எனக்கு பெரும்பாலும் மனிதர்களை எடுப்பதை விட வானம் நித்தம் நித்தம் காட்டும் வண்ணக் கோலங்களை எடுப்பதில் தான் ஆனந்தம் அதிகம். பாருங்க எப்படி இருக்குனு, பாத்துட்டு அப்படியே ஒரு வார்த்தையும் சொல்லிட்டு போங்க. ஏன் கேட்குறேனா.... இந்த பேசிக் மாடல் கேமராவ விட்டு அடுத்த லெவலான இண்டர்மிடியட் கேமரா (நிக்கானில்) வாங்கலாம் என்று இருக்கேன். உன் லட்சணம் இதுலே தெரியுதுனு சொல்லிட்டிங்க வைங்க, அந்த கேமரா பொட்டி வாங்கும் எண்ணத்தை கொஞ்சம் நிறுத்தி வைப்பவன்ல, அதுக்கு தான்.
இடைக்குறிப்பு : அனைத்து புகைப்படங்களையும், அந்த அந்த புகைப்படத்தின் மேல் க்ளிக் பண்ணினால் தனி ஜன்னலில் பெரிதுப்படுத்தி பார்க்கலாம்.
அந்திமாலை பொழுது, சூரியன் விடை பெறும் நேரம். இடம் : ஹைத்தி, தங்கி இருந்த ஹோட்டல் பால்கனியில் இருந்து புடிச்சது. பொட்டி - நிக்கான்.
சூரியன் தன் கடமையை செய்ய வெளி வந்த காலை பொழுது. இடம் : ஹைத்தி, உணவகத்தில் ரொட்டிக்காக(பிரட்) காத்து இருந்த நேரத்தில் புடித்தது. பொட்டி - சோனி
நான் என் கடமையை செய்ய ஹெலிகாப்டரில் போன மதிய பொழுது. இடம் : ஹைத்தி, வானில் இருந்து பிராக்கு பார்த்துக் கொண்டே புடிச்சது. பொட்டி - நிக்கான்
மீண்டும் ஒரு மயக்கும் மாலை பொழுது. இடம் : ஹைத்தி, அறையின் சன்னல் வழியாக ஜும் பண்ணி புடிச்சது. பொட்டி - நிக்கான்
வார விடுமுறையை அனுபவிக்க சென்ற பகல் பொழுது. இடம் : ஹைத்தி, தனித்து அமர்ந்து லபாடி பீச்ல புடிச்சது. பொட்டி - நிக்கான்
வண்ணக்கோலங்கள் காட்டிய மாலை பொழுது. இடம் : ஹைத்தி, மாடியில் உலாத்தி கொண்டு இருக்கும் போது சட்னு பாத்து பட்னு புடிச்சது. பொட்டி - நிக்கான்
உலக அதிசயத்தை அண்ணாந்து பார்த்த மாலை பொழுது. இடம் : பாரீஸ், டாக்சியில் இருந்து அவரத்தில் புடிச்சது. பொட்டி - சோனி
இந்தியன் மாபியா துள்ளி விளையாண்ட மாலை பொழுது. இடம் : பாரீஸ், ஈஃபில் டவரை பாத்துட்டு திரும்பும் போது நம்ம பசங்க ஆடிய ஆட்டத்தை புடிச்சது. பொட்டி - சோனி
கனவு புகைப்படமான மின்னலை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சித்த இருள் கவ்விய இரவு பொழுது. இடம் : சூடான், மின்னல் அடிக்கடி மின்னுவதை முழுமையாக பிடிக்க முடியாமல் ஆறுதலுக்கு புடிச்சது. பொட்டி - சோனி
மணல் புயலை புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒடிய மாலை பொழுது. இடம் : சூடான், மணல் புயலை பிடிக்க ஒடிய நம்மை மழை துரத்த தொடங்கிய போது புடிச்சது. பொட்டி - சோனி
71 comments:
தமிழ் புலி!!!
படம் எல்லா சூப்பர் பா.... குறிப்பாக அந்த அந்திமாலையும், வானவில்லும் அருமை
//..ரீபில் டவரை பாத்துட்டு திரும்பும் போது..//
இது எங்கிட்டுபா இருக்கு... சொன்னா போயாரலாம்...
