Saturday, March 24, 2007

2011 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்

முக்கிய செய்தி : 2011 உலக கோப்பையை இந்தியா கிரிக்கெட் அணி கண்டிப்பாக கைப்பற்றும், அதற்கான அணியை இப்பொழுது இருந்தே தயார் செய்யப்படும் என்று இன்று புதிதாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணி பயற்சியாளர் _____________ தெரிவித்தார்.


இந்த உலகப் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தற்கான காரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி தன் அறிக்கை இன்று பி.சி.சி.ஐ. யிடம் சமர்பித்தது. அதில் இடம் பெற்று இருக்கலாம் என எண்ணப்படுவைகளில் சில

1, நாட்டு நலன் கருதி தோல்வி அடைந்து இருக்கலாம் என்று சந்தோஷ் அறிக்கை கூறுகின்றது

2, இந்தியா, பாகிஸ்தான் உறவு பலப்பட வேண்டும் நோக்கில் பாக் தோற்றுவுடன் நாமும் தோற்றால் பாகிஸ்தானுக்கு நம் மீது மதிப்பு கூடி அமைதி பேச்சுவார்த்தையில் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கைக்காக

3, டாம் மூடியை இந்திய அணி பயற்சியாளராக தேர்ந்து எடுக்க மறுத்தது. அதனால் தான் அவர் இந்திய அணியை இலங்கை அணி மூலம் பழி வாங்கி விட்டார்.

4, வெற்றிக்கரமான கேப்டன் கங்குலியை கேப்டன் பதிவியில் இருந்து இறக்கியது. (இதில் கடுப்பான கங்குலி மற்ற வீரர்களுக்கு கொடுத்து இருந்த தாயத்துகளை பறித்ததும் ஒரு முக்கிய காரணம்.)

5, அபி அப்பா இலங்கைக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்யும் போது அவர் நண்பர் குரங்கு ராதாவுடன் அமர்ந்து மேட்ச் பார்த்தது.


6. நம் கச்சேரி தேவ் கூறியதை முரளிதரனின் சூழ்ச்சியின் காரணமாக நம் இந்திய அணியினர் வீராச்சாமி படத்தை பார்க்க நேர்ந்ததால்.

மற்ற காரணங்களை நண்பர்கள் பின்னூட்டங்களில் ஈடுவார்கள். என்னால முடியல, அப்புறம் அழுதுடுவேன்......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

67 comments:

நாகை சிவா said...

//2011 உலக கோப்பையை இந்தியா கிரிக்கெட் அணி கண்டிப்பாக கைப்பற்றும், அதற்கான அணியை இப்பொழுது இருந்தே தயார் செய்யப்படும் என்று இன்று புதிதாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணி பயற்சியாளர் _____________ தெரிவித்தார்.//

இதையே தானே போன உலக கோப்பைக்கும் சொல்லி எல்லாம் மேட்சு தோற்றீர்கள்....

இப்ப புரியுதுடா உங்க சூது, உங்களுக்கு அன்னிக்கு ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்சு இல்ல, என்னிக்குமே ஒரே பேச்சு தான்....

நாகை சிவா said...

ஏலேய், இப்படி சின்னதம்பியில் வர கவுண்டமணி மாதிரி புலம்ப விட்டீங்களாடா, அட என்ன விடுங்கடா மணி இங்க இப்ப இரவு 12.40 தான். இந்தியாவில் இருப்பவன் நிலைமையை எல்லாம் நினைச்சாலே ....

அய்யோ... அய்யோ... இப்படி தனியா புலம்ப விட்டுடானுங்களே....

தம்பி said...

இந்தியா கப்பு வாங்கிடுச்சி

நாகை சிவா said...

//இந்தியா கப்பு வாங்கிடுச்சி //

யோவ் டிக்கெட் வாங்கிட்டாங்களானு பாரு முதல.... இந்தியாவில் வரவேற்க நம் தேவ் தலைமையில் ஒரு பெரும் படையே திரண்டு இருக்கு.

வெட்டிப்பயல் said...

சரி விடு புலி...

இல்லைனா அடுத்த ரவுண்ட் போய் அயர்லாண்ட் கிட்ட தோப்பானுங்க... அது தேவையா???

மணிகண்டன் said...

இதுக்கு நம்ம தேவ் செலக்ட் பண்ண டீம் போயிருந்தாலே ஜெயிச்சிருக்கும் போல.

