Monday, May 14, 2007

ஏன் இந்த வயிற்றெரிச்சல்!

யப்பா, இங்கிலாந்துல டோனி பிளேர்னு ஒரு பிரதமர் தன் பதவியில் இருந்து ஒய்வு பெற போகிறேன் என்று அறிவித்து விட்டாராம். அதுக்கு அந்த நாட்டில் கூட இம்புட்டு கலவரம் இருக்காது, ஆனா நம்ம நாட்டுல என்னமா சவுண்ட் விடுறாங்கப்பா நம் மக்கள். டோனி பிளேயர் நமக்கு தரும் பாடங்கள்னு ஒருத்தர் வயிற்றெரிச்சல் பதிவு போடுறார். இன்னும் ஒருத்தர் அநியாயத்துக்கு பொங்கி பிளேர் நீ எல்லாம் அரசியவாதியானு ஒரு பதிவு போடுறார். என்னங்கப்பா ஆச்சு, ஏன் இந்த ஆர்பாட்டம். இது போல் நம் நாட்டில் நடக்கும் காலம் என்னாளோ அப்படிங்குற புலம்பல் எல்லாம் எதுக்கு என்பது தான் என் கேள்வியே?

அப்படியே நம் நாட்டில் ஒருத்தர் போறேன் என்று சொல்லி விட்டால் நாம் போக விட்டு விடுவோமா சொல்லுங்க.

அதுவும் அப்படியே போறார் என்றாலும் அவர் குடும்பத்தில் இருந்து தான் அவருக்கு மாற்று அல்லது துணைக்கு வர வேண்டும் என்ற உரிமையை வலுக்கட்டாயமாக தந்தவர்கள் நாம்.

இந்திரா இருக்கும் போது சஞ்சயை உள்ளே இழத்தோம். இந்திரா போன பிறகு இந்திய தேசத்தை ராஜீவ் தவிர வேற யாருலாம் காப்பாற்ற முடியாது என்று எடுத்து சொல்லி அவரை கொண்டு வந்தோம். அவரும் போன பிறகு வரவே மாட்டேன் என அடம் பிடித்த சோனியாவிடம் கெஞ்சி கதறி இத்தாலியின் புதல்வியே உன் புகுந்த வீடனான இந்தியாயின் ஒரே பாராம்பரிய கட்சியை உன்னை தவிர வேற யாராலும் காப்பாற்ற முடியாது, உன் சேவை அக்கட்சிக்கும், இந்நாட்டுக்கு தேவை அவரையும் இழுத்து பின் ராகுல், அவ்வப்போது பிரியங்காவை இழுக்க முயற்சி செய்து, இன்னும் சில நாட்கள் கழித்து பிரியாங்காவின் குழந்தையையும் கட்சிக்கு கொண்டு வந்து சிறுவர் அணி அமைக்க முயற்சி செய்தாலும் செய்வோம்.

இன்னொரு கட்சியை எடுத்தால் வாஜ்பாய், அத்வானியை விட்டால் கட்சியே இல்லை என்று கூறி இன்னும் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறது. இருக்கிற மூட்டு வலியை கூட கவனிக்க நேரம் இல்லாமல் ஒட்டு சேகரிக்க போய்க்கிட்டு இருக்கிறார் வாஜ்பாய். அவரு வந்தா தான் சில ஒட்டாவது போடுவோம் என்று கூறியவர்கள் நாம்.

அட அத அங்க விடுங்கப்பா, இங்குட்டு வருவோம், அ.தி.மு.க. விட்டு விடுவோம், அது ஒரு அரசியல் கட்சி என்ற கோட்பாட்டுக்கே பல சமயத்தில் வராத கட்சி அது, அது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் போல தான் நடந்துக் கொண்டு இருக்கு.

பா.ம.க வை எடுத்துக்கிட்டால் தன் குடும்பத்தார் யாரும் பதவிக்கு வர மாட்டார்கள் என்று கூறிய கொள்கை வேந்தன் அய்யா ராம்தாஸ் அவர்களை தொல்லை பண்ணி, பாட்டாளிகள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறி தேர்தலில் போட்டியிடா விட்டாலும் உங்கள் மகன் தான் மத்திய மந்திரி பதவியை ஏற்க வேண்டும், இல்லாவிட்டால் பாட்டாளிகள் வர்க்கம் உச்ச ஆணியில் ஏறவே முடியாது என்று சொல்லி அண்புமணியை பதவி ஏற்க வைத்து அவர் கொள்கைக்கே உல வைத்தோம்.

