மகாஜனங்களே வணக்கம்.
இன்னிக்கு நம்ம சுயபுராணம் தான். புராணம் என்றாலும் இது உண்மையிலே நடந்த சம்பவம் தான். கற்பனை காவியம் அல்ல. இன்னிக்கு நம்ம சுய புராணத்தில் காண்டம் எல்லாம் பிரிக்கல. நேரா பள்ளி வாழ்க்கைக்கு போறோம், சரியா?
நேருவில் படிக்கும் வரை வெறும் சிவாவாக இருந்த என்னை சி.எஸ்.ஐ யில் 6 ஆம் வகுப்பு சேர்ந்த பிறகு இன்சியல் போட்டு கூப்பிட ஆரம்பித்தார்கள். T என்ற இன்சியலை வைத்து Tension சிவா னு அழைக்க ஆரம்பித்தார்கள். அப்ப தலையில், முதுகில் தொட்டால் லைட்டா கோவம் வரும், அதான். பெயர் நல்லா இருந்தாலும் நெகடிவ்வா இருக்கேனு யோசிச்சு அந்த சமயத்தில் வந்த நம்ம தலைவர், சிவா படத்தில் டைகர் னு சொல்ல ஆஹா நம்ம பெயரும் சிவா நம்ம தேசிய விலங்கு டைகர் அந்த பெயரை தலைவரே வச்சிக்கிட்டார், அதன் முதல் எழுத்தும் T தான் பல விதங்களில் யோசித்து ( அந்த வயசுலே என்ன மாதிரி எல்லாம் யோசிச்சு இருக்கேன் பாருங்க) டைகர் சிவா னு கூப்பிடுங்கடானு நம்ம பசங்க கிட்ட சொல்ல அவங்களும் சில நாள் கூப்பிட்டாங்க. நாமளும் நோட், புக் இன்ன பிற பேப்பர்களிலும் டைகர் சிவா னு எழுத ஆரம்பிக்க தொடங்கியதில் இருந்து நமக்கும் இந்த புலிக்கும் உறவு ஸ்டார்ட் ஆச்சுங்க.
அதன் பிறகு வீட்டில் வளர்க்க தொடங்கிய முதல் நாய்க்கு டைகர் பெயர் வச்சி மகிழ்ந்து கொண்டேன். எட்டாவது வரும் பெயர மாத்திட்டாங்க. என்ன என்னவோ பெயர் எல்லாம் வச்சி கடைசியில் அரிசினு கூப்பிட்ட தொடங்க அது இன்னிய வரைக்கும் பள்ளி நட்பு வட்டாரங்களில் தொடருது. நமக்கும் கொஞ்சம் கொஞ்சமா இந்த டைகர் மறந்து போச்சு. பட்னு பாத்தா 10வது படிக்கும் போது ஆங்கிலத்தில் தி டைகர் என்று ஒரு பாடல் பாடமா இருந்துச்சு. அதை மிக அழகாக நடத்திய நம்ம ஆசிரியர் ரிச்சர்ட்சன் மறுபடியும் இந்த புலி மேல் இருந்த ஆர்வத்தை கிளறி விட்டுட்டார். வீட்டில் எல்லாம் புலி படத்ததின் போஸ்டர் வாங்கி ஒட்டி இருந்தேன். தேர்வில் அந்த பாடலை பற்றி எந்த கேள்வியையும் விடாமல் பதில் அளித்து விடுவேன்.
வில்லியம் பிளேக் எழுதிய அந்த பாடல்
The Tiger - William Blake
Tiger Tiger. burning bright,
In the forests of the night;
What immortal hand or eye.
Could frame thy fearful symmetry?
In what distant deeps or skies.
Burnt the fire of thine eyes?
On what wings dare he aspire?
What the hand, dare seize the fire?
And what shoulder, & what art,
Could twist the sinews of thy heart?
And when thy heart began to beat.
What dread hand? & whatdread feet?
What the hammer? what the chain,
In what furnace was thy brain?
What the anvil? what dread grasp.
Dare its deadly terrors clasp?
When the stars threw down their spears
And watered heaven with their tears:
Did he smile His work to see?
Did he who made the lamb make thee?
Tiger Tiger burning bright,
In the forests of the night:
What immortal hand or eye,
Dare frame thy fearful symmetry?