இந்திய அணிக்கு ஒரு பெரிய
த்த்த்த்த்தூதூதூதூ

.:: மை ஃபிரண்ட் ::. said...

ithu oru attendance.. adicchidu varren.. ;-)

நாகை சிவா said...

//சரி விடு புலி...

இல்லைனா அடுத்த ரவுண்ட் போய் அயர்லாண்ட் கிட்ட தோப்பானுங்க... அது தேவையா??? //

:-)

இவனுங்கள நம்பி 250 டாலர் வெஸ்டா போச்சே அப்படிங்குறது தான் பெரிய கவலை வெட்டி. என்ன நைனா அப்பவே சொன்னார், கேட்டேனா!!!!

நாகை சிவா said...

//இதுக்கு நம்ம தேவ் செலக்ட் பண்ண டீம் போயிருந்தாலே ஜெயிச்சிருக்கும் போல.//

என்ன இத இவ்வளவு சந்தேகமா கேட்குறீங்க....

//இந்திய அணிக்கு ஒரு பெரிய
த்த்த்த்த்தூதூதூதூ //

ஏன் மணி, இவ்வளவு கோவம்...

Game is a Game....Thats all

இலங்கைக்கு வாழ்த்து கூறுவோம்.

நாகை சிவா said...

//ithu oru attendance.. adicchidu varren.. ;-)//

யாரங்க அடிக்க போறீங்க....

இந்திய அணியவா, இலங்கை, பங்காளதேஷ் அணியிடம் வாங்கி அடியை மறக்கவே இன்னும் சில மாதங்கள் ஆகும் அவர்களுக்கு....

மணிகண்டன் said...

//Game is a Game....Thats all//

I agree. Game is a Game if it is played as a Game. These suckers didn't played a Game in this worldcup.

ஜி said...

இந்திய மாணவமணிகளுக்காக வெற்றிக் கோப்பையை தியாகம் செய்த இந்திய அணியின் தியாக மனப்பான்மையை நையாண்டி செய்யும் விதத்தில் பதிவெழுதியதுடம் மட்டும் நில்லாமல், தனக்குத் தானே பின்னூட்டம் இட்டு, தமிழ்மணத்தின் உயரெல்லையை விரைவில் தாண்டி பெவிலியன் திரும்பும் எண்ணத்தில் திரியும் சூடான் புலிக்கு எனது கன்னா பின்னாவான கண்டனங்கள்...

Radha Sriram said...

//குரங்கு ராதாவுடன்//

இது என்னங்க இப்படி திட்டுரீங்க !!

சந்தோஷ் aka Santhosh said...

புலி விடுமா இது எல்லாம் சகஜம். பீல் பண்ணாதே. சே இப்படி எல்லாரும் ஏம்பா ஏதோ சாவு வீடு மாதிரி புலம்பிட்டு இருக்கிங்க. lets think it as a wake up call to Indian Cricket let all old beggers get out of the team and lets bring young blood. No feelings.

நாகை சிவா said...

////குரங்கு ராதாவுடன்//

இது என்னங்க இப்படி திட்டுரீங்க !! //

அட அது நீங்க இல்லங்க, அபி அப்பா பிரண்ட், அவரு பதிவுக்கு போய் பாருங்க உங்களுக்கே புரியும்... அது போகட்டும் நீங்க மேட்ச் பாத்தீங்களா சே அந்த கொடுமைய பாத்தீங்களா....

நாகை சிவா said...

//புலி விடுமா இது எல்லாம் சகஜம். பீல் பண்ணாதே.//

இந்தியா தோற்றதை கூட தாங்கிட்டேன் மச்சி, இங்க இருக்குறவங்க பர்மூடா ஜெயிக்கனும் அப்படினு ஆரம்பிச்சானுங்க பாரு, பீலோ பீல் ஆயிட்டேன்.

அவனுங்க எல்லாத்தையும் தேத்தி படுக்க வைக்காட்டியும் அப்ப்பா

// சே இப்படி எல்லாரும் ஏம்பா ஏதோ சாவு வீடு மாதிரி புலம்பிட்டு இருக்கிங்க.//

புலம்ப விட்டுடாங்களே!!!

