Thursday, March 22, 2007

கிறுக்குத்தனமா???

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி (ஆண்ட்டி இல்லாப்பா, ஆண்டி தான்). அது போல சிவனே னு இருந்த என்னை என்னுள் இருக்கும் ஐந்து WEIRD விசயங்களை எழுத சொல்லி இல்ல கன்பூஸ் பண்ணி என்னய பூஸ் போக வச்சுட்டாங்க மை பிரண்டு. (பெயரை மட்டும் பிரண்ட் னு வச்சுக்கிட்டு என்ன வில்லத்தனம் பாருங்க!)

Weird னு சொன்னவுடன் நமக்கு ஒன்னும் புரியல, இந்த படத்த பாருங்க,


இது போல ஏதாச்சும் நமக்கு இருக்கா யோசிச்சேன், அப்படி ஏதும் இல்ல பின்ன வேற எதப்பத்தி சொல்லுறாங்கனு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, கூகிள் டாக்கில் வந்த ஒரு நல்லவங்க, ஏய் அகராதி பிடிச்சவனே அகராதிய புரட்டி என்னனு பாக்க வேண்டியது தானே சொல்ல, கிடைத்த பதில்கள அப்படியே பிடிச்சு அவங்கக்கிட்ட கொட்டினேன் - unusual, supernatural, strange, eldritch, uncanny, unearthly. அவங்க இது எல்லாத்தையும் விட்டுபுட்டு Peculiar சொல்லி, உன்க்கிட்ட இருக்குற different na அதாவது அடுத்தவங்க நோட் பண்ணுற வித்தியாசயமான குணங்கள்னு சொல்ல, அடுத்த கன்பூஸ்சன்

மத்தவங்க போல நாமளும் கையாலே தானே சாப்பிடுறோம், காலால் தான் நடக்குறோம், வாயால் தான் பேசுறோம், அவ்வளவு ஏன் காதால் தான் கேட்கிறோம்னு கேட்டா இப்படி குதர்க்கமா சிந்திக்குற பாரு அதுக்கு பெயர் தான் Weird சொல்லிட்டு அவங்களே ஒரு 5 பாயிண்டும் சொல்லி ஒரளவு எனக்கு புரியவச்சுட்டு அவங்க குழம்பி போய் இடத்த காலி பன்ணிட்டாங்க...அதனால் நானா ஒரு மாதிரி புரிஞ்சிக்கிட்டு, அவனின்றி ஒரு அணுவும் அசையாதுனு முடிவு பண்ணி அவன் மேல் பாரத்தை போட்டு, ஸ்டார்ட்டிங் மை நான் சென்ஸ்.

நக்கல்
பழகியவர்களிடம் மட்டும் தான் இந்த நக்கல் விடுவது எல்லாம். சில சமயம் மற்றவர்களிடமும். ஏன்னா நமக்குனே வந்து கேள்வி கேட்பானுங்க. அதிலும் நம்மக்கூட இருக்கும் பசங்க பாவம் தான். அவனுங்க, ஏண்டா இவன்க்கிட்ட வாய கொடுத்தோம் அப்படிங்குற அளவுக்கு, எப்ப எப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்ப எல்லாம் நக்கல் அடிச்சிடுறது. உனக்கு இந்த வாய் மட்டும் இல்லாட்டி நாய் கூட மதிக்காது சொன்னானுங்க. இப்ப எல்லாம் ஏய்! மேன், இந்த வாய் இல்லாட்டி டாக் வந்து உன் பாட்டத்தை கவ்விட்டு ஒடிடும் அப்படிறானுங்க. அது ஒரு அளவு உண்மையும் கூட நம்ம இந்த அளவுக்கு வந்ததுக்கு என் அக்கடமிக் பேக் கிரவுண்ட் விட இந்த மவுத் பேக் கிரவுண்ட் தான் உதவுச்சு.

