Wednesday, March 25, 2009

கதம்பம்

இரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. 80 வயதான ஒரு பெண்மணி பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளானார் என்று. சூடானில் டார்பூரில் அல்-பசர் என்ற இடத்தில் இந்த கொடுமை நடந்து உள்ளது. அந்த கொடுங்செயல் செய்தவன் யாரு என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உள்நாட்டிலே அகதியாக IDP(Internally Displaced Persons) முகாமில் வாழ்ந்து வருவதே மிக கொடுமையான விசயம், அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.

போர்க்களங்களில் மட்டும் இல்லை எங்குமே மனிதம் மரித்து தான் போய் உள்ளது.

******

இந்திய பிரிமியர் லீக் (IPL) தென் ஆப்பிரிக்காவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நமது கிரிக்கெட் வாரியத்துக்கு தான் தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்ற நினைப்பு எப்போதுமே உண்டு. அந்த அளவு புகழும், அதிகாரமும் இருந்ததால் அப்படி ஒரு நினைப்பு. அந்த அளவுக்கு வளர்த்து விட்டது நம் மீடியாவும், ரசிகர்களும் தான். இதை பழம் தின்பது அவர்கள் தானே, அதான் அப்படி. ஐ.சி.சி. கண்களில் விரலை விட்டு ஆட்டியது. ICL க்கு அங்கீகாரம் அளிக்க எவ்வளவு முயற்சி செய்தும் ஏதுவும் நடக்கவில்லை, இவர்களிடம். பணமும், அதிகாரமும் இருந்த திமிரில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் இந்திய அரசாங்கத்திடமே மல்லு கட்டுகிறது. அதற்கு அரசியல் சாயமும் பூசியது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லதே இல்லை. காலம் வரும் போது ஆப்படிக்க படுவார்கள் என்பது நிச்சயம். IPL ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் போவதற்கு பாதுகாப்புமின்மை என்ற காரணத்தை எல்லா மீடியாவும் முன் வைத்து கொண்டு இருக்கிறது. சுத்த அபத்தமாக இருக்கிறது. சிதம்பரத்தின் விளக்கம் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது.

தேர்தல் திருவிழாவில் IPL திருவிழா இங்கு நடந்து இருந்தால் காணாமல் போய் இருக்கும்.

*******

கச்சத்தீவை பிரச்சனையை மறுபடியும் நம்ம அரசியல்வாதிகள் கையில் எடுத்துட்டாங்க. தாரை வார்த்து கொடுத்துட்டீங்க னு ஒரு அறிக்கையும், 10 வருடத்தில் நீ என்ன கிழிச்சுனு, கொடுக்கும் போது கொடுக்க கூடாது என்று போதிய எதிர்ப்பை பதிவு செய்தாச்சு, அப்புறம் என்ன னு ஒரு அறிக்கையுமா.... ஐயா சாமிகளா, போதும்ய்யா உங்க வேஷம் எல்லாம். ஒவ்வொரு தடவை தேர்தல் நேரத்திலும் நாகையில் பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய விசயங்களில் கச்சத்தீவை மீட்போம் என்ற வாக்குறுதி இருக்கும். கேட்டு கேட்டு புளிச்சு போச்சு. ஈழ பிரச்சனை விட்டு கொஞ்சம் மேலே ஏறி வந்து இருக்கீங்க, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் மேலே ஏறி கிருஷ்ணா, காவேரி, பாலாறு னு வருவீங்க. நல்ல முன்னேற்றம் தான். தொடருங்க... கேட்டு தொலைக்க தான் நாங்க இருக்கோம்ல.

உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.

*******

போன வாரத்தில் ஒரே ஒரு படம் தான் பார்க்க முடிந்தது. வேலை பொளந்து கட்டிடுச்சு.

When a Stranger Calls (2006) - பள்ளியில் படிக்கும் ஒரு பெண் பேபி ஸிட்டராக (Baby-Sitter) இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்கு செல்ல, அங்கு அனானி அழைப்பு வருகிறது. அதை வைத்து படத்தை கொண்டு செல்கிறார்கள், தொடர் கொலை செய்யும் ஒரு கொலைக்காரன் அந்த வீட்டின் உள்ளே இருந்தே அந்த பெண்ணை மிரட்டுகிறான் என்று தெரிய வரும் போது பரபரப்பு ஜிவ்வுனு ஏறுது. வெறும் பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு(எடிட்டிங்) வைத்து ஒரு சிறந்த ஹாரர் படம் தர முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். அந்த படத்தில் இடம் பெற்று உள்ள வீடு அற்புதமாக இருந்தது.