// lets think it as a wake up call to Indian Cricket let all old beggers get out of the team and lets bring young blood. No feelings.//

சரி தான் பங்கு, அதான் நான் 2011 போயிட்டேன், அட்வான்ஸ் இருக்கோம்....;-)

நாகை சிவா said...

//இந்திய மாணவமணிகளுக்காக வெற்றிக் கோப்பையை தியாகம் செய்த இந்திய அணியின் தியாக மனப்பான்மையை நையாண்டி செய்யும் விதத்தில் பதிவெழுதியதுடம் மட்டும் நில்லாமல், தனக்குத் தானே பின்னூட்டம் இட்டு, தமிழ்மணத்தின் உயரெல்லையை விரைவில் தாண்டி பெவிலியன் திரும்பும் எண்ணத்தில் திரியும் சூடான் புலிக்கு எனது கன்னா பின்னாவான கண்டனங்கள்... //

கப் கோட்டை விட்டவன் ஒன்னும் சொல்லாதீங்க, புலம்புறவனை வந்து நக்கல் பண்ணுங்க....

சரி, நீ ஊருக்கு வரும் போது நம்ம பசங்களையும் சேர்த்து கூட்டிட்டு வந்துடு.....

நாகை சிவா said...

//I agree. Game is a Game if it is played as a Game. These suckers didn't played a Game in this worldcup. //

No comments.

They had a nice vacation over there. We had a nice appu over here.

;-)))))))

மணிகண்டன் said...

//கப் கோட்டை விட்டவன் ஒன்னும் சொல்லாதீங்க, புலம்புறவனை வந்து நக்கல் பண்ணுங்க....
//

அதான, புலம்பறவங்களல ஒருத்தன்கற முறையில நான் சிவாவோட கூட்டனி அமைக்கிறேன்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

Rajagopal said...

The better team won. Congratulations to Srilankans.

1987 - அரை இறுதியில் தோல்வி
1992 - கேவலமான தோல்விகள்
1996 - அரை இறுதியில் தோல்வி
1999 - கேவலமான தோல்விகள்
2003 - இறுதி போட்டியில் தோல்வி
2007 - முதல் சுற்றில் தோல்வி
2011 - இறுதி போட்டியில் தோல்வியா?

அவ்வள்வு நம்பிக்கை நமது அணியின் மீது!

Sack every body and build the team right from scratch for the future.

Raja

வடுவூர் குமார் said...

உங்க சுருசுருப்பு தான் உலகம் தெரிந்ததே,அதுக்காக இப்படியா?
உங்கள் நேரப்படி சுமார் காலை 4.39 மணிக்கு ஆன்லைனில் பார்த்தேன்.
அந்த வெற்றிடத்தில் என் பெயரை போட்டுக்கலாமா?

இலவசக்கொத்தனார் said...

//இதுக்கு நம்ம தேவ் செலக்ட் பண்ண டீம் போயிருந்தாலே ஜெயிச்சிருக்கும் போல.//

யோவ் என்ன நக்கலா? நாங்க எம்மாம் பெரிய டீமு தெரியுமில்ல....

//அந்த வெற்றிடத்தில் என் பெயரை போட்டுக்கலாமா?//

உமக்கு ஆனாலும் அசாத்திய தைரியம்தான்யா!

sri said...

First sack those bombay based selection committee. They are responsible for this team. Second sack Dravid. Never gave chances to Young Sreesant and Dinesh Kartik. Just because they are south Indians or inexperienced players?. What the experienced guys done.:(


Ravi

கவிதா|Kavitha said...

//இப்ப புரியுதுடா உங்க சூது, உங்களுக்கு அன்னிக்கு ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்சு இல்ல, என்னிக்குமே ஒரே பேச்சு தான்....//

ஹைய்யா! சொல்லிவச்சி தோத்தோமில்ல !!தோத்தோமில்ல..!! தோத்தமில்ல...!!

:)))))))))))))))

Over all Rs.2000/- crores we lost bcz of this..!!

அபி அப்பா said...

என்ன நடக்குது இங்க? நான் உள்ள வரலாமா?

அபி அப்பா said...

அஹா புலி நம்மள வச்சு காமடி பண்ணீட்டுதே! சீக்கிரம் 40 ஆட்டுகுட்டி போட்டு குகை உள்ள தள்ள வேண்டியதுதான்:-))

வேதா said...

