Thursday, March 04, 2010

ஹைத்தி - பூகம்பம்

ஏற்கனவே உணவு பஞ்சத்தாலும், உள்நாட்டு பிரச்சனைகளாலும், தொடர்ந்து அடித்த கடும் புயலாலும் (Hurricane) அவதிப்பட்டு வந்த ஹைத்தி, எட்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டு கடுமையான பூகம்பத்தால் மிகவும் நிலைகுலைந்து போய் உள்ளது. என்னுடன் வேலை நண்பர்களின் நிலை அறியவே சில நாட்கள் பிடித்தது. இன்னுமும் அவர்கள் தங்க இடம் இல்லாமல் அலுவலக வளாகத்தில் தான் தங்கி வருகிறார்கள். எனக்கு கிடைத்த தகவல்படி ஒரே ஒரு இந்தியர் (என்னுடைய பழைய கம்பெனியில் தற்பொழுது வேலை செய்தவராம்) இடிபாடுகளில் சிக்கி இறந்து உள்ளார். வடமாநிலத்தை சேர்ந்தவர் அவர். அவர் குடும்பத்திற்கு உதவி தொகை அளிக்க மற்ற நண்பர்கள் முயன்று கொண்டு உள்ளார்கள். அதே போல் இங்கு இருந்தும் ஹைத்திக்கு பணம் திரட்டி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். திரட்டும் பணி கிட்டதட்ட முடிந்து விட்டது, விரைவில் அனுப்பட்டும்.

உலகின் பல பகுதிகளில் இருந்து நிவாரணம் ஹைத்தி நாட்டிற்கு குவிந்த போதிலும் இன்னும் நிலைமை மோசமாக தான் உள்ளது அங்கு. ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும், பல தொண்டு நிறுவனங்களும் துரிதமாக செயல்பட்டதால் இடிபாடுகளில் சிக்கி இருந்த பலரின் உயிர்கள் காக்கப்பட்டது. போதுமான மருத்துவமனை வசதிகள் இல்லாதது தான் மிக பெரிய இடராக அங்கு இப்பொழுது நிலவி வருகிறது.

ஐ.நா, ஹைத்தி அரசு, உலக வங்கி, ஐரோப்பிய அமைப்பு ஆகியவற்றின் உதவியோடு மறுகட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது வரை கிட்டதட்ட 40 % மக்கள் (5 லட்சம்) தற்காலிக குடியிருப்புகள் பெற்று உள்ளார்கள். இன்னும் 2.5 லட்சம் தார்பாய்கள் மற்றும் 25000 டெண்ட் வழங்குவதற்காக பணிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது. கிட்டதட்ட 15 லட்சம் மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

விரைவில் மழை காலம் நெருங்குவதால் அதற்கு முன்பு தற்காலிக குடியிருப்புகளை அமைக்கப்பட வேண்டும் என்பது தான் தற்பொழுது இருக்கும் சவால். இது வரை தொற்று நோய்கள் ஏதுவும் பெரும் அளவில் பரவாமல் இருப்பது ஒரு வரம்.

ஹைத்தியில் இருந்த அலுவலக தலைமையகம், பூகம்பத்திற்கு முன்பு


பூகம்பத்திற்கு பின்பு


We are the World 25 - Haiti

25 வருடங்களுக்கு முன்பு மைக்கேல் ஜாக்சனால் ஆப்பிக்க நாடுகளுக்காக நிதி திரட்ட நடத்தப்பட்ட We are the World பாடல் மீண்டும் 80 இசை கலைஞர்களால் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதை ரீக்கார்ட் செய்து உள்ளார்கள். ஹைத்தி நிவாரண நிதிக்காக இதை செய்து உள்ளார்கள். இதில் நம் ரஹ்மானின் பங்களிப்பு உண்டு. அந்த பாடல்....



மனம் இருப்பவர்கள் ஹைத்தி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். WFP மூலம் உதவ விரும்புவர்கள் இந்த சுட்டியை தொடரவும். WHO மூலம் உதவு இந்த சுட்டியை தொடரவும்.

வசந்தம் விரைவில் வீசட்டும்.

2 comments:

கவிதா | Kavitha said...

A complete post !! Informative.

Remembering ur nephew Niranjan's Neat over here :)

I do fwd this to frds, personally cant donate . .having many commitments to our people here itself.. :( oops!!

Santhosh said...

பங்கு,
தற்போதைய நிலைமையை சரியாக சொல்லி இருக்க..