Monday, September 24, 2007

போதும்டா.. இது போதும்டா....உலக கோப்பையில் முதல் சுற்றில் வெளி வந்து எங்களை புலம்போ புலம்பு என்று புலம்ப வைத்த அதே இந்திய அணி இன்று 20/20 உலக கோப்பையை பாகிஸ்தானை பரபரப்பாக வெற்றிக் கொண்டு பெற்று உள்ளது....


போதும்டா...இது போதும்டா.... எங்கள் புலம்பலை மறக்க.....உப தகவல்:

எங்களுடம் அமர்ந்து பெரும்பாலான ஆட்டத்தை பார்த்த ஒரு ஈரோப்பியர் நீங்க எல்லாம் ஏன் கிரிக்கெட் மேல் பைத்தியமா இருக்கீங்க என்பது எனக்கு நல்லாவே புரியுது. உங்க அணி மட்டும் எந்த போட்டியா இருந்தாலும் ஆட்டத்தை மிகவும் பரப்பரப்பாக கொண்டு போய் ஜெயிக்குமா ஜெயிக்காத என்று அலற வைத்து வெற்றி பெறுகின்றார்கள். அதான் நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க என்றார்... இது தான் எங்களுக்கு எப்பவோ தெரியுமே என்று நினைச்சேன், ஆனா சொல்லல :)

68 comments:

நாகை சிவா said...

தோணி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்....

அவந்திகா said...

yes annaa...this is really great... great work

நாகை சிவா said...

ஆமாம் அவந்திகா... எதிர்பார்த்த படி நல்ல போட்டி...

நல்ல டீம் வொர்க்... சிறந்த தலைமை.. இவை இரண்டும் தான் இன்றைய வெற்றிக்கு காரணம்...

வெல்டன் மேட்ஸ்... :)

மின்னுது மின்னல் said...

அவந்திகா said...
yes annaa...this is really great... great work
//

இங்க அங்க கும்மி அடிச்சது போதும் போயி நல்ல புள்ளையா படிங்க பார்போம் :)

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள்..:)

மின்னுது மின்னல் said...

இங்க பாக்கிஸ்தான் ஆளுக்க முகத்தில ஈ ஆடலை... :)

நாகை சிவா said...

வாங்க மின்னல்... இன்னிக்கு மேட்ச் பாத்தீங்களா.. இல்ல டேமேஜர் ஆப்பு அடிச்சுட்டாரா...

நாகை சிவா said...

//இங்க பாக்கிஸ்தான் ஆளுக்க முகத்தில ஈ ஆடலை... :)//

இங்க போன் பண்ணி வெறுப்பேத்திக்கிட்டு இருக்கோம்... :)

மின்னுது மின்னல் said...

ஹி ஹி மேட்ச் பாக்குறத்துக்காக நாங்க டூட்டியை மாத்திட்டமில

:)

பாபு said...

//உலக கோப்பையில் முதல் சுற்றில் வெளி வந்து எங்களை புலம்போ புலம்பு என்று புலம்ப வைத்த அதே இந்திய அணி இன்று 20/20 உலக கோப்பையை பாகிஸ்தானை பரபரப்பாக வெற்றிக் கொண்டு பெற்று உள்ளது.... //

இல்லை, இது அதே இந்திய அணி இல்லை, புதிய இளம்ரத்தம் பாயும் இந்திய அணி, நினைவில் வையுங்கள்.

மின்னுது மின்னல் said...

சிக்ஸு சிக்ஸா போகவும் ஒரு பாக்கிஸ் எங்களை கேவலமா ஒரு லுக்கு உட்டான் பாருங்க.. :(


இப்ப அவனை ஆளையே காணும்..:)

செல்வன் said...