கல்லூரியில் சேர்ந்த பிறகு நமக்கு பல பெயர் வைக்கும் படலங்கள் நடந்து கடைசியில் 8 Guys மற்றும் அஞ்சு என்ற பெயர் நிலைத்து விட்டது. இன்னிக்கும் கல்லூரி நட்புகளிடம் இது தான் பெயர். புலிக்குட்டி என்று வேற ஒருத்தன் இருந்தான் எங்கள் கூட்டத்திலே, அதனால் புலி கல்லூரியில் மிஸ் ஆயிடுச்சு. அந்த நேரத்தில் நம்ம தோஸ்து ஒருத்தன் வண்டி வாங்க, அப்ப எல்லாம் வண்டியில் ஏதாச்சும் ஸ்டிக்கர் ஒட்டுவது தான் ஃபேஷன். அவன் என்னைய கேட்க விடுதலை புலிகளின் சின்னத்தை போட்டு "தொட்டவனை விட்டதில்லை" னு ஸ்டிக்கர் ஒட்டி விட்டேன். ஒட்டின ஒரே மாசத்தில் புலிகளை பற்றி பேசினாலே பொடானு சட்டம் கொண்டு வந்துட்டாங்க. அலறி அடிச்சு ஒடியாந்தான். ஒன்னும் பயப்படாத மச்சினு ஒரு மாதிரி தேத்தி அனுப்பியது தனிக் கதை.
அப்படி போயிக்கிட்டு இருந்த நம்ம புலி ஆர்வம், பதிவுலகம் வந்த பிறகு கன்னாபின்னானு பத்திக்கிச்சு. நம்ம படத்தை போட்டு தான் முதலில் பதிவு எழுத ஆரம்பிச்சேன். அதை பாத்து எனக்கே போர் அடிக்க வேற எந்த படம் போடலாம் என்று யோசித்தவுடன் பட்னு புலி நினைவுக்கு வர சட்னு போட்டாச்சு. அன்னில இருந்து இன்னிய வரைக்கும் அந்த படம் இருக்கு. கூடவே ஆர்குட், ஜி டாக், யாஹு னு எங்கும் புலிப்படம் தான். அதோட ஒரு படி மேல போய் இப்ப புலியையே டெம்பிளேட்டாக மாத்தியாச்சு. நல்லா இருக்கா.
பதிவுலகம் வந்த பிறகு சிவா, நாகை சிவாவாக மாறி நாகை புலியாகி இப்ப வெறும் புலி ஆகிட்டேன். எங்குட்டு போனாலும் ரொம்ப பாசமா எல்லாம் புலி புலி னு கூப்பிடுறாங்க. ஆக மனுசனா மதிப்பது இல்லை என்பது வேற விசயம். அதிலும் ஒரு வலைப்பதிவர் அவர் வனவிலங்கு சரணாலயத்துக்கு போயிட்டு வந்ததும் இல்லாம அங்கன பிடிச்ச புலி படத்தை எல்லாம் எனக்கு மெயில் பண்ணி பாசத்தை கொட்டிட்டார். அத்தோட விட்டு இருந்தால் பரவாயில்லை. கூடவே சிங்கத்தை விட பல விதத்தில் உயர்ந்தது புலி. பின் ஏன் புலியை விட்டுட்டு சிங்கத்தை எல்லாரும் காட்டு ராஜா, விலங்குகளின் அரசன் என்று சொல்லுறாங்கனு ஒரு கேள்வி கனைய வீச வந்தது வில்லங்கம்.
நம்ம அறிவுக்கு எட்டின வரைக்கும் சிங்கத்தை விட புலி எந்த விதத்திலும் குறைந்தது இல்லை, இன்னும் சொல்ல போனால் புலி தான் சிங்கத்தை விட திறமை வாய்ந்தது, காட்டுல மட்டும் இல்லை நாட்டிலும் கூட. அப்புறம் ஏன் இப்படி தோணுச்சு. அதுவும் போக ஆப்பிரிக்க நாட்டவர்களை கேட்டால் அவர்கள் புலியும் இல்லை சிங்கமும் இல்லை யானை தான் விலங்களின் அரசன், காட்டு ராஜானு சொல்ல மண்ட காய்ந்து போச்சு.
இதுக்கு எப்படி தான் விடை கண்டுபிடிப்பதுனு யோசிச்சு நம்ம விக்கி பசங்க கிட்ட கேட்டா சொல்லிட போறாங்கனு, அதில் உள்ள முக்கியமான இருவரிடம் கேட்க போக வந்துச்சு அடுத்த வினை. இரண்டில் எது பெருசு, ஏன் புலிய விட்டுட்டு சிங்கத்தை காட்டு ராஜானு சொல்லுறாங்கனு கேட்க, அவங்க கேள்விய திரிச்சு ஏதுக்கு பெரிசுனு ஒரு பெரிய விவாதமே நடத்தி என்னய நோகடிச்சதும் இல்லாம, என்ன நீ இம்புட்டு வெள்ளந்தியா இருக்கனு கிண்டல் வேறு. அதுக்கு அப்புறமும் அவங்க கிட்ட சாட்ட நான் என்ன லூசா. உடனே எஸ்கேப் ஆயிட்டேன்.
