Monday, July 10, 2006

ஏய் குருவி! சிட்டுக் குருவி...

ஏய் குருவி!
குருவி, குருவி.,

ஏய் குருவி!
சிட்டுக் குருவி!


உன் ஜோடிக் எங்க அத கூட்டிக்குட்டு,
எங்க வீட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு, கட்டு பொன்னான கூடு

இப்ப பொண்டாட்டி இல்லை, வந்து என் கூட பாடு ...
ஏய் குருவி!


சிட்டுக் குருவி! ஏய்ய குருவி!
அய்யா, உள்ளத்தில நல்ல அன்பு இருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பு இருக்கு

பொண்டாட்டிக்காரி என்னானு பார்ப்பா,
வந்து உன் கூட்டப் பார்த்தா
கொடக் கூலிக் கேட்ப்பா,
ஏய் குருவி, சிட்டுக் குருவி


ஏய் எவடி, அடியே எவடி
ஏய், எவடி அது....

















மேட்டரு என்னான,சில வருடங்களுக்கு முன்பு வரை நம் வீடுகளில் அதிக அளவில் காணப்பட்ட சிட்டுக்குருவிகளை இப்பொழுது முன் போல் காண முடிவதில்லை. அழிந்து வரும் பறவை இனத்தில் அதுவும் சேர்ந்து விட்டதாக எங்கோ படித்த ஞாபகம். இங்கு தற்சமயம் நான் உள்ள வீட்டிற்கு வந்த நாளில் இருந்து காலை வேளைகளில் குருவியாரின் குரலை மட்டும் அடிக்கடிக் கேட்க முடிந்தது. நேற்று தான் தரிசனம் கிடைத்தது. உடனே புகைப்படமாக பிடித்து வைத்துக் கொண்டேன். குருவியாரின் குரலைக் கேட்டும் போது எல்லாம் எங்கள் பழைய வீட்டு(நாகையில்) மாடி அறையில் குருவியார் கட்டிய கூடுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருகின்றது. ஹம்....

குருவி என்றாலே ராக தேவனின் இசையில் முதல் மரியாதை படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல் தான் உடனடியாக நினனவுக்கு வரும். அதனால் அந்த பாடல் மேலே, நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

107 comments:

Unknown said...

அட சிட்டுக்குருவி இன்னும் இருக்கா? எங்க ஊர்ல காணாமலே போச்சு ஆனா துபாய்ல சில இடங்கள்ள பாத்திருக்கேன் புறாதான் இங்கே அதிகம்

பொன்ஸ்~~Poorna said...

ஆகா... இங்க கூட நிறைய விதவிதமா குருவி வருது.. எனக்கு இப்படி ஒரு ஐடியா தோணலியே!!!

கலக்கறீங்க சிவா.. என்ன மேட்டர்? பாட்டெல்லாம் பலமா இருக்கிறதைப் பார்த்தா குருவி மட்டும் தானா?!! ;)

சீனு said...

மீண்டும் இந்த அருமையான பாடலை அசை போட வைத்ததற்கு நன்றிகள் பல.

Sivabalan said...

நாகை சிவா

படங்கள் நன்றாக உள்ளது.

நன்றி.

கப்பி | Kappi said...

புலி..என்ன இன்னைக்கு ஒரே ரொமாண்டிக் மூட் போல..

Syam said...

ஒலியும், ஓளியும் போட்டு தாக்குங்க..

நீங்க கேள்வி பட்டு இருக்கீகளோ இல்லயோ..கோபிசெட்டிபாளையத்துல எல்லா ரோடு சைடு நைட் கடைகளிலும் சிட்டு குருவி வறுவல் பேமஸ்..கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இது நிஜம்...

குமரன் (Kumaran) said...

தற்போது எங்கே இருக்கிறீர்கள் சிவா?

இங்கே அமெரிக்காவிலும் நம் ஊர் சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறேன். எப்போதாவது.

நல்ல பாடல்.

கஸ்தூரிப்பெண் said...

“ சிட்டுகுருவிக்கென்ன கட்டுப்பாடு ” பாடித்திரிஞ்சிட்டிருந்ததை புடுச்சி கட்டத்தில போட்டாச்சா!!!!!!

கோவி.கண்ணன் said...

எனக்கும் ஒரு பாட்டு ஞாபகம் வருது..
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு .. தென்றலே உனக்கெது சொந்த வீடு.

தம்பி சிவா ... உங்களுக்கு சிட்டுக் குருவி ஏன் இப்பெல்லாம் அதிகம் பார்கமுடியவில்லை என்று தெரியுமா ?
எல்லாம் லேகியமாக மாறியதால் தான்

Anonymous said...

antha patuthan enneiye eluthu vanthathu..nice song and nice write up :)

நன்மனம் said...

சிவா,

இங்க அஜெர்பைஜான்ல எக்கசக்கமா சிட்டு குருவி, ரொம்ப நாளைக்கு அப்புறம் காலை வேளையில் அந்த கீச் கீச் சத்தம் இனிமையா இருக்கு:-)

நாகை சிவா said...

வாங்க மகேந்! சிட்டுக்குருவி இப்பொழுது நான் இருக்கும் வீட்டில் உள்ளது. புறாவும் இங்கு அதிகம் தான். நான் இருந்த பழைய வீட்டில் புறா ஏகப்பட்டது இருந்தது.

நாகை சிவா said...

பொன்ஸ், புதரகத்தில் சிட்டுக்குருவி உள்ளதா... பல குருவிகள் இருந்தாலும் சிட்டுக் குருவி அழகே தனித் தான்.

பாட்டு நல்ல பாட்டுங்க, மத்தப்படி வேற ஏதுவும் இல்லை. நல்லாவே கிளப்புறீங்க..... ஹம் நடத்துங்க...

நாகை சிவா said...

சீனு, அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையான பாடல் தானே! அதுவும் தேசிய விருது பெற்ற பாடலகள்....

நாகை சிவா said...

