Saturday, March 21, 2009

இயன்றவரை இனிய தமிழில்!

மறந்த போன தமிழ்ச்சொற்களை பதிவாக போட சொல்லி வந்த தொடரில் கவிதா என்னையும் எழுத அழைத்து பல வாரங்கள் ஆச்சு. அதை இன்னிக்கு பதிவாக போடலாம் என்று இந்த பதிவு.

எனக்கு எது தமிழ்ச்சொற்கள் எது பிற மொழி சொற்கள் என்பதே சில நேரங்களில் தெரிவது இல்லை. அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்க்கையில் பிற மொழி சொற்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அதை களைய யாரும் பெறும் அளவில் முயற்சி எடுக்கவில்லை. அல்லது அந்த முயற்சிகள் பெரும் அளவில் வெற்றி கொடுக்கவில்லை என்று சொல்லாம். ஹல்லோ, பஸ், டீ, காபி, போன், செல்போன், டிரெயின், பிளேன், பைக், கார் இது எல்லாம் தமிழ் சொற்களாக மாறி பல வருடங்கள் ஆச்சு. பதிவுலகிலும், எழுத்துலகிலும் தான் முடிந்த வரை தமிழ் சொற்களாக தேடி எடுத்து உபயோகப்படுத்தி வருகிறோம். அது ஒரு ஆரோக்கியமான விசயம்.

அயல்நாட்டில் வேலைக்கு வந்த பிறகு நண்பர்களுடன் உரையாடும் போது முடிந்த வரை ஆங்கில கலப்பு இல்லாம தமிழ் வார்த்தைகளை கொண்டே உரையாடுவது வழக்கம். நாம் என்ன பேசுகிறோம் என்பதை நம் அருகில் இருப்பவர்கள் ஊகிக்க முடியாது. அதிலும் ஆரம்பத்தில் சில வார்த்தைகளை உபயோகிக்கும் போது நமக்கே சிரிப்பாக வரும், பிறகு அது பழகி விட்டது. உதாரணமாக அண்டை நாடு, துறைத் தலைவன், பெரும் தலை, விடுப்பு, பயணச் சீட்டு, வாகனம், காலை உணவு, மதிய உணவு, விமானம், வடக்கு இந்திய, தொலைப்பேசி, கைப்பேசி, மடிக் கணினி, இணையம், மின் அஞ்சல் னு நிறைய வார்த்தைகள். இதை கேட்கும் போது நமக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளை எழுதும் போது தான் பெரும் அளவில் உபயோகப்படுத்துகிறோம். பேசும் போது நம்மளை அறியாமலே ஆங்கில வார்த்தைகள் வந்து விழுந்து விடுகிறது. அதை களைய முயல்வோம்.

நம் மொழியை நாம் பேசாமல் வேறு யாரு பேசுவது. அதனால் இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம், சில வார்த்தைகள் நம்மளை அறியாமல் வரும் போது அதை மறுமுறை திருத்திக் கொள்ள முயல்வோம். முதல்படியா தொலைபேசியில் யார் அழைத்தாலும் உங்கள் பெயரையோ அல்லது வணக்கம் என்ற வார்த்தையுடனோ பதில் சொல்ல தொடங்குவோம். (நண்பர்களிடத்தில் இருந்து ஆரம்பிப்போம்).


*******

எங்க ஊர் பக்கம் பேசும் தமிழ் தான் எழுத்து தமிழாகவும், சினிமாக்களில் பேசப்படும் தமிழாகவும் உள்ளது என்பது என் கருத்து. அதை சரியா தப்பா னு தெரிந்தவர்கள் கூறலாம். என்னால் வழக்கொழிந்த சொற்கள் என்று ஏதும் தனித்துக் கூற முடியவில்லை. அதனால் நான் பேசுவதை கேட்டு நண்பர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்ற கேட்ட சில சொற்களை பட்டியலிடுகிறேன்.

பத்தாயம் - நெல் கொட்டி வைக்கும் தொட்டி(பொட்டி)
மராக்கா - அளக்க உதவும் ஒரு பொருள் (படி, கிலோ மாதிரி, எங்க ஊரில் சமையலுக்கு மராக்கா அளவில் தான் அரிசி அளப்பார்கள்)
அப்பாயி- அப்பாவோட அம்மா
அம்மாயி - அம்மாவோட அம்மா
மண்டக் காய்ச்சல் - தலைவலி
மண்டக் கனம் - திமிர், தலைக்கனம்
சவரம் - முகம் மழித்தல்
புறக்கடை - கொல்லை
அட்டி - (அரிசி) மூட்டைகளை அடுக்குவது, ஒன்றின் மீது ஒன்றாக (வரிசை)
வெடைக்குற - கிண்டல் பண்ணற
உசக்க - மாடியில்
அடுப்படி - சமையல் அறை (அடுப்பாங்கரை னு கூட சொல்லுங்க)

பல்லா* - தண்ணீர் எடுக்க உதவும் சிறு குவளை ( பிளாஸ்டிக்)
டவரா* - டீ, காபி தருவார்கள், ஆத்தி குடிக்க வசதியாக இருக்கும்
லோட்டா* - இது தண்ணீர், டீ, காபி குடிக்க உதவும். (ஒரு குடம் சின்ன அளவில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்)

* - இது மூனும் தமிழ் வார்த்தைகளா என்று எனக்கே சந்தேகமாக தான் இருக்கு.

