Friday, June 11, 2010

என்னமோ போ !

நீ எப்பொழுதுமே
கொஞ்சி கொஞ்சி
தான் பேசுவாய்யோ?
அல்லது நீ
பேசுவதே எனக்கு
கொஞ்சவது போல்
இருக்கிறதா?

*******

இன்செண்ட் காபியை போல்
இன்செண்ட் சிரிப்பும்
இன்செண்ட் அழுகையையும்
காதலியிடமும் / மனைவியிடமும்
மட்டுமே சாத்தியம்.

*******

உன்னுடன் கதைக்க போகும்
சில நிமிடங்களுக்காக
மொழியின் உட்கூறு வரை
சென்று வார்த்தைகளை
யோசித்து சேமித்து
வைக்கின்றேன் - ஆனால்
உன்னுடன் கதைக்க தொடங்கிய
சில நொடித் துளிகளிலே
மொழிகள் மறந்து - மெளனமே
மொழியாக மாறும்
மர்மம் என்னவோ?

*******

16 comments:

நாகை சிவா said...

இதுக்கான விதை இங்க இருந்து கிடைக்க பெற்றது ;)

http://vivasaayi.blogspot.com/2010/06/blog-post.html

Raz said...

enna machi... oree the romance mood pole :) kalakure...

Vidhya Chandrasekaran said...

சீசன் சேஞ் இல்ல. இப்படி ஜூரம் வந்தாப்ல புலம்பறது எல்லாம் சகஜம் தானாம்;)

கோபிநாத் said...

நடத்துய்யா....நடத்து ;))

சென்ஷி said...

கலக்குற புலி :))

சென்ஷி said...

//நீ எப்பொழுதுமேகொஞ்சி கொஞ்சி தான் பேசுவாய்யோ?அல்லது நீ பேசுவதே எனக்குகொஞ்சவது போல் இருக்கிறதா?/

இது ரொம்பப் பிடிச்சிருக்குது

மின்னுது மின்னல் said...

கல்யானம் ஆனதில் இருந்து ஒரு மார்க்கமாதான் இருக்கிங்க ::)

நாகை சிவா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

மூணுமே நல்லா இருக்கு

//இன்செண்ட் காபியை போல்இன்செண்ட் சிரிப்பும் இன்செண்ட் அழுகையையும் காதலியிடமும் / மனைவியிடமும்மட்டுமே சாத்தியம்.//

ஆனாக்கா இது ரொம்ப பிடிச்சு இருக்கு

ambi said...

ரிங் மாஸ்டர் கைல புலி சிக்கி பல்டி எல்லாம் போடுது போல. வெரி குட். :))

VELU.G said...

//இன்செண்ட் காபியை போல்
இன்செண்ட் சிரிப்பும்
இன்செண்ட் அழுகையையும்
காதலியிடமும் / மனைவியிடமும்
மட்டுமே சாத்தியம்.
//

உண்மைதாங்க

எல்லாம் ரசித்தேன்

நாகை சிவா said...

@ Raz - தலைப்பை பாத்தல ;)

@ வித்யா - வாஸ்தவமான பேச்சு :)

நாகை சிவா said...

@ கோபி !

//நடத்துய்யா....நடத்து ;)//


இது தான் உன்னோடு புது ஸ்லோகமா எல்லாத்துக்கு இதே கட் & பேஸ்ட் பண்ணுற ;)

நாகை சிவா said...

@ சென்ஷி - மரபு கவிஞனிடம் இருந்து பாராட்டா..... அவ்வ்வ்வ்வ் ;)

@ மின்னல் - :)))))

@ தா.பிரியா - நீங்களும் இன்செண்ட் தானோ ;)

நாகை சிவா said...

@ அம்பி - அய்யோடா! என்ன ஒரு ஆனந்தம் இப்படி ஒரு கமெண்ட் அடிப்பதில் ... நல்லா இருங்க...

@ வேலு - நன்றி :)

கவிதா | Kavitha said...

Pictures are quite relevant ! Particularly the last one.. superb ! and I could read your words out of it.

Siv.... உங்களுக்கு கவிதை எழுத தெரியும்னு தெரியும்..ஆனா இவ்வளவு நல்லா, மீனிங்ஃபுல்லா, டச்சிங் டச்சிங் கா கவிதை எழுத தெரியுமா? நம்பமுடியவில்லை.. ல்லை..ல்லை..

எழுத வைத்தவங்களுக்கு ஒரு ஸ்மைலி & தாங்ஸ் ஐயும் என் சார்பாக அனுப்பிடுங்க.. ..உங்களை இப்படி'யும் பார்க்க சந்தோஷமா இருக்கு ... :)

(Instant = இன்ஸ்டன்ட் -am I right?! )