Thursday, May 10, 2007

சுட்டிப்பயலுக்கு பிறந்தநாள்!

ஒரு ஊரில் பிறந்து
ஒரு ஊரில்
வளர்ந்தவனே!

ஒரு ஊரில்
படித்து
ஒரு நாட்டில் வேலை பார்ப்பவனே!

நாளை பிறந்த நாள் காணும்
திருகோவிலூர் மைந்தனே!

கள்ளக்குறிச்சியின்
செல்ல புதல்வ்னே!

தலைவன் வழி வந்தவனே!
நாளைய சரித்திரத்தின் நாயகனே!

ப்ளாக்கர் மூலம்
கிடைத்த தோழனே!

சங்கத்ததின் சொத்தே!
எங்களின் முத்தே!

சங்கத்தின் அங்கமே!
எங்களின் சொந்தமே!

பழகவதற்கு இனியவனே!
பார்ப்பதற்கும் கனியவனே!

அமெரிக்காவில் மையம்
கொண்டு இருக்கும் சிங்கமே!

விரைவில் இந்தியா
வர இருக்கும் தங்கமே!

பெயரில் மட்டும்

நீ வெட்டி

ஆனால் என்றும்
எதிலும்
நீ சுட்டி!

இன்று போல
என்றும்
இல்லை இல்லை

இதை விட பல மடங்கு
மேலே உயர்வடைந்து
வாழ வாழ்த்துகிறேன்

கால் நூற்றாண்டை
கடக்கும் இந்த
பொன்னாளில்

நீ

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்து ஆண்டு
பலகோடி நூறாண்டு
எல்லாம் வளமும்
பெற்று வளமுடன் வாழ
வாழ்த்தும் அன்பு தம்பி(கள்)

சிவா, ஜி, கப்பி, கதிர், தேவ், ஷாம், கோபி, தொல்ஸ் மற்றும் சங்கத்து சிங்கங்கள்.

56 comments:

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் பாலாஜி மனோகரன்!

வாழ்க!

வளர்க!

வடுவூர் குமார் said...

வாழ்க வளமுடன்,பாலாஜி.

தம்பி said...

Happy Birthday Vetti

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் பாலாஜி ;-)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டிண்ணே..

சுமா என்ன கிஃப்ட் கொடுத்தாங்க? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

புலி, என் பெயர் அங்கே விட்டு போச்சு.. :-P

தங்கைன்னு என் பேரையும் சேர்த்து போட்டிருக்கலாம்ல.. ;-)

முத்துகுமரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெட்டி.

சிவா அமீரகத்தில் தம்பி சார்பாக சிறப்பு தீர்த்தவாரி என்றூ கேள்விப்பட்டேன். விசாரித்து சொல்லவும் :-)

அனுசுயா said...

வெட்டிக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் பல பதிவுகள் கண்டு நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் :)

Boston Bala said...

வாழ்த்துகள் :)

நாகை சிவா said...

//சுமா என்ன கிஃப்ட் கொடுத்தாங்க? ;-) //

ஒரு கிஃப்டே வேற ஒரு கிஃப்ட் தர முடியுமா சொல்லுங்க....

//புலி, என் பெயர் அங்கே விட்டு போச்சு.. :-//

உங்களுக்கு தான் அவர் பிறந்த நாள் ஞாபகம் இல்லைல, அப்புறம் எப்படி வாழ்த்து சொல்ல முடியும். சொல்லுங்க...

நாகை சிவா said...

//சிவா அமீரகத்தில் தம்பி சார்பாக சிறப்பு தீர்த்தவாரி என்றூ கேள்விப்பட்டேன். விசாரித்து சொல்லவும் :-) //

உண்மை தான்.

அபி அப்பா தலைமையில் அய்யனார், கோபி, ராதா துணையுடன் தம்பி சிறப்பு தீர்த்தவாரி ஏற்பாடு செய்து உள்ளார். அமீரக மக்கள் எல்லாம் அப்பெரு விழாவில் கலந்துக் கொண்டு, அருள் பெற வேண்டும் என அழைப்படுகிறார்கள்

மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் வெட்டி/சுட்டி பாலாசி...

Syam said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாஜி!!!

Syam said...

