Monday, November 26, 2007

இந்தியா வெற்றி + கருத்து கந்தசாமி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனில் கும்பளே கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலே இந்த வெற்றி வந்தது அவருக்கு மிகவும் உற்சாகம் தரும் விசயமாக இருக்கும். கும்பளே கேப்டனாக தகுதியானவர் தானா என்ற கேள்விகள் சில காலத்துக்கு எழாது. குறைந்தபட்சம் இந்த மாதம் முடியும் வரை ஆச்சும்.

நமீதா போல் நச்னு இருக்கும் 20/20 போட்டிகள் வந்த பிறகும் இன்னுமா டெஸ்ட் போட்டி பாக்குறீங்க என்றால் நச்சு நமீதா அழகு என்பதை போலவே சினேகாவின் சிம்பிள் அழகும் அம்சமான அழகு தான். 20/20 - ஹைக்கூ கவிதை, ஒரு நாள் போட்டி - புது கவிதை, டெஸ்ட் போட்டி - மரபு கவிதை. வீசப்படுகின்ற ஒவ்வொரு பந்துகளும் பவுண்டரிக்கோ அல்லது விக்கெட்டாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல் பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன் களும் தங்கள் முழுத் திறமையையும் காட்டும் டெஸ்ட் போட்டிகள் பல சமயங்களில் அழகான மரபு கவிதைகள் தான்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான போட்டியில் இருக்கும் சூடு இந்த போட்டியில் ரொம்பவே கம்மி தான். இருந்த போதிலும் இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் கூடவே பல தவறுகளையும்.

இந்திய அணி :

- முதல் இன்னிங்ஸ் ல் பாகிஸ்தான் 8 விக்கெட் இழந்த போது தாக்குதல் ஆட்டத்தை தொடுக்காமல் விட்டது.

- முதல் இன்னிங்ஸ் ல் தெண்டுல்கர் ரன் அவுட். பந்தை பாக்காமலே ஒடினா

- டெயில் எண்ட் பேட்ஸ்மேன் ஆளுக்கு இரு ஒவர்கள் கூட பேட் செய்ய மாட்டேன் என அடம் பிடிப்பது

- முனாப் படேல் பவுலிங்

+ சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பாகிஸ்தானை தடுமாற வைத்தது

+ கார்த்திக்கை தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டம்

+ துல்லியமான பவுலிங், சரியான நேரத்தில் பவுலிங் மாற்றம்.

+ போனஸாக அமைந்த கங்குலியின் பவுலிங்

+ பீல்டிங் + அனுபவ வீரர்கள்

பாகிஸ்தான் அணி :

- கேப்டன் மாலிக். கேட்ச் தவற விட்டதுக்கு, பீல்டிங் மிஸ் க்கு எல்லாம் கத்தினா வேலைக்கு ஆவாது. கிரவுண்ட் ல கேப்டனாக நடந்துக் கொள்வது எப்படி என்று பாடம் பயில வேண்டும்.

- இந்திய அணியை விட நல்ல பவுலர்கள் அமைந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாது.

- 5 பந்துகள் நல்லா போட்டு 6 வது பந்தை காலில் போடுவது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் காலில் போட்டா துவம்சம் பண்ணுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியே போட்டாலும் அதுக்கு தகுந்த மாதிரி பீல்டிங் நிப்பாட்டிட்டு போடனும்.

- இரு இன்னிங்ஸ்லிலும் மிசாப் உல் ஹக் யின் எந்த நேரத்தில் எதை செய்வது எனப் புரியாமல் எடுத்த முடிவுகள்

