Thursday, June 10, 2010

வாழ்க சனநாயகம் - 9

35 ஆயிரம் பேர் உயிர் இழக்கவும், 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆள்படவும் காரணமாக இருந்த போபால் விஷ வாயு சம்பவத்தின் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது.

"எட்டு குற்றவாளிகள் மீதான குற்றங்கள் ஐ.பி.சி. 304(2), 336, 337 மற்றும் 338 பிரிவுகளின் கீழ் உறுதி செய்யப்பட்டு, அனைவருக்கும் இரண்டு வருடம் சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெயில் மனுவை அளித்த குற்றவாளிகளுக்கு ஜம்மென்று ஜாமீனும் கிடைத்தது. 'பெரும் சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் கவனக் குறைவாக செயல்பட்டது' என்பதுதான் குற்றவாளிகள் மீதான தண்டனைக்கான சாராம்சம்!

இந்திய உயிர்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து, அமெரிக்காவில் இதே போன்ற தங்களின் தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், இத்தனை ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலத்தில் விஷத்தைப் பாய்ச்சிய வாரன் ஆண்டர்சன் பற்றி தீர்ப்பில் எதுவுமே இல்லை!" - ஜு.வி

இங்கு நீதி, மலிவு விலையில் கிடைக்கும் என போர்ட் வைக்காத குறை தான் ! - வாழ்க சனநாயகம்!


5 comments:

Porkodi (பொற்கொடி) said...

:((( என்னத்தன்னு சொல்லுறது..

பாச மலர் / Paasa Malar said...

காணாமல் போய்விட்ட நீதிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று...

Vidhya Chandrasekaran said...

மண்ணில் புதைந்திருக்கும் அந்த பிஞ்சு முகம் பார்க்கும்போதெல்லாம் பதறுகிறது. ஹூம்ம்ம்:((

நாகை சிவா said...

அனுமதி கொடுக்கும் முன் போதிய பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை சரியாக ஆய்வு செய்தாலே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

வடுவூர் குமார் said...

எங்க‌ள் துறையில் வீடு க‌ட்டுவ‌த‌ற்கு முன்பே அனும‌திவாங்கிவிடுகிறோம் அத‌னால் அத‌ன் பிற‌கு யார் பாதுகாப்பை ப‌ற்றி யோசிப்ப‌து என்ப‌து மிக‌ப்பெரிய‌ கேள்விக்?? நாலு சுவ‌ர்‍ / கூரை இருந்தால் போதும் என்று ப‌ல‌ர் இருப்ப‌தால் சென்னை வீடுக‌ள் ப‌ல‌வும் விஷ‌ வாயு இல்லாத‌ கொதிக‌ல‌ன்க‌ள் தான்.