என்ன சிவபாலன், உண்மையிலே படம் நல்லா இருக்கா, குருவிகளை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று லாங் சாட்டில் இருந்து எடுத்தேன்.

நாகை சிவா said...

//புலி..என்ன இன்னைக்கு ஒரே ரொமாண்டிக் மூட் போல.. //
யோவ் கப்பி, எப்படியா புத்தி உனக்கு இப்படி போகுது. சிட்டுக் குருவியை ரசித்தால் ரொமாண்டிக் மூடா...
சும்மா இருய்யா, வயிற்றெரிச்சலை கிளப்பாம

நாகை சிவா said...

//கோபிசெட்டிபாளையத்துல எல்லா ரோடு சைடு நைட் கடைகளிலும் சிட்டு குருவி வறுவல் பேமஸ்..//
இது வரை கேள்விப்பட்டது இல்லை ஷாம். அதுவே தம்மாதுண்டு தான் இருக்கு. அதையுமா பிடிச்சி சாப்பிடுறான்க.... என்னமோ மனித ஜன்மமோ... போங்க

நாகை சிவா said...

//தற்போது எங்கே இருக்கிறீர்கள் சிவா? //
தற்சமயம் இருப்பது சூடான்.

//அமெரிக்காவிலும் நம் ஊர் சிட்டுக்குருவிகளை பார்த்திருக்கிறேன்//
ரொம்ப சந்தோஷம். அந்த மக்களும் அதை பிடித்து சாப்பிடுவார்களா..

நாகை சிவா said...

//“ சிட்டுகுருவிக்கென்ன கட்டுப்பாடு ” பாடித்திரிஞ்சிட்டிருந்ததை புடுச்சி கட்டத்தில போட்டாச்சா!!!!!! //
நானாச்சும் படமாக தான் புடுச்சி போட்டேன். ஷாம் சொன்னதை பாத்தீங்களா. அதை புடுச்சி சாப்பிடுகின்றார்களாம்.

நாகை சிவா said...

//எல்லாம் லேகியமாக மாறியதால் தான் //
நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன், கண்ணன். இந்த சிட்டுக்குருவி லேகியத்தை பற்றி.

சிட்டுக்குருவியை குறித்து தமிழ் திரையுலகத்தில் தான் ஏகப்பட்ட பாடல்கள் உள்ளதே.....

நாகை சிவா said...

//காலை வேளையில் அந்த கீச் கீச் சத்தம் இனிமையா இருக்கு:-) //
ஆமாம் நன்மனம், அந்த கீச் கீச் சத்தம் காதுக்கு மட்டும் இல்லை,மனதுக்கும் இனிமையாக இருக்கின்றது.அந்த சத்தத்தை கேட்வுடன் ஒரு புத்துணர்ச்சி பிறக்கின்றது.

கவிதா | Kavitha said...

சிவா..என்ன குருவி பாட்டெல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க.. யாராவது மீன் வித்துக்கிட்டு போனாங்களா என்ன?

நாகை சிவா said...

//antha patuthan enneiye eluthu vanthathu..nice song and nice write up//
வாங்க கீதா ராஜா, தமிழ் வலை உலகுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

கைப்புள்ள said...

சிவா!

என்னா மேட்டரு? கப்பி சொல்றது தான் உண்மைன்னு எனக்கும் படுது. சூடான்ல எதனா ராதா(இல்ல வடிவுக்கரசியா?) அம்புட்டுக்குச்சா?. 'கன்னி வெடி' பத்தி எழுதிக்கினு இருந்த ஆளு திடீர்னு சிட்டுக்குருவி பாட்டெல்லாம் போட்டா...எங்கேயோ இடிக்குதே?

:)

Chandravathanaa said...

ஜேர்மனியில் இப்போது நல்ல காலநிலை.
அதனால் தினமும் குருவிகளின் கீச் கீச்சைக் கேட்க முடிகிறது.
காலை விழிப்பில் அந்தக் கீச்சிடல்கள் இனிமையானவை.

உங்கள் பாட்டை வாசிக்கத் தொடங்கியதும்
கவிதை எழுதியிருக்கிறீர்கள் என நினைத்தேன்.
கொஞ்சம் போகத்தான் முதல்மரியாதைப் பாட்டு என்பது நினைவில் வந்தது.

நாகை சிவா said...

தல! என்ன தல, இது உனக்கே இது ஒவரா தெரியல. ஒரு அசின், நயன் தாரா, சந்தியா இப்படி யாரையாவது சொல்லி இருந்தா கூட சரினு சொல்லாம். ராதா, வடிவுக்கரசியானு கேட்குற.... இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்.

//'கன்னி வெடி' பத்தி எழுதிக்கினு இருந்த ஆளு திடீர்னு சிட்டுக்குருவி பாட்டெல்லாம் போட்டா...எங்கேயோ இடிக்குதே?//
எங்கியும் இடிக்கல, உன் திருவாயை கொஞ்சம் மூடு... கண்ணிவெடியை பத்தி சீக்கிரமே அடுத்த பதிவு போட்டு விடுகின்றேன். போதுமா....

நாகை சிவா said...

//உங்கள் பாட்டை வாசிக்கத் தொடங்கியதும்
கவிதை எழுதியிருக்கிறீர்கள் என நினைத்தேன். //
சந்திரவதனா... ஹம் நல்ல பெயர்..

நமக்கும் கவிதைக்கு ரொம்ப தூரமங்க. அடுத்தவர்கள் கவிதை எழுதி இருந்தால் அத நல்லா படிப்பேன். சரி, கொஞ்சம் உங்க காத குடுங்க, நம்ம அடுத்த பதிவு ஒரு கவிதை தாங்க...

அது போகட்டும், நீங்க என்னங்க 25 வலைப்பதிவு வச்சு இருக்கீங்க. அத பாத்தவுடனே தலை கிர்ருனு சுத்திடுச்சு. அத எல்லாம் நான் எப்ப படிக்க போறேன் தெரியல....