- அனுபவமின்மை

+ சோயிப் அக்தர், தன்வீர் பவுலிங்

+ சல்மான் பட், மிசாப் பேட்டிங்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்து வரும் இரு போட்டிகளும் சுவாரஸ்சியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆக மொத்தத்தில் மூத்த ஆட்டக்காரர்களில் தயவில் தான் இந்த போட்டியை இந்திய அணி வெற்றிக் கொண்டு உள்ளது. அதனால் அவர்கள் மூலமாக எழும் சலசலப்பு சில காலமாவது அடங்கும். ஒரு ஆட்டத்தில் சரியாக ஆடவில்லை என்றால் ஆட்டத்தை குறித்து பேசாமல் வயதை குறித்து பேசுவதை நாமும் நிறுத்த வேண்டும். கூடவே இந்த போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தால் கார்த்திக்கை நீக்கி யுவராஜ் துவக்க ஆட்டக்காராக அனுப்பது என்னை பொறுத்த வரை மடத்தனம். இந்த தொடரில் யுவராஜ் உள்ளே வருவதறகான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. லட்சுனமனை துவக்கத்தில் அனுப்பவதும் தேவையற்ற வேலையாக தான் முடியும். இரண்டாவது போட்டியிலும் கார்த்திக் விளையாடி குறைந்த ரண்களில் அவுட் ஆனால் அடுத்த டெஸ்ட்க்கு காம்பீரை எடுத்து அவரும் டக் அடிச்சா ஆஸ்தி தொடருக்கு புதுசாக ஒரு துவக்க வீரரை தேடுவார்கள் நம் தேர்வு குழுவினர். அதுக்கு பதிலாக இந்த தொடர் முழுவதும் கார்த்திக் கு ஒரு வாய்ப்பு கொடுப்பதும், ஆஸ்தி தொடருக்கும் காம்பீர் + கார்த்திக் (மாற்று கீப்பராக) எடுப்பது தான் சிறந்த முடிவாக இருக்கும். சேவாக் என்ன ஆவார் என்பது கேள்வி குறி தான். கூடவே யுவராஜ் மேலும் சில காலம் காத்துக் இருக்க வேண்டும். (வேறு வழி இப்போதைக்கு இல்லை) அடுத்த போட்டியில் முனாப் க்கு பதில் ஆர்.பி. சிங் க்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய தெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள். ஆட்டநாயகனாக கும்பளே தேர்ந்துதெடுக்கப்பட்டார்.

25 comments:

ஜே கே | J K said...

நான் ஃபுல்லா படிச்சுட்டேன் புலி...

வடுவூர் குமார் said...

watch.. so much time?

கோபிநாத் said...

:))

நாகை சிவா said...

@ வேதா!

என்ன உங்களுக்கு கிரிக்கெட்டு ஒத்துக்காது. இது என்ன புது கதையா இருக்கு.

இதுக்கு எங்க கஷ்டப்பட போறோம். காலகாலமாக பேசுவது தானே ;)

நன்றி

நாகை சிவா said...

@ ஜெ. கே.

ஏதும் உள்குத்து இருக்கோ?

இன்னிக்கு திங்கள் ஆச்சே பின்ன எப்படி ஃபுல். ஒன்னும் புரியலயேப்பு :)

நாகை சிவா said...

@ வடவூர் குமார்

Thanks Giving Day என்று ஒரு நாள் லீவு. கூடவே வீக் எண்ட் என இரண்டு நாள் ஆட்டம் பார்த்தேன். மூன்றாவது நாள் முதல் மற்றும் கடைசி செஷன் பார்த்தேன். நாலாவது நாள் அப்ப அப்ப போய் பார்த்தேன். இன்று பார்த்தேன்.

நேர வித்தியாசம் இருப்பதால் பார்க்க முடிந்தது.

நாகை சிவா said...

@ கோபி!

சகா ஏன் இந்த புன்சிரிப்பு???

Priya said...

I didn't watch it online, but check the scores in between.

நாகை சிவா said...

@ Priya

Online la match relay pannurangala... appadina link kudukalen...

nan TV la than parthen...

இலவசக்கொத்தனார் said...

//20/20 - ஹைக்கூ கவிதை, ஒரு நாள் போட்டி - புது கவிதை, டெஸ்ட் போட்டி - மரபு கவிதை. //

கிரிக்கெட்டை கவுஜயுடன் ஒப்பிட்ட புலிக்கு என் வன்மையான கண்டனங்கள்.

