Friday, April 13, 2012

தமிழ் புத்தாண்டு



"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

4 comments:

இமா க்றிஸ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகா ;-)

Gaana Kabali said...

மூணாவது ஆள் நீங்க சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்கார்னா :

தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

எல்லா ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன .
ஆகவே சம்ஸ்கிருத புத்தாண்டு என்று கொண்டாடிவிட்டு போங்களேன். உங்களை யார் தடுக்கப்போகிறார்கள்?

தமிழ் புத்தாண்டு என்று தயவு செய்து சொல்லாதீர்கள் .அது தை முதல் நாளாகவே இருந்துவிட்டு போகட்டும்.

நாகை சிவா said...

//தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை. //

அச்சசோ! அப்படியா?

நீங்க தை என்கிற பெயர் உட்பட தமிழ் மாதங்கள் ஏதுமே தமிழ் பெயர் இல்லை என்றும் சொல்லுறாங்களே, அது உண்மையாங்க?
http://www.tamilpaper.net/?p=5786

//எல்லா ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன . //

இப்ப உங்களுக்கு சம்ஸ்கிருத பெயர்கள் தான் பிரச்சனையா? அப்படினா அந்த பெயர் இல்லாமலே வெறும் தமிழ் புத்தாண்டுனு சொல்லிட்டு போய் விடலாமே. நான் கூட அந்த பெயர்களை குறிப்பிடவில்லையே...

//சம்ஸ்கிருத புத்தாண்டு என்று கொண்டாடிவிட்டு போங்களேன். உங்களை யார் தடுக்கப்போகிறார்கள்?//

சம்ஸ்கிருத புத்தாண்டா? எப்படிங்க முடியும். தமிழ் மொழி வாழ்த்து பாடுற என்னால் எப்படிங்க முடியும். உலக பொது மறையாம் திருக்குறளில் வரும் ஆதி என்பதை சம்ஸ்கிருதம் என்று தான் சொல்கிறார்கள். அது மட்டும் பகவன் என்பதை தொடர்ந்து திருவள்ளுவரே சமண சமயத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். அதற்காக நான் திருக்குறளை மறுக்க முடியுமா சொல்லுங்க.


//தமிழ் புத்தாண்டு என்று தயவு செய்து சொல்லாதீர்கள் .அது தை முதல் நாளாகவே இருந்துவிட்டு போகட்டும்.//

தை முதல் நாளா? அங்கு தான் பொங்கல் கொண்டாடுகிறோமே.... அட பொங்கல் கொண்டாடுவதை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதால் பொங்கலை துறந்து விடுவோம் என்று சொல்லுறீங்க போல...

தை முதல் நாளில் தை நீராடல் பற்றி தான் நமக்கு சொல்லி இருக்காங்க. ஆனால் நாம் அதை செய்யாமல் பொங்கல் என்று பொங்க வைத்துக் கொண்டு இருக்கிறோம்.