Friday, November 30, 2007

யுவதிகளின் எதிர்பார்ப்பு - இளைஞர்கள் கவனிக்கநோ கமெண்ட்ஸ்!சில சந்தேகங்கள் மட்டுமே


  • மீண்டும் மீசையை பெரிசு ஆக்கிடவா?


  • குறுந்தாடி வைக்கவா?


  • காதில் கடுக்கன் போடவா?


  • கொஞ்சம் தடி ஆகவா?


  • இன்னும் உசரமாக வளரவா?


  • நீளமா முடி வளர்கவா?


  • ஐ.ஐ.டி, என்.ஐ.டி யில் சேர்ந்து படிக்கவா?


  • எம்.பி.ஏ. சேரவா?


  • சாப்ட்வேர் ல சேரவா?

இல்லை மேற்சொன்ன எல்லாத்தையும் செய்யவா? முடியுமா? நடக்குமா?

93 comments:

நாகை சிவா said...

திருமண ஆகாத சிங்கங்கள் எல்லாம் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமோ அப்படி மாற்றிக் கொள்ளவும் :)

வேதா said...

நோ கமெண்ட்ஸ் அப்டின்னு போட்டுருக்கீங்களே இப்ப கமெண்ட் போடவா வேண்டாமா :)
ஹிஹி எல்லாம் ஒரு தன்னடக்கம்தேங் :D அப்புறம் குரு சொல்ல மீறிட்டேன் சொல்லக்கூடாதில்ல ;D

பினாத்தல் சுரேஷ் said...

யெப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி!

நாகை சிவா said...

//நோ கமெண்ட்ஸ் அப்டின்னு போட்டுருக்கீங்களே இப்ப கமெண்ட் போடவா வேண்டாமா :)//

அது எந்த வீடியோவுக்கு... அதுக்கு ஏதும் கமெண்ட் தான் சொல்ல முடியுமா?

உங்க தன்னடக்கத்தை பார்த்து எனக்கு புல் அரிக்குது... எப்படி இப்படி எல்லாம்? :)

நாகை சிவா said...

//பினாத்தல் சுரேஷ் said...
யெப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி!//

எங்களுக்கு எல்லாம் ஆகுமா என்பது தான் இப்ப கேள்வியே... இதில் தாண்டினா தான் உங்க பாடத்துக்கே வர முடியும். அதுனால ஏதாச்சும் செய்ங்க....

Voice on Wings said...

நாங்கல்லாம் ஆசீர்வதிக்கப்பட்ட அய்யங்கார்ன்னு சொன்ன பொண்ணுதானே இது?

கோபிநாத் said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....

யோவ் கோபிநாத் எப்படிய்யா எல்லாத்தையும் தாங்கிட்டு சுத்தி சுத்தி வர.......;)

priya said...

To do or not to do.. Hmm education always comes first.

வேதா said...

ஏங்க அந்த பொண்ணு என்ன ஒட்டுமொத்த பெண்குலத்தின் பிரதிநிதியா என்ன? :D

சரி இதே மாதிரி ஆண்களும் தனக்கு வர போற மனைவி எப்டி இருக்கணும்னு சில எதிர்ப்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும் :)

நாகை சிவா said...

//Voice on Wings said...
நாங்கல்லாம் ஆசீர்வதிக்கப்பட்ட அய்யங்கார்ன்னு சொன்ன பொண்ணுதானே இது?//

அந்த பகுதி நான் இன்னும் காணவில்லை. இந்த பகுதியின் இறுதியில் சில முன்னோட்டங்களில் அந்த பெண் கூறியது, என்னுடை தனிப்பட்ட கருத்து என்று சொல்லி தான் சொன்னது. அதே சாதியில் மணம் முடிக்க என்ற வாதத்துக்கு அது.

ஒரே சாதியில் மணம் முடிக்க விரும்புகிறேன் என்பதை இது போன்று வார்த்தைகளை உபயோகப்படுத்தி கூறுவதை தவிரித்து இருக்கலாம்.

வேதா said...

//மீண்டும் மீசையை பெரிசு ஆக்கிடவா?

குறுந்தாடி வைக்கவா?

காதில் கடுக்கன் போடவா?

கொஞ்சம் தடி ஆகவா?

இன்னும் உசரமாக வளரவா?

நீளமா முடி வளர்கவா?

ஐ.ஐ.டி, என்.ஐ.டி யில் சேர்ந்து படிக்கவா?

எம்.பி.ஏ. சேரவா?

சாப்ட்வேர் ல சேரவா?
இல்லை மேற்சொன்ன எல்லாத்தையும் செய்யவா? முடியுமா? நடக்குமா?//

என்ன இப்டியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க? உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுதா? சொல்லவேயில்ல ;D

நாகை சிவா said...

//ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....//

ராசா! ஏதும் சொல்ல வேணாம்... எதாச்சும் செய்.. அப்ப பொண்ணு கிடைக்கும். மீசை, தாடி ஒகே வா உனக்கு

//யோவ் கோபிநாத் எப்படிய்யா எல்லாத்தையும் தாங்கிட்டு சுத்தி சுத்தி வர.......;)//

உன் பெயரை வச்சு இருப்பதால் எதையும் தாங்கும் இதயமோ?

ambi said...

நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்.

யப்பா! எஸ்கேப்புடா சாமி, நல்ல வேளை போன வருஷமே பிக்கப் பண்ணிட்டேன். :))

நாகை சிவா said...

//priya said...
To do or not to do.. Hmm education always comes first.//

ஹ்ம்ம் ப்ரியா. உங்கள் கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு கிடையாது. இருந்தாலும் படிப்பு முக்கியம் என்பதில் சந்தேகம் கிடையாது.

