Friday, March 09, 2007

ஆண்டு அறிக்கை

தமிழ் பதிவுலகில் பதிவு போட்டு விளையாட ஆரம்பித்து ஒரு வருசம் ஆச்சங்க. அதான் ஆண்டு அறிக்கை வாசித்து விட்டு போகலாமேனு இந்த பதிவு.

அங்க இங்க சுற்றி தமிழ்பதிவுலக்கு வந்து, பிளாக்கரில் ஒரு கணக்கை தொடங்கி அப்ப அப்ப பதிவு போட்டுக் கொண்டு இருந்தேன். சில மாதங்கள் கழித்து தான் தமிழ்மணம் என்று ஒன்று இருப்பதை அறிந்து, பல தொழில்நுட்ப தடுமாற்றங்களுக்கு பிறகு அதில் சேர்ந்தேன். அங்குட்டு வந்த பிறகு தான் பல விசயங்கள் தெரிய ஆரம்பித்தது. அந்த கதையை எல்லாம் சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பல. அது எல்லாத்துக்கும் தெரிந்த சமாச்சாரம் தான். ஆண்டு அறிக்கைனு சொல்லியாச்சு, அப்புறம் புள்ளி விபரங்கள் இல்லாட்டி எப்படி? அதனால

இது வரை ஆடிய ஆட்டங்கள் - 69 * (இதையும் சேர்த்து)

அறிக்கை:

ஆண்டு - மார்ச் 06 - பிப்ரவரி 07

மார்ச் - 06 : பதிவுகள் - 2, மொத்த பின்னூட்டங்கள் - 1

ஏப்ரல் - 06 : ப - 07, மொ.பி - 39

மே - 06 : ப - 14, மொ.பி - 219

ஜுன் - 06 : ப - 04, மொ.பி - 189

ஜுலை - 06 : ப - 08, மொ.பி - 676

ஆகஸ்ட் - 06 : ப - 07, மொ.பி - 512

செப்டம்பர் - 06 : ப - 00, மொ.பி - 00

அக்டோபர் - 06 : ப - 09, மொ.பி - 541

நவம்பர் - 06 : ப - 07, மொ.பி - 338

டிசம்பர் - 06 : ப - 02, மொ.பி - 46

ஜனவரி - 07 : ப - 03, மொ.பி - 65

பிப்ரவரி - 07 : ப - 04, மொ.பி - 121

ஆடிய மொத்த ஆட்டங்கள் - 67

எடுத்த மொத்த பின்னூட்டங்கள் - 2747 (நம்ம பங்கும் இதில் கணிசமாக இருக்கு)

அதிகப்பட்ச பின்னூட்டம் - 168 (கொத்துஸ் தயவில்)

குறைந்தப்பட்ச பின்னூட்டம் - 0 (மூன்று முறை)

சதங்கள் : 5 முறை

அரைச் சதங்கள் : 14 முறை

வந்து நொந்தவர்கள் : 18473 (பல மாதங்கள் பிறகு தான் நிறுவப்பட்டது)

குறிப்பிடத்தக்க வெற்றி - வ.வா. ச உறுப்பினர் ஆனது, தமிழ்மணம் நட்சத்திரம் ஆனது

சொல்ல விரும்புவது - என் தொல்லை தொடரும்...

55 comments:

கோவி.கண்ணன் said...

//என் தொல்லை தொடரும்...//

சிவா,

மேலே குறிப்பிட்டது தான் எல்லோரும் உங்களிடம் எதிர்ப்பார்பது ... தொடரனும்.... தொடருங்கள் !
:))

ஒரு ஆண்டு (குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் :) கண்ணிவெடி வச்சு பதிவுலகை கலங்கடித்ததற்கு வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

ஒரு வருடம் முடிந்ததா? வாழ்த்துக்கள்!!

உம்ம அறிக்கையில் நம்ம பேரும் இருக்கே நன்றி தம்பி!!

தொடர்கள் எல்லாம் எழுத ஆரம்பித்த பின் நிறுத்தாமல் எழுது. அப்புறம் நல்ல நகைச்சுவையா எழுது. அதாம்பா என் வேண்டுகோள்.

இராமநாதன் said...

வாழ்த்துகள் புலி!
ஒருவருஷமா உறுமியிருக்கீங்க.

எதுக்கும் இந்த பின்னூட்டத்த சைலண்டா வச்சுக்க. புலிக்கு ஆதரவுன்னா அரெஸ்ட்தான்னு முகர்ஜி அறிக்கை விட்டுருக்காரு. ஏன் அவரப்போயி பகைச்சிகின நீயி?