கைப்புள்ள said...

//ஒரு அசின், நயன் தாரா, சந்தியா இப்படி யாரையாவது சொல்லி இருந்தா கூட சரினு சொல்லாம். ராதா, வடிவுக்கரசியானு கேட்குற.... இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்.//

நீ போட்ட பாட்டு அப்படி. நான் என்னா பண்ணுவேன்?
:)

//எங்கியும் இடிக்கல, உன் திருவாயை கொஞ்சம் மூடு... கண்ணிவெடியை பத்தி சீக்கிரமே அடுத்த பதிவு போட்டு விடுகின்றேன். போதுமா.... //

சரிப்பா...நீ சொல்லறே! நான் வாயை மூடிக்கிறேன். ஆனால் உன்கிட்ட அன்பா பேசற ஒருத்தன் மனசைப் புண்படுத்திட்டேனு மட்டும் மறந்துராதே!

கைப்புள்ள said...

//சிவா..என்ன குருவி பாட்டெல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க.. யாராவது மீன் வித்துக்கிட்டு போனாங்களா என்ன?//

வருது பாரு பின்னூட்டம்! என்னமோ என்னைய சொன்னியே? உன் பதிவு அப்படி.

:)

நாகை சிவா said...

//என்ன குருவி பாட்டெல்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க.. யாராவது மீன் வித்துக்கிட்டு போனாங்களா என்ன? //
கவிதா நீங்களுமா....
இங்க யாருங்க மீன் வித்துட்டு போக போறாங்க. இது என்ன நம்ம ஊரா

நாகை சிவா said...

//நீ போட்ட பாட்டு அப்படி. நான் என்னா பண்ணுவேன்?//
அந்த பாட்ட போட்டா ஒரு மேட்சிங்கா இருக்கும் நினைச்சு தான் போட்டேன். அதுவும் இல்லாமல் அது ராக தேவன் பாட்டு. உனக்கு ரொம்பவே பிடிக்குமுல. அதான்.

//உன்கிட்ட அன்பா பேசற ஒருத்தன் மனசைப் புண்படுத்திட்டேனு மட்டும் மறந்துராதே! //
என்ன தல, இப்படி செண்டிமெண்டா பேசுற. இப்படி எல்லாம் நீ பேசுனா நான் அழுதுடுவேன்....
உன் மனச அடுத்தவங்க புண்படுத்தினாலே என்னால தாங்க முடியாது, அதே தப்ப நான் பண்ணுவேனா.
மன்னிச்சுக்கோ
மன்னிச்சுக்கோ

மனசு புண்பட்டுச்சுனும் புகைய விட்டு ஆட்டாதே சொல்லிட்டேன்.
"புகை உடலுக்கு பகை"

கவிதா | Kavitha said...

//இங்க யாருங்க மீன் வித்துட்டு போக போறாங்க. இது என்ன நம்ம ஊரா//

குருவி பாட்டெல்லாம் பாடி கவர் பண்ணமட்டும் அந்த ஊரு சரியா?!!

துளசி கோபால் said...

சரி. இவ்வளவு நேரம் எல்லார் வாயையும் பார்த்தாச்சு.

இப்ப நம்ம கணக்குலே ஒரு பாட்டு.

'தென்னங்க்கீத்து ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையைத் தேடுது...'

நம்ம பக்கம் இன்னும் சிட்டுக்குருவிங்க இருக்கு.
வீட்டுலேயும் முந்தி ரெண்டு வளர்த்தோம்.

பேர் ச்சிண்ட்டு & தத்தி

நாகை சிவா said...

//குருவி பாட்டெல்லாம் பாடி கவர் பண்ணமட்டும் அந்த ஊரு சரியா?!!//
இங்க அப்படியே பாட்டு பாடி கவர் பண்ணிட்டாலும், அட போங்க கவிதா வயிற்றெச்சலை கிளப்பாதீங்க. இங்க நம்ம தான் யாரு கிட்டயும் கவர் ஆகாம எஸ்கேப் ஆகனும்.

நம்ம ஊர், நம்ம ஊர் தான்....
ஆஹா, Feeling of India வ கிளப்பி விட்டுடாங்களே.....

நாகை சிவா said...

//பேர் ச்சிண்ட்டு & தத்தி //
தத்தி, யாரு மேல உள்ள கோவத்தில் அப்படி பெயர் வச்சீங்க.

வாங்க துளசியக்கா உங்க பங்குக்கு ஒரு பாட்ட பாடிட்டு போயிட்டீங்களா. சிட்டுக்குருவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்கனு இப்ப தான் தெரியுது,

கோவி.கண்ணன் said...

சிவா,
சிட்டுக்குருவி வேகமாக பறக்கும்

சீட்டுக்கம்பனிக்கும் சிட்டுக்கும் ஒற்றுமை உன்டு
சீட்டுக் கம்பெனி cheat கம்பெனி ஆச்சின்னா அப்பறம் சிட்டா பறந்து போய்டும்

ராபின் ஹூட் said...

ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு...
தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக்கூடு...

பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது..
ஆண்குருவிதான் வீட்டைத்தேடி வந்து சேர்ந்தது...

கூட்டுக்குள்ளே ரெண்டு குருவியும் ஒன்னாச் சேர்ந்தது..

இந்தப் பாட்டு யாருக்கும் ஞாபகம் வரலேயா?
நம்ம இசை ஞானியின் குரலில் பாடல். என்ன படம் என்று தெரியவில்லை.

Geetha Sambasivam said...

சூடான்லே சிட்டுக்குருவி இருக்கா? அதிர்ஷ்டம் தான் போங்க.
சரி, காதலிக்கு (அதான் முறைப்பெண்ணுக்கு மனுப் போட்டாச்சா?)

நாகை சிவா said...

அண்ணன், சிட்டுக் குருவி வேகமாக பறக்கும் என்பது தெரியும். பசங்க அடிக்கடி சொல்வான், பட்சி சிட்டா பறந்துடுச்சுனு....

