Thursday, November 13, 2008

சினிமா

சங்கிலி பதிவிட அழைத்த சங்கத்து சிங்கங்கள் தல கைப்புள்ளைக்கும், அண்ணன் வெட்டிகாருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு நேரா கேள்விக்கு போகலாம்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நல்ல கேள்வி ஆனா பதில் தான் தெரியல. நினைவு தெரிந்துனா Mr.பாரத். அதுல என்னத்த உணர்ந்தேன் என்பதை இப்ப உணர முடியல. நாகையில் அப்ப மூன்று திரையரங்கம் தான். சிறுவயதில் அடிக்கடி சினிமா சென்ற ஞாபகம் இருக்கு. அப்பா வோடு சென்றது ரொம்பவே கம்மி தான். கடைசியாக நாங்கள் இருவரும் சேர்ந்த பார்த்த படம் என்றால் Iron Leg (15 வருசம் இருக்கும்) அம்மாவோடும் கம்மி தான், ஆயுத எழுத்து (அக்கா திருமணம் முடிந்த பிறகு பார்த்த படம்) இரண்டுமே பாண்டியில் (முதலாவது ஆனந்தா அடுத்து ஸ்ரீராமன், இரண்டு அரங்கமும் இப்ப இல்லை:) )

நம்மை சினிமாவுக்கு அடிமைப்படுத்திய பெருமை என் மச்சானுங்களுக்கு தான் சேரும், அவர்கள் நாகை வந்தாலும், நான் தேவகோட்டை சென்றாலும் சினிமா பார்ப்பதும், ஹோட்டலில் சாப்பிடுவதும் மட்டும் தான் வேலை. பள்ளிக் காலங்களில் பாண்டிக்கு செல்லும் போது எல்லாம் அடிக்கடி வீட்டில் சொல்லிவிட்டு சினிமாவுக்கு செல்வது உண்டு. 11ம் வகுப்பில் இருந்து தான் கட் அடித்து சினிமா பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. முதல் படம் - இந்தியன். அதன் பிறகு எந்த படமாக இருந்தாலும் விடுவது இல்லை. அதிலும் குறிப்பாக தெலுங்கு டப்பிங் (சாய்க்குமார், ராஜ்சேகர், வெங்கடேஷ், சிரஞ்சீவி எங்கள் ஆஸ்தான நாயகர்கள்) மற்றும் ஆங்கில டப்பிங் படங்கள் தான் (ஜெட் லீ). அதுவும் போக வீட்டிற்கு அருகில் வீடியோ கடை இருந்ததால் அனைத்து படங்களையும் ஒசியில் கண்டு ரசித்தது உண்டு.

கல்லூரி சென்ற பிறகு திரையரங்கில் பதிவேடு வைக்கும் அளவுக்கு நம்ம சினிமா மோகம் இருந்தது. சினிமா பார்ப்பதை பெருமையாக நினைக்காமல் கடமையாக நினைத்த காலம் அது. ஊர் ஊராக சென்ற சினிமா பார்த்த பருவம். படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் அதை பெருந்தன்மையாக தாங்கிய பருவமும் கூட.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ராமன் தேடிய சீதை & ஏகன். முதல் படம் ஆரம்பத்தில் சேரனின் நடிப்பை கண்டு வாங்கடா போயிடலாம் என்றேன், பசங்க வரல. பிறகு மருத்துவமனை காட்சியை கண்டு பசங்க கூப்பிட நான் போகலையே (பழிக்கு பழி). ஏகன் பற்றி என்னத்த சொல்ல, ராஜு சுந்தரம் தன் நடனத்தை தொடர்வது நல்லது. அஜித் முடிந்த அளவு ஆடி இருக்கார்ல?

