Wednesday, November 28, 2007

தமிழை நேசிக்க வைப்பார்களா?

இன்று வடவூர் குமார் மற்றும் இட்லி வடையின் பதிவுகளை பார்க்க நேர்ந்த பிறகு எழுத தோன்றிய பதிவு இது.

தமிழை செம்மொழி ஆக்கி விட்டோம், தமிழை கட்டாயப்பாடமாக்கி விட்டோம் இனி தமிழுக்கு என்றுமே வளர்ச்சி மட்டும் தான் என்று நம் அரசியல் தலைவர்களின் தேர்தல் அறிக்கைகளிலும் மேடைப் பேச்சுக்களிலும் பார்த்து இருக்கலாம். அதை செய்தது நாங்கள் தான், திட்டத்தை முதலில் கொண்டு வந்தது நாங்கள் என்று அதிலும் சண்டையிட்டு நாம் பார்த்து இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் அனனவரும் கண்டிப்பாக தமிழில் தான் படிக்க வைக்க வேண்டும் என முழக்கிட்டு விட்டு தன் பேத்திய வேற மொழியில் படிக்க வைத்து பிரச்சனை பெரிதான பிறகு அந்த பள்ளியில் தமிழையும் ஒரு பாடமாக சேர்க்க வைத்த கதையும் நமக்கு தெரியும். அது எல்லாம் அரசியல், நமக்கு தேவையில்லாத விசயமும் கூட.

செம்மொழி என மார்தட்டிக் கொள்ளும் நம் மொழியை ராஜ்யசபாவில் பேச முடியவில்லை. காரணம், மொழி பெயர்ப்பாளர் இல்லை. இந்த பிரச்சனைக்கு பல மாதங்கள் ஆகியும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதை குறித்து ராஜ்யசபாவில் பேசுவதையே பூனைக்கு மணிய கட்டிய பழமொழியுடம் உதாரணப்படுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது என்றால் இதுக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது. அதை பற்றிய இட்லிவடையின் பதிவை படிக்க இங்கு செல்லவும்.

அது ஒரு பக்கம் இருக்கு, இன்று தமிழில் தொடர்ந்து பலர் எழுதுவதற்கு பதிவுலகமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பதற்கு நாம் எல்லாமே ஒரு உதாரணம் தான். இதே போல் வரும் சமுதாயமும் இருக்குமா? அவர்களில் பலரை(சிலரை) பொறுத்த வரை தமிழ் ஒரு பேச்சு மொழியாக மட்டும் தான் இருக்கிறது என்பது கண்க்கூடான உண்மை. அதை மாற்ற அரசாங்கமோ, தமிழ் வளர்ச்சி துறை, செம்மொழிக்கான துறையோ ஏதும் திட்டம் வைத்து செயல்ப்படுத்துகிறதா என்று எனக்கு தெரியலை. தெரிந்தவர்கள் கூறலாம்.

அப்படி ஏதும் இல்லை என்றால் சிங்கையில் செயல்படுத்துவதை போன்ற திட்டங்களையும் நம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது மிக சிறந்த வழியாக எனக்கு படுகின்றது. "வாசிப்பை நேசிப்போம்" என்ற பெயர்யிட்டு தமிழ் மொழியை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். முதலில் 48 பள்ளிகள் ஆரம்பித்து, இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் 100 பள்ளிகளில் செயல்படுத்து உள்ளார்கள். அந்த திட்டத்தை பற்றியும் அதில் பயன்பெற்ற மாணவிகளின் பேச்சும் அடங்கிய வீடியோ கிளிப்


இந்த வீடியோவை வடவூர் குமார் அவர்கள் பதிவாக இட்டு உள்ளார்.

இதே போன்ற திட்டத்தை நம் அரசு மாநகராட்சிகளில் தொடங்கி எல்லா இடங்களில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழை எங்கள் சுவாசம் என மேடைக்கு மேடை கூறிக் கொள்ளும் நம் மக்கள்பிரநிதிகள் வருங்கால சமுதாயத்தை தமிழை வாசிக்கவும், நேசிக்கவும் வைப்பார்களா?

26 comments:

அரசியல் வாதி said...

அப்படி டக்குனு எல்லாம் செயல்படுத்த முடியாது. அப்படி செயல்படுத்திட்டா அடுத்த தேர்தல்ல எத சொல்லி ஓட்டு வாங்கறதாம்.

இப்படி புரியாத ஆளா இருக்கியே புலி.

நாகை சிவா said...

அனானி!

:)

கோபிநாத் said...

\\"தமிழை நேசிக்க வைப்பார்களா?"\\

வைப்பார்கள் என்று நம்புவோம்..;)

வேதா said...