சென்னை வந்த பிறகு இரு வார்த்தைகளை கேட்டால் கோவம் வரும், அது கால் அவர், அரை அவர் என்பதும், அவர் கையில சொல்லிட்டேன் என்பதும். அந்த கோபம் இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கு.

65 comments:

கவிதா | Kavitha said...

பத்தாயம் - குதிர்' ன்னு சொல்லுவான்ங்க அதுவா? இது வேறையா?

சவரம் - எங்க தாத்தா இப்படி த்தான் சொல்லுவாங்க..
வெடைக்குற - புதிய வார்த்தை

பல்லா* - புதிய வார்த்தை
டவரா* - இது டபரா? இல்லையா?

லோட்டா* - கேள்விமட்டும் பட்டு இருக்கேன்.. பேசி வழக்கம் இல்ல..

சரி என்னுடைய பதிவில் நீங்க இட்ட பின்னூட்ட வார்த்தைகள்-

"ஷோக்கு" = இது என்ன தமிழா?

"சலம்பல்: = ?????

கவிதா | Kavitha said...

உசக்க - மாடியில்

உயரமான இடத்தை கூட உசக்க ;ன்னு தானே சொல்லுவாங்க. ?

நாகை சிவா said...

டவரா - டபரா - சரி தான்!

பத்தாயம், குதிர் ஒன்னு தான் என்று நினைக்கிறேன், விசாரித்து சொல்லுறேன்.

ஷோக்காகீதே - கேள்விப்பட்டது இல்லையா... நல்லா இருக்கு, பேஷா இருக்கு னு அர்த்தம்.

சலம்பல் - க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாதா... நீங்களே எத்தன தபா பதிவுலகில் சலம்பி இருக்கீங்க... ஒவரா சவுண்ட் விடுவது னு சொன்ன புரியும் னு நினைக்குறேன் ;)

நாகை சிவா said...

//உசக்க - மாடியில்

உயரமான இடத்தை கூட உசக்க ;ன்னு தானே சொல்லுவாங்க. ?//

சரி தான்.

நான் சொல்வது வீட்டுக்கு பசங்க என்னை தேடி வரும் போது சிவா எங்கனு கேட்டா, அவன் உசக்க இருக்கான், போய் பாரு என்று சொல்லுவாங்க. அதை குறித்து மாடியில் னு சொன்னேன்.

கவிதா | Kavitha said...

//எங்க ஊர் பக்கம் பேசும் தமிழ் தான் எழுத்து தமிழாகவும், சினிமாக்களில் பேசப்படும் தமிழாகவும் உள்ளது என்பது என் கருத்து//

இல்லை... தாத்தா பாட்டியை அப்பாயி அம்மாயி ன்னா எல்லா தமிழ் படத்திலும் சொல்றாங்க?

நீங்களா நினைச்சிக்காதீங்க.. சென்னை பாஷை தான் நிறைய பேசறாங்க தமிழ் சினிமாவில்.. :)))))

கவிதா | Kavitha said...

//சலம்பல் - க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாதா... நீங்களே எத்தன தபா பதிவுலகில் சலம்பி இருக்கீங்க... ஒவரா சவுண்ட் விடுவது னு சொன்ன புரியும் னு நினைக்குறேன் ;)
//

கேட்காமயே இருந்து இருக்கலாம் போல.. ?!!

கவிதா | Kavitha said...

//நான் சொல்வது வீட்டுக்கு பசங்க என்னை தேடி வரும் போது சிவா எங்கனு கேட்டா, அவன் உசக்க இருக்கான், போய் பாரு என்று சொல்லுவாங்க. அதை குறித்து மாடியில் னு சொன்னேன்//

அதானே பிள்ளை பற்றி அம்மாவிற்கு தெரியாதா... குரங்கு மாதிரி எங்கவாச்சும் உசக்க ஏறி உட்கார்ந்து இருப்பீங்க போல.. :)

நாகை சிவா said...

//இல்லை... தாத்தா பாட்டியை அப்பாயி அம்மாயி ன்னா எல்லா தமிழ் படத்திலும் சொல்றாங்க?

நீங்களா நினைச்சிக்காதீங்க.. சென்னை பாஷை தான் நிறைய பேசறாங்க தமிழ் சினிமாவில்.. :)))))//

எங்க வீட்டில் பேசுவது என்று சொன்னேனா, எங்க ஊர் என்று தானே சொன்னேன். (தஞ்சை மாவட்டங்கள் என்று அர்த்தம் அதுக்கு)

என்னது சென்னை பாஷை யா இது என்ன புது கதையா இருக்கு?

நாகை சிவா said...

//கேட்காமயே இருந்து இருக்கலாம் போல.. ?!!//

விதி வலியது! ;)

//அதானே பிள்ளை பற்றி அம்மாவிற்கு தெரியாதா... குரங்கு மாதிரி எங்கவாச்சும் உசக்க ஏறி உட்கார்ந்து இருப்பீங்க போல.. :)//

அதுவும் உண்டு, அப்படி இருக்கும் போது கொல்லையில் எதாச்சும் சுவத்து மேல மரத்து மேல இருப்பான் என்று சொல்லுவாங்க. உசக்க னா மாடியில் இருக்கும் அறையில் அல்லது மொட்டை மாடியில் என்று தான் அர்த்தம் :)

கவிதா | Kavitha said...

