ஒரு நாட்டின் சுகந்திரம் என்பது
போராடி, இரத்தம் சிந்தி, உயிர் தியாகம்
செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர,
கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல
பேரம் பேசிப் பெறுவதும் அல்ல
- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
இந்த தேசம் இருக்கும் வரை உனை
நினைத்து சில சுவாசங்கள் இருக்கும்
ஜெய்ஹிந்த்!
27 comments:
நான் விரும்பும் ஒரு தலைவன். காந்தியால் வெள்ளையர்களிடம் காட்டிகொடுக்கப்பட்டவர்.
செல்வராஜ்
சல்யூட்!
ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்!
சிவா நினைவு வைத்து பதிவிட்டதற்கு நன்றி.. ஆனா இவ்வளவு நாட்டு பற்று இருக்கவங்க இந்தியாவில் இருந்தால் நாட்டுக்கு நல்லது !!
தம்பி, நாட்டுப்பற்றுக்கு என்ன சொல்ல. அது கிடக்கு வண்டி வண்டியா.. நாம அதுக்கு என்ன செஞ்சுட்டோம்னு நினைச்சுதான் கவலைப்படறேன்.
Salute!!!!!
//காந்தியால் வெள்ளையர்களிடம் காட்டிகொடுக்கப்பட்டவர்.//
Is it true? Siva,Please answer if you know.
//ஆனா இவ்வளவு நாட்டு பற்று இருக்கவங்க இந்தியாவில் இருந்தால் நாட்டுக்கு நல்லது !!//
???
//ஆனா இவ்வளவு நாட்டு பற்று இருக்கவங்க இந்தியாவில் இருந்தால் நாட்டுக்கு நல்லது !!//
???
// ஏன்ப்பா கேள்விகுறி.. ?!! :) இவ்வளவு நாட்டுப்பற்று இப்படி இருக்கவங்க எல்லாம் வெளிநாட்டுல போய் உட்கார்ந்துகிட்ட இங்க யாரு நாட்டை பார்த்துக்கறது.. :(
//நான் விரும்பும் ஒரு தலைவன். காந்தியால் வெள்ளையர்களிடம் காட்டிகொடுக்கப்பட்டவர்.//
செல்வராஜ்!
உங்க கருத்துக்கு நன்றி. ஆனால் நீங்கள் எந்த விசயத்தை குறிப்பிட்டு கூறுகின்றீர்கள் என்று தெரியவில்லை. ஒரு அனுமானத்தின் படி கூறுகின்றீர்களா? இல்லை வேற ஏதும் சம்பவத்தை வைத்தா? முடிந்தால் விளக்கவும்
@ கவிதா!
//சிவா நினைவு வைத்து பதிவிட்டதற்கு நன்றி.. ஆனா இவ்வளவு நாட்டு பற்று இருக்கவங்க இந்தியாவில் இருந்தால் நாட்டுக்கு நல்லது !!//
:) எத்தனையோ தடவை விளக்கியாச்சு. புரிந்து புரியாமல் பேசுவதற்கு என்னத்த சொல்ல.
ஒரு சின்ன நினைவுப்படுத்தல்!
ஆளானப்பட்ட நேதாஜியே இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கி தர இந்தியாவில் இருந்தால் கதைக்கு ஆகாது என்று எண்ணி இந்தியாவை விட்டு வெளியேறி ராணுவத்தை அமைந்து இந்தியாவிற்காக இந்தியாவின் மீது போர் தொடுத்தார் என்பது வரலாறு.
//தம்பி, நாட்டுப்பற்றுக்கு என்ன சொல்ல. அது கிடக்கு வண்டி வண்டியா.. நாம அதுக்கு என்ன செஞ்சுட்டோம்னு நினைச்சுதான் கவலைப்படறேன்.//
கவலைப்பட என்ன இருக்கு. நாட்டுக்கு தேவையான அன்னிய செலவாணியை அனுப்பிட்டு தானே இருக்கீங்க. அதுவே போதும் அண்ணாச்சி!
//காந்தியால் வெள்ளையர்களிடம் காட்டிகொடுக்கப்பட்டவர்.//
Is it true? Siva,Please answer if you know.//
கபீஷ்! அது மாதிரி சம்பவம் ஏதும் நடந்த மாதிரி ஞாபகத்தில் இல்லை. சில நேரங்களில் சுபாஷ் சிறையில் அடைத்த நேரங்களில் அவரை வெளியில் கொண்டு வர காந்தி பெரும் அளவில் முயற்சி எடுத்தது இல்லை.
