Friday, March 30, 2007

வாழ்க சனநாயகம் - 2

வாழ்க சனநாயகம் - 1

சூப்ரீம் கோர்ட் OBC இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதித்தற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை(31.03.07) பந்த் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இட ஒதுக்கீட்டில் எனக்கு சில கருத்து மாற்றங்கள் இருந்தாலும், அதற்கு எதிர்ப்பு கிடையாது. அதைப் பற்றியும் விவாதிக்கவில்லை இந்த பதிவு.

என் கேள்வி எல்லாம், நாளை இந்த பந்த் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான். காவிரி நீர் பிரச்சனை, முல்லை அணை பிரச்சனை, இலங்கை ராணுவத்தால் நித்தமும் இறந்து கொண்டு தமிழக மீனவர் பிரச்சனை போன்ற காரணங்களுக்கு அறிவிக்கப்படாத பந்த் இந்த இடைக்கால தீர்ப்புக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. (நேற்று கூட குமரிக்கு அருகில் இலங்கை ராணுவத்தால் 4 மீனவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடைப் பெற்று உள்ளது)

இந்த இடைக்கால தீர்ப்பை குறித்து பலரும் பல கருத்துக்கள் கூறி உள்ளார்கள். அதில் காங் - ஒரு இடைக்கால ஏற்பாடு தான் இந்த தீர்ப்பு. சூப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏதிரானதல்ல. புள்ளி விபரங்களுக்கு ஏதிராகவே தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கிய கட்சியான காங், இப்படி கூறி இருக்கும் போது பந்த்க்கு என்ன அவசியம். நம் முதல்வர் கூட இந்த பந்த கோர்ட்டுக்கு ஏதிரான பந்த இல்லனு சொல்லுறார். ஏப்ரல் மாசம் நெருங்கி விட்டதுனு ஞாபகப்படுத்துற மாதிரி இன்னும் ஒரு விசயம் சொல்லி உள்ளார். இந்த பந்த்தில் இருந்து அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறி விட்டு விமான, ரயில் போக்குவரத்தை நிறுத்தும்படி மத்திய அரசை கேட்டுக் கொள்வோம் என்கிறார்.

இந்த தீர்ப்பு ஒரு தவறான தீர்ப்பாகவே இருந்தாலும் அதை சட்ட ரீதியாகவே எதிர்க்கொள்ள வேண்டியது தானே.(மற்ற விசயங்களில் செய்தது போல்) ஏன் இந்த விசயத்தில் மட்டும் இவ்வளவு அளவுக் கடந்த அக்கறை? சமூக நீதி காவலர் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ளும் அக்கறையா? அல்லது மற்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப கிடைத்த நல்ல வாய்ப்பு அதை பயன்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமா?

இந்த பந்த்தை நாளை மறுநாள்(ஏப்ரல் 1) அறிவித்து இருக்கலாம், இன்னும் சரியாக இருந்து இருக்கும். இல்லை நமக்கு என்றும் ஏப்ரல் 1 தான் என்று முடிவு செய்து விட்டார்கள்.

வாழ்க சனநாயகம்

43 comments:

நாகை சிவா said...

மனதின் ஒசை சொன்னது,

சிவா,உன் கோபம் சரியென்றே எனக்கு படுகிறது.. விரைவில் மறுபடியும் வருகிறேன்.

உங்கள் நண்பன்(சரா) said...

நாளை திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்! மாணவர்களின் பாடு!????

இலவசக்கொத்தனார் said...

புலி, எதோ சொல்கிறேன் எனச் சொல்லி விட்டீரே!!

பந்த் நடத்துவதால் எந்த விதமான ப்ரயோஜனமும் கிடையாது. உற்பத்தித் திறன் பாதிக்கப் படுமேயன்றி வேறு எந்த விளைவும் கிடையாது. மக்களும் விஷயம் புரியாமல் சன் டீவியில் சிம்ரன் படம் பார்த்துக் கொண்டு பொழுது போக்குவார்கள்.