இப்ப நீங்க சீட்டு கம்பெனியை சிட்டும் ஒப்பிடு செய்கின்றிர்கள். கருத்து சொல்லுறீங்களோ?
:)))

ambi said...

என்ன புலி..? சிட்டு குரிவி லேகியம் சாபிட்டதால பாட்டு எல்லாம் பலமா இருக்கு போல! :) LOL

அடுத்த போஸ்ட் என்ன, குஷி பட பாடலா? :) ROTFL

ILA (a) இளா said...

சிட்டுக் குருவி சிட்டு குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்த போன கைப்பு இன்னும் சங்கம் திரும்பல.

சிட்டுக் குருவி சிட்டு குருவி சேதி தெரியுமா , நம்மை விட்டுப் பிரிந்த போன சிபி இன்னும் சங்கம் திரும்பல.

சுஜாதா இதை பத்தி சொன்னதை ஒரு பதிவாவே போட்டுறலாம்னு இருக்கேன்.

சீனு said...

//சீனு, அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையான பாடல் தானே! அதுவும் தேசிய விருது பெற்ற பாடலகள்....//

ஆமாம் சிவா,

ஒரு பாடலுக்கு அதன் ஆரம்ப வரிகள் தாம் முகவரியே. அது தான் நம்மை பாடலை கேட்க வைக்க உந்துதலாக இருக்கும். ஆனால், இளையராசாவின் பாடல்களில் பெரும்பாலும் முதல் இரு வரிகள் பிரமாதமாக இருக்காது. ஆனாலும் கேட்கத் தூண்டுவதற்கு காரணம் இசை. அவருக்கு "ராக தேவன்" என்ற பட்டம் மிகச் சரியானது.

நாகை சிவா said...

என்னாட்டா அம்பி, ஒரு பாட்டு போட்து தப்பா? இப்படி ஆள் ஆளுக்கு கிளப்புறீங்க. ஒரு நல்லவன் மேல அநியாமா சந்தேகப்படாதீங்க. அப்புறம் பின்னாடி ரொம்ப பீல் பண்ண வேண்டியது இருக்கும்.....

நாகை சிவா said...

//எங்க ஊர்ல குருவிக்கு பஞ்சமே இல்லை, தினமும் காலைல அதோட சத்தத்தைக் கேட்டு தான் நான் எழுந்துப்பேன். //
வேதா எந்த ஊருங்க உங்களுக்கு....

நாகை சிவா said...

//வருது பாரு பின்னூட்டம்! என்னமோ என்னைய சொன்னியே? உன் பதிவு அப்படி//
ஹம்! கொஞ்சம் பீல் பண்ணலாம் பாத்தா, நம்ம மக்கள் விட மாட்டேன் என்று நம்ம கலாயப்பதில் தான் குறியா இருக்காங்க. என்ன பண்ணுறது, நான் உன்கூடல இருக்கேன், அதான்

நாகை சிவா said...

ராபினு, ராபினு,
குருவிய பத்தி ஏகப்பட்ட பாட்டு இருக்கு. எனக்கு ஒரு பாட்டு சட்னு ஞாபகம் வந்துச்சு பட்னு போட்டுடேன். மத்த பாட்டு எல்லாம் ஞாபகம் வரப்ப ஒவ்வொன்னா போடுறேன்.
நீ சொன்ன பாட்டு ஞாபகம் இருக்கு. படம் தான் ஞாபகத்துக்கு வர மாட்டேன்குது. ராமராஜன் படம் தானே

நாகை சிவா said...

//சூடான்லே சிட்டுக்குருவி இருக்கா? //
இருக்குங்க

//காதலிக்கு (அதான் முறைப்பெண்ணுக்கு மனுப் போட்டாச்சா?) //
ஹம்க்கும் அது ஒன்னு தான் இப்ப குறைச்சல். நான் நல்லா நிம்மதியா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா... அதுவும் இல்லாம நமக்கு இன்னும் அந்த வயசு வரல...

நாகை சிவா said...

//சிட்டுக் குருவி சிட்டு குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்த போன கைப்பு இன்னும் சங்கம் திரும்பல.
நம்மை விட்டுப் பிரிந்த போன சிபி இன்னும் சங்கம் திரும்பல//
எப்பா தளபதியாரே, தலயாரே இரண்டு பெரும் சீக்கிரம் சங்கத்துக்கு வந்து சேருங்க. விவ் ரொம்ப வருத்தபடுறார்.

//சுஜாதா இதை பத்தி சொன்னதை ஒரு பதிவாவே போட்டுறலாம்னு இருக்கேன். //
ஹம்., போடுங்க போடுங்க படிக்க ஆவலுடன் உள்ளேன்.

நாகை சிவா said...

//கேட்கத் தூண்டுவதற்கு காரணம் இசை. //
உண்மை தான் சீனு. அவரின் பாடல்கள் காலத்திற்க்கும் கேட்கும்ப்படி இருப்பதற்கான காரணம் குறித்து யோசித்தால்,
"வார்த்தைகளை விழுங்காத இசை". கதையை நகர்த்தி செல்லும் அவரின் பிண்ணனி இசை. மிக சிறந்த உதாரணம் - மெளன ராகம்.

Butterflies said...

ei aaammpaa naan kooda chittu kuruvi yaa paathu romba naal aaiduthu i have never seen one in recent dayss!!!!!mm!kaka than niraya irukku!

Karthik Jayanth said...

சிவா மாமு ,

என்னப்பு ஆச்சி உனக்கு ?

நாகை சிவா said...

//kaka than niraya irukku! //
இதுல எந்த உள்குத்து கிடையாதே...
வேதா வீட்டான் ட நிறைய குருவி இருக்காம்.
அது சரி, அவங்க காக்கா பிரியாணி சாப்பிடுவாங்க போல இருக்கு, அதான் அங்க காக்காவை காணாம் போல. என்னானு அவங்களை விசாரிங்க

நாகை சிவா said...

