Tuesday, May 15, 2007

+2 ரிசல்ட் & கல்லூரி வாசல்!

+2 பொது தேர்வுகள் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வழக்கம் போல் மிக அதிக அளவில் மாணவிகள் 84% தேர்ச்சியும், மாணவர்கள் 77% தேர்ச்சியும், ஆக மொத்தமாக 81% தேர்ச்சி பெற்று உள்ளார்கள். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழை முதல் பாடமாக எடுத்து படித்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களை ஆறு நபர்கள் பிடித்து உள்ளனர். அதில் ரம்யா(1182), ரூபிகா(1180) முதல் இரண்டு இடங்களையும், ஜெயமோகன், நிவேதிதா, இளவரசன், கீர்த்தனா ஆகிய நால்வரும் 1179 எடுத்து மூன்றாம் இடத்தை பகிர்ந்து உள்ளார்கள். இவர்களின் உயர்கல்வி செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதும் குறிப்பட்டதக்கது.

மாணவிகள் சாதனை என்று புகழ்ச்சி உரைகள் எழுந்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,

"பெண்கள் எல்லாம் தங்க மெடல் ஜெயித்து வந்தாங்க, பசங்களை தான் எங்க அவங்க படிக்க விட்டாங்க என்ற பாடல் வரிகள் பசுமையாக நினைவில் எழுந்த போதிலும்".,

"மீண்டும் ஒருமுறை மாணவ சமுதாயம் பெண்களுக்கு தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து நம் பெருந்தன்மையை நிலை நிறுத்தியதை கண்டு உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்த போதிலும்".,

"மதிப்பெண்களால் மதிக்கப்படுவதில்லை மதி என்பது என் மதிக்கு தோன்றிய போதிலும்".,

"சாதனை புரிந்த மாணவிகளே உங்கள் சாதனைக்கு ஒரு சலாம், மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்."

வாழ்த்து சொல்லியாச்சு, அடுத்து புத்தி சொல்லனும் இல்லையா!

மாணவ, மாணவி கண்மணிகளே,அடிச்சு பிடிச்சு, மனப்பாடம் பண்ணியோ, புரிந்து படிச்சோ நல்லா மார்க எடுத்து வீட்டிர்கள், அப்படியே நல்ல பிரிவு, நல்ல கல்லூரியாகவும் பார்த்து சேர்ந்து விடுங்கள். இதுவரை ஒரு சில, பல கட்டுப்பாடுகளுடன் இருந்த நீங்கள் பலவகையான கட்டுபாடுகள் களைய வெற்ற கட்டிங்காளையாக கல்லூரி வாசலுக்கு செல்கின்றீர்கள். உங்கள் வீட்டிலும் இது வரை இழுத்து பிடித்து இருந்த கடிவாளத்தை கொஞ்சம் தனித்து பிடிப்பார்கள், சிலர் விட்டும் விடுவார்கள். ஏது எப்படியாக இருந்தாலும் நீங்கள் நீங்களாகவே மாறும் காலம் இது.

கல்லூரியில் பல விதமான பாடங்களுடன் வாழ்க்கை பாடங்களையும் அதில் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க. தேவையில்லாத பல விசயங்களை நோக்கி மனம் இழுக்கும், போகலாம் ஆனா அதில் மாட்டி மிஸ் ஆயிடாதீங்க. கல்லூரி வாழ்வை கண்டிப்பாக ஒவ்வொரு நொடியும் அனுபவிங்கள், அதே சமயத்தில் எதிர்காலத்தையும் கொஞ்சம் மனதில் வைச்சுகோங்க. உலகம் ரொம்ப வேகமா போயிக்கிட்டு இருக்கு, உசாரா இருந்துக்கோங்க. வாய்ப்புகளை விட்டால் மறுபடியும் வாய்ப்பது கடினம் அம்புட்டு தான் சொல்ல முடியும். தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ, பாத்து இருந்துக்கோ....

ENJOY EVERYTHING
OVER DO NOTHING

டிஸ்கி:

1, புத்தி சொல்லுறாராம், அப்படினு தோணும், தோணனும். இல்லாட்டி எங்கயோ தப்புனு அர்த்தம். நாங்க ஏதோ அடிச்சு பிடிச்சு வந்துட்டோம், இதுக்கே நுரை தள்ளிடுச்சு. அப்ப இன்னும் 5, 6 வருசம் கழித்து எப்படி இருக்கும் பாத்துக்கோங்க.