காந்திக்கும் சுபாஷ் க்கும் அவர்கள் இருவரும் சந்தித்த முதல் நாளை தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும் ஏழாம் பொருத்தம் தான். அதிலும் சுபாஷ் காங்கிரஸ் தலைவர் ஆன பிறகு அவர்கள் இருவருக்குமான இடைவெளி அதிகரித்தது. இருந்த போதிலும் சுபாஷ் க்கு காந்தியின் மீது இருந்த மரியாதைக்கு சிறிதும் குறைவு இல்லை. கருத்துகளில் மட்டும் தான் வேற்றுமை கொண்டு இருந்தார். அந்த காரணத்தால் தான் காங்கிரஸ் மேடைகளிலே காந்தி செய்வதை நேரடியாக தாக்கி பேசி உள்ளார். ஆக்ரோசமாக வெடித்து உள்ளார். (பகத்சிங் தூக்கில் இட பட்ட போதும், பரிபூரண் சுகந்திரம் மட்டுமே வேண்டும் போன்ற பல விசயங்களில்)
இப்படியே ரொம்ப நீண்டு விடும்.
சுருக்கமாக நேதாஜியின் ஆன்மாவை மிதித்துக் கொண்டு தான் நாம் சுகந்திரம் பெற்று உள்ளோமே என்ற எண்ணம் எனக்கு சில சமயங்களில் ஏற்படும் அதற்கான காரணம் சுபாஷ் உயிரோடு, பிணமாகவோ கிடைத்தால் அவரை ஆங்கிலேய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்திற்கு இந்தியா சம்மதித்து உள்ளது என்பதை கேள்விப்பட்ட பிறகு(அது எந்த அளவுக்கு உண்மை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை)
//ஏன்ப்பா கேள்விகுறி.. ?!! :) இவ்வளவு நாட்டுப்பற்று இப்படி இருக்கவங்க எல்லாம் வெளிநாட்டுல போய் உட்கார்ந்துகிட்ட இங்க யாரு நாட்டை பார்த்துக்கறது.. :(//
நியாயமான கேள்வி தான்!
எங்களில் பலர் வெளிநாடு சென்றதுக்கான காரணம் "திரைகடலோடியும் திரவியம் தேடு"
என்பது தான். தேடி கடைசியில் இந்தியாவில் தான் வந்து அடைய போகிறோம். அதையும் தவிர்த்து, இந்தியாவில் இருந்த போது செய்ததை விட இங்கு இருந்து நிறையவே செய்யவதாக எனக்கு தோன்றுகிறது.
ஜெய்ஹிந்த்..
//அதையும் தவிர்த்து, இந்தியாவில் இருந்த போது செய்ததை விட இங்கு இருந்து நிறையவே செய்யவதாக எனக்கு தோன்றுகிறது.//
Well said சிவா.
//அதையும் தவிர்த்து, இந்தியாவில் இருந்த போது செய்ததை விட இங்கு இருந்து நிறையவே செய்யவதாக எனக்கு தோன்றுகிறது.//
...ம்ம்.. ஆன்னா ஊன்னா.. பணம் அனுப்பறோம்னு சொன்னா எப்படி சிவா..?! அது மட்டுமே நம் நாட்டின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து விடுமா?
சரியான முறையில் எல்லாம் நடக்கனும்னா முதல்ல நல்ல தலைமை வேண்டும்,
* நல்ல தலைமையை நம் இளைஞர்கள் கையில் எடுக்கனும்..
* படித்தவர்கள், துறை சார்ந்தவர்கள் அந்த அந்த துறைகளில் நியமிக்கப்படனும். அதற்கு கண்டிப்பாக உங்களை போன்றவர்கள் இங்கே இருக்கனும்!
நீங்க "திரைகடலோடியும் திரவியம் தேடு" ன்னு இந்த காரணத்தை தான் எப்பவும் சொல்றீங்க. .ஆனா இங்கேயே நம்மால் தேடி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா? அப்படி வறட்சியாகவா இந்தியா இருக்கு?
"சாதனை மனிதர்கள்" என்ற ரேடியோ நிகழ்ச்சியை இப்போது கேட்க முடிகிறது.. அதில் மிக சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கி,வேலை அல்லது தொழில் தொடங்கி, தன் உழைப்பாலும் நம்பிக்கையாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எப்படி தானும் சாதித்து மற்றவர்களையும் சாதிக்க வைக்கிறார்கள் என்று புர்ந்துக்கொள்ள முடிகிறது. நிறைய இப்படி நம்மவர்களை பார்த்தே நாம் திரவியமும் இங்கேயே தேடி கொண்டு, நாட்டையும் கவனித்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
திரவியம் மட்டுமே குறிக்கோள் அதுமட்டுமே நாட்டுக்கு போதும் என்று நினைச்சீங்கன்னா.. ம்ம்ஹும்.. இனிமே எங்க உங்களை இப்படி நான் ஒரே கேள்விய கேட்கிறது.. விட்டுடுவேன்...தேடிட்டு வரட்டும்னு.. :)
நன்றி பாசமலர்.