//சிவா மாமு ,

என்னப்பு ஆச்சி உனக்கு ? //
கொஞ்சம் பீல் பண்ணலாம் நினைத்தேன். சரியா வொர்கவுட் ஆகல. அடுத்த தடவை சரியா பீல் பண்ணுறேன் பங்காளி

சீனு said...

//அவரின் பாடல்கள் காலத்திற்க்கும் கேட்கும்ப்படி இருப்பதற்கான காரணம் குறித்து யோசித்தால்,
"வார்த்தைகளை விழுங்காத இசை". கதையை நகர்த்தி செல்லும் அவரின் பிண்ணனி இசை.//

இங்கு தான் இளையராசா, ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து வேறுபடுகிறார். ரகுமானின் வெற்றியில் பாடல் வரிகளின் பங்கு அபாரம் (முக்கியமாக வைரமுத்து). ஆனால், ஒரு மிகச் சாதாரண பாடல் வரிகளைக் கொண்ட இளையராசாவின் பாடல்கள், கேட்பதற்கு இனிமையாக இருப்பதற்கு காரணம்...இசை. அதுவும், இளையராசாவின் பாடல்களில் interlude பிரமாதமாக இருக்கும். வேறு எந்த இசையமைப்பாகளாலும் முடியாத ஒன்று. அந்த interlude-களில் முக்கியமாக வயலின், புல்லாங்குழல் ஆகியவை பங்கு பெறும். ராசா ராசா தான். (ராசாவைப் பற்றி தனிப் பதிவே போடவேண்டும். பார்க்கலாம்).

நாகை சிவா said...

ரொம்ப நன்றி சீனு. நமக்கு ரொம்ப பிடித்தவர்களை பற்றி அடுத்தவர்கள் சிலிர்த்து சொல்வதை கேட்கும் சந்தோஷமே தனி. உங்க பதில்களை மிகவும் ரசித்தேன். எங்க தல கைப்புள்ளயும் ரசித்து இருப்பார்.

இளையராஜாவை குறித்த உங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கின்றோம்.

VSK said...

'விட்டு விடுதலையாகி நிற்பாய் -- அந்த
சிட்டுக்குருவியைப் போல'
என பாரதியும் பாடியிருக்கிறான்!

பழைய படம் ஒண்ணு, டவுன் பஸ்னு நினைக்கிறேன்
அதுல ஒரு ஃபேமஸ் பாட்டு!
'சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா? -- என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலை!'

படமும் பாட்டும் அருமை!

ராபின் ஹூட் said...

சிவா பாடலைக் கண்டுபிடிச்சுட்டேன்.
படம் : இதயக் கோவில்
டைரக்ஷன் : மணிரத்னம்
நடிப்பு : மோகன், ராதா.

பாடலை இங்கே கேட்கலாம்

Costal Demon said...

இங்க கொஞ்ச நாள் முன்னாடி, ஒரு சிட்டுக்குருவியைப் பார்த்தப்போ இதே பாட்டுதான் ஞாபகம் வந்தது. மறக்க முடியாத பாடல், மறக்க முடியாத பாடல்...

Syam said...

59 இருக்கு அத 60 ஆ பன்னலாம்னு தான்...அசால்டா 60 வாங்கிட்டீங்க ஒரு நாள்ல...என்னாது அதெல்லாம் ஒன்னும் புகையல... :-)

நாகை சிவா said...

//'விட்டு விடுதலையாகி நிற்பாய் -- அந்த
சிட்டுக்குருவியைப் போல'//
பாரதியின் குருவி பாட்டு தான் அனைவரும் அறிந்ததே. முண்டாசு கவிஞன் பாடத விடயமும் உண்டோ!

//'சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா? -- என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலை!'
இதே பாட்ட நம்ம இளா ஏற்கனவே இங்க பாடிட்டார் - தல மற்றும் சிபியை குறித்து.

நாகை சிவா said...

வாங்க ராம்ஸ்,
உகாண்டாவிலும் இருக்குதா. சந்தோஷம். நீங்க இருப்பது கம்பாலாவிலா?

ரவி said...

நானும் போடுவேன் - நானும் போடுவேன்...அஸ்க்கு புஸ்க்கு...

நாகை சிவா said...

//சிவா பாடலைக் கண்டுபிடிச்சுட்டேன்//
நன்றி ராபின்!
சுட்டி கொடுத்தக்கும் மிக்க நன்றி.

"இதயக் கோவில்" அனைத்து பாடல்களும் இனிமையான பாடல்கள்

நாகை சிவா said...

//59 இருக்கு அத 60 ஆ பன்னலாம்னு தான்...அசால்டா 60 வாங்கிட்டீங்க ஒரு நாள்ல...//
பங்காளி உங்களுக்கு பதில் சொல்வதோட 64, இதுல் பாதி என்னுடையது. இத எல்லாம் கண்டுக்க கூடாது. (32 யே அதிகம் நீங்க நினைக்க கூடாது என்ன)

//அதெல்லாம் ஒன்னும் புகையல... :-) //
பங்காளி, இங்க புகையறதுக்கு ஒன்னும் வேலயே இல்ல. இலவச கொத்தனார் ஒருத்தர் இருக்காரு. அங்கன போயி பாருங்க எல்லாம் 3 இலக்க எண்ல தான் பின்னூட்டம் வரும்.
ஹம், அப்படி என்னத்த் தான் எழுதுறாரோ

ஜொள்ளுப்பாண்டி said...

சிட்டுக்குருவிய வச்சு யானை சைஸுக்கு பின்னுறீங்க சிவாத்தம்பி !! :))))) ( போதுமா ராசா?? திருப்தியா ??)

