Saturday, June 17, 2006

இனியவை ஆறு

பிளாக்கரில் குட்டி யானை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஒட வேண்டும் என்ற காரணத்தில் நம்ம பொன்ஸ், நம்மளை ஆறு விளையாட்டிற்கு கூப்பிட்டு உள்ளார்கள். அவரை மாதிரி இந்த ஆறு பதிவை போடுவதற்கு ஆறு நாள் வர்கார்ந்து யோசிக்காமல், ஆறு படத்தின் ஆறு பாடல்களை கேட்டு விட்டு இந்த விளையாட்டை ஆரம்பிக்கின்றேன்.

முதலில் ஆறு படத்தின் ஆறு பாடல்கள்:

அஞ்சு கிலோ அரிசி வாங்கி பஞ்சு பஞ்சாக வேக வச்சி ஜன் ஜன் ஜன்....
பாக்காத என்னை பாக்காத குத்தும் பார்வையாலே பாக்காது....
ப்ரீயா விடு ப்ரீயா விடு மாமு வாழ்க்கைக்கு இல்ல கியாரண்டி....
துரோகம் துரோகம், கடவுள் தூங்கும் நேரம் பாத்து சாத்தான் ஆடும் ஆட்டம்....
நெஞ்சம் எண்ணும் ஊரிலே, காதல் எண்ணும் தெருவிலே....
தொட்டுட தொட்டுட என்ன நீ தொட்டுட உன் கிட்ட மாட்டிக்குச்சு என் மனசு....

சந்திக்க விரும்பிய ஆறு நபர்கள்:

சுவாமி விவேகானந்தர்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஹிட்லர்/யாசர் அராபத்
காமராஜர்
எம்.ஜி.ராமசந்திரன்
எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி

சந்திக்க விரும்பும் ஆறு நபர்கள்:

அப்துல் கலாம்
பீடில் கேஸ்ட்ரோ
வேலு பிள்ளை பிரபாகரன்
ரஜினி காந்த்
மணிரத்னம்
இளையராஜா

விளையாட்டில் கவர்ந்த ஆறு நபர்கள்:

கபில் தேவ்
மைக்கேல் ஜோர்ட்டன்
ஸ்டீவ் வா
அகாசி/ஸ்டெபி
ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் அஸ்டின்
பிரேயன் லாரா

மறக்க முடியாத ஆறு சம்பவங்கள்:

10,11,12 ஆம் வகுப்பு பள்ளி நாட்கள்
மூன்று வருட கல்லூரி நாட்கள்
சகோதரியின் திருமணம்
தாத்தாவின் மரணம்
நாகையை சின்னாபின்னம் ஆக்கிய சுனாமி
ஐ.நாவில் வேலை பார்ப்பது

தற்சமயம் இழந்த ஆறு விசயங்கள்:

சூரியன் உச்சிக்கு வரும் வரை தூக்கும் தூக்கம்
மாப்பிள்ளை நிரஜ்னின் சேட்டைகள்
தாய் மொழியில் பேசுவது
என் ஊரின் உப்பு காற்றும், கருவாட்டு மணமும்
நண்பர்களுடன் ஆன வெட்டி பேச்சும், ஊர் உலாவும்
நல்ல உணவும், அம்மாவின் பெட் காபியும்

தெரிந்தே செய்யும் ஆறு தவறுகள்:

நேரம் தவறுவது
எதிலும் அலட்சியமாக(வருத்தப்படாமல்) இருப்பது
எந்த காரியத்தையும் கடைசி நிமிடத்தில் செய்வது
உதவி செய்து கெட்ட பெயர்(சிக்கலில்) எடுப்பது(மாட்டுவது)
Self Personalityயில் கவனம் செலுத்தாமல் இருப்பது
இதை எதையும் திருத்தி கொள்ளாமல் இருப்பது

போனதில் பிடித்த ஆறு இடங்கள்:

ஏற்காடு
வால்பாறை
மடக்கதானம் - கேரளா
பாரிஸ்
பெங்களுர் - இஸ்கான்
விசாகப்பட்டினம்

போக விரும்பும் ஆறு இடங்கள்:

இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும்
உலக அதிசயங்கள் அனைத்திற்க்கும்
கியூபா
சிங்கப்பூர்
இலங்கை
ஜெர்மன்

இந்த விளையாட்டிற்க்கு அழைக்க விரும்பும் ஆறு நபர்கள்:

கால்கரி சிவா - நம் மண்ணின் பெருமையை மாடு பிடித்து கால்கரியில் நிறுவ இருக்கும் மதுரை புயல். அவரை திட்டுவதற்கு வாக்கியங்களை
அவரே தானமாக கொடுக்கும் வள்ளல்.