தி.மு.க. - இந்த கட்சி, டோனி ப்ளேர் எல்லாம் ஜுஜூப்பி என ஆக்க வைத்த கட்சி. எனக்கு தெரிந்த வரை 1977 கட்சி தலைவர் பதவி அப்பாலிக்கா, 1993 ம் ஆண்டே அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன் என கூறிய தியாக செம்மலின் வார்த்தைகளை கேட்டு நாம் எல்லாம் கண்ணீர் விட்டு கதறி அழுது அவரை சமாதனப்படுத்தினோம். 2001 ல இது தான் என் கடைசி தேர்தல் என்ற சொன்னவரை செய்றகுழு, பொது குழு எல்லாம் போட்டு கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் கூறி 2006ல் தேர்தலிலும் நிற்க வைத்து அவரை முதல்வர் ஆக்கி அழகு பார்த்தோம். அது போல மாறன் என்ற ராஜதந்திர இடத்தை நிரப்ப அவரின் வாரிசால் மட்டுமே முடியும் என்று முடிவு எடுத்து வழுக்கட்டாயமாக தயாநிதி மாறனை அரசியலுக்கு இழுத்து மத்திய மந்திரி ஆக்கினோம். (ரத்த பாசமா, சொந்த பாசமா என்ற பந்தயத்தில் ரத்தம் தான் ஜெயித்தது வேற கதைங்கோ)

சரி அடுத்து கட்சியை திறமையான வாரிசிடம் ஒப்படைக்கலாம் என்று இருக்கும் போது கேவலம் ஒரு சர்வேயை காட்டி, நாமே வழியக்க போய் கொடுத்து அழகு பார்த்த மந்திரி பதவியை பிடுங்க வைத்து விட்டோம். அதை அவரின் மகளிர் வாரிசுக்கு கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என நேற்று என்னுடன் சாட்டிய ஒரு நல்லவன் கூறினான், அவன் கூறிய காரணம் நாம் என்றுமே ரத்த சொந்ததுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னான், நல்ல விசயம் விரைவில் அதை செய்து அழகு பார்க்க வேண்டும்.

இதில் இருந்து என்ன தெரியுது, நம் தலைவர்களின் விரும்பம் இல்லாமல் தான் இது போன்ற முள் கீரிடங்களை சுமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை அந்த கீரிடத்தை கழட்டவோ அல்லது கழுட்டிய கீரிடத்தை அவர்கள் குடும்பத்தை தவிர வேற யாருக்கும் போக விடாமல் தடுத்துக் கொண்டு, யாரரோ ஒரு டோனி பிளேர் செய்து புட்டார், அது போல் இங்கு நடக்குமா என்று நீலிக் கண்ணீர் வடிப்பது நியாயமாகுமா?

நம் நாட்டில் ஜோதி பாசு என்ற முன்னாள் முதல்வர் பதவி போதும் என்று போனாரே, அவரை உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ( கண்ணுக்கு தெரிந்து அவர் ஒருத்தர் தான் இருக்கார், அட அவரும் பிரதமர் பதவிக்காக விட்டாரா, சே அப்படி எல்லாம் இல்லப்பா, பதவிக்கு ஆசைப்படாதவர்கள் கம்யூனிஸ்ட்க்கள், என்ன வேணாம்னு சொல்லுறீயா, சரி விடு)

இப்ப கலாம் தனக்கு மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று சொல்லுறார். விடுறோமா நாம், இல்ல இல்ல அவர் தான் மீண்டும் ஒரு முறை வர வேண்டும் என அரசியல்வாதிகள் தவிர அம்புட்டு ஜனம் சேர்ந்து கூக்குரல் எழுப்பிக்கிட்டு இருக்கோம். ஏன்னா அவரை விட்டா வேற ஒரு நல்லவர், வல்லவர் கிடைக்க மாட்டார்ல. அதனால் அவர ஒத்துக்க வைக்க பாப்போம், மசியலை என்றால் கலாம் குடும்பத்தில் இருந்து அவர் மாமனையோ, மச்சானையோ பிடிச்சு ஜனாதிபதி ஆக்கி நம் பற்றை நிருப்பிப்போம். என்ன நான் சொல்லுறது?

என்னய்யா பிரச்சனை, எங்கய்யா பிரச்சனை நம்மக்கிட்ட ஒருவருக்கு மாற்று நம்மாள கண்டுப்பிடிக்க முடியவே முடியாது. நாம் ஒரு கம்பெனியில் வேலை பாக்குறோம், நாம் வேற வேலைக்கு போய் விடுகிறோம், அதுக்காக அந்த கம்பெனி கண்ணீர் விட்டு கதறுகின்றதா, இல்ல உங்க வீட்டில் இருந்து வேற யாரையாவது இங்கு வேலைக்கு அமர்த்தி விட்டு நீங்க போங்கள் என்று சொல்கிறாதா? முதலில் போகாத, இம்புட்டு தரேன், அம்புட்டு தரேன் சொல்லும், மசிஞ்சா பாக்கும் அப்பாலிக்கா சரி தான் போடா னு அடுத்த ஆளை போட்டு அது பாட்டுக்கு வேலை யை பாத்துக்கிட்டு இருக்கும். அது போல நாம் என்று கண்ணீர் விட்டு கதறுவதை நிறுத்துகிறோமோ அன்று தான் உருப்புடுவோம்.