2, எப்படிப்பா எம்புட்டு மார்க் எடுத்து இருக்கீங்க, நினைச்சு பாத்தாலே தலைய சுத்துது. அதிலும் ஒரு திருச்சி பொண்ணு 1200 க்கு 1190 எடுத்து இருக்கு. எப்படிய்யா இது எல்லாம்... பங்கு, உனக்கு ஏதும் புலப்படுதா? நாம இதை எல்லாம் நினைச்சு பாத்தோமா?

33 comments:

நாகை சிவா said...

சோதனை பின்னூட்டம் மட்டுமே!

கோபிநாத் said...

முதல்ல தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்


\நாங்க ஏதோ அடிச்சு பிடிச்சு வந்துட்டோம், இதுக்கே நுரை தள்ளிடுச்சு.\\

உனக்கு நுரை தள்ளி முடிஞ்சுடுச்சா? எனக்கு இன்னும் தள்ளிக்கிட்டே இருக்குப்பா ;(

கோபிநாத் said...

\\நினைச்சு பாத்தாலே தலைய சுத்துது. அதிலும் ஒரு திருச்சி பொண்ணு 1200 க்கு 1190 எடுத்து இருக்கு. எப்படிய்யா இது எல்லாம்..\\

அந்த பொண்ணுக்கு அந்த 10 மார்க இல்லையேன்னு தலைய சுத்துதாம்....

Syam said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...:-)

Syam said...

//தேவையில்லாத பல விசயங்களை நோக்கி மனம் இழுக்கும், போகலாம் ஆனா அதில் மாட்டி மிஸ் ஆயிடாதீங்க//

சத்யராஜ் ஸ்டைல்ல சொன்னா...சந்தோசமாவும் இருங்க சாக்கரதையாவும் இருங்க....:-)

Syam said...

//1190 எடுத்து இருக்கு. எப்படிய்யா இது எல்லாம்... பங்கு, உனக்கு ஏதும் புலப்படுதா? நாம இதை எல்லாம் நினைச்சு பாத்தோமா? //

நான் எல்லாம் சத்யமா 190 நினைச்சு பாத்தேன்...1000 எடுக்க நிறைய பேரால முடியும்...100 எடுக்கு கொஞ்ச பேரால தான் முடியும்...:-)

Arunkumar said...

தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

ஹ்ம்ம் எல்லாம் பசங்களோட பெருந்தன்மை :)

சிங்கம்லே ACE !! said...

தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

//நாங்க ஏதோ அடிச்சு பிடிச்சு வந்துட்டோம், இதுக்கே நுரை தள்ளிடுச்சு//

ரிப்பீட்டே.. :)

நாகை சிவா said...

//உனக்கு நுரை தள்ளி முடிஞ்சுடுச்சா? எனக்கு இன்னும் தள்ளிக்கிட்டே இருக்குப்பா ;( //

அடுத்த இடத்தை பிடிக்க என்று சொல்லு, அதுக்கு நான் தலைகீழா நின்னு தண்ணி குடிக்க முயற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.

//அந்த பொண்ணுக்கு அந்த 10 மார்க இல்லையேன்னு தலைய சுத்துதாம்.... //

அது சரி....

நாகை சிவா said...

//சத்யராஜ் ஸ்டைல்ல சொன்னா...சந்தோசமாவும் இருங்க சாக்கரதையாவும் இருங்க....:-) //

சுருக்கமா ஆனா திருத்தமா சொல்லிட்ட பங்கு.

//நான் எல்லாம் சத்யமா 190 நினைச்சு பாத்தேன்...1000 எடுக்க நிறைய பேரால முடியும்...100 எடுக்கு கொஞ்ச பேரால தான் முடியும்...:-) //

இது மேட்டரு, இத சொன்னதுக்கு தான் எங்க அய்யன் நாலு நாள் தொடர்ந்து திட்டினார். :-(

நாகை சிவா said...

//ஹ்ம்ம் எல்லாம் பசங்களோட பெருந்தன்மை :) //

உண்மை தான் அருண்! ஆனா நம்ம பெருந்தன்மைய ஒத்துக்குற பெருந்தன்மை அவங்களுக்கு இல்ல...

நாகை சிவா said...

//ரிப்பீட்டே.. :) //

சிங்கமண்ணனே நல்லா அடிக்குறீங்க
......
ரீப்பிட்டே....

கீதா சாம்பசிவம் said...

