Tuesday, June 19, 2007

உகாண்டா ஒரு பார்வை

உகாண்டா கிழக்கு ஆப்பிக்கா நாடுகளில் ஒன்று, முற்றிலும் நிலப்பரப்பால் கவரப்பட்ட குடியரசு நாடு.(Landlocked Republic). அந்நாட்டில் கிட்டதட்ட 20% நிலம் நீரால் சூழப்பட்டுள்ளது. அதனை சுற்றி இருக்கும் நாடுகள் கென்யா, சூடான், காங்கோ, தன்ஜானியா, ரூவாண்டா ஆகியவையாகும்.

1890 முன்பு வரை உகாண்டா நான்கு அரசு ராஜ்ஜியங்களாலும், பல குறு நில மன்னர்களாலும் ஆளப்பட்ட நாடு. 1890 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டது. 1962 ஆம் ஆண்டு சுகந்திரம் அடைந்தது.

ஆங்கிலம் மற்றும் லுகாண்டா(Luganda) மொழிகள் அந்நாட்டின் ஆட்சி மொழிகள் ஆகும். அனைவருக்கும் ஒரளவுக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கிறது. விளம்பர பலகைகள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு வரை உகாண்டா, ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடுகளில் ஒன்று ஆகும். கிட்டதட்ட வருடத்திற்கு 150,000 பயணிகள் பயணம் செய்து உள்ளார்கள். ஆனால் 1997 ஆம் ஆண்டில், பல வருடங்களாக நடைப்பெற்ற உள்நாட்டு பிரச்சனை காரணமாகவும், பிறகு கிட்டதட்ட 12 வருடங்கள் உள்நாட்டில் வளர்ச்சி பணிகள் செய்தும் வெறும் 4000 நபர்கள் வருடத்திறகு வந்து சென்ற சுற்றுலா பயணிகள் ஆவார்கள். இந்த தொய்வை சரிப்படுத்து பல இடங்களில் தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதித்தும், பாதுகாப்புகளை பலப்படுத்தியும் சுற்றுலாவை வளர்க்க அந்நாடு பெருமுயற்சி எடுத்து அதில் ஒரளவு வெற்றியும் அடைந்து வருகிறார்கள்.

உகாண்டாவில் வாகனங்கள் அனைத்தும் நம் நாட்டை போலவே இடது பக்கத்தில் தான் செல்கின்றது.

உகாண்டாவில் 1000 வகைகளுக்கும் மேலான பறவை வகைகள் உள்ளன, அது மட்டும் இல்லாமல் 1000 வகைகளுக்கு மேற்ப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளுக்கு இந்த நாடு தான் தாய்நாடு. மலை வாழ் கொரில்லாக்கள், அரிய வகை குரங்குகள் எல்லாம் மிக அதிகமாக காணப்படும் நாடுகளில் இதுவும் ஒன்று. இது போக கூட்ட கூட்டமாக சிங்கம், சிறுத்தை, யானை, ஒட்டகசிவிங்கி இன்னும் பல பல விலங்குகள் உள்ள நாடு. ஆப்பிரிக்க நாடுகளில் வேறு எங்கும் காண முடியாத பல உயிரனங்கள் காண கிடைக்கும் அற்புத நாடு இது.

ஆப்பரிக்க நாடுகளிலே மிக பெரிதான நல்ல நீர் ஏரியான விக்டோரியா ஏரி(Fresh Water Lake) இங்கு உள்ளது. மேலும் இது சரியாக இக்குவேட்ர்(Equator) மேல் அமைந்து உள்ளது. சில படகோட்டிகள் உங்களுக்கும் மிக சரியான இடத்தை காட்டுவார்கள். ஜி.பி.எஸ்.(GPS) இருந்தால் சரி பார்த்து கொள்ளலாம்.

விக்டோரியா ஏரியின் சில பகுதிகளில் நீர் யானைகளை காண முடியும். ஒரே நேரத்தில் 60 கிலோ புல்லை உட்கொள்ளும் திறமை வாய்ந்தது நீர் யானை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

"சர்ச்சில்" அவர்களால் ஆப்பிரிக்காவின் முத்து(Pearl of Africa) என்ற அடைமொழியால் அழைக்க பெற்ற நாடு உகாண்டா.