டிஸ்கி (கண்டிப்பா போடனுமாம்)

1, நான் இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போட்ட தமிழன்(அதுவும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தான்)

2, இது ஏசி அறையில் இருந்து எழுதப்பட்டது இல்லை. (வூட்ல ஏசி இல்லப்பா)

3, சூடானில் வர்கார்ந்துக்கிட்டு "வெட்டி" நியாயம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது இல்லை.

4, ப்ளயர் செய்தை எல்லாம் நம் நாட்டில் இருப்பவர்கள் எல்லாரும் செய்ய வேண்டும் என வயிற்றெரிச்சல் பிடித்த பதிவர்கள் எழுதிய பதிவை படித்தால் எழுதப்பட்ட நெஞ்சரிச்சல் பதிவு இது.

53 comments:

கோவி.கண்ணன் said...

//இதில் இருந்து என்ன தெரியுது, நம் தலைவர்களின் விரும்பம் இல்லாமல் தான் இது போன்ற முள் கீரிடங்களை சுமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.//

:)))

சூடானிலிருந்து சூடான பதிவு எழுதி இருக்கிங்க... இன்னிக்கு ஹிட் ஆகிடும் விடியறத்துக்குள்ள !
:))

Syam said...

அட்றா சக்கை...பங்கு இம்புட்டு சின்ன வயசுல உனக்கும் எப்புட்டு அறிவு...நல்லாத்தான் உக்காந்து யோசிச்சு இருக்க...:-)

Syam said...

எது எப்படியோ மாறன் & பிரதர்ஸ் சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்டாய்ங்க...ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாதுனு இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டா சரி...இது அவங்களுக்கு மட்டும் இல்ல எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தான்.....

Syam said...

ஒருத்தனும் உருப்படியா இல்ல...பேசாம நம்ம ஜெயிச்சு ஆட்சிய புடிச்சரலாம்...தேர்தல் வாக்குறுதியா தண்ணி பஞ்சத்த போக்க ஒரு ஒரு வீட்டுக்கும் இலவச நயாகரா நீர்வீழ்ச்சி குடுக்கறோம்னு அறிவிச்சுடலாம்....:-)

மின்னுது மின்னல் said...

//
தண்ணி பஞ்சத்த போக்க ஒரு ஒரு வீட்டுக்கும் இலவச நயாகரா நீர்வீழ்ச்சி குடுக்கறோம்னு அறிவிச்சுடலாம்....:-)
//

நயாகரா நீர்வீழ்ச்சி எல்லாம் வேணாம்
நயந்தாரா வந்தா சோறு தண்ணியே வேணாமுனு ஒரு குருப்பு திரியுது

Syam said...

//நான் இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போட்ட தமிழன்(அதுவும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தான்)
//

நானும்....:-)

இராமநாதன் said...

அட புலி,
பாரு இந்த ஆங்கிள் தோணவேயில்ல.. நாம இல்ல எல்லாரையும் கட்டி இழுத்து வந்து பதவிய எடுத்துக்கோ எடுத்துக்கோனு திணிக்கிறோம்.. தல/லிகளச் சொல்லிக் குத்தமில்லதான்....

தேர்தல் கமிஷ்னர் said...

//
Syam said...
அட்றா சக்கை...பங்கு இம்புட்டு சின்ன வயசுல உனக்கும் எப்புட்டு அறிவு...
///


1, நான் இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போட்ட தமிழன்(அதுவும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தான்)
///சின்ன வயசிலேயே கள்ள ஓட்டு போட்டியா...??

Anonymous said...

சூடான் நாட்டின் தங்க புலியின் வீர உறுமல் சிங்கை வரையிலும் கேட்கின்றது.

7 UP said...

//
வயிற்றெரிச்சல் பிடித்த பதிவர்கள் எழுதிய பதிவை படித்தால் எழுதப்பட்ட நெஞ்சரிச்சல் பதிவு இது.
///


சோடாவுல உப்பு போட்டு குடி

அதிமுக.& திமுக கூட்டனி said...

//
Syam said...
//நான் இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போட்ட தமிழன்(அதுவும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தான்)
//

நானும்....:-)
///


கையில மை எங்க...?