இந்தியான்னா இந்தியாதான்னு நிருபிச்ச தோனிக்கும்,யுவராஜுக்கும், மான் ஆஃப் தெ மேட்ச் பதானுக்கும்,கலக்கலான கடைசி ஓவரை வீசிய சர்மாவுக்கும் எனது பாராடடுக்கள்.போட்டியை தொடர்ந்து கவர் செய்த சூடான் புலிக்கும் பாராட்டுக்கள்

கீதா சாம்பசிவம் said...

வாழ்த்துச் சொல்ல வரலாம்னு பார்த்தால் உங்க வலைப் பதிவே திறக்க மாட்டேன்னு ஒரே அடம்.
வாழ்த்துக்கள். ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கும் என்று நம்புகிறேன்!

ச.சங்கர் said...

உண்மையைச் சொல்லுங்க...ஹர்பஜன் 17 ஆவது ஓவரை வீசி முடித்ததும் என்ன யோசிச்சிக்கிட்டு இருந்தீங்க..அதுவும் அடுத்த ஸ்ரீசாந்தின் முதல் பாலிலேயே ஒரு சிக்ஸு...ச்ச்சும்மா அதுந்துருச்சுல்ல:)

எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா இந்தப் பாவிங்கதான் காரணமா இருப்பானுங்க...

ஆனாலும்..அசத்திட்டீங்க கண்ணுங்களா அப்படீன்னு சொல்லாம இருக்க முடியலை :)

இலவசக்கொத்தனார் said...

உங்க அவுஸ்திரேலிய டேமேஜர் இன்னைக்கு யாருக்கு சப்போர்ட்டு? நம்ம பக்கம் இல்லதானே. அவருக்கு என் சார்பில் வெய்யுங்கய்யா ஒரு ஆப்பு!! :))

இன்சமாம் உல் ஹக் said...

யாரு ஜெயிச்சது!

அட! எல்லாரும் எங்க பங்காளிகதாம்பா!

எனக்கு சந்தோஷம்தான்! என்னை பெருமை படுத்திட்டாங்கல்ல!

ஒசாமா பின் லேடன் said...

//வாழ்த்துக்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கும் என்று நம்புகிறேன்!//

உண்மைதான்!

பின்னே நம்மகிட்டே இருந்து வாழ்த்து வந்தா வித்தியாசம்தானே!

சாஹித் அப்ரிடி said...

இள ரத்தங்கள்!

சும்மா பின்னியெடுத்துட்டாங்க!

திறமை இருக்குற பக்கம் ஜெயிக்குறது சகஜம்தான!

வாழ்த்துக்கள் டோனி!

நாகை சிவாவுக்கும்தான்!

ஹர்பஜன் சிங் said...

//17 ஆவது ஓவரை வீசி முடித்ததும் என்ன யோசிச்சிக்கிட்டு இருந்தீங்க..//

அடுத்த மாட்சுல நான் இருப்பனோ மாட்டனோன்னு நினைச்சேன்!

அதான் ஜெயிச்சிட்டம்ல!

இப்ப போய் எதுக்கு இந்த பேச்சு!

அப்படியே கொமட்டுலயே குத்துவேன் சொல்லிட்டேன்!

ஜார்ஜ் புஷ் said...

ஒவ்வொரு மேட்சையும் கவரேஜ் பண்ணிய நாகை சிவாவுக்கு வாழ்த்துக்கள்!

டிராவிட் said...

கவுத்துட்டாங்களே!

நாம கேப்டனா இருந்தப்போ ஒரு பய நல்லா வெளையாண்டா மீதிப்பேர் சங்கு ஊதிடுவானுவ! இப்ப பாரு!

ம்ஹூம்! கலி முத்திப் போச்சு!

கங்குலி said...

சும்மா ரொம்ப அலட்டிக்காதீங்க!

நான் இருந்திருந்தா 13 ஓவர்லயே மேட்ச் முடிஞ்சிருக்கும்!

கங்குலியின் மனடாட்சி said...