இங்கு வாழும் மக்களில் மூன்றில் இரண்டு சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். ரோ.க - 33 %, போரோ - 33 %, 16 % மூஸ்லிம் மீதம் உள்ள 18 % பிற மதத்தவர்கள் அல்லது சொந்த நம்பிக்கை உடையவர்கள்(Indigenous Beliefs).(புள்ளி விபரங்கள் சிறிது முன் பின் இருக்கலாம்). உலகில் ஏழே இடங்களில் இருக்கும் பஹாய் சமய வழிப்பாடு தளங்களில் ஒன்று உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் அமைந்து உள்ளது.

உகாண்டாவின் முக்கிய உணவு என்று பார்த்தால் மெதுவான ஸ்கரட்ச்யில் பீன்ஸ் மற்றும் மாமிசம் வைத்து தருவார்கள். பெரும்பாலும் மாட்டு கறி, ஆட்டுக்கறி(Goat) மற்றும் மட்டன்(Sheep). பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளும் இங்கு கிடைக்கும். எல்லா இடத்திலும் பியர் கிடைக்கும். அனைவரும் விரும்பி குடிப்பது பியர் தான். POMBE என்று வாழைக்காயை வைத்து செய்யப்படும் பியரும், WARAGI என்று மில்லட்(Millet) கொண்டு செய்யப்படும் சாராயமும் இந்த நாட்டின் பாரம்பரிய பானம் ஆகும்.இது போக அனைத்து வகையான வெளிநாட்டு பானங்களும் கிடைக்கும்.

உகாண்டாவின் கரண்ஸி உகாண்டா ஸெலிங் ஆகும் (Uganda Shilling - USH). அமெரிக்க டாலர்கள் எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும், பல இடங்களில் யூரோ மற்றும் பவுண்டும் வாங்கப்படும். ஆனால் அந்நாட்டு பணமாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. நான் போய் இருந்த போது ஒரு டாலருக்கு 1650 உ.ஸெலிங் தந்தார்கள். விமான நிலையத்திலே மாற்றிக் கொளவது நல்லது. மற்ற இடங்களில் குறைந்த அளவே தருகின்றார்கள். 2000 ஆண்டிற்கு முன் உள்ள டாலர்களுக்கு 1400 ஸெலிங் தான் தருகின்றார்கள். அதனால் சற்று கவனமாக இருப்பது நலம்.

50 comments:

விழியன் said...

நல்ல பதிவு சிவா.

சமீபத்தில் ஒரு உகாண்டா நாட்டு திரைப்படம் காண நேரிட்டது."The last king of Scotland".

அதில் உகாண்டா பற்றி நிறைய குறிப்புகள் இருக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவுப்பா.. அடுத்து சூடானைப் பத்தியும் இதே போல வருமா? (ஒவ்வொண்ணா, எல்லா ஆப்பிரிக்க நாடுகளையும் பத்தி எழுதினாலும் நல்லாத்தான் இருக்கும் ;) )

நாகை சிவா said...

நன்றி விழியன்.. இந்த பதிவு போட்டதற்கு காரணமே உகாண்டாவிற்கு போனேன் என்று சொன்னாலே உகாண்டாவிற்கா என்ற ஆச்சரிய கேள்வி எழுப்புகிறார்கள். அதை மறுக்கும் வகையில் இந்த தொடர் இருக்கும்... இன்னும் இரண்டு பதிவுகள் வரலாம் உகாண்டாவை பற்றி...

நீங்கள் கூறிய திரைப்படத்தை இன்னும் காணவில்லை. கண்டிப்பாக காண முயற்சிக்கின்றேன்

நாகை சிவா said...

//நல்ல பதிவுப்பா.. அடுத்து சூடானைப் பத்தியும் இதே போல வருமா? //

சூடானை பற்றி நல்லவிதமாக எழுத ஏதும் எனக்கு இது வரை தோன்றவில்லை. சில நாள் கழித்து சூடானை பற்றி விரிவாக பதிவுகள் வரலாம். எல்லா ஆப்பரிக்க நாடுகளுமா... வாய்ப்பு கிடைத்தால் அதாவது நான் போக நேர்ந்தால் போட்டு விடலாம் பொன்ஸ்

Anonymous said...

:D
wow...நல்ல பதிவு சிவா.

CVR said...

சூப்பரு தல!!
நிறைய தகவலகளை தந்து இருக்கீங்க!!

அதே போல அங்கே நடந்த உங்களின் அனுபவங்களையும் தொடராக எழுதினால் நன்றாக இருக்கும்!!! :-)

வாழ்த்துக்கள்!!