கீதா சாம்பசிவம் - சங்கத்தின் நிரந்திர தலைவலி. ப்ளாக்கர்வுடன் நித்தமும் சண்டையிட்டு அதில் சில சமயம் வெற்றியும் பெரும் அதிஷ்டசாலி.

துபாய் ராசா - என்னை சமாதானம் படுத்த வேண்டும் என்பதற்காக துபாயில் வெள்ளை கொடி ஏற்றி சூடான் வரை பறக்க விட்ட அமைதி புறா. லோடு லோடாக பேரீச்சம் பழத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்த திலகம்.

தெக்கி காட்டான் - சாத்தானுக்கு சவால் விடும் காட்டான். இரண்டு மார்க்கில் பெயில் செய்யப்பட்டு இந்த சமூகத்தால் வஞ்சிக்கபட்ட அப்பிராணி.

மனதின் ஒசை - அறையில் இருப்பதற்கு பயந்து பல சமயங்களை மெரீனா கடற்கரையில் கழித்த தைரியசாலி. அப்ப அப்ப கவிதை எழுதும் கவிஞர்.

வடவூர் குமார் - நாகை தங்கங்களில் ஒருவர். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு ஒருவர் தெரியா விட்டாலும் அவரின் மேல் எனக்கு மிக்க மரியாதை உண்டு. மடவிளாகம் என தன் பதிவிற்கு நாமகரணம் வைத்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

55 comments:

பொன்ஸ்~~Poorna said...

சிவா...
என் ஆசைக்காக ஆறு பதிவு போட்ட உங்களைப் பாராட்டினாலும், அதெப்படி "ஆறு" பாட்டைக் கேட்டுட்டு போடலாம்?!!! ஏதோ ஒரு சிவகாசி, ஆதி பாட்டெல்லாம் கேட்டிருந்தா சரி.. அட, ஒரு சந்திரமுகி பாட்டு கேட்டு போட்டிருந்தாக் கூட சந்தோஷப்பட்டிருப்பேன்.. இது மாதிரி கட்சி மாறுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை!!!!

"சந்திக்க விரும்பிய ஆறு நபர்கள்".. இன்னும் சந்திக்க விருப்பம் இருந்தா சொல்லுங்க.. 'ஏற்பாடு' பண்ணிடுவோம். ;)

"போக விரும்பும் ஆறு இடங்கள்: " என்னங்க, எல்லாம் பிரச்சனையான இடமாவே சொல்றீங்க.. நான் ஒண்ணும் ஏற்பாடே செய்ய வேண்டாம் போலிருக்கு :)

//நாகையை சின்னாபின்னம் ஆக்கிய சுனாமி// - சுனாமியை யாரால மறக்க முடியும்.. நினைக்கும் போதே கஷ்டமா இருக்கு.. இத்தனை நாட்களுக்கு அப்புறமும்.. :(

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி சிவா, என்னையும் மறக்காமல் உங்களோட ஆறு பதிவிலே போட்டத்துக்கு. நிஜமாவே நெகிழ்ந்து போனேன்.

இலவசக்கொத்தனார் said...

//கேஸ்ட் ரோல்//

இது யாருங்க? நட்புக்காகன்னு சொல்லற மாதிரி இருக்கு?

நன்மனம் said...

//எதிலும் அலட்சியமாக(வருத்தப்படாமல்) இருப்பது///

அதனால தான தேடி புடிச்சு சங்கத்துல இனஞ்சீங்க:-))


////கேஸ்ட் ரோல்//

இது யாருங்க? நட்புக்காகன்னு சொல்லற மாதிரி இருக்கு? //

பிடரல் கேஸ்ட்ரோ தான சிவா?

நாகை சிவா said...

//கட்சி மாறுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை!!!!//
கட்சி மாறுவதா.... நாங்க எல்லாம் கொள்கையே உயிர் மூச்சாக வாழ்பவர்க்கள். ஆறு விளையாட்டிற்கு ஆறு பட பாட்டு கொஞ்சம் ஒத்து போகுமே தான் அந்த பட பாடல். சந்திரமுகி ஒ.கே. அது என்னங்க சிவகாசி, ஆதி ... எல்லாம் ஒரே டப்பாங்குத்து பாடல்கள்... ஒரே மாதிரி. போர் அடிக்குதுங்க.

//'ஏற்பாடு' பண்ணிடுவோம்//
எப்படா இருக்கீங்க போல.... இனி மேல் ஜாக்கிரதையாக தான் இருக்கனும்.