அதனால் மக்களே, இதுக்கு நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க. சிங்கமா.. புலியா. விக்கியில் இருக்கும் மற்ற பதிவர்கள் உதவினாலும் சரி.
டிஸ்கி : இது நம்மளோட சதம் அடிக்கும் பதிவு. அவன் அவன் 400, 500 னு சிங்கிளா அடிச்சுக்கிட்டு சைலண்டா இருக்காங்க, இதுல உனக்கு சதம் அடிச்சது பெரிய விசயம்னா. ஆமாம் என்பது தான் என் பதில், கூடவே எல்லாம் ஒரு விளம்பரம் தான்.
52 comments:
வாழ்த்துக்கள்.. சதத்திற்கு..
புலிக்காதல் கதை சொன்னதுக்கு நன்றீ.. இது பெரிய கேள்வி தான் விடைக்கிடைச்சிடுச்சு இன்னைக்கு...:)
உங்களுக்கு புலிப்பால் பிடிக்கும் ரகசியம் இன்னிக்குத்தான் தெரியுது. புலிப்பால் குடிக்கலாம்...புலி வாலைத்தான் பிடிக்கக் கூடாது.
வந்ததற்கு தத்துவம் !
:)
100 ஆவதற்கு வாழ்த்துக்கள் !
அதையும் சொல்ல மறந்துட்டேன். வயசாச்சு ஞாபக மறதி வந்திட்டு...
:)
//வில்லியம் பிளேக் எழுதிய அந்த பாடல்
The Tiger - William Blake
Tiger Tiger. burning bright,
In the
forests of the night;
What immortal hand or eye.
Could frame thy fearful
symmetry?//
சிவா,
இன்னுமா மனப்பாடமாக வச்சிருக்கிங்க...எதோ ஒரு வாத்தியார் நல்லா டவுசரை கழட்டி இருக்கார்னு தெரியுது.
புலி வாழ்த்துக்கள் புலி 100 க்கு:)
புலி,
முதலில் 100க்கு வாழ்த்துக்கள்.
அப்புறம் நீ பொறந்தது முதலாவே புலின்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு ராசா.
அப்புறம் இந்த் டெம்பிளேட் புலி ரொம்பவே பெருசா இருந்தாலும் நல்லாத்தேன் இருக்கு.
காட்டுக்கு ஏன் சிங்கம் ராசா, ஏன் புலி இல்லை என்று கேட்ட கேள்விக்கு விஞ்ஞானபூர்வமான விடை அளிக்க முற்பட்ட எங்கள் குழுவினரை இப்படி திரித்துப் பேசி இருப்பது வருத்தம்தான். போகட்டும்.
ஆனால் அசராமல் மீண்டும் விக்கி பசங்களையே கேட்பதற்கு நன்றி.
காதல் பத்தி ஒன்னும் சொல்லலையே.
புலிக்காதலா ? ஒன்னும் சுவாரிசியமாக இல்லை. உங்க பெரிய மனசுக்கு பின்னால் ஒரு சின்ன கதையாவது இருக்கும்னு நினைச்சேன்.
ஹூம்
:(
என்ன கொடுமை இது புலி?
புலி போட்டான் நூறு
வெற்றிப்படில ஏறு
பழத்தை பிழிஞ்சா சாறு
ரோட்டு மேல போகுது காரு
காருக்குள்ள எங்க மாமா நேரு
உழுவணும்னா வேணும் ஏறு
சாயந்திரமாச்சுன்னா போகனும் பாரு
போகாட்டி எல்லாமெ போரு
இன்னும் "ரு" ன்ற எழுத்துல என்னென்ன வார்த்தை இருக்குதோ அத்தனையும் பின்னாடி பின்னூட்டமிடறவங்க போடுங்க.
"நமக்கும் இந்த புலிக்கும் உறவு ஸ்டார்ட் ஆச்சுங்க."
டியர் பிரதமர் மன்மோகன் சிங் இங்கு தமிழகத்தில் புலி தடை செய்யபட்ட இயக்கம் ஆகும் அப்படி தடை செய்ய பட்ட இயக்கத்தோடு உறவு ஸ்டார்ட் ஆயிட்டு என்று தமிழகத்தை சேர்ந்தவர் ஒரு பதிவு போடுகிறார், ஆகையால் ஆட்சியை கலைக்க வேண்டும்!