பி.கி:இதை சற்றுமுன் போட்டிக்கு அனுப்பலாமே!! :-)

நாகை சிவா said...

நன்றி துர்கா..

@சிவிஆர் - என் அனுபவங்கள் கண்டிப்பாக வரும் கூடவே அங்கு காண வேண்டிய இடங்களுடன் சேர்த்து...

சற்றுமுன் போட்டி செய்தி விமர்சனம் போட்டி தானே... இதை ஏற்றுக் கொள்வார்களா?

Ayyanar Viswanath said...

நல்ல பதிவு புலி

ஆப்பிரிக்க படங்களா சமீபமா பாத்து தள்ளினதுல தனி பாசம் வந்திடுச்சி.. ஒரு விசிட் அடிக்கவும் எண்ணம்..ஊர்பக்கம் வந்திடாதே நான் வரும் வரை கொஞ்ச நாள் அங்கயே இரு புலி :)

வல்லிசிம்ஹன் said...

நல்லா பொறுமையா எழுதி இருக்கீங்க சிவா.
இந்தப் பேரைக்கேட்டாலே கலவரம்தான் நினைவு வருகிறது. இப்போது குற்றங்கள் ரேட் குறைந்துவிட்டதா.

மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா.?

கோவி.கண்ணன் said...

பல்சுவை செய்திகள்.

எந்த நாட்டு 'குடி'மகன்களாக இருந்தாலும் திளைக்கலாம் போலிருக்கிறதே ?

:)

உண்மைத்தமிழன் said...

பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி சிவா.. தொடரட்டும் உங்களது பயணக் கட்டுரைகள்..

ulagam sutrum valibi said...

அன்பு சிவா,
அருமையான செய்தியை வழங்கி இருக்கிறீர்கள்.தொடரும் உங்கள் பயண கட்டுரையையும், அனுபவத்தையும் அவலுடன் எதிர் பார்கிறேன்.

MSATHIA said...

அருமையான பதிவு.

இலவசக்கொத்தனார் said...

ஒரு பார்வை பார்த்தாச்சுங்க. அப்புறமா படிக்கிறேன். ;-)

Arunkumar said...

siva, uganda pathi first time padikkiren. interesting news and nice write-up. Thx.

கதிர் said...

புலி,

நல்லா எழுதி இருக்க!

மேன்மேலும் இதேபோல கட்டுரைகள் எழுதணும்.
அப்புறம் கென்யா பத்தி எழுது. நானும் அடர்கானகபுலியும் அங்க வர்றோம்.

நான் சுத்தி பாக்கணும்னு நினைச்ச ஒரே இடம் அதான்.

உங்கள் நண்பன்(சரா) said...

"ஏதோ சொல்லி இருக்கிறேன்"னு நல்ல பல விசயங்கள் சொல்லி இருக்க சிவா! பகிர்ந்தமைக்கு நன்றி!

ஆஹா ஒரு குரூப்பா கெளம்ப இருக்காய்ங்க பாத்துக்க, அந்த AVM கைக்கட்டு புகழ் தம்பி, அப்புறம் நம்ம அடர்கானக கவிஜ புகழ் அய்யனார் எல்லாம் வர்ராங்களாம், புலி ஜாக்கிரதை!

எல்லாம் சொன்ன, புலிக்கால் சூப்பு கிடைக்குமா? அத சொல்லாம விட்டுட்டியே சிவா?

தொடர்ந்து எழுதவும் , குறிப்பாக உனது சூடான் பற்றிய பதிவு ...

அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

//நல்ல பதிவு புலி//

நன்றி அய்யன்ஸ்

//ஆப்பிரிக்க படங்களா சமீபமா பாத்து தள்ளினதுல தனி பாசம் வந்திடுச்சி.. //

எது மேலய்யா?

//ஒரு விசிட் அடிக்கவும் எண்ணம்..ஊர்பக்கம் வந்திடாதே நான் வரும் வரை கொஞ்ச நாள் அங்கயே இரு புலி :) //

உத்தரவு எஜமான்

நாகை சிவா said...

//நல்ல எழுதியிருக்கீங்க சிவா. பல தகவல்கள் எனக்கு புதியது. தொடர்ந்து எழுதுங்கள்:) //

சொல்லிட்டீங்கள வேதா, எழுதிடுவோம்.. எனக்கே பல விசயங்கள் புதுசு தாங்க... எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் போனதால் நல்லா அனுபவிக்க முடிந்ததது உகாண்டாவை.