*******

ஈழம் இனப்படுகொலை பிரச்சனை ICC க்கு எடுத்து சென்று உள்ளார்கள். தக்க விபரம் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நீண்ட இரவுக்கு பின் ஒரு விடியல் இருந்தே தீரும். நம்புவோமாக.

*******

பள்ளி காலத்து தோழியை அதன் பிறகு சந்திக்காமல் பின்னொரு நாள் இணையத்தின் மூலம் சந்தித்து, இப்போ பதிவுலகிலும் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கவுஜையா (மட்டுமே) எழுதி தள்ளுறா, வாழ்த்தி வரவேற்கிறேன், அப்படியே நீங்களும் உங்க ஆதரவை கொடுங்க. பதிவு - சுயம் உணர்தல்

வருக! வருக! நல்லாட்சி தருக சீ.. நல்பதிவு இடுக

*******

36 comments:

Geetha Sambasivam said...

தோழியின் கவுஜகள் எல்லாம் நல்லா இருக்கு. அறிமுகம் செய்ததுக்கு வாழ்த்துகள்.

நல்லா விமரிசனம் செய்திருக்கீங்க. வழக்கம்போல் தஞ்சாவூர் வாசனைக் கதம்பம்! :))))))

நாகை சிவா said...

//தோழியின் கவுஜகள் எல்லாம் நல்லா இருக்கு. அறிமுகம் செய்ததுக்கு வாழ்த்துகள்.//

நம்ம கடமை அது தானே!

யாம் பெற்ற இன்பம்(???) பெறுக இவ்பதிவுலகம் !

தஞ்சாவூர் - ஊர் பெயரை சொன்னா என்ன ஆகுமோ!

நன்றி....

ஆ.ஞானசேகரன் said...

நல்லதொரு கதம்பம்...

ttpian said...

அடக்கடவுளே!
என்னத்தை சொல்ல?

நாகை சிவா said...

நன்றி ஞானசேகரன்!

********************

// ttpian said...

அடக்கடவுளே!//

என்னைய்யா கூப்பிட்டீங்க ? ;)

// என்னத்தை சொல்ல?//

என்ன மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க ;)

சின்னப் பையன் said...

//உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.
//

யாரும் இதைப் பத்தி மூச்சே விடமாட்டாங்களே... :-((

ஆயில்யன் said...

//தஞ்சாவூர் - ஊர் பெயரை சொன்னா என்ன ஆகுமோ!//

அட நம்ம சோழமண்ணு! :)

ஆயில்யன் said...

பாஸ் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் “கதம்பம்” திங்கிற ஐட்டமா? அல்லது மலர்களின் குவியலா?

நாகை சிவா said...

////தஞ்சாவூர் - ஊர் பெயரை சொன்னா என்ன ஆகுமோ!//

அட நம்ம சோழமண்ணு! :) //

:)) சோழ பரம்பரையில் ஒரு பாஸ்.. நீங்க தான் பாஸ் :)

//பாஸ் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் “கதம்பம்” திங்கிற ஐட்டமா? அல்லது மலர்களின் குவியலா? //

கதம்பம் என்பது பல வித பூக்களை சரமாக தொடுப்பது. நம்ம ஊர் பக்கம் கதம்பபூ தானே நல்லா விற்கும் :)

நாகை சிவா said...

//யாரும் இதைப் பத்தி மூச்சே விடமாட்டாங்களே... :-((//

உண்மை தான் சஞ்சய்! செத்தா காசு கொடுப்பாங்க அவ்வளவு தான். :(

http://urupudaathathu.blogspot.com/ said...

மச்சி இது எந்த சுபாடா??

http://urupudaathathu.blogspot.com/ said...

கவுஜ கவுஜ கவுஜ...

எப்படி தான் இப்படி எழுதி தள்ளுறாங்கன்னே தெரில??

( வக்கீல் பொண்ணுதானே இது ?/)

நாகை சிவா said...

@ யோக்பால்,

மச்சி! சி.எஸ்.ஐ. +1, +2 ல படிச்ச பொண்ணு தான்.