//நான் இருந்திருந்தா 13 ஓவர்லயே மேட்ச் முடிஞ்சிருக்கும்!//

ஆமா! இவரே மட்டை போட்டு இந்திய ஸ்கோர் 100 ஐத் தாண்ட விட்டிருக்க மாட்டாரு!

அப்புறம் 13 ஓவர் என்ன! 10 ஓவர்லயே அடிச்சி ஜெயிச்சிருப்பாய்ங்க!

சஞ்ச்ய் தத் said...

நம்மை டிவி பார்க்கவே விடலை!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்@

:(

கிரெக் செப்பல் said...

இன்னிக்கு கொண்டாட்டம் அபி அப்பா ஊட்டாண்டையா?

இல்யாஸ் said...

//ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P//
ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தோற்று வந்த போது நாம் இந்த எச்சரிக்கையொடு (பின்னால் இவர்கள் வெற்றி பெற கூடும் என்று) ரசிகர்கள் தண்டிக்காமல் இருக்கவில்லயே? இன்று நடப்பதை மட்டும் பார்ப்போம், மனதார வாழ்த்துவோம்,நாளை பற்றி நாளை யோசிப்போம், வெற்றி பெற்ற் தோனி அணியினருக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்

இல்யாஸ் said...

//ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P//
ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தோற்று வந்த போது நாம் இந்த எச்சரிக்கையொடு (பின்னால் இவர்கள் வெற்றி பெற கூடும் என்று) ரசிகர்கள் தண்டிக்காமல் இருக்கவில்லயே? இன்று நடப்பதை மட்டும் பார்ப்போம், மனதார வாழ்த்துவோம்,நாளை பற்றி நாளை யோசிப்போம், வெற்றி பெற்ற் தோனி அணியினருக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்

இல்யாஸ் said...

//ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P//
ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தோற்று வந்த போது நாம் இந்த எச்சரிக்கையொடு (பின்னால் இவர்கள் வெற்றி பெற கூடும் என்று) ரசிகர்கள் தண்டிக்காமல் இருக்கவில்லயே? இன்று நடப்பதை மட்டும் பார்ப்போம், மனதார வாழ்த்துவோம்,நாளை பற்றி நாளை யோசிப்போம், வெற்றி பெற்ற் தோனி அணியினருக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்

இல்யாஸ் said...

//ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P//
ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தோற்று வந்த போது நாம் இந்த எச்சரிக்கையொடு (பின்னால் இவர்கள் வெற்றி பெற கூடும் என்று) ரசிகர்கள் தண்டிக்காமல் இருக்கவில்லயே? இன்று நடப்பதை மட்டும் பார்ப்போம், மனதார வாழ்த்துவோம்,நாளை பற்றி நாளை யோசிப்போம், வெற்றி பெற்ற் தோனி அணியினருக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்

SurveySan said...

இதே பொழப்பா போச்சு.
தோத்தா கன்னாபின்னான்னு திட்ட வேண்டியது, ஜெயிச்சா, தூக்கி கொண்டாட வேண்டியது.
என்னமோ போங்க

;)

தேவ் | Dev said...

அகில ஓலக லெவலில் இந்திய கிரிக்கெட்டைத் தாங்கி பிடிக்கும் தம்பி புலிபாண்டி (எ) சிவா அவர்களுக்கு ஒலக கிரிக்கெட் ரசிக சிகாமணி பட்டம் வழ்ங்குமாறு பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சியை வேண்டி விரும்பி கேட்டுக்குறோம்...

குசும்பன் said...

மின்னுது மின்னல் said...
இங்க பாக்கிஸ்தான் ஆளுக்க முகத்தில ஈ ஆடலை... :)"

அப்ப கடைசியா யாருதான் ஆடினா? ஈ ஆடுவது எல்லாம் பார்கிற வயசாய்யா? போய் M tvயில் ஷகிரா ஆடுவதை பாரு:)))

Sumathi. said...

