Monday, May 11, 2009

கதம்பம்

தேர்தல் எங்கள் நாட்டில் தேசிய திருவிழா சொல்லிட்டு இங்க வந்தா மீடியாவில் மட்டும் தான் திருவிழா வா இருக்கு. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தேர்தலுக்கான குறைந்தப்பட்ச அறிகுறி கூட இல்லாம இருக்கு ஊர். சுவர் விளம்பரம் இல்லை, பிட் நோட்டிஸ் இல்லை, தோரணம் இல்லை, கொடிகள் இல்லை, கட் அவுட் இல்லை, போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, டிஜிட்டல் பேனர் இல்லை. கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள். சென்னையில் கூட கொடி தோரணம் என்று களை கட்டுது. எங்க ஊர் தான் இப்படி(நான் பார்த்த வரையில்), ரொம்ப மோசம் சாமி, ஒரு விறுவிறுப்பே இல்லாம போச்சு. இரு முறை எம்.பி யாக இருந்த ஒரே ஊர்காரர்கள் ஆன செல்வராஜ் (கம்யூ) மற்றும் விஜயன் (திமுக) இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள்.

*******

தேர்தல் லோடு கோவில் திருவிழாவும் இங்கு. வழக்கம் போல் சிறப்பான முறையில் அமைந்தது. செடில் உற்சவத்திற்கு மக்கள் வழக்கம் போல் வரிசையில் வர மாட்டேன் என்று முண்டியடித்து அவர்களிடம் கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியது. நாம் வரிசையில் நின்றால் தான் ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத மாதிரி அல்லது ஒரு பேக்கு நிக்குறான் என்பது போல் நமக்கு முன்னால் போவார்கள், வரிசை ஒழுங்குப்படுத்தும் போதும் அப்படி தான் நினைப்பார்கள் போல். வரிசையில் நின்று வருவது என்பது ஏதோ ஒரு பாவச்செயல் என்பது போன்று நம் மக்கள் மனதில் பதிய காரணம் என்னவென்று தான் தெரியல. நாம் செய்வது தவறு என்பதே புரியவே மாட்டேங்குது.

*******

எந்த வங்கியின் அட்டையை வைத்தும் அனைத்து(எந்த) வங்கியின் ஏ.டி.எம். சேவையையும் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எல்லா எ.டி.எம். லையும் கூட்டம் அள்ளுது. ஆனா பணம் தான் வர மாட்டேங்குது. பாதி ஏ.டி.எம். முடி உள்ளது. மிஞ்சம் போதில் பணம் இல்லை இல்லை என்று துப்புது. இன்னும் சிலது பணம் எடுத்துக்கோ னு காசை பிடிச்சுக்கிட்டு Error Message குடுக்குது. சில நேரங்களில் பணம் மறுபடியும் நம் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வங்கி கிளையில் புகார் பண்ணி தான் பெற வேண்டியது இருக்கு. மக்களுக்கு பயன் அளிக்கும் வழியில் ஒரு சேவையை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதை உரிய முறையில் அமல்படுத்தி இருக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்திய அதனால் இந்த பிரச்சனை என்று காரணம் கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ.

*******

தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பது விளம்பரங்கள் தான். கவர்ந்த விளம்பரங்கள் பல உள்ளன. அதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் போட்டும் இருக்கேன். இந்த தடவையும் சில விளம்பரங்கள் அட போட வைத்தது. இன்னும் சில அட சே னு சொல்ல வைத்தது. அதில் ஒன்று ஹமாம் விளம்பரம். ஒரு தாய் தன் குழந்தையிடன் போய் சோப் வாங்கிட்டு வா னு சொல்லிட்டு குழந்தை போன பிறகு அய்யோ எந்த சோப் னு சொல்லலையே, பரு வந்துடும், அழகு போயிடும், தன்னம்பிக்கையே போயிடும் னு பதறி வெளியே எல்லாம் ஒடி வீட்டுக்கு வந்து பாத்தா அந்த குழந்தை ஹமாம் சோப் தான் வாங்கி வந்து இருப்பது பார்த்து அமைதி அடைவது போன்று அமைந்த விளம்பரம். இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம். இது போன்ற சொதப்பல் விளம்பரங்கள் னு ஒரு போஸ்டே போடலாம் போல.

*******

16 comments:

கீதா சாம்பசிவம் said...

//இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம்.//

இதுக்கு முன்னாலே அந்த விளம்பரத்திலே தன்னம்பிக்கைனு சொல்றதுக்கு பதிலா கல்யாணமே ஆகாதுனு சொல்லிட்டு இருந்தாங்க, அது தெரியுமா? எதிர்ப்பு வந்ததும், தன்னம்பிக்கைனு மாத்திருக்காங்க, நான் ஹமாமே தேய்ச்சுக்கறதில்லை, தன்னம்பிக்கை அதிகமாத் தான் இருக்கு! :))))))))))))))

நாகை சிவா said...