நீங்கள் எங்களுக்குதான் ஓட்டு போட்டனு நாங்க எப்டி நம்புறது ஓட்டு சீட்ட காமி

Mr.x

புளி (புலியல்ல) said...

///
Syam said...
//நான் இதுவரை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஒட்டு போட்ட தமிழன்(அதுவும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தான்)
//

நானும்....:-)
///


பங்கு என் இனம்டா நீ


mr x

சிங்கம்லே ACE !! said...

என்ன கண்ணீர் விட்டு கதறரதோட நிறுத்திட்டீங்க.. அரசியல விட்டு விலகறோம்னு சொன்னா தீக்குளிப்போம், பஸ் கொளுத்துவோம்.. பொது சொத்தை சேதம் பண்ணுவோம்.. :):):)

ஆனா, நாம திருந்திட்டா, எந்த அரசியல்வாதியும், நான் அரசியலுக்கு முழுக்கு போடறேன்னு சொல்ல மாட்டான்..

சந்தோஷ் aka Santhosh said...

புலி தேசிய கட்சிகளை பற்றி நீங்க சொன்னது வேண்டுமானால் நிஜமாக இருக்கலாம் ஆனால் பா.மா.க, திமுக பற்றி நீ சொல்லி இருப்பது எப்படி நிஜமாகும் அன்புமணி என்ன தேர்தலில் நின்னா ஜெயிச்சாரு? மாறன் ஆகட்டும் கனிமொழி ஆகட்டும் அவங்களை என்ன கட்சியினரா தேர்ந்தேடுத்தார்கள் தலைவர் இல்ல உள்ளே கொண்டுவந்தார், திமுக வின் உள்கட்சி சனநாயகம் பத்தி தான் ஊருக்கே தெரியுமே? கலைஞர் சொல்லிட்டு தான் இருக்காரு போறேன் போறேன் அப்படின்னு எங்க போனாரு? அவருக்கு சவுண்டு விடுவது புதுசா என்ன? என்ன புலி இப்படி தப்பு தப்பா சவுண்டு விடுறே? சனங்களை இவனுங்க என்னிக்கி கேட்டு இருக்காணுங்க? ப்ளேயர் கூடத்தான் நாளைக்கே அவரு புள்ளையை நிறுத்தினா தோற்க்க விடுவாங்களா என்ன? ஆனா அவரு நிறுத்த மாட்டாரு. எங்க கலைஞரையோ இல்ல மத்த ஆளுங்களையோ பதவியில் இருக்கும் பொழுது போகச்சொல்லி பாக்கலாம்? ஆனா போகும் பொழுது புள்ள குட்டிங்களை நிறுத்தாம போகச்சொல்லு, ஸ்டாலினை கலைஞர் போனதுக்கு அப்புறம் ஒரு இரண்டுவருசம் கழிச்சி கட்சிக்கு வந்து ஜெயிச்சி காட்ட சொல்லு. சுலபமா சொல்லிடலாம் சனங்க விடமாட்டேங்கிறாங்கன்னு ஆனா எவன் அழுறான் சொல்லு இவனுங்க வேணும் அப்படின்னு?

சந்தோஷ் aka Santhosh said...

//கையில மை எங்க...?

நீங்கள் எங்களுக்குதான் ஓட்டு போட்டனு நாங்க எப்டி நம்புறது ஓட்டு சீட்ட காமி

Mr.x//
அண்ணாத்தே அடுத்த தபா சீட்டை கையோட கொணாந்து உங்க கிட்ட காட்டுறேன் சரியா?

நாகை சிவா said...

//கையில மை எங்க...?//

எங்க நெத்திய கொஞ்சும் ஒத்து பாருங்க, நல்லாவே தெரியும்.

//நீங்கள் எங்களுக்குதான் ஓட்டு போட்டனு நாங்க எப்டி நம்புறது ஓட்டு சீட்ட காமி Mr.x //

அங்கன A, இங்கன X

யாருங்கண்ணா நீங்க.....

Arunkumar said...

//
மாறன் & பிரதர்ஸ் சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்டாய்ங்க...
//
இதையே தான் நானும் சொல்ல வந்தேன்..

தேவையா? அந்த சர்வே தேவையா?
கலைஞர் வேணாம்னு சொன்னதுக்கு அப்பறம் கூட அவரோட பேச்சையும் மீறி இது சத்தியமா சொந்த செலவுல சூனியம் தான்.

தன்னம்பிக்கை இருக்கலாம் இது தலைகனம்...

நாகை சிவா said...