எனக்கு ரொம்ப தேவை தான்:( இதுக்கு தான் நம்ம அரட்டையையும் நிறுத்திப்புட்டு ஓடிப்போய் பார்த்தா ராத்திரியோட ராத்திரியா ஆப்பு வச்சுட்டாங்க:( இப்ப என்ன? திரும்பி வந்துடுவாங்களா?

அபி அப்பா said...

இந்தியா தோத்தது உமக்கு இத்தினி கொண்டாட்டமா? அட்ரஸ் சொல்லு புலி ஆட்டோ அனுப்புறேன்:-)

தேவ் | Dev said...

ம்ம் யாரங்கே... இந்த லகுடபாண்டிகளை ஜமைக்கா கடற்கரை மணலில் நடு பகலில் ஆடைகளைக் களைந்து உருட்டி விளையாடுங்கள்.. மட்டையைக் கொண்டு பின் பாகத்திலே அடித்து அடித்து உருட்டுங்கள்...

அது முடிந்ததும்... காதுகளில் கால்படி கட்டெறும்புகளை விட்டு விடுங்கள்...

அதுக்கும் பிறகு.. ஓணாண்டி புலவனுக்குக் கொடுத்த தண்டனையை அனைவருக்கும் மொத்தமாக நிறைவேற்றுங்கள்...

ம்ம்ம்ம் இன்னும் தீர மாட்டேங்குதே கோவம்...

தேவ் | Dev said...

மணி நம்ம கேப்டன் சொல்லுற மாதிரி இந்த் டீம் கூட எல்லாம் நம்ம டீமைச் சேர்த்துப் பேசிட்டீயப்பா.. ச்சே வெட்கம் அளிக்கும் விஷ்யம்ப்பா-)

தேவ் | Dev said...

கடைசியா இவனுங்கத் தோத்ததுக்கு கிடைச்சத் தகவல்

ஏப்ரல் 14 சிவாஜி படத்தை முத நா முத ஷோ பாக்கணும்ன்னு அடம் பிடிச்சிருக்காங்க...

நம்ம கோச் சேப்பல் கோவம் வந்து அந்தப் படத்தை விட நல்ல படமா நான் காட்டுறேன்னுச் சொல்லி ரூம்க்கு கூட்டிப் போய் உள்ளே அம்புட்டு பயலையும் பூட்டி டால்பி டிஜிட்டல் சவுண்ட் சிஸ்ட்டத்துல்ல வீராச்சாமி படத்தை நாலு ஷோ ஓட்டியிருக்கார்.. அதுல்ல மிரண்ட நம்ம புளு ( புழு இல்ல கலர் புளு) இன்டியா நேத்து தோத்துப் போச்சாம்.. இந்தச் சதியிலே முத்தைய்யா முரளிதரனுக்கு பங்கு இருக்குதாம்..அவர் தான் டிவிடி கொடுத்தாராம்.

மணிகண்டன் said...

//மணி நம்ம கேப்டன் சொல்லுற மாதிரி இந்த் டீம் கூட எல்லாம் நம்ம டீமைச் சேர்த்துப் பேசிட்டீயப்பா.. ச்சே வெட்கம் அளிக்கும் விஷ்யம்ப்பா-)

//
மன்னிச்சுடுங்க தேவ்..திறமையான் நம்ம டீமை முதுகெலும்பில்லாத இந்திய அணியோட கம்பேர் பண்ணதுக்கு :)

அபி அப்பா said...

//தம்பி said...
இந்தியா கப்பு வாங்கிடுச்சி //

எந்த கப்பு தம்பி! நாம காலேஜ்ல வாங்குவோமே அந்த மாதிரியா?:-))

அபி அப்பா said...

//மணிகண்டன் said...
இதுக்கு நம்ம தேவ் செலக்ட் பண்ண டீம் போயிருந்தாலே ஜெயிச்சிருக்கும் போல.

இந்திய அணிக்கு ஒரு பெரிய
த்த்த்த்த்தூதூதூதூ//

மணிகண்டா நானும் வரட்டா இந்த டைட்டானிக் விளையாட்டுக்கு..இப்போ நானு த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தூதூதூதூதூதூதூ...
ஐ நாந்தான் ஜெயிச்சேன். நேரா ஜமைக்கா போய் வுழனும் நம்ம எச்சில்.. அடுத்த போட்டியாளர் வரவும்:-))

அபி அப்பா said...