:-)
தல பேரைக் கெடுக்காம நல்லாத் தான் படம் புடிச்சிருக்கீங்க...அதுவும் அந்த மின்னல் படம்தான் டாப் :D
//தமிழ் புலி!!!//
இது என்னங்க புதுசா இருக்கு பட்டம்.
//படம் எல்லா சூப்பர் பா.... குறிப்பாக அந்த அந்திமாலையும், வானவில்லும் அருமை//
நன்றிங்க. புது பொட்டி வாங்கலாமா?
அப்பால தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி... சரி செய்யப்பட்டது.
//தல பேரைக் கெடுக்காம நல்லாத் தான் படம் புடிச்சிருக்கீங்க...//
யோவ் கப்பி என்னாது உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலக்கே இந்த விசயத்தில் நான் தான் தல. அவருக்கு பொட்டி வாங்க ஐடியா கொடுத்தவனே நான் தான். இதில் இருக்கும் பல படங்கள் போன வருடம் பிடித்தது.....
//அதுவும் அந்த மின்னல் படம்தான் டாப் :D //
அப்படியா சொல்லுற, மின்னுது மின்னலுக்கு அன்பளிப்பா கொடுத்துடுவோம்.
படம் எல்லாமே அருமை புலி. அதுவும் ஹைத்தி ஜிம்பிளி ஜூப்பர். ஈஃபில் டவருக்கு முன்னாடி என்னா ஆட்டம் ராஸ்கல், கொஞ்சம் ஒவராத்தெரியல?
வானவில்லும், மணல் புயலும் கைதேர்ந்த புகைப்பட வல்லுனரின் திறமை.
நாலும், அஞ்சும் டாப்.
மெய்யாவே ஜூப்பராகீது!
சிவா
கலைத் தாகம் கொண்ட நட்சத்திரப் புலியான நீங்க, ஒரு புலியை நேராப் படம் எடுக்கலையா இன்னும்? :-))
ஹைத்தி ஹெலிகாப்டர் படமும், வானவில் படமும் சூப்பர்.
"அட்லாஸ் வாலிபர் வந்திருக்காக, நாகை சிவா வந்திருக்காக...அம்மா மின்னலு வாம்மா", ன்னு கூப்பிட்டு இருந்தீங்கன்னா, மின்னலு வந்திருக்கும்; நீங்களும் படம் புடிச்சிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்களே!
ஆனா, புயலைப் பிடிச்ச நீங்க, என்னைக்காச்சும் ஒரு நாள், மின்னலைப் புடிக்காம விட மாட்டீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? :-)
படமெல்லாம் அருமை...
ஹெலிகாப்டர்ல இருந்து எடுத்த படமும், பீச் படமும் சூப்பர்...
மின்னல் படத்துக்கு செட்டிங் ஏதோ மாத்தி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்குமோ?
அப்பறம் மணல் சூறாவளிக்கு எடுத்த போட்டோல கேமரா லென்ஸ்ல தண்ணி பட்டுடுச்சினு நினைக்கிறேன்!!!
நானும் இந்த மாதிரி நிறைய எடுத்து வெச்சிருக்கேன்... சீக்கிரம் போடறேன் ;)
படங்கள் அருமை.குறிப்பாக வானவில் படம் சூப்பர்ப்
புகைப்படங்கள் அருமையாக எடுத்துள்ளீர்கள் நாகை சிவா. நமக்கு சில மாதங்கள் பயிற்சி அளிக்க முடியுமா?
photos pramadham... aduvum anda vaanavil photo dhool !!
படங்கள் அருமையா பிடிச்சிருக்கீங்க சிவா அண்ணா!
நாகை செல்வமே!
எப்படியடா பிடித்தாய்
இப்படிப்பட்ட படங்களை!
என் தங்கமே!
என் பெயரைக் காப்பாற்றி விட்டாயடா என் செல்லமே!
உனக்கு சொல்லித் தந்தமைக்கு
எனக்கு எப்பேர்ப்பட்ட பெருமையைத் தேடித் தந்தாய்!
//ஈஃபில் டவருக்கு முன்னாடி என்னா ஆட்டம் ராஸ்கல், கொஞ்சம் ஒவராத்தெரியல?//
நானா ஆடினேனா, நான் படம் தானே புடிச்சேன். என்ன திட்டினா என்ன அர்த்தம்.