தமிழ் மொழிபெயர்ப்பாளர் நியமனத்தில் தாமதம் செய்வதை எதிர்க்கும் விதமாக எம்.பி பேசியதில் தவறில்லை, ஆனால் நிலைமை அவ்வளவு மோசமாகிவிட்டது என்று நினைக்கும் போது கவலையாக தான் உள்ளது.

அரசாங்கம் செய்வதெல்லாம் வெறும் பேச்சளவில் தான், செயல்பாட்டில் அவ்வளம் தீவிரம் காட்டாது. மாற்றத்தை நம்மிடையே தான் கொண்டு வர வேண்டும் என்பது என் கருத்து. தமிழ் பேச்சளவோடு நின்று விடக்கூடாது, தமிழ் எழுத்தும், வாசிப்பும் தொடர அடுத்த தலைமுறையிடம் நாம் தான் அதை எடுத்துச் செல்லவேண்டும். தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் மக்கள் தான் தமிழின் வளர்ச்சியில் பெரும் தடைக்கல்.

/இதே போன்ற திட்டத்தை நம் அரசு மாநகராட்சிகளில் தொடங்கி எல்லா இடங்களில் செயல்படுத்த முன்வர வேண்டும் என்பது என் விருப்பம்./
நம் எல்லாருடைய விருப்பமும் அதுவே :)

நளாயினி said...

நம்பிக்கை தானே வாழ்க்கை. அந்த சிறுவர்கள் அழகாக பேட்டி கொடுத்திருக்கிறார்களே. அதுவே நம்பிக்கை தருகின்றதான ஒன்று தான்.

emperor said...

தூரத்து மலை கண்ணுக்கு அழகு , நிசம் தான்,

ஒரு நல்ல முன்னுதாரணம்..... குழந்தைகள் பேசுவது மிக அழகாக உள்ளது


அன்புடன்

இரா .செந்தில் நாதன்

Hariharan # 03985177737685368452 said...

செம்மொழி கண்டான், நவீன ராஜராஜசோழன், கனிமொழியப்பர் கருணாநிதிதானே ஆளும் மத்திய கூட்டணி அரசின் பிதாமகர்!

செம்மொழியை நாடாளுமன்றத்தில் அம்புப் படுக்கையில் வைத்து அழகு பார்க்கிறார்!

அதுசரி தமிழின் தமிழ் கருணாநிதி கட்டுப்பாடு மிகுந்த மகன் அழகிரிக்கு பதவி பரிந்துரைக்கலாம்னு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது ஆப்டர் ஆல் மொழி பெயர்ப்பாளர் தட்டுப்பாடு மேட்டரே இல்லை!

அதிமுக கட்சியின் மலைச்சாமி இப்படி சைக்கிள் கேப்பில் தமிழ் மொழிப் பற்றைக் காட்டுவது காப்பிரைட் தமிழ் ஆக்ட்(டிங்) படி குற்றம்!

dondu(#11168674346665545885) said...

//தமிழகத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தமிழில் தான் படிக்க வைக்க வேண்டும் என முழக்கிட்டு விட்டு தன் பேத்திய வேற மொழியில் படிக்க வைத்து பிரச்சனை பெரிதான பிறகு அந்த பள்ளியில் தமிழையும் ஒரு பாடமாக சேர்க்க வைத்த கதையும் நமக்கு தெரியும்.//
சற்றே மாறுதல். அப்பள்ளியில் மொழிப்பாடத்தைச் சேர்க்கவில்லை. தில்லி லோதி காலனியில் உள்ள தமிழ் கல்விகழகத்தின் பள்ளியில்தான் தனியாக தமிழ் படிக்க வைப்பதாகக் கூறினார்கள். அது ஆயிற்று இரண்டு ஆண்டுகள். இப்போது நிலைமை என்னவென்று தெரியாது. இது பற்றி நான் இட்ட பதிவுகள்: http://dondu.blogspot.com/2005/10/blog-post_18.html
http://dondu.blogspot.com/2005/07/blog-post_30.html
அவற்றை பின்னூட்டங்களுடன் படியுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இலவசக்கொத்தனார் said...

என்னதான் நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான். நம்ம பசங்களுக்கு நாம எழுதப் படிக்கக் கத்துத் தர வேண்டியதுதான்.

நாகை சிவா said...

//கோபிநாத் said...
\\"தமிழை நேசிக்க வைப்பார்களா?"\\

வைப்பார்கள் என்று நம்புவோம்..;)//

நம்பிக்கை தானே வாழ்க்கை கோபி!

கூடவே அவர்களை தானே நம்பி ஆக வேண்டும், வேற வழி?