நாகை சிவா said...

//நல்லா பொறுமையா எழுதி இருக்கீங்க சிவா.//

நன்றி!!!

//இந்தப் பேரைக்கேட்டாலே கலவரம்தான் நினைவு வருகிறது. //

நம்ம போயிட்டு வந்த பிறகு தான் கலவரமே ஆரம்பித்தது ;-)

//இப்போது குற்றங்கள் ரேட் குறைந்துவிட்டதா//

ஆப்பரிக்கா நாடுகளில் குற்றங்களுக்கு குறைவா என்ன?

//மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா.? //

ஒன்னும் பிரச்சனை இல்லங்க... நல்லா ப்ரீயாவே இருக்காங்க மக்கள்

நாகை சிவா said...

//பல்சுவை செய்திகள்.
எந்த நாட்டு 'குடி'மகன்களாக இருந்தாலும் திளைக்கலாம் போலிருக்கிறதே ?//

நாட்டு குடிமகன்கள் குடியும் குடித்தனமுமாக இருக்காங்க கண்ணன் ;-)

மயிலாடுதுறை சிவா said...

நல்ல தகவல்கள் உள்ள பதிவு.
சிவாவிற்கு பாராட்டுகள்.

"The LastKing of Scotland" அவசியம் பார்க்க வேண்டும்.

மயிலாடுதுறை சிவா...

தென்றல் said...

சிவா,

உகாண்டாவின் 'மற்றொரு பக்கத்தையும்' சொன்னதற்கு நன்றி!

இப்பொழுது சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா?

ILA (a) இளா said...

நல்ல பதிவு சிவா. ஒரு பயணக்கட்டுரை மாதிரி எழுதுனீங்கன்னா நல்லா இருக்குமே.

"அதாண்டா இதாண்டா,
புலி போனாரு உகாண்டா"

Santhosh said...

புலி நல்ல பயனுள்ள தகவல்,
//2000 ஆண்டிற்கு முன் உள்ள டாலர்களுக்கு 1400 ஸெலிங் தான் தருகின்றார்கள்//
இது புரியவில்லை. டாலர் என்றாலே ஒண்ணு தானே அது என்ன 2000 ஆண்டுக்கு முந்தியது அதுக்கு பிந்தியது அப்படின்னு?

நாகை சிவா said...

முதலில் பங்காளிக்கு....

பங்கு... 2000ம் ஆண்டிற்கு முன்பு வெளியீடப்பட்ட டாலர்களுக்கு மதிப்பு கம்மியாம், இது சில மாதங்களாக இங்கு இது ஒரு பெரிய விசயமாக இருக்குது. சூடானில் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள், சில இடங்களில் டாலர் வாங்க மறுக்கின்றார்கள். வங்கிகளில் பிரச்சனை இல்லை.

ஆனால் உகாண்டாவில் 2000 ஆண்டிற்கு முந்தைய டாலர்கள் எல்லாத்துக்கு குறைக்கப்பட்ட மதிப்பு தான் வழங்கப்படுகிறது.

நாகை சிவா said...

//நல்ல பதிவு சிவா. ஒரு பயணக்கட்டுரை மாதிரி எழுதுனீங்கன்னா நல்லா இருக்குமே.//

அது மாதிரி தான் எழுத போறேன் இளா, அதான் அதுக்கு முன்னால் உகாண்டாவை பற்றி ஒரு முன்னோட்டம்.

//"அதாண்டா இதாண்டா,
புலி போனாரு உகாண்டா" //

எங்கு நோக்கிலும் சிவா ஜி யின் நாயகனின் ஜுரம் தானா?

நாகை சிவா said...

//சிவா,
உகாண்டாவின் 'மற்றொரு பக்கத்தையும்' சொன்னதற்கு நன்றி!//

இன்னும் இருக்கு தென்றல், அனைத்தும் நல்ல பக்கம் தான்.

//இப்பொழுது சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? //

ரொம்பவே... நல்ல விசயம் தான். மக்களும் நல்ல மரியாதை தருகின்றார்கள்.

நாகை சிவா said...

//நல்ல தகவல்கள் உள்ள பதிவு.
சிவாவிற்கு பாராட்டுகள்.

"The LastKing of Scotland" அவசியம் பார்க்க வேண்டும்.

மயிலாடுதுறை சிவா... //

வாங்க மாயவரம் சிவா....