//ஒரு ஆட்டத்தில் சரியாக ஆடவில்லை என்றால் ஆட்டத்தை குறித்து பேசாமல் வயதை குறித்து பேசுவதை நாமும் நிறுத்த வேண்டும்.//

ஒரு ஆட்டத்தில் சரி, அதுவே ரெண்டு ஆட்டத்தில் நடந்தா பேசலாமா? - வயதைப் பத்தி பேசறவங்க இப்படித்தான் கேட்பாங்க. ஆனா உங்க உணர்வுக்கு ஒரு ஓ!!

//Thanks Giving Day என்று ஒரு நாள் லீவு. கூடவே வீக் எண்ட் என இரண்டு நாள் ஆட்டம் பார்த்தேன். மூன்றாவது நாள் முதல் மற்றும் கடைசி செஷன் பார்த்தேன். நாலாவது நாள் அப்ப அப்ப போய் பார்த்தேன். இன்று பார்த்தேன்.//

ஆன்லைனில் வருதா? லிங்க் அனுப்புங்க தல!

ILA (a) இளா said...

ஓஹோ அப்படியா மேட்டரு?

Anonymous said...

// நச்சு நமீதா அழகு என்பதை போலவே சினேகாவின் சிம்பிள் அழகும் அம்சமான அழகு தான

எப்படிய்யா இப்படில்லாம் :)

தினேஷ் கார்த்திக் பாவம் .. தமிழ்நாட்டிலிருந்த இதுவரை ஆடிய எல்லாவீரர்களின் துரதிர்ஷ்டம் அவரையும் படுத்துகிறது.

dubukudisciple said...

nalla alasal karuthu kandasamy avargale

Geetha Sambasivam said...

கிரிக்கெட் தானேன்னு மெதுவா வந்தேன், ஆனால் படிக்கலை, பரவாயில்லையா? சும்மா வருகைப் பதிவு மட்டும்!!!!!!

Unknown said...

நாகையாரே

நல்ல அலசல்.நமிதா,சினேகா உவமானம் சூப்பர்:-)

யுவராஜ் மாதிரி திறமையான ஆட்கள் பெஞ்சில் உட்கார்ந்திருப்பது சீனியர் வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.திராவிட் ஒரு நாள் அணியிலிருந்து தூக்கப்பட்டது யாருடைய இடமும் நிரந்தரமல்ல என்பதை காட்டியுள்ளது.அதனால் பயத்துடன் ஆடுகிறார்கள்.இந்த போட்டி மனப்பான்மை டீமில் இருந்தால் நமக்கு என்றும் வெற்றிதான்

http://urupudaathathu.blogspot.com/ said...

கண்ணா இன்னுமா க்ரிகெட் ஆராய்ச்சி பண்ணிக்குட்து இருக்க?
அதுவும் இந்தியா மாட்ச் பற்றி...
உனக்கு வேலை வெட்டி இல்லைனு எனக்கு தெரிஉம் , அதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கின்றாய்..
ஆனால் நமிதா கமெண்ட் ஸூபர் ஜொள்ளு மச்சி..
அப்படியே நமிதா அக்காவ பற்றி ஒரு பின்னூடடம் போடு டா...

நாகை சிவா said...

//ILA(a)இளா said...
ஓஹோ அப்படியா மேட்டரு?//

என்ன விவ்.. புதுசா கேட்குற மாதிரி கேட்குறீங்க... ? ஏதும் உள்குத்து இல்லையே.... நம்ப முடிய மாட்டேங்குதுடா சாமி!

நாகை சிவா said...

//Vicky said...
// நச்சு நமீதா அழகு என்பதை போலவே சினேகாவின் சிம்பிள் அழகும் அம்சமான அழகு தான

எப்படிய்யா இப்படில்லாம் :)//

எல்லாம் உங்கள பார்த்து தானா வருவது தான் குருவே ! ;)

//தினேஷ் கார்த்திக் பாவம் .. தமிழ்நாட்டிலிருந்த இதுவரை ஆடிய எல்லாவீரர்களின் துரதிர்ஷ்டம் அவரையும் படுத்துகிறது.//

உண்மை தான். டெஸ்ட் மாட்ச்ல இந்த வருசத்தில் நல்ல அவரேஜ் வச்சு இருந்தாலும் பின்னாடி ஆட்கள் ரெடியா நின்னுக்கிட்டு இம்சை பண்ணுறாங்க. இன்னும் ஒரு மாட்ச் ல கோட்டை விட்டா அம்புட்டு தான், காலி பண்ணிடுவாங்க.