பொங்குறது
இது இங்க அவ்வப்போது நடக்கும். சிங்கத்தை சீண்டி பாப்பது போல் புலியை வந்து பிராண்டி பாத்துடுவானுங்க. நம்மள பிராண்டுனா நாம திருப்பி டபுள் மடங்கா பிராண்டி வைச்சுடுவேன். இங்க தான் பல நாட்டில் இருந்து சில லாடு லப்க்கு தாஸ் இருப்பாங்களே, அவர்களுடைய அதிகாரத்தை அடுத்தவன்க்கிட்ட காட்டுவதில் தான் குறியா இருப்பானுங்க. கம்யூனிகேஸ்சன் ல ஏதாச்சும் ஒரு நெட்வொர்க டவுன் ஆவது சகஜம். நாமா அது என்னனு பாத்துக்கிட்டு இருக்கும் போது சரியா வருவானுங்க. வாய்ய சரியா புடுங்குவானுங்க, சரியாகுமா இல்ல உன் தலைய போய் பாக்கவா அப்படினு நூல் விட்டு பாப்பானுங்க, இத கேட்ட வேகத்துக்கு பால் பொங்குற மாதிரி சர்ருனு பொங்கி அது உன் திறமையை பொருத்துனு போயிக்கிட்ட இருப்பது. இப்ப எல்லாம் யாருச்சும் வந்தாலே நம்ம தலயே முதல பேசிட்டு வடிக்கட்டி தான் நம்மக்கிட்ட அனுப்புறார்.

தனிமை
நம்மளுக்கு இது கொஞ்சம் பிடித்த விசயம். பெரும்பாலான வேலைகளை தனிமையில் அம்ர்ந்து செய்வது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோனோ அது சரியாக அமையும். டீம் வொர்க் வேற இது வேற. எங்கள் துறைக்கு வரும் சவுத் ஏசியன்களை தவிர மற்றவர்கள் வந்தால் நிமிர்ந்து பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு பொட்டிக்குள் முழ்கி விடுவேன். மாலை நேரங்களில் இது இன்னும் மோசம், பதிவுலக களப்பணியில் இருக்கும் போது நானாக சிரிப்பதை பார்த்து இவனுக்கு என்னமோ ஆச்சுடா காலையில் எல்லாம் நல்லா தான் இருக்கான், சாயங்காலம் ஆனா ஒரு மார்க்கமா ஆயிடுறானேனு சொன்னவங்க அனேகம். இரவிலும் மற்ற நண்பர்கள் உறங்கிய பிறகும் வெளியில் தமிழ்சை கேட்டுக் கொண்டு யோசித்த நேரங்கள் அதிகம்.

உணவு
இந்த விசயம் நம்மளை ரொம்பவே தனிமைப்படுத்தி காட்டும். பீப், பன்னி, டூனா பீஷ், அப்படி இப்படினு ஏகப்பட்டது சாப்பிட மாட்டேன். அதிலும் பிரட் னா காதா தூரம் ஒடுவேன். கிடைப்பதை சாப்பிடனும் என்று சொன்னால் எனக்கு பிடிப்பது கிடைக்கும் போது மற்றவற்றை ஏதுக்கு சாப்பிடனும் என்று ஏகத்தாளம் பேசும் ஆளு நாம். ஆனா மற்ற நாட்டுக்காரங்க இருக்காங்களே, அத ஏன் சாப்பிட மாட்டேங்குற, இத ஏன் சாப்பிட மாட்டேங்குற கேள்விய மட்டும் நல்லா கேட்டுட்டு, நம்ம வீட்டுக்கு சாப்பிட வரவும் போது, இத்தன வெரைட்டி இருக்கா உங்க உணவில் அப்படினு சப்புக் கொட்டி சாப்பிட்டுவானுங்க.

மொழி
நான் ஹைத்தியில் இருந்து போது பிரஞ்ச், க்ரியோல்(Creole), ஸ்பானிஷ், இங்கு அரபி, ஹிந்தி போன்ற மொழிகள் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தும் ஏனோ நான் இது வரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. வாய்ப்புகளை தவற விடுவது தவறு என்பது எனக்கு புரிந்தும், சிலர் சொல்லியும் கூட பிற மொழி கற்றுக் கொள்வதில் ஒரு ஆர்வம் ஏனோ இது வரை வர மாட்டேன் என்கிறது. ஆர்வம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா விசயத்தையும் செய்ய முடியாதே!!!

