Friday, March 06, 2009

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

சூடானில் டார்பூர் என்ற இடத்தில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரும் அறிந்ததே. 2003ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வரை நீடித்த இந்த பயங்கரத்தின் மூலம் உயிர் இழந்தோர்கள் சுமார் 3 லட்சம் நபர்கள். உள்நாட்டிலே அகதிகள் ஆனோர் 2 மில்லியன் நபர்கள். இது ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட புள்ளி விபரம். இந்த எண்ணிக்கையை சூடான் அரசு மறுத்து உள்ளது.

ICC (International Criminal Court) யில் சில வருடங்களுக்கு முன்பு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூடான் அரசில் அமைச்சர்களாக இருக்கும் இருவருக்கு முன்பே அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்க பட்டும் உள்ளது. அதை பற்றி முன்பே பதிவு இட்டு உள்ளேன். ஆனால் இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக சூடான் அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்ட அவர் மேல் எந்த நேரமும் வாரண்ட் பிறப்பிக்கபடலாம் என்ற நிலை இருந்தது. புலி வருது புலி வருது கதையாக கடந்த 8 மாதங்களாக நடந்த ஆடு புலி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக மார்ச் 4 அன்று மாலை 4 மணி அளவில் சூடான் அதிபர் அல் பஷீர் க்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The counts

The warrant of arrest for Omar Al Bashir lists 7 counts on the basis of his individual criminal responsibility (article 25(3)(a)) including:

*
five counts of crimes against humanity: murder – article 7(1)(a); extermination – article 7(1)(b); forcible transfer – article 7(1)(d);
torture – article 7(1)(f); and rape – article 7(1)(g);
*
two counts of war crimes: intentionally directing attacks against a civilian population as such or against individual civilians not taking direct part in hostilities – article 8(2)(e)(i); and pillaging – article 8(2)(e)(v).


போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் ஆகிய இரு பிரிவின் கீழ் சூடான் அதிபருக்கு ஏதிராக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான இனப்படுகொலை புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என தள்ளுப்படி செய்யப்பட்டு உள்ளது. முதன் முறையாக ஒரு நாட்டின் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தன் மூலம் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்து உள்ளது. மனித உரிமையை மீறுபவர்களுக்கும், போர் மரபுகளை மீறுபவர்களுக்கும் கண்டிப்பாக இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பது என் கருத்து.

இந்த அறிவிப்பை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்று உள்ளது. அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சூடானிலும் டார்பூர், சவுத் சூடானில் இதற்கு ஆதரவு குரல் அதிகமாகவும், நார்த் சூடானில் எதிர்ப்பு குரல் அதிகமாகவும் உள்ளது. இந்த
அறிவிப்பு வெளி வந்த அன்றே இதை கருத்தில் கொள்ள முடியாது என்று சூடான் அரசு அறிவித்து விட்டது. அன்று மாலை 4 மணி அளவில் சூடான் தலைநகரம் கண்டன ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் என நடந்தது. சுமார் 10,000 நபர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த கண்டன ஆர்பாட்டங்கள் நாடு தளுவிய அளவில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக சூடானில் நடந்து வரும் அமைதி மற்றும் மனித உரிமை பணிகளுக்கு மிகுந்த பிரச்சனைகளும் தடங்கல்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் சூடான் அரசு ஐ.நா. பணியாளர்களுக்கு எல்லா வகையிலும் தொடர்ந்து ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்கும் என்று உறுதி அளித்து உள்ளது. எந்த அளவில் அமல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் காண வேண்டும்.

கடந்த இரு நாட்களாக எந்த ஒரு அசம்பாவிதமும் எங்கும் நடக்க வில்லை. தலைநகரத்தில் ஆங்காங்கே சில கண்டன ஆர்பாட்டங்கள் மட்டுமே. இன்று ஐ.நா. அலுவலகத்துக்கு எதிரில் சிறிய அளவில் ஆர்பாட்டம் நடந்தது. சாலைகளில் போக்குவரத்து குறைந்த அளவிலே உள்ளது.

இந்த வாரண்ட் மூலம் சூடானில் நடந்து வரும் பணிகளுக்கு பங்கம் வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் டார்பூரில் இருந்து 10 என்.ஜி.ஒ. அமைப்புகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சூடான் அரசு அறிவித்து உள்ளது. அந்த 10 அமைப்புகளும் கிட்டதட்ட எட்டு சகவீத அமைதி மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள்.

சூடான் மக்களின் நிலையை இன்னும் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் மேலும் சிக்கலாக வந்து அமையும். ஐ.நா. இருக்கும் வரை அவர்கள் தப்பிக்கலாம். ஐ.நா.விற்கு எதிராக சூடான் அரசு தன் நிலையை அமைத்து கொள்வதின் மூலம் மேலும் சிக்கலாக தான் முடியும் என்பதை அறிந்தே உள்ளது. இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு பெரிதாக எந்த சிக்கலும் வந்து விட போவது இல்லை. கூடவே ஆப்பிரிக்கன் யூனியனும் சூடானுக்கு ஆதரவான நிலையை தான் எடுத்து உள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் மறைமுக ஆதரவும் எண்ணெய் வளங்களுக்காக சூடானுக்கு என்றும் உண்டு.

இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு ஏற்பட்டு இருக்கும் சாதக பாதகங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

13 comments:

ஆளவந்தான் said...

happy B'day Siva :)

p/s : G3 wish panna sonnanga :)))

ஆளவந்தான் said...

//
இந்த அறிவிப்பை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்று உள்ளது
//
இனிமேல் இவர்கள் அறிக்கை மட்டும் தான் விட முடியும்.. தீவிரவாத்தை விட பொருளாதார மந்தம் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு சாமானியனையும்

ஆளவந்தான் said...

சரியான பாலோ-அப் பதிவு.. :)

கானா பிரபா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்

http://urupudaathathu.blogspot.com/ said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Unknown said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

@ கானா பிரபா, ஆளவந்தான், யோக்பால்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அபி அப்பா said...

குட்! இது போல ராஜபக்ஷேகும் வருமா சிவா? வரனும்!

அபி அப்பா said...

ஹேய் சிவா இன்னிக்கு பிறந்த நாளா ? சொல்லவே இல்ல! சரி வாழ்த்துக்கள் பிடிச்சிக்குப்போப்பா!

Anonymous said...

Hello Sir,

Vanakkam, Naan balaji, from mayiladuthurai. edharthama pakkum podhu padharthama ungaloda blog kidaichadhu. nalla padhivugal vazhthukkal. naan ippadhan pudhusu.
ini nanum ungaludan.
nandri
ka. balaji

க.பாலாசி said...

haai

நாகை சிவா said...

@ அபி அப்பா,

சரியான ஆதாரங்களை எடுத்து வைத்து குற்றச்சாட்டை தாக்கல் செய்தால் கண்டிப்பாக அவருக்கும் இது நடக்கலாம். சிபிஐ மட்டும் தான் இதை பற்றி பேசியது. எந்த அளவுக்கு முன் எடுத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி - மார்ச் 7

நாகை சிவா said...

பாலாஜி...

பதிவுலகம் உங்களை இனிதே வரவேற்கிறது. வாங்க வாங்க...