//சூடானிலிருந்து சூடான பதிவு எழுதி இருக்கிங்க... //

அண்ணாத்த சூடானா மாதிரியா இருக்கு, ரொம்ப கூலா தான் எழுதின மாதிரி பட்டது எனக்கு ;-)

நீங்க சொல்லுறீங்க, பாப்போம்...

நாகை சிவா said...

//நல்லாத்தான் உக்காந்து யோசிச்சு இருக்க..//

வர்காந்தா, படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது பங்கு, இந்த கருமத்துக்கு தான் நான் நியூஸ் பாப்பதே இல்ல, என் கிரகம், தெரியாம பாத்து தொலைச்சுப்புட்டேன்.

//ஒருத்தனும் உருப்படியா இல்ல...பேசாம நம்ம ஜெயிச்சு ஆட்சிய புடிச்சரலாம்...//

இதையே தான் நேத்து நாங்க பேசிக்கிட்டு இருந்தோம், நீயும் கூட்டணிக்கு வறீயா, சரி அப்ப பலமான கூட்டணி அமைந்து விடும் போல இருக்கு.....

ரகளை பண்ணி விடுவோம்

நாகை சிவா said...

//நயாகரா நீர்வீழ்ச்சி எல்லாம் வேணாம் நயந்தாரா வந்தா சோறு தண்ணியே வேணாமுனு ஒரு குருப்பு திரியுது //

நீ கடமை வீரன்ய்யா மின்னல்!

அந்த குரூப்பை தலைமை ஏற்று நடத்துப்பவரே அதை மறந்துட்டு வேற சொல்லுறார். நீ விட மாட்டேங்குறீயே!

நாகை சிவா said...

//நானும்....:-) //

பங்கு நீயுமா? அதில் உனக்கு என்ன ஒரு ஆனந்தம்... நம்ம ஆட்களை அடிச்சுக்கவே முடியாது இந்த விசயத்தில்.... நல்லா இருப்போம் விடு.

அப்பப்பா என்னா சூடு said...

//
அண்ணாத்த சூடானா மாதிரியா இருக்கு, ரொம்ப கூலா தான் எழுதின மாதிரி பட்டது எனக்கு ;-)

நீங்க சொல்லுறீங்க, பாப்போம்...
///


சூடான் பதிவும் சூடான பதிவுகளில் வந்துவிட்டது....:)


Mr x

நாகை சிவா said...

//அட புலி,
பாரு இந்த ஆங்கிள் தோணவேயில்ல.. நாம இல்ல எல்லாரையும் கட்டி இழுத்து வந்து பதவிய எடுத்துக்கோ எடுத்துக்கோனு திணிக்கிறோம்.. தல/லிகளச் சொல்லிக் குத்தமில்லதான்.... //

எல்லா ஆங்கிள்ல இருந்தும் பாக்கனும், அப்ப தான் பலது மாட்டும். இதை எல்லாம் நான் சொல்லி நீர் தெரிந்து என்னமோ அய்யா..... பாடமோ, பாட்டுக்கு பாட்டோ அதை கேட்டுட்டு போயிக்கிட்டே இருக்கனும், வர்கார்ந்து ஆராயக் கூடாது அம்புட்டு தான்.

நாகை சிவா said...

//சூடான் நாட்டின் தங்க புலியின் வீர உறுமல் சிங்கை வரையிலும் கேட்கின்றது. //

ஏன் இந்த் கொல வெறி உங்களுக்கு, நான் நல்லா இருப்பது பிடிக்கலையா....

1. 30 மணி முன்பாகவே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

//சோடாவுல உப்பு போட்டு குடி//

அண்ணன், 7 அப் அண்ணன், மெய்யாலும் சொல்லுறேன், இந்த கமெண்டுக்கு ரிப்ளே பண்ணும் போது ஒருத்தன் வந்து 7 அப் கொடுத்து போறான் :-)

இங்கன சோடா கிடைக்க மாட்டேங்குது அண்ணாத்த, வேற ஏதும் இருந்தா சொல்லுங்களேன்

நாகை சிவா said...

//பங்கு என் இனம்டா நீ
mr X//

பங்காளி, நான் எல்லாம் ஒரே இனம் தான், எங்க இனம் என்று சொல்லும் நீங்க யாரு? ஒரு க்ளூ கொடுத்தா சட்னு புரிஞ்சிப்போம்....

நாகை சிவா said...

// அரசியல விட்டு விலகறோம்னு சொன்னா தீக்குளிப்போம், பஸ் கொளுத்துவோம்.. பொது சொத்தை சேதம் பண்ணுவோம்.. :):):) //

எல்லாத்தையும் நானே பீல் பண்ணினா என்ன அர்த்தம் ஏஸ். உங்களுக்கும் கொஞ்சம் பாக்கி வைக்கனும் இல்லையா?