இட்லி வடையார் பதிவில் நான் கேட்ட ஒரு கேள்விக்குப் பதில் வந்தது கேரளா ஹைக்கோர்ட்டில் பந்த் செய்யக் கூடாது என தடையே செய்து விட்டார்களலாம். எதற்கெடுத்தாலும் ஹர்த்தால் என்னும் அந்த மாநிலத்திலேயே அதைச் செய்ய முடிந்தால் நமக்கென்ன கேடு? அப்படி ஒரு தீர்ப்புக்காக நம் மாநிலத்திலும் யாரேனும் நீதிமன்றம் செல்வார்களானால் அதற்கான செலவில் நானும் ஒரு பங்கு தரத் தயாராக உள்ளேன்.

இந்த பந்தை தடுத்து நிறுத்த கால அவகாசம் இல்லை என்றாலும் இனியாவது இப்படி பந்த் நடத்தாமல் இருக்க இது உதவியாக இருக்கும்.

இலவசக்கொத்தனார் said...

//காவிரி நீர் பிரச்சனை, முல்லை அணை பிரச்சனை, இலங்கை ராணுவத்தால் நித்தமும் இறந்து கொண்டு தமிழக மீனவர் பிரச்சனை போன்ற காரணங்களுக்கு அறிவிக்கப்படாத பந்த் இந்த இடைக்கால தீர்ப்புக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.//

அதாவது அதுக்கெல்லாமும் பந்த் செய்ய வேண்டும். அப்படி அதற்குச் செய்தால் இதற்கும் செய்யலாம் என்ற தொனி வருகிறதே. இது சரிதானா?

இலவசக்கொத்தனார் said...

புலி, மற்றுமொரு வேண்டுகோள். எனது சில விவாதக் களங்களில் நான் கேட்ட கேள்விகளைச் சரியாகப் படிக்காமல் மாற்றுக் கருத்துக்களை வைத்து அப்பதிவை ஹைஜாக் செய்வதும், அந்த சரியில்லாத கருத்துக்கள் காரணமாகவே முத்திரை குத்துதலும் நடைபெற்றிருக்கிறது. அது போல் இங்கு நடக்காமல் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள்.

Syam said...

கெடக்குறது எல்லாம் கெடந்துட்டு போகுது கெளவிய தூக்கி மனைல வெய்னு சொன்னாங்களாம்..அந்த மாதிரி இவனுக திருந்தவே மாட்டானுகளா...பந்த நடதுறது நமக்கு நாமே திட்டதுல நம்ம தலைல மண்ணவாரி போட்டுக்கறதுன்னு தெரிஞ்சும்...அரசியல் ஆதாயத்துக்காக என்ன வேனா செய்வாங்க....

நாகை சிவா said...

கொத்துஸ்,
உங்களின் மற்ற பின்னூட்டங்களுக்கு பிறகு வருகிறேன்.

//அதாவது அதுக்கெல்லாமும் பந்த் செய்ய வேண்டும். அப்படி அதற்குச் செய்தால் இதற்கும் செய்யலாம் என்ற தொனி வருகிறதே. இது சரிதானா? //

சத்தியமா கிடையாது. அப்படி ஒரு தொனி வந்துக்கு வருந்துகிறேன்.

உயிர்கள் சம்பந்தப்பட்ட அந்த பிரச்சனையில் கூட இப்படிப்பட்ட ஒரு நிலைப்பாடு எடுக்காத நிலையில் ஒரு இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்ட ஒரு விசயத்துக்கு ஏன் இந்த நிலைப்பாடு என்பது தான் என் கேள்வி.

எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால் தமிழக மக்கள் அனைவரையும் கருப்பு பேட்ஜ் அணிய சொல்லுங்கள், கருப்பு கொடி ஏற்றி வைக்க சொல்லுங்கள். மக்களுக்கு உண்மையில் இந்த பிரச்சனையில் ஆர்வம் இருந்தால் அவர்களே தாங்களாக வந்து இதில் ஈடுபடுவார்கள் என்பது என் எண்ணம்.

Santhosh said...