//ஷோக்காகீதே - கேள்விப்பட்டது இல்லையா... நல்லா இருக்கு, பேஷா இருக்கு னு அர்த்தம்.
//

ம்ம்ம்.. நல்லா தெளிவா பேசுங்க ஆனா நீங்க இப்படி ஷோக்கு, ஷேக்கு ன்னு வார்த்தை எல்லாம் பயன்படுத்தறீங்க.. நீங்க தான் கமண்ட்றதான்னு எனக்கு சந்தேகம் வந்துடும்..

நாகை சிவா said...

//ம்ம்ம்.. நல்லா தெளிவா பேசுங்க ஆனா நீங்க இப்படி ஷோக்கு, ஷேக்கு ன்னு வார்த்தை எல்லாம் பயன்படுத்தறீங்க.. நீங்க தான் கமண்ட்றதான்னு எனக்கு சந்தேகம் வந்துடும்..//

என் ஐ.டி. ல இருந்து கமெண்ட் வந்தா கண்டிப்பா அது நான் தான். அனானி கமெண்ட் எல்லாம் போட மாட்டேன்.

எப்பவும் தெளிவுல நாங்க எல்லாம் ;)

கவிதா | Kavitha said...

//எப்பவும் தெளிவுல நாங்க எல்லாம் ;)//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியுமே.. நீங்க எப்பவும் ரொம்ப தெளிவூ ன்னு.. :))))

ஆயில்யன் said...

//சில வார்த்தைகளை உபயோகிக்கும் போது நமக்கே சிரிப்பாக வரும், பிறகு அது பழகி விட்டது. ///

ரொம்ப கரீக்ட்டு!

நானும் கூட இதைத்தான் பாலோ பண்றேனாக்கும்! :)

ஆயில்யன் said...

//டவரா* - டீ, காபி தருவார்கள், ஆத்தி குடிக்க வசதியாக இருக்கும்//

சூப்பரே :))

டவரா காபி குடிக்கிறீயாடி ராசான்னு தானே அழைப்பு வரும் :)

ஆயில்யன் said...

//நாகை சிவா said...

//உசக்க - மாடியில்

உயரமான இடத்தை கூட உசக்க ;ன்னு தானே சொல்லுவாங்க. ?//

சரி தான்.

நான் சொல்வது வீட்டுக்கு பசங்க என்னை தேடி வரும் போது சிவா எங்கனு கேட்டா, அவன் உசக்க இருக்கான், போய் பாரு என்று சொல்லுவாங்க. அதை குறித்து மாடியில் னு சொன்னேன்.//


சிவாவுக்கு பதில் என் பேரு போட்டுக்கிட்டு

ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))

ஆயில்யன் said...

//மறந்த போன தமிழ்ச்சொற்களை பதிவாக போட சொல்லி வந்த தொடரில் கவிதா என்னையும் எழுத அழைத்து பல வாரங்கள் ஆச்சு. அதை இன்னிக்கு பதிவாக போடலாம் என்று இந்த பதிவு.//


பதிவுக்கும் அழைச்சிட்டு,பின்னூட்டத்தில வந்துட்டு என்ன வெடைக்கிறாங்களா பாஸ் அந்த அக்கா :))))

நாகை சிவா said...

//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியுமே.. நீங்க எப்பவும் ரொம்ப தெளிவூ ன்னு.. :))))//

புரிதலுக்கு நன்றி !!! ;)

நாகை சிவா said...

@ ஆயில்ஸ்,

//ரொம்ப கரீக்ட்டு!

நானும் கூட இதைத்தான் பாலோ பண்றேனாக்கும்! :)//

கடைப்பிடிக்கிறேன் ;) அப்படியே பிக் அப் (தொடர்ந்து) போங்க பாஸ் ;)

//சூப்பரே :))

டவரா காபி குடிக்கிறீயாடி ராசான்னு தானே அழைப்பு வரும் :)//

அதே! அதில் குடிக்கும் சுகமே தனி தான்! :)

நாகை சிவா said...

//சிவாவுக்கு பதில் என் பேரு போட்டுக்கிட்டு

ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))//

:))))

//பதிவுக்கும் அழைச்சிட்டு,பின்னூட்டத்தில வந்துட்டு என்ன வெடைக்கிறாங்களா பாஸ் அந்த அக்கா :))))//

:) எவ்வளவோ சமாளிச்சுட்டோம், இதை சமாளிக்க மாட்டோமா பாஸ்!

சிக்கிமுக்கி said...

***இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்***

பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்!

நாகை சிவா said...

@ சிக்கிமுக்கி!

//***இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்***

பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்! //

நன்றி!

உங்க பெயர் ரொம்பவே வித்தியாசமாக இருக்கு!

G3 said...

ஆஹா.. எங்கும் தமிழ் எதிலும் தமிழா இருக்கு.. இன்னிக்கு தான் சிவீஆர் என்ன சொன்னாலும் தூய தமிழ்ல தான் பதில் சொல்வேன்னு சொல்லி பேசிட்டிருந்தார். இன்று இரவு நானும் ஆட்டத்தில் கலந்துக்கறேன்னு சொன்னதுக்கு பாவம் தமிழ்.. பிழைத்து போகட்டும் விட்டு விடுங்கள் னு சொல்லிட்டு போயிட்டாரு :(

Geetha Sambasivam said...