//ஆனா, நாம திருந்திட்டா, எந்த அரசியல்வாதியும், நான் அரசியலுக்கு முழுக்கு போடறேன்னு சொல்ல மாட்டான்.. //

அத நாம திருந்தின பிறகு பாத்துக்கலாம். ஏன் அவசரம்....

நாகை சிவா said...

//அண்ணாத்தே அடுத்த தபா சீட்டை கையோட கொணாந்து உங்க கிட்ட காட்டுறேன் சரியா? //

பங்காளி, இப்ப எல்லாம் பொட்டிக்கு மாத்திட்டாங்களே, அப்ப என்ன பண்ணுறது... பொத்தனை அமுக்கும் போது போட்டோ பிடிச்சி காட்டுவோம்.

நாகை சிவா said...

//தேவையா? அந்த சர்வே தேவையா?
கலைஞர் வேணாம்னு சொன்னதுக்கு அப்பறம் கூட அவரோட பேச்சையும் மீறி இது சத்தியமா சொந்த செலவுல சூனியம் தான்.//

அப்ப சர்வே நடத்தினது மட்டும் தான் தப்புனு சொல்ல வறீங்களா அருண் ;-)

//தன்னம்பிக்கை இருக்கலாம் இது தலைகனம்... //

இரண்டும்க்கும் நூல் அளவு தானே, கொஞ்சம் அதிகமாயிடுச்சு, குறைச்சுப்பாங்க.... நம்புவோமாக!

நாகை சிவா said...

//சூடான் பதிவும் சூடான பதிவுகளில் வந்துவிட்டது....:)
Mr x //

அப்படியா!

எல்லா இடத்திலும் கத்திரி வெயிலாக இருப்பதால் இப்படி சூடா தெரியுதோ?

:-(

சின்னபுள்ளதனமா said...

//
பங்காளி, நான் எல்லாம் ஒரே இனம் தான், எங்க இனம் என்று சொல்லும் நீங்க யாரு? ஒரு க்ளூ கொடுத்தா சட்னு புரிஞ்சிப்போம்....
//


ஏதோ சொல்கிறேன்
ஏன் இந்த வயிற்றெரிச்சல்!


வேணானு சொன்னாலும் விடமாட்டானுவோ..
பாசகார பயல்வோ..


வருங்கால சிங்கம்
Mr.x வாழ்க வாழ்க (க்ளூ கேட்குதா)

Anonymous

நாகை சிவா said...

//புலி தேசிய கட்சிகளை பற்றி நீங்க சொன்னது வேண்டுமானால் நிஜமாக இருக்கலாம் //

இதுல என்ன டவுட், இருக்கலாம் என்று இழுக்குற....

//ஆனால் பா.மா.க, திமுக பற்றி நீ சொல்லி இருப்பது எப்படி நிஜமாகும் அன்புமணி என்ன தேர்தலில் நின்னா ஜெயிச்சாரு? //

யப்பா இதுக்கு தான் விளக்கம் சொல்லி இருக்கேனே....

// மாறன் ஆகட்டும் கனிமொழி ஆகட்டும் அவங்களை என்ன கட்சியினரா தேர்ந்தேடுத்தார்கள் தலைவர் இல்ல உள்ளே கொண்டுவந்தார், திமுக வின் உள்கட்சி சனநாயகம் பத்தி தான் ஊருக்கே தெரியுமே? //

என்னய்யா நீ, அரசியல பால பாடம் தெரியாமல் பேசிக்கிட்டு இருக்க, அங்க கட்சியும், குடும்பமும் ஒன்று தான்.

//கலைஞர் சொல்லிட்டு தான் இருக்காரு போறேன் போறேன் அப்படின்னு எங்க போனாரு? //

எங்க வுட்டோம் நாமா?

//அவருக்கு சவுண்டு விடுவது புதுசா என்ன? என்ன புலி இப்படி தப்பு தப்பா சவுண்டு விடுறே? சனங்களை இவனுங்க என்னிக்கி கேட்டு இருக்காணுங்க? //

நீ எந்த சனங்களை சொல்லுற?

//ப்ளேயர் கூடத்தான் நாளைக்கே அவரு புள்ளையை நிறுத்தினா தோற்க்க விடுவாங்களா என்ன? ஆனா அவரு நிறுத்த மாட்டாரு. //

இது நியாயமா பேச்சு!