வாழ்க்கையில் வெற்றி பெற சுப்பரா படிச்சு இருக்கனும் என்பது இல்லாம் இல்லை.

நாகை சிவா said...

//ஏங்க அந்த பொண்ணு என்ன ஒட்டுமொத்த பெண்குலத்தின் பிரதிநிதியா என்ன? :D//

அந்த ஒரு பொண்ணு மட்டுமா, 5 பொண்ணுங்க... பிரதிநிதியாக நினைச்சு தானே அந்த நிகழ்ச்சி.

//சரி இதே மாதிரி ஆண்களும் தனக்கு வர போற மனைவி எப்டி இருக்கணும்னு சில எதிர்ப்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும் :)//

ஒருத்தன் மட்டும் பூமிகா மாதிரினு சொன்னான். மத்தவன் எல்லாம் சிம்பிளா இருக்கனும் என்று தான் சொன்னாங்க...

நாகை சிவா said...

//என்ன இப்டியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க? உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுதா? சொல்லவேயில்ல ;D//

வேதா! இந்த நிகழ்ச்சிய பாத்த பிறகு நமக்கு அப்படிபட்ட ஒரு வாய்ப்பு கிடைப்பதுக்குகான சான்ஸ் ரொம்ப கம்மியா இருக்குற மாதிரி தான் படுது. இருந்தாலும் அதுக்காக நாங்க வருத்தப்பட போவது இல்லை...

நாகை சிவா said...

//ambi said...
நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்.

யப்பா! எஸ்கேப்புடா சாமி, நல்ல வேளை போன வருஷமே பிக்கப் பண்ணிட்டேன். :))//

நல்ல வேலை. அம்புட்டு ஸ்மார்டா, இந்த பொண்ணுங்க கேட்குறதுல 80% வச்சு இருக்கும் நீங்களே எஸ்கேப்புடானு சொல்லும் போது, எங்களை போன்ற அபலை பையன்களை பற்றி நினைச்சு பாருங்க.

வேதா said...

/இந்த நிகழ்ச்சிய பாத்த பிறகு நமக்கு அப்படிபட்ட ஒரு வாய்ப்பு கிடைப்பதுக்குகான சான்ஸ் ரொம்ப கம்மியா இருக்குற மாதிரி தான் படுது. /
அப்டியெல்லாம் மனம் தளர்ந்து போயிடக்கூடாது அதான் நம்ம தலைவி உங்களுக்காக தீவிரமா பொண்ணு பார்க்கறாங்களே :D

இந்த பெண்கள் பேசியதில் வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது ஆண்களும் செய்வது தான். மத்தபடி சொன்னதெல்லாம் பெரும்பான்மை கருத்தா ஏத்துக்கமுடியாது. எவ்வளவோ பேசினாலும் பெண்கள் மனசுக்கு பிடிச்சிருக்கு என்று நினைத்தால் இதையெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் என்பது தான் உண்மை :)

நாகை சிவா said...

//அப்டியெல்லாம் மனம் தளர்ந்து போயிடக்கூடாது அதான் நம்ம தலைவி உங்களுக்காக தீவிரமா பொண்ணு பார்க்கறாங்களே :D//

100 கிலோ கல்லை உடம்பில் கட்டி கடலில் தள்ளுற அளவுக்கு ஏன் இந்த கொல வெறி!

//இந்த பெண்கள் பேசியதில் வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது ஆண்களும் செய்வது தான்.//

நான் இல்லை என்று சொல்லை. உண்மை தான்.

//மத்தபடி சொன்னதெல்லாம் பெரும்பான்மை கருத்தா ஏத்துக்கமுடியாது.//

உங்கள் விருப்பம். :)

// எவ்வளவோ பேசினாலும் பெண்கள் மனசுக்கு பிடிச்சிருக்கு என்று நினைத்தால் இதையெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் என்பது தான் உண்மை :)//

எதிர்ப்பார்க்க மாட்டார்கள் என்று சொல்லாதீங்க. அனுசரித்து கொள்ளவார்கள் என்று சொல்லுங்க. யாருக்குமே அவங்க விரும்பிய மாதிரி 100 % பர்பெக்ட் அமைய மாட்டாங்க. அமையும் முடியாது

கீதா சாம்பசிவம் said...

நல்லா இருக்கு!!!! இப்படியா அலையறது???? எல்லாம் ஒரு "கால்கட்டு" போட்டால் "கைப்புள்ள" மாதிரி அடங்குவீங்க!! :))))))))))

கீதா சாம்பசிவம் said...

அப்டியெல்லாம் மனம் தளர்ந்து போயிடக்கூடாது அதான் நம்ம தலைவி உங்களுக்காக தீவிரமா பொண்ணு பார்க்கறாங்களே :D

@வேதா, ரிப்பீஈஈஈட்ட்ட்டேஏஏஏஏஏ!!!!!!

கீதா சாம்பசிவம் said...

