Thursday, April 09, 2009

வாழ்க சனநாயகம் 6 - தந்தி/தமிழர் பேரணி

முன்குறிப்பு!

இந்த பதிவை படிக்க வாய்ஸ் மாடுலேசன் ரொம்ப முக்கியம், பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நபர்களின் குரலில் முயற்சி செய்து படிக்கவும்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை(ஏப்ரல் 9) தமிழர் பேரணி!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எழுப்பிடும் உருக்கமிகு குரலை மதித்து இலங்கை அரசு போரை நிறுத்திட வலியுறுத்தி தலைநகர் சென்னையில் மாபெரும் தமிழர் பேரணி நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த பேரணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலையில் தொடங்கும் இந்த பேரணி, சேப்பாக்கம் வரை நடைபெறும். இந்த மாபெரும் தமிழர் பேரணியில், கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

நன்றி : விகடன்

*******

வடிவேலு : ஏண்டா, இன்னும்மாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு?

நன்றி : வின்னர் படக் குழுவினர்
*******

பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு முதலமைச்சர் கருணாநிதி தந்தி!

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் அங்கு தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படவும், சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள தந்தியில், "இலங்கையில் தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடுவதில் இருந்து காப்பாற்றுங்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டு உடனடியாக சமாதான பேச்சுவார்த்தை தொடங்குவதை உறுதி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : விகடன்
*******

கவுண்டமணி : யப்பா! போதும்டா சாமி! உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுப்பா

நன்றி : மாமன் மகள் படக் குழுவினர்

*******

20 comments:

வெட்டிப்பயல் said...

pin kuripai thooki mun kuripa poadu Puli :-)

நாகை சிவா said...

@ வெட்டி!

அண்ணன், நீங்க சொன்ன மாதிரியே மாத்திட்டேன் :)

கீதா சாம்பசிவம் said...

நீங்க சொன்னாப்போல படிச்சதிலே தொண்டை கட்டிக்கிட்டது, ஒரு ஜோடா ப்ளீஸ்!!!!!!!

வித்யா said...

ஹி ஹி முதல்வர் தபால் துறைக்கு நல்ல வருமானம் தர்றார்.

ஆயில்யன் said...

:))))))


//யப்பா! போதும்டா சாமி! உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுப்பா
//

ரொம்ப் நாளும் கூட ஆச்சு!!!!


கலக்கல்!

கவிதா | Kavitha said...

//வடிவேலு : ஏண்டா, இன்னும்மாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு?
//

கவுண்டமணி : யப்பா! போதும்டா சாமி! உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுப்பா
//

அது எப்படிதான் உங்கள் பதிவுகளில் சினிமா டயலாக் 'ஐ ரொம்ப ஆப்ட் ஆக மிக்ஸ் பண்றீங்களோ.. :))))

Raz said...

adra sakka adra sakka adra sakka... - kalakiteee sivaaa


uuussssh! ivanuinga tholla thanga mudiyalappaa! to kalaigar & manmohan singh

பாச மலர் said...

மேட்டர் நச்னா..வடிவேலு கவுண்டமணி வார்த்தைகள்..நச் நச்..

நாகை சிவா said...

@ கீதா!

தேர்தல் நேரத்தில் இதுக்கே தொண்டை கட்டிக்கிட்ட என்ன அர்த்தம். தமிழ்நாடு முழுக்கு சூறாவளி பிரச்சாரம் எல்லாம் யாரு பண்ணுவது? கிளம்புங்க கிளம்புங்க... சோடா எல்லாம் அப்புறம் ;)

@ வித்யா!

:) உங்க பதிவு சூப்பர்

நாகை சிவா said...

@ ஆயில்ஸ்

சரியா சொன்னீங்க அண்ணாச்சி. ரொம்ப நாள் ஆச்சு ;)

@ கவிதா!

எல்லாம் தானா வருதுங்க ;)

நாகை சிவா said...

@ Raz!

நன்றி மச்சி... இந்த கொசு தாங்க முடியல தான் ;)

@ பாசமலர் !

__/\__ :)

மங்கை said...

haa haa...superb

நாகை சிவா said...

@ மங்கை!

நன்றி!

இந்த நேரத்தில் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க... ??

G3 said...

கோபி கமெண்ட் போட்டிருப்பாரு.. ஒரு ரிப்பீட்டே போடலாம்னு பாத்தா அவரு கமெண்ட்ட காணுமே.. சரி அவர் வந்து கமெண்ட்டினப்புறம் வர்றேன் :-)

கோபிநாத் said...

வந்துட்டேன்...எப்போவே படிச்சிட்டேன் ;))

கோபிநாத் said...

\\G3 said...
கோபி கமெண்ட் போட்டிருப்பாரு.. ஒரு ரிப்பீட்டே போடலாம்னு பாத்தா அவரு கமெண்ட்ட காணுமே.. சரி அவர் வந்து கமெண்ட்டினப்புறம் வர்றேன் :-)
\\

பின்னூட்டம் போட்டாச்சிங்கோ!!! ;)

G3 said...

//வந்துட்டேன்...எப்போவே படிச்சிட்டேன் ;))//

ரிப்பீட்டே :)))

[நான் கூட காலைலயே படிச்சிட்டேன். அதனால இந்த கமெண்ட்டுக்கு ரிப்பீட்டு போட்டா செல்லும் :))) ]

G3 said...

//பின்னூட்டம் போட்டாச்சிங்கோ!!! ;)//

நன்றிங்கோ.. ரிப்பீட்டும் போட்டாச்சுங்கோ !!! :P

நாகை சிவா said...

@ காயத்ரி & கோபி!

:))))

ஸ்ரீமதி said...

நான் இன்னுமா கமெண்ட்டல?? :((

//G3 said...
//வந்துட்டேன்...எப்போவே படிச்சிட்டேன் ;))//

ரிப்பீட்டே :)))

[நான் கூட காலைலயே படிச்சிட்டேன். அதனால இந்த கமெண்ட்டுக்கு ரிப்பீட்டு போட்டா செல்லும் :))) ]//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.... நானும் எப்பவோ படிச்சிட்டேன்... சோ இந்த கமெண்ட் செல்லும் ஹி ஹி ஹி.. ;)))))))))))))))))))))