
இன்று மிகுந்த பரபரப்புடன் நடந்த முடிந்த அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ஒட்டங்கள் எடுத்தது. யுவராஜ் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் 30 பந்துகளில் 70 ஒட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
189 ஒட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 173 ஒட்டங்கள் எடுத்து 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
வரும் திங்கள் அன்று இந்திய அணி பாகிஸ்தானை இறுதி போட்டியில் எதிர் கொள்கிறது. அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.

முக்கிய துளிகள்:
* யுவராஜ் பிரட் லீ பந்தில் அடித்த சிக்ஸ்ர் தான் இந்த தொடரின் மிக பெரிய சிக்ஸ்ர் ஆகும். (119 மீட்டர்)
* ஸ்ரீசாந்த் 4 ஒவர்களில் ஒரு மெயிடன் உள்பட 12 ஒட்டங்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.
* ஹர்பஜன் வீசிய 18வது ஓவரும், ஆர்.பி. சிங் வீசிய 19வது ஒவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இட்டு சென்றது.
* ஆட்டம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போதிலும் இந்திய மண்ணில் நடந்தை போன்று மிக ஆரவாத்துடன் ரசிகர்கள் இந்திய அணியினருக்கும் உற்சாகம் அளித்தார்கள்.
* ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் பெற்றார்.

பின்குறிப்பு :
அது என்னமோ தெரியலை, ஆஸ்திரேலியா இந்தியாவிடன் தோல்வி அடையும் போது எல்லாம் ஒரு தனி சந்தோஷம். அதற்கு காரணம் அவர்களின் தொடர் வெற்றியா அல்லது அவர்களின் திமிர்த்தனமா அல்லது கடந்த 2 1/2 வருடங்களாக என் டேமேஜ் அந்த நாட்டை சேர்ந்தவராக அமைந்ததா எனத் தெரியவில்லை.