எல்லாமே இன்னமும் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தான்! வழக்கொழிந்து போகவில்லையே? :)))))) நீங்க யாரையும் கூப்பிடலையா?

அது என்ன இன்னிக்கு கவிதாவே பின்னூட்டக் குத்தகைக்கு எடுத்துட்டாங்க?? இதை எங்க பக்கம் "ஒத்திக்கு" எடுத்ததாய்ச் சொல்லுவாங்க! :)))))

G3 said...

சரி.. தூய தமிழ்ல பேசறேன் பேர்வழினு
ஹிஹி னு சிரிக்கறதுக்கு அவன் அவன் னு சிரிக்கற கில்ஸ் மாதிரி ஆட்களை என்ன பண்றது??

G3 said...

குவாட்டர் :))

இது தமிழா?? !!!

G3 said...

ஆனா உண்மையிலேயே.. தூய தமிழ்ல பேசறப்போ கொஞ்சம் சுவாரஸ்யமா நல்லா தான் இருக்கு. ஆனா பல சமயம் சொல்ல வந்த வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாம தடுமாற்றம் வருது :(

சில சமயம் நாங்க அந்த விளையாட்டை விளையாடுவோம். தூய தமிழ்ல பேசலாம்னு.. முதல்ல ஆர்குட்-ல (இதுக்கு தமிழ்ல என்னப்பா????) நானும் பரணியும் விளையாட்டா கூறுங்கள் மன்னானு நான் சொல்ல, நாட்டில் மும்மாரி மழை பெய்கிறதா அமைச்சரேன்னு அவர் சொல்ல.. அப்போ இருந்த பொதுவான நண்பர்கள் நாங்களும் ஆட்டத்துக்கு வர்றோம்னு கலந்துக்க ஒரு ஒரு வாரம் ஆர்குட்ல கலக்கலா போச்சு :)

நாகை சிவா said...

@ காயத்ரி!

//ஆஹா.. எங்கும் தமிழ் எதிலும் தமிழா இருக்கு.. இன்னிக்கு தான் சிவீஆர் என்ன சொன்னாலும் தூய தமிழ்ல தான் பதில் சொல்வேன்னு சொல்லி பேசிட்டிருந்தார். இன்று இரவு நானும் ஆட்டத்தில் கலந்துக்கறேன்னு சொன்னதுக்கு பாவம் தமிழ்.. பிழைத்து போகட்டும் விட்டு விடுங்கள் னு சொல்லிட்டு போயிட்டாரு :(//

அப்படி எல்லாம் மனச தளர விட்டுடாதீங்க... நீங்களும் ஆரம்பிங்க!

//சரி.. தூய தமிழ்ல பேசறேன் பேர்வழினு
ஹிஹி னு சிரிக்கறதுக்கு அவன் அவன் னு சிரிக்கற கில்ஸ் மாதிரி ஆட்களை என்ன பண்றது?? //

:))) இப்படி ரசிச்சு சிரிச்சுட்டு விட்டுட வேண்டியது தான்! :)

நாகை சிவா said...

//எல்லாமே இன்னமும் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தான்! வழக்கொழிந்து போகவில்லையே? :)))))) //

நான் வழக்கொழிந்து சொற்கள் னு சொல்லவே இல்லையே ;)

//நீங்க யாரையும் கூப்பிடலையா?//

இல்லங்கோ!

//அது என்ன இன்னிக்கு கவிதாவே பின்னூட்டக் குத்தகைக்கு எடுத்துட்டாங்க?? இதை எங்க பக்கம் "ஒத்திக்கு" எடுத்ததாய்ச் சொல்லுவாங்க! :)))))//

எங்க பக்கமும் அதே தான். போகியம் கூட சொல்லுவாங்க.

நாகை சிவா said...

@ காய்த்ரி,

//குவாட்டர் :))

இது தமிழா?? !!! //

கால் சதம் என்பது தான் சரியா வார்த்தை.

//சில சமயம் நாங்க அந்த விளையாட்டை விளையாடுவோம். தூய தமிழ்ல பேசலாம்னு.. முதல்ல ஆர்குட்-ல (இதுக்கு தமிழ்ல என்னப்பா????) நானும் பரணியும் விளையாட்டா கூறுங்கள் மன்னானு நான் சொல்ல, நாட்டில் மும்மாரி மழை பெய்கிறதா அமைச்சரேன்னு அவர் சொல்ல.. அப்போ இருந்த பொதுவான நண்பர்கள் நாங்களும் ஆட்டத்துக்கு வர்றோம்னு கலந்துக்க ஒரு ஒரு வாரம் ஆர்குட்ல கலக்கலா போச்சு :)//

இப்படி எல்லாம் பேசி இம்சை பண்ண வேணாம், :)))

இனிய தமிழில் அதாவது நாம் சாதாரணமாக பேசும் தமிழில் முடிந்த தமிழ் சொற்களை கொண்டு பேசினாலே போதும். :)))

G3 said...

//இப்படி எல்லாம் பேசி இம்சை பண்ண வேணாம், :)))//

இம்சையா?? !!! மன்னர் காலத்து தமிழ் உங்களுக்கு இம்சையாக படுகிறதா?? என்ன கொடுமை சிவா இது :(

[அதை நீங்கள் பேசுவது தான் இம்சை என்று பதில் கூறினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது :P ]

கவிதா | Kavitha said...