இப்ப ஆள் பிடிக்குற வேலை

1.சிறுமுயற்சி முத்துலெட்சுமி
2.ஒரமாக நடக்கும் ராதா
(40 % ஒதுக்கீடு கொடுத்து இருக்கோம்... கொடுத்து பட்டத்தை திரும்ப பெற எதாச்சும் வழி இருக்கானு பாருங்க மக்கா... )
3. உங்கள் எங்கள் நண்பன் சரா
4. 50 மணி நேரம் ஆணி புடுங்கும் கார்த்திக்
5. பங்கு சந்தோஷ் aka Santhosh

பி.கு : Weird க்கு கிறுக்குத்தனம் என்று அர்த்தம் இருப்பதாக கொத்துஸ் சொல்லி அதை ராம்ஸ் தொடர்ந்து என்னையும் கிறுக்கன் வகையில் சேர்த்து இருக்கார்(சற்று நேரம் முன்பு). மறுபடியும் இதை பற்றி யோசித்தேன் என்றால் கிறுக்கு முற்றி விடும். அதனால ஆள விடுங்க சாமிகளா...

54 comments:

கார்த்திக் பிரபு said...

நம்மளையும் எழுது சொன்னாங்க

நல்லா எழுதி இருக்கீங்க

கார்த்திக் பிரபு said...

நம்மளையும் எழுது சொன்னாங்க

நல்லா எழுதி இருக்கீங்க

அபி அப்பா said...

நா இப்போதான் கிறுக்கிட்டு இங்க வந்து பாத்தா புலி தன் நகத்தால் கிறுக்கி வச்சிருக்கு:-))

கவிதா | Kavitha said...

//கூகிள் டாக்கில் வந்த ஒரு நல்லவங்க, ஏய் அகராதி பிடிச்சவனே அகராதிய புரட்டி என்னனு பாக்க வேண்டியது தானே சொல்ல, கிடைத்த பதில்கள அப்படியே பிடிச்சு அவங்கக்கிட்ட கொட்டினேன் - unusual, supernatural, strange, eldritch, uncanny, unearthly. அவங்க இது எல்லாத்தையும் விட்டுபுட்டு Peculiar சொல்லி, உன்க்கிட்ட இருக்குற different na அதாவது அடுத்தவங்க நோட் பண்ணுற வித்தியாசயமான குணங்கள்னு சொல்ல, அடுத்த கன்பூஸ்சன்

மத்தவங்க போல நாமளும் கையாலே தானே சாப்பிடுறோம், காலால் தான் நடக்குறோம், வாயால் தான் பேசுறோம், அவ்வளவு ஏன் காதால் தான் கேட்கிறோம்னு கேட்டா இப்படி குதர்க்கமா சிந்திக்குற பாரு அதுக்கு பெயர் தான் Weird சொல்லிட்டு அவங்களே ஒரு 5 பாயிண்டும் சொல்லி ஒரளவு எனக்கு புரியவச்சுட்டு அவங்க குழம்பி போய் இடத்த காலி பன்ணிட்டாங்க...//

சிவா..யாரு சிவா அந்த அறிவாளி திலகம்?!!!!!!!!

வல்லிசிம்ஹன் said...

நாங்களும் எழுதிட்டோமே.

உங்களை மாதிரி பி(ரி)ச்சு பிச்சு எழுத முடியல.
ரொம்ப விஷயத்தில எல்லோருமே ஒத்துப் போறொம். அதான் பதியறோமோ:-0)

கவிதா | Kavitha said...

//உங்களை மாதிரி பி(ரி)ச்சு பிச்சு எழுத முடியல.
ரொம்ப விஷயத்தில எல்லோருமே ஒத்துப் போறொம். அதான் பதியறோமோ:-0)
//

ஆமா எனக்கு கூட யாரோடது படிச்சாலும் அப்படித்தான் தோணுது..

இலவசக்கொத்தனார் said...

புலி,

//உனக்கு இந்த வாய் மட்டும் இல்லாட்டி நாய் கூட மதிக்காது சொன்னானுங்க.//ஹிஹி

//அதிலும் பிரட் னா காதா தூரம் ஒடுவேன்.//ஹிஹி

//ஆர்வம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்க்காக எல்லா விசயத்தையும் செய்ய முடியாதே!!!// தமிழ் கத்துக்கவுமா ஆர்வம் இல்லை. 'ற்' பின்னாடி மெய்யெழுத்து வரக்கூடாது. எம்புட்டு வாட்டி சொல்லறேன்.

Unknown said...