கண்டிப்பாக அந்த படம் காண்கிறேன்...

நாகை சிவா said...

//ஆஹா ஒரு குரூப்பா கெளம்ப இருக்காய்ங்க பாத்துக்க, அந்த AVM கைக்கட்டு புகழ் தம்பி, அப்புறம் நம்ம அடர்கானக கவிஜ புகழ் அய்யனார் எல்லாம் வர்ராங்களாம், புலி ஜாக்கிரதை!//

வரட்டும் வரட்டும்.... ஒரு வழி பண்ணிடுவோம்....

//எல்லாம் சொன்ன, புலிக்கால் சூப்பு கிடைக்குமா? அத சொல்லாம விட்டுட்டியே சிவா?//

என்னய்யா ஆளு நீ... நாங்க மனுசக் கால் சூப் கிடைக்குமா விசாரிச்சோம்... நீ என்னான இன்னும் புலிக்கால்லே இருக்க...

நாகை சிவா said...

//புலி,
நல்லா எழுதி இருக்க!
மேன்மேலும் இதேபோல கட்டுரைகள் எழுதணும்.//

நன்றிங்க தம்பிண்ணன்.

//அப்புறம் கென்யா பத்தி எழுது.//

அங்க போகனும் என்பது என் ஆசையும் கூட.. சபாரி போகனும்... போயிட்டு வந்து விரைவில் எழுதுறேன்.

// நானும் அடர்கானகபுலியும் அங்க வர்றோம்.
நான் சுத்தி பாக்கணும்னு நினைச்ச ஒரே இடம் அதான். //

இதுக்கு ஏதும் தனிப்பட்ட அல்லது குடும்பத்தற்கு உட்பட்ட காரணம் ஏதும் உள்ளாதா அண்ணன்....

ALIF AHAMED said...

சிவாஜி பாத்தாச்சா

சிவாஜி டவுன் லோட் லிங்க் வேண்டுமெனில் தனி மெயிலிடவும்...:)

துளசி கோபால் said...

அருமையா ஆரம்பம் சிவா.

இப்படி நாடுகளைப் பத்தித் தெரிஞ்சுக்கறது ரொம்ப சுவாரசியமாது.

இன்னும் விளக்கமா ஒரு தொடரா எழுதுங்க.

வாழ்த்து(க்)கள்.

Geetha Sambasivam said...

"உகாண்டா-ஒரு மாதிரிப் பார்வை" என்றில்லை கேள்விப்பட்டேன். இது வேறே மாதிரியா இருக்கே! :P

Geetha Sambasivam said...

நல்ல பயனுள்ள செய்திகள் புலி, தொடருங்கள். நல்லா எல்லா விஷயத்தையும் "கவர்" பண்ணி எழுதுங்க. வாழ்த்துக்கள்.

Unknown said...

//2000 ஆண்டிற்கு முன் உள்ள டாலர்களுக்கு 1400 ஸெலிங் தான் தருகின்றார்கள். //

இதென்ன கூத்து? ஏன் அப்படி என்று தெரியுமா சிவா?

அபி அப்பா said...

புலி சாரே! நல்ல விஷயகார பதிவு!!

தம்பி/அய்ஸ் என்னய்யா என்னய விட்டுட்டு நீங்க மாத்திரம் போக விட்டுடுவனா? நானும் வருவேன்!

manipayal said...

அருமையான பதிவு சிவா, கலக்கிடீங்க. நாளை சென்னை பயணம்.22ஆம் தேதி பிறந்த நாள் அன்று பிறந்த மண்ணிலே இறங்குகிறேன். bye,bye

கவிதா | Kavitha said...

சிவா, ரொம்ப நல்ல பதிவு, நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்க முடிஞ்சிது... இப்படி நிறைய எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறோம் (அணிலும் சேர்ந்து தான்).அருமையான பதிவிற்கு நன்றி.

ACE !! said...

அருமையான பதிவு சிவா.. வாழ்த்துக்கள்..

சமீபத்தில் (2002??) இறந்த சர்வாதிகாரி இடி அமீன் உகாண்டா தானே?? அவனால் தான் உகாண்டாவின் பொருளாதாரம் வீழ்ந்தது என்று படித்த ஞாபகம்.. மற்றும் நர மாமிசம் உண்டு அதை பற்றி தன்னுடைய சுய சரிதையில் எழுதியதாகவும் படித்த ஞாபகம்..

ACE !! said...