கீதாஜி, நீங்களே பாருங்க.. நான் எத்தனை பின்னூட்டம் போட்டு இருக்கேன்னோ அத்தனைக்கும் பதில் சொல்றேன் னு சிவா வும் சரிக்கு சரியா பின்னூட்டம் போட்டு இருக்காங்க..

****

சிவா போகியம் குத்தகை எல்லாம் ஒன்று தானே?!!

கவிதா | Kavitha said...

//எங்க பக்கமும் அதே தான். போகியம் கூட சொல்லுவாங்க//

ஓ சொல்லலாமா? அவ்வளவு நல்லவரா நீங்க ?! சொல்லவே இல்ல ?!! :))

கவிதா | Kavitha said...

//இனிய தமிழில் அதாவது நாம் சாதாரணமாக பேசும் தமிழில் முடிந்த தமிழ் சொற்களை கொண்டு பேசினாலே போதும். :)))
//

ஆமாம்மா.. ஷேக்கு.. ஷோக்கு'ன்னு... சரியா சிவா?!! :)))))

Raz said...

grrr.... mudiyala...

Raz said...

vattikadai , kada theru , paran, padikattu, santhai . ivalo than ninaivuku varuthu ippothaiku

அபி அப்பா said...

\\கவிதா | Kavitha said...
//எங்க ஊர் பக்கம் பேசும் தமிழ் தான் எழுத்து தமிழாகவும், சினிமாக்களில் பேசப்படும் தமிழாகவும் உள்ளது என்பது என் கருத்து//

இல்லை... தாத்தா பாட்டியை அப்பாயி அம்மாயி ன்னா எல்லா தமிழ் படத்திலும் சொல்றாங்க?

நீங்களா நினைச்சிக்காதீங்க.. சென்னை பாஷை தான் நிறைய பேசறாங்க தமிழ் சினிமாவில்.. :)))))

\\

இல்லை கவிதா சென்னை தமிழை சினிமாவில் அழகா(???) பேசுவது நம் லூஸ் மோகனும், சோவும் சில சமயம் கமல் . அத்தனையே!

ஆனா நாங்க பேசும் நாகை அதாவது கீழ தஞ்சை மாவட்டம் தவிர மொத்த பழைய தஞ்சை மாவட்டம் மாத்திரமே தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழுக்கான விலாசம்.

அட்லீஸ்ட் கொள்ளிடம் தாண்டி சிதம்பரம் போனா கூடவழக்கில் இருக்கும் தமிழ் சினிமாவில் வராது. ஒரு உதாரணத்துக்கு ஒரு பார்மஸியில் போய் நாம் அதாவது நாங்க "சார் தலைவலி மாத்திரை கொடுங்க"ன்னு அழகா கேட்போம். அதுக்கு அவங்க "உனக்கு என்ன மாத்திரை வேணும்"ன்னு பதிலுக்கு ஒருமையிலே கேட்பாங்க. எங்க உயிரே போய்டும்.

எங்களுக்கு முதல் தேவையே மரியாதை தான். மாத்திரை அல்ல என்பது அவர்களுக்கு தெரியாது.

அது போல எங்களூகு தேவையில்லாத "அண்ணாச்சி'யும் பிடிக்காது. எனக்கு அண்ணன் வயசு இருக்கும். என்னை பார்த்து அண்ணாச்சின்னா எனக்கு உடம்பு கூசும்.

கவிதா இதை பத்தி சொல்லனும்ன்னா நான் ஒரு பதிவே போடலாம்.

சமீபத்தில் பாலகுமாரன் "உடையார்" படிச்சேன் அத்தனை பாகமும். அதிலே கூட நிறைய தப்பு இருக்கு. எங்கள் வட்டார வழக்கு பேச்சுகளில்.

"சவாலே சமாளி" படம் பாருங்க! அதே தமிழ் தான் எல்லா படத்திலும் இருக்கும்.

அது தான் எங்க தமிழ். அதுக்காக நான் அது உசத்தி இது உசத்தின்னு சொல்ல வர்லை!

கோபிநாத் said...

மராக்கா,சவரம்,புறக்கடை,அடுப்படி..ம்ம்ம் இவை எல்லாம் நானும் சொல்லியிருக்கிறேன்.

\\முதல்படியா தொலைபேசியில் யார் அழைத்தாலும் உங்கள் பெயரையோ அல்லது வணக்கம் என்ற வார்த்தையுடனோ பதில் சொல்ல தொடங்குவோம்\\

நல்ல விஷயம் நானும் முயற்சிக்கிறேன் ;)

கவிதா | Kavitha said...

//ஆனா நாங்க பேசும் நாகை அதாவது கீழ தஞ்சை மாவட்டம் தவிர மொத்த பழைய தஞ்சை மாவட்டம் மாத்திரமே தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழுக்கான விலாசம்.
//

கூட்டமா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க..!!! :)

என்னத்த சொல்ல.. உங்க பேச்சுக்கும் சிவா பேச்சுக்கும் மறுப்பு சொல்ல முடியுமா.. 50-60 பேரு ஒன்றா கூடி இல்ல கும்முவீங்க.. :) அம்புட்டு மண் வாசம்.. சே.. பாசம்..!! :)

நாகை சிவா said...

