Friday, March 05, 2010

மட்டையடி உற்சவம் - நாகை

பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.

மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.

நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்


கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்


மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்


தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்


மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.

சலனப்படம்



புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.

ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.

7 comments:

Unknown said...

நல்ல பதிவு. நானும் நாகை மாவட்டம் தான் பாஸ்

வடுவூர் குமார் said...

விடியோ பார்க்கும் போது ஏதோ கோவில் உள்ளேயே இருந்து பார்க்கும் உணர்வு.
பட்டாச்சாரியார் படம் தெளிவாக இருக்கு.

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை !


மீண்டும் வருவான் பனித்துளி

Ponnarasi Kothandaraman said...

Nice pics and video! Thanks for sharing :) Long time no c?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Li. said...

தலைப்பைப் பார்த்து IPL பத்தி ஏதோ போட்டிருக்கீங்கன்னு உங்கள ஒரு நிமிஷம் தப்ப நெனச்சிட்டேன் .

:-)

Unknown said...

சிவா அண்ணா.. இந்த மாதிரி உற்சவம் நேர்ல பாத்து ரொம்பவே நாளாச்சு. வீடியோ பாக்கும்போது பக்கத்துல இருந்து பாக்குற மாதிரி இருக்கு. அழகா கதவு மூடுறதும்.. உற்சவ மூர்த்தி போய்ட்டு போய்ட்டு வர்றதும்.. ரொம்ப அழகு. இதெல்லாம் நேர்ல பாக்க முடியலையேனு வருத்தமாகவும் இருக்கு. நல்லா வீடியோ எடுத்திருக்கீங்க.