//ஒரு கிஃப்டே வேற ஒரு கிஃப்ட் தர முடியுமா சொல்லுங்க....//

பங்கு ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் :-)

முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்கள்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//உங்களுக்கு தான் அவர் பிறந்த நாள் ஞாபகம் இல்லைல, அப்புறம் எப்படி வாழ்த்து சொல்ல முடியும். சொல்லுங்க...//

எனக்கு தெரியும்ங்க.. உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணேன். :-D
(அப்பாடா.. சமாளிச்சாச்சு!) :-P

//ஒரு கிஃப்டே வேற ஒரு கிஃப்ட் தர முடியுமா சொல்லுங்க....//

அதானே அதானே... ;-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பர்த்டே பாய் பாலாஜி, வாழ்த்துக்கள்!

சங்க விதிகளின் படி
பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன் கவிதை!
மறு நாளுக்கு பர்த்டே bump அல்லவா?
:-)

தீர்த்த வாரியை நீங்களே தீர்த்துடாதீங்க!
பாஸ்டனுக்கும் ஒரு "கால்" அனுப்புங்க!

நாகை சிவா said...

//தீர்த்த வாரியை நீங்களே தீர்த்துடாதீங்க!
பாஸ்டனுக்கும் ஒரு "கால்" அனுப்புங்க! //

பாலாஜி எவ்வளவு பெரிய ஆளு, ஒரு கால் போதுமா

For Big "B", you have to think "BIG"

//பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன் கவிதை!//

நாளைக்கு நமக்கு லீவு, அதான்.. ஹி..ஹி...

நாகை சிவா said...

//எனக்கு தெரியும்ங்க.. உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணேன். :-D//

இதுக்கு நான் என்ன சொல்ல, மனசாட்சி வேணும், அம்புட்டு தான் சொல்ல முடியும்.

//அதானே அதானே... ;-) //

கேட்பதை கேட்டு விட்டு, இப்ப ஆமாம் சாமியும் போடுறீங்க... நீங்க எங்க ஊர் அரசியலுக்கு வரலாம்ங்கோ....

SathyaPriyan said...

Janmadina subha kankshalu!

vetti, correcta? kashtapattu googlelam panni potrukken.:-)

வெட்டிப்பயல் said...

பாசக்கார புலி,
கவுஜ எல்லாம் எழுதி ரொம்ப ஃபீல் பண்ண வெச்சிட்டப்பா...

ரொம்ப நன்றி :-)

வெட்டிப்பயல் said...

// வடுவூர் குமார் said...

வாழ்க வளமுடன்,பாலாஜி. //

நன்றி குமார்...

வெட்டிப்பயல் said...

// தம்பி said...

Happy Birthday Vetti //

மிக்க நன்றி கதிரு...

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

வாழ்த்துக்கள் பாலாஜி ;-))) //

ரொம்ப நன்றிப்பா...

காலைலயே உன் Custom message பார்த்தேன்.. ரொம்ப நன்றிப்பா...

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெட்டிண்ணே..
//

ரொம்ப நன்றி தங்கச்சிக்கா...

//
சுமா என்ன கிஃப்ட் கொடுத்தாங்க? ;-) //

ஏன் இந்த கொல வெறி???

வெட்டிப்பயல் said...

// முத்துகுமரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெட்டி.
//
மிக்க நன்றி முத்துக்குமரன்...

//
சிவா அமீரகத்தில் தம்பி சார்பாக சிறப்பு தீர்த்தவாரி என்றூ கேள்விப்பட்டேன். விசாரித்து சொல்லவும் :-) //
தொல்ஸ் அண்ணேன் போன் பண்ணாரு.. உங்க எல்லாத்தையும் கிடேசன் பார்க்குக்கு வர சொன்னாரு :-)

வெட்டிப்பயல் said...

// அனுசுயா said...

வெட்டிக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் பல பதிவுகள் கண்டு நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் :) //

மிக்க நன்றி அனுசயா...
எல்லாம் உங்கள் ஊக்கமும் உற்சாகமும் தான் :-)

Arunkumar said...

பாலாஜி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

வெட்டிப்பயல் said...

// Boston Bala said...

வாழ்த்துகள் :) //

மிக்க நன்றி பாபா...

வெட்டிப்பயல் said...

// மணி ப்ரகாஷ் said...

வாழ்த்துகள் வெட்டி/சுட்டி பாலாசி... //

மிக்க நன்றி மணி ப்ரகாஷ்

Arunkumar said...

//
இதை விட பல மடங்கு
மேலே உயர்வடைந்து
வாழ வாழ்த்துகிறேன்
//
ரிப்பீட்டே

வெட்டிப்பயல் said...