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தமிழ் - தில்லுமுல்லு & கோவில், ஆங்கிலம் - He Got Game - சூடானில் தங்கி இருக்கும் அறையில். தில்லுமுல்லு எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அப்படி இருந்த ரஜினியை இப்படி ஆக்கிடானுங்களே என்று வாசு மேல நல்லாவே கோவம் வருது. கோவில் - சிம்பு இந்த படத்தில் நடித்த மாதிரியே வாய் அடக்கமா நடித்தால் எவ்வளவு நல்லா இருக்கும். He Got Game - Denzel Washington & Ray Allen நடிச்ச படம். நல்ல படம். நேரம் இருந்தால், கூடைப்பந்து பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நாம தான் சினிமாவை விமர்சனம் என்ற பெயரில் தாக்கிக்கிட்டு இருக்கோம். அது எங்க நம்மள தாக்குவது. நினைவில் இருக்கும் சில படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நின்றுக் கொண்டே பார்த்த ஒரே படமான மன்னன், டிக்கெட் கிடைக்காமல் காத்து இருந்து அடுத்த காட்சி பார்த்த படையப்பா(காரைக்காலில்),கல்லூரியே திரண்டு சென்று பார்த்த காதலர் தினம், எத்தனை தடவை பார்த்தோம் என்று கணக்கு இல்லாத படையப்பா(நாகையில்), ஊர் ஊராக சென்று பார்த்த அலைபாயுதே, ஃபைக்ல 4 நபர்கள் சென்று பார்த்த சாமி(திருவாரூர்), கார் எடுத்து சென்று பார்த்த பத்ரி(மாயவரம்) அடித்து பிடித்து டிக்கெட் எடுத்த பார்த்த காதல் தேசம்(பாண்டி) 2 நாளில் நாகையில் இருந்து எடுத்த விட்டார்கள் என்று திருச்சிக்கு சென்று பார்த்த கன்னத்தில் முத்தமிட்டால், சும்மா போய் பார்ப்போம் என்று சென்று மிரண்ட சேது, தேர்வை அவசர அவசரமான முடித்து விட்டு சென்ற ஆய்த எழுத்து, முதல் தடவை பார்த்தப்ப ஏன் இந்த படம் நமக்கு பிடிக்கல என எண்ண வைத்த அன்பே சிவம், திரை அரங்கில் தான் காண வேண்டும் எனக் காத்து இருந்து கண்ட சிவாஜி, இது போல இன்னும் ஏகப்பட்ட மறக்க முடியாத படங்கள் இருக்கு.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

கழுதை நம்மள என்னத்த தாக்க போகுது. சினிமா வந்தா பாத்தோமா அதை பத்தி நண்பர்களுடன் பேசினோமா அடுத்த வேலைய பாக்க போனாமனு இருக்குற ஆளு நான். அதுனால பெருசா எதுவும் நம்மள தாக்கல. இருந்தாலும் ஆளு ஆளுக்கு பஞ்ச் டயலாக் மூலமா சக நடிகர்களை வம்புக்கு இழுப்பது, இமேஜ் என்ற வட்டத்தில் அடைப்பட்டுக் கொள்வது, எல்லாத்துக்கும் ரஜினியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்வது, எதாச்சும் பேசனும் என்பதுக்காக அதிகப்படியா பேசுவது(தமிழன் உருப்புடுவானா....), சினிமா வை வைத்து அரசியல் பண்ணுவது,அந்த பெயர வைக்காத இந்த பெயர வைக்காதனு... இது எல்லாம் எப்படா நிறுத்துவீங்க என்று இருக்கு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

கமல், மணித்ரத்னம், ஷங்கர், P.C ஸ்ரீராம் படங்களில் இருக்கும் தொழில்நுட்பங்களை தெரிந்துக் கொண்டு படம் பார்க்கும் ஆவல் உண்டு. என்னை கவர்ந்தது என்றால் கறுப்பு ரோஜா என்ற படத்தில் தான் முதல் முதலாக DTS(இந்தியாவில்) அறிமுகப்படுத்த பட்டது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அது ஒரு வித்தியாசமான அனுபவமாகப்பட்டது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லையா பின்ன. சினிமா இல்லாத தமிழ் இதழ்கள் ரொம்பவே கம்மி ஆச்சே.

7.தமிழ்ச்சினிமா இசை?

என் தனிமை நேரத்து தோழன் தமிழ்ச்சினிமா இசை. அதிலும் என்றும் ராஜா தான். எல்லா இசையும் கேட்பது உண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பெரும்பாலும் ஆங்கில படங்கள், அரிதாக ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள். கவர்ந்த படங்கள் என்று சொன்னால் Brave Heart, Forest Gump, Pirates of Carribean, Phone Bhooth, The Rock, The Last king of Scotland, Blood Diamond......

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை. நண்பர்கள் சிலர் சினிமா துறையில் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களிடம் கதை கேட்பதோடு சரி. தொடர்ந்து தமிழ் சினிமா பாத்துக்கிட்டு வரேன், அது தொடர்ந்தாலே போதும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நல்லா தான் இருக்கும். பாலா, அமீர்,வெங்கட் பிரபு, லிங்குசாமி, வெற்றிமாறன் போன்றோர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். அது போக ஹீரோ வழிப்பாட்டு பாடல், புரட்சி தளபதி, சின்ன இளைய தளபதி போன்ற அடைமொழி, கவர்ச்சி வேறு ஆபாசம் வேறுனு ஜல்லி அடிச்சுட்டு மார்புக் கோட்டையும், தொப்புளையும் Closeup வைப்பது போன்றவற்றை தவிர்க்கலாம் கூடவே தாலி செண்டிமெண்ட்டும் வேண்டாம் தாலியை தூக்கி ஏறியுற K.B. சிந்தனைகளும் வேண்டாமே.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சந்தோஷம். விட்டு போன மற்றும் பழைய நல்ல படங்களை பார்க்கலாம். அதை தான் இப்ப செய்துக்கிட்டு இருக்கேன் என்பது வேற விசயம். ஊடகங்களால் எனக்கு எந்த பாதிப்பது இருக்காது. ஆனால் தமிழ் சினிமா இல்லை என்றால் ஊடகங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். தமிழ் சினிமாவை வைத்து அரசியல் செய்துக் கொண்டு இருக்கும் தலைவர்கள் வேறு துறையை தேட வேண்டியது இருக்கும். வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்தே பிழைப்பை ஒட்டும் நபர்கள் பாதிக்கப்படுவார்கள். சினிமாவே இல்லாட்டினா சினிமா விருது வழங்கும் விழாவும் இருக்காது, அய்யோ நம் தமிழக அமைச்சரவை ரொம்பவே பாதிக்கப்படுமே.

12. தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு புடலைங்காவும் ஆகாது. என்ன தமிழ் தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் அவனால் சுகந்திர, குடியரசு, தீபாவளி, ரம்ஜான், பொங்கல் தினங்களை போற்ற முடியாது. அது ஒன்னு தான் வருத்தம்.

கலைத்துறையில் இருந்து இத்தனை முதல்வர்களை உருவாக்கிய நாம் சினிமா இல்லாமலா, நடக்குற கதையா எதாச்சும் இருந்தா சொல்லுங்கப்பா.

ஆட்டத்தை இத்தோடு முடிச்சுப்போம்.

23 comments:

G3 said...

Modhal boni :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜி 3 .. மீத பர்ஸ்ட் மாதிரி இது உங்க பாணியா? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா விமர்சனம் போட்டுத்தாக்குவதில் தான் ப்ளாக்கர்ஸ் பெரியாளுங்களாச்சே.. அதுவும் நல்லா இல்லன்னு சொல்ல பாய்ந்து பதிவு போடுவீங்களே.. பாத்துராதீங்க பாத்துராதீங்கன்னு.. ஆனாலும் எல்லாரும் எதையும் தாங்கும் இதயமாக ..அப்படி என்னதான் நல்லா இல்லன்னு தொடர்ந்து அதையும் பாத்துட்டு வரோம்..:)

கப்பி | Kappi said...

இந்த பதிவுல நான் பழைய புலியை பாக்கறேன் :)))

நாகை சிவா said...

//G3 said...
Modhal boni :)//

பல நாள் கழித்து வந்தாலும் முதல் போணி போட்டு உங்க கடமையை செய்தீங்க பாருங்க.. அங்க தான் நீங்க நிக்குறீங்க... நன்றி :))

நாகை சிவா said...

@ முத்துலெட்சுமி

//ஜி 3 .. மீத பர்ஸ்ட் மாதிரி இது உங்க பாணியா? :)//

பாணியோ, கடமையோ... நமக்கு வேலையான சரி.. என்ன சொல்லுறீங்க ;)

//ஆனாலும் எல்லாரும் எதையும் தாங்கும் இதயமாக ..அப்படி என்னதான் நல்லா இல்லன்னு தொடர்ந்து அதையும் பாத்துட்டு வரோம்..:)//

கடமையை மீற முடியுமா சொல்லுங்க.. :)

நாகை சிவா said...

//கப்பி | Kappi said...
இந்த பதிவுல நான் பழைய புலியை பாக்கறேன் :))) //

இதுல ஏதும் உள்குத்து இல்லல கப்பி... ஏனினும் உன் வருகைக்கு நன்றி நண்பா.. நன்றி..

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போதைக்கு ஆஜர் போட்டுக்குறேன்..

சதங்கா (Sathanga) said...

//தில்லுமுல்லு எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அப்படி இருந்த ரஜினியை இப்படி ஆக்கிடானுங்களே என்று வாசு மேல //

me too. வாசு மட்டும் தானா ?????

தில்லுமுல்லுவில் தேங்காய் சீனிவாசனும் கலக்கியிருப்பார்.

காண்டீபன் said...

இந்த தொடர் பதிவுலகத்தில் நல்லா தான் வலம் வருது :)

Divya said...

Welcome back Siva!!!

Full form la than re-entry koduthirukireenga........thodarnthu kalakkunga:))

கைப்புள்ள said...

//இந்த பதிவுல நான் பழைய புலியை பாக்கறேன் :)))//

இதை நான் மூர்ர்க்கத்தனமாக வழிமொழிகிறேன்.
:)

நாகை சிவா said...

//உருப்புடாதது_அணிமா said...
இப்போதைக்கு ஆஜர் போட்டுக்குறேன்..//

நண்பா, உன் வருகையை பதிவு செய்துக் கொள்கிறேன்.. பெரிய பதிவரா உருவேடுத்து விட்டாய் என்பது உன் பதிவை கண்டாலே தெரிகிறது. வாழ்த்துக்கள் :)

நாகை சிவா said...