//வானவில்லும், மணல் புயலும் கைதேர்ந்த புகைப்பட வல்லுனரின் திறமை.//
இது என்ன உள்குத்தா?
//நாலும், அஞ்சும் டாப்.
மெய்யாவே ஜூப்பராகீது! //
அப்படியா சொல்லுற தம்பிண்ணன், புது பொட்டி வாங்கிடலாமா?
நாகையாரே!
வானவில் படம் அருமை!
கல்லூரி நாட்களில்
"வானவில்லுக்கு
வண்ணம் சேர்க்க
வருவானோ இறைவன்
உன்னிடத்தில்
இரவல் கேட்க"
என்று எழுதியது நினைவுக்கு வருகிறது.
மழையே மணற்புயலே
மாலை இளம் கதிரவனே!
கடைசிப் படம் அருமை!
//சிவா
கலைத் தாகம் கொண்ட நட்சத்திரப் புலியான நீங்க, ஒரு புலியை நேராப் படம் எடுக்கலையா இன்னும்? :-)) //
கென்யா போகும் போது எடுத்துட்டா போச்சு...
//ஆனா, புயலைப் பிடிச்ச நீங்க, என்னைக்காச்சும் ஒரு நாள், மின்னலைப் புடிக்காம விட மாட்டீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? :-) //
கண்டிப்பாக...
//மின்னலு வந்திருக்கும்; நீங்களும் படம் புடிச்சிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்களே! //
எங்க போயிட போகுது. கூப்பிட்டா வந்துட்டு போகுது.... அப்ப பாத்துக்கலாம் ;-)
//மின்னல் படத்துக்கு செட்டிங் ஏதோ மாத்தி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்குமோ?//
செட்டிங் பிரச்சனை இல்ல வெட்டி. செட்டர் ஸ்பீட் தான். மின்னல் வரும் போது நாம் கேமரா பிரஸ் பண்ணினாலும் சில மில்லி செகண்ட்ஸ் டிலே இருக்கு. அதான் பிரச்சனை. அதான் அடுத்த வகை கேமரா போகலாம் என்ற எண்ணம் அதன் பிறகு தான் வந்தது.
//அப்பறம் மணல் சூறாவளிக்கு எடுத்த போட்டோல கேமரா லென்ஸ்ல தண்ணி பட்டுடுச்சினு நினைக்கிறேன்!!!//
ஆமாம்ப்பா, மணல் புயல் வந்த சிறிது நேரத்திலே மழை வந்து விடும். அடுத்த தடவை பாக்கலாம்....
//படங்கள் அருமை.குறிப்பாக வானவில் படம் சூப்பர்ப் //
தாங்கஸ்ங்கண்ணா...
படமெல்லாம் நல்லா இருக்கு சிவா. நல்ல கலைப்புலி தான் நீங்கள். :-)
//புகைப்படங்கள் அருமையாக எடுத்துள்ளீர்கள் நாகை சிவா. நமக்கு சில மாதங்கள் பயிற்சி அளிக்க முடியுமா? //
நான் கொஞ்சம் பிஸி. அப்பால திங்க் பண்ணுறேன்....
//photos pramadham... aduvum anda vaanavil photo dhool !! //
நன்றி அருண், உங்க வீட்டாண்ட சீக்கிரமே வரேன்....
மின்னல் படம் பிடிப்பது மிக கடினம். பெரிய Exposure ( Bulb )வேண்டும் , tripod இல்லாமல் எடுக்க முடியாது.
முயற்சிக்கு வாழ்த்து !
/நான் என் கடமையை செய்ய ஹெலிகாப்டரில் போன மதிய பொழுது. இடம் : ஹைத்தி, வானில் இருந்து பிராக்கு பார்த்துக் கொண்டே புடிச்சது. பொட்டி - நிக்கான்//
அட பாவி! கன்னி வெடிகளைக் கண்காணிக்க ஒன்ன ஹெலிகாப்டர்ல அனுப்புனா...கடமையைச் செய்யாம படம் புடிச்சிக்கிட்டா நிக்குற...அதை ப்ளாக்ல வேற போட ஒனக்கு எம்புட்டு தைரியம்...ஒன்ன மாதிரி ஆளுங்களை எல்லாம்...