புலி,
பந்து எல்லாம் காசுக்கு புடிச்ச கரும்மயா, எவ்ளோ வருமான இழப்பு. எந்த பிரச்சனைக்கும் பந்த் தீர்வாகாது. மத்தபடி மஞ்ச துண்டு பார்ட்டி பத்தி நமக்கு தெரியாதது இல்ல, நல்ல சீன் மட்டும் போடுவாரு.

SurveySan said...

எது எப்படியோ, இந்த 'இடைக்கால' தீர்ப்புக்கு இவ்ளோ ஆர்பாட்டம் தேவையில்லாதது. வேஸ்ட் ஆப் டைம் :[

புள்ளி விவரங்கள் அவங்க கேக்கர மாதிரி கொடுத்தப்பரம் இழுத்தடிச்சா, இந்த ஆர்பாட்டம் நியாயம்.

rv said...
This comment has been removed by the author.
rv said...

நல்ல பதிவு புலி..

//இல்லை நமக்கு என்றும் ஏப்ரல் 1 தான் என்று முடிவு செய்து விட்டார்கள். //
அதே.. இதுக்கு வரிக்கு வரி.. இல்ல இல்ல...வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்..

வெட்டிப்பயல் said...

அது என்னுமோ தெரியல புலி...
படிக்கிற பசங்களுக்கு ஒண்ணுனா கோபம் கண்ட படிக்கி வருது...

பந்த நடத்தட்டும் என்னுமோ பண்ணட்டும். அத ஏன் பரிட்சை அன்னைக்கு பண்ணனும்...

வசதியா இருக்கவன் ஜாலியா கார்ல போய் டென்ஷன் இல்லாம எழுதுவான்.

பஸ்ல போறவனக்கு பரிட்சை டென்ஷனைவிட பரிட்சை ஹாலை போய் சேரதே பிரச்சனையா போச்சினா எப்படி ஒழுங்கா பரிட்சை எழுத முடியும்???

இவனுங்களுக்கு எல்லாம் படிக்கிறவனை பத்தி என்ன கவலை???

வேணாம் புலி வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது...

கோபிநாத் said...

நல்லபதிவு புலி ;-)

சந்தோஷ் சொன்னது போல வருமான இழப்பு தான் மிஞ்சும் வேற ஒன்னும் ஆகபோறது இல்லை. பட்ஜெட் போட்டதற்க்கே உன்னபுடி என்னபுடின்னு ஆகிபோச்சு. அப்படி இருந்தும் இந்த பந்த் எல்லாம் தேவையா?

ஒவ்வொரு இந்தியன் தலைமேலையும் 22,000 கடன் இருக்காம்.

சோத்துக்கட்சி said...

SC/ST-க்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த வித மாற்றமும் இல்லையே.

OBC மக்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், ஓபிசி பிரிவுகளில் உள்ள சாதி மக்கள் இன்னமும் நசுக்கப் படுகிறார்களென்று.

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று சொன்னபோது கிளம்பிய எதிர்ப்பு அறியாததா? குறிப்பாக ஓபிசி சாதியினர் இன்னமும் பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஏமாற்றுத்தனம்

இந்த பந்த், வோட்டு வங்கிக்காக கருணாநிதி ஆடும் நாடகம்.

இப்போது விதித்திருப்பது, வெறும் இடைக்காலத் தடை மட்டுமே, காசுகள் பரிமாறப்படலாம், நீதிபதிகள் விலை பேசப் படலாம், அல்லது மிரட்டப்படலாம், ம்ம்...நம் இந்தியநாடு..

நாகை சிவா said...

//சிவா,உன் கோபம் சரியென்றே எனக்கு படுகிறது.. விரைவில் மறுபடியும் வருகிறேன். //

வாருங்கள் ஹமீது....

நாகை சிவா said...

//நாளை திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்! மாணவர்களின் பாடு!???? //

அதைக் குறித்து கவலைப்பட யார் இருக்கா சரா. இதை எதிர்த்து குரல் கொடுத்தால் சமூக நீதியின் எதிரி என்று முத்திரை அல்லவா குத்துவார்கள்.

நாகை சிவா said...

