"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது."
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."
"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."
"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."
"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."
"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."
"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".
"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."
"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."
"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."
"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."
"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".
"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".
"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."
"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."
"'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்."
"மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை."
"தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."
"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".
"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."
"தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்."
"எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது."
"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்."
"பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்".
"கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்".
"அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."
இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்.
தொடர்புடைய பதிவுகள்:
சிவபாலன் - சு.வி. - ஒலிப்பேழை
59 comments:
சிவா,
கால் எங்கே இருக்கு :)
//கால் எங்கே இருக்கு :)//
கண்ணன், புரியவில்லை.
////கால் எங்கே இருக்கு :)//
கண்ணன், புரியவில்லை. //
காலில் விழுவதற்குத்தான் கால் எங்கே இருக்கு ? அல்லது உங்கள் காலை காட்டுங்கள் என்று சொல்லுவார்கள். நம் ஊர்காரராக இருக்கிறீர்களே உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன். விளக்கம் கேட்டு என்னை முழுசா சொல்லவைத்து விட்டீர்கள் :)
ஆஹா.... கிளம்பிட்டான்ய்யா கிளம்பிட்டான்யா.....
பிரிச்சு மேயாம போக மாட்டான் போல இருக்கே :((((
அண்ணன், நீங்க எல்லாம் வயசில், அனுபவத்தில் ரொம்ப மூத்தவங்க.. நீங்க போயி என் கால் எங்க கேட்டு...
சே...சே..
உங்க கால கொஞ்சம் காட்டுங்க தெய்வமே.....
//நம் ஊர்காரராக இருக்கிறீர்களே உங்களுக்கு தெரியும் என்று நினைத்தேன்.//
நான் எழுதியதில் ஏதும் தவறு சொல்கின்றீர்கள் என்று நினைத்து விட்டேன்.
அட ... தத்துவம் பேசுகிறவர்களை கலாய்பதற்கு 'எங்க உங்க காலை காட்டுங்கள்' என்று தமாசாக சொல்லுவார்கள். உங்கள் சிந்தனை துளிகளைப் படித்தவுடன் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. நீங்க சீரியஸ் ஆ எடுத்துக்காதிங்க சிவா
// நீங்க சீரியஸ் ஆ எடுத்துக்காதிங்க சிவா //
அட நான் சீரியஸா எல்லாம் எடுத்துகலை கண்ணன், அதுவும் நீங்க சொல்லி நான் எடுத்துப்பேனா.
இன்னிக்கு அவரு நினைவு நாளாச்சே அதான் அவர் சொன்னதை நினைத்து பார்ப்போம் என்பதற்காக இந்த பதிவு.
//இன்னிக்கு அவரு நினைவு நாளாச்சே அதான் அவர் சொன்னதை நினைத்து பார்ப்போம் என்பதற்காக இந்த பதிவு.//
நல்ல விசயம்... பாராட்டுக்கள். எனக்கு நரேந்திரனை மிகவும் பிடிக்கும்
சிவாவே,
//"உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்."//
என்ன பவர்புல் விஷன் பாருங்கள்.
விவேகானந்தா is always great!
//எனக்கு நரேந்திரனை மிகவும் பிடிக்கும் //
அப்படியா Same Pinch.
அப்ப நரேந்திரநாத் தத்தாவின் சொற்பொழிவுகளை போட்டால் படிப்பதற்கு ஒரு ஆளு இருக்காரு. மிக்க மகிழ்ச்சி....
விவேகானந்தர் என் மனம் கவர்ந்தவர்களில் ஒருவர். அவருடைய பொன்மொழிகளை தொகுத்துள்ளதை பாராட்டுகிறேன். டெம்ப்ளேட் கொஞ்சம் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்
அப்படியே எனக்கும் உங்க காலைக் காட்டுங்க சிவா :)
நாகை சிவா
மிக நல்ல பதிவு.
நானும் ஒரு பதிவிட்டுருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும்.
இங்கே லிங்க் கொடுக்கிறேன்.
நன்றி!
நாகை சிவா,
நல்ல பதிவு.
//"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."//
எனக்கு மிகவும் பிடித்த வாய்க்கியம் இது.
பி.கு:- எனது ஆறுப்பதிவிற்கு உங்களின் ஆறுப்பதிவைத்தான் முன் மாதிரியாகப் பாவித்தேன். நன்றி
மறந்து போச்சு விவேகானந்தர் தினம்...ஞாபக படுத்தியதற்கு நன்றி மக்கா...சோர்ந்து போகும் போதெல்லாம் "Arise, Awake..." நினைத்துக்கொள்வேன்...
//தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."//
தீர்க்கதரிசி சொன்னதை நமது அரசியல் வாதிகள் எப்படி துர்பிரயோகம் செய்துகொண்டார்கள் பார்த்தீர்களா?
ஆமாம், அண்ணாச்சிக்கும் நம்ப நாகப்பட்டினம்தானா?....ஹி! ஹி!! நமக்கும் அதுதானுங்க.
இவரைப்பற்றிய சில புத்தகங்கள் என் சிந்தனையையே மாற்றிப்போட்டுவிட்டது.
//அப்ப நரேந்திரநாத் தத்தாவின் சொற்பொழிவுகளை போட்டால் படிப்பதற்கு ஒரு ஆளு இருக்காரு. மிக்க மகிழ்ச்சி.... //
சிவா ... நரேந்திரன் என்பது விவேகநந்தரின் இயற்பெயர் ... அதாவது ஒரிஜினல் பெயர். நான் அவரைத்தான் பிடிக்கும் என்று சொன்னேன். எனக்கு வேறு தத்தாவும் தெரியாது தாத்தாவும் தெரியாது
பின்னூட்ட நாயகர் ஏதோ விஷமம் செய்கிறார் என்று மட்டும் புரிந்தது முதல் பின்னூட்டம் படித்தவுடம்...
அப்புறம்தான் தெரிந்தது - குசும்பு என்று...
மற்றபடி நினைவூட்டலுக்கு நன்றி சிவா..
நல்ல அருமையான பொருள் செறிந்த பதிவு. வாழ்த்துக்கள். உண்மைலே நான் எழுத நினைச்சேன். நீங்க எழுதி இருக்கிறதைப்பார்த்ததும் அதுதான் பொருத்தம்னு பேசாம இருந்துட்டேன். நல்ல உருப்படியான சிந்தனை.
$$
எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம்.
$$
GOOD ONE
//என்ன பவர்புல் விஷன் பாருங்கள்.
விவேகானந்தா is always great! //
உண்மை தான் தெ.கா., அவர் கூறியதை அனைத்தையும் படித்தாலே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நினைப்பு வந்து விடுகின்றது.
வருகைக்கு மிக்க நன்றி பாலச்சந்தர். உங்களை பத்தி அங்க ரொம்ப பெரிசா பேசிக்கிறாங்க. உங்க பக்கத்துக்கு இனிமேல் தான் வரனும்.
////டெம்ப்ளேட் கொஞ்சம் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் //
படிப்பதற்கு ரொம்ப சிரமாகவா உள்ளது. ஏன்வென்று பார்க்கின்றேன்
//அப்படியே எனக்கும் உங்க காலைக் காட்டுங்க சிவா :) //
கப்பி, நீ ஒரு பக்கம் இருக்க, கண்ணன் ஒரு பக்கம் இருக்காரு. அவரச படாத என்ன?
ஒரு நாள் உனக்கு கண்டிப்பா ஆப்பு உண்டு .........
சிவபாலன்,
மிக்க நன்றி, உங்கள் பதிவின் சுட்டியை இங்கு கொடுத்து உள்ளேன்.
http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_04.html
வாங்க வெற்றி,
என்னை விட நீங்கள் நல்லாவே ஆறு போட்டு உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
//"Arise Awake and stop not till the GOAL is reached" not the one you have mentioned.//
இந்த வார்த்தைகள் அனைவருக்கும் தெரிந்து ஒன்று என்பதால் கூறவில்லை.
//Guess you are practising this...
""எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள்....//
கண்டிப்பாக... இதை குறித்து அவரே,
"Keep Practising, Practise makes you perfect" சொல்லி உள்ளார்.
//Bolo bhai saab "sivaram jee ki jai"//
ஏன் CT, தாங்களும் இந்த உள்குத்தில் இறங்கி வீட்டிர்கள்.
அப்புறம் ஒரு விசயம், தாங்கள் பதிவு ஆரம்பித்தை குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் ப்ரொபைல் படமும் அருமை.
//தீர்க்கதரிசி சொன்னதை நமது அரசியல் வாதிகள் எப்படி துர்பிரயோகம் செய்துகொண்டார்கள் பார்த்தீர்களா?//
என்னங்க பண்ணுறது. அவர்களும் மாறும் காலம் வரும், அல்லது அவர்களை மாற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
//ஆமாம், அண்ணாச்சிக்கும் நம்ப நாகப்பட்டினம்தானா?....ஹி! ஹி!! நமக்கும் அதுதானுங்க. //
ஆஹா, மேலும் ஒரு நாகை தங்கமா... மிக்க மகிழ்ச்சி....
அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போங்க.....
//இதைப் பற்றி நான் எழுதலாம் என இருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.:)//
வேதா, அவர் கூறி விசயங்கள் ஏகப்பட்டது உள்ளது. நீங்களும் எழுதலாம். படிப்பதற்கு நான் தயாராக உள்ளேன்.
//இவரைப்பற்றிய சில புத்தகங்கள் என் சிந்தனையையே மாற்றிப்போட்டுவிட்டது. //
உண்மை தான் குமார். இவரை முதலில் நான் ஒரு ஆன்மிகவாதியாக தான் (சாமியாராக) பார்த்தேன். ஆனால் இவரை பற்றி நன்கு படித்து அறிந்த பிறகு தான் அவரின் பெருமை புரிந்தது.
//நரேந்திரன் என்பது விவேகநந்தரின் இயற்பெயர் ... அதாவது ஒரிஜினல் பெயர். நான் அவரைத்தான் பிடிக்கும் என்று சொன்னேன்.//
அண்ணாத்த, நரேந்திரன் என்பது சரி தான். அவரின் முழு பெயர் நரேந்திரநாத் தத்தா.(Narendranath Dutta)
//எனக்கு வேறு தத்தாவும் தெரியாது தாத்தாவும் தெரியாது //
என்ன இப்படி சொல்லிட்டீங்க, லாரா தத்தாவ உங்களுக்கு தெரியாது. இதை நான் நம்ப மாட்டேன்......
//அப்புறம்தான் தெரிந்தது - குசும்பு என்று...//
அவர் எப்போது அப்படி தான் ரவி. என்ன பண்ணுறது உள்ளுர்காரா போயிட்டார், அதுனால அவர் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ள தான் வேண்டும். நாகை தங்கம்......
அப்புறம் ரவி, உங்க பதிவு பக்கம் வந்தேன். புழுதி பறக்குது. சரி, நாமலும் வந்து ஏதும் கிளப்ப வேண்டாம் என்று வந்து விட்டேன்.
//நீங்க எழுதி இருக்கிறதைப்பார்த்ததும் அதுதான் பொருத்தம்னு பேசாம இருந்துட்டேன்.//
அது என்ன பொருத்தம்.....
கல்யாணம் எல்லாம் நல்லப்படியாக முடிந்ததா? கட்டு சாதம் கட்டிகிட்டு வந்தீங்களா , இல்லையா?
//உருப்படியான சிந்தனை//
அதும் முதல் முறையாக, அப்படிகுறது வீட்டீங்களே....
//GOOD ONE //
நன்றி மின்னல்......
நாகை சிவா
என்னுடைய பதிவின் சுட்டியை கொடுத்தற்கு நன்றி.
WoW! thanx shiva,
excellant lines. daily i used to tell this Arise! Awake! in the morning..
btw, i spend 5 days at Vivekanada kendra as a prize of winning an essay competition when i was doing my 8 th std. that is also a turning point in my life. (sorry for putting comment in eng)
read your prev posts too.. ROTFL :)
//என்னுடைய பதிவின் சுட்டியை கொடுத்தற்கு நன்றி.//
இதுல என்ன இருக்கு சிவபாலன். அவர் வாழ்ந்த இந்திய மண்ணில் நாம் பிறந்தற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
// i spend 5 days at Vivekanada kendra as a prize of winning an essay competition when i was doing my 8 th std. that is also a turning point in my life.//
மிக்க மகிழ்ச்சி அம்பி!
//excellant lines. daily i used to tell this Arise! Awake! in the morning..//
உற்சாகம் தரும் வார்த்தைகள்....
தினம் ஒருமுறை படித்தாலே தீரும் வினையெல்லாம்!
மிக நல்ல, பொருத்தமான பதிவு!
ஆண்டவன் காலை விட அவர் அடியார் காலில் விழுவது இன்னும் சிறந்தது!
அந்த எண்ணத்தில்தான், நம்ம கோவியார், நரேந்திரரின் அடியாரான உங்க 'காலைக் காட்டுங்க'ன்னு சொல்லியிருப்பாரு!
சரிதானே, கோவியாரே!
மிக்க நன்றி எஸ்.கே...
உங்கள் கேள்விக்கு கண்ணன் தான் பதில் சொல்ல வேண்டும். நான் சொல்வதற்கு ஏதுவும் இல்லை.:))
//தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்."//
நம் இந்தியாவின் தற்போதைய நிலை.
//"உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன".//
தூங்காம முழிச்சுக்கும்போது தெரிந்துவிடும் உண்மை.