எனக்கு மிகவும் புடிச்ச படங்கள் - முதலாவதும், நான்காவதும். சில்ஹூவெட் படங்கள்னாலே ஒரு தனி அழகு தான். சூப்பரா இருக்கு.
வானவில்லும், மின்னலும் படம்புடிக்க லக்கு வேணும். வானவில் நல்லா வந்துருக்கு. மின்னல் இன்னும் கொஞ்சம் பளிச்சின்னு இருந்தா நல்லாருந்திருக்கும்.
//தலக்கே இந்த விசயத்தில் நான் தான் தல. அவருக்கு பொட்டி வாங்க ஐடியா கொடுத்தவனே நான் தான். இதில் இருக்கும் பல படங்கள் போன வருடம் பிடித்தது.....//
புலி சொல்றது உண்மை தான் கப்பி. நான் கேமரா வாங்கி 3-4 மாசம் தான் ஆகுது. கேனான் கேமரா வாங்க ஐடியா குடுத்ததே புலி தான். டேங்கீஸ் புலி.
:)
கலக்கல் டோட்டா ச்சே போட்டா கிராபி பங்கு...நம்ம தல சொல்லி குடுத்த மாதிரியே கரெக்ட்டா போட்டா புடிச்சு இருக்க... :-)
//எனக்கு பெரும்பாலும் மனிதர்களை எடுப்பதை விட வானம் நித்தம் நித்தம் காட்டும் வண்ணக் கோலங்களை //
ரொம்ப சரியா சொன்ன போ...இந்த மனுசங்கள போட்டா புடிச்சா சும்மா போவாய்ங்களா...நான் சிரிச்சது சரியா வரல...என்னோட தலய கோனோம்...என்னோடது ஒரு கை தான் போட்டால வந்து இருக்குனு பெரிய லொல்லு பன்னுவாய்ங்க...இதுல பாரு ஏதாவது ஏதாவது தப்பு சொல்லுமா :-)
//நானும் இந்த மாதிரி நிறைய எடுத்து வெச்சிருக்கேன்... சீக்கிரம் போடறேன் ;) //
பங்காளி தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பி விட்டுட்ட...இனி பாரு வெட்டி கலக்க போறாரு :-)
ஆமா இந்த வார நட்சத்திரம்னா தினமும் ஒரு பதிவு போடனுமா...என்னமோ போ ரெண்டு நாள் லீவுல போய்ட்டு வரதுகுள்ள இத்தினி பதிவு இருக்கு :-)
அவ்வளவு அகலமான நதியில கொஞ்சமாக தண்ணி ஓடுது??
என்னக்கென்னவோ அந்த ஹெலிகாபடர் ஷாட் தான் நன்றாக இருப்பதாக தோனுகிறது.
//தலக்கே இந்த விசயத்தில் நான் தான் தல. அவருக்கு பொட்டி வாங்க ஐடியா கொடுத்தவனே நான் தான். இதில் இருக்கும் பல படங்கள் போன வருடம் பிடித்தது.....//
புலி சொல்றது தான் உண்மை கப்பி. நான் கேமரா வாங்கி 3-4 மாசம் தான் ஆகுது. கேனான் கேமரா வாங்க ஐடியா குடுத்ததே புலி தான். டேங்கீஸ் புலி.
சிவா.. என்ன இது சென்னையில் தான் உங்க வலைபக்கத்திலும் அடைமழையா..கலகுங்க மாப்பி
//படங்கள் அருமையா பிடிச்சிருக்கீங்க சிவா அண்ணா! //
அண்ணாவ, ஒரு குழந்தை பையனை இப்படியா கூப்பிடுவது.......:-(
//உனக்கு சொல்லித் தந்தமைக்கு
எனக்கு எப்பேர்ப்பட்ட பெருமையைத் தேடித் தந்தாய்! //
நீங்க எனக்கு சொல்லி குடுத்தீங்களா, அப்படினா நம்ம பி.ஸி. அண்ணனுக்கும் கொஞ்சம் சொல்லி குடுங்களேன், அவரும் வாழ்ந்துட்டு போறார்.