//புலி இதை பத்தி தான் நான் எழுதலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள முந்திவிட்டீர்:)//

நமக்குள்ள என்ன....

//தமிழகமே ஸ்தம்பித்தது என்று கூறும்படி முழு அடைப்பு அமைதியாக(!) நடக்குமாம் //

ஸ்தம்பிக்க வைப்பார்கள்... சமூக நீதி காவலர் என்ற பெயரை காப்பாற்றிக் கொள்ள....

வாழ்க சனநாயகம்....

நாகை சிவா said...

//உற்பத்தித் திறன் பாதிக்கப் படுமேயன்றி வேறு எந்த விளைவும் கிடையாது. //

கொத்துஸ், நீங்க இப்படி யோசிக்குறீங்க... நம் முதல்வர் பேட்டிய படிச்சு பாருங்க... செம காமெடியா இருக்கு.... இன்னும் பெரியாரை விட மாட்டேன் அடம் பிடிக்குறார்.....

//அப்படி ஒரு தீர்ப்புக்காக நம் மாநிலத்திலும் யாரேனும் நீதிமன்றம் செல்வார்களானால் //

செல்வார்கள் என்றே நினைக்குறேன். அவர்களுக்கு விரைவில் முரசொலியில் முத்திரை குத்துப்பட்ட ஒரு புது பட்டம் வழங்கப்படும்.

//எனது சில விவாதக் களங்களில் நான் கேட்ட கேள்விகளைச் சரியாகப் படிக்காமல் மாற்றுக் கருத்துக்களை வைத்து அப்பதிவை ஹைஜாக் செய்வதும், அந்த சரியில்லாத கருத்துக்கள் காரணமாகவே முத்திரை குத்துதலும் நடைபெற்றிருக்கிறது.//

அது எப்பவும் நடப்பது தானே! நாம் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டாம், என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்துக் கொண்டாலே போதுமானது.

நாகை சிவா said...

//பந்த நடதுறது நமக்கு நாமே திட்டதுல நம்ம தலைல மண்ணவாரி போட்டுக்கறதுன்னு தெரிஞ்சும்...அரசியல் ஆதாயத்துக்காக என்ன வேனா செய்வாங்க.... //

உண்மை தான் பங்கு, மற்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப தான் இந்த பந்தோ என்று எண்ண தோன்றுகிறது.

மு.கார்த்திகேயன் said...

இதை வேற தனியா சொல்லனுமா மாப்ஸ்.. எப்பானாலும் நாம அப்படித்தான் முடிவு பண்ணிட்டாங்களே

மு.கார்த்திகேயன் said...

இந்த பந்த் எல்லாம் ஒண்ணும் செய்யப்போறதில்லை.. ரொம்ப நாளாச்சு தமிழ்நாட்டுல நடந்துன்னு யாரோ சொல்லிஇருப்பாங்க போல..

நல்லவேளை, சனிகிழமையா வச்சாங்க.. ரொம்ப பேருக்கு விடுமுறை நாள்.. ஒரு வேளை சன் டி.வி யோட டி.ஆர்.பி ரேட்டிங் ஏத்த இதுவும் ஒரு வழியா? :-)

நாகை சிவா said...

//எவ்ளோ வருமான இழப்பு.//

அத பற்றி அவர்களுக்கு என்ன கவலை, வர வேண்டிய வாங்க வேண்டியது எல்லாம் சரியா நடந்தா சரி....

// எந்த பிரச்சனைக்கும் பந்த் தீர்வாகாது. //

வெற்றிக் கொண்டான் மேட்டருக்கு இது தீர்வாகும் போல இருக்கு பங்கு.!

டண்டணக்கா said...

Siva, Usually I'm not bothered to go public on many things as I lack the skill and many pioneers here do better job. But this time, at the least I want to express my strong dissatisfaction on this stay of reservation. In that line, though I oppose Mr.KK on many junctures, this time I support his call for bandth. It will send strong message across Centre(govt) and India. KK's fast reaction gives faith and hope. I believe, Balance is need of the future, reservation does so better than other measures.

balar said...

முதல் முறையாக இங்கே...

நல்ல பதிவு...