உள்ளே வரதுக்கே பெரும்பாடாப் போயிடுச்சு, இதிலே என்னத்தைக் கருத்துச் சொல்லறது?

மின்னுது மின்னல் said...

///
அடுத்த இடத்தை பிடிக்க என்று சொல்லு, அதுக்கு நான் தலைகீழா நின்னு தண்ணி குடிக்க முயற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.

///


ஒவரா தண்ணி அடிச்ச இப்படிதான்..:)

வடுவூர் குமார் said...

என் பையனுக்கு அனுப்பிட்டேன்.தேவைப்படும் அறிவுரைகள்.

நாகை சிவா said...

மனதின் ஒசை சொன்னது

நல்ல பதிவு..தேவையான அறிவுரைகள்.

//ENJOY EVERYTHING
OVER DO NOTHING //

பசங்களுக்கு அவங்க எடுத்துக்கர மாதிரி யாரும் சொல்றதில்ல.. அத சரியா செஞ்சிருக்க.

ஜி said...

odiதேர்ச்சிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் :)))

அருமையான அறிவுரைகள்...

SathyaPriyan said...

தண்ணீருக்கடியில் எவ்வளவு அமுக்குகிறோமோ அவ்வளவு வேகமாக வெளியில் வரும் பந்து போல 12 ஆவது வரை அமுக்கி வைக்கப்பட்டதால் கல்லூரியில் அவர்கள் தடம் புரள வாய்ப்புகள் அதிகம். இது என் கருத்து.

என்னை பொருத்த வரை இந்த 1190 எந்த அளவிற்கு அவர்களுக்கு வாழ்க்கையில் உதவும் என்பது தெரியவில்லை. IIT/BITS போன்ற ஒரு சில கல்லூரிகளை தவிர வேறு அனைத்தும் WHAT, DEFINE என்பதை தான் கேட்கின்றன. WHY, HOW என்பதில் கவனம் செலுத்துவது இல்லை.

படித்து முடித்த பின் இவர்கள் பிடுங்கப்போகும் ஆணிகளின் தன்மையை வைத்து பார்க்கும் போது 1090 திற்கும் 1190 திற்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

Infact I would rate those who got 1090 lucky because they would have enjoyed the high school life much better than those who got the state first rank.

மனதின் ஓசை said...

//படித்து முடித்த பின் இவர்கள் பிடுங்கப்போகும் ஆணிகளின் தன்மையை வைத்து பார்க்கும் போது 1090 திற்கும் 1190 திற்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

Infact I would rate those who got 1090 lucky because they would have enjoyed the high school life much better than those who got the state first rank.//

ரிப்பிட்ட்டேய்...950க்கும் 1190க்குமே பெரிய வித்தியாசம் இல்லை...

Anonymous said...

கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

கும்மாங்கோ. கொய்யாங்கோ.
கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

நாகை சிவா said...

//உள்ளே வரதுக்கே பெரும்பாடாப் போயிடுச்சு, இதிலே என்னத்தைக் கருத்துச் சொல்லறது? //

இதே வேலையா போச்சு உங்களுக்கு.... என்னத்த சொல்ல, என்னமோ பண்ணுங்க.... ஆனா ஒன்னு உங்க கருத்தை தெரிஞ்ச்சுக்க இந்த பதிவுலகமே ஆவலோட இருக்கு.... ஆமாம்

நாகை சிவா said...

//ஒவரா தண்ணி அடிச்ச இப்படிதான்..:) //

யோவ் மின்னல், நீ வர வர சந்தடி சாக்குல அணுகுண்ட வீசிட்டு போய்கிட்டு இருக்க. வேணாம் நம்ம எல்லாம் ஒரே ஊர்க்காரங்க.... நல்லாவா இருக்கு சொல்லு....

நாகை சிவா said...

//என் பையனுக்கு அனுப்பிட்டேன்.தேவைப்படும் அறிவுரைகள். //

:-)

குமார் அண்ணன், பையன் இந்தியாவிலா படிக்குறான்?

நாகை சிவா said...

//பசங்களுக்கு அவங்க எடுத்துக்கர மாதிரி யாரும் சொல்றதில்ல.. அத சரியா செஞ்சிருக்க. //

ம.ஒ. நாமா இன்னும் பசங்க தானே... சாரி நானும்.... ;-)

நாகை சிவா said...