ஹாய்,

ஆமாம், இவங்க சிக்ஸ் சிக்ஸா குடுத்தாலும் கடைசியில அந்த காட்ச் மட்டும் பிடிக்கலைனா? ...

எப்படியோ ரொம்ப வருஷத்துக்கப்புறம்
நாம ஜொயிச்சிருக்கோம்... அதுக்காகவே இந்த வெற்றிய கொண்டாடனும்.அவங்க அவங்க விருப்பப் படி எப்படி வேனாலும் கொண்டாடுங்க..ஹி..ஹி..ஹி.

Sumathi. said...

ஹாய்,

//இதே பொழப்பா போச்சு.
தோத்தா கன்னாபின்னான்னு திட்ட வேண்டியது, ஜெயிச்சா, தூக்கி கொண்டாட வேண்டியது.
என்னமோ போங்க..//

நாம யார்கிட்டத் தோத்தாலும் இந்த பாகிஸ்தான் நாய்ங்க கிட்ட மட்டும் தோக்கவே கூடாது.அவங்களைப் பாத்தா அவ்வளவு வெறி எனக்கு.

Padmapriya said...

I really enjoyed yesterday's match :)
adhum kodiya thookitu ground aa suthi vandhaangale... evlo sandhoshama irundhachu theriyuma??!! naa TV munnadi ninnu kai thattikite irudhen.. enga area la pattasu koluthi adhiradichuttaanga theriyuma??

Padmapriya said...

and Spl thanks to you Siva..
its all ur reviews which made me to watch cricket again. its something like getting in touch with an old friend after a lonnng time...

madharsha said...

YOUTH HAVE MADE IT........

Anonymous said...

youth have made it,sharukhanai parthira?

Anonymous said...

youth have made it,sharukhanai parthira?

இம்சை said...

இங்கு கும்மி அலவ்டா இல்லயா...

கோபிநாத் said...

:)))

Anonymous said...

:)

Arunkumar said...

கலக்கிட்டோம்ல :-)

ஜோ / Joe said...

இது விளையாட்டு .போர் அல்ல .சுமதி போன்ற மதிகெட்டதுகள் பாகிஸ்தான் வீரர்களை நாய்கள் என்று திட்டுவதை அனுமதிக்கிற அளவுக்கு தான் நாகை சிவாவின் நாகரீகம் போலிருக்கிறது

நாகை சிவா said...

//ஹி ஹி மேட்ச் பாக்குறத்துக்காக நாங்க டூட்டியை மாத்திட்டமில

:)//

என் இனம்டா நீ :)

நாகை சிவா said...

//இல்லை, இது அதே இந்திய அணி இல்லை, புதிய இளம்ரத்தம் பாயும் இந்திய அணி, நினைவில் வையுங்கள்.//

@ பாபு

என்னங்க பாபு, சும்மா எல்லாரும் அடிக்குற ஜல்லியவே நீங்களும் அடிக்குறீங்க... உலக கோப்பைக்கு சென்ற அதே பவுலிங் டீம் தான் (ஜாகீர் இதில் இல்லை), அதே யுவராஜ், காம்பீர், தோணி, கார்த்திக், சேவாக் தான்....

பெரும்பான்மையானர்கள் அதே மக்கள் தான்... ஒரு மேட்சில் சர்மா உதவியதை தவிர மற்ற எல்லா மேட்ச் மேலே உள்ளவர்களாக வென்றோம்.

நம் ஆட்டத்தின் அணுகுமுறை மாறியதால் வென்றோம் என்பது தான் உண்மை.

நாகை சிவா said...

//சிக்ஸு சிக்ஸா போகவும் ஒரு பாக்கிஸ் எங்களை கேவலமா ஒரு லுக்கு உட்டான் பாருங்க.. :(


இப்ப அவனை ஆளையே காணும்..:)//

@ மின்னல், விடாத.. தேடி பிடிச்சு வெறுப்பேத்தி கிட்டே இரு.... :)

நாகை சிவா said...