எனக்கென்னமோ இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து நடந்த பந்த் மாதிரி தெரியவில்லை..அம்மாவின் உண்னாவிரதத்திற்க்கு போட்டியாக நடத்தபட்ட அரசியல் சண்டை தான் இது...:)

நாகை சிவா said...

//புள்ளி விவரங்கள் அவங்க கேக்கர மாதிரி கொடுத்தப்பரம் இழுத்தடிச்சா, இந்த ஆர்பாட்டம் நியாயம். //

அதை பற்றி எவரும் பேசக் காணாம்... என்ன தான் நடக்குதோ? ஒன்னும் புரியலப்பு....

நாகை சிவா said...

////இல்லை நமக்கு என்றும் ஏப்ரல் 1 தான் என்று முடிவு செய்து விட்டார்கள். //
அதே.. இதுக்கு வரிக்கு வரி.. இல்ல இல்ல...வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.. //

நன்றி ராம்ஸ்... என்று தான் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நமக்கு விடுதலையோ?

நாகை சிவா said...

//அது என்னுமோ தெரியல புலி...
படிக்கிற பசங்களுக்கு ஒண்ணுனா கோபம் கண்ட படிக்கி வருது...//

கோபம் புரிகிறது வெட்டி, உன் குணம் அப்படி!

//இவனுங்களுக்கு எல்லாம் படிக்கிறவனை பத்தி என்ன கவலை??? //

சரியா சொன்ன வெட்டி. கேட்டா அவர்களுக்காக தான் இந்த போராட்டம் என்கிறார்கள்.

//வேணாம் புலி வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது... //

திட்டிடு, மனதில் புழுங்கி புழுங்கி நமக்கு தான் வியாதி வரும் போல....

நாகை சிவா said...

// ஓபிசி பிரிவுகளில் உள்ள சாதி மக்கள் இன்னமும் நசுக்கப் படுகிறார்களென்று. //

இன்னும் இருக்கின்றார்கள் என்பது உண்மை தான், ஆனால் சலுகையை ஏற்கனவே அனுபவித்தவன் தான் மீண்டும் தன் வாரிசுகளுக்கு வாங்கி வருகின்றான்.

//வெறும் இடைக்காலத் தடை மட்டுமே, காசுகள் பரிமாறப்படலாம், நீதிபதிகள் விலை பேசப் படலாம், அல்லது மிரட்டப்படலாம், //

இப்பொழுதே நீதிபதிகளை ஜாதியை வைத்து பேசிக் கொண்டு இருக்கின்றார்கள், பாப்போம் இன்னும் என்ன என்ன செய்கின்றார்கள் என்று

நாகை சிவா said...

//சந்தோஷ் சொன்னது போல வருமான இழப்பு தான் மிஞ்சும் வேற ஒன்னும் ஆகபோறது இல்லை. பட்ஜெட் போட்டதற்க்கே உன்னபுடி என்னபுடின்னு ஆகிபோச்சு. அப்படி இருந்தும் இந்த பந்த் எல்லாம் தேவையா? //

இது உனக்கு புரியுது, எனக்கு புரியுது...
வருமான இழப்பைக் கூட விடு... எவ்வளவு அவசவுர்க்கியம், இவர்களுக்கு என்ன சும்மா சொகுசா ஏஸி கார்ல போவார்கள், மற்றவர்கள் கதி....

நாகை சிவா said...

//எப்பானாலும் நாம அப்படித்தான் முடிவு பண்ணிட்டாங்களே //

:-(

// ஒரு வேளை சன் டி.வி யோட டி.ஆர்.பி ரேட்டிங் ஏத்த இதுவும் ஒரு வழியா? :-) //

இருந்தாலும் இருக்கலாம், ஏன் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் ஒரு நாள் நிறுத்தி ஸ்தம்பிக்க செய்து இருக்க வேண்டியது தானே... அதை செய்வார்களா?

நாகை சிவா said...

//this time I support his call for bandth. It will send strong message across Centre(govt) and India. KK's fast reaction gives faith and hope.//

Do you think that this is the only way to show our dissatisfaction.