இப்போ கொஞ்சம் சீரியஸா: நானும் அந்த நிகழ்ச்சியைத் தற்செயலாய்ப் பார்க்க நேரிட்டது. பெண்கள் எந்த அளவுக்குப் பொருளாதார ரீதியில் யோசிக்கின்றனர் என்பதையும் பார்த்தேன், இது தெளிவா? என்ற யோசனையும் வந்தது. சிவா சொல்வதைப் போல் பல பெண்களும் இப்படி யோசித்தால் சாதாரணமான ஆண்களுக்குத் திருமணம் ஆவதில் பிரச்னைதான். இப்போவே எங்க உறவு வட்டத்திலேயும், நண்பர்கள் வட்டத்திலேயும், சாதாரணப் படிப்புப் படிச்ச ஆண்களுக்குப் பெண்கள் கொடுக்க யோசிக்கிறாங்க பெண் வீட்டுக்காரங்க. அவங்க கேட்கிற கேள்விகளுக்குப் பையன் வீட்டுக்காரங்களால் பதிலும் சொல்ல முடியலை!!!! "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்" என்று சொல்வது உண்டு, என்றாலும் இது ஆரோக்கியமானதாய்த் தெரியவில்லை. ஒரு வேளை இளைஞர்களுக்கு நியாயமாய் இருக்கலாம். என்றாலும் பையன்களுக்கு 35 வயது ஆகியும் திருமணம் முடிக்க முடியாமல் தடுமாறும் பெற்றோரையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பெண்கள் நல்ல வேலையில் இருந்தால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

கோபிநாத் said...

\\வேதா said...
/இந்த நிகழ்ச்சிய பாத்த பிறகு நமக்கு அப்படிபட்ட ஒரு வாய்ப்பு கிடைப்பதுக்குகான சான்ஸ் ரொம்ப கம்மியா இருக்குற மாதிரி தான் படுது. /
அப்டியெல்லாம் மனம் தளர்ந்து போயிடக்கூடாது அதான் நம்ம தலைவி உங்களுக்காக தீவிரமா பொண்ணு பார்க்கறாங்களே :D\\

எங்க சூடானா!?? ;)))

மங்களூர் சிவா said...

//
மீண்டும் மீசையை பெரிசு ஆக்கிடவா?


குறுந்தாடி வைக்கவா?


காதில் கடுக்கன் போடவா?


கொஞ்சம் தடி ஆகவா?


இன்னும் உசரமாக வளரவா?


நீளமா முடி வளர்கவா?


ஐ.ஐ.டி, என்.ஐ.டி யில் சேர்ந்து படிக்கவா?


எம்.பி.ஏ. சேரவா?


சாப்ட்வேர் ல சேரவா?
//
ஸ்ஸப்பாஆஆஆஆஆ இப்பவே கண்ணை கட்டுதே.......

கோபிநாத் said...

\\நாகை சிவா said...
\\ யாருக்குமே அவங்க விரும்பிய மாதிரி 100 % பர்பெக்ட் அமைய மாட்டாங்க. அமையும் முடியாது\\

இந்த ஒன்னை நம்பிதான் எல்லோரும் இருக்கோம்! ;)

நளாயினி said...

இப்படி எல்லாம் பார்த்தால் சோறுமில்தான் ஆண்களை நிறுத்த வேணும். இது எல்லாம் வாழ்க்கை இல்லையே. மனசை யாருமே பார்க்க தவறிவிட்டார்கள். இத்தகைய திருமணங்களால் தான் இன்று விவாகரத்துக்கள் அதிகமாகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளோடு கணவன் கிடைகவில்லை என்றால் நிலமை.? வாழ்வில்; தோல்வியே. இத்தகைய எதிர்பார்ப்புகளொடு திருமணம் செய்தால் பின்னர் மனப்பொருத்தம் விட்டுக்கொடுக்கும் குணங்கள் இல்லாது போகிறபோது நிலமை??? அதை விட தாங்களாகவே தமக்கு மனதுக்கு பிடித்தவர்களை திருமணம்செய்வது மேலாச்சே.

இலவசக்கொத்தனார் said...

* மீண்டும் மீசையை பெரிசு ஆக்கிடவா?

நீயே ஒரு பெரிசு மாதிரி இருக்க, உனக்கு மீசை பெருசா இருந்தா என்ன, சிறுசா இருந்தா என்ன?


* குறுந்தாடி வைக்கவா?

குறுந்தாடி வைய்யு, வெறுந்தாடி வையு, எப்படி வெச்சாலும் சகிக்கப் போறது இல்லை.

* காதில் கடுக்கன் போடவா?

காதில் போடாம பின்ன கடுக்கனை என்ன பின் தலையிலா போடுவாங்க? வந்துட்டாங்கய்யா...

* கொஞ்சம் தடி ஆகவா?
இப்பவே உன்னைப் பார்த்தால் தடிமாடு மாதிரிதான் இருக்கு, இன்னும் எதுக்குடா தடி ஆகணும் தீவட்டித் தடியா....

* இன்னும் உசரமாக வளரவா?
டேய், வளர்ச்சி எல்லாம் 18 வயசோட ஓவர்டா. நீ ஹைஹீல்ஸ் எல்லாம் போட்டுக்கிட்டுதான் ஹைட் ஏத்த முடியும். ஆனா யோசிச்சுப் பாருடா. இதெல்லாம் ஒரு பொழப்பா?

* நீளமா முடி வளர்கவா?
ஆமாம் சைடில் மட்டும்தானே வளருது. நீளமாய் வளர்த்து ஒரு சைடில் இருந்து மத்த சைடுக்குப் போடு. சொட்டையாவது தெரியாமல் இருக்கும்.

* ஐ.ஐ.டி, என்.ஐ.டி யில் சேர்ந்து படிக்கவா?

சேர்ந்தா படிக்கவாடா போறீங்க. அங்க யாரையாவது பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டு என்னை ப்ரீயா விட்டா போதும். போங்கடா

* எம்.பி.ஏ. சேரவா?
உனக்கு இருக்கிற ஹைட்டுக்கு எம்பினாதான்...

* சாப்ட்வேர் ல சேரவா?
உன்னை எல்லாம் பார்த்தா சென்சார் சென்சார் சென்சார் சென்சார் சென்சார்.