Radha Sriram said...

வாழ்த்துக்கள் சிவா, statistics எல்லாம் போட்டு அசத்திடீங்க?? தொடருங்க....

நான் உங்களுக்கு நன்றியும் சொல்லணும் விடாம என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் போடரத்துக்கு.

தம்பி said...

பழிக்கு பழியா...

நல்லா இருலே

Syam said...

வாழ்த்துக்கள் பங்கு...உன் சேவை மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்...
:-)

Syam said...

அடேங்கப்பா ப.சிதம்பரம் ரேஞ்சுக்கு புள்ளி விவரம் எல்லாம் போட்டு கலக்கி இருக்க...சூப்பர்.. :-)

Syam said...

பாரு போன ஜூலை, ஆகஸ்ட் ரேஞ்சுக்கு இனிமேலும் அடிச்சு ஆடு...கேப் விடாத... :-)

ஜி said...

வாழ்த்துக்கள் புலி....

புள்ளி விவரம்லாம் பட்டாசா கொடுக்குறிய...

இதுக்கு முன்னாடி எங்க கிரிக்கெட் சங்க வாரியத்துல வேல பாத்தியளோ??

ஜி said...

உம்ம பதிவுகள கொஞ்சம் தண்ணி தெளிச்சி காட்டிருந்தீருன்னா, என்ன மாதிரி புது பயலுவளுக்கு உம்ம பழைய பதிவுகளப் பாக்க ஒத்தாசையா இருந்திருக்கும்ல...

செல்வன் said...

சூடான் புலியார் கணக்கிலும் புலியாக இருப்பார் போலிருக்கிறது. புள்ளிவிவரமாக கொடுத்து அசத்தி விட்டார்:))

வெற்றிகரமான சென்ற ஆண்டுக்கும்,அதை விட வெற்றிகரமான வரும் ஆண்டுக்கும் வாழ்த்துக்கள்

சந்தோஷ் aka Santhosh said...

புள்ளிவிவரம் எல்லாம் குடுத்து கலக்கிட்டேமா புலி.

வடுவூர் குமார் said...

நான் ஏதோ 300 பதிவுகள் போட்டிருப்பீர்கள் என்று அவதானித்தேன்.:-))
அதான் பின்னூட்டத்திலேயே அள்ளிட்டீங்களே!!
தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவும்.

வெட்டிப்பயல் said...

புலி,
தொடர்ந்து எழுதி பதிவுலகை கலக்கவும்...

உன்னுடைய ஜாலியான பின்னூட்டங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு...

ஃபார்முக்கு வா புலி...

மங்கை said...
This comment has been removed by the author.
மங்கை said...

ஆண்டு விழாவிற்கும்..மென்மேலும் கலக்கவும் வாழ்த்துக்கள் சிவா அவர்களே..

கவிதா|Kavitha said...

சிவா நல்லாத்தான் இருக்கு அறிக்கை..

இன்னமும் கணக்கை அட்டவனை படுத்தி போட்டு இருக்கலாம் இல்ல?..

பதிவுகள் எத்தனை என்பதை விட எந்தவிதமான பதிவுகள் என்பதையும் சொல்லியிருக்கலாம்னு நினைக்கிறேன். சிவகுமார்ஜி, பொன்ஸ் இது போல் அறிக்கை ஒரு முறை விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இதை போல் பல அறிக்கைகள் விட்டு உங்களின் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

மு.கார்த்திகேயன் said...

ஒரு வருஷமா? குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா!


மாப்பி, நீயும் உன் பிளாக்கும் கிட்டதட்ட ஒரே நாள்ல தான் புறந்தீங்க போல :-)

மு.கார்த்திகேயன் said...

//சொல்ல விரும்புவது - என் தொல்லை தொடரும்... //

குழந்தை சேஷ்டை நல்லாவே இருக்கும்.. தொடரட்டும் சிவா

கீதா சாம்பசிவம் said...

முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அது என்ன மொ.பி.., மொ.பி. என்றே போட்டிருக்கீங்க? பின்னூட்டம் கூடவா மொக்கை? ஹிஹிஹி, நல்லாக் கலக்கறீங்க போங்க! :))))))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

Vaazththukkal Pulikuddi @ Sudan Siva.. :-D

365 mudichchu aduththa round start panneeddeengga..

.:: மை ஃபிரண்ட் ::. said...