என் கூட போட்டி போட ஆளேயில்லயா, அப்ப பரிசு எனக்கே எனக்கா:-)

வல்லிசிம்ஹன் said...

வெற்றிக்கரமான கேப்டன் கங்குலியை கேப்டன் பதிவியில் இருந்து இறக்கியது. (இதில் கடுப்பான கங்குலி மற்ற வீரர்களுக்கு கொடுத்து இருந்த தாயத்துகளை பறித்ததும் ஒரு முக்கிய
காரணம்//
ஆஹா இதுதானா காரணம்?
சேச்சே. தப்பா எடை போட்டேனே.
பாவம் பிள்ளைகள். சூது வாது தெரியாமா இப்படித் தோத்துட்டாங்களே.

எந்த சுவத்தில போயி முட்டிக்க:-(

நாமக்கல் சிபி said...

கப் வாங்காம வர மாட்டம்ல

அபி அப்பா said...

//எந்த சுவத்தில போயி முட்டிக்க:-(//

வல்லியம்மா! சீனாவுல ஒரு பெரிய சுவர் இருக்குதாம்:-)

Fast Bowler said...

ஹி ஹி....
சிவா, போட்டுத்தாக்குங்க. பசங்களச்சும் படிச்சு பாஸ் பண்ணட்டும்...

அபி அப்பா said...

புலி உள்ளே போ (பட்ஷா ரஜினி மாதிரி படிக்கவும்)

நாகை சிவா said...

//அதான, புலம்பறவங்களல ஒருத்தன்கற முறையில நான் சிவாவோட கூட்டனி அமைக்கிறேன்.//

இந்த கூட்டணி அமோக ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தாலும் அமைக்கலாம்.

//இப்படை தோற்கின் எப்படை வெல்லும் //

நான் லங்கானு நினைக்குறேன், பாஸ்ட் ஆஸிங்குறார். நீங்க என்ன நினைக்குறிங்க?

நாகை சிவா said...

//The better team won. Congratulations to Srilankans.//

அதே :-)

//அவ்வள்வு நம்பிக்கை நமது அணியின் மீது! //

நாமா எல்லாம் திருந்தவே மாட்டோமா ராஜா.... இல்லனு தான் எனக்குப்படுது ;-)

நாகை சிவா said...

//உங்க சுருசுருப்பு தான் உலகம் தெரிந்ததே,அதுக்காக இப்படியா?//

இந்த விசயத்தில் எல்லாம் நாம ரொம்பவே சுறுசுறுப்பு தான் :-(

//உங்கள் நேரப்படி சுமார் காலை 4.39 மணிக்கு ஆன்லைனில் பார்த்தேன்.//

இந்தியாவை விட 2.30 கம்மி இங்க, உங்களை விட 5 மணி நேரம். 3 மணியாச்சு நேத்து :-(((

//அந்த வெற்றிடத்தில் என் பெயரை போட்டுக்கலாமா? //

அண்ணே வேணாம்ண்ணே..... நம்ம ஊர் மக்களுக்கு இப்படி ஒரு கொடுமை வேண்டவே வேணாம்ண்ணே!!!

நாகை சிவா said...

//யோவ் என்ன நக்கலா? நாங்க எம்மாம் பெரிய டீமு தெரியுமில்ல.... //

அதானே, அதுவும் எங்க கொத்துஸ் தலைமையில் திரண்டு இருக்கும் எங்கள பார்த்து நீ இப்படி ஒரு சந்தேகம் எழுந்து இருக்கவே கூடாது....

//உமக்கு ஆனாலும் அசாத்திய தைரியம்தான்யா! //

சோழ பரம்பரைக்கே உள்ள தைரியமோ என்னவோ????

நாகை சிவா said...

//ஹைய்யா! சொல்லிவச்சி தோத்தோமில்ல !!தோத்தோமில்ல..!! தோத்தமில்ல...!!
:))))))))))))))) //

எங்க சோகம் உங்களுக்கு சந்தோஷமா இருக்கா? என்னமோ போங்க. ஆறுதல் சொல்லாம இப்படி சிரிக்குறது நல்லா இல்ல சொல்லிட்டேன்....

//Over all Rs.2000/- crores we lost bcz of this..!! //

என் பங்கு இதில் 250 $ தாங்க, எங்க அக்கா 125 $ . உங்க பங்கு எவ்வளவு....