எங்க ஊருல 'சிட்டு' அப்படீன்னா ஒரு அர்த்தம் 'குருவி' அப்படீன்னா இன்னோரு அர்த்தம் ஆனா ரெண்டும் சேர்ந்து சிட்டு குருவி அப்படீன்னா ஒரே அர்த்தம்தான் :)))) புரிஞ்சுச்சா ?? ச்சேசே கொத்ஸ் பதிவை படிச்சதுக்கபுறம் இப்படியேதான் பதில் சொல்லத்தோணுது !! :))

மு.கார்த்திகேயன் said...

இன்னும் நான் எங்க ஊர்ல சிட்டுகுருவியை கூட்டம் கூட்டமா பாக்குறேன்.. எங்க வீட்டு மருதாணி செடி மேல கலைல அதுக கோரஸ் பாடி தான் நான் எழவே செய்கிறேன், சிவா..

ஆன உண்மையிலே இசைஞானி பாட்டுன்னா அது ஒரு தனி ரகம்.. இதயத்தை பிழியிற ரகம்

Geetha Sambasivam said...

ம்ஹூம்,ம்ஹூம்,ம்ஹூம், இந்தப் பதிவுக்கு 70 பின்னூட்டமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?புகையுதே? வாசனை வருதா?
பாதிக்கு மேலே உங்க பதிலுனு மனதைத் தேத்திக்கப் பார்க்கறேன்.

நாகை சிவா said...

//சிட்டுக்குருவிய வச்சு யானை சைஸுக்கு பின்னுறீங்க சிவாத்தம்பி !! :))))) ( போதுமா ராசா?? திருப்தியா ??)//
போதும்! போதும்! ரொம்பவே திருப்தி அண்ணன்!

//எங்க ஊருல 'சிட்டு' அப்படீன்னா ஒரு அர்த்தம் 'குருவி' அப்படீன்னா இன்னோரு அர்த்தம் ஆனா ரெண்டும் சேர்ந்து சிட்டு குருவி அப்படீன்னா ஒரே அர்த்தம்தான் :)))) புரிஞ்சுச்சா ?? //
புரியுது அண்ணன், எங்க ஊரிலும் தனி தனி அர்த்தம் தான். சேர்த்தா வேற அர்த்தம். நல்லாவே புரியுதுண்ணன்.

நாகை சிவா said...

வாங்க கார்த்தி, சிட்டுக் குருவி சத்தம் கேட்டு தான் எழுகின்றீர்களா. சந்தோஷம்.

//ஆன உண்மையிலே இசைஞானி பாட்டுன்னா அது ஒரு தனி ரகம்.. இதயத்தை பிழியிற ரகம் //
உண்மை தான் மேலும் ஒரு ராஜா ரசிகர், வலைஉலகில்.
அப்புறம் கார்த்திக், தமிழ்மணத்துக்கு உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றோம். தொடர்ந்து தமிழிலே எழுதவும்.

நாகை சிவா said...

//ம்ஹூம்,ம்ஹூம்,ம்ஹூம், இந்தப் பதிவுக்கு 70 பின்னூட்டமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ?புகையுதே? வாசனை வருதா?
பாதிக்கு மேலே உங்க பதிலுனு மனதைத் தேத்திக்கப் பார்க்கறேன். //
ஹலோ கீதாக்கா, ரொம்ப வாராதீங்க. பாதி மேல் எல்லாம் இல்ல. பாதி தான். 38 அடுத்தவங்களுடா.... 38 வருதே நம்மக்கு எல்லாம் ரொம்ப பெரிய விசயம்.

நாகை சிவா said...

//நான் சுத்த சைவம்பா. வீணா என்னை எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க? :) //
வேதா நான் கூட சுத்த சைவம் தாங்க, அசைவம் கிடைக்கும் வரை.
:))))

நாகை சிவா said...

//நானும் போடுவேன் - நானும் போடுவேன்...அஸ்க்கு புஸ்க்கு... //
ரவி, எதா இருந்தாலும் புரியும்படி சொல்லனும்.
நீங்களும் ஒரு பாட்ட சீக்கிரம் போடுங்க.

நாகை சிவா said...

//Super flow of thoughts.Here I haven't seen situ kuruvi, but I do see variety of birds.//
C.T., இந்த லவ் பேட்ஸ் கூட சிட்டுக் குருவி சைஸ்ல தான் இருக்கும். இருந்தாலும் சிட்டுக் குருவியை ரொம்ப பிடிக்கும்.
நம்ம படத்தில் இருப்பது சிட்டுக் குருவி தான்.பார்த்துங்க

ambi said...

yen pa siva! naan yest potta comment enga? reject pannitiyaa?
manasai pun paduthi irunthaa sorry paaa! manichukka, kozhanthai naan theriyaama comment pottuten.. :)

Harish said...

Adudaan naraya kezha boldunga legiyam panni thinuttaga...apparam enga appu chittu kuruvi irukkum...

நாகை சிவா said...

//yen pa siva! naan yest potta comment enga? reject pannitiyaa?//
ப்பளிச் ஆகி இருக்கு நீங்க பாக்கலையா, அதுக்கு நான் பதில் வேற சொல்லி இருக்கேன்.

//manasai pun paduthi irunthaa sorry paaa! manichukka, kozhanthai naan theriyaama comment pottuten.. :)//
என்ன இது சின்னபுள்ளத்தனமால இருக்கு....
யாரு குழந்தை, நீங்களா, நானா.....

நாகை சிவா said...

//Adudaan naraya kezha boldunga legiyam panni thinuttaga...apparam enga appu chittu kuruvi irukkum.//
அதான் மேட்டரா, நான் ரொம்ப சின்ன பயங்க, அதான் எனக்கு விபரம் தெரியல

ALIF AHAMED said...

/
/
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையைத் தேடுது...'
/
/
உண்மையாவா சிவா ?? சொல்லவேயில்லை

((ஏதோ நம்மளால முடிஞ்சது ))

நாகை சிவா said...

//உண்மையாவா சிவா ?? சொல்லவேயில்லை//
யோவ் மின்னல், என்னயா இது. உள்ளுர்க்காரணா இருந்துட்டு இப்படி கால வார்ர?
நம்ப முடியவில்லை....