//எங்க கலைஞரையோ இல்ல மத்த ஆளுங்களையோ பதவியில் இருக்கும் பொழுது போகச்சொல்லி பாக்கலாம்? ஆனா போகும் பொழுது புள்ள குட்டிங்களை நிறுத்தாம போகச்சொல்லு, ஸ்டாலினை கலைஞர் போனதுக்கு அப்புறம் ஒரு இரண்டுவருசம் கழிச்சி கட்சிக்கு வந்து ஜெயிச்சி காட்ட சொல்லு.//

ஏப்பா எதுக்கு எடுத்தாலும் ஸ்டாலினை வம்புக்கு இழுக்குறீங்க. மிசாவில் சிறை சென்றவர்களுக்கு எல்லாம் கட்சி பதவிகளை தந்து கெளரவப்படுத்தி இருக்கு, அதில் ஒருவர் தான் இவரும்.

/// சுலபமா சொல்லிடலாம் சனங்க விடமாட்டேங்கிறாங்கன்னு ஆனா எவன் அழுறான் சொல்லு இவனுங்க வேணும் அப்படின்னு? //

இதுக்கு நான் என்னத்த சொல்ல சொல்லு.....

சின்னபுள்ளதனமா said...

//பங்காளி, நான் எல்லாம் ஒரே இனம் தான், எங்க இனம் என்று சொல்லும் நீங்க யாரு? ஒரு க்ளூ கொடுத்தா சட்னு புரிஞ்சிப்போம்....
//


ஏதோ சொல்கிறேன்
ஏன் இந்த வயிற்றெரிச்சல்!


வேணானு சொன்னாலும் விடமாட்டானுவோ..
பாசகார பயல்வோ..


Mr.x வாழ்க வாழ்க (க்ளூ கேட்குதா)

Anonymous

கீதா சாம்பசிவம் said...

என்னமோ நேத்திக்குச் சொன்னீங்க தங்கத் தலைவி வாழ்கனு எழுதப் போறதா, சரினு வந்தா வேறே என்னமோ புரியாத விஷயமா இருக்கு அதுவும் ரொம்பவே லேட்டாத் தகவல் வந்திருக்கு, அதனாலே பின்னூட்டம் எல்லாம் இல்லை. :P

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட்ரா அட்ரா அட்ரா.. என்னமோ பெருசு பெருசா மேட்டர் சொல்லியிருக்கீங்கன்னு தெரியுது.. ஆனால் அது என்னன்னுதான் புரியலை.. இந்திய அரசியல்ல என்ன நடக்குதுன்னு தெரியாம இதை படித்ததால் ABCD தெரியாமல் பேப்பர் படிக்க சொன்ன மாதிரி இருக்கு. :-P

ulagam sutrum valibi said...

நாகையாரே! நீங்க புலி தோல் போர்திய பசு
என்று நினைத்து விட்டேன் இல்லை நீங்கள்
வேங்கை என்றுபுரிகிறது!!

துளசி கோபால் said...

நாடு போற நிலைமையைப் பார்த்து இதுக்கெல்லாம் ஒரு
முடிவு கட்டணுமுன்னு நமக்கும் மேல் உள்ள ஒரு சக்தியின்
செய்கையால் இப்படியெல்லாம் நடக்குதுன்னு வச்சுக்கக்கூடாதா?


எல்லாருக்கும் 'விநாசகாலெ விபரீத புத்தி' னு வந்துருக்கு.

கலகம் பிறந்தால்தான் நன்மையும் பிறக்கு(மா)ம்

ஜி said...

:-(

:-)

கவலையுடன் said...

//

mr X
பங்காளி, நான் எல்லாம் ஒரே இனம் தான், எங்க இனம் என்று சொல்லும் நீங்க யாரு? ஒரு க்ளூ கொடுத்தா சட்னு புரிஞ்சிப்போம்.
//

http://anony-anony.blogspot.com/search/label/Mr%20x


A"

கவிதா|Kavitha said...

சிவா..

என்ன ஆச்சி, நாம் இன்றைக்கு நேற்றைக்கா பார்க்கிறோம்.. நெஞ்சு எரிச்சலுக்கு சில்லுன்னு தண்ணீர் குடித்து, எரிச்சலை குறைக்கவும்.

ஆமா அது என்ன டிஸ்கி -?!! சொன்னாலும் சொல்லாட்டியும்.. எங்கேயோ உட்கார்ந்துகிட்டு இந்தியாவை பற்றி கவலையுடன் எழுதுவது உண்மைதானே..?!!

இருந்தாலும் உங்க தேசபற்றை மெச்சி வாழ்த்துகிறோம்..

வேதா said...

யப்பா புலி என்ன இது இந்த பதிவு பக்கமே வர முடியல அவ்ளோ சூடான பதிவு:) சரி ஏதோ உங்க ஆதங்கத்தை இப்டி போட்டு தாக்கிட்டீங்க:)

நாகை சிவா said...