July 06 - ithuthaan neengga romba busy-aa iruntha kaalamo?

.:: மை ஃபிரண்ட் ::. said...

Thodaraddum ungkal "Thollai Posts"

thodarum engkal "thollai pinnooddangal".. :-)

நாகை சிவா said...

//மேலே குறிப்பிட்டது தான் எல்லோரும் உங்களிடம் எதிர்ப்பார்பது ... தொடரனும்.... தொடருங்கள் !//

வாழ்த்துக்களுக்கு நன்றி. அப்புறம் நான் தொல்லை தான் பண்ணுறேன் என்பதை கன்பார்ம் பண்ணிட்டீங்களே!!!

நாகை சிவா said...

//உம்ம அறிக்கையில் நம்ம பேரும் இருக்கே நன்றி தம்பி!!//

உம் பெயர் இல்லாமலா? :-)))

//தொடர்கள் எல்லாம் எழுத ஆரம்பித்த பின் நிறுத்தாமல் எழுது. அப்புறம் நல்ல நகைச்சுவையா எழுது. அதாம்பா என் வேண்டுகோள். //

அனைத்தையும் குறித்துக் கொண்டேன். முடிந்த அளவு செயல்படுத்துகின்றேன்.

நாகை சிவா said...

//எதுக்கும் இந்த பின்னூட்டத்த சைலண்டா வச்சுக்க. புலிக்கு ஆதரவுன்னா அரெஸ்ட்தான்னு முகர்ஜி அறிக்கை விட்டுருக்காரு. ஏன் அவரப்போயி பகைச்சிகின நீயி? //

எதாச்சும் வில்லங்கத்துடன் வருகின்றீரே... எனக்கு என்ன பயம்? அவரு அறிக்கை எல்லாம் என்னை கட்டுப்படுத்தாது. நாம இருப்பது சூடான் தானே..... நான் அங்க வரங்காட்டியும் அவர மாத்திடுவாங்க ;-)

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள் சிவா, statistics எல்லாம் போட்டு அசத்திடீங்க?? தொடருங்க....//

வாங்க முதல் வருகை, தொடரட்டும்.

//நான் உங்களுக்கு நன்றியும் சொல்லணும் விடாம என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் போடரத்துக்கு. //

ஆரம்பத்தில் இப்படி எனக்கு பலர் ஆதரவு கொடுத்தால் தான் ஒரு வருடம் முடிஞ்சு அடுத்த வருடத்துக்கு போறேன். அந்த கணக்கு தான் அதுவும்... :-)

நாகை சிவா said...

//பழிக்கு பழியா...

நல்லா இருலே //

ஏலேய் என்னாது பழிக்கு பழி...

நான் ஒன்னும் ஒன்னு மாதிரி இல்லங்க. அம்புட்டு பெயரை போட்டுட்டு உங்க பெயரை மட்டும் விடுவதற்கு.... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இங்குட்டு ஆண்டு அறிக்கை புள்ளி விபரம் தான் கொடுத்து இருக்கு, புரியுதா?

சிரிப்பான் போடல ஞாபகம் வச்சுக்கோ!

நாகை சிவா said...

//அடேங்கப்பா ப.சிதம்பரம் ரேஞ்சுக்கு புள்ளி விவரம் எல்லாம் போட்டு கலக்கி இருக்க...சூப்பர்.. :-) //

அட ஏன் பங்கு, அவர்க்கிட்ட போய் சேர்த்து விடுற, அவரே பாவம் இந்த நாய் பிஸ்கெட் விசயத்தில் நொந்து போய் இருக்காரு. இப்ப லாலு தான் கணக்கு டாப்


//பாரு போன ஜூலை, ஆகஸ்ட் ரேஞ்சுக்கு இனிமேலும் அடிச்சு ஆடு...கேப் விடாத... :-) //

பங்கு, எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன, இங்குட்டு கேப் விடாம குண்டூ ஊசியில் இருந்து கடப்பாரை வரைக்கும்ல புடுங்க சொல்லுறாங்க....

நாகை சிவா said...

//இதுக்கு முன்னாடி "எங்க" கிரிக்கெட் சங்க வாரியத்துல வேல பாத்தியளோ?? //

ஜியா, நீங்க கிரிக்கெட் சங்கம் எல்லாம் வச்சு இருந்தியளா, பெரிய ஆளு தாம்வே நீர்.

அது போகட்டும் அது என்ன சங்கம் + வாரியம். புதுசா இருக்கே..... கிளீயர் த டவுட் ப்ளிஸ்....