// Syam said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலாஜி!!! //

மிக்க நன்றி நாட்ஸ் ;)

வெட்டிப்பயல் said...

// முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி முத்துலெட்சுமி...

வெட்டிப்பயல் said...

// SathyaPriyan said...

Janmadina subha kankshalu!

vetti, correcta? kashtapattu googlelam panni potrukken.:-) //

ரொம்ப கரெக்டா சொல்லிட்டீங்களே...

அதுவும் சுந்தர தெலுங்கில் :-)

மிக்க நன்றி சத்யா...

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பர்த்டே பாய் பாலாஜி, வாழ்த்துக்கள்!
//
மிக்க நன்றி KRS

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

பாலாஜி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... //

மிக்க நன்றி அருண்...

வெட்டிப்பயல் said...

ஒரு வழியா நன்றி எல்லாம் சொல்லியாச்சு..

இனிமே ஒவ்வொரு மேட்டரா பாப்போம்...

புலி,
//எல்லாம் வளமும்
பெற்று வளமுடன் வாழ
வாழ்த்தும் அன்பு தம்பி(கள்)
//

இன்னாது இது???

யார் யாருக்கு தம்பி...

மனசாட்சியே இல்லையா???

வெட்டிப்பயல் said...

//ஒரு கிஃப்டே வேற ஒரு கிஃப்ட் தர முடியுமா சொல்லுங்க....//

புலி,
என்னாச்சு இன்னைக்கு உனக்கு?

கவுஜ எழுதற, டயலாக் பேசற... கொஞ்சம் ஓவரா போயிடுச்சோ ;)

இராம் said...

/சங்க விதிகளின் படி
பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன் கவிதை!
மறு நாளுக்கு பர்த்டே bump அல்லவா?//

KRS,

ஹ்ம் அது இல்லாமலா??? இன்னும் கொஞ்சம் நேரத்திலே வரும் பாருங்க... :))))

////சுமா என்ன கிஃப்ட் கொடுத்தாங்க? ;-) //

ஒரு கிஃப்டே வேற ஒரு கிஃப்ட் தர முடியுமா சொல்லுங்க....//

இதுதாய்யா பதிவிலே டாப்... :)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி...

சுமா said...

Happy Birthday

குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா

மின்னுது மின்னல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விரைவில் மற்றோரு வாழ்த்து சொல்ல
ஆவலாய்.....

:)


குறும்புடன்
மி மி

மின்னுது மின்னல் said...

//
இன்னாது இது???

யார் யாருக்கு தம்பி...

மனசாட்சியே இல்லையா???
//


சரிங்க அங்கிள்...:)


மனசாட்சியுடன்
மின்னல்

நாகை சிவா said...

//புலி,
என்னாச்சு இன்னைக்கு உனக்கு?

கவுஜ எழுதற, டயலாக் பேசற... கொஞ்சம் ஓவரா போயிடுச்சோ ;) //

ஆமாம், உன் மேல் எங்களுக்கு உள்ள பாசம் அளவு கடந்து போய்கிட்டு இருக்கு, இன்னும் வரும் பாரு.

//இன்னாது இது???

யார் யாருக்கு தம்பி...

மனசாட்சியே இல்லையா??? //

கொஞ்சம் தப்பு ஆயிடுச்சு. என் பெயர், ஜி, கப்பி, கதிர், கோபி வரைக்கும் ஒகே, தேவ், தொல்ஸ், ஷாம் எல்லாம் ஒரு ஃப்ளோல வந்துச்சு..... :-)

நாகை சிவா said...

//விரைவில் மற்றோரு வாழ்த்து சொல்ல
ஆவலாய்.....//

வெட்டி "அப்பா" ஆக போற மேட்டரு, உமக்கு எப்படி தெரியும் மின்னல்....

பலே ஆள் தாம்ய்யா நீரு....

கீதா சாம்பசிவம் said...

என்னிக்குப் பிறந்த நாள் "வெட்டிக்கு" வாழ்த்துக்கள் வெட்டி! மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

மே 11 ஆன இந்த நன்னாளில் தான், நம் பாலாஜி மண்ணில் அவதரித்த பொன்னாள்.

ulagam sutrum valibi said...

Happy Birthday to you.....u..u
Happy Birthday to you.....u..u
Happy Birthday dear balaji...ji..ji
ஏன் எல்லாரும் ஓடுறாங்க பாட்டுதான் பாடினேன்
பிறந்த நாள் வாழ்துக்கள்!!