நாகை சிவா உபயத்தில் விவேகானந்தரின் நல்ல பவர்புல்லான முன்னேற்றப் பிரகடனங்கள் மீண்டும் ஒருமுறை படிக்க முடிந்தது. ஒருவாரம் பாட்டரி சார்ஜ் ஆன மாதிரி. நல்ல விஷயத்தை நினைவு படுத்திப் பார்வைக்கு கொணர்ந்ததற்கு நன்றிகள் நாகை சிவா.
வாங்க ஹரிஹரன்!
வந்ததுக்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி.
கால் எங்கே இருக்கு :)
Good, you have remind him in time
//நாகை சிவா said...
//நரேந்திரன் என்பது விவேகநந்தரின் இயற்பெயர் ... அதாவது ஒரிஜினல் பெயர். நான் அவரைத்தான் பிடிக்கும் என்று சொன்னேன்.//
அண்ணாத்த, நரேந்திரன் என்பது சரி தான். அவரின் முழு பெயர் நரேந்திரநாத் தத்தா.(Narendranath Dutta)
//
சிவா...மறந்து போச்சி ... நினைவு படுத்தியதற்கு நன்றிகள்
Sorry,
Im typing in English.I cant save fonts in office!
Real Inspiring and a wonderful post!Keep Rocking!
சுபா, நீங்கள் தமிழில் தான் எழுத வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. தவறாமல் வருவதே பெரிய விசயம். நன்றி.
lovely to see see alot of Tamil bloggers and the Tamil script.
Keshi.
என்னோட சிறு வயசுல விவேகானந்தர் புத்தகங்கள் எத்தனையோ படிச்சுருக்கேன்.. ஆனா இன்னும் மனசுல இருக்கிறது இது மட்டும் தான்.. ரொம்ப தாக்கத்தை உண்டாக்குன சிந்தனை இது, சிவா
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."
அருமையான சிந்தனைத்துளிகள்!!!
//"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்."
"பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்."//
என்னை கவர்ந்த சில சிந்தனைகள்.
வருகைக்கு நன்றி,Keshi. நீங்களும் தமிழில் எழுத ஆரம்பிக்கலாமே!
வாங்க கார்த்திக்கேயன்,
அவரின் பல வார்த்தைக்கள் என்னுளும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அப்புறம், இப்ப ஏதோ கொஞ்சம் உருப்படியா எழுத ஆரம்பித்து இருக்கேனா?
வாங்க நன்மனம், என்ன இந்த தடவை இவ்வளவு லேட்டா வந்து இருக்கீங்க.
"தன்நம்பிக்கையை வளர்க்கும் வரிகள்."
நம்மை தட்டி எழுப்பும் வார்த்தைகள் அவை.
Siva,
All the lines are truly inspiring. Very thoughtful post.
I absolutley enjoyed the sense of humour in many of your previous posts.
//நாகை சிவா said...
ஹம், இது மாதிரி, இன்னும் எத்தனை கதை ஸ்டாக் வச்சு இருக்கீங்க.....
//
முதல் கதையை படித்து... உதட்டைப் பிதுக்கி ... பெட்டர் லக் நெக்ஸ் டைம் என்று ... உசுப்பேத்திவிட்டு விட்டு ... இது மாதிரி கேள்வி வேறயா ? ம் ...தம்பி சிவா ஒன்னும் பிரியலை :)))
வாங்க ராஜீ!
நம்மளை பத்தி நல்ல விதமா சொன்னதுக்கு ரொம்ப தாங்கஸ்.
அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போங்க
//உசுப்பேத்திவிட்டு விட்டு ... இது மாதிரி கேள்வி வேறயா ? ம் ...தம்பி சிவா ஒன்னும் பிரியலை :))) //
அது எல்லாம் அப்படி தான். இத தான் சந்துல சிந்து பாடுரது சொல்லுவாங்க. நீங்க தொடர்ந்து எழுதுங்க.
நல்ல பதிவு.. உயர்ந்த மனிதர் அவர்...
உண்மையை சொல்லப்போனால் விவேகனந்தரின் கருத்துக்கள் படிக்கும் ஆர்வம் நிறைய உண்டு.. ஆனால் இதுவரை அதிகம் படித்தது இல்லை.....மறந்து போன ஆசையை ஞாபகப்படுத்தி உள்ளீர்கள்..
ஹமீது, அவரின் கருத்துகள் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சுட்டி வேண்டும் என்றால் சொல்லுங்கள், கொடுகின்றேன்.
புத்தகம் வேண்டும் என்றால், இந்தியா வரும் போது தருகின்றேன்
Post a Comment