Saturday, January 07, 2012

வேகம் ரொம்ப முக்கியம்

நம்ம தருமி அவர்கள் பதிவை தொடர்ந்து

சாலை பாதுகாப்பு என்றால் அதற்கு முழுக்க முழுக்க வாகன ஓட்டுனர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றே நம்மில் பலர் எண்ணுகிறோம். எந்த வாகனம் என்பது முக்கியமில்லை நடப்பவர்களுக்கு சைக்கிள், சைக்கிளில் செல்பவர்களுக்கு பைக், பைக்கிற்கு ஆட்டோ, ஆட்டோவிற்கு கார், கார் க்கு பஸ், பஸ்க்கு லாரி என எந்த வாகனம் பெரிதோ அதன் மேல் தான் தவறு இருக்கும், அவர்கள் சரியாக நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பரவலாக ஒரு எண்ணம் உண்டு. இதில் தவறு என்றே நான் சொல்லவில்லை. அவர்கள் மீது எந்த அளவிற்கு தவறு உண்டோ, அதே அளவிற்கு மற்றவர்களின் மீது தவறு உண்டு. இதற்கு மிக சிறிய உதாரணமாக இரு புகைப்படங்களை இணைத்து உள்ளேன். அதை பார்த்து விட்டு மற்றவற்றை பேசுவோம்.



இடம் : கிழக்கு கடற்கரை சாலை. திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை வழி

அவர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த இடங்களில் ஒரு நாளைக்கு மிக சொற்பமாக மட்டுமே வாகனங்கள் அப்பகுதியை கடந்த காலம் போய், இப்போது நெடுஞ்சாலைகள் வந்து வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வது அவர்கள் குற்றம் அல்ல தான். ஆனால் முன்பு இருந்த அதே ஞாபகத்தில் ஏதோ ஒரு நினைப்பில் சாலைகளை கடப்பதும், குழந்தைகளை கவனிப்பின்றி விடுவதும், ஆடு மாடுகளை சாலைகளில் கட்டி போடுவதும் மிக அபாயகரமான விசயம். இதனால் ஏற்படும் பாதிப்பை முன் கூட்டி உணர்ந்து கவனமாக இருப்பது தான் நன்மைபயக்கும் விசயம். அதை விடுத்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் ஆகவே ஆகாது.

அது போக நடைப்பயணமாக செல்பவர்கள் குறிப்பாக ஆன்மிக பயணம் செல்பவர்கள் முடிந்த அளவு சாலையின் ஒரமாக நடந்து செல்லுங்கள். குறுகிய பாதைகளில் இன்னும் கவனம் தேவை. இரவு நேரங்களிலும் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாத போது. அப்படியே நடக்க நேர்ந்தாலும், Reflector உடுப்புகளை பயன்படுத்துங்கள். சாலைகளில் அமந்து உணவு உட்கொள்வது, ஒய்வு எடுப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.


இரு சக்கர வாகன ஓட்டுபவர்கள் சாலையில் ஒரமாக செல்வது ரொம்ப ரொம்ப முக்கியமான விசயம். நாம் மட்டும் சாலையில் பயணிக்கவில்லை நமக்கு பின்பும் பலர் வருவார்கள் என்ற எண்ணம் தேவை. போய் கொண்டு இருக்கும் போதே எந்த ஒரு சைகையும் செய்யாமல் திடீர் என திரும்பவது, யூ டர்ன் எடுப்பது ரொம்பவே ஆபத்தமான விசயம். அதே போல் வண்டி ஓட்டும் போது குறிப்பாக நெடுஞ்சாலைகளில் நட்ட நடுவே தயவு செய்து ஓட்ட வேண்டாம். இடது பக்கமாகவே செல்லுங்கள், வாகனங்களை முந்தும் போது இடது புறத்தில் முந்தாமல் வலது புறத்தில் ஏறி முந்தி மீண்டும் இடது புறமாக தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள்.

காரில் செல்பவர்கள் மிரர் பார்த்து ஒட்டுவது அவசியம். உங்களை முந்த யாரும் சைட் கேட்டால் கொடுப்பதால் நாம் ஏதும் குறைந்து விடுவது இல்லை. வளைவில் முந்தாதீர்கள், ஊருக்குள் HI BEAM போட்டு ஒட்டாதீர்கள். கண்ணை கூசும் அளவிற்கு வாகனத்தின் முகப்பு விளக்கை மாற்ற வேண்டாம். எதிரில் வாகனம் வரும் போது விளக்கை அணைத்து போடுங்கள். நெடுந்தொலைவு பயணத்தில் தூக்கம் வந்தால் வண்டியை ஒரு டீக்கடை பக்கம் ஒதுக்கி போட்டு கொஞ்சம் கண் அசந்து பிறகு கிளம்புங்கள். தூக்கத்தை துறந்து துக்கத்தை துரத்தனுமா சொல்லுங்கள்?

பஸ், லாரி, ஆட்டோ இவர்கள் வாகனத்தை தான் தோன்றித்தனமாக எங்கும் நிறுத்தாமல் இருந்தால் அதுவே போதுமானது.

சாலை பாதுகாப்பு என்பது நம்மை நாம் முதலில் பாதுகாப்பதும், நம்மால் பிறருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாத்து கொள்வதுமே ஆகும். சாலையின் விதிகளை மதிப்போம், நான் ஒருவன் மட்டும் மதித்தால் போதுமா என்று பேசுவதை விட முதலில் நாம் கடைப்பிடிப்போம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்.

வேகம் முக்கியம் அட ஆமாங்க வி"வேகம்" ரொம்ப முக்கியம். கவனமாக இருங்க.

தொடர்புடைய பதிவு : அவைநாயகன்

6 comments:

கோபிநாத் said...

நல்ல பகிர்வு சகா !

\\ வாகனங்களை முந்தும் போது இடது புறத்தில் முந்தாமல் வலது புறத்தில் ஏறி முந்தி மீண்டும் இடது புறமாக தொடர்ந்து உங்கள் பயணத்தை தொடருங்கள். \\

சென்னையில இந்த ஒரு விஷயத்திலியே பாதி விபத்து வருது !

avainaayagan said...

"நான் ஒருவன் மட்டும் மதித்தால் போதுமா என்று பேசுவதை விட முதலில் நாம் கடைப்பிடிப்போம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்."

மிக அருமையான கருத்து.இத இதத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன்

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. தேவையான பதிவும் கூட. இந்த நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கக் கட்டாயச் சட்டமாக்கினால் கூடத் தேவலை.

Geetha Sambasivam said...

தொடர

Geetha Sambasivam said...

குழந்தைகளின் மேலும் கால்நடைகளின் மேலும் ஒரு கண் இல்லை; இரண்டு கண்களும் இருக்கவேண்டும்.

தருமி said...

http://sixth-finger.blogspot.com/2006/03/2-traffic-indian-us-styles.html