Sunday, September 23, 2007

ஆஸிவை வெற்றிக் கண்டது இந்தியா!


இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த முடிந்த அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ஒட்டங்கள் எடுத்தது. யுவராஜ் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் 30 பந்துகளில் 70 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

189 ஒட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 173 ஒட்டங்கள் எடுத்து 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வரும் திங்கள் அன்று இந்திய அணி பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர் கொள்கிறது. அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.

முக்கிய துளிகள்:

* யுவராஜ் பிரட் லீ பந்தில் அடித்த சிக்ஸ்ர் தான் இந்த தொடரின் மிக பெரிய சிக்ஸ்ர் ஆகும். (119 மீட்டர்)

* ஸ்ரீசாந்த் 4 ஒவர்களில் ஒரு மெயிடன் உள்பட 12 ஒட்டங்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

* ஹர்பஜன் வீசிய 18வது ஓவரும், ஆர்.பி. சிங் வீசிய 19வது ஒவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றது.

* ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போதிலும் இந்திய மண்ணில் நடந்தை போன்று மிக ஆரவாத்துடன் ரசிகர்கள் இந்திய அணியினருக்கும் உற்சாகம் அளித்தார்கள்.

* ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் பெற்றார்.


பின்குறிப்பு :

அது என்னமோ தெரியலை, ஆஸ்திரேலியா இந்தியாவிடன் தோல்வி அடையும் போது எல்லாம் ஒரு தனி சந்தோஷம். அதற்கு காரணம் அவர்களின் தொடர் வெற்றியா அல்லது அவர்களின் திமிர்த்தனமா அல்லது கடந்த 2 1/2 வருடங்களாக என் டேமேஜ் அந்த நாட்டை சேர்ந்தவராக அமைந்ததா எனத் தெரியவில்லை.

51 comments:

காத்துக்கிடந்தவன் said...

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்

ஹைடன் said...

அந்த சிரிசாந்து பையன் பந்து அப்படி வரும்னு எதிர்பார்க்கவே இல்லைப்பா. இல்லைனா இன்னிக்கு பிரிச்சு மேஞ்சுரலாம்னு தான் வந்தேன்.

தோனி... said...

இது தெரிஞ்சதுதானே!

கில்கிரிஸ்ட் said...

போங்கலா... போங்க.

இப்ப்டியே எதாவது சொல்லிட்டு திரிங்க...

நாகை சிவா said...

இன்னிக்குமா?

நடக்கட்டும் ராசா... நடக்கட்டும்....

உன் விருப்பம் போல நடக்கட்டும்....

சேவாக் said...

ஏண்டா நான் என்னடா பாவம் பண்ணினேன். நான் போட்ட 1 ஓவர்ல 20 ரன்னு வெளுத்தீங்க. நான் எப்படி டீசண்டா 9 ரன் மட்டும் அடிச்சிட்டு அவுட்டு ஆனேன்.

கும்மி அடிப்பவன் said...

//நாகை சிவா said...
இன்னிக்குமா?

நடக்கட்டும் ராசா... நடக்கட்டும்....

உன் விருப்பம் போல நடக்கட்டும்..//

1/2 மணி நேரமா பாத்தேன். யாரும் போடல...

சரி நாமலே போடலாம்னு படம் எல்லாம் கலெக்ட் பண்ணினேன். வந்து பாத்தா உங்க போஸ்ட்...

என்ன பண்ண...

J K said...

அந்த கடைசி 4 விக்கட் விழுந்தது தான்.

அதுவும் கடைசி ஓவர்ல 2 விக்கெட் சூப்பர்.

பாக்கலாம்.

ஃபைனல் என்னாகும்னு...

இராம்/Raam said...

ஹாஹா...

நாமெல்லும் கெலிச்சிட்டோமில்ல..... :))

வரவேற்பவன் said...

//இராம்/Raam said...
ஹாஹா...

நாமெல்லும் கெலிச்சிட்டோமில்ல..... :))//

வாங்கண்ணே.
நல்லாயிருக்கியளா?...

நாகை சிவா said...

//அதுவும் கடைசி ஓவர்ல 2 விக்கெட் சூப்பர்.//

தோணியின் நம்பிக்கையை காப்பாத்திட்டான் சர்மா.... நல்லப்பய....

//ஃபைனல் என்னாகும்னு...//

முடிவை விட்டு விடலாம்... மிக மிக பரபரப்பான போட்டியா இருக்கும்... அந்த பரபரப்பு பொய்யாகத அளவுக்கு மேட்ச் நடந்தாலே போதும்... மேலும் ஒரு நல்ல போட்டி பார்த்த திருப்பி கிடைக்கும்...

ஏது எப்படி இருந்தாலும் இந்தியா ஜெயிக்கனும் என்று தான் உள்ளம் துடிக்கும்... எதிர்த்து விளையாட போவது பாகிஸ்தான் உடன் அல்லவா :)

டிராவிட் said...