இப்படி எல்லாம் விவகாரமா பதில் வரும். ஜாக்கிரதை.

Kamal said...

விடுங்க பாஸ்!!!! நமக்குன்னு ஒருத்தி இருக்க மாட்டாளா என்ன???
இருந்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!!! :(

சென்ஷி said...

//நாகை சிவா said...
திருமண ஆகாத சிங்கங்கள் எல்லாம் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமோ அப்படி மாற்றிக் கொள்ளவும் :)//

கல்யாணம் ஆகாத புலிகளுக்கெல்லாம் இது தேவையில்லையா :))

சென்ஷி said...

திருமணமாகா யுவதிகளின் சார்பாக முதல் ஆண் ஆதரவு குரலை (பித்தளை குரல்) பதிய வைத்துள்ள கொத்ஸுக்கு என் கடும் கண்டனங்கள் :)

சென்ஷி said...

//Kamal said...
விடுங்க பாஸ்!!!! நமக்குன்னு ஒருத்தி இருக்க மாட்டாளா என்ன???
இருந்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!!! :(//

இந்த பேர வச்சிக்கிட்டு பயமா? டவுட்டா இருக்கே!! :))

சென்ஷி said...

//Voice on Wings said...
நாங்கல்லாம் ஆசீர்வதிக்கப்பட்ட அய்யங்கார்ன்னு சொன்ன பொண்ணுதானே இது?//

:))))))

சென்ஷி said...

//நளாயினி said...
இப்படி எல்லாம் பார்த்தால் சோறுமில்தான் ஆண்களை நிறுத்த வேணும். இது எல்லாம் வாழ்க்கை இல்லையே. மனசை யாருமே பார்க்க தவறிவிட்டார்கள். இத்தகைய திருமணங்களால் தான் இன்று விவாகரத்துக்கள் அதிகமாகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளோடு கணவன் கிடைகவில்லை என்றால் நிலமை.? வாழ்வில்; தோல்வியே. இத்தகைய எதிர்பார்ப்புகளொடு திருமணம் செய்தால் பின்னர் மனப்பொருத்தம் விட்டுக்கொடுக்கும் குணங்கள் இல்லாது போகிறபோது நிலமை??? அதை விட தாங்களாகவே தமக்கு மனதுக்கு பிடித்தவர்களை திருமணம்செய்வது மேலாச்சே.//

:))

என்ன கொடும இது சரவணா?

அந்த ஒரு வார்த்தைக்கான பதில‌ கேக்கப்போய்த்தானே புலிக்கு ஜன்னி ஜுரம் கண்டுடுச்சு :))
(அது ஜனனி அல்ல ::)) )

சென்ஷி said...

//அதை விட தாங்களாகவே தமக்கு மனதுக்கு பிடித்தவர்களை திருமணம்செய்வது மேலாச்சே.//


அது யாருங்கறதுதான் இப்ப பிரசினை..

ஒருவேளை நாமல்லாம் ஏதாச்சும் ஒரு எம்.பி.ஏ. ப‌டிச்சுட்டு, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனில, ஈரானியன் உயரத்துல, பின் லேடன் தாடில கொஞ்சமா ஷேவ் பண்ணிக்கிட்டு, டோனி கணக்கா முடி வளர்த்துட்டு வேல பாத்தா புடிக்குமோ என்னமோ... :))

சென்ஷி said...
This comment has been removed by the author.
Kamal said...

//இந்த பேர வச்சிக்கிட்டு பயமா? டவுட்டா இருக்கே!! :))//
அட ஏங்க வயிதெரிச்சல கெளப்புறீங்க!!!!
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" அப்படிங்கரமாதிரி நானும் try பண்ணிட்டு தான் இருக்கேன்...ஒண்ணும் சிக்கலையே... :((
"இந்த பொண்ணுங்கல புரிஞ்சுக்கவே முடியலையே புருஷோத்தமா"

இராமநாதன் said...
This comment has been removed by the author.
இராமநாதன் said...

புலி,
ஏற்கனவே பெனாத்தலோட பாடங்களை படிச்சு நடுங்கிகிட்டிருக்கோம்.

இப்ப இந்த வீடியோ தேவையா? இந்தப் பிறவியிலதான் இல்ல.. அடுத்த பிறவியிலயாவது வாய்க்குதானு பார்ப்போம்! ஓம் ஷாந்தி ஓம்!

Dreamzz said...

aahaa! appo namakellam intha jenmathula ponne kidaikaathu pola!
adangokkamakka! enna koduma da ithu!

Dreamzz said...

enakkellam ippadi loosuthanam illatha ponnunga thaanpa venum!

இலவசக்கொத்தனார் said...

//திருமணமாகா யுவதிகளின் சார்பாக முதல் ஆண் ஆதரவு குரலை (பித்தளை குரல்) பதிய வைத்துள்ள கொத்ஸுக்கு என் கடும் கண்டனங்கள் :)//

சென்ஷி, ஒழுங்காத்தான் படிச்சீரா? நான் என்ன சொல்லி இருக்கேன். இப்படி எல்லாம் பதில் வரும். சாக்கிரதையா இருந்துக்கோங்கன்னு. இப்படி பட்டறிவை வைத்து நான் சொல்லுவதை திரித்துச் சொல்லும் உம்மை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த வேண்டும் போல் இருக்கிறதே.

தென்றல் said...

/....
இப்படி எல்லாம் விவகாரமா பதில் வரும். ஜாக்கிரதை.
/
கொத்ஸ், இது டெக்னிக் நல்லா இருக்கே..!!

ஏன் இப்படி வெந்த புண்ணில .....??

