்த வெற்றியை வச்சு தெ. ஆ. களை பல நாள் மட்டம் தட்டம் மிக அருமையான வாய்ப்பு.... இது போதும் ராசா... நல்லா இருங்க..

என்னா வில்லத்தனம் :)

இன்னும் ஆஸியை தோற்கடிச்சு, Finalsல பாகிஸ்தானை மண்ணை கவ்வ வச்சு , தோனி உலகக்கோப்பையோட இந்தியாவுக்கு திரும்புற அந்த காட்சியை நினைக்கும்போதே ....

// கிரேக் செப்பல் said...

பார்த்தீங்களா!

கங்குலி இல்லைன்னா நல்லாவே வெளையாடுவாங்க இந்தப் பசங்க!

:)))))))))))))))))))))))))))))))))))

Anonymous said...

//super annaa//

நன்றி தங்கச்சி!

நல்லாப் படிக்கணும்! சரியா!

நாகை சிவா said...

நன்றி அவந்திக்கா... உங்களை பத்தி கேள்வி பட்டு இருக்கேன்.. இருக்கேன்.. இன்னிக்கு தான் என் பக்கத்துக்கு வறீங்க... தொடர்ந்து வாங்க..

Anonymous said...

இன்னிக்கும் டெண்டுல்கர் இல்லையா!?

:(((((

Anonymous said...

எங்களையெல்லாம் வரவேற்க மாட்டீங்களா?

Anonymous said...

ஆமா ஆஸ்ரேலியா கிட்ட வாங்க போற ஆப்புல ஜென்மத்துக்கும் மறக்க கூடாது

Anonymous said...

நாங்க கண்டிப்பா ஃபைனல்ல அவுஸ்திரேலியா டீம் கூட விளையாடுவோம்!

Anonymous said...

இந்தியாவுக்கு நன்றி

Anonymous said...

நாங்க போராட்டத்துல இறங்கினதாலதான் இந்தியா ஜெயிச்சிது

Anonymous said...

ராபின் உத்தப்பா said...
நாங்க கண்டிப்பா ஃபைனல்ல அவுஸ்திரேலியா டீம் கூட விளையாடுவோம்!
//

அது இந்தியாவுல நடக்கும் மேடசில்..!!

Anonymous said...

//ஆமா ஆஸ்ரேலியா கிட்ட வாங்க போற ஆப்புல ஜென்மத்துக்கும் மறக்க கூடாது//

ஆஹா! கெளம்பீட்டாங்கைய்யா! கெளம்பீட்டாங்கைய்யா!

Anonymous said...

நாகை சிவா said...
நன்றி அவந்திக்கா... உங்களை பத்தி கேள்வி பட்டு இருக்கேன்.. இருக்கேன்.. இன்னிக்கு தான் என் பக்கத்துக்கு வறீங்க... தொடர்ந்து வாங்க..
//

நாங்களும் தான் ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்கோம்...:(

Anonymous said...

அம்மா அவர்களின் சீரிய எதிர்க்கட்சிப் பணியின் காரணமாகத்தான் இந்தியா இந்த வெற்றியை ருசித்ததோடல்லாமல் அரையிறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது!

Anonymous said...

நல்லா விளையாடாட்டி வம்பு!
நல்லா ஆடணும்னா இருக்கவே இருக்கான் இந்த சிம்பு

ஏய் டண்டனக்கா ! ஏய் டணக்குணக்கா!

நாகை சிவா said...

//இந்தியா மேல அவங்களுக்கு இருந்த நம்பிக்கை கூட உங்களுக்கு இல்லை ;)//

என்னங்க பண்ணுறது விக்கி.. நம்ம ஆளுங்க மேல அவள்ளவு நம்பிக்கை... ;)

//என்னா வில்லத்தனம் :)//

என்ன பண்ணுறது.. நம்ம பொழப்பு அப்படி ஆயிடுச்சு... ;)

Anonymous said...

நான் ஒன்னு ஒன்னா சேர்த்த ரன்கள் தான் வெற்றிக்கு உதவியது




MR. x

Anonymous said...

பாவம்ணே நாங்க

நாகை சிவா said...

இன்னிக்கு எங்க தள கூட இல்லையே.. பின்ன எப்படி? வேற யாரு இது?

நாகை சிவா said...

அட மின்னல் நீயுமா அது?
ரொம்ப சந்தோஷமய்யா!

ILA (a) இளா said...

vicky, இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிட்டேன், 5 வது ஓவருலே என்ன சொன்னீங்கன்னு கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்கப்பு..

நாகை சிவா said...

இளாண்ணன்... நீங்க சொன்ன மாதிரி உண்மையிலே கெலிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டோம்

அதுவும் தொடர்ந்து இரண்டாவது நாளாக...

நாகை சிவா said...

//vicky, இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிட்டேன், 5 வது ஓவருலே என்ன சொன்னீங்கன்னு கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்கப்பு..//

அப்படி என்னங்கண்ணா சொன்னாரு... ஒரு வேளை இந்தியாவை பத்தி உண்மைய சொல்லி இருப்பாரோ... சில சமயம் அதை பொய்யாக்கிடுவாங்க நம்ம ஆளுங்க..

நம்பவே முடியாத பசங்க... ;)

இலவசக்கொத்தனார் said...

ஓவரில் 6 சிக்ஸரை விட இங்க ஆட்டம் பலமா இருக்கே!!

Anonymous said...

நான் செஞ்ச ரன் அவுட் பத்தி யாருமே சொல்ல மாட்டேன்கிறீங்க :-(

Anonymous said...

நானும்தான் ஜான்டி ரோட்ஸ் கணக்கா ஒரு கேட்ச் பிடிச்சேன்..

Anonymous said...

//கோப்பை வென்றதை விட மிக்க மகிழ்ச்சி அடைய வைத்த வெற்றி.. இந்த வெற்றியை வச்சு தெ. ஆ. களை பல நாள் மட்டம் தட்டம் மிக அருமையான வாய்ப்பு.... //

Addhhuuu!!!
LOL reading other comments!!

Geetha Sambasivam said...

Congratulations! nijama irunthal. mmmmm intha sports news onnum parkirathillai!

நாகை சிவா said...

கொத்துஸ்.... எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்ட பாடம் தான்...

நாகை சிவா said...

@ பத்மபிரியா!

முதல் வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வாங்க...

நாகை சிவா said...

//Congratulations! nijama irunthal. mmmmm intha sports news onnum parkirathillai!//

அது என்ன உண்மையா இருந்தா....

விளையாட்டு பார்ப்பது இல்லையா... அது சரி... மொக்கை போடவே நேரம் சரியா இருக்கு.. அப்புறம் இது எல்லாம் எப்படி முடியும் சொல்லுங்க.. ;)