//எல்லாம் பிரச்சனையான இடமாவே சொல்றீங்க.. //
இதில் இலங்கையை தவிர வேற ஒன்றும் பிரச்சனையான நாடுகள் கிடையாதே.....

//நினைக்கும் போதே கஷ்டமா இருக்கு.. //
உண்மை தானுங்க. நரக வேதனை என்பார்க்களே அதை அன்று அனுபவித்தேன்.ஒரு சில மணி நேரங்களில் இது நம்ம ஊரு தானா என சந்தேக பட வைத்து விட்டது.

நாகை சிவா said...

என்னங்க கீதா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. சீக்கிரம் போயி ஆறு பதிவு போடுற வேலையை ஆரம்பிங்க.

நாகை சிவா said...

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி கொத்துஸ்.சரி செய்து விட்டேன்.

நாகை சிவா said...

//அதனால தான தேடி புடிச்சு சங்கத்துல இனஞ்சீங்க:-))//
ஆமாங்க நன்மனம். நம்ம அந்த பக்கம் அவ்வளவாக ஒதுங்கியது இல்லை. ஒரு நா நம்ம தலகிட்ட சில கேள்விகள் கேட்க பளிச்சுனு நாகை மாவட்ட பதவிய பிடிடானு என் வாயை அடைத்து விட்டார். அப்படியே மத்த மக்கள் எல்லாம் தாரை தப்பட்டத்துடன் வந்து நம்மளை அப்படியே சங்கத்துக்கு அள்ளிட்டு போயிட்டாங்க. நதி எங்குட்டு போனாலும் கடைசியில் கடலில் கலந்து தானுங்க ஆகனும். அது போல தான் நானும்.

//பிடரல் கேஸ்ட்ரோ தான சிவா?//
அது கேஸ்ட்ரோவே தானுங்க.

வவ்வால் said...

எல்லாம் வேகமா ஆறு போடுரிங்க நான் தான் இன்னும் ஆற அமர உட்கார்ந்து யோசிச்சுட்டே இருக்கேன் சீக்கிறம் போடலைனா நான் கூப்பிட ஆளே இருக்காது போல, நல்லா போட்டிங்க நாகை சிவா!

வடுவூர் குமார் said...

நாகை சிவா
ஏதோ கிரிக்கெட்,மேசைப்பந்து விளையாட கூப்பிட்டா சரி.எழுதவா?
சும்மா விளையாட்டுக்கு...
முயற்சி செய்கிறேன்.
சிங்கப்பூர் பார்க்க ஆசையா?
நான் இருக்கிறேன் வாங்க.வீட்டிலேயே தங்கலாம்.
முடிந்தால் என் சாப்பாட்டையும் சாப்பிட தயாராக இருக்கவும்.சுத்த சைவம்,முட்டை கூட கிடையாது.

நாகை சிவா said...

நன்றிங்க வவ்வால். நமக்கு இந்த வெள்ளி சனியை விட்டு விட்டால் மறுபடியும் என்று நேரம் அமையும் என்று தெரியாது. அதான் சட்னு போட்டாச்சு.
கவலைப்படாதீர்கள் வலைப்பதிவில் ஏகப்பட்ட மக்கள் இருக்கார்க்கள்.

நாகை சிவா said...

வாங்க குமார்,
சிங்கை வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. உங்கள் வீட்டிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. நம் நெருங்கிய சொந்தகளும், நண்பர்க்களும் பலர் அங்கு உண்டு. உணவு ஒரு பிரச்சனையே இல்லை குமார். நானும் நம்ம அறுசுவை பாபு அண்ணன் போல் சுத்த சைவம் தானுங்க(அசைவம் கிடைக்காத போது)

VSK said...

நிறைவாகத் தந்திருக்கிறீர்கல்!
ஒவ்வொரு தலைப்பும் அருமை!
அதில் சொன்ன நிகழ்வுகளும் அருமை!

நாகை சிவா said...

நன்றி ஆத்திகம்.
அப்புறம் கவிதை படைப்பதில் வல்லவரே!இந்த கவிதை எழுதுவது எப்படி என்று நம் தலக்கு சொல்லுகளேன். ரொம்பவே தவிகின்றார்.

கால்கரி சிவா said...

//நம் மண்ணின் பெருமையை மாடு பிடித்து கால்கரியில் நிறுவ இருக்கும் மதுரை புயல். அவரை திட்டுவதற்கு வாக்கியங்களை
அவரே தானமாக கொடுக்கும் வள்ளல்.//



நன்றி...நன்றி..நண்றி

நான் தான் என்னைதிட்டும் வார்த்தைகளை தங்து விடுகிறேன். அதைவைத்து திட்டிடலாமே.