//இந்தியான்னா இந்தியாதான்னு நிருபிச்ச தோனிக்கும்,யுவராஜுக்கும், மான் ஆஃப் தெ மேட்ச் பதானுக்கும்,கலக்கலான கடைசி ஓவரை வீசிய சர்மாவுக்கும் எனது பாராடடுக்கள்.போட்டியை தொடர்ந்து கவர் செய்த சூடான் புலிக்கும் பாராட்டுக்கள்//

@ செல்வன்!

நன்றி டாலர் :)

உண்மையிலே தோணியின் புதிய அணுகுமுறை பாராட்டப்பட வேண்டியது

நாகை சிவா said...

// ஆனால் ரொம்பக் குதிக்காதீங்க, இந்திய அணி கிட்டே கொஞ்சம் எச்சரிக்கையோடவே இருந்துக்கணும்! :P//

வாழ்த்துக்களுக்கு நன்றி...

அது எல்லாம் ரொம்பவே எச்சரிக்கையா இருக்கோம் இப்ப.... அது எப்படினு எல்லாம் கேட்க கூடாது ;)

நாகை சிவா said...

@ சங்கர்!

வாங்க சங்கர்

//உண்மையைச் சொல்லுங்க...ஹர்பஜன் 17 ஆவது ஓவரை வீசி முடித்ததும் என்ன யோசிச்சிக்கிட்டு இருந்தீங்க..//

நாம் ஜெயிப்பதுக்கான வாய்ப்புகள் சற்றே அதிகம் என்று தான் நினைச்சேன், கடைசி ஒவரில் சிக்ஸ்ர் அடித்த பிறகு கூட அப்படி தான் நினைத்தேன். முதல் சுற்றில் நடந்த தவறு நடக்கக் கூடாது என்று நினைச்சு பெரிய தப்பா பண்ண போறான் என்று நினைச்சேன். அதே தான் நடந்துச்சு. :)

// அதுவும் அடுத்த ஸ்ரீசாந்தின் முதல் பாலிலேயே ஒரு சிக்ஸு...ச்ச்சும்மா அதுந்துருச்சுல்ல:)//

இது உண்மை கொஞ்சம் அதிர வச்சுச்சு தான்... :) ஆனா அந்த ஒவரில் அந்த போல்ட் இன்னும் அதிந்துச்சு :)

//எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா இந்தப் பாவிங்கதான் காரணமா இருப்பானுங்க...//

:)

//ஆனாலும்..அசத்திட்டீங்க கண்ணுங்களா அப்படீன்னு சொல்லாம இருக்க முடியலை :)//

உண்மை... நல்ல போட்டி, நல்ல வெற்றி... அதனால் தான் இந்த ஆரவாரம்.. :)

நாகை சிவா said...

/வாழ்த்துக்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கும் என்று நம்புகிறேன்!//

ரொம்பவே வித்தியாசமா போட்டியில் வழக்கமான வெற்றி தான் சிவா....

அந்த வழக்கம் கடைசி வரைக்கும் கொண்டு போய் ஜெயிப்போமா மாட்டோமா என்று துடிக்க வைத்தது தான்...

நாகை சிவா said...

@ இ. கொத்தனார்!

//உங்க அவுஸ்திரேலிய டேமேஜர் இன்னைக்கு யாருக்கு சப்போர்ட்டு? நம்ம பக்கம் இல்லதானே. //

நான் தான் இப்ப கம்பெனி மாறிட்டேனே... ஆனா கண்டிப்பா நம்ம பக்கம் சப்போட் பண்ணி இருக்க மாட்டாங்க என்பது மட்டும் உறுதி....

//அவருக்கு என் சார்பில் வெய்யுங்கய்யா ஒரு ஆப்பு!! :))//

போன் அடிச்சேன், ஆள் எடுக்கல... எஸ்கேப் ஆயிட்டார்... வரும் தொடரில் நம்ம ஆளுங்க வெற்றி பெறட்டும், பெரிசா அடிப்போம்....

