Thursday, March 08, 2007

உலக பெண்கள் தினம்

தமிழ்மணத்தில் மிக "சூடாக" உலக பெண்கள் தினம் கொண்டாடிக்கிட்டு இருக்கும் போது எப்பவும் அரசியல் ரீதியாக சூடாக இருக்கும் சூடானின் ஒரு பகுதியில் எப்படி பெண்கள் தினம் கொண்டாடினார்கள் என்பதை பாருங்க.

சூடானின் மிகவும் வஞ்சிக்கப்பட்ட பகுதியான டார்பூரில் அல்-பஷர் என்ற இடத்தில் ஐ.நா. வின் அங்கமான UNFPA என்ற அமைப்பு பல N.G.O களின் உதவியுடன் கடந்த ஒரு வருடத்தில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பணியில் சிறப்பாக ஈடுப்பட்ட 10 நபர்களை கவுரவிக்கும் பொருட்டும், உலக பெண்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டும் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சுகளை அரபியில் மொழி பெயர்த்தார்கள், ஆனால அரபியில் பேசிய பேச்சுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. அதனால பல விசயங்கள் எனக்கு புரியவில்லை. ஆனால் இங்கு இருக்கும் பெண்கள் வாழ்வில் சிறுதளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சி மேலும் கவுரவிக்கப்பட்ட 10 நபர்களில் 9 நபர்கள் அந்த மாநிலத்தை சேர்ந்து பெண்கள், ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர், அதுவும் நம் நாட்டை சேர்ந்தவர், என் நண்பர் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. அவரு பணி புரிவது மனித உரிமை துறையில்.

நிகழ்ச்சியின் படங்கள்(படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாக தெரியும்)






இங்கு நான் கவனித்து ஒரு விசயம். மற்றவர்களை வரவேற்க்கும் போதும், வாழ்த்தும் போதும் கையை தலைக்கு மேல் தூக்கி விரல்களை அசைத்து வாழ்த்துக்கிறார்கள்.(நம்ம ஊர்ல உன்னை கொன்னுடுவேன் என்று சொல்லும் போது நம்ம கை விரல் எப்படி இருக்குமோ அது போல). மேலே இருக்கும் இரண்டு படங்களை பார்த்தால் தெரியும். அது போக ஆரவாரம் செய்யும் போது நம்ம ஊர் பக்கம் நாக்கை மடிச்சுக்கிட்டு ஒரு ஒலி எழுப்புவாங்களே(குழவி யா???) அது போல இங்கு ஒரு புது மாதிரியான ஒலி எழுப்புகின்றார்கள் நாக்கை மடிக்காமலே...

பாராம்பரிய நடனங்கள் சில:




Prevent Gender Based Violence

Say No Violence Aganist Women

பெண்கள் தின வாழ்த்துக்கள்

25 comments:

VSK said...

Prevent Gender Based Violence

Syam said...

நல்ல முயற்ச்சி....அந்த போட்டோ எல்லாம் பார்க்கும் போது...நம்ம ஊர் மாதிரி தான் அங்கயும் இருக்கு..

Syam said...

என்ன ஆச்சு பங்கு கமெண்ட் மாடரேஷன் தூக்கிட்ட போல :-)

இலவசக்கொத்தனார் said...

//Prevent Gender Based Violence//

நல்லாச் சொல்லுமய்யா. உஷாக்கா பதிவில் வாய் விட்டதுக்கு அப்புறம் பயமாவே இருக்கு!!! :))

நல்லாத்தான் படம் பிடிக்கிற போ!

Syam said...

Prevent Gender Based Violence
Say No Violence Aganist Women

nicely said.. :-)

இராம்/Raam said...

புலி,

படமெல்லாம் நல்லாதான் புடிச்சுருக்கே...

//Prevent Gender Based ViolenceSay No Violence Aganist Women//

Well said..

நாகை சிவா said...

வாங்க எஸ்.கே... பல நாள் பிறகு உங்களின் தரிசனம் எனக்கு, அதுவும் நீங்களே வந்து மிக்க மகிழ்ச்சி. :-)))

நாகை சிவா said...

//நல்ல முயற்ச்சி....//

பங்கு, நீ ஏத சொல்லுற...