ஆரம்பிச்சு வச்ச பொன்ஸ், அத வழிமொழிந்த கப்பி, கவிதா, தல, கீதா, அம்பி, மின்னல் எல்லாம் நல்லாவே இருங்க....

ALIF AHAMED said...

/
/
இங்க நம்ம தான் யாரு கிட்டயும் கவர் ஆகாம எஸ்கேப் ஆகனும்.
/
/
எஸ்கேப் ஆன மாதிரி தெரியிலையே !!!

((ஏதோ நம்மளால முடிஞ்சது ))

பொன்ஸ்~~Poorna said...

இன்னும் பின்னூட்டம் மொத்தமும் படிக்கலை.. ஆனாலும், எனக்கு நல்லா இருங்கன்னு சொன்னதுக்காக, எனக்குப்பிடிச்ச ஒரு சிட்டுக் குருவி பாட்டு:

"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விழுந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே,
மூங்கிலிலே காற்றுவந்து மோதிட கண்டேனே.. "

இதுல சரோஜா தேவியைப் பார்க்கவே முடியாது.. கொடுமையா இருப்பாங்க.. (எப்போவுமே அப்படித் தான்... ;)) சிவாஜி.. நோ கமென்ட்ஸ்...

ஆனா, இந்தப் படத்துல சௌகார் வருவாங்க பாருங்க.. ஹைய்யோ.. எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்.. இந்தப் படத்துல மட்டும் தான்.. ரொம்ப க்யூட்..

சிவா, அப்படியே இன்னும் சிட்டுக்குருவிகளைக் கலக்ட் பண்ணிகிட்டு இருங்க.. நூறுக்குக் கை கொடுக்க வாரோம்.

ALIF AHAMED said...

/
/
நம்ம ஊர், நம்ம ஊர் தான்....
ஆஹா, Feeling of India வ கிளப்பி விட்டுடாங்களே.....
/
/
நம்ம ஊருல சிட்டு குருவி நெறைய்யாவா.......... உங்களுக்கு ? ?

((ஏதோ நம்மளால முடிஞ்சது ))

Raji said...

Siva,
what a coincidence, Kuttan and I have been watching carefully a robin which has built its nest last week in the niche between our garage and the neighbours.
But we have only seen the nest and not the bird yet:-(

கோவி.கண்ணன் said...

சிவா... இங்கு போட்ட பின்னூட்டத்தை அங்க போயி போட்டுட்டு வந்திட்டிங்க :(((

கோவி.கண்ணன் said...

சிவா... இங்கு போட்ட பின்னூட்டத்தை அங்க போயி போட்டுட்டு வந்திட்டிங்க :(((

Unknown said...

nagai siva

I posted the next part in anjel enatha anmai with help of SK:-)))

Unknown said...

சிட்டுக்குருவிக்கு முதல் மரியாதைக் கொடுத்த சிவா நீ நல்லவனுக்கு நல்லவன்ப் பார்த்து இருக்கீயா..

தலைவர் செம பீலிங்கா ஸ்டைலா பாடுவாரே சிட்டுக்குச் செல்லச் சிட்டுக்குன்னு.... சூப்பர் பாட்டுப்பா அது...

நாகை சிவா said...

//எஸ்கேப் ஆன மாதிரி தெரியிலையே !!!//

//நம்ம ஊருல சிட்டு குருவி நெறைய்யாவா.......... உங்களுக்கு ? ?//
இத எல்லாம் ப்பளிக்கா கேட்டா எப்படி மின்னல்., ஹி...ஹி...

//((ஏதோ நம்மளால முடிஞ்சது )) //
ஏதோ நம்மளால முடிஞ்சது, நம்மளால முடிஞ்சதுன், என் ஜோலிய முடிக்காம போக மாட்டேன் மட்டும் தெரிஞ்சுட்டுச்சு மின்னல். ஹம், நடத்து, விதிய யாரால மாத்த முடியும். ஆனா உனக்கு இருக்குடி ஒரு நாள் பெரிய ஆப்பு

நாகை சிவா said...

//எனக்குப்பிடிச்ச ஒரு சிட்டுக் குருவி பாட்டு://
நீங்களும் ஒரு பாட்டா ஹம்., உண்மையிலே அந்த பாட்டு ரொம்பவே அருமையான பாட்டுங்க.

//சிவா, அப்படியே இன்னும் சிட்டுக்குருவிகளைக் கலக்ட் பண்ணிகிட்டு இருங்க.. நூறுக்குக் கை கொடுக்க வாரோம். //
வாங்க, வாங்க....
உங்க பாசத்த பாக்கும் போது கண்ணுலே இருந்து அருவியா கொட்டுது.......

நாகை சிவா said...

//இங்கு போட்ட பின்னூட்டத்தை அங்க போயி போட்டுட்டு வந்திட்டிங்க//
இதுல வருத்தப்படுவதற்கு என்ன இருக்கு. சரி உங்கள சமாதானப்படுத்துவதற்க்காக, இங்கேயும் ஒரு தடவை -
"போற்றூவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் (கோவி) 'கண்ணனுக்கே'".
எங்க ஊர் கண்ணனுக்கே!!!!!
:))))
வந்து ஒரு சிரிப்பான போட்டுங்க கண்ணன்....

நாகை சிவா said...

//I posted the next part in anjel enatha anmai with help of SK:-))) //
எப்படி மிஸ் பண்ணுவேன், படித்தேன் செல்வன். நன்றாக இருந்தது. உங்களுக்கு உதவிய எஸ். கே.வுக்கும் என் நன்றிகள்.

நாகை சிவா said...