நாகை சிவா said...

//இன்று நடப்பதை மட்டும் பார்ப்போம், மனதார வாழ்த்துவோம்,நாளை பற்றி நாளை யோசிப்போம், வெற்றி பெற்ற் தோனி அணியினருக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்
//

சரியா சொன்னீங்க இல்யாஸ்... :)

நாகை சிவா said...

@ சர்வேசன்

//இதே பொழப்பா போச்சு.
தோத்தா கன்னாபின்னான்னு திட்ட வேண்டியது, ஜெயிச்சா, தூக்கி கொண்டாட வேண்டியது.
என்னமோ போங்க//

சர்வத்தையும் அளக்கும் சர்வேசா... அடிக்குற கை தான் அணைக்கும் என்ற மொழி உமக்கு எப்படிய்யா மறந்துச்சு... :)

என்ன நம்மக்கிட்ட அடியும் பலமா இருக்கும், அணைப்பும் பலமா இருக்கும் ;)

நாகை சிவா said...

//அகில ஓலக லெவலில் இந்திய கிரிக்கெட்டைத் தாங்கி பிடிக்கும் தம்பி புலிபாண்டி (எ) சிவா அவர்களுக்கு ஒலக கிரிக்கெட் ரசிக சிகாமணி பட்டம் வழ்ங்குமாறு பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சியை வேண்டி விரும்பி கேட்டுக்குறோம்...//

தேவ் அண்ணனே.... ஏன் இப்படி எல்லாம்... என்னய விட பல மோசமானா பல மடப்பயல்ங்க இருக்காங்க.... அவங்களை எல்லாம் மீறிக்கிட்டு எனக்கு பட்டம் தர துடிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமாக அமைந்து விடும். அதனால் இது வேணாம்ண்ணனே... :)

நாகை சிவா said...

//அப்ப கடைசியா யாருதான் ஆடினா? ஈ ஆடுவது எல்லாம் பார்கிற வயசாய்யா? போய் M tvயில் ஷகிரா ஆடுவதை பாரு:)))//

கடைசியா ஹர்பஜன் தான் ஆடினார், செம ஆட்டம்ப்பா கூட பதானும் ஆனா பஜ்ஜி ஆட்டம் தான் சூப்பர்...

ஷகிரா கூட ஆட விடலாம் போல இருக்கு....

நாகை சிவா said...

@ சுமதி!

//இவங்க சிக்ஸ் சிக்ஸா குடுத்தாலும் கடைசியில அந்த காட்ச் மட்டும் பிடிக்கலைனா//

ஒரு ரன் தான் எடுத்து இருப்பாங்க, எப்படியும் நாம் பிரஷர் பண்ணி ஜெயித்து இருக்கலாம் என்று நினைக்குறேன்... ஏன்னா தட் டே வாஸ் அவர்ஸ்.... :)

//இந்த வெற்றிய கொண்டாடனும்.அவங்க அவங்க விருப்பப் படி எப்படி வேனாலும் கொண்டாடுங்க..ஹி..ஹி..ஹி.//

நாங்க எல்லாம் இங்க கொண்டாடியாச்சு... :)

//நாம யார்கிட்டத் தோத்தாலும் இந்த பாகிஸ்தான் நாய்ங்க கிட்ட மட்டும் தோக்கவே கூடாது.அவங்களைப் பாத்தா அவ்வளவு வெறி எனக்கு.//

கிட்டதட்ட எல்லாருக்கும் அப்படி தாங்க, ஆனா அதுக்காக நாய் என்று சொல்வது சரியாகவா படுது சொல்லுங்க... நானும் உங்கள மாதிரி இருந்தேன் பல பாகிஸ்தானிகளை பார்ப்பதற்கு முன்பு. உண்மையிலே நம்ம மேல் ரொம்ப பாசம் உள்ளவங்க அவங்க... இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று சப்போர்ட் பண்ணிய பாகிஸ்தானிகள் கூட இங்கு உண்டு.