மாப்பூ உனக்கும் எனக்கும் நிறைய ஒத்துப் போகுதுப்பா.. செட் சேருவோமா செட்...

மு.கார்த்திகேயன் said...

//பெயரை மட்டும் பிரண்ட் னு வச்சுக்கிட்டு என்ன வில்லத்தனம் பாருங்க//

அப்படி எல்லாம் சொல்லப்படாது.. பாவம் அது பச்சபுள்ள, மை பிரண்ட்,

மு.கார்த்திகேயன் said...

என்னப்பா, எங்க போனாலும் இதே தலைப்பு..

நாகை சிவா said...

//மாப்பூ உனக்கும் எனக்கும் நிறைய ஒத்துப் போகுதுப்பா.. செட் சேருவோமா செட்... //

என்ன செட், சேவிங் செட் னு.

நீங்க எல்லாம் பேட் பாய்ஸ் னு எங்க மம்மி சொல்லி இருக்காங்க.....

//தமிழ் கத்துக்கவுமா ஆர்வம் இல்லை. //

நிறைய இருக்கு கொத்துஸ். :-))))

//'ற்' பின்னாடி மெய்யெழுத்து வரக்கூடாது. எம்புட்டு வாட்டி சொல்லறேன். //

இது தட்டச்சு பிழைனு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க....

நாகை சிவா said...

//சிவா..யாரு சிவா அந்த அறிவாளி திலகம்?!!!!!!!! //

யாரு அது அப்படிங்குறது அப்புறம் இருக்கட்டும், அவங்கள எப்படி நீங்க அறிவாளி னு டிக்லர் பண்ணீங்க.... அத சொல்லுங்க முதல....:-)

Geetha Sambasivam said...

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். உங்களையாவது மை ஃப்ரண்ட் ஒருத்தர்தான் சொன்னாங்க. என்னைப் பாருங்க, இந்த அபி அப்பா வேறே உண்மையைச் சொல்றேன் பேர்வழின்னு என்னையும் இழுத்து விட்டுட்டாரு. என்னோட கணவருக்கு ஒரே ஆச்சரியம்? அதுக்குள்ளே எப்படிக் கண்டு பிடிச்சாருன்னு? சொன்னேனா? எல்லாம் உங்க ஊர்தான்னு. ஒரே பெருமை தாங்கலை போங்க! :))))))) எல்லாத்துக்கும் சேத்து எழுதிட்டேன்.

Syam said...

//இந்த அளவுக்கு வந்ததுக்கு என் அக்கடமிக் பேக் கிரவுண்ட் விட இந்த மவுத் பேக் கிரவுண்ட் தான் உதவுச்சு//

ரொம்ப சரி பங்கு...:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதலில் நாப்பது கொடுத்ததுக்கு நன்றி.
ரொம்ப நல்லவர் நீங்க...பட்டம் போதுமா.

ஆனா என்னோட கிறுக்குத்தனத்தை பத்தி
எழுத சொல்லிட்டீங்களே. ...
எல்லாரோடது படிச்சு எல்லாம் நம்மளுது மாதிரியே இருக்கே சரி.. ரோம் ல இருக்கும் போது ரோமனா இருக்க
நானும் என் கிறுக்கு கொஞ்சம் எழுதறேன்.நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அது ஒரு அளவு உண்மையும் கூட நம்ம இந்த அளவுக்கு வந்ததுக்கு என் அக்கடமிக் பேக் கிரவுண்ட் விட இந்த மவுத் பேக் கிரவுண்ட் தான் உதவுச்சு.//

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்ன்னு
சொல்லுவாங்க அது மாதிரி .

VSK said...

சிவா,
இந்த வியர்டுன்ற வார்த்தையை வெச்சுகிட்டு இவங்கள்லாம் அடிச்ச லூட்டி இருக்கே... அப்பப்பா... தங்க முடியலை.

நீங்களாவது அகராதியைப் புரட்டிப் பார்த்துட்டு எழுதினீங்களே!

இதாங்க ஒரிஜினல் வியர்டு!

நல்லா இருங்க சாமி!
:))

நாகை சிவா said...

//நம்மளையும் எழுது சொன்னாங்க

நல்லா எழுதி இருக்கீங்க //

வாங்க கார்த்திக், உங்களுடையதை பார்த்தேன்.