நட்சத்திர வாழ்த்துகள் சிவா
படங்கள் அருமை
//"வானவில்லுக்கு
வண்ணம் சேர்க்க
வருவானோ இறைவன்
உன்னிடத்தில்
இரவல் கேட்க"//
சிபியாரே, வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது. கவுஜ் கண்டால் கொத்துஸ் மாதிரி நானும் தூர ஓடினாலும் இந்த கவிதை மிக அருமையாக உள்ளது.
கல்லூரி காலத்தில் ரொம்பவே பீல் பண்ணி இருப்பீங்க போல. இது யாரை பார்த்து பீல் பண்ணியது ;-)
புலி,
என்னோட இந்தூர் நண்பர் கார்த்திக் எடுத்த ஒரு மின்னல் படம். ஃப்ளிகாரில் பலரோட ஃபேவரிட் இந்த படம். எல்லாரும் ரசிக்கறதுக்காக இங்கே போடறேன். ஒனக்கு ஒன்னும் ஆட்சேபணை இருக்காதுன்னு நெனக்கிறேன்.
http://www.flickr.com/photos/karthik/148206731/
//மழையே மணற்புயலே
மாலை இளம் கதிரவனே!
கடைசிப் படம் அருமை! //
இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்து இருக்கலாம் என்று எனக்குப்படுகின்றது. முயற்சிக்கின்றேன், இங்கு மணற்புயலுக்கா பஞ்சம்....
//படமெல்லாம் நல்லா இருக்கு சிவா. நல்ல கலைப்புலி தான் நீங்கள். :-) //
நன்றி குமரன். பட்டம் எல்லாம் எதுக்கு இதுல இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு போல.....
//அட பாவி! கன்னி வெடிகளைக் கண்காணிக்க ஒன்ன ஹெலிகாப்டர்ல அனுப்புனா...கடமையைச் செய்யாம படம் புடிச்சிக்கிட்டா நிக்குற...அதை ப்ளாக்ல வேற போட ஒனக்கு எம்புட்டு தைரியம்...ஒன்ன மாதிரி ஆளுங்களை எல்லாம்...//
என்ன பண்ணுறது. இத்தனை நாள் அதான் நான் இதை இல்லாம போடாம வச்சு இருந்தேன். நீ தான் நைய் பண்ணி போட சொன்ன, போட்ட பிறகு இப்படி உல்டாவா பேசுற. உன்ன என்ன பண்ணுறது சொல்லு.....
//எனக்கு மிகவும் புடிச்ச படங்கள் - முதலாவதும், நான்காவதும். சில்ஹூவெட் படங்கள்னாலே ஒரு தனி அழகு தான். சூப்பரா இருக்கு.//
என்னடா இந்த இரு படத்தை பத்தி யாரும் சொல்லவில்லயே என்று யோசிச்சேன். நீ சொல்லிட்ட... தாங்க்ஸ்ப்பா....
//வானவில்லும், மின்னலும் படம்புடிக்க லக்கு வேணும்.//
வானவில்லை அடிக்கடி புடிச்சு இருக்கேன். மின்னல் தான் மிஸ் ஆயிட்டே போகுது. சீக்கிரமே கேட்ச் பண்ணுறேன்...
//மின்னல் படம் பிடிப்பது மிக கடினம். பெரிய Exposure ( Bulb )வேண்டும் , tripod இல்லாமல் எடுக்க முடியாது.
முயற்சிக்கு வாழ்த்து ! //
ஆமாங்க, ஒரு மணி நேரத்துக்கு மேல் முயற்சி பண்ணியதில் இரண்டு புகைப்படம் தான் தேறியது.... தொடந்து முயற்சிக்க எல்லாரும் ஆர்வமுட்டி உள்ளார்கள்.... முயற்சிப்பேன்.
உங்க படத்தை பார்த்தால், போட்டோகிராப்பி ஆள் போல் இருக்கீங்க. சீக்கிரமே உங்க வீட்டாண்ட வரேன்....