அப்பப்பொ மாடு பிடிக்க போகும் வீரன் என சொல்லி என் வயத்தில் புளியை கரைக்கிறீர்களே. ;))

ஒரு சிறு தற்பெருமை. என்னுடைய கிராஜுவெஷன் டின்னரில் திரு அப்துல் கலாம் அவர்கள் சீப் கெஸ்ட். அவருக்கு அருகில் அமர்ந்து டின்னர் சாப்பிட்டேன். அப்போது அவர் டி ஆர் டி ஒ இயக்குநர் ஆக இருந்தார்.

பின்னர் ஒருநாம் டில்லி செல்லும் விமானத்தில் அவரைப் பார்த்து ஒரு கை குலுக்கல்.

என் நணபரைப் பார்க்க ஹைதரபாதில் உள்ள டி ஆர் டி ஒ லேப்பிற்கு சென்றிருந்த போது அவரது அறையில் அமர்ந்து சிறிது நேரம் பேச்சு....

நாகை சிவா said...

உங்க பதிவில் வந்து உங்களை கூப்பிடலாம் என்று இருந்தேன். அதுக்குள் நீங்களே வந்து விட்டீர்க்கள்.

//மாடு பிடிக்க போகும் வீரன் என சொல்லி என் வயத்தில் புளியை கரைக்கிறீர்களே.//
கால்கரி சிவா.... உங்கள் திறமை மேல் எங்களுக்கு அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. அதான்...

//திரு அப்துல் கலாம் அவர்கள் சீப் கெஸ்ட். அவருக்கு அருகில் அமர்ந்து டின்னர் சாப்பிட்டேன். //
மிக்க மகிழ்ச்சி

//டில்லி செல்லும் விமானத்தில் அவரைப் பார்த்து ஒரு கை குலுக்கல்//
சந்தோஷம்

//அவரது அறையில் அமர்ந்து சிறிது நேரம் பேச்சு.... //
நற... நற....அவன் அவன் ஒரு தடவையாவது பார்க்க மாட்டாமானு இருக்கான்.....நீங்க என்னனா....
அவர் கிட்ட அப்படி என்னங்க பேசுனீங்க....

மணியன் said...

நன்றாக பட்டியலிட்டு விட்டீர்கள். சுவையான தேர்வுகள். அதென்ன வ.வா.சங்கத்திலிருந்து கொண்டு சந்திக்க விரும்பும் நபர்களில் கைப்புள்ளையை காணவில்லை :)

நாகை சிவா said...

மணியன், தல பெயரு தாங்க முதல்ல வந்து இருக்குனும், ஆனா தல கண்டிப்பாக சொல்லி விட்டார், என்னை யாருடனும் கம்பேர் பண்ணக்கூடாது என்று. அதாவது ஆறில் ஒருவராக அவர் இருக்க விரும்பவில்லை. சோலவாக, ஹீரோவாக இருக்க விரும்புகின்றார். அவர் பெயரை போட்டால், மற்ற பெயர்களை எல்லாம் போட முடியாது. அதனால் முதலிலே தனி அஞ்சலில் ஒப்புதல் வாங்கி விட்டு தான் அவர் பெயரை போடாமல் தவிர்த்தேன்.
நான் செய்தது சரி தானங்க...

கோவி.கண்ணன் said...

//என் ஊரின் உப்பு காற்றும், கருவாட்டு மணமும்//
சிவா, கருவாட்டு மணம் என்றதும் எனக்கு நம் இரயில்வே ஸ்டேசன் தான் ஞாபகம் வருகிறது. கடற்கரை உப்பு காற்று என்னோடைய தேர்வு ...
உப்பு கருவாடுன்னு பாட ஆசைதான் ஆனால் நான் சுத்த சைவம்

நாகை சிவா said...

கண்ணன், எனக்கும் கருவாடு பிடிக்காது. ஆனால் நம் ஊரின் ஸ்பேஷாலிட்டியில் கருவாட்டு மணமும் ஒன்று.
இரவில் கடற்கரையில் நண்பர்களுடன் இருக்கும் போது முகத்தில் அறையும் அந்த உப்பு காற்றுக்கு மனம் இப்பொழுது ஏங்குகின்றது.
மனம் அமைதி அடைவதற்கு அதை விட ஒரு சிறந்த இடம் உண்டோ??

மனதின் ஓசை said...

சிவா...ஆற அமர யோசிக்காம, ஆறு படத்த பாத்துட்டு இப்படி ஆற ஆறா ஓட விட்டுட்டு ஏதொ சொல்கிறென்னுட்டு ஏடகூடமா மாட்டி விட்டுட்டேங்களே..
நமக்கு இனையத்துல தெரிச்சதெ ஆறேழு பேர்தானே..சரி சமாளிப்போம்....