நாகை சிவா said...

//என்ன நடக்குது இங்க? நான் உள்ள வரலாமா? //

இங்க மட்டும் என்ன, அதே புலம்பல் தான். வாங்க வாங்க. நீங்க இல்லாமலா?

//அஹா புலி நம்மள வச்சு காமடி பண்ணீட்டுதே! //

இருந்தாலும் தொல்ஸ், நீங்க செய்தது மிக பெரிய துரோகம்..... கேஸ் போடலாமா என்று ஆலோசனை செய்துக்கிட்டு இருக்கேன்

நாகை சிவா said...

//எனக்கு ரொம்ப தேவை தான்:( //

சேம் பிளட் :-((((((((((

//இதுக்கு தான் நம்ம அரட்டையையும் நிறுத்திப்புட்டு ஓடிப்போய் பார்த்தா ராத்திரியோட ராத்திரியா ஆப்பு வச்சுட்டாங்க//

அதுக்கு உங்க கொடுமையை சே... உங்ககிட்டயாச்சும் சாட் பண்ணிக்கிட்டு இருந்து இருக்கலாம்.

// இப்ப என்ன? திரும்பி வந்துடுவாங்களா? //

பின்ன....

நாகை சிவா said...

//இந்தியா தோத்தது உமக்கு இத்தினி கொண்டாட்டமா? அட்ரஸ் சொல்லு புலி ஆட்டோ அனுப்புறேன்:-) //

நான் புலம்பவதை பார்த்தால் கொண்டாடுவது மாதிரி இருக்கா உங்களுக்கு.... கவிதா கமெண்ட பாருங்க... யாரு சந்தோஷப்படுறாங்க தெரியும்.

நாகை சிவா said...

//இந்தச் சதியிலே முத்தைய்யா முரளிதரனுக்கு பங்கு இருக்குதாம்..அவர் தான் டிவிடி கொடுத்தாராம். //

இப்படி தான் நம்மள ஏமாத்தினாங்களா, தேவ்....

//ம்ம்ம்ம் இன்னும் தீர மாட்டேங்குதே கோவம்... //

எப்படி தீரும்.... :-(((((((

நாகை சிவா said...

//மன்னிச்சுடுங்க தேவ்..திறமையான் நம்ம டீமை முதுகெலும்பில்லாத இந்திய அணியோட கம்பேர் பண்ணதுக்கு :) //

விடுங்க மணி, 2011 ல கொத்துஸ் தலைமையில் விளையாடி கப்பு வாங்கிடுவோம்...

நாகை சிவா said...

//எந்த கப்பு தம்பி! நாம காலேஜ்ல வாங்குவோமே அந்த மாதிரியா?:-)) //

காலேஜ்ல கூட இவ்வளவு மோசமா கப் வாங்கி இருக்க மாட்டோம் நாம் :-(

//நாந்தான் ஜெயிச்சேன். நேரா ஜமைக்கா போய் வுழனும் நம்ம எச்சில்.. //

:-))))))))

//என் கூட போட்டி போட ஆளேயில்லயா, அப்ப பரிசு எனக்கே எனக்கா:-) //

வாழ்த்துக்கள், இது போல பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கிறேன்.

நாகை சிவா said...

//ஆஹா இதுதானா காரணம்?
சேச்சே. தப்பா எடை போட்டேனே.
பாவம் பிள்ளைகள். சூது வாது தெரியாமா இப்படித் தோத்துட்டாங்களே.

எந்த சுவத்தில போயி முட்டிக்க:-( //

இதுக்கு எல்லாம் போ முட்டிக்க ஆரம்பிச்சா நம்ம தல தாங்க உடையும். ப்ரீயா விடுங்க....

நாகை சிவா said...

//வல்லியம்மா! சீனாவுல ஒரு பெரிய சுவர் இருக்குதாம்:-) //

தொல்ஸ்..... உங்களை எல்லாம்..... வேணாம் விடுங்க....

நாகை சிவா said...

//நாமக்கல் சிபி said...
கப் வாங்காம வர மாட்டம்ல //

எந்த கப்புனு சொல்லயே....

நாகை சிவா said...

//ஹி ஹி....
சிவா, போட்டுத்தாக்குங்க. பசங்களச்சும் படிச்சு பாஸ் பண்ணட்டும்...//

அதாச்சும் ஒழுங்கா நடந்தா சரி பாஸ்ட்

நாகை சிவா said...