//...ம்ம்.. ஆன்னா ஊன்னா.. பணம் அனுப்பறோம்னு சொன்னா எப்படி சிவா..?! அது மட்டுமே நம் நாட்டின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து விடுமா?//
பணம் என்று குறிப்பிட்டு சொல்லவே இல்லை கவிதா! இது வரை இந்தியாவில் இருந்ததற்க்கும் வெளிநாடு வந்த பிறகு இந்தியாவில் இருந்த போதும் என்ற அளவிலே நான் கருத்தை சொன்னேன். அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. பல விசயங்கள் இருக்கு. அதில் முக்கியமான ஒன்று. நேரம். இந்தியாவில் இருந்த வரை வேலை வேலை என்று சுற்ற மட்டுமே நேரம் இருந்தது. கிடைக்கும் விடுமுறையில் குப்புற அடித்து தூங்கவும், ஊருக்கு போகவும் மட்டும் தான் முடிந்தது. என்னை பற்றி சிந்திக்கவே நேரம் இல்லாத நாட்கள் அவை. அந்த அளவுக்கு வேலை பளுவும் களைப்பும் இருந்தது அப்போது. நேரம் நீங்க தான் ஒதுக்கிக்கனும் என்று சப்பைக்கட்டு எல்லாம் கட்ட நான் தயாராக இல்லை. ஆனால் இப்பொழுது என்னால் பல விசயங்களை குறித்து சிந்திக்க முடிகிறது. அதற்கு எப்படி செயல் வடிவம் குடுக்கலாம் என்று முயல முடிகிறது. ரொம்ப விளக்க ஆசைப்படல.
//சரியான முறையில் எல்லாம் நடக்கனும்னா முதல்ல நல்ல தலைமை வேண்டும்,
* நல்ல தலைமையை நம் இளைஞர்கள் கையில் எடுக்கனும்..
* படித்தவர்கள், துறை சார்ந்தவர்கள் அந்த அந்த துறைகளில் நியமிக்கப்படனும். அதற்கு கண்டிப்பாக உங்களை போன்றவர்கள் இங்கே இருக்கனும்!//
இதற்கு நான் ஏற்கனவே உங்க பதிவில் ரொம்பவே விரிவா பதில் சொல்லி இருக்கேன். அந்த பதிவு உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
//நீங்க "திரைகடலோடியும் திரவியம் தேடு" ன்னு இந்த காரணத்தை தான் எப்பவும் சொல்றீங்க. .ஆனா இங்கேயே நம்மால் தேடி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா? அப்படி வறட்சியாகவா இந்தியா இருக்கு?//
வறட்சினு யாரு சொன்னா? அங்க செய்யுற அதே வேலையை இங்கும் செய்யும் போது நிறைய கிடைக்கிறது என்னும் போது இங்கு வருவதில் என்ன தவறு. வெளிநாட்டுக்காரன் இந்தியாவில் வந்து வேலை செய்வது தவறா? அதை எந்த அளவுக்கோளில் பார்ப்பீர்கள்?
//"சாதனை மனிதர்கள்" என்ற ரேடியோ நிகழ்ச்சியை இப்போது கேட்க முடிகிறது.. அதில் மிக சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கி,வேலை அல்லது தொழில் தொடங்கி, தன் உழைப்பாலும் நம்பிக்கையாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எப்படி தானும் சாதித்து மற்றவர்களையும் சாதிக்க வைக்கிறார்கள் என்று புர்ந்துக்கொள்ள முடிகிறது. நிறைய இப்படி நம்மவர்களை பார்த்தே நாம் திரவியமும் இங்கேயே தேடி கொண்டு, நாட்டையும் கவனித்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.//
நீங்க மறுபடியும் இந்தியாவில் இருந்து மட்டும் தான் நாட்டை பாத்துக் கொள்ள முடியும் என்று ஒரே முடிவோட இருக்கீங்க. நான் என்னத்த சொல்ல...
ஒரே இடத்தில் இருந்து கும்மி அடிக்காம பல இடங்களுக்கு சென்று இரை தேடி கூட்டுக்கு வருவது எப்படி தவறாகும். கூட்டுக்கு வராமல் அங்கேயே கூடு அமைத்து கொள்பவர்களை பற்றி கூறவில்லை.