ஏதோ பாட்டு ஒண்ணு நினைவுக்கு வருது..
'காலம் கலிகாலம்... மாறி போச்சுடா.....'

காட்டாறு said...

சுதந்திரம் அப்படின்னா.. என்னான்னு சரியா புரிஞ்சிக்காததுக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு இந்த வீடியோ. மனசுல ஒரு வலி வருவதை தடுக்க முடியல...

மங்கை said...

சிவா..

பொண்ணுக ஒரு பக்குவேமே இல்லாம இருக்குறாங்க...படிப்பும் சமூக அறிவும் எதுக்கு தான் உபயோபபடுத்துன்னு தெரியலை....
இல்ல அப்படி ஒன்னு இருக்கானு தெரியலை..ஹ்ம்ம்

இது எல்லாம் 'சில' பெற்றோர்கள் பெருமையா வேற சொல்றத நான் நேர்ல கேட்டிருக்கேன்..என்னமோ போங்க.. நிஜமாவே மனசு கஷ்டப்படுது..

சேதுக்கரசி said...

அந்தப் பொண்ணு கண்ணெல்லாம் அசைச்சு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ சொல்லுது... ஒண்ணும் கேட்கமாட்டேங்குதே? :-( ஆடியோ வேலை செய்யுமா என்ன?

ஜி said...

எனக்கு ரெண்டுதான் மேட்ச் ஆகுது :((((

~பொடியன்~ said...

இதெல்லாம் சும்மா ஸீன் மாமு.. பசங்களோட சும்மா டைம் பாஸ்க்கு ஊர் சுத்தர ஒதவாக்கரைங்க அதுவும் மணிபர்ஸ் மட்டும் பாத்து ஆள் புடிக்கிறதுங்க பேசர பேச்சு. இதுக்கு யேன் நீங்க டென்ஷன் ஆவுறிங்க? :)
கலயாணம்னு வரும் போது அதுங்களும் கடைசி 2 தான் பாக்கும்ங்க.

அதையும் தாண்டி வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்கள மட்டும் எதிர் பாக்கிற பொண்ணுங்க நெறைய பேர் இருக்காங்க.. ஸோ மனச தளர விடாதிங்க.. :P

கால்கரி சிவா said...

நல்லவேளை சாமி எனக்கு 20 வருஷத்திற்கு முன்னாடியே கல்யாணமாயிடிச்சி

புலி கொலைவெறிபடை சூடான் said...

தலை நீ உம் னு ஒரு வார்த்தை சொல்லுதலை அந்த ப்ளூ ச்சுடிதார போட்டு தள்ளிடறேன்!!
(வின்னர் காமெடி ஸ்டைலில் படிக்கவும்)

ப்ளூ ச்சுடிதார் said...

@பொடியன்
//
சும்மா ஸீன் மாமு.. பசங்களோட சும்மா டைம் பாஸ்க்கு ஊர் சுத்தர ஒதவாக்கரைங்க
//
ரொம்ப எக்ஸ்பீரியன்ஸோ??

ப்ளூ ச்சுடிதார் said...

@சேதுக்கரசி
//
அந்தப் பொண்ணு கண்ணெல்லாம் அசைச்சு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ சொல்லுது
//
ஹை ஆண்டி என் கண் டான்ஸ் ஆடறத பாத்தீங்களா??

என் வாய் டான்ஸ் ஆடறது கேக்கலையா??

ப்ளூ ச்சுடிதார் said...

//
கால்கரி சிவா said...
நல்லவேளை சாமி எனக்கு 20 வருஷத்திற்கு முன்னாடியே கல்யாணமாயிடிச்சி
//
பரவாயில்ல வாய்யா நான் சொன்னா மாதிரியே இருந்தா போதும் நான் உன்னைய கட்டிக்கிறேன்

ப்ளூ ச்சுடிதார் said...

//
மங்கை said...
படிப்பும் சமூக அறிவும் எதுக்கு தான் உபயோபபடுத்துன்னு தெரியலை....
//
படிச்சிட்டுதானே வந்து தெகிரியமா பேசறோம்.

ப்ளூ ச்சுடிதார் said...

//
பினாத்தல் சுரேஷ் said...
யெப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லவேளை எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி!
//
மாமா கல்யாணம் ஆனாலும் பரவாயில்லை நீ மாநிறமா ?ஹைட்டா ?

அபி அப்பா said...

கவனிச்சேன்! சிலதை மாத்திக்கறேன்!!! நன்றி!!

ப்ளூ ச்சுடிதார் said...

//
அபி அப்பா said...
கவனிச்சேன்! சிலதை மாத்திக்கறேன்!!! நன்றி!!
//
என் செல்லம்

cheena (சீனா) said...

தொலைக்காட்சியில் பேச வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன. அல்லது பல் வேறு சூழ்நிலைகளினால், பல்வேறு காரணங்களினால் நிச்சயிக்கப் படுகின்றன.

பெண்களும் ஆண்களும் நிபந்தனைகள் போட்டால் திருமணங்களே நடைபெறாது. இவை எல்லாம் பேசுபவர்களுக்கும் தெரியும்.

ஆசைகள் என்பது வேறு - இலட்சியம் என்பது வேறு. எல்லாம் நிறைவேற வாழ்த்துகள்.

Anonymous said...

லேசாக கண்ணைக் கட்டுது சிவா.இம்புட்டு எதிர்ப்பார்ப்புகளா?
ஒரே ஒரு பீட்டர் விட்டு நான் போறேன்
expectation kills :))

வெட்டிப்பயல் said...

புலி,
என்னய்யா இது??? எவ்வளவு கண்டிஷன்ஸ்...

