Tuesday, July 18, 2006

மீண்டும் சுனாமி - மரணம்

நேற்று மீண்டும் இந்தோனேசியாவை சுனாமி புரட்டி எடுத்து உள்ளது. சுனாமி இந்தியாவை தாக்கவில்லை என்று சந்தோஷப்படுவதா அல்லது அங்கு இறந்த 350 மேற்ப்பட்டவர்களுக்காக வருத்தப்படுவதா? ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

மீண்டும் சுனாமி என்று கேள்விப்பட்டதும், போன சுனாமியின் போது எனக்கு ஏற்ப்பட்ட மனவேதனைக்களும், வைரமுத்துவின் பாடலும் தான் நினைவுக்கு வந்தது. அந்த பாடலை கீழே கொடுத்து உள்ளேன்.

உயிர், உடமை இழந்தோர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-------------------------------------------------------------------------------

    ஏ கடலே!
    உன் கரையில் இது வரையில்
    கிளிஞ்சல்கள் தானே சேகரித்தோம்
    முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்கிறோம்

    ஏ கடலே!
    நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா!
    முதுமக்கள் தாழியா?

    நீ கலங்களின் மைதானமா?
    பிணங்களின் மயானமா?

    துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
    நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

    உன் அலை
    எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

    நீ தேவதை இல்லையா
    பழிவாங்கும் பிசாசா?

    உன் மீன்களை நாங்கள்
    கூறுகட்டியதற்கா
    எங்கள் பிணங்களை நீ
    கூறுகட்டுகிறாய்?

    நீ அனுப்பியது
    சுனாமி அல்ல
    பிரளயத்தின் பினாமி

    பேய்ப்பசி உன்பசி
    பெரும்பசி

    குமரிக்கண்டம் கொண்டாய்
    கபாடபுரம் தின்றாய்
    பூம்புகார் உண்டாய்

    போதாதென்று
    உன் டினோசர் அலைகளை அனுப்பி
    எங்கள்
    பிஞ்சுக்குழந்தைகளின்
    பிள்ளைக்கறி கேட்கிறாய்

    அடக்கம் செய்ய ஆளிராதென்றா
    புதை மணுலுக்குள்
    புதைத்துவிட்டே போய்விட்டாய்?

    என்னபிழை செய்தோம்?
    ஏன் எம்மைப் பலி கொண்டாய்?

    சுமத்ராவை வென்றான்
    சோழமன்னன் ராஜராஜன்

    அந்தப் பழிதீர்க்கவா
    சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
    சோழநாடு கொண்டாய்?

    காணும் கரைதோறும்
    கட்டுமரங்கள் காணோம்
    குழவிகளும் காணொம்
    கிழவிகளும் காணோம்
    தேசப் படத்தில் சில கிராமங்கள் காணோம்

    பிணங்களை அடையாளம் காட்டப்
    பெற்றவளைத் தேடினோம்
    அவள் பிணத்தையே காணோம்

    மரணத்தின் மீதே
    மரியாதை போய்விட்டது
    பறவைகள்
    மொத்தமாய் வந்தால் அழகு
    மரணம் தனியே வந்தால் அழகு
    மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
    சுத்தமாய் மரியாதையில்லை

    அழுதது போதும்
    எழுவோம்
    அந்த
    மொத்தப் பிணக்குழியில்
    நம் கண்ணீரையும் புதைத்து விடுவோம்

    இயற்கையின் சவாலில்
    அழிவுண்டால் விலங்கு

    இயற்கையின் சவாலை
    எதிர்க்கொண்டால் மனிதன்

    நாம் மனிதர்க்கள்
    எதிர்க்கொள்வோம்

    மீண்டும் கடலே
    மீன்பிடிக்க வருவோம்

    ஆனால்
    உனக்குள் அஸ்திகரைக்க
    ஒருபோதும் வர மாட்டோம்

    -வைரமுத்து

-------------------------------------------------------------------------------
ஒலி வடிவில் கேட்பதற்கு இங்கு சுட்டவும்.
தரையிறக்கம் செய்து தான் கேட்க வேண்டும்.
User Name : tamil_blog
Password : tamilblog
-------------------------------------------------------------------------------
திரு. கோவி.கண்ணனின் சுனாமி குறித்த கவிதையை இங்கு காணலாம்.

23 comments:

கோவி.கண்ணன் said...

இதையும் கொஞ்சம் பாருங்கள்...
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30501063&format=html

நாகை சிவா said...

கண்ணன், பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. நெஞ்சை சுடும் வார்த்தைகள்.

//நாகப்பட்டினம்
உன்னால் சோகப்பட்டினமானது!//

நாகை சிவா said...