சத்தியமா நம்மள இப்படி ஒருத்தர் கூப்பிடுவாங்கன்னு யோசிக்க கூட இல்ல...என்ன சொல்றதுன்னே தெரியல..ரொம்ப நன்றிங்க..

ஆமாம்..எந்த தைரியத்துல இப்படி சொன்னீங்க?.. // அப்ப அப்ப கவிதை எழுதும் கவிஞர்// பொன்ஸ் இன்னும் இத கவனிக்கல போல.....

Unknown said...

//ஐ.நாவில் வேலை பார்ப்பது//
அட.. என்னவா இருக்கீங்க? பவர்புல்லான ஆளு போலிருக்கு..

//இதை எதையும் திருத்தி கொள்ளாமல் இருப்பது//
multiple choice questionsல all of the aboveனு ஒண்ணு இருக்கமே அது மாதிரியா இது..

துளசி கோபால் said...

பார்க்க விரும்பும் ஆறு இடங்களிலே நம்மூரு இல்லேன்னதும் மனசுக்கு
'பக்'ன்னு ஆயிருச்சு(-:

நாகை சிவா said...

வாங்க மனதின் ஒசை!
தமிழ் வலைப்பதிவில் உள்ள அனைவரும் நமக்கு தெரிந்தவர்கள் தான் என நினைத்து சும்மா புகுந்து கலக்குங்கள்.
உங்க பதிவில் ஒரு கவிதை போட்டு இருந்தீர்க்கள். இது மாதிரி அடிக்கடி தொல்லை கொடுக்ககூடும் என்பதால் முன்னாடியே உங்களை கவிஞர் என அழைத்து விட்டேன். நாங்கள் எல்லாம் தீர்க்கதரிசியாக்கும்.

நாகை சிவா said...

//அட.. என்னவா இருக்கீங்க? பவர்புல்லான ஆளு போலிருக்கு..//
பவர் புல் ஆளு எல்லாம் இல்லைங்க. இப்ப தான் அடி எடுத்து வைத்து இருக்கின்றேன். இருப்பது தொலைப்தொடர்ப்பு துறையில்(Telecommunication).

//all of the aboveனு ஒண்ணு இருக்கமே அது மாதிரியா இது.. //
சரியா சொல்லிபுட்டிங்க, இது மாதிரி அனைவரும் ஒரு சில தவறுகளை தெரிந்தே செய்கின்றோம், அதை திருத்தி கொள்ளவும் மாட்டேன் என்கின்றோம். இது போல நீங்க என்ன தவறு செய்கின்றீர்கள்?.
ம் ம்ம் சொல்லுங்க ரமணி....

நாகை சிவா said...

அச்சோ! தப்பா எடுத்துகிட்டிங்களே, துளசியக்கா. அங்க எப்படி வராமல் இருப்போம். உலக அதிசயங்களில்(???) ஒன்றான Sydney Opera House பார்க்க ஆஸ்திரேலியா வரும் போது பக்கத்தில் அப்படியே ஒரு சின்ன விசிட் அடிக்க மாட்டோமா என்ன... இதுக்கு எல்லாம் கவலைப்படாதீர்கள். சீக்கிரமே வந்து விடுகின்றேன்.

Anonymous said...

Siva, If you like Michael Jordan, You will love this guy Lebron James. Hope you can watch NBA , he is playing for Cleveland...

"மூன்று வருட கல்லூரி நாட்கள் .."
Only days or are we talking about some hidden matters.....

with best wishes to achieve the achievable ...
CT

நாகை சிவா said...

எங்க CT...
NBA பார்த்து நாளாச்சு.
நீங்க சொல்லும் நபரை எனக்கு தெரியவில்லை. M. Jordan அடுத்து நமக்கு பிடித்தது என்றால் ...Garnett, Iverson, Bryant போன்றவர்களை சொல்லாம்.

//"மூன்று வருட கல்லூரி நாட்கள் ."//

என் கல்லூரி வாழ்க்கை வாழ்வில் கிடைத்த மிக அருமையான பொக்கிஷம்களில் ஒன்று. நினைத்தாலே இனிக்கும்.........

Thekkikattan|தெகா said...

சிவா,

ரொம்ப தமாதமாக வந்து நன்றி சொல்வதற்கு பொருத்தருள்க! கொஞ்சம் வேளையாக போய் விட்டது, நீங்கள் அனுப்பிய பின்னூட்ட மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். என்னை தாங்கள் ஆறில் இணைத்துக் கொண்டதிற்கு நன்றி.