அடப்பாவிங்களா பைனலுக்கே போயிட்டாங்களா

ரஜினி ரசிகன் said...

நிரந்திர முதல்வர் (ஸ்லீப் ஆப் த டங்) கேப்டன் டோனி வாழ்க

காந்தி ரசிகன் said...

என்னது காந்தி செத்துட்டாரா ?

இந்திய குடிமகன் said...

யாருமே இல்லியா?

இந்தியா ஜெயிச்சத கொண்டாட?

நாகை சிவா said...

//1/2 மணி நேரமா பாத்தேன். யாரும் போடல...//

எனக்கும் போடும் எண்ணம் இல்லை.. யாரும் போடலை என்பதால் தான் நான் போட்டேன்....

//சரி நாமலே போடலாம்னு படம் எல்லாம் கலெக்ட் பண்ணினேன். வந்து பாத்தா உங்க போஸ்ட்...//

சரி என்ன இப்ப.. நான் இரண்டு படத்தை எடுத்து போடுறேன் இருங்க...

நேரு ரசிகன் said...

இந்தியா பைனலுக்கு போன அதிர்ச்சியில செத்துட்டாரு

இராபிசாசு said...

ஹே ....

கொண்டாட்டம்...

நாகை சிவா said...

//ஹாஹா...

நாமெல்லும் கெலிச்சிட்டோமில்ல..... :))//

ஆமாம்... ஆமாம்... அதுவும் தொடர்ந்து மூன்றாவது தடவையாக... அனைத்தும் அற்புதமான வெற்றியாச்சே...

சேவாக் said...

//நேரு ரசிகன் said...
இந்தியா பைனலுக்கு போன அதிர்ச்சியில செத்துட்டாரு//

இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். யாரும் ஜெயிக்க வேணாம்னு.

அப்பவும் என்னால முடிஞ்ச அளவு அவங்களுக்கு (20 ரன்) உதவுனேன்.

பாவிங்க ஜெயிக்க மாட்டேனுட்டாங்க..

அட போங்கப்பா...

புரியாதவன் said...

நாகை சிவா அண்ணே, நீங்க இவ்ளோ நல்லவரா இருக்கீங்க.

அலவ் பண்ணினது மட்டுமில்லாம, கூடவே சேர்ந்து கும்முறீங்க.

சரி என்னண்ணே, மொத பக்கம் எத்தன கமெண்டுனு எண்ணிக்க வரல.

ஒய்?

அத்வானி said...

கலி காலம் - இந்தியா பைனலுக்கு போயிடுச்சு - எல்லாம் இந்த கருணாநிதி ராமரை கிண்டல் பண்ணதால தான் இப்படி நடக்குது

நாகை சிவா said...

போட்டோ போட்டாச்சு!

கும்மி அடிப்பவன் said...

//நாகை சிவா said...
போட்டோ போட்டாச்சு!//

இருங்க பாத்துட்டு வர்ரேன்.

mike said...

I enjoyed srisanth's reactions... fantastic..

நாகை சிவா said...

//சரி என்னண்ணே, மொத பக்கம் எத்தன கமெண்டுனு எண்ணிக்க வரல.

ஒய்?//

எந்த முதல் பக்கத்துல ராசா?

யுவராஜ் சிங் said...

ஏன் என் போட்டோ போடல...

நான் எம்புட்டு அடி அடிச்சேன்.

நாகை சிவா said...

யுவராஜ் போட்டோவும் போட்டாச்சுய்யா :)

ஆற்காடு வீராசாமி said...

இந்தியா பைனலுக்கு போயிடுச்சு, இப்பவாவது ராமர் இல்லைன்னு நம்புங்கைய்யா

அதிர்ச்சியுடன் கங்குலி said...

இந்தியா ஜெயிச்சிடுச்சா ?

அப்ரீடி said...

வாங்க பங்காளி, உங்களை பைனல்ல பொளக்கறேன்

டோனி said...

ஒரு ஸ்டப்பை பார்த்து பவுளிங் செய்ய தெரியலை, நீங்களல்லாம் பொளக்கறீங்களா ? போங்கடா, முதல்ல ஸ்டப்பை பார்த்து பவுளிங் செய்ய கத்துக்கோங்க

சிரிசாந்து said...

அப்ரீடி..உனக்கு வைக்கிறேன் ஆப்புடி..

ஜெயலலிதா said...

இது உள்/வெளிநாட்டு சதி.

இந்தியா ஜெயிச்சுடுச்சி

பெப்சி உமா said...

அர்ஜூன் அம்மா யாரு ?

இவங்க தான் அர்ஜூன் அம்மா

உங்க பையை எப்படி இப்படி பலசாளியா வளர்த்தேள் ?

டோனி அம்மாகிட்ட பால் காய்ச்சறது எப்படின்னு டியூசன் எடுத்தேன்

கேப்டன் விஜயகாந்த் said...