இதுக்கெல்லாம் ஆர்டர் பண்ணி தான் வரவைக்கனும் போல...

சரி கடைசியா இதுங்களுக்கெல்லாம் கண்ணாலமானதுக்கப்பறம் இதுங்க வூட்டுக்காரவங்ககிட்ட இந்த ப்ரோக்ராமை போட்டு காட்டனும் ;)

(இதுல ஒரு பொண்ணு பையன் அழகா இருக்கக்கூடாதுனு சொல்லிடுச்சே. இப்படி எல்லாரும் சொன்னா உன் நிலைமை என்ன?)

நாகை சிவா said...

கீதா சாம்பசிவம்!

//நல்லா இருக்கு!!!! இப்படியா அலையறது???? எல்லாம் ஒரு "கால்கட்டு" போட்டால் "கைப்புள்ள" மாதிரி அடங்குவீங்க!!//

சந்தேகம் கேட்டா அலைகிறேன் என்று அர்த்தமா?

நீங்க சிரியஸா சொன்னது எல்லாம் உண்மை தான்.

நாகை சிவா said...

@ ம.சிவா!

//ஸ்ஸப்பாஆஆஆஆஆ இப்பவே கண்ணை கட்டுதே.......//

எனக்கு அப்பவே கண்ணை கட்டிடுச்சு ம.சிவா :(

நாகை சிவா said...

\\ யாருக்குமே அவங்க விரும்பிய மாதிரி 100 % பர்பெக்ட் அமைய மாட்டாங்க. அமையும் முடியாது\\

இந்த ஒன்னை நம்பிதான் எல்லோரும் இருக்கோம்! ;)//

கோபி அண்ணனே! நீங்க நம்பி என்ன பண்ணுறது. அவங்க 100 % வரும் என்று நம்புறாங்களே. அது தானே பிரச்சனையே!

நாகை சிவா said...

@ நளாயினி!

//இத்தகைய எதிர்பார்ப்புகளொடு திருமணம் செய்தால் பின்னர் மனப்பொருத்தம் விட்டுக்கொடுக்கும் குணங்கள் இல்லாது போகிறபோது நிலமை??? //

இது தான் கேள்வியே! கேட்டா நாங்க அப்ப விட்டு கொடுத்துப்போம் என்று சொல்லுறாங்க. இவ்வளவு போல்ட் டா சொல்லுறவங்க எப்படி அவ்வளை சீக்கிரம் விட்டுக் கொடுக்க முடியும் என்று தான் எனக்கு புரியல

நாகை சிவா said...

@ கொத்தனார்!

//இப்படி எல்லாம் விவகாரமா பதில் வரும். ஜாக்கிரதை.//

இதை எல்லாம் நீங்க சொல்லாமலே இருந்து இருக்கலாம் :(

நாகை சிவா said...

@ கமல்!

//விடுங்க பாஸ்!!!! நமக்குன்னு ஒருத்தி இருக்க மாட்டாளா என்ன???
இருந்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!!! :(//

நீங்க சொல்லிட்டீங்க... நாங்க அப்படியே அந்த கேத்த மெயின் டன் பண்ணிக்கிட்டு இருக்கோம். அம்புட்டு தான் வித்தியாசம்.

நாகை சிவா said...

@ சென்ஷி!

என்ன ஆட்டம் பலமா இருக்கு ?

//அந்த ஒரு வார்த்தைக்கான பதில‌ கேக்கப்போய்த்தானே புலிக்கு ஜன்னி ஜுரம் கண்டுடுச்சு :))
(அது ஜனனி அல்ல ::)) )//

ஜனனி வந்தா ஒகே தான் :)

//ஒருவேளை நாமல்லாம் ஏதாச்சும் ஒரு எம்.பி.ஏ. ப‌டிச்சுட்டு, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனில, ஈரானியன் உயரத்துல, பின் லேடன் தாடில கொஞ்சமா ஷேவ் பண்ணிக்கிட்டு, டோனி கணக்கா முடி வளர்த்துட்டு வேல பாத்தா புடிக்குமோ என்னமோ... :))//

கடுக்கன விட்டுட்டியே சென்ஷி :)

நாகை சிவா said...

//அட ஏங்க வயிதெரிச்சல கெளப்புறீங்க!!!!
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" அப்படிங்கரமாதிரி நானும் try பண்ணிட்டு தான் இருக்கேன்...ஒண்ணும் சிக்கலையே... :((
"இந்த பொண்ணுங்கல புரிஞ்சுக்கவே முடியலையே புருஷோத்தமா"//

புரிஞ்சுக்க முயற்சி எடுப்பதை விடுட்டு வேற வேலை ஏதும் இருந்தா பாருங்க பாஸ். முயற்சிய விட்டுடாதீங்க....

நாகை சிவா said...

//இராமநாதன் said...
புலி,
ஏற்கனவே பெனாத்தலோட பாடங்களை படிச்சு நடுங்கிகிட்டிருக்கோம்.

இப்ப இந்த வீடியோ தேவையா? இந்தப் பிறவியிலதான் இல்ல.. அடுத்த பிறவியிலயாவது வாய்க்குதானு பார்ப்போம்! ஓம் ஷாந்தி ஓம்!//

உமக்கு என்னய்யா.. ஜிரா சொன்ன மாதிரி மாட்டும் அம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கீறர். இப்ப நம்ம பாடு தானே திண்ணாட்டம்

நாகை சிவா said...

//Dreamzz said...
enakkellam ippadi loosuthanam illatha ponnunga thaanpa venum!
//

நமக்குனு சேர்த்து சொல்லுங்க டீரிம்ஸ் :)

நாகை சிவா said...