மிக விரையில் ஆந்த ஆறுடன் வருகிறேன். தாங்களின் ரசனை ரொம்ப அருமை. இருந்தாலும் அந்த கடற்கரையோரம் வசித்துக் கொண்டு கருவாட்டு வசனை மட்டியுமெ என்பதை கேட்கும் பொழுது... அடெடா, சிவா ரொம்ப முக்கியமான ஒரு சுவையை சுவைத்துப் பார்க்காமல் மிஸ் பண்ணுகிறரே என்று தோணியது. ;-)

தெகா.

Unknown said...

பாசமிகு தம்பியே சிவா,

ஆறுகளை தேசியமாக்க தலைவர்கள் யாரும் முயலவில்லையே என மூலையில் முடங்கி முனங்கும் மக்களுக்காக ஆறுகளைப் பதிவிலிட்டு உலகமயமாக்கி விட்டாயடா என் கண்மணியே..

இந்த இனியவை ஆறு பதிவுலகில் ஒரு வரலாறு...

புலியே ம்ம்ம் தொடரட்டும் உன் பாய்ச்சல்....

நாகை சிவா said...

//கொஞ்சம் வேளையாக போய் விட்டது,//
பரவாயில்லை. எல்லாம் ஆறும் கடைசியில் போய் கடலில் தானே சேர வேண்டும். அதான் சேர்த்து அழைத்து கொண்டு செல்லாம் என்று.....

//அடெடா, சிவா ரொம்ப முக்கியமான ஒரு சுவையை சுவைத்துப் பார்க்காமல் மிஸ் பண்ணுகிறரே என்று தோணியது. ;-)//
சுவையை எல்லாம் மிஸ் பண்ணல. எதுமே நமக்கு ரொம்ப பக்கத்தில் இருந்தால் அதனின் அருமை நமக்கு தெரியாமல் போய் விடும் என்பார்க்களே! அது சரி தான்.
நம் வீட்டிற்க்கு வரும் சொந்தங்களும், நண்பர்க்களும் மீன், இறா, நண்டு வகைகளை ஒரு பிடி பிடிக்க தவறியதுமில்லை. ஊருக்கு செல்லும் போது கருவாடு, அல்வா, ஊறுகாய் வாங்காமல் சென்றதும் இல்லை. அதிலும் இந்த கோலா மீன் மேல் நம்ம சொந்தங்களுக்கு ஒரு தனி ப்ரியம் தான். நமக்கும் தான்....

அது சரி, நம்ம ஊருக்கு எப்ப வரதா உத்தேசம், கருவாடு, மீன் சாப்பிட.......(செட்டிநாட்டு ஸ்டைல், காரம் தூக்கலா)

நாகை சிவா said...

ஏன் தேவ் அண்ணன், ஏன் இப்படி கிளம்பிட்டிங்க.....
அப்படி என்ன தப்ப செய்தேன்.
நேத்து ஏதும் கலைஞர் மீட்டிங்கில் கலந்து கொண்டீர்க்களா.....
இந்த அளவுக்கு கலாய்க்கீறிங்க....

Geetha Sambasivam said...

சிவா, நான் ஏற்கெனவே 4 பதிவு போட்டிருக்கேன். இப்போ 6 பதிவா? பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

சிவா, நான் ஏற்கெனவே 4 பதிவு போட்டிருக்கேன். இப்போ 6 பதிவா? பார்க்கலாம்.

Chellamuthu Kuppusamy said...

எனக்குப் பிடித்தது..//தெரிந்தே செய்யும் ஆறு தவறுகள்// :-)

நாகை சிவா said...

ஹி....ஹி.... திருத்திகலாமா .... வேண்டாமா.....

வெற்றி said...

நாகை சிவா,
அருமையாகப் பட்டியலிட்டுள்ளீர்கள்.

//நேரம் தவறுவது
எதிலும் அலட்சியமாக(வருத்தப்படாமல்) இருப்பது
எந்த காரியத்தையும் கடைசி நிமிடத்தில் செய்வது
உதவி செய்து கெட்ட பெயர்(சிக்கலில்) எடுப்பது(மாட்டுவது)//

நீங்களும் என்னைப் போலவா? :)

//சந்திக்க விரும்பும் ஆறு நபர்கள்:

வேலு பிள்ளை பிரபாகரன்//

உங்களின் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்களின் நம்பிக்கை, எதிர்காலம், பலம் எல்லாமே அவர்தான். "ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி" அந்த வீரத் தமிழன்.

கப்பி | Kappi said...

//மறக்க முடியாத ஆறு சம்பவங்கள்
6.ஐ.நாவில் வேலை பார்ப்பது//

இத மறந்தா விவகாரமாயிடும் சிவா...