வடுவூர் குமார் said...

என்னடா? ரவிசங்கர் எல்லாம் நம்ம பக்கம் வந்திருக்காரே என்று சந்தேகம் வந்தது. அது இங்கிருந்து தானா?
நன்றி சிவா.
ஆனா இந்த விடியோவை பெட்டியில் பிடித்து தேவையான பகுதியை மட்டும் mpeg க்கு மாற்றுவதற்குள் நாக்கு வெளியில் தள்ளிவிடுகிறது.
சரியான மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் மக்களே.

நாகை சிவா said...

//மாற்றத்தை நம்மிடையே தான் கொண்டு வர வேண்டும் என்பது என் கருத்து. தமிழ் பேச்சளவோடு நின்று விடக்கூடாது, தமிழ் எழுத்தும், வாசிப்பும் தொடர அடுத்த தலைமுறையிடம் நாம் தான் அதை எடுத்துச் செல்லவேண்டும்.//

நம் மக்கள் மாற்றத்தை விரும்பி தானே தங்கள் குழந்தைகளை தமிழை தவிர்த்து படிக்க வைத்து உள்ளார்கள். அந்த இடைவெளியை தவிர்க்க அரசால் தானே முடியும்.

இனி வரும் பெற்றோர்களாவது தமிழை படிக்க, வாசிக்க வைத்தால் நன்றாக இருக்கும்.

நாகை சிவா said...

//நளாயினி said...
நம்பிக்கை தானே வாழ்க்கை. அந்த சிறுவர்கள் அழகாக பேட்டி கொடுத்திருக்கிறார்களே.//

உண்மை தான் நளாயினி. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

// அதுவே நம்பிக்கை தருகின்றதான ஒன்று தான்.//

தமிழகத்தை தவிர்த்த பிற இடங்கள் நம்பிக்கை தருவதாக தான் உள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டு அந்த வீடியோ.

கீதா சாம்பசிவம் said...

உள்ளேன் ஐயா!!!!

செல்வன் said...

புலி

நல்ல பதிவு.

பத்தாம் வகுப்பு வரை கட்டாய தமிழ் வழி கல்வி,சினிமா படத்துக்கு தமிழ் பெயர்ன்னு போகாத ஊருக்கு வழி சொல்லுவதை விடுத்து முதலில் எழுத படிக்க தெரியாத 60% பேருக்கு எழுத படிக்க கற்றுகொடுக்க வேண்டும்.அரசு பள்ளிகளில் தரத்தை அதிகப்படுத்த வேண்டும்.படித்தவர்கள் அரசுபள்ளிகளுக்கு அல்லது அறிவொளி மையங்களுக்கு சென்று ஓய்வுநேரத்தில் மாணவர்களுக்கு தங்களுக்கு தெரிந்ததை சொல்லிகொடுக்க வேண்டும்.கல்லாமையை முதலில் ஒழிக்க வேண்டும்.தமிழ் அதன்பின் தானே வளரும்

அரை பிளேடு said...

தமிழ் வாசிப்பை நேசிப்போம்.

நல்ல செய்தி படக்கோவை.தமிழ்ப்புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்ட வேண்டியது இன்றைய தேவை.

நாகை சிவா said...

@ செந்தில்நாதன்!

//தூரத்து மலை கண்ணுக்கு அழகு , நிசம் தான், //

நம்ம ஊர் மலையும் அழகாக தான் இருந்துச்சுங்க. இப்ப கொஞ்சம் கொஞ்சமாக பசுமை மங்கிட்டு வருது. அதை தடுக்கனும் என்பது தான் எங்கள் ஆசை.

//ஒரு நல்ல முன்னுதாரணம்..... குழந்தைகள் பேசுவது மிக அழகாக உள்ளது//

மிகவும் ரசிக்க வைத்தது.

நாகை சிவா said...

//அதிமுக கட்சியின் மலைச்சாமி இப்படி சைக்கிள் கேப்பில் தமிழ் மொழிப் பற்றைக் காட்டுவது காப்பிரைட் தமிழ் ஆக்ட்(டிங்) படி குற்றம்!//

ஹரி ரொம்பவே ரசிச்சேன் இந்த பின்னூட்டத்தை. ஆக்ட்(டிங்) சூப்பர்..
எப்படிங்க இப்படி எல்லாம்... பின்னிட்டீங்க போங்க...

நாகை சிவா said...