//நா இப்போதான் கிறுக்கிட்டு இங்க வந்து பாத்தா புலி தன் நகத்தால் கிறுக்கி வச்சிருக்கு:-)) //

நீங்க கிறுக்கியதை கண்டேன், மற்ற இடத்தில் கிறுக்கியதையும் கண்டேன்

நாகை சிவா said...

//நாங்களும் எழுதிட்டோமே.
உங்களை மாதிரி பி(ரி)ச்சு பிச்சு எழுத முடியல.//

பார்த்தேன் வல்லி, பிரிச்சு எழுதுவது ஒன்னும் பெரிய விசயமே இல்ல. எழுதிட்டு இரண்டு முறை படிச்சு பாருங்க, நீங்களே அழகாக பத்தி பிரித்து விடலாம். :-)

//ரொம்ப விஷயத்தில எல்லோருமே ஒத்துப் போறொம். அதான் பதியறோமோ:-0)//
//ஆமா எனக்கு கூட யாரோடது படிச்சாலும் அப்படித்தான் தோணுது.. ///

என்ன சொல்லுறீங்க நீங்க இருவரும், ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் நாம் எல்லாம் என்று சொல்லுறீங்களா?

பார்க்க ஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அவர்கள் செயல்பாடுகள் மூலம் வேறுப்படுவார்கள் என்பது என் கருத்து.

நாகை சிவா said...

//அப்படி எல்லாம் சொல்லப்படாது.. பாவம் அது பச்சபுள்ள, மை பிரண்ட்//

மாம்ஸ்.... இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே ;-)

//என்னப்பா, எங்க போனாலும் இதே தலைப்பு..//

ஆமாம் மாம்ஸ், ரவுண்ட் கட்டி அடிக்குறாங்க....

நாகை சிவா said...

//ரோம் ல இருக்கும் போது ரோமனா இருக்க நானும் என் கிறுக்கு கொஞ்சம் எழுதறேன்.நன்றி. //

அது என்னங்க ரோம் ல இருக்கும் போது ரோமனா இருக்கனும், இதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் நானாக தான் இருப்பேன், எங்க போனாலும் நான் இந்தியன் தான். என்னால் அட்ஜஸ்ட் பண்ணி போக தான் முடியும், அதுவாகவே மாற முடியாது....

Syam said...

பங்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்...ஒரு கமெண்டுக்கு மேல போட விட மாட்டேங்குது...இது வருதானு பாக்கலாம் :-)

Syam said...

//பீப், பன்னி, டூனா பீஷ், அப்படி இப்படினு ஏகப்பட்டது சாப்பிட மாட்டேன்//

எனக்கு சாப்பாட்டு விசயத்துல இப்படி பிரிச்சு பாக்கரது புடிக்காது :-)

Syam said...

//பிற மொழி கற்றுக் கொள்வதில் ஒரு ஆர்வம் ஏனோ இது வரை வர மாட்டேன் என்கிறது//

எனக்கு ஆர்வம் இருக்கு...ஆனா மண்டைல ஏற மாட்டேங்குது :-)

Syam said...

ஒரு கோட்டர் :-)

Radha Sriram said...

//மாலை நேரங்களில் இது இன்னும் மோசம், பதிவுலக களப்பணியில் இருக்கும் போது நானாக சிரிப்பதை பார்த்து இவனுக்கு என்னமோ ஆச்சுடா காலையில் எல்லாம் நல்லா தான் இருக்கான், சாயங்காலம் ஆனா ஒரு மார்க்கமா ஆயிடுறானேனு சொன்னவங்க அனேகம்//

இந்த weirdness நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லார் கிட்டயும் இருக்கும்னு நினைக்கரேன் சிவா!:)

இவ்வ்ளவு சான்ஸ் இருந்தும் மொழிகள கத்துக்காம விட்டுடீங்களே!!ப்ச்!

நான் எவ்வளோ weird ன்னு உங்களுக்கு தெரியாது.தெரிஞ்சப்பரம் உங்க புலி நகத்தால உங்களையே பிராண்டிக்க போரீங்க பாருங்க:):):)

என்ன கூப்பிட்டதுக்கு நன்றி சிவா!!

கோபிநாத் said...