//திரவியம் மட்டுமே குறிக்கோள் அதுமட்டுமே நாட்டுக்கு போதும் என்று நினைச்சீங்கன்னா.. ம்ம்ஹும்.. இனிமே எங்க உங்களை இப்படி நான் ஒரே கேள்விய கேட்கிறது.. விட்டுடுவேன்...தேடிட்டு வரட்டும்னு.. :)//
திரவியம் மட்டுமே குறிக்கோள் னு இருந்தா நான் வந்து சூடான் ல இருக்க மாட்டேன். எதை செய்தாலும் ஒரு திருப்தி இருக்கனும். எனக்கு இது வரை நான் செய்ததை நினைக்கும் போது தேசப்பற்று முதற்க்கொண்டு திருப்தியாவே இருக்கிறேன்.
அதும் இல்லாமல் தேசம் என்பது என்னங்க. குடும்பத்தில் ஆரம்பித்து மாநிலம் முதற்கொண்டு ஒன்றாக இருப்பது தானே. அவரவர் அவர்களின் குடும்பத்தை முதலில் முழுங்கா கவனித்துக் கொண்டாலே போதும். கவனித்துக் கொண்டு என்றால் பணத் தேவைகள் மட்டும் இல்லை. நல்ல எண்ணங்கள் முதற்க்கொண்டு அனைத்தும்.
சிவா தவறு என்ற வார்த்தையை எங்கேயும் உபயோகிக்கலை, அப்படி அர்த்தமும் பண்ணல... :) இப்படி கேட்பது எல்லாமே ஒரு ஆதாங்கத்தில் தான்... !!
//எனக்கு இது வரை நான் செய்ததை நினைக்கும் போது தேசப்பற்று முதற்க்கொண்டு திருப்தியாவே இருக்கிறேன்.//
இதற்கு மேல் நிஜமா எனக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.. !! :) When you are happy and satify your soul by your decisions .. u r firm on your words.!! And no where my comments would shake ur words & decisions!! It is good!! :)
Thanks Siva.
And have the same opinion about ur being in abroad
ம்ம்ம்ம்...
///கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல
பேரம் பேசிப் பெறுவதும் அல்ல///
//ஆளானப்பட்ட நேதாஜியே இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கி தர இந்தியாவில் இருந்தால் கதைக்கு ஆகாது என்று எண்ணி இந்தியாவை விட்டு வெளியேறி ராணுவத்தை அமைந்து இந்தியாவிற்காக இந்தியாவின் மீது போர் தொடுத்தார் என்பது வரலாறு.///
:-)
எப்படி சிவா????..:-)))))
/நாம அதுக்கு என்ன செஞ்சுட்டோம்னு நினைச்சுதான் கவலைப்படறேன்./
நீங்க ஏதாச்சும் செஞ்சுடூவிங்களோன்னு நினைச்சுத்தான் நாங்க கவலைப்படறோம் :)
@ கவிதா!
//சிவா தவறு என்ற வார்த்தையை எங்கேயும் உபயோகிக்கலை, அப்படி அர்த்தமும் பண்ணல... :) இப்படி கேட்பது எல்லாமே ஒரு ஆதாங்கத்தில் தான்... !!//
புரியுது. :)
//எனக்கு இது வரை நான் செய்ததை நினைக்கும் போது தேசப்பற்று முதற்க்கொண்டு திருப்தியாவே இருக்கிறேன்.//
இதற்கு மேல் நிஜமா எனக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.. !! :) When you are happy and satify your soul by your decisions .. u r firm on your words.!! And no where my comments would shake ur words & decisions!! It is good!! :) //
இதுவே போதும் என்று அர்த்ததில் சொல்லவில்லை. அப்படியும் நீங்க எடுத்து இருக்க மாட்டீங்க என்ற நம்பிக்கையும் உள்ளது.
@ கபீஷ்!
நன்றி!
@ மங்கை!
//:-)
எப்படி சிவா????..:-)))))//
தானா வருதுங்க...... ;))))
யாருப்பா அந்த அனானி!
குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவது!
திரு நேதாஜி அவர்கள்,
எப்போது இந்தியா வந்தாலும் உயிரோடோ அல்லது பிணமாகவோ ஆங்கிலோய அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்னும் சரத்தில் ஒப்பமிட்டே காந்தி சுதந்திரம் பெற்று தந்தார் என்பதுதான் உண்மை.
ippadi ellam ivaru solli irukarunu ennaku theriyathu... mmmmm ennoda fav hero!
Post a Comment