//சற்றே மாறுதல். அப்பள்ளியில் மொழிப்பாடத்தைச் சேர்க்கவில்லை. தில்லி லோதி காலனியில் உள்ள தமிழ் கல்விகழகத்தின் பள்ளியில்தான் தனியாக தமிழ் படிக்க வைப்பதாகக் கூறினார்கள். அது ஆயிற்று இரண்டு ஆண்டுகள். இப்போது நிலைமை என்னவென்று தெரியாது. //

டோண்டு நீங்க சொல்வது இரண்டு வருடங்களுக்கு முன்பு. நான் சில வாரங்களுக்கு முன்பு விகடனில் படிச்சதாக ஞாபகம். முடிந்தால் சுட்டு எடுத்து போடுறேன்.

உங்கள் தகவல்களுக்கு நன்றி!

நாகை சிவா said...

//என்னதான் நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான். நம்ம பசங்களுக்கு நாம எழுதப் படிக்கக் கத்துத் தர வேண்டியதுதான்.//

தற்சமயம் உள்ள ஒரே வழி !

பொறுப்போம். முடிந்த வரை :)

நாகை சிவா said...

@ குமார்!

//ஆனா இந்த விடியோவை பெட்டியில் பிடித்து தேவையான பகுதியை மட்டும் mpeg க்கு மாற்றுவதற்குள் நாக்கு வெளியில் தள்ளிவிடுகிறது.
சரியான மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் மக்களே.//

எதில் இருந்து எதுக்கு மாத்துனீங்க என்று சொல்ல முடியுமா.. நான் விண்டோஸ் மூவி மேக்கர் தான் உபயோகப்படுத்துறேன். அதை வைத்து தான் இரு பதிவுகள் போட்டேன். மேலும் தகவல்கள் வேண்டும் என்றால் கேளுங்கள்.

நாகை சிவா said...

//கீதா சாம்பசிவம்
உள்ளேன் ஐயா!!!!//

என்ன வர வர வெறும் உள்ளேன் ஐயா மட்டும் தான் வருது????

நாகை சிவா said...

@ செல்வன்

//பத்தாம் வகுப்பு வரை கட்டாய தமிழ் வழி கல்வி,சினிமா படத்துக்கு தமிழ் பெயர்ன்னு போகாத ஊருக்கு வழி சொல்லுவதை விடுத்து முதலில் எழுத படிக்க தெரியாத 60% பேருக்கு எழுத படிக்க கற்றுகொடுக்க வேண்டும்.அரசு பள்ளிகளில் தரத்தை அதிகப்படுத்த வேண்டும்.//

சரியா சொன்னீங்க செல்வன். இதில் கவனம் செலுத்தினாலே சரியான மாற்றத்தை கொண்டு வர முடியும்.

//படித்தவர்கள் அரசுபள்ளிகளுக்கு அல்லது அறிவொளி மையங்களுக்கு சென்று ஓய்வுநேரத்தில் மாணவர்களுக்கு தங்களுக்கு தெரிந்ததை சொல்லிகொடுக்க வேண்டும்.//

இந்த விசயத்தில் அரசு சில மாறுதல்களை கொண்டு வந்து இளைஞர்களை உபயோகப்ப்டுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்.

//கல்லாமையை முதலில் ஒழிக்க வேண்டும்.தமிழ் அதன்பின் தானே வளரும்//

நடக்கனும். வேண்டுவோம்.

நாகை சிவா said...

@ அரை பிளேட்

நன்றி...

//தமிழ்ப்புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்ட வேண்டியது இன்றைய தேவை.//

சரியா சொன்னீங்க.

சீனு said...

//தமிழ்ப்புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்ட வேண்டியது இன்றைய தேவை.//

அரை பிளேடு,

ஏதோ டபுள் மீனிங்ல சொல்றாப்புல தெரியுது!!!

Anonymous said...

நண்பர் நாகை சிவா !

ஆக்கபூர்வமான நல்லபதிவு. வாசிக்கத் தூண்ட வேண்டும் என்பது நல்ல கருத்து.
தமிழில் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் வெளியிடும் வெளியீட்டாளர்களும் இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்க் குழந்தைகள் தமிழ் வாசிக்க மறப்பார்களேயாயின் எதிர்காலத்தில் தமிழ் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அது மாத்திரமல்ல, நமது தொல் இலக்கியங்கள் மாத்திரமல்ல, தமிழால் வாழ்ந்துகொண்டு தமிழை இழி மொழியாக மேடைகளில் பேசுகின்றவர்களின் எழுத்துக்களும் எதிர்காலத்தில் மறைந்துபோய்விடும்.

நமது தொல் இலக்கியங்களை எங்கள் எதிர்காலச் சந்ததிகள் அறிந்துகொள்ள நினைப்பது குழந்தைகளின் அடிப்படை உரிமையாகும்.

ஒரு ஈழத் தமிழன்