எப்பா....நீயும் போட்டுட்டியா ரொம்ப மகிழ்ச்சி ;-)))

மை ஃபிரண்டு சீக்கிரம் வந்து இந்த பயலுக்கு மார்க் போடுங்க

கோபிநாத் said...

\\அதுக்கு பெயர் தான் Weird சொல்லிட்டு அவங்களே ஒரு 5 பாயிண்டும் சொல்லி ஒரளவு எனக்கு புரியவச்சுட்டு அவங்க குழம்பி போய் இடத்த காலி பன்ணிட்டாங்க..\\

பாவம் அவுங்க எந்த அளவுக்கு போட்டு தக்கியிருந்தின்னா அவுங்களே 5 பாயிண்டுகளை கொடுத்துட்டு போயிருப்பாங்க ;-)))

கோபிநாத் said...

\\ பெரும்பாலான வேலைகளை தனிமையில் அம்ர்ந்து செய்வது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோனோ அது சரியாக அமையும்.\\

ரொம்ப நல்லலலலலலலலல Weird புலி ;-))))

நாகை சிவா said...

//மை ஃபிரண்டு சீக்கிரம் வந்து இந்த பயலுக்கு மார்க் போடுங்க //

ஏலேய், இந்த பஞ்சாயத்து எல்லாம் இங்க ஆவது, நான் புல் மார்க் தான். :-)


//பாவம் அவுங்க எந்த அளவுக்கு போட்டு தக்கியிருந்தின்னா அவுங்களே 5 பாயிண்டுகளை கொடுத்துட்டு போயிருப்பாங்க ;-))) //

தப்பா நினைக்குற பாரு....

அவங்க கொடுத்தில் இருந்து ஒரு மூனு மேட்டர இங்க யூஸ் பண்ணி இருக்கேன்.

//ரொம்ப நல்லலலலலலலலல Weird புலி ;-)))) //

அதுல என்னய்யா இப்படி ஒரு சிரிப்பு உனக்கு

நாகை சிவா said...

//இந்த weirdness நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லார் கிட்டயும் இருக்கும்னு நினைக்கரேன் சிவா!:)//

ஆமாங்க, இதுக்குள் வந்தால் தான் நாம் தனி உலகத்தில் இருப்பது போல் இருக்கே!

//இவ்வ்ளவு சான்ஸ் இருந்தும் மொழிகள கத்துக்காம விட்டுடீங்களே!!ப்ச்!//

சான்ஸ் இருந்துச்சுங்க, கத்துக்குற அறிவு தான் இல்ல நமக்கு:-(

நீங்க எழுதுங்க பிராண்டிக்குறேனா, இல்ல பிராண்டுறேனா தெரிந்து விடும்.

நாகை சிவா said...

//எனக்கு சாப்பாட்டு விசயத்துல இப்படி பிரிச்சு பாக்கரது புடிக்காது :-) //

என்ன பண்ணுறது பங்கு, மீன், சிக்கன், நண்டு, இறால் விதவிதமா சாப்பிட்டு இத எல்லாம் பாத்தாலே சே இருக்கு....ருசிக்கு சாப்பிட்டே வளர்ந்துட்டோம்....

//எனக்கு ஆர்வம் இருக்கு...ஆனா மண்டைல ஏற மாட்டேங்குது :-) //

சேம் பிளட்....

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

புலி நல்லாத்தான் பிராண்டுது :-))))

MyFriend said...

எப்படியோ! உங்க வியர்ட் போஸ்ட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு! ;-)

//(பெயரை மட்டும் பிரண்ட் னு வச்சுக்கிட்டு என்ன வில்லத்தனம் பாருங்க!)//
வில்லத்தனமா?
உங்களைப் பற்றி நீங்களே அறிய வேண்டும் என்று நான் தந்த ஒரு assignment இது!

நாகை சிவா said...

//Syam said...
ஒரு கோட்டர் :-) //

குவாட்டர் என்ன நேரா பாக்கும் போது புல்லே வாங்கி தரேன். ;-)

MyFriend said...

புலி எப்போது படத்துல இருக்கும் நாயைபோல மாறியது? அதுவும் நாக்கு நீட்ட்டா?

MyFriend said...

புலி, உங்க போஸ்ட் படிச்சு டயர்ட் ஆயிட்டேன். இப்போது காலை 7 ஆகப்போகுது. நான் சிறொது நேரம் தூங்கி எழுந்திருச்சி வந்து மார்க் போடுறேன். ;-)

நாகை சிவா said...