வால்பாறை ஏரியால சோலையாறு தாங்க நம்ம ஃபேவரைட்..

அப்படியே வால்பாறைக்கு அந்த பக்கம் இறங்கி அதரப்பள்ளி போய் இருக்கீங்களா??

(பின்னாடி நின்னுட்டிருந்தவன் அந்த பக்கம் போனதும் இங்க வந்துட்டேன் :)) )

நாகை சிவா said...

வாங்க வெற்றி, முதன்முறையாக வந்து உள்ளீர்கள். நல்வரவு ஆகட்டும்.
என்னை போல் பல பெயர் இருப்பதை குறித்து மகிழ்ச்சி. என் தந்தையிடம் இதை கூற வேண்டும்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.சமயம் அமைந்தால் காணலாம்.

நாகை சிவா said...

சோலையாறு போன மாதிரி ஞாபகம் இருக்குங்க. அந்த ஏரியாவின் பெயர் எல்லாம் ஞாபகம் இல்ல, ஆனா எல்லா இடத்தையும் சுத்தி இருக்கோம். மங்க்கி பால்ஸ், ஒரு தனியார் கோவில், ஒரு எஸ்டேட்குள்ள இருந்தது. பசுமையான இடங்கள், நான் போன சமயம் சாரல் மழை வேறு பெய்தது.
வால்பாறை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் இன்னும் மனிதர்க்களால் மாசுபடுத்த ஆரம்பிக்கவில்லை.

குமரன் (Kumaran) said...

நன்றாய் இருக்கிறது சிவா உங்கள் ஆறு பதிவு. நல்ல பட்டியல்களாக இட்டிருக்கிறீர்கள்.

நாகை சிவா said...

வாங்க குமரன்.நன்றி.
எங்க குமரன், உங்க பதிவில் ஒரு வார்த்தை சொல்ல கூடாது போல் இருக்கு. இப்படி பிரிச்சி மேஞ்சு இருக்காங்க...
ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.

கைப்புள்ள said...

பதிவு நல்லாருக்கு சிவா.

//சந்திக்க விரும்பும் ஆறு நபர்கள்
//அப்துல் கலாம்//
எங்க வீட்டுல கலாம் கையெழுத்து போட்டுக் கொடுத்த அக்னிச் சிறகுகள் இருக்கு. அவருக்குப் பாராட்டு விழா நடத்தும் போது எங்க தோப்பனார் நேரடியா பாத்து பேசியிருக்கார்.

இளையராஜா//

டச் பண்ணிட்டியே சிவா.

//தாய் மொழியில் பேசுவது
என் ஊரின் உப்பு காற்றும், கருவாட்டு மணமும்
நண்பர்களுடன் ஆன வெட்டி பேச்சும், ஊர் உலாவும்
நல்ல உணவும், அம்மாவின் பெட் காபியும்//
Same pinch.
:(

//அவர் பெயரை போட்டால், மற்ற பெயர்களை எல்லாம் போட முடியாது. அதனால் முதலிலே தனி அஞ்சலில் ஒப்புதல் வாங்கி விட்டு தான் அவர் பெயரை போடாமல் தவிர்த்தேன்//
இது கொஞ்சம் ஓவர் தான். ஆனாலும் இவ்வளவு பாசத்தப் பாத்து கண்ணுக்குள்ள ஒரு சுனாமி கொப்புளிக்குதுய்யா.

Virhush said...

6 nalla padalgalai pottirukkalam.kutti yanai superb

Virhush said...

superb siva

நாகை சிவா said...

தல, வந்ததுக்கு நன்றி...

//எங்க வீட்டுல கலாம் கையெழுத்து போட்டுக் கொடுத்த அக்னிச் சிறகுகள் இருக்கு. //
உங்க வீட்டு அட்ரஸ் கொஞ்சம் குடுங்க...:))))

//இளையராஜா//

டச் பண்ணிட்டியே சிவா. //
தனிமையில் துணை இருப்பவனை மறக்க முடியுமா...

//Same pinch.:( //
ஹி.... ஹி.....

//பாசத்தப் பாத்து கண்ணுக்குள்ள ஒரு சுனாமி கொப்புளிக்குதுய்யா. //
இன்னொரு சுனாமியா....... எஸ்கேப்.....

நாகை சிவா said...

நன்றி வண்ணத்துப்பூச்சி. முதல் வரவு நல்வரவாகட்டும்.

Syam said...

அது என்ன ரெண்டு நாள்.... உக்காந்து யோசிக்கனுமா...சரி சரி சீக்கிரம் எழுதுங்க அது என்னானு தெரியாம மன்டை நெளியுது.... :-)

நாகை சிவா said...