They didnt give any time frame to the ppls those who planned their schdedules earlier.

இதனால் பாதிக்கப்பட்ட இருப்பது நடுத்தர வர்க்கமும், கீழ்தர வர்க்கமும். இவர்களுக்கு என்ன? பந்த் என்றால் அதில் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் போல....

நாகை சிவா said...

//எனக்கென்னமோ இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து நடந்த பந்த் மாதிரி தெரியவில்லை..அம்மாவின் உண்னாவிரதத்திற்க்கு போட்டியாக நடத்தபட்ட அரசியல் சண்டை தான் இது...:) //

என்ன காரணம் என்று புரியவில்லை. ஆனால் திசை திருப்பும் வேலை என்பது தான் நல்லா புரியுது.

டண்டணக்கா said...

/*Do you think that this is the only way to show our dissatisfaction*/
This is one of the way. As we can see from National Media, this had sent a much stronger message. Though there is a cost, the cost is worth to voice for my fellow brothers including non-Tamil Indians.

/*They didnt give any time frame to the ppls those who planned their schdedules earlier*/
Even I would be happy if we had the time to plan and execute. This issue needs fast and strong reaction and more importantly without any violence. For better, the choice of Saturday strikes the balance for both worlds.

/*இதனால் பாதிக்கப்பட்ட இருப்பது நடுத்தர வர்க்கமும், கீழ்தர வர்க்கமும். */
It is for their cause, for their interest, for a better future of nation. Personnel if i'm suffered, i would happy to be. As i said earlier, the cost is worth to voice for my fellow brothers including non-Tamil Indians. Overall the proposed reservation system will bring more goods(to them and nation) than this loss.

/*பந்த் என்றால் அதில் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் போல....*/
As I said earlier, many junctures I oppose Mr.KK. But this time, I'm more concerned about voicing for my fellow brothers than a TV. In relevance, if Ms.JJ came out first and did it, I would supported it. As a whole I'm not bothered about who is getting political millage, the voice for my brothers is more important to me. Who ever do so for this cause, I would support them.

As a Tamilian, I'm proud my state is the first to voice for the whole India.

Syam said...

பங்கு உன்னோட profile page க்கு போனா என்னமோ இங்கிலீசுல திட்டுது...

doondu said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

கமெண்ட் மாடுரேசனை மறுபடியும் போட வச்சுட்டுங்களே !!!!

வாழ்க! வளர்க!!!

ambi said...

நாசாமாய் போகட்டும் என் நாடும்! என் மக்களும்!
என்ற டயலாக்கை தான் நமது அரசியல்வியாதிகள் தினமும் சொல்லுவார்கள் போலும்.

Porkodi (பொற்கொடி) said...

indiava vittu vandhalum vandhen naatu nadappu padichu romba naalagi pochu :(

Geetha Sambasivam said...

I agree with you because we were in India at that time and were severely affected that day.

நாகை சிவா said...

//indiava vittu vandhalum vandhen naatu nadappu padichu romba naalagi pochu :( //

நானும் இப்ப பேப்பர் படிப்பதே இல்லங்க. ஏதாவது முக்கியமான விசயமாக இருந்தால் நம் மக்கள் சொல்வார்கள் அவ்வளவு தான். படித்தால் கோபம் தான் வருது... என்ன பண்ணுறது...

நாகை சிவா said...

//I agree with you because we were in India at that time and were severely affected that day. //

பந்த் என்றாலே கண்டிப்பாக நம் ரெகுலர் பாதிக்கப்படுங்க....

நாகை சிவா said...

//நாசாமாய் போகட்டும் என் நாடும்! என் மக்களும்!
என்ற டயலாக்கை தான் நமது அரசியல்வியாதிகள் தினமும் சொல்லுவார்கள் போலும். //

சரியா சொன்னீங்க அம்பி, என்னத்த சொல்ல.... நெஞ்சு பொறுக்குதில்லை...

நாகை சிவா said...

//பங்கு உன்னோட profile page க்கு போனா என்னமோ இங்கிலீசுல திட்டுது... //

இப்ப சரியா இருக்கானு பாரு பங்கு...