//புலி சொல்றது உண்மை தான் கப்பி. நான் கேமரா வாங்கி 3-4 மாசம் தான் ஆகுது. கேனான் கேமரா வாங்க ஐடியா குடுத்ததே புலி தான். டேங்கீஸ் புலி //
நீ இங்குட்டு டாங்க்ஸ் சொல்லிட்டு அப்பால பசங்களை தூண்டி விடுற போல இருக்கு, ஒவ்வொருத்தரும் கேட்கும் போது.... உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சிவா நல்ல NIKKON CAMERA வாங்குங்க
jv
//கலக்கல் டோட்டா ச்சே போட்டா கிராபி பங்கு...நம்ம தல சொல்லி குடுத்த மாதிரியே கரெக்ட்டா போட்டா புடிச்சு இருக்க... :-) //
யோவ் நான் புடிச்ச போட்டோவுக்கு எல்லாம் வேற யாருக்கோ கிரேடிட் கொடுக்குறீங்க எல்லாம். இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்...
//என்னோட தலய கோனோம்...என்னோடது ஒரு கை தான் போட்டால வந்து இருக்குனு பெரிய லொல்லு பன்னுவாய்ங்க...இதுல பாரு ஏதாவது ஏதாவது தப்பு சொல்லுமா :-) //
அட ஆமாம் பங்கு, ஆயிரதெட்டு நொண்ண நாட்டியம் பண்ணுவானுங்க. ஒன் மோர் ப்ளிஸ் னு பீட்டர் வேற விடுவானுங்க... இவனுங்க தொல்லை தாங்காது சாமி.
//பங்காளி தூங்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பி விட்டுட்ட...இனி பாரு வெட்டி கலக்க போறாரு :-) //
கலக்கட்டும் கலக்கட்டும்.
அது போகட்டும், தூங்கிட்டு இருக்குற சிங்கத்தை தான் தட்டி எழுப்ப முடியும். முழுச்சிக்கிட்டு இருக்குற சிங்கத்தை எதுக்கு எழுப்புனும் சொல்லு பங்கு.
//ஆமா இந்த வார நட்சத்திரம்னா தினமும் ஒரு பதிவு போடனுமா...என்னமோ போ ரெண்டு நாள் லீவுல போய்ட்டு வரதுகுள்ள இத்தினி பதிவு இருக்கு :-) //
ஆமாம் பங்கு, தினம் ஒரு பதிவு போடனும். இன்னும் நாலு நாள் இருக்கு :-(
//அவ்வளவு அகலமான நதியில கொஞ்சமாக தண்ணி ஓடுது??
என்னக்கென்னவோ அந்த ஹெலிகாபடர் ஷாட் தான் நன்றாக இருப்பதாக தோனுகிறது. //
ஆமாம் குமார், அது கொஞ்சம் வித்தியாசமான நாடு. அங்க ஆவது பராவாயில்லை. இங்கு ரொம்ப மோசம், தண்ணீர் ஒடிய சுவடு மட்டுமே உள்ளது.
//சிவா.. என்ன இது சென்னையில் தான் உங்க வலைபக்கத்திலும் அடைமழையா..கலகுங்க மாப்பி//
எல்லாம் உங்க மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் தான் மாப்பி.
//நட்சத்திர வாழ்த்துகள் சிவா
படங்கள் அருமை //
நன்றி மது வாழ்த்துக்களுக்கும் நம்ம வீட்டாண்ட வந்ததுக்கும். :-)
புலி,
பாரிஸுக்கு எல்லாம் போயிக்கிறே போலிருக்குதே. பாரிஸுக்கு நேர் எதிர்ல தான் பீச் ஸ்டேசன். அங்க ஏழு ரூவாக்கு டிக்கட் வாங்கிக்கினு மாடி ரெயில்ல குந்திக்கினேன்னு வை...நம்ம கூவம் இருக்கு பாரு கூவம் அது சொம்மா ஜெகஜோதியா தெரியும்...அப்படியே இது மாதிரி நெறிய வண்ணக்கோலங்களைப் பாத்துக்குனே திருவான்மியூர் வரைக்கும் போவலாம். அத பத்தி எல்லாம் ஒன்னியும் எயித காணோம்? ஒரு படத்தையும் காணோம்?
ஏன்?
//ஒனக்கு ஒன்னும் ஆட்சேபணை இருக்காதுன்னு நெனக்கிறேன்.//
இத எல்லாம் கேட்கனுமா மோகன்.