@ கொத்தனார்!

//இப்படி பட்டறிவை வைத்து நான் சொல்லுவதை திரித்துச் சொல்லும் உம்மை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த வேண்டும் போல் இருக்கிறதே.//

அப்ப இது எல்லாம் பட்டறிவா? அப்ப நீர் திருமணம் பண்ணும் போதே இது போல கண்டிசன்ஸும் இருந்துச்சா?

நாகை சிவா said...

//ஏன் இப்படி வெந்த புண்ணில .....??

ஏதோ பாட்டு ஒண்ணு நினைவுக்கு வருது..
'காலம் கலிகாலம்... மாறி போச்சுடா.....'//

சட்டி சுட்டதடா போட்டு கூட மேட்ச் ஆகும் இல்லையா தென்றல் :)

நாகை சிவா said...

//காட்டாறு said...
சுதந்திரம் அப்படின்னா.. என்னான்னு சரியா புரிஞ்சிக்காததுக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு இந்த வீடியோ. மனசுல ஒரு வலி வருவதை தடுக்க முடியல...//

புரிஞ்சு தான் இப்படி நினைக்குறாங்களா.. இல்ல புரியமா இருக்காங்களானு எனக்கு புரியல..

நாகை சிவா said...

@ மங்கை!

//இது எல்லாம் 'சில' பெற்றோர்கள் பெருமையா வேற சொல்றத நான் நேர்ல கேட்டிருக்கேன்..என்னமோ போங்க.. நிஜமாவே மனசு கஷ்டப்படுது..//

இந்த நிகழ்ச்சியில் கூட சிரிக்க தான் செய்தார்கள் பல பெற்றோர்கள். வேற பண்ண என்ற நிலையில் இருக்காங்களோ என்னவோ?

நாகை சிவா said...

//சேதுக்கரசி said...
அந்தப் பொண்ணு கண்ணெல்லாம் அசைச்சு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ சொல்லுது...//

அதுங்க நல்லா தெளிவா தான் சொல்லுதுங்க. பாக்குறவங்களுக்கு தான் உணர்ச்சி கன்னாபின்னானு ஏறுது.

// ஒண்ணும் கேட்கமாட்டேங்குதே? :-( ஆடியோ வேலை செய்யுமா என்ன?//

ஆடியோ வேலை செய்யுதே. மறுபடியும் செக் பண்ணி பாருங்க.

நாகை சிவா said...

@ பொடியன்!

//அதையும் தாண்டி வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்கள மட்டும் எதிர் பாக்கிற பொண்ணுங்க நெறைய பேர் இருக்காங்க.. ஸோ மனச தளர விடாதிங்க.. :P//

பெரியவங்க நீங்க சொல்லுறீங்க. மனச தளர விடாம பாத்துக்குறேன் ... :)

நாகை சிவா said...

//நல்லவேளை சாமி எனக்கு 20 வருஷத்திற்கு முன்னாடியே கல்யாணமாயிடிச்சி//

கால்கரி சிவா!

உங்களுக்கு ஆச்சு.. தம்பிமாருங்களுக்கு எல்லாம் என்ன வழி!

நாகை சிவா said...

@ அனானி! (ப்ளூ சுடிதார்)

கமெண்ட் எல்லாத்தையும் நல்லாவே ரசிச்சேன். நன்றி :)

நாகை சிவா said...

//அபி அப்பா said...
கவனிச்சேன்! சிலதை மாத்திக்கறேன்!!! நன்றி!!//

ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை. நல்லா இருந்தா சரி தான் சாமி :)

நாகை சிவா said...

//ஆசைகள் என்பது வேறு - இலட்சியம் என்பது வேறு. எல்லாம் நிறைவேற வாழ்த்துகள்.//

சீனா!

கூடவே இதையும் சேர்த்துக்கோங்க. எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால் பயங்கரமான எதிர்பார்ப்புகள் இருக்க கூடாது. இருந்தால் அனைவருக்குமே கஷ்டம் தான்.

எல்லாரும் நல்லா இருந்தா சரி தான், நீங்க சொல்வது போல.

நாகை சிவா said...

@ துர்கா!

உங்களே இப்படினா.. எங்களுக்கு எப்படி இருக்கும் :(

Expectation Kills

யாரை அவங்களையா இல்ல எங்களையா அதையும் சொல்லிட்டு போங்க...

நாகை சிவா said...

//வெட்டிப்பயல் said...
புலி,
என்னய்யா இது??? எவ்வளவு கண்டிஷன்ஸ்...
இதுக்கெல்லாம் ஆர்டர் பண்ணி தான் வரவைக்கனும் போல...//

நல்லவேளை நீ ஜஸ்ட்ல தப்பிச்ச... நாங்க மாட்டிக்கிட்டோம்.

//சரி கடைசியா இதுங்களுக்கெல்லாம் கண்ணாலமானதுக்கப்பறம் இதுங்க வூட்டுக்காரவங்ககிட்ட இந்த ப்ரோக்ராமை போட்டு காட்டனும் ;)//

சரியான யோசனை. விஜய் டிவிய பிடிச்சு எல்லார் அட்ரஸ்ம் வாங்கி வைக்கனும்.

//(இதுல ஒரு பொண்ணு பையன் அழகா இருக்கக்கூடாதுனு சொல்லிடுச்சே. இப்படி எல்லாரும் சொன்னா உன் நிலைமை என்ன?)//

ஏன்ய்யா ஊர்ல இருந்து வரும் போது அடுத்தவன் அஃகுள்ல எப்படி பாம் வைப்பதுனே வருவீங்களா... இது உனக்கு நல்லது இல்லை என்பதை மட்டும் சொல்லி முடிச்சுக்குறேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

கண்டிப்பாக அவங்களைதான் சொன்னேன்.நீங்களும் இப்படி condition போட்டால் expectation kills உங்களுக்கும் பொருந்தும் :)

சேதுக்கரசி said...