:) அதானே உங்களுக்கு தன்னம்பிக்கைக்கா பஞ்சம்.

இது போன்று தவறான விசயத்தை மனதில் பதிய வைக்கும் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.

G3 said...

:))))))))))))))))

ஆயில்யன் said...

//மல்லுக்கட்டுகிறார்கள்//

40 கி.மீ இங்கால இருக்குற நானே டிரை பண்ணி டயர்டாக்கிட்டேன் :(

அவுங்களுக்கு மட்டும் கிடைச்சுடுமா அதுவுமில்லாம எல்லாம் வயசு போன கேசுங்க வேற ஹய்யோ ஹய்யோ :)

நாகை சிவா said...

@ காயத்ரி!

இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம், அனுபவி ராசா அனுபவியா ;)

@ ஆயில்ஸ்!

எதுக்கு டிரை பண்ணுனீங்க... ஒரு மார்க்கமா இருக்கே ;)

வடுவூர் குமார் said...

ஓ! செடில் கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது?
பல வருடங்களாக போகனும் என்ற நினைப்பு மட்டும் வந்து வந்து போகிறது.

ஸ்ரீமதி said...

கதம்பம் சூப்பர் அண்ணா.. :)) எனக்கும் அந்த ஹமாம் விளம்பரம் பிடிக்காது லூசுத்தனமா இருக்கும்..

ஸ்ரீமதி said...

மேட்ச்க்கு நடுவுல வர வோடபோன் விளம்பரம் எல்லாமே சூப்பர்.. :))) கருத்து சொல்றேன் பேர்வழின்னு பேசி அறுக்காம இந்த மாதிரி அனிமேஷன் மாதிரி ஏதாவது பண்ணலாம்... :)))

G3 said...

//இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்//

//ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ. //

இந்த statement படிச்சதும் எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பானு வந்த புன்னகை அது :)) commentல quote பண்ண மிஸ் பண்ணிட்டேன் :)))

Raz said...

ithu unnoda innoru kathambam :) . ennakum antha vilambaram pudikathu... nee election la nillu, dhol kilapidalam. ATM la romba nonthu intha post potu irukapla iruku...

கோபிநாத் said...

கதம்பம் படித்தேன் ;)

நாகை சிவா said...

@ குமார்!

//ஓ! செடில் கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது?//

திருவிழாவிற்கு கூட்டம் குறைவு. ஆனால் செடிலுக்கு வழக்கம் போல் கூட்டம் தான். நல்லபடியாக அமைந்தது.

//பல வருடங்களாக போகனும் என்ற நினைப்பு மட்டும் வந்து வந்து போகிறது.//

அடுத்த வருடம் முன்கூட்டியே தேதி சொல்லிகிறேன். முடிகிறாதா என்று பாருங்கள் :)

நாகை சிவா said...

@ ஸ்ரீமதி!

//எனக்கும் அந்த ஹமாம் விளம்பரம் பிடிக்காது லூசுத்தனமா இருக்கும்..//

சூப்பரா சொன்னீங்க!

//மேட்ச்க்கு நடுவுல வர வோடபோன் விளம்பரம் எல்லாமே சூப்பர்.. :))) கருத்து சொல்றேன் பேர்வழின்னு பேசி அறுக்காம இந்த மாதிரி அனிமேஷன் மாதிரி ஏதாவது பண்ணலாம்... :))//

அதில் சிலது எனக்கும் பிடித்து இருந்தது. ஒன்று இரண்டு சரியில்லை அதில்.

3 ரோஸ்சஸ், ப்ரூ விளம்பரங்கள் சூப்பரா இருக்கு !

நாகை சிவா said...

@ காயத்ரி!

//இந்த statement படிச்சதும் எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பானு வந்த புன்னகை அது :)) commentல quote பண்ண மிஸ் பண்ணிட்டேன் :)))//

எங்க யோசிச்சோம். பட்ட பாடு அப்படி! தானாவே தோணிடுச்சு. !

நாகை சிவா said...

@ Raz!

தேர்தலில் நிற்பது உறுதி. என்று என்பது தான் கேள்வியே!

//ATM la romba nonthu intha post potu irukapla iruku...//

ரொம்பவே! பல இடத்தில் அலைச்சல். அது போக பணம் வேற சிக்கி ஏக டார்ச்சர் !

நாகை சிவா said...

@ கோபி!

ஒரம்போ அண்ணாச்சி! நன்றிங்கோ :)