நம்பி ஆருரான் மணியன்! (பெரிய பெருங்க)
முதல் தடவையாக வருகை புரிந்தற்க்கு நன்றி. வலைப்பதிவில் மேலும் ஒரு மருத்துவர். ஆத்திகம் கவனிக்கவும்.
அந்த ஆறு பாட்டும் நல்ல பாட்டு தாங்க. ஒரு ஆறு தடவை கேட்டு பாருங்க...

நாகை சிவா said...

//அது என்ன ரெண்டு நாள்.... உக்காந்து யோசிக்கனுமா//
என்னது வர்கார்ந்து யோசிப்பதா... சங்கத்து சிங்கம் அப்பு. அப்படியே அருவி மாதிரி கொட்டும்.
அந்த பதிவ இரண்டு நாளுக்கு முன்னாடியே போட்டு இருக்க வேண்டியது. ப்ளாக்கர் ரோதனையால் விடுமுறை நாள் ஆன நாளை ப்ளாக்கரிடம் மல்லுக் கட்டலாம் என்று இருக்கின்றேன்.

//அது என்னானு தெரியாம மன்டை நெளியுது.... :-) //
பெரிதாக ஏதுவும் எண்ண வேண்டாம்.....

Thekkikattan|தெகா said...

சிவா,

//ஒரு தனியார் கோவில், ஒரு எஸ்டேட்குள்ள இருந்தது. பசுமையான இடங்கள், நான் போன சமயம் சாரல் மழை வேறு பெய்தது.//

அந்த தனியார் கோவில் வந்து இருக்கிற இடம் அக்காமலை, பாலாஜி சாமி இருக்கிறார் உள்ளே ;-)

//வால்பாறை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் இன்னும் மனிதர்க்களால் மாசுபடுத்த ஆரம்பிக்கவில்லை.//

அது என்ன அப்படி சொல்லிப் புட்டீங்க சிவா, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க பேருந்தில் போகும் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நிறையெ ட்டீ, காஃபி எஸ்டேட் பார்த்திருப்பீர்கள். அந்த இடங்கள் பூராவும் வருடம் 1800களுக்கு முன்னால் வெறும் காடுகள்தான். அது அப்படியே இருந்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருக்கும், நமது மாநிலத்தின் சீதோஷ்ண நிலை.

இப்பொழுது நாம் பார்க்கும் காட்டின் அளவு அவ்வாறு மொட்டையடிக்கப் பட்டதிலிருந்து ஒரு எச்சமே!

தெகா.

நாகை சிவா said...

ஆம் தெகா, பாலாஜி கோவில் தான். நன்றாக பராமரித்து இருந்தார்கள்.

//அந்த இடங்கள் பூராவும் வருடம் 1800களுக்கு முன்னால் வெறும் காடுகள்தான். அது அப்படியே இருந்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருக்கும், நமது மாநிலத்தின் சீதோஷ்ண நிலை.//
நினைக்கவே சந்தோஷமாக உள்ளது. நமக்கு அந்த கொடுப்பினை இல்லை.

நான் கூற வந்தது, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று சுற்றுலா பயணிகள் என்ற பெயரில் குப்பைகளையும், சாப்பிட்ட மிச்சங்களையும் போட்டு, இன்னபிற செய்களையும் செய்யும் மக்களால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் கேடு இன்னும் வால்பாறையில் தொடங்கவில்லை என்று கூற வந்தேன். (பொள்ளாச்சியை கூறவில்லை, அதுவும் இல்லாமல் நான் கூறுவது ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பு)

Thekkikattan|தெகா said...

நா. சிவா,

//சுற்றுப்புற சூழல் கேடு இன்னும் வால்பாறையில் தொடங்கவில்லை என்று கூற வந்தேன்.//

ஹும்... வால்பாறை ஒரு சட்டமன்ற தொகுதி தெரியுமா? குறைந்தபட்சம் 75 ஆயிரம் பேரவது அங்கு வசிக்கிறார்கள். அப்படியெனில் அங்கு ஏற்படும் மாசுபடுத்தலின் விகாரத்தை சற்றே எண்ணிப் பாருங்கள். 5 ஒயின் ஷாப்புகள், 150 மேலான வட்டிக்கடைகள் மற்றும் இன்னபிற...

இருப்பினும் மறுப்பதற்கில்லை, அது ஒரு மனசீகமான பிரதேசமென்பதில்...

Syam said...

நாங்களும் அதே சங்கந்தேன்..அது என்ன சிங்கமுனுட்டு புலி படத்த போட்டு இருகீகப்பு...

மனதின் ஓசை said...

என் ஆறு பதிவு.

http://manathinoosai.blogspot.com/2006/06/6.html