ஜி said...

பாஸ்டன் பஸ் ஸ்டாண்டில் ஃபிகருக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கொல்டிகாருவே...

இந்திய ஃபிகர்களை விட்டுவந்து பிரிவு வாட்டி எடுக்காதவண்ணம் அந்நிய ஃபிகர்களையும் அயராது ஸைட் அடிக்கும் சஙகத்துச் சிங்கமே...

நெல்லிக்கனி போல் என்றும் உன் வாழ்வு இனித்திட வாழ்த்துகிறோம்...

கப்பி பய said...

வாழும் காவியம்
வளரும் இலக்கியம்
வலைப்பூவின் இலக்கணம்
சு(ம்)மா வாழ்வின் கமா
பதிவுலகின் ஆச்சரியக்குறி
மொக்கைகளின் முற்றுப்புள்ளி
வாழும் வள்ளல்
டகால்ட்டி விடும் கொல்டி
கள்ளக்குறிச்சி கதிரவன்
பாஸ்டன் பகலவன்
கிழக்கு கடற்கரை முத்து
இரும்பு மனம் படைத்த கரும்பு
தென்னாட்டு ஷேக்ஸ்பியர்
ஆசியாவின் அரிஸ்டாட்டில்
சுடரேற்றிய சுடர்
வெட்டி வீராச்சாமி
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
கைப்புவின் இளைய தளபதி
அதிவீரபாண்டியர்
அண்ணன் வெட்டி பாலாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

சென்ஷி said...

மே மாசம் நிறைய புத்திசாலிகள் பிறந்திருக்காங்க போல.. நம்ம வெட்டியையும் சேத்து.

கொல்ட்டி கதை மூலம் என்னை தமிழ்மண வலையில் விழ வைத்த வெட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

இன்னிக்குத்தாம்ப்பா அவரு பொறந்தநாளு எல்லோரும் எங்கே போயிட்டீங்க :))

சென்ஷி

ulagam sutrum valibi said...

.Happy Birthday to you..u..u..u
Happy Birthday to you..u..u.u.u
Happy Birthday dear Balaji..ji..ji
ஏப்பா எல்லாரும் ஓடுறாங்க நான்
பாட்டுதானே பாடினேன்

Syam said...

//ஒகே, தேவ், தொல்ஸ், ஷாம் எல்லாம் ஒரு ஃப்ளோல வந்துச்சு.....//

கொஞ்ச நேரம் சந்தோச பட விட மாட்டீங்களே...அத ஏய்யா நோண்டி நொங்கு எடுக்கறீங்க....:-)

மனதின் ஓசை said...

சுட்டியான வெட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Syam said...

//ஏப்பா எல்லாரும் ஓடுறாங்க நான்
பாட்டுதானே பாடினேன் //

யக்கா எது பண்ணாலும் சொல்லிட்டு பண்ணுங்க...சின்ன பசங்க நாங்க பயந்துட்டோம் :-)

Syam said...

//வாழும் காவியம்
வளரும் இலக்கியம்
வலைப்பூவின் இலக்கணம்
சு(ம்)மா வாழ்வின் கமா
பதிவுலகின் ஆச்சரியக்குறி
மொக்கைகளின் முற்றுப்புள்ளி
வாழும் வள்ளல்
டகால்ட்டி விடும் கொல்டி
கள்ளக்குறிச்சி கதிரவன்
பாஸ்டன் பகலவன்
கிழக்கு கடற்கரை முத்து
இரும்பு மனம் படைத்த கரும்பு
தென்னாட்டு ஷேக்ஸ்பியர்
ஆசியாவின் அரிஸ்டாட்டில்
சுடரேற்றிய சுடர்
வெட்டி வீராச்சாமி
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
கைப்புவின் இளைய தளபதி
அதிவீரபாண்டியர்
அண்ணன் வெட்டி பாலாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! //

இங்கயும் நான் ரிப்பீட்டேய் :-)

Syam said...

//இந்திய ஃபிகர்களை விட்டுவந்து பிரிவு வாட்டி எடுக்காதவண்ணம் அந்நிய ஃபிகர்களையும் அயராது ஸைட் அடிக்கும் சஙகத்துச் சிங்கமே...//

ஜி,
இவ்வளவு பரந்த மனப்பான்மை இருந்தா வாழ்வு என்னைக்குமே இனிக்கும்...:-)