//புள்ளி விவரம்லாம் பட்டாசா கொடுக்குறிய...//

இங்க தான் பாட்டாசு சத்தம் நித்தமும் கேட்குறோம்ல (துப்பாக்கி சத்தம்ப்பா)

//உம்ம பதிவுகள கொஞ்சம் தண்ணி தெளிச்சி காட்டிருந்தீருன்னா, என்ன மாதிரி புது பயலுவளுக்கு உம்ம பழைய பதிவுகளப் பாக்க ஒத்தாசையா இருந்திருக்கும்ல... //

நீர் என்ன விட சோம்பேறியா இருக்கீரே... இரும் டெம்பிளேட் மாத்தி வகை பிரிச்சு போடுறேன். ஆனா ஒன்னும் தேறாது... :-)

கோவி.கண்ணன் said...

//வாழ்த்துக்களுக்கு நன்றி. அப்புறம் நான் தொல்லை தான் பண்ணுறேன் என்பதை கன்பார்ம் பண்ணிட்டீங்களே!!!//

ஸ்மைலி போட்டேனே சிவா !

Anonymous said...

புலி ஐயா,புள்ளி விபரம் எல்லாம் பலமாக இருக்கின்றதே.

//சொல்ல விரும்புவது - என் தொல்லை தொடரும்//

உன் வலையுலக நண்பர்களின் அன்பு தொல்லையும் தொடரும்!

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் புலி:-))))

கோபிநாத் said...

ஆஹா...நல்ல பதிவுல தான் வந்திருக்கேன்...

வாழ்த்துக்கள் புலி ;)))

தொடர்ந்து எழுதுங்கள்....உங்கள் தொல்லையை தொடருங்கள்..

(அட....அம்புட்டு பய புள்ளைகளும் இங்கான தான் இருக்கீகளா...சொல்லவேல்ல...)

சென்ஷி said...

//கீதா சாம்பசிவம் said...

முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அது என்ன மொ.பி.., மொ.பி. என்றே போட்டிருக்கீங்க? பின்னூட்டம் கூடவா மொக்கை? ஹிஹிஹி, நல்லாக் கலக்கறீங்க போங்க! :))))))))

அதானே.. :))

வாழ்த்துக்கள்

சென்ஷி

நாகை சிவா said...

//சூடான் புலியார் கணக்கிலும் புலியாக இருப்பார் போலிருக்கிறது. புள்ளிவிவரமாக கொடுத்து அசத்தி விட்டார்:))//

வாங்க $, பல நாட்கள் ஆச்சு உங்களை பார்த்து. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்.

நாகை சிவா said...

//புள்ளிவிவரம் எல்லாம் குடுத்து கலக்கிட்டேமா புலி. //

தாங்கஸ் பங்கு, நமக்கும் கணக்கு பண்ண வரம் காட்ட வேண்டாமா? வேற ஏதும் அர்த்தம் எடுத்துக்க கூடாது சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//நான் ஏதோ 300 பதிவுகள் போட்டிருப்பீர்கள் என்று அவதானித்தேன்.:-))//

300 ஆ... அதுக்கு இன்னும் எத்தனை வருசம் ஆகும் என்று தெரியலையே...

//அதான் பின்னூட்டத்திலேயே அள்ளிட்டீங்களே!!//

எல்லாம் நம் மக்களின் ஆதரவு தான்.

நாகை சிவா said...

//உன்னுடைய ஜாலியான பின்னூட்டங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு...//

அப்படியா சொல்லுற

//ஃபார்முக்கு வா புலி... //

சொல்லிட்டல, முதல் பலி நம்ம தம்பி தான். பல வார கணக்கு இந்த வாரம் தீர்த்துட வேண்டியது தான்.

நாகை சிவா said...

//தம்பின்னு எங்களுக்கு நிறைய பேர் இருக்காங்க.. உங்களை நாங்கள் அங்கிள்ன்னு கூப்பிடட்டுமா??? //

வாங்க மங்கை, முதல் வருகை போல இருக்கு. உங்க வீட்டிற்கு வரேன் சொல்லிட்டு வந்தேன். மறக்கா வர முடியல... சீக்கிரமே வரேன்.

நாகை சிவா said...

//பதிவுகள் எத்தனை என்பதை விட எந்தவிதமான பதிவுகள் என்பதையும் சொல்லியிருக்கலாம்னு நினைக்கிறேன். //

எல்லாம் நேரமின்னை காரணமாக தான். என்ன தேறும் என்பது ஒரு காரணம்.