//முதலில் நாப்பது கொடுத்ததுக்கு நன்றி.
ரொம்ப நல்லவர் நீங்க...பட்டம் போதுமா.//

அப்ப அப்ப வந்து இது மாதிரி பட்டம் கொடுத்தீங்க உங்களுக்கு சிலை வைக்க ஏற்பாடு பண்ணுவேன்....

//எல்லாம் உங்க ஊர்தான்னு. ஒரே பெருமை தாங்கலை போங்க! :)))))))//

சோழ மக்கள் என்றுமே மேன் மக்கள் தானே!!!!

நம்மள இராம்ஸ் கூப்பிட்டு இருக்காரு. அது என்ன பூவுடன் சேர்ந்த நாரும், யாரு பூ, யாரு நார் கிளியர் பண்ணுங்க...

நாகை சிவா said...

//இந்த வியர்டுன்ற வார்த்தையை வெச்சுகிட்டு இவங்கள்லாம் அடிச்ச லூட்டி இருக்கே... அப்பப்பா... தங்க முடியலை.//

:-)

//நீங்களாவது அகராதியைப் புரட்டிப் பார்த்துட்டு எழுதினீங்களே!
இதாங்க ஒரிஜினல் வியர்டு!
நல்லா இருங்க சாமி!
:))//

புரட்ட வச்சுட்டாங்க....

ஆதி said...

நல்லா எழுதி இருக்கீங்க சிவா சார்.

இதனை கிறுக்குத்தனம் என்று ஏற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை!

கவிதா | Kavitha said...

//யாரு அது அப்படிங்குறது அப்புறம் இருக்கட்டும், அவங்கள எப்படி நீங்க அறிவாளி னு டிக்லர் பண்ணீங்க.... அத சொல்லுங்க முதல....:-)//

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!!! கேள்வி கேட்கப்படாது... ஒன்லி.பதில்.. தான் வரணும்!!...

என்னவோ தெரியாம கேட்டுட்டேன்.ப்பா.. வுட்டுடுங்க...!! :((

அபி அப்பா said...

////எல்லாம் உங்க ஊர்தான்னு. ஒரே பெருமை தாங்கலை போங்க! :)))))))//

சோழ மக்கள் என்றுமே மேன் மக்கள் தானே!!!!//

அப்டி சொல்லு என் செல்லம், கொஞ்சம் கிட்ட வா செல்லம் வந்து ஒரு உம்மா வாங்கிட்டு போய்யா ராசா:-)

நாகை சிவா said...

//ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

புலி நல்லாத்தான் பிராண்டுது :-)))) //

ஹைய்யோ அப்படிங்குறது பார்த்து பயந்துட்டேன், சிரிப்பான பார்த்த பிறகு தான் எனக்கு சிரிப்பு வந்துச்சு.
:-)))))

நாகை சிவா said...

//வில்லத்தனமா?
உங்களைப் பற்றி நீங்களே அறிய வேண்டும் என்று நான் தந்த ஒரு assignment இது! //

அப்புறம் இல்லையா பின்ன ;-)

என்னை பற்றி நான் அறியாமல் பின் வேற யாரு அறிய போறாங்க சொல்லுங்க.... ;-)

நாகை சிவா said...

//புலி எப்போது படத்துல இருக்கும் நாயைபோல மாறியது? அதுவும் நாக்கு நீட்ட்டா? //

தூக்க கலக்கத்தில் இருந்தா அப்படி தான் தெரியும், அப்பால வந்து பாருங்க ;-)

//புலி, உங்க போஸ்ட் படிச்சு டயர்ட் ஆயிட்டேன். இப்போது காலை 7 ஆகப்போகுது. //

என் போஸ்ட படிச்சு டயர்ட் ஆயிட்டிங்களா... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது எல்லாம் ரொம்ப சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//நல்லா எழுதி இருக்கீங்க சிவா சார்.//

நன்றிங்க ஆதி!!!

//இதனை கிறுக்குத்தனம் என்று ஏற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை! //

இது எல்லாம் கிறுக்குத்தனம் என்னாலயும் ஒத்துக் முடியல. சில சமயங்களில் கிறுக்குத்தனமான சில சேட்டைகள் பண்ணுவோம், அதுவும் பள்ளி, கல்லூரியில் அதை எல்லாம் எப்படிங்க எழுதுறது....