//புலி உள்ளே போ (பட்ஷா ரஜினி மாதிரி படிக்கவும்) //

படிச்சேன், உங்களுக்கு மேட்ச் ஆகல

;-)

கீதா சாம்பசிவம் said...

புலி, நான் மாட்ச் பார்த்தால் இந்தியா ஜெயிக்கும். எனக்கு அந்த ராசி உண்டு. அதான் உங்க கிட்டே முதல்லேயே சொல்லை. :P
உங்க டீமாவது, ஜெயிக்கிறதாவது? எல்லாருக்கும் விளம்பரத்தில் கூட நல்லா பாட்டிங் செய்ய வராது. இவங்களுக்காக நீங்க துக்கம் கொண்டாடுறீங்களே?

Bharateeyamodernprince said...

//The better team won. Congratulations to Srilankans.//

well said. Better Team India join us in watching cricket...and wishing the windies or lankans lift the cup.

கோபிநாத் said...

\\இப்ப புரியுதுடா உங்க சூது, உங்களுக்கு அன்னிக்கு ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்சு இல்ல, என்னிக்குமே ஒரே பேச்சு தான்....\\

உண்மை தான் புலி.....நமக்கு தான் கொஞ்சம் லேட்டா புரியுது இவனுங்க பேச்சு ;-((((

நாகை சிவா said...

//புலி, நான் மாட்ச் பார்த்தால் இந்தியா ஜெயிக்கும். எனக்கு அந்த ராசி உண்டு. அதான் உங்க கிட்டே முதல்லேயே சொல்லை. :P//

உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இத எல்லாம் இப்ப சொல்லுங்க, நீங்க மேட்ச் பாக்காததும் ஒரு காரணம் என்று சொல்லிடலாமா?

//உங்க டீமாவது, ஜெயிக்கிறதாவது? //

சிங்கம் சாய்ந்துக்கிடக்குது, அதனால் நீங்க இப்ப என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க........ :-((((((((

நாகை சிவா said...

//well said. Better Team India join us in watching cricket...and wishing the windies or lankans lift the cup. //

சரியா சொன்னீங்க, லாரா கோப்பை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நம்ம புல் சப்போர்ட் லங்காவுக்கு தான்....

நாகை சிவா said...

//உண்மை தான் புலி.....நமக்கு தான் கொஞ்சம் லேட்டா புரியுது இவனுங்க பேச்சு ;-(((( //

கொஞ்சம் இல்ல மக்கா ரொம்பவே லேட்டு... சரி விடு இன்னிக்கு பெர்முடா தான் ஜெயிக்குதாம்... முத்து தம்பி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணுறார். நீ என்ன சொல்லுற?

அபி அப்பா said...

//சிங்கம் சாய்ந்துக்கிடக்குது, அதனால் நீங்க இப்ப என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க........ :-(((((((( //

தேவையிலாமல் சிங்கத்தை சொறிய வேண்டாம் என கேட்டுக்குறேன்:-))

ambi said...

//கங்குலி மற்ற வீரர்களுக்கு கொடுத்து இருந்த தாயத்துகளை பறித்ததும் ஒரு முக்கிய காரணம்//

ROTFL :)
sari vidu puli, oru cutting adichuttu manasa thethiko!

how r u..? sorry, long time no see. :)

நாகை சிவா said...

//தேவையிலாமல் சிங்கத்தை சொறிய வேண்டாம் என கேட்டுக்குறேன்:-)) //

உத்தரவுங்க...

அதே சமயம் நீங்களும் அடிக்கடி புலியை பிராண்ட வேண்டாம் என கேட்டுக்குறேன் :-)

நாகை சிவா said...

//sari vidu puli, oru cutting adichuttu manasa thethiko! //

நோ.... நெவர்.....

//how r u..? sorry, long time no see. :) //

பரவாயில்ல அம்பி. சில பல மேட்டரு கேள்விப்பட்டேன், அப்பாலிக்கா மெயில் ல வரேன்.

Syam said...

//இல்லைனா அடுத்த ரவுண்ட் போய் அயர்லாண்ட் கிட்ட தோப்பானுங்க... அது தேவையா??? //

இதே தான் நானும் சொல்ல வந்தேன்...