நாகை சிவா said...

//dubukudisciple said...
nalla alasal karuthu kandasamy avargale//

நன்றி டுடி அவர்களே! நாங்களும் கருத்து சொல்லிட்டோம்ல ;)

நாகை சிவா said...

//கீதா சாம்பசிவம் said...
கிரிக்கெட் தானேன்னு மெதுவா வந்தேன், ஆனால் படிக்கலை, பரவாயில்லையா? சும்மா வருகைப் பதிவு மட்டும்!!!!!!//

இப்ப இப்படி வேற ஆரம்பிச்சுட்டீங்களா? கிரிக்கெட் தானே அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் தானே என்று அலட்சியப்படுத்தாதீங்க... ஏற்கனவே டெஸ்ட் என்று ஒரு போஸ்ட் போட்டது ஞாபகத்தில் இருக்கும் உங்களுக்கு ;)

நாகை சிவா said...

//நாகையாரே
நல்ல அலசல்.நமிதா,சினேகா உவமானம் சூப்பர்:-)//

ஹிஹி.. நன்றி :)

//யுவராஜ் மாதிரி திறமையான ஆட்கள் பெஞ்சில் உட்கார்ந்திருப்பது சீனியர் வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அதனால் பயத்துடன் ஆடுகிறார்கள்.//

அது தான் மேட்டரே... ஏகப்பட்ட நெருக்கடியில் இருக்காங்க. இப்படிப்பட்ட நெருக்கடியில் சேவாக் எல்லாம் இறங்கினா வேலைக்கே ஆவாது.

//இந்த போட்டி மனப்பான்மை டீமில் இருந்தால் நமக்கு என்றும் வெற்றிதான்//

உண்மை தான். ஆனால் போதிய வாய்ப்புக்கள் தரணும் வீரர்களுக்கு. குறைந்தப்பட்சம் ஒரு தொடர். ஒரே போட்டியை வைத்து கணக்கு பண்ணக் கூடாது.

நாகை சிவா said...

//கண்ணா இன்னுமா க்ரிகெட் ஆராய்ச்சி பண்ணிக்குட்து இருக்க?
அதுவும் இந்தியா மாட்ச் பற்றி...
உனக்கு வேலை வெட்டி இல்லைனு எனக்கு தெரிஉம் , அதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கின்றாய்.. //

நம் இனப்பெருமையை காப்பாத்த வேண்டாம் யோக்?

//ஆனால் நமிதா கமெண்ட் ஸூபர் ஜொள்ளு மச்சி..
அப்படியே நமிதா அக்காவ பற்றி ஒரு பின்னூடடம் போடு டா...//

ஏண்டா டேய்! மச்சி, அக்கா இரண்டையும் ஒரு பின்னூட்டத்தில் போட்டு எனக்கு ஆப்பு வைக்க பாக்குறியே இது உனக்கே நியாயமா இருக்கா?

Dreamzz said...

//ஒவ்வொரு பந்துகளும் பவுண்டரிக்கோ அல்லது விக்கெட்டாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல் பந்து வீச்சாளர்களும், பேட்ஸ்மேன் களும் தங்கள் முழுத் திறமையையும் காட்டும் டெஸ்ட் போட்டிகள் பல சமயங்களில் அழகான மரபு கவிதைகள் தான்//

supera soneenga!

Dreamzz said...

nalla analysis! match results mattum thaan padichen.. cricket paakum palakkam konjam konjama kuranjiduchu! was nice reading an analysis! reminds me of my college day discussions

நாகை சிவா said...

@ ட்ரீம்ஸ்!

நானும் சில காலம் அப்படி தான் இருந்தேன். இப்போ மறுபடியும் பார்ம்க்கு வந்தாச்சு... ஆடிய காலும் பேசிய வாயும் சும்மாவா இருக்கும். அது போல.. :)