//odiதேர்ச்சிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் :)))

அருமையான அறிவுரைகள்... //

அண்ணாத்த மாநில அளவில் மார்க் எடுத்த உன் பெயர் டிஸ்கில போட இருந்தேன் விட்டுட்டேன், சாரிம்மா, வேற எதாவது சமயத்தில் கூவிடுறேன் அதை....

நாகை சிவா said...

//தண்ணீருக்கடியில் எவ்வளவு அமுக்குகிறோமோ அவ்வளவு வேகமாக வெளியில் வரும் பந்து போல 12 ஆவது வரை அமுக்கி வைக்கப்பட்டதால் கல்லூரியில் அவர்கள் தடம் புரள வாய்ப்புகள் அதிகம். இது என் கருத்து.//

சரியா சொன்னீங்க... பட்டத்தின் நூலை சட்னு விட்ட மாதிரி....

//Infact I would rate those who got 1090 lucky because they would have enjoyed the high school life much better than those who got the state first rank. //

1090 யே ரொம்ப அதிகம்... நம் செட்ல 800 + எடுத்தவன் எல்லாம் நல்லாவே இருக்காங்க... நான் கூறியது போல மதிப்பெண்களால் மதிக்கப்படுவது இல்லை மதி....

நாகை சிவா said...

//ரிப்பிட்ட்டேய்...950க்கும் 1190க்குமே பெரிய வித்தியாசம் இல்லை... //

அண்ணன், நீங்க இம்புட்டு மார்க் எடுத்தவரா... ஆகா... இது தெரியாம போச்சே... இம்புட்டு நாளா...

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா, +2 பசங்களுக்கு பெரியண்ணனா நீ அட்வைஸ் குடுக்குற. இங்க நான் வந்து என்ன சொல்லறது. சரி பெரிய மனுசனா லட்சணமா -
"வெற்றி பெற்ற மாணவ கண்மணிகளுக்கு என் வாழ்த்துக்கள்" அப்படின்னு அறிக்கை விட்டு அடங்கிக்கிறேன்.

ஓக்கேவா?

சீனு said...

//
"பெண்கள் எல்லாம் தங்க மெடல் ஜெயித்து வந்தாங்க, பசங்களை தான் எங்க அவங்க படிக்க விட்டாங்க என்ற பாடல் வரிகள் பசுமையாக நினைவில் எழுந்த போதிலும்".,

"மீண்டும் ஒருமுறை மாணவ சமுதாயம் பெண்களுக்கு தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்து நம் பெருந்தன்மையை நிலை நிறுத்தியதை கண்டு உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்த போதிலும்".,

"மதிப்பெண்களால் மதிக்கப்படுவதில்லை மதி என்பது என் மதிக்கு தோன்றிய போதிலும்".,
//

well said..

"வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்."

மு.கார்த்திகேயன் said...

//நாங்க ஏதோ அடிச்சு பிடிச்சு வந்துட்டோம், இதுக்கே நுரை தள்ளிடுச்சு. //

கரீக்கிட்டா சொன்னப்பா மாப்ஸ்.. தலைக்கு புக்கை வச்சு படுத்து, சரஸ்வதி பூஜைக்கு புக்கை வச்சு கும்பிட்டு..ஸ்ஸ்ஸ்ஸ்..உண்மையிலே நுரை தள்ளத் தான் செஞ்சது மாப்ஸ்..

Raji said...

First time to ur blog...Ellam Nagainu paeru irundhuchaa adhunaala etti paarthaen...My school days paathi anga dhaan poachu....So enakku pidicha placela onnum...


Congrats pa ella maanava maanaviyarukkum...

Nice advise...

வெட்டிப்பயல் said...

புலி,
நம்ம பெருந்தன்மையை அழகாக ஊருக்கு எடுத்து உரைத்தாய்...

வெட்டிப்பயல் said...

//1, புத்தி சொல்லுறாராம், அப்படினு தோணும், தோணனும். இல்லாட்டி எங்கயோ தப்புனு அர்த்தம். நாங்க ஏதோ அடிச்சு பிடிச்சு வந்துட்டோம், இதுக்கே நுரை தள்ளிடுச்சு. அப்ப இன்னும் 5, 6 வருசம் கழித்து எப்படி இருக்கும் பாத்துக்கோங்க.//

இப்பவெல்லாம் நாமலா படிச்சி பாஸானோம்னு நானே என்னை ஆச்சரியமா பாத்துக்கறேனா பாறேன் ;)