//சிவா நீ நல்லவனுக்கு நல்லவன்ப் பார்த்து இருக்கீயா..//
தேவ் உங்கள் வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தலைவர் படத்த எப்படி நீங்க பாத்து இருக்கீயா என்று சந்தேகத்துடன் கேட்கலாம்?:(((

//ஸ்டைலா பாடுவாரே சிட்டுக்குச் செல்லச் சிட்டுக்குன்னு.... சூப்பர் பாட்டுப்பா அது... //
உண்மையிலே அதுவும் சூப்பர் பாட்டு தாங்க.
ஆஹா., ஏகப்பட்ட குருவி பாட்டு வருது. வரட்டும்., வரட்டும்..

நாகை சிவா said...

//what a coincidence, Kuttan and I have been watching carefully a robin which has built its nest last week in the niche between our garage and the neighbours.//
ரொம்ப சந்தோஷம்ங்க... அதற்கு தொந்தரவு தராமல் தூரத்தில் இருந்தே ரசிக்கவும்.

//we have only seen the nest and not the bird yet:-( //
விரைவில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க போகின்றது என்று அர்த்தம்... :)))))

ALIF AHAMED said...

//
ஏதோ நம்மளால முடிஞ்சது, நம்மளால முடிஞ்சதுன், என் ஜோலிய முடிக்காம போக மாட்டேன் மட்டும் தெரிஞ்சுட்டுச்சு மின்னல். ஹம், நடத்து, விதிய யாரால மாத்த முடியும். ஆனா உனக்கு இருக்குடி ஒரு நாள் பெரிய ஆப்பு
//
நம்ம ஊரு வேற
ஏதோ நம்மளால முடிஞ்சது

100 அடிக்காம விடுவதில்லை என்று அர்த்தம் தப்பா புரிங்சுகிட்டிங்களா......??

பொன்ஸ்~~Poorna said...

வந்துட்டம்ல.. இங்க உங்களைப் பத்தி என்னவெல்லாம் சொல்லி இருக்குன்னு பார்த்தீங்களா?

Anonymous said...

It is indeed lovely to see a Tamil blog. Though Tamil is not my native language and I am not very fluent in it, I have taken the time to read some of your postings.
Thanks for your insights!

Geetha Sambasivam said...

எரியுதே, எரியுதே, இந்த போஸ்ட்டுக்கெல்லாம் 100 பின்னூட்டமாஆஆஆஆஆஆஆஆஆ? போறாததுக்கு இந்த மின்னல் தாத்தா வேறே வந்து திருப்பித் திருப்பிப் பின்னூட்டம் விடறார். தாத்தா, போஸ்ட் போட முடியலை, பின்னூட்டமா கேக்குது?

நாகை சிவா said...

//நம்ம ஊரு வேற
ஏதோ நம்மளால முடிஞ்சது

100 அடிக்காம விடுவதில்லை என்று அர்த்தம் தப்பா புரிங்சுகிட்டிங்களா......??//
ஆஹா, உன் போயி தப்பா நினைச்சுட்டேன், ஊருக்கார பய மேல உனக்கு இம்புட்டு பாசம். என்ன நெகிழ வச்சுட்ட, மின்னல் நீ வாழ்க, உன் குலம் வாழ்க, எல்லாமே வாழ்க....

நாகை சிவா said...

//வந்துட்டம்ல.. இங்க உங்களைப் பத்தி என்னவெல்லாம் சொல்லி இருக்குன்னு பார்த்தீங்களா? //
இதோ போறேங்க. வர வர இங்க அடிக்கடி வேல பாக்க சொல்லுறாங்க அதான், கொஞ்சம் லேட். இதோ உடனே போறேன்.

ALIF AHAMED said...

/
/
தாத்தா, போஸ்ட் போட முடியலை, பின்னூட்டமா கேக்குது?
/
/
((ஏதோ நம்மளால முடிஞ்சது :::::))))))))))))))

புகையுதே? வாசனை வருதே

நாகை சிவா said...

//Thanks for your insights! //
மிகவும் நன்றி அனாமி!

பெயர் போட்டு எழுதி இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். தமிழ் மேல் உங்களுக்கு உள்ள ஆர்வத்துக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

நாகை சிவா said...

//எரியுதே, எரியுதே, இந்த போஸ்ட்டுக்கெல்லாம் 100 பின்னூட்டமாஆஆஆஆஆஆஆஆ?//
சரி, சரி, என்ன பண்ணுறது, ஏதோ சின்ன பையன் ஆசைப்படுறேன் என்று மக்கள் எல்லாம் தொடர்ந்து வந்து நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் திண்டாட வச்சுட்டாங்க. உங்களுடையது தான் 100 வது பின்னூட்டமே. நீங்களே பாருங்க, மூன்று தடவை வந்து வீட்டீர்கள்.

மின்னல் ஊர்க்கார பயல்னு தான் அடிக்கடி வந்து பின்னூட்டம் போட்டு உள்ளார். நீங்களும் வந்து நாகையில் தங்கி விடுங்க. உங்களையும் பின்னூட்டத்தில் நணைய வைத்து விடுவார்.

Ramya said...

சிட்டுகுருவியை பார்க்கும் பொழுது நல்லதொரு சுகம் அனைவருக்கும் கிடைகும்.அதன் அழிவை நினைத்தால் சோகமாகதான் இருக்கு.by the way how do u use tamil fonts so well?help me out.

நாகை சிவா said...

ரம்யா!
நீங்க என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லை. நீங்களும் தமிழில் தானே பின்னூட்டம் இட்டு உள்ளீர்கள்.
விளக்கம் ப்ளிஸ்

Syam said...

பங்கு சென்சுரி அடிச்சுட்ட..வாழ்த்துக்கள்..சரி குண்டு மேட்டர அப்பிடியே அம்போனு விட்டாச்சு போல இருக்கு...

Syam said...

பங்கு சென்சுரி அடிச்சுட்ட..வாழ்த்துக்கள்..சரி குண்டு மேட்டர அப்படியே அம்போனு விட்டாச்சு போல இருக்கு.. :-)

நாகை சிவா said...

பங்காளி அம்போனு எல்லாம் விடல. கொஞ்சம் வேலை அதிகம், அடுத்த வாரத்தல போட்டு விடுவோம்.