கண்ணன், உங்கள் சுட்டியையும் என் பதிவில் இணைத்து உள்ளேன். தங்கள் அனுமதி இல்லாமல்... அனுமதியை பின்னால் வாங்கி கொள்ளலாம் என்று நினைப்பில் தான்.....

Muthu said...

Siva,
i think you came to blogworld after Tsunami attack. :-))))) ..
Btw intha kavithaikku ingku kidaiththa ethirppu parri theriyumaa.. mudinthaal konjam thondiyeduththu athaiyum padiththu paarungkal:-))))

நாகை சிவா said...

ஆமாம் சோழநாடன்! நான் வலைப்பதிவுலகிற்கு புதியவன் தான்.

நீங்கள் சொல்வதை வைத்து என்னால் ஒரளவுக்கு கணிக்க முடிகின்றது.
தாங்கள் ஏதும் சுட்டி இருந்தால் கொடுக்கவும்.

Anonymous said...

hai fine

வடுவூர் குமார் said...

சிவா
அந்த சமயத்தில் இங்கு வானொலியில் அவ்வப்போது இந்த கவிதயயை ஒலிபரப்பினார்கள்.கேட்கும்போதே தொண்டை அடைதுக்கொள்வது மாதிரி இருக்கும்.கண்ணில் நீர் கோட்காவிட்டால் கட்டாயம் கண்ணிலும் மனதிலும் ஏதோ சரியில்லை என்று கொள்ளலாம்.

ரவி said...

சிவா...சுட்டிகள் எங்களுக்கு தெரியவில்லை..அதனால் சுட்டி தரும்போது - அதன் முழு முகவரியை கீழே கொடுத்திடுங்க...

மற்றபடி நல்ல மிள்பார்வை - கடலுக்கு..:)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சுனாமியால் இறந்தவர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகள்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சுனாமியால் இறந்தவர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகள்...

நாகை சிவா said...

வாங்க நிசார்தீன்,
வருகைக்கு நன்றி.
ஏன் இப்படி அனாமியாக?

கோவி.கண்ணன் said...

//அனுமதியை பின்னால் வாங்கி கொள்ளலாம் என்று நினைப்பில் தான்..... //

யாம் பெற்ற சோகம், அதற்கு ஆறுதல் தருக இவ்வையகம் :((

நாகை சிவா said...

//கண்ணில் நீர் கோட்காவிட்டால் கட்டாயம் கண்ணிலும் மனதிலும் ஏதோ சரியில்லை என்று கொள்ளலாம்//
உண்மை தான் குமார், சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்தவர்களுக்கு அந்த வலி சற்று அதிகமாகவே வலிக்கும்.

நாகை சிவா said...

//சிவா...சுட்டிகள் எங்களுக்கு தெரியவில்லை..அதனால் சுட்டி தரும்போது - அதன் முழு முகவரியை கீழே கொடுத்திடுங்க...//
விரைவில் சரி செய்து விடுகின்றேன் ரவி

நாகை சிவா said...

//சுனாமியால் இறந்தவர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகள்... //
என் அஞ்சலிகளும் குமரன்

மு.கார்த்திகேயன் said...

இயற்கையின் சீற்றங்களுக்கு வருந்துவதை தவிர வேறென்ன செய்ய முடியும்..

என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

நாகை சிவா said...

//யாம் பெற்ற சோகம், அதற்கு ஆறுதல் தருக இவ்வையகம் :(( //
ஆம் கண்ணன், உலகில் உள்ள அனைத்து மக்களுமே நமக்கு ஆறுதல் சொன்னது தான் மிகப் பெரிய ஆறுதல்

நாகை சிவா said...

//இயற்கையின் சீற்றங்களுக்கு வருந்துவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.. //
இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் தவறுகளுக்கு மொத்தமாக சேர்த்து தண்டனை கொடுத்து விடுகின்றது.

Syam said...

சுனாமியால் இறந்த சகோதர சகோதரிகளுக்கு இதய அஞ்சலி...கவிதைய படிச்சு முடிக்கும் போது எதோ ஒரு துக்கம் நெஞ்சை அடைத்தது மட்டும் நிஜம்...

Butterflies said...

Ya read it in the papers!!!!I donno but it jus happens so unexpectedly!huge loss of life and property!god be with them

நாகை சிவா said...

//கவிதைய படிச்சு முடிக்கும் போது எதோ ஒரு துக்கம் நெஞ்சை அடைத்தது மட்டும் நிஜம்... //
ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அந்த துக்கம் இன்னும் எங்களிடம் இருந்து மறையவில்லை ஷாம்.

நாகை சிவா said...

//god be with them //
அவன் மட்டும் தான் கூட இருக்க முடியும்.

மு.கார்த்திகேயன் said...

சரியா சொன்னீங்க பங்கு. இயற்கையை பாதுகாத்தால் இது போல நடப்பது குறையும்..