உண்மையிலே படம் சூப்பரோ சூப்பர். உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
இது போலவும் எடுக்கனும், தனியா ஒரே கோடாக நீளமாகவும் எடுக்கனும்.
//நம்ம கூவம் இருக்கு பாரு கூவம் அது சொம்மா ஜெகஜோதியா தெரியும்...அப்படியே இது மாதிரி நெறிய வண்ணக்கோலங்களைப் பாத்துக்குனே திருவான்மியூர் வரைக்கும் போவலாம்.//
அதுவும் ஒரு வகை வண்ணக் கோலங்கள் தான், அதையும் பிடித்து விரைவில் போடுறேன்....
//பாரிஸுக்கு எல்லாம் போயிக்கிறே போலிருக்குதே. பாரிஸுக்கு நேர் எதிர்ல தான் பீச் ஸ்டேசன். அங்க ஏழு ரூவாக்கு டிக்கட் வாங்கிக்கினு மாடி ரெயில்ல குந்திக்கினேன்னு வை...//
பாரிஸ் வரை போன எனக்கு பீச் ஸ்டேசன் தெரியாதா... ரெயில குந்திக்குனு போறதா, என்னமே புரியாதா ஆளக்கிற, நாங்க எல்லாம் யூத் அப்படியே தொங்கினே போவம் பாரு.......
//சிவா நல்ல NIKKON CAMERA வாங்குங்க
jv //
நீங்க ஒருத்தர் ஆச்சும் புது பொட்டி வாங்க சொன்னீங்களே... வாங்கிடலாம் ஜீ.வி.
நல்லா வந்திருக்கு படங்கள் சிவா.
அம்மா மின்னலுதான் முழுக்க ஃப்ரேமுக்குள்ள வராம படம் காட்டிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்!
நிக்கான்ல எடுங்க உங்க கலைத் தாகத்துக்கு ஜில்லுன்னு தண்ணி கிடைச்சமாதிரி இருக்கும்!
சிவா!
மிக நல்ல படங்கள். எனக்கு மிகப் பிடித்தவை ; பீச்;வானவில்.
பாரிஸ் வந்தீங்களா??? நம்ம ஈபில் பொண்ணையும் பாத்தீங்களா???(பிரான்சியர் பெண்ணாகத் தான் வர்ணிக்கிறார்கள்).
யோகன் பாரிஸ்
அட புலி உறுமும்னு பாத்தா நல்லாவே பாம்பு மாதிரி படம் புடிக்குதே. அருமையான படங்கள். குறிப்பா மாலைக்காட்சிகள் சூப்பர்.
அப்புறம் கடைசியில் இருக்கிற சூடான் படம். ப்ளாக் ஹாக் டவுன் மாதிரி இருக்கு.
Mr. Nagai Siva,
Pictures are superb. Recently, I gathered some golden info on Stephy.... chi... chi Photography from a professional photographer. According to her, it doesn't matter whatever is the size of the camera. What matters in a good picture is the composition.
So, you have done that very well, except two of them. As you have mentioned that you clicked that Eiffel twr from a cab, the traffic lamp post can be excused. You can edit the picture to remove it off.
If you still feel rich, go ahead and buy a good camera. I would choose Canon.
Cheers,
Saravanan ( Younger brother to Calcagary )
புலி,
படங்கள் சூப்பரா இருக்குப்பா ....
நல்லாதான் படமெல்லாம் காட்டுறே!!!! :-)))))
//தலக்கே இந்த விசயத்தில் நான் தான் தல. அவருக்கு பொட்டி வாங்க ஐடியா கொடுத்தவனே நான் தான். இதில் இருக்கும் பல படங்கள் போன வருடம் பிடித்தது.....//
இதே கடுமையாகவே ஆட்சோபிக்கிறேன். நீ அவருக்கு முன்னாடி வாங்கினாலும் தல தலதான்.... அவரு போட்டோ புடிச்சே மாதிரி ஓணாணை பிடிச்சியா நீயி?????
ஐடியா கொடுக்கிறாம் ஐடியா!!!