வக்கீல் பொண்ணு இல்ல, ஆனா அந்த பொண்ணு பிரண்ட் இந்த பொண்ணு!

ஸ்ரீராம் தங்கச்சி!

கவிதா | Kavitha said...

//மச்சி! சி.எஸ்.ஐ. +1, +2 ல படிச்ச பொண்ணு தான்.

வக்கீல் பொண்ணு இல்ல, ஆனா அந்த பொண்ணு பிரண்ட் இந்த பொண்ணு!

ஸ்ரீராம் தங்கச்சி!
//

:))

//தஞ்சாவூர் - ஊர் பெயரை சொன்னா என்ன ஆகுமோ!
//

:))))

//உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.
//

செய்துட்டு தான் மறுவேலையே..!!:(

//அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.
//

ம்ம்ம்.. இதையே நாங்க சொன்னா.. 7வருஷம் ஆனாலும் சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பீங்க...

//ஆனா கவுஜையா (மட்டுமே) //

:))) அந்த பக்கமே நீங்க போகமாட்டீங்களே ?!! அப்படியே போயிட்டாலும் ...

//அப்படியே நீங்களும் உங்க ஆதரவை கொடுங்க. பதிவு - சுயம் உணர்தல்//

சொல்லிட்டீங்க இல்ல..இனிமே அவங்க ரொம்ப பாவம்!! :)))

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒ!! அப்படின்னா இது டாக்டர் பொண்னுதானே??

எனக்கு தெரியும்....

கோபிநாத் said...

கதம்பம் - படிச்சிட்டேன் ;))

சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி சிவா.

உன் பதிவின் மூலம் என் நண்பர்கள் வட்டத்தின் விட்டத்தை பெரிதாக்கியதற்கு !

யோக்பால் - எங்கப்பா எனக்கு தெரியாம எப்போ மருத்துவம் படிச்சார் னு கொஞ்சம் சொல்ல முடியுமா? அவருக்கே தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கும். :-)

Divya said...

New template nalaruku Shiva:)

but........TIGER template ithai vida nala irunthuchu:)

தமிழர் நேசன் said...

நண்பர்(களே)! வணக்கம், "தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?" என்ற தலைப்பில் எனது கருத்துக்களை பிரசுரித்து உள்ளேன். தங்கள் ஆதரவு வாகுகளாய் தேவை. தங்கள் கருத்துக்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

http://tamilarnesan.blogspot.com/

நன்றி.

G3 said...

// கோபிநாத் said...

கதம்பம் - படிச்சிட்டேன் ;))//

ரிப்பீட்டே :)))))))

Unknown said...

//G3 said...
// கோபிநாத் said...

கதம்பம் - படிச்சிட்டேன் ;))//

ரிப்பீட்டே :)))))))//

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.. ;)))

http://urupudaathathu.blogspot.com/ said...

///சுபஸ்ரீ இராகவன் said...

நன்றி சிவா.

யோக்பால் - எங்கப்பா எனக்கு தெரியாம எப்போ மருத்துவம் படிச்சார் னு கொஞ்சம் சொல்ல முடியுமா? அவருக்கே தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கும். :-)
///


அட இது என்னப்பா? அப்போ அது நீங்க இல்லியா? நான் தான் வழக்கம் போல தப்பா நினைத்துவிட்டேனா??
என்ன கொடுமை சிவா இது ??

அப்படின்னா நீங்க உங்க அப்பா பொண்னுதானே??

( இப்போ நியாபகம் வந்துடுச்சி!!!)

நாகை சிவா said...

////அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.
//

ம்ம்ம்.. இதையே நாங்க சொன்னா.. 7வருஷம் ஆனாலும் சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பீங்க...//

:) கண்டிப்பா பொதுவா சொன்னா சொல்லுவேன்! அதுவும் தலைப்பில் வைத்தால் விடாமல் சொல்லுவேன்!

நாகை சிவா said...

@ யோக்பால்!

//ஒ!! அப்படின்னா இது டாக்டர் பொண்னுதானே??

எனக்கு தெரியும்....//

மாமா, +1,+2 ல டாக்டர் பொண்ணு யாருனு என்னைய வேற நீ யோசிக்க வச்சுட்ட... அதுனால நீ அடங்கு! ;)

//அப்படின்னா நீங்க உங்க அப்பா பொண்னுதானே??