விளையாட்டை(முடிவுகளை) விளையாட்டாக எடுத்துப்போம். ஒகே...

நாகை சிவா said...

@ பத்மப்ரியா!

//dhum kodiya thookitu ground aa suthi vandhaangale... evlo sandhoshama irundhachu theriyuma??!!//

அப்ப ஹர்பஜன் டான்ஸ பாத்தீங்களா... அருமை அருமை... :)

// naa TV munnadi ninnu kai thattikite irudhen.. enga area la pattasu koluthi adhiradichuttaanga theriyuma??//

நாங்க இங்க டேபிள் மேல் ஏறி ஆடி அமர்க்களப்படுத்தியாச்சு... நேத்து தான் நம் நாட்டில் தேசிய திருவிழாவாக இருந்து இருக்குமே :
பட்டாச்சுக்கு எல்லாம் இங்க வழி இல்ல... :)

//and Spl thanks to you Siva..//

தன்யன் ஆனேன்...:)

//its all ur reviews which made me to watch cricket again. its something like getting in touch with an old friend after a lonnng time...//

ரொம்ப சந்தோஷம்... நல்ல போட்டிகளை காண தவறாதீர்கள்....
வெற்றி தோல்வி மனதில் கொள்ளாமல் ;)

நாகை சிவா said...

//madharsha said...
YOUTH HAVE MADE IT........//

வீ மேட் இட்.... :)

நாகை சிவா said...

//இம்சை said...
இங்கு கும்மி அலவ்டா இல்லயா...//

என்ன கேள்வி இது... :)

நாகை சிவா said...

@ கோபி!

எதுக்குய்யா.... அந்த சிரிப்பு

@ துர்கா!

உங்க மர்மபுன்னகை எதை குறிக்கின்றது...

நாகை சிவா said...

//Arunkumar said...
கலக்கிட்டோம்ல :-)//

@ ஆமாங்க அருண்... சூப்பர்...

நாகை சிவா said...

//இது விளையாட்டு .போர் அல்ல .சுமதி போன்ற மதிகெட்டதுகள் பாகிஸ்தான் வீரர்களை நாய்கள் என்று திட்டுவதை அனுமதிக்கிற அளவுக்கு தான் நாகை சிவாவின் நாகரீகம் போலிருக்கிறது//

உங்க பின்னூட்டத்தை படிக்காமலே அவங்களுக்கு என் கருத்தை சொல்லிட்டேன் ஜோ...

நம் நாட்டில் தான் பாகிஸ் எதிராக நடந்த போரில் கூட அரசியல் விளையாடியதே அதனால் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்...

என் நாகரீத்தை பற்றி நானே என்னத்த சொல்லுவது... உங்கள் விருப்பப்படி நிர்ணயித்து கொள்ளுங்கள்.... அப்புறம் ஒரு விசயம் இந்த பதிவுக்கு கமெண்ட் மாடுரேசன் இல்லை. :)
இப்ப போட்டுறேன் மறுபடியும்

அபி அப்பா said...

என்னப்பா சரியான காமடி பதிவு போட்டு இருக்கீங்க ஹய்யோ ஹையோ:-)))

Dreamzz said...

ஆனா இப்படி ஆஸி கிட்ட கோட்டை விட்டுடாங்களே! :((

மு.கார்த்திகேயன் said...

அடிக்கடி இங்க வந்த கும்மி அடிக்க முடியல மாப்ஸ்.. இனி தொடரும் இடைவிடாமல்..

எழுத்து போதை இறங்கிடுச்சு.. இனி தொடர்ந்து போதையேத்த வேண்டியது தான்

Compassion Unlimitted said...

20*20 podhum..Chandigarh victory update podunga..santhosha paduvom..seekiram.. adutha match enna aaga pogudhunu theriyadhu

CU