@ சதங்கா

//me too. வாசு மட்டும் தானா ?????

தில்லுமுல்லுவில் தேங்காய் சீனிவாசனும் கலக்கியிருப்பார்.//

வாசு வுக்கு இதில் மிக அதிகமான பங்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

தேங்காய் சீனிவாசன் தான் அந்த படத்தின் மேன் ஆப் தி மூவி :)

http://urupudaathathu.blogspot.com/ said...

//நாகை சிவா said..
நண்பா, உன் வருகையை பதிவு செய்துக் கொள்கிறேன்.. பெரிய பதிவரா உருவேடுத்து விட்டாய் என்பது உன் பதிவை கண்டாலே தெரிகிறது. வாழ்த்துக்கள் :)///

என்ன நண்பா?? எதுக்கு இந்த கொலைவெறி??
இது உனக்கே நியாயமா படுதா??
நான் எல்லாம் ஏதோ பஞ்சத்துக்கு எழுதுறவன்..
நீ உங்க கேங் எல்லாம் எவ்ளோ பெரிய ஆளுங்க..

நாகை சிவா said...

//காண்டீபன் said...
இந்த தொடர் பதிவுலகத்தில் நல்லா தான் வலம் வருது :)//

சினிமா பற்றின தொடர் ஆச்சே... தமிழன் விடுவானா என்ன ;)

நாகை சிவா said...

//Divya said...
Welcome back Siva!!!

Full form la than re-entry koduthirukireenga........thodarnthu kalakkunga:))//

உங்க வரவேற்புக்கு நன்றி...

புல் ஃபார்ம் ஆ நான் எல்லாம் எப்பவுமே ஆவுட் ஆப் பார்ம் தான்...

கலங்காமல் இருந்தாலே போதும் அம்மணி :)

நாகை சிவா said...

///கைப்புள்ள said...
//இந்த பதிவுல நான் பழைய புலியை பாக்கறேன் :)))//

இதை நான் மூர்ர்க்கத்தனமாக வழிமொழிகிறேன்.
:)//

தல வன்முறை கூடாது, கொலை வெறியும் கூடாது... நாம் எல்லாம் ஒரே இனம் அதையும் மறக்க கூடாது.

நாகை சிவா said...

//என்ன நண்பா?? எதுக்கு இந்த கொலைவெறி??//

உண்மைய சொன்ன கொலைவெறினு சொல்லுறாங்க... என்ன கொடுமை இது?

//இது உனக்கே நியாயமா படுதா??//

நியாயமா பட்டதால் தான் சொன்னேன்

//நான் எல்லாம் ஏதோ பஞ்சத்துக்கு எழுதுறவன்..//

ஆமாம் நீ பஞ்சத்துக்கு எழுதுற நான் பரம்பரையா எழுதுறேன்... ஏண்டா? ஏன்?

//நீ உங்க கேங் எல்லாம் எவ்ளோ பெரிய ஆளுங்க..//

என் கேங் யாரு முதல் யோசிக்கனும் அதுக்கு அப்புறமா அவங்க எல்லாம் பெரிய ஆளானு யோசிக்கனும்.. வெயிட் மேன்...

http://urupudaathathu.blogspot.com/ said...

நாகை சிவா said...

////உண்மைய சொன்ன கொலைவெறினு சொல்லுறாங்க... என்ன கொடுமை இது?///

அதுக்கு நீ உண்மைய தான சொல்லி இருக்கணும்.. இப்படி கூசாம பேசுறியே , இது நல்லதா படுது உனக்கு ??

இருந்தாலும் நண்பா நீ ரொம்ப நல்லவன்டா

http://urupudaathathu.blogspot.com/ said...

///நியாயமா பட்டதால் தான் சொன்னேன்////

மத்தவங்களுக்கு அநியாயமா படுத்தே, அதுக்கு என்ன சொல்ல வர??

http://urupudaathathu.blogspot.com/ said...

//////ஆமாம் நீ பஞ்சத்துக்கு எழுதுற நான் பரம்பரையா எழுதுறேன்... ஏண்டா? ஏன்?////////

நல்ல தான் பேசுற... யாருக்கு தெரியும் ?? ஏண்டாவா ? அத என்கிட்டே கேட்டா நான் எப்படிடா சொல்வேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

////// என் கேங் யாரு முதல் யோசிக்கனும் அதுக்கு அப்புறமா அவங்க எல்லாம் பெரிய ஆளானு யோசிக்கனும்.. வெயிட் மேன்...///////

நீயே சொல்லிட்ட.. அப்புறம் என்ன.. வெயிட்டிங் ...