//இம்சையா?? !!! மன்னர் காலத்து தமிழ் உங்களுக்கு இம்சையாக படுகிறதா?? என்ன கொடுமை சிவா இது :(

[அதை நீங்கள் பேசுவது தான் இம்சை என்று பதில் கூறினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது :P ]//

நீங்களே இப்படி வாய் விட்டு மாட்டிக்கிட்டா நான் என்ன பண்ண? ;))

மன்னர் காலத்து உடை எல்லாம் போட்டுக்கிட்டு மன்னர் காலத்து தமிழ் பேசுங்க, ஒத்துக்குறேன், அப்படி இல்லனா சாதாரண சங்கத் தமிழே பேசுங்க போதும் :)

நாகை சிவா said...

//கீதாஜி, நீங்களே பாருங்க.. நான் எத்தனை பின்னூட்டம் போட்டு இருக்கேன்னோ அத்தனைக்கும் பதில் சொல்றேன் னு சிவா வும் சரிக்கு சரியா பின்னூட்டம் போட்டு இருக்காங்க..//

சரிக்கு சரியா போடல, வேணும்னா எண்ணி பாருங்க கவிதா ;)

****

//சிவா போகியம் குத்தகை எல்லாம் ஒன்று தானே?!!//

ஆமாங்க. பேந்தகம் என்றும் சொல்லாம்.

நாகை சிவா said...

////இனிய தமிழில் அதாவது நாம் சாதாரணமாக பேசும் தமிழில் முடிந்த தமிழ் சொற்களை கொண்டு பேசினாலே போதும். :))) //

ஆமாம்மா.. ஷேக்கு.. ஷோக்கு'ன்னு... சரியா சிவா?!! :)))))//

ஷேக்கு என்பது ஒரு பெயர். நான் எங்க ஷேக்கு னு என்ன சொன்னேன். ஷோக்கு னு சொல்வது அங்க அங்க கிண்டலுக்கு சொல்வது. பேசும் போது அந்த வார்த்தை உபயோகப்படுத்தி நீங்க கேட்டு இருக்கீங்களா?

நாகை சிவா said...

@ Raz!

// grrr.... mudiyala...//

kurachigava? ;)

//vattikadai , kada theru , paran, padikattu, santhai . ivalo than ninaivuku varuthu ippothaiku//

ada unaku ivalavu tamil varthaikal theriyuma? unna ninacha ennaku romba perumaiya irruku machi ;)

நாகை சிவா said...

@ தொல்ஸ்!

//இல்லை கவிதா சென்னை தமிழை சினிமாவில் அழகா(???) பேசுவது நம் லூஸ் மோகனும், சோவும் சில சமயம் கமல் . அத்தனையே!//

அதே, அதே !!!

//ஆனா நாங்க பேசும் நாகை அதாவது கீழ தஞ்சை மாவட்டம் தவிர மொத்த பழைய தஞ்சை மாவட்டம் மாத்திரமே தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழுக்கான விலாசம்.//

அதே, அதே !!!

//ஒரு பார்மஸியில் போய் நாம் அதாவது நாங்க "சார் தலைவலி மாத்திரை கொடுங்க"ன்னு அழகா கேட்போம். அதுக்கு அவங்க "உனக்கு என்ன மாத்திரை வேணும்"ன்னு பதிலுக்கு ஒருமையிலே கேட்பாங்க. எங்க உயிரே போய்டும்.//

ங்க போட்டு பேசுவதில் நமக்கு நிகர் நாமே தான்.

//அது தான் எங்க தமிழ். அதுக்காக நான் அது உசத்தி இது உசத்தின்னு சொல்ல வர்லை!//

சரியா சொன்னீங்க. தொல்ஸ் மொத்ததில் அருமையான கருத்தை முன் வைத்து உள்ளீர்கள். நன்றி!

G3 said...

//மன்னர் காலத்து உடை எல்லாம் போட்டுக்கிட்டு மன்னர் காலத்து தமிழ் பேசுங்க, ஒத்துக்குறேன்,//

ஆலோசனை எல்லாம் நன்றாக தான் உள்ளது.. ஆனால் ஆடை ஆபரண செலவு சற்று அதிகமாக ஆகும். தாங்கள் நன்கொடை அளித்தீர்கள் என்றால் முயற்சி செய்யலாம் :))

நாகை சிவா said...

@ கோபி!

//நல்ல விஷயம் நானும் முயற்சிக்கிறேன் ;)//

:)) நன்றி சகா!

நாகை சிவா said...

//கூட்டமா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க..!!! :)//

இருவரை பார்த்தாவே உங்களுக்கு கூட்டமா கிளம்பின மாதிரி இருக்கா கவிதா???? ;)

//என்னத்த சொல்ல.. உங்க பேச்சுக்கும் சிவா பேச்சுக்கும் மறுப்பு சொல்ல முடியுமா.. 50-60 பேரு ஒன்றா கூடி இல்ல கும்முவீங்க.. :) அம்புட்டு மண் வாசம்.. சே.. பாசம்..!! :)//

இதுல மண் வாசம், பாசம் எல்லாம் கண்டிப்பா உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சில பெருமைகள் உண்டு. அது போல தான் இதுவும். அதை தவிர 50 - 60 பேர் சேர்ந்து எல்லாம் கும்மியது இல்லை. குறைந்தப்பட்சம் இதை சொல்லி எல்லாம் நான் கும்மியது இல்லை :)))