கேப்டன் டோனி இல்லை, நான் தான் கேப்டன், நான் தான் ஒரே கேப்டன், நான் தான் நிரந்திர முதல்வர், நான் தான் நெப்போலியன், நான் தான் நெப்போலியன் சீடன்

இருள்நீக்கி சுப்பிரமணி said...

கருணாநிதி தலையை எடுத்தா தான் இந்தியா பைனல்ல கெலிக்கும்

இலவசக்கொத்தனார் said...

யோவ் டேமேஜருக்கு வெச்ச இல்ல ஆப்பு. அதைப் பத்தியும் எழுது.

CVR said...

//அதற்கு காரணம் அவர்களின் தொடர் வெற்றியா அல்லது அவர்களின் திமிர்த்தனமா அல்லது கடந்த 2 1/2 வருடங்களாக என் டேமேஜ் அந்த நாட்டை சேர்ந்தவராக அமைந்ததா எனத் தெரியவில்லை./////

ithula enna innum doubtu?? :-P

யுவராஜ் சிங் said...

என்னப்பாத்தா கருப்பண்ணசாமி முளிக்கற மாதிரியே இருக்கு.நல்ல போட்டொவா போடக்கூடாதா

புஸ்பிதா said...

//ஹர்பஜன் வீசிய 18 ஓவரும், ஆர்.பி. சிங் வீசிய 19 ஒவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றது.//

எங்க இவங்களெல்லாம் 18, 19 Overs வீசினார்கள்? நடந்ததே 20 Overs கொண்ட போட்டி தானே..
18வது, 19வது Overs???

நாகை சிவா said...

புஸ்பிதா...

சரி பண்ணியாச்சு சாமி...

அசர விட மாட்டேன்குறீங்களே...

Padmapriya said...

pona post la ennaya welcome pannirndheenga... adhu oru Danikes :D.

i was a great fan of cricket matches when i was in school.
now a days completely stopped watching it..

unga last post padichutu thaan nethiku match paarthen...
summa adhiruchu illa.. :D really enjoyed it!!

finals la yum epdiyadhu jeykanum :)

குசும்பன் said...

"அவர்களின் தொடர் வெற்றியா அல்லது அவர்களின் திமிர்த்தனமா "

100% அது மட்டுமே காரணம்!!!

செல்வன் said...

நாகையாரே

அருமையான ஆட்டம்.க்ரிக் இன்ஃபோவில் ஸ்கோர் தான் லைவாக பார்க்க முடிந்தது.மூணு வருசமா "எங்களை ஜெயிக்க ஆள் இல்லை" என கோதாவை கலக்கி வந்த கங்காரு அணியினரை இந்திய புலிகள் அடித்து துரத்தியது சூப்பர்.

சீனியர்கள் இல்லாமல் இருந்ததால் தான் ஜெயிக்க முடிந்தது என நினைக்கிறேன்.இளையவர்களுக்கு பயம் என்பதே இல்லாமல் ஆடினார்கள்.

நாகை சிவா said...

//"எங்களை ஜெயிக்க ஆள் இல்லை" என கோதாவை கலக்கி வந்த கங்காரு அணியினரை இந்திய புலிகள் அடித்து துரத்தியது சூப்பர்.//

அது எல்லாம் பழைய கதை என்று ஜிம்பாவே, பாகிஸ்தான், இந்திய நிருபித்து பொட்டிய கட்ட வச்சது அருமை. இதே போல அடுத்து வரும் ஒரு நாள் ஆட்டத்திலும் ஆடனும்.. பாப்போம்...

நாகை சிவா said...

//"அவர்களின் தொடர் வெற்றியா அல்லது அவர்களின் திமிர்த்தனமா "

100% அது மட்டுமே காரணம்!!!//

குசும்பன் , இதுவும் ஒரு காரணம் :)

நாகை சிவா said...

//pona post la ennaya welcome pannirndheenga... adhu oru Danikes :D.//

யூ வெல்கம் :)

//i was a great fan of cricket matches when i was in school.
now a days completely stopped watching it..//

ஒரே குட்டையில ஊறின மட்டை போல... ;)

//unga last post padichutu thaan nethiku match paarthen...
summa adhiruchu illa.. :D really enjoyed it!!//

அது :)

//finals la yum epdiyadhu jeykanum :)//

எப்படியோ ஜெயிச்சுட்டோம் :)

நாகை சிவா said...

/ithula enna innum doubtu?? :-P//

ஆமாங்க சி.வி.ஆர்.... எனக்குள் இந்த கொல வெறி இருக்கானு இன்னும் டவுட்டாவே இருக்கு :)

நாகை சிவா said...

//யோவ் டேமேஜருக்கு வெச்ச இல்ல ஆப்பு. அதைப் பத்தியும் எழுது.//

எழுதிடுவோம் கொத்ஸ்.. ஆனா எப்பனு தான் தெரியல :(

இம்சை said...

என்னது இந்தியா, ஆஸிவை வெற்றிக் கண்டதா, சொல்லவெஇல்ல.....