இந்த கட்டுரை தொடருமா?? (உங்க மத்த புகைப்படங்களையும் வெளியிடுங்க)

N Suresh said...

அன்பிற்கினிய சிவா,

நல்ல பதிவு. நீங்கள் உகாண்டாவிற்கு சென்ற விவரத்தை கடைசி வரிகளில் சொல்லியிருப்பது இந்த கட்டுரையின் ஒரு சிறப்பு என்று நினைக்கிறேன். இன்னமும் புகைப்படங்கள் மற்றும் அந்நாட்டைச் சார்ந்த விஷயங்களை எழுதுவும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
என் சுரேஷ்

Geetha Sambasivam said...

எட்டிப் பார்த்துவிட்டுப் போங்க, எட்டு எழுத கைக்கு எட்டின உங்களை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டிருக்கேன். :)))))))))

நாகை சிவா said...

//எட்டிப் பார்த்துவிட்டுப் போங்க, எட்டு எழுத கைக்கு எட்டின உங்களை எட்டிப் பார்த்துக் கூப்பிட்டிருக்கேன். :))))))))) //

எட்டி பார்த்து விட்டு நானும் ஒரு எட்டு போட்டு விட்டேன்... அழைத்தற்கு நன்றிங்கோ...

நாகை சிவா said...

//நல்ல பதிவு. நீங்கள் உகாண்டாவிற்கு சென்ற விவரத்தை கடைசி வரிகளில் சொல்லியிருப்பது இந்த கட்டுரையின் ஒரு சிறப்பு என்று நினைக்கிறேன். இன்னமும் புகைப்படங்கள் மற்றும் அந்நாட்டைச் சார்ந்த விஷயங்களை எழுதுவும்.//

நன்றி சுரேஷ்... இந்த உகாண்டா பதிவு தொடர்ந்து வரும்.. அதற்கு முன்பு இரு பதிவுகள் உள்ளது, ஒன்னு போட்டாச்சு இன்னும் ஒன்னு இருக்கு... அதன் பிறகு அடுத்த உகாண்டா பதிவு, புகைப்படத்துடன் வரும்

நாகை சிவா said...

//இந்த கட்டுரை தொடருமா?? (உங்க மத்த புகைப்படங்களையும் வெளியிடுங்க) //

கண்ணி வெடி மாதிரி நிக்காது ஏஸ். கண்டிப்பாக தொடரும், புகைப்படத்துடன்...

நாகை சிவா said...

//சமீபத்தில் (2002??) இறந்த சர்வாதிகாரி இடி அமீன் உகாண்டா தானே?? அவனால் தான் உகாண்டாவின் பொருளாதாரம் வீழ்ந்தது என்று படித்த ஞாபகம்.. மற்றும் நர மாமிசம் உண்டு அதை பற்றி தன்னுடைய சுய சரிதையில் எழுதியதாகவும் படித்த ஞாபகம்.. //

உண்மை தான் ஏஸ்... உகாண்டாவின் வீழ்ச்சிக்கு இடி அமீன் ஒரு முக்கிய காரணம்... ஆப்பிரிக்க நாடுகளின் சாபமும் கூட... நர மாமிசம் உண்மையான விசயம் தான்.

நாகை சிவா said...

//சிவா, ரொம்ப நல்ல பதிவு, நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்க முடிஞ்சிது... இப்படி நிறைய எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறோம் (அணிலும் சேர்ந்து தான்).அருமையான பதிவிற்கு நன்றி. //

நன்றி கவிதா. எழுத முயல்கிறேன்... நீங்கள் எல்லாம் கொடுக்கும் ஒரு ஊக்கமும் முக்கிய காரணம்... அணில் எப்படி இருக்க.... நம்மள கண்டப்படி கலாய்ச்சு கவிதா பதிவு போட்டு இருக்காங்களே.. என்ன இது... நீ இந்நேரம் ரவுண்ட கட்டி அவங்கள கவனிச்சு இருந்தா உன்னைய பெரிசா நினைச்சு இருப்பேன், ஆனா நீயும் சைலண்டா இருந்துட்டீயே...

நாகை சிவா said...

//அருமையான பதிவு சிவா, கலக்கிடீங்க. நாளை சென்னை பயணம்.22ஆம் தேதி பிறந்த நாள் அன்று பிறந்த மண்ணிலே இறங்குகிறேன். bye,bye //

மணி... நன்றி.. உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Philip Xavier said...

Mukiyamaana comment onna vittutingaleeee :-)