//அந்த போட்டோ எல்லாம் பார்க்கும் போது...நம்ம ஊர் மாதிரி தான் அங்கயும் இருக்கு.. //

தயவு செய்து அப்படி ஒரு முடிவுக்கு மட்டும் வந்து விடாதே பங்கு. நம்ம ஊர் எல்லாம் சொர்க்கத்துக்கும் மேல... அந்த அளவுக்கு இங்க நிலைமை மோசம்.

//என்ன ஆச்சு பங்கு கமெண்ட் மாடரேஷன் தூக்கிட்ட போல :-) //

ஒரு சிறு முயற்சி தான். பாக்கலாம்.

நாகை சிவா said...

//நல்லாத்தான் படம் பிடிக்கிற போ! //

தாங்க்ஸ் தலைவா!!!

//நல்லாச் சொல்லுமய்யா. உஷாக்கா பதிவில் வாய் விட்டதுக்கு அப்புறம் பயமாவே இருக்கு!!! :))//

என்னவே இப்படி பயம் காட்டுறீர். நான் வேற சவுண்ட கொஞ்சம் விட்டுடேனே... :-(

நாகை சிவா said...

//படமெல்லாம் நல்லாதான் புடிச்சுருக்கே...//

நீயுமா செல்லம்! தாங்க்ஸ்

//Syam said...
nicely said.. :-)//

//இராம் said...
Well said.. //

என்னய்யா சொல்லி வச்சுக்கிட்டு வறீங்களா என்ன?

நாகை சிவா said...

வாங்க சிபி,

வந்துட்டீர் போல்

நன்றி... வாழ்த்துக்கு :-)

நாகை சிவா said...

பா. பா

மீண்டும் என் நன்றிகள் உங்களுக்கு.

:-))))

கவிதா | Kavitha said...

சிவா, ரொம்ப நன்றி வாழ்த்துக்களுக்கு.. இன்னைக்குதான் பார்த்தேன்..

கலக்கறீங்க.. ஓரு நிகழ்ச்சிய அப்படியே தொகுத்து போட்டு இருக்கீங்க.. நல்லா இருக்கு..

உங்களின் கவனிப்பும், அதனால் வந்த பதிவும்.. நன்றி

நாகை சிவா said...

//கலக்கறீங்க.. ஓரு நிகழ்ச்சிய அப்படியே தொகுத்து போட்டு இருக்கீங்க.. நல்லா இருக்கு..

உங்களின் கவனிப்பும், அதனால் வந்த பதிவும்.. நன்றி //

அப்ப அப்ப இது மாதிரி எதாச்சும் கண்டுக்குறது. வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க...

Geetha Sambasivam said...

நீங்க சொன்னப்புறம் தான் பார்க்கிறேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் தந்ததுக்கு நன்றி.

நாகை சிவா said...

என் முயற்சியை வாழ்த்திய தலைவி நீர் வாழ்க உன் கொற்றம் வாழ்க.

MyFriend said...

வாழ்த்துக்கள் புலி.. உங்களுடைய இந்த பதிவு.. இந்த வார ஸ்பெஷல் பூங்காவில்.. என்சோய்.. :-D

MyFriend said...

20.. நீங்க

MyFriend said...

21.. மற்ற ப்ளாக்குகளில்

MyFriend said...

22.. பின்னூட்டங்கள்

MyFriend said...

23.. இடுவதை போல

MyFriend said...

24.. நான் இங்கு

MyFriend said...

25... போட்டுட்டேன்.. :-D

வர்ட்டா...

நாகை சிவா said...

//வாழ்த்துக்கள் புலி.. உங்களுடைய இந்த பதிவு.. இந்த வார ஸ்பெஷல் பூங்காவில்.. என்சோய்.. :-D //

தகவலுக்கு நன்றி மை பிரண்ட். எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான் ;-)

நாகை சிவா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
20.. நீங்க
21.. மற்ற ப்ளாக்குகளில்
22.. பின்னூட்டங்கள்
23.. இடுவதை போல
24.. நான் இங்கு
25... போட்டுட்டேன்.. :-D//

எங்க நான் இப்படியா மற்ற ப்ளாக்ல பின்னூட்டம் போடுறேன். மைண்ட கன்னா பின்னா கசக்கில போட்டுக்கிட்டு இருப்பது நினைச்சேன்... கவுத்துட்டீங்களே...

//வர்ட்டா... //

போயிட்டு மறுபடியும் வாங்க.