நீங்க சென்னை பாஷை தான் சினிமாவில் உபயோகப்படுத்துறாங்க என்று சொன்னீங்க. ஆனா நான் சொன்னாதாக இருமுறை சொன்னீங்களே ஷோக்கு, அது சென்னை பாஷை அது தெரியுமா உங்களுக்கு? சென்னை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, புதுவை னு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வட்டார வழக்கு இருக்கு, அதே போல தஞ்சை வட்டார வழக்கும் ஒன்று. அந்த வட்டார வழக்கை தான் சினிமா, எழுத்துலகில் உபயோகப்படுத்துறாங்க என்று நாங்க சொல்லுறோம், விசாரித்து பார்த்து சொல்லுங்களேன், சரியா தவறா என்று. ஆனா கண்டிப்பா சென்னை பாஷை இல்லை.

நாகை சிவா said...

//ஆலோசனை எல்லாம் நன்றாக தான் உள்ளது.. ஆனால் ஆடை ஆபரண செலவு சற்று அதிகமாக ஆகும். தாங்கள் நன்கொடை அளித்தீர்கள் என்றால் முயற்சி செய்யலாம் :))//

இப்ப ஆடை, ஆபரணம் கேட்பீங்க, அப்புறம் அரண்மனை, அந்தபுரம் எல்லாம் கேட்பீங்க. இந்த பிரச்சனை எல்லாம் வேணாம்னு தான் உங்களை அந்த தமிழ் பேச வேண்டாம் என்று சொல்லுறேன், புரியுதாங்க இப்ப....;))))

G3 said...

//இப்ப ஆடை, ஆபரணம் கேட்பீங்க, அப்புறம் அரண்மனை, அந்தபுரம் எல்லாம் கேட்பீங்க. //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உஷாராத்தான்பா இருக்காங்க :(((

G3 said...

சரி... வந்த வேலையை நான் பாக்கறேன் :D

G3 said...

அரை சதம் :D

G3 said...

வந்த வேலை முடிஞ்சுது.. நான் அப்பீட்டு :)))

நாகை சிவா said...

//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. உஷாராத்தான்பா இருக்காங்க :((( //

வேற வழி சுத்தி இருக்கும் மக்கள் அப்படி :)

அரை சதத்துக்கு நன்றி!!!! :)))

Geetha Sambasivam said...

///ஆனா நாங்க பேசும் நாகை அதாவது கீழ தஞ்சை மாவட்டம் தவிர மொத்த பழைய தஞ்சை மாவட்டம் மாத்திரமே தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த தமிழுக்கான விலாசம்.//

அதே, அதே !!!//

என்ன அதே, அதே! சங்கம் வளர்த்த மதுரைத் தமிழ் தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழுக்கான விலாசம், இதயம், உணர்வு, எல்லாமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தஞ்சாவூர்க்காரங்க இரண்டு பேரும் பிரிச்சுக்குங்க இதை! :P:P:P:P:P:P:P:P

நாகை சிவா said...

கீதா!

நீங்க சங்கம் வச்சி தமிழை வளர்த்தீங்க அதுல எந்த சந்தேகமும் இல்லை. தமிழ் பிறந்தது நெல்லையில், வளர்ந்தது மதுரையில், கொஞ்சி விளையாடியது தஞ்சையில் ன் சொல்லுவாங்க. உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்.

அதுவும் போக இந்த அவிங்க, இவிங்க, புள்ள இது எல்லாம் எங்க பக்கம் பேச மாட்டாங்க... அதுவும் போக மதுரை சுற்றுவட்டாரத்தில் படம் எடுத்தால் அதன் விமர்சனம் மதுரை மணம் மாறாமல் வசனம் அமைந்து உள்ளது னு சொல்லுவாங்க, உங்க தமிழ் தான் தமிழ்நாடு முழுக்கனா அதை எதுக்கு தனியா குறிப்பிட்டு சொல்லனும் சொல்லுங்க :)))

தமிழர் நேசன் said...

வணக்கம் சிவா!

//எனக்கு எது தமிழ்ச்சொற்கள் எது பிற மொழி சொற்கள் என்பதே சில நேரங்களில் தெரிவது இல்லை.//
//ஹல்லோ, பஸ், டீ, காபி, போன், செல்போன், டிரெயின், பிளேன், பைக், கார் //
சரிதான், நீங்கள் சில ஆங்கில மொழி கலப்பினை உதாரணமாக சொன்னீர்கள். அதே சமயம், நாம் பல வாடா மொழி சொற்க்களை 40 - 50 % வரை கலந்து பயன் படுத்துகிறோம் என்று நினைக்கிறன்! நாம் அவற்றையும் சிறிது சிறிதாக களைய முயற்சிக்க வேண்டும் என்பது என் கருத்து.

தமிழர் நேசன் said...

தாங்கள் வெகு நாட்களாக தமிழக அரசியல், ஈழ மக்கள் கவலைகளை பற்றி பேசாமல் இருக்கிறீர்களே?!! பொதுவாகவே நான் படித்த பல வலை பதிவர்கள் இப்போது ஈழ மக்களை பற்றி பேசுவதை விட்டு விட்டது மன வருத்தத்தை தருகிறது!!
தேர்தல் சர்க்கஸ் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது!!