யப்பா நானுந்தான் மேற்படிப்பு படிச்சிட்டு அமெரிக்கால பல வருசம் வேலை பார்த்து இங்கே ரொம்ப நாளா இருக்கேன்.. நம்மூர் பொண்ணுங்க பேசறதப் பார்த்தா எனக்கே பயமா இருக்கு.. பசங்கல்லாம் எப்படித்தான் இதுங்ககூட குப்பைகொட்டப் போறீங்களோ! உங்களையெல்லாம் நெனச்சா பாவமாத்தான் இருக்கு.

நெசமா, நாங்கல்லாம் கல்லூரில படிச்சப்ப இவ்ளோ தெளிவா இருந்ததேயில்ல! ஏதோ அப்பா அம்மா சொல்ற பேச்சைக் கேட்டுட்டு படிச்சோமா பாஸானோமான்னு இருந்தோம்... இந்தப் பொண்ணுங்கல்லாம் இப்படித் தூக்கி சாப்பிடுதே??

(வால்யூம் சரிசெய்து இப்போது உருப்படியாகக் கேட்கமுடிந்தது)

Rasiga said...

பெண்களின் எதிர்பார்ப்புகளுக்காக உங்களை மாற்றிக்கொள்ள அவசியமில்லை,
நீங்கல் நீங்களாக இருப்பதை நேசிக்கும் பெண்ணிடத்தில் தான் நிறைவான அன்பு கிடைக்கும்!

தன்னம்பிக்கை இல்லாமல், தன்னை ஒரு பெண்ணுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஆண் சிங்கத்திற்கு அழகல்ல!!!!

நாகை சிவா said...

@ சேதுக்கரசி!

//நம்மூர் பொண்ணுங்க பேசறதப் பார்த்தா எனக்கே பயமா இருக்கு.. பசங்கல்லாம் எப்படித்தான் இதுங்ககூட குப்பைகொட்டப் போறீங்களோ! உங்களையெல்லாம் நெனச்சா பாவமாத்தான் இருக்கு.//

இப்படியெல்லாம் சொல்லி எங்களை பயமுற்துவது சரியா? ;))

நாகை சிவா said...

@ துர்கா!

//கண்டிப்பாக அவங்களைதான் சொன்னேன்.//

நன்றி.

//நீங்களும் இப்படி condition போட்டால் expectation kills உங்களுக்கும் பொருந்தும் :)//

நாங்க அப்படியே போட்டாலும்.. அட எங்க நீங்க வேற...

நாகை சிவா said...

@ ரசிகா!

முதல் வருகைக்கு நன்றி.

//பெண்களின் எதிர்பார்ப்புகளுக்காக உங்களை மாற்றிக்கொள்ள அவசியமில்லை,
நீங்கல் நீங்களாக இருப்பதை நேசிக்கும் பெண்ணிடத்தில் தான் நிறைவான அன்பு கிடைக்கும்!//

சரியா சொன்னீங்க :)

//தன்னம்பிக்கை இல்லாமல், தன்னை ஒரு பெண்ணுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது ஆண் சிங்கத்திற்கு அழகல்ல!!!!//

அப்படி நினைச்சு இருந்தா அதை எங்க இப்படி பதிவு போட்டு சொல்ல போறேன். நீங்க இதை எப்படி எடுத்துக்கிட்டிங்க என்று தெரியல. நான் சொல்ல வந்தது வேறு :)

yogbal_anima said...

மாமா,
கவலைப்படாதேய்...
நமக்குன்னு ஒண்ணு கிராமுத்துல இல்லாமலா போய் விடும்...
பொண்ணுங்க எப்பவுமே பீடர் மாப்ள!!
இதையெல்லாம்...
பெரிசா எடுத்துக்க படாது..

நமக்கு...
ஒரு தாவணி கூடவா மாட்டாது...???

Ponnarasi Kothandaraman said...

Munnadi ellam thappu panna konjam koocham, thayakkam, asingam ellam paapanga :( Ipo ellam thayriyama na apdi thannu velila vera solranga :((

Ponnarasi Kothandaraman said...

@ Sethukarasi,
Hahaha... Enga kalathulaye enaku aacharyama than iruku :))

சேதுக்கரசி said...

பொன்னரசி.. அதென்னங்க "எங்க காலம்". நானும் கிட்டத்தட்ட உங்க காலம் தான் ஹிஹி...

~பொடியன்~ said...

// சேதுக்கரசி said...

பொன்னரசி.. அதென்னங்க "எங்க காலம்". நானும் கிட்டத்தட்ட உங்க காலம் தான் ஹிஹி...//

ஐயய்யோ.. சேது அக்கா.. இது மீனு குட்டிக்கு தெரியுமா? :-))

நளாயினி said...

இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசினதாக தெரியவில்லை. அவர்கள் என்னென்ன சொல்லி இருப்பார்களோ என நினைக்கிறபோது பயமாகவே இருக்கிறது. எனது மகளை இதை கேக்க பார்க்க கொடுத்தேன். சிரித்தபடி கேட்டார். 13 வயசே தான். என்ன சொன்னார் என எனது பதிவிலேயே பதிவிடுகிறேன். நிறைய சிந்திக்க வைத்தார் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.வாழ்க்கை வாழ்வதற்கே. பயப்படுவதற்கு அல்ல என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.