//யப்பா புலி என்ன இது இந்த பதிவு பக்கமே வர முடியல அவ்ளோ சூடான பதிவு:) சரி ஏதோ உங்க ஆதங்கத்தை இப்டி போட்டு தாக்கிட்டீங்க:) //

லேட்டா வந்துட்டு இப்படி ஒரு சமாளிப்பா... ஆதங்கமா.... சரி நீங்க சொன்ன சரியா தான் இருக்கும், விடுங்க...

நாகை சிவா said...

//ஆமா அது என்ன டிஸ்கி -?!! சொன்னாலும் சொல்லாட்டியும்.. எங்கேயோ உட்கார்ந்துகிட்டு இந்தியாவை பற்றி கவலையுடன் எழுதுவது உண்மைதானே..?!!//

இந்தியாவில் இருப்பவர்கள் மட்டும் தான் இந்தியாவை பற்றி கவலைப்படுனும் என்று சொல்லுறீங்களா....

நீங்க என்ன எதிர்பாக்குறீங்க என்றே புரிஞ்சுக்க முடியல... உங்க போஸ்ட் வரட்டும், அப்பால் பாத்துக்கலாம்.

நாகை சிவா said...

//http://anony-anony.blogspot.com/search/label/Mr%20x


A" //

அட அநியாயத்தின் உச்சக்கட்ட ஆபிசரே... ஏன்ய்யா மின்னல் உனக்கு இந்த வேலை....

நாகை சிவா said...

//:-(

:-) //

ஏன் இந்த சோகம், ஏன் இந்த சிரிப்பு.

இந்தியாவின் நடுநிலை கொள்கை மாதிரி இருக்கு உன் கமெண்ட்....

நாகை சிவா said...

//நாடு போற நிலைமையைப் பார்த்து இதுக்கெல்லாம் ஒரு
முடிவு கட்டணுமுன்னு நமக்கும் மேல் உள்ள ஒரு சக்தியின்
செய்கையால் இப்படியெல்லாம் நடக்குதுன்னு வச்சுக்கக்கூடாதா? //

அப்படி தான் நானும் சில சமயங்களில் நினைத்துக் கொள்வது.


//கலகம் பிறந்தால்தான் நன்மையும் பிறக்கு(மா)ம் //

கழகங்கள் இறந்தால் கூட நன்மை பிறக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு இருக்கு...

நாகை சிவா said...

//நாகையாரே! நீங்க புலி தோல் போர்திய பசு
என்று நினைத்து விட்டேன் இல்லை நீங்கள்
வேங்கை என்றுபுரிகிறது!!//

உ.சு.வா. ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு என் மேல்.....

நாகை சிவா said...

//அட்ரா அட்ரா அட்ரா.. என்னமோ பெருசு பெருசா மேட்டர் சொல்லியிருக்கீங்கன்னு தெரியுது..

அது சரி...

//ஆனால் அது என்னன்னுதான் புரியலை.. //

நாங்க மட்டும் புரிஞ்சா எழுதி இருக்கோம்.

//இந்திய அரசியல்ல என்ன நடக்குதுன்னு தெரியாம இதை படித்ததால் ABCD தெரியாமல் பேப்பர் படிக்க சொன்ன மாதிரி இருக்கு. :-P //

தெரிஞ்சுக்காமலே இருங்க... ஒரு விதத்தில் அது ரொம்ப நல்லது.

நாகை சிவா said...

//என்னமோ நேத்திக்குச் சொன்னீங்க தங்கத் தலைவி வாழ்கனு எழுதப் போறதா,//

மிஸ் ஆயிடுச்சு. சீக்கிரம் போட்டு விடுவோம்.

// சரினு வந்தா வேறே என்னமோ புரியாத விஷயமா இருக்கு அதுவும் ரொம்பவே லேட்டாத் தகவல் வந்திருக்கு, அதனாலே பின்னூட்டம் எல்லாம் இல்லை. :P //

பின்னூட்டம் இல்லை என்பதைக் கூட ஒரு பின்னூட்டம் போட்டு சொல்லும் உங்க மனதை எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியல...

வாழ்க.. வாழ்க...

manipayal said...

Dear naagai Siva,
I am new to the Bloggers' world. Basically from Chennai,now based in Saudi Arabia.Investment Consultant.(Indha Consultants thollai thanga mudiyallada saami-innu yaro kavundamani madhiri koral vidarangale)
Nice to read your posts. will start posting & commenting in Tamil soon.All the best

நாகை சிவா said...

வாங்க மணி....

தமிழில் விரைவில் எழுத வாழ்த்துக்கள்.....

vasanth said...

கலக்குர சிவா

vasanth said...

கலகுர சிவா ஜமாய் மாமா