தல நீ சொன்னமாதிரி கூவிட்டேன்.. கொஞ்சம் பார்த்து செய்யி தல... :-)
en blog pakkam kaal vaithamaiku mikka nandri naagai puli avargale.
thala soli irunthaa maathri, silhouttes la enakum virupam undu-
4 aavathu anthi vaanamppugaipadam miga arumai. athai vida arumai vaanavil.
camera vaanga mudivu seithu vittal nangu aarainthu vaangavum.
எல்லாப் படமும் நல்லா வந்திருக்கு. நேத்தே வரமுடியலை. லேட்டா வந்துட்டேன். எனக்குப் பிடிச்சது மணல் புயலும், வானவில்லும், ராஜஸ்தானில்., "khali aandhi" அப்படின்னு ஒண்ணு வந்தப்போ அதிலே மாட்டிக்கிட்டது இன்னும் நினைவில் இருக்கு. மத்தபடி இந்த மணல் புயல் எல்லாம் ராஜஸ்தானில் அன்றாடம் இருக்கும்.
//நிக்கான்ல எடுங்க உங்க கலைத் தாகத்துக்கு ஜில்லுன்னு தண்ணி கிடைச்சமாதிரி இருக்கும்! //
ஹரி, என்ன ஜில்லுனு தண்ணி குடிக்க சொல்லிட்டு நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க போல ;-)
//பாரிஸ் வந்தீங்களா??? நம்ம ஈபில் பொண்ணையும் பாத்தீங்களா???(//
ஆம் யோகன், இரு இரவுகள் தங்கி இருந்தேன் ஒரு முறை. மறுமுறை விமானம் மாறியது மட்டும் தான்.
அங்கு வந்து விட்டு ஈபில் பாக்காமலா, பார்த்தேன், ரசித்தேன்....
//அட புலி உறுமும்னு பாத்தா நல்லாவே பாம்பு மாதிரி படம் புடிக்குதே. அருமையான படங்கள். குறிப்பா மாலைக்காட்சிகள் சூப்பர்.//
நன்றி ராம்ஸ், நன்றி. மாலை காட்சிகள் தான் எனக்கும் பிடித்தது.
//According to her, it doesn't matter whatever is the size of the camera. What matters in a good picture is the composition. //
புரிந்தது.... :-)
//So, you have done that very well, except two of them.//
நன்றி. அடுத்த முறை கவனமாக இருக்கின்றேன்.
//If you still feel rich, go ahead and buy a good camera. I would choose Canon.//
அப்படிய எல்லாம் இல்லங்க. இன்னும் இதுலயே நல்லா எடுக்க பயிற்சி எடுக்குறேன்.
கால்கரியின் இளவலா நீங்க. மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. சிங்கை வாசம் தானே...
//இதே கடுமையாகவே ஆட்சோபிக்கிறேன். நீ அவருக்கு முன்னாடி வாங்கினாலும் தல தலதான்.... அவரு போட்டோ புடிச்சே மாதிரி ஓணாணை பிடிச்சியா நீயி?????//
சத்தியமா முடியாதுப்பா. அவரு யாரு அவரு ரேஞ்சு என்ன....
//Srikanth said...
en blog pakkam kaal vaithamaiku mikka nandri naagai puli avargale.
thala soli irunthaa maathri, silhouttes la enakum virupam undu-
4 aavathu anthi vaanamppugaipadam miga arumai. athai vida arumai vaanavil. //
ஸ்ரீ காந்த் நீங்க எல்லாம் நம்ம வீட்டாண்ட வருவதை பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க கிட்ட இருந்து பல விசயங்கள் கத்துக்க வேண்டும். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
//முதல் படமும் நான்காவது படமும் ரொம்ப அருமையா வந்துருக்கு:) //
நன்றி வேதா, எனக்கு பிடித்த படங்களும் கூட.... :-)
//எனக்குப் பிடிச்சது மணல் புயலும், வானவில்லும், ராஜஸ்தானில்., "khali aandhi" அப்படின்னு ஒண்ணு வந்தப்போ அதிலே மாட்டிக்கிட்டது இன்னும் நினைவில் இருக்கு. மத்தபடி இந்த மணல் புயல் எல்லாம் ராஜஸ்தானில் அன்றாடம் இருக்கும். //
இங்கும் மணல் புயல் அடிக்கடி வரும். அடுத்த தடவை சரியாக பிடிக்க முயற்சி செய்கிறேன்.
Post a Comment