நாகை சிவா said...

//ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!!! கேள்வி கேட்கப்படாது... ஒன்லி.பதில்.. தான் வரணும்!!... //

கேள்வி கேட்காமல் வாழ்வு இல்லனு நம்ம வாலி எழுதி, மக்கள் திலகம் சொன்னதை சரியா பாலோ பண்ணிக்கிட்டு இருப்பவன் நான் ;-)

//என்னவோ தெரியாம கேட்டுட்டேன்.ப்பா.. வுட்டுடுங்க...!! :((//

சரி. சரி, அவங்க என் பிரண்டு அப்ப அவங்க எப்படினு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க....;-)

நாகை சிவா said...

//அப்டி சொல்லு என் செல்லம், கொஞ்சம் கிட்ட வா செல்லம் வந்து ஒரு உம்மா வாங்கிட்டு போய்யா ராசா:-) //

வரேன், ஆனா பழக்க தோஷத்தில் கடிச்சு வச்சிட கூடாது சொல்லிட்டேன்.

:-)

MyFriend said...

புலி, நான் வந்துட்டேன் மார்க் போட. ;-)

MyFriend said...

முதல்லையே உங்களுக்கு 5 மார்க்கு கட்டு.. அது ஏன்னு நீங்களே முதல் பத்தி படிச்சு தெரிஞ்சுக்கோங்க புலி..

1- ஓ! அதுனாலத்தான் எங்க கிட்ட எல்லாம் உங்கள் நக்கல் ஜாஸ்தியா இருக்கா?

2- புலியை சீண்டினா பிராண்டிடும்ன்னு உங்க கேரக்டரை கரேக்ட்டா சொன்னதுனாலே இந்த பாய்ண்டுக்கு ஃபுல் மார்க். :-D

3- same pinch.. தனிமை எனக்கும் புடிச்ச விஷயம்தான். ;-)

4- நான் நினச்சேன் நீங்க வானத்துல பறக்குற ஏரோப்லேனையும் கடல்ல போற கப்பலையும் சேற்த்து சாப்பிடுவீங்கன்னு?

5- இது நீங்க தேவ் அண்ணேகிட்டே இருந்து கத்துக்கணும் புலி. :-)


மொத்ததுல உங்க மார்க் = 84%
சந்தோஷமா புலி?

MyFriend said...

நீங்க இதை மூனாவதா செஞு முடிச்சதுக்கு அஞு மார்க் சேர்த்திருக்கேன். இதையும் சேர்த்துதான் 84%.. ;-)

நாகை சிவா said...

//ஓ! அதுனாலத்தான் எங்க கிட்ட எல்லாம் உங்கள் நக்கல் ஜாஸ்தியா இருக்கா?//

உங்ககிட்ட நான் நக்கல் ஜாஸ்தியா அடிக்குறேனா? உங்களை போன்றவர்கள் முன் நான் இந்த விசயத்தில் தவழும் குழந்தை தானே!

//முதல்லையே உங்களுக்கு 5 மார்க்கு கட்டு.. அது ஏன்னு நீங்களே முதல் பத்தி படிச்சு தெரிஞ்சுக்கோங்க புலி..//

இது சிட்டிங்....

//same pinch.. தனிமை எனக்கும் புடிச்ச விஷயம்தான். ;-)//

அதுக்குனு கிள்ள எல்லாம் கூடாது சொல்லிட்டேன். உங்க தனிமையில் கம்யூட்டர் இருக்கும்ல????

//நான் நினச்சேன் நீங்க வானத்துல பறக்குற ஏரோப்லேனையும் கடல்ல போற கப்பலையும் சேற்த்து சாப்பிடுவீங்கன்னு?//

அவ்வளவு வசதி பத்தாதுங்க நமக்கு...

நாகை சிவா said...

//மொத்ததுல உங்க மார்க் = 84%
சந்தோஷமா புலி? //

இல்ல, நான் எல்லாம் 90 மார்க் குறைந்து எடுத்ததே இல்ல, என்னய நீங்க பீல் பண்ண வச்சுட்டீங்க....

vasanth said...

அடீச்சி உடுடா அடீச்சி உடுடா !!!!