//சிவகுமார்ஜி, பொன்ஸ் இது போல் அறிக்கை ஒரு முறை விட்டார்கள் என்று நினைக்கிறேன்.//

அவங்க எங்க, நான் எங்க.....

நாகை சிவா said...

//குழந்தை சேஷ்டை நல்லாவே இருக்கும்.. தொடரட்டும் சிவா //

மாம்ஸ், அதிகமா போச்சுனா அதிகப்பிரசங்கி தனமா இருக்கும். அப்படி ஆகமா இந்த குழந்தைய பாத்துக்கோ மாம்ஸ்.

//மாப்பி, நீயும் உன் பிளாக்கும் கிட்டதட்ட ஒரே நாள்ல தான் புறந்தீங்க போல :-) //

ஆமாம். மாம்ஸ்

நாகை சிவா said...

//என்ன மொ.பி.., மொ.பி. என்றே போட்டிருக்கீங்க? பின்னூட்டம் கூடவா மொக்கை? ஹிஹிஹி, நல்லாக் கலக்கறீங்க போங்க! :)))))))) //

மொத்த பின்னூட்டங்கள் அப்படிங்குறத நீங்க மொக்கை பின்னூட்டம் படிக்குறீங்க... நீங்க சொல்லுறதும் சரி தான். நான் போட்டது மட்டும் தான் மொக்கை, உங்கள மாதிரி உள்ளவங்களும் போட்டு இருப்பதை நான் எப்படி சொல்ல முடியும் சொல்லுங்க :-)

நாகை சிவா said...

//365 mudichchu aduththa round start panneeddeengga.. //

தெம்பா ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். தம்பி பதிவ பாருங்க...

//July 06 - ithuthaan neengga romba busy-aa iruntha kaalamo? //

அது ஒரு வெட்டியா இருந்த காலம். அப்ப எல்லாம் வெறும் குண்டூஊசி தான்.

//thodarum engkal "thollai pinnooddangal".. :-) //

தொடரட்டும் தொடரட்டும். :-)

நாகை சிவா said...

//ஸ்மைலி போட்டேனே சிவா ! //

ஹி...ஹி... சாரி அண்ணாத்த... நீங்க ஸ்மைலி போடாட்டியும் எனக்கு தான் உங்கள் பற்றி தெரியுமே பி.நா.ரே.

நாகை சிவா said...

//புலி ஐயா,புள்ளி விபரம் எல்லாம் பலமாக இருக்கின்றதே.//

நாங்க கணக்குலையும் புலில..

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள் புலி:-)))) //

நன்றிங்க அபி அப்பா(கும்மார்) :-)

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள் புலி ;)))

தொடர்ந்து எழுதுங்கள்....உங்கள் தொல்லையை தொடருங்கள்..//

தொடர்ந்து விடுவோம் கோபி.

முதல் வருகை. இது தொடரட்டும்.

நாகை சிவா said...

//(அட....அம்புட்டு பய புள்ளைகளும் இங்கான தான் இருக்கீகளா...சொல்லவேல்ல...) //

நம் மக்கள் எங்கன இருப்பதில் என்ன ஆச்சரியம் கோபி.

//சொல்லவேல்ல...) //

நீர் எங்க கேட்கும் நிலைமையில் இருந்தீர், கடந்த வெள்ளி அன்று.... ;-)

நாகை சிவா said...

//அதானே.. :))

வாழ்த்துக்கள்

சென்ஷி //

சென்ஷி, முதல் வருகைக்கு நன்றி. கீதாவுக்கு சொன்ன பதிலை நீங்களும் படிச்சுக்கோங்க. :-)

கோபிநாத் said...

\\நீர் எங்க கேட்கும் நிலைமையில் இருந்தீர், கடந்த வெள்ளி அன்று.... ;-)\\

ஆகா....எல யாரு அது வேவு பார்க்குறது ;)))

நாகை சிவா said...

//ஆகா....எல யாரு அது வேவு பார்க்குறது ;))) //

கோபி குழந்தாஉ, அனைத்தும் யாம் அறிவோம்!!!

வேதா said...

vaazthukkal siva:) inimey adikadi puli pathungama adichu aada vendiyathu thaan:)

வேதா said...

comment moderation eduthuteengala?

நாகை சிவா said...

ஆமாங்க வேதா ஆமாம்.

பதுங்க கூடாதுனு தான் பாக்குறேன், பதுங்க வச்சுடுறாங்களே....