Poornima Saravana kumar said...

அட்டி, வெடைக்குற,பல்லா, டவரா, லோட்டா

இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு...
இப்போ தெரிஞ்சுகிட்டேனே!!

கவிதா | Kavitha said...

//தாங்கள் வெகு நாட்களாக தமிழக அரசியல், ஈழ மக்கள் கவலைகளை பற்றி பேசாமல் இருக்கிறீர்களே?!! பொதுவாகவே நான் படித்த பல வலை பதிவர்கள் இப்போது ஈழ மக்களை பற்றி பேசுவதை விட்டு விட்டது மன வருத்தத்தை தருகிறது!! //

:))) தமிழர் நேசன்.. நீங்க சும்மா இருந்தாலும் சிவா இருக்க மாட்டாங்க ரொம்ப எல்லாம் கவலை படாதீங்க..புலி பதுங்கறது பாய்வதற்கு.... ன்னு தெரிஞ்சிக்கோங்க...

கவிதா | Kavitha said...

//அதே, அதே //

கிதாஜி.. நானும் இந்த அதே அதே வைஇ பார்த்து தான் இந்த பக்கமே திருப்பி வரலை. :( ஓவரா இருக்கு !!

நாகை சிவா said...

@ தமிழர் நேசன்!

//அதே சமயம், நாம் பல வாடா மொழி சொற்க்களை 40 - 50 % வரை கலந்து பயன் படுத்துகிறோம் என்று நினைக்கிறன்! நாம் அவற்றையும் சிறிது சிறிதாக களைய முயற்சிக்க வேண்டும் என்பது என் கருத்து.//

உண்மை தான். கண்டிப்பாக இயன்ற அளவு களைய முயல வேண்டும்.

//தேர்தல் சர்க்கஸ் எல்லாவற்றையும் மறக்க செய்துவிடும் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது!!//

உண்மை தான். தேர்தல் திருவிழாவில் ஈழ பிரச்சனை சிறிது பின்வாங்கி உள்ளது என்பது உண்மை தான். தொடர்ந்து உலக அளவில் இந்த பிரச்சனையை குறித்து கவனித்துக் கொண்டு தான் உள்ளேன். ICC அணுக கூட முயன்று உள்ளார்கள். சரியான தகவல் கிடைத்தால் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவேன்.

நாகை சிவா said...

@ பூர்ணிமா!

ராயல்டி அனுப்ப முகவரி வச்சு இருக்கீங்களா? ;)

நன்றி!

நாகை சிவா said...

@ கவிதா!

//நானும் இந்த அதே அதே வைஇ பார்த்து தான் இந்த பக்கமே திருப்பி வரலை. :( ஓவரா இருக்கு !!//

இதுல என்ன இருக்கு, அவர் சொன்னது எனக்கு உடன்பாடாக இருந்துச்சு அதனால் அதே அதே போட்டேன், இதுல என்ன ஒவரா உங்களுக்கு தெரிஞ்ச்சு. மாற்று கருத்து இருந்தா சொல்லுங்க கேட்டுக்குறேன்.

நான் தஞ்சை பக்கத்து தமிழ் தான் பேச்சு தமிழாகவும், சினிமாவில் உபயோகப்படுத்தும் வசனமாகவும் உள்ளது என்று சொன்னேன். இல்ல நீங்க சென்னை பாஷை என்று சொன்னீங்க. அவர் இல்லை. தஞ்சை என்று தான் சொல்லி இருக்கார். கீதா, மதுரை தமிழ் தான் தமிழகத்தின் முகவரி னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொருக்கும் ஒரு கருத்து இருக்கும், அதை சபையில் சொல்லுறோம். சரியா இருந்தா ஒத்துக்க போறோம். இல்லனா இல்லை சொல்ல போறோம். அதை தவிர வேறு எதுவும் இல்லை.

அசோகன் said...

நீங்கள் சொன்ன மாதிரி பத்தாயம், குதிர் இரண்டுமே கிராமங்களில் தானியங்களை சேமித்து வைக்க பயன்படும். ஆனால்,
குதிர் என்பது மண்ணால் செய்து, சூளையில் வைத்துச் சுடப்பட்டது. ஜாடி போல் ஆளுயரத்திற்கு மேல் இருக்கும். பத்தாயம் மரத்தினால் செய்யப்பட்டது. ஒரு பெரிய பீரோ மாதிரி இருக்கும்.

இந்தக் குதிர் அல்லது பத்தாயம் இல்லாத வீட்டை யாருமே மதிக்கமாட்டார்களாம்! குதிர் இல்லை என்றால் அவர்கள் விலைக்கு அரிசி வாங்கிச் சாப்பிடும் பஞ்சப் பரதேசிகள் என்று நினைப்பார்களாம்!

Anonymous said...

லோட்டா
itz rotta

நாகை சிவா said...

@ அசோகன்,

தகவலுக்கு நன்றி!

கிராமங்களில் இல்லாமல் நகரங்களிலும் பத்தாயம் பெரும் அளவு இருந்தது முன்பு. எங்கள் வீட்டிலும் ரொம்ப வருடங்கள் இருந்தது. ஒரு அறை அளவுக்கு பெரியது. காலபோக்கில் எல்லாம் மாறி விட்டது.

@ அனானி!

நன்றி!