( இப்போ நியாபகம் வந்துடுச்சி!!!)//

ஏண்டா! நைஜிரியாவில் வெயில் அதிகமா? ;)

நாகை சிவா said...

//உன் பதிவின் மூலம் என் நண்பர்கள் வட்டத்தின் விட்டத்தை பெரிதாக்கியதற்கு !//

யூ வெல்கம்!

//யோக்பால் - எங்கப்பா எனக்கு தெரியாம எப்போ மருத்துவம் படிச்சார் னு கொஞ்சம் சொல்ல முடியுமா? அவருக்கே தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கும். :-)//

இது வரைக்கும் படிக்காட்டி இனிமேல் படிக்க சொன்னாலும் சொல்லுவான் அவன் ;))

நாகை சிவா said...

@ திவ்யா!

//but........TIGER template ithai vida nala irunthuchu:)//

நீங்க சொன்னா சரி தான்! :)))

நாகை சிவா said...

சகா!

நீ ஸ்டார்ட் பண்ணின அதை காய்த்ரி, ஸ்ரீமதி னு தொடருது....

ஏன்ன்ன்ன்ன்ன்?

காயத்ரி, ஸ்ரீமதி -

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்????

கவிதா | Kavitha said...

//:) கண்டிப்பா பொதுவா சொன்னா சொல்லுவேன்! அதுவும் தலைப்பில் வைத்தால் விடாமல் சொல்லுவேன்//

:))))) சிவா இது எல்லாம் ஓவர். .அதுக்காக தலைப்பு எல்லாத்துக்கும் சில சில ன்னு வைக்க முடியாது சரிங்களா..

மோர் ஓவர் அந்த பதிவில் தெளிவா இது சம்பந்த பட்டவங்களுக்கு மட்டும்னு சொல்லி இருப்பேன்.. ஆனா நீங்க ஏன் விடவே மாட்டேன்ங்கறீங்க?!! நாட் ஃபேர் ஒகே..!! :)

Raz said...

@nee un frnd a parthathula :) romba sandosam... :) TREAT venum....

IPL ponathu.. ennakum romba kastama than iruku... Venumna sollu africa poi parpom ;) intha thram

When strangers call - nalla padam than... intha tharam vneumna namba arunthathiiiii polam.

sseri next post podu.

G3 said...

//காயத்ரி, ஸ்ரீமதி -

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்????/

இதை ஜில்ஜில் ரமாமணி ஸ்டைல்ல படிக்கனுமோ :P

30 :)))))

Unknown said...

// G3 said...
//காயத்ரி, ஸ்ரீமதி -

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்????/

இதை ஜில்ஜில் ரமாமணி ஸ்டைல்ல படிக்கனுமோ :P

30 :)))))//

ரிப்பீட்டே :)))))))

Unknown said...

Sorry 30-yayum serththu copy pannitten.. :(( ;)))

பாச மலர் / Paasa Malar said...

கதம்பத்தில் மிகவும் மணம் நேர்ப்பது உங்கள் விமர்சன வரிகள்..

நாகை சிவா said...

//மோர் ஓவர் அந்த பதிவில் தெளிவா இது சம்பந்த பட்டவங்களுக்கு மட்டும்னு சொல்லி இருப்பேன்.. ஆனா நீங்க ஏன் விடவே மாட்டேன்ங்கறீங்க?!! நாட் ஃபேர் ஒகே..!! :)//

நான் செய்தது தான் சரி என்று நிலையில் இருந்து கேட்டால் ஏதும் புரியாது விடுங்க. நீங்க தான் ஆரம்பிச்சீங்க... நான் ஆரம்பிக்கல. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் :)

நாகை சிவா said...

@ Raz!

//nee un frnd a parthathula :) romba sandosam... :) TREAT venum....//

உனக்கு வர வர ஏது ஏதுக்கு டீரிட் கேட்கனும் என்றே இல்லாம போச்சு....

//IPL ponathu.. ennakum romba kastama than iruku... Venumna sollu africa poi parpom ;) intha thram//

நான் ஏற்கனவே ஆப்ரிக்கா ல தான் இருக்கேன். நீ வறீயா அதை சொல்லு முதலில் ;)

நாகை சிவா said...

@ காயத்ரி & ஸ்ரீமதி!

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை. நல்லா இருங்க, நல்லாவே இருங்க :)

@ பாசமலர்!

நன்றி :)