அன்புடன்
ஜெ.:)))
புலி அது என்னா இங்கிலீபுஸில் ஏதோ ஒரு ரைம்ஸ் சொல்லி இருக்கீங்க? எனக்கு தெரிஞ்ச ஒரே ரைம்ஸ்
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
எங்க நாகை புலி சூப்பர் ஸ்டார்!!!
இதுதான் எனக்கு தெரிஞ்ச ரைம்ஸ்:)
"அப்படி போயிக்கிட்டு இருந்த நம்ம புலி ஆர்வம், பதிவுலகம் வந்த பிறகு கன்னாபின்னானு பத்திக்கிச்சு"
ஆர்வம் குறைய ஒரு சூப்பர் யோசனை ஒரு புலி மதியம் பசியா இருக்கும் பொழுது அது கூண்டுக்குள்ள போய் அதுக்கு புல் போடுங்க உங்க ஆர்வம் தானா குறைஞ்சிடும்:)
கோவி.கண்ணன் said...
சிவா,
இன்னுமா மனப்பாடமாக வச்சிருக்கிங்க...எதோ ஒரு வாத்தியார் நல்லா டவுசரை கழட்டி இருக்கார்னு தெரியுது./////
தன் குழந்தைக்கு அடிக்கடி சொல்லி கொடுத்தா கூட மறக்காது கோவி.கண்ணன்:))
வாழ்த்துக்கள் சிவா.
அடுத்த சதத்தை விரைவாக அடித்திட வாழ்த்துக்கள்.
vaazhthukkal annatha!! :-)
வாழ்த்துக்கள் சிவா..
வாழ்த்துக்கள் புலி..
சரி, அந்த விக்கியில ஒண்ணு கொத்ஸு, இன்னொண்ணு யாரு? எம்மேலே சந்தேகம் வரதுக்குள்ள சொல்லிடு!
வாழ்த்துக்கள் சதத்திற்கு.. புலிக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதை இருக்கா??
புலி தனியாத்தான் இருக்கும்.. சிங்கம் இருக்கே சிங்கம் அது குடும்பமா தான் இருக்கும்.. அதனால ராஜா, ராணி, இளவரசர்னு குடும்பத்துல எல்லாருக்கும் ஒரு பட்டம் கொடுத்திருப்பாங்க..
ஆனாலும் புலி சிங்கத்த விட சிறந்தது தான்..
டெம்ப்ளேட் அசத்தல்..
//சிங்கம்லே ACE !! said...
ஆனாலும் புலி சிங்கத்த விட சிறந்தது தான்..//
சிங்கமே சொல்லிவிட்டார் புலியார்தான் சிறந்தவர் என்று.
நீ புலியானாலும் சங்கத்து சிங்கம்லே. அதனால எது ஒசத்தினாலும் நீயும் ஒசத்திதான். (ஒரே கல்லுல ரெண்டு மாங்கா)
டெம்ப்ளேட் சூப்பரு. ஒசரத்தை கொஞ்சம் கம்மி பண்ணிடுங்க..
100/100.. வாழ்த்துக்கள்..
சதத்திற்கு வாழ்த்துக்கள்
புலி யா? நீயா? என்னடா இது புது கதையா இருக்கு? நீ ஒரு எலி அப்படின்னு தெரியும்....
ஆனா இது உனக்கே கொஞ்சம் ஓவேறா தெரில???
கண்ணா சிங்கம் தான் பெரிசு.....
யாஎன நாங்க சிங்கம் ல .............
இனி உன்னை கொல்ரது தான் என் லட்சியம் டா...
நண்பர்கல்லே அவனை நம்பாத்ீங்க...
100 ஆவது பதிவுக்கு
வாழ்த்துக்கள் சிவா :))
சதம் அடிச்ச புலிக்கு வாழ்த்துக்கள்.
புலின்னு சொன்னாலே ரொம்ப பாசமா இருக்குப்பா.எங்க டைகர் சிவாவை நாங்க என்றுமே புலின்னு தான் அழைப்போம்
அட!!!! நூறா?
அதுக்கு முதல் வாழ்த்து(க்)கள்.
ரெண்டாவது வாழ்த்து?
பதிவுக்கு.
இன்னும் படிக்கலை. படிச்சுட்டுச்சொல்றேன்:-)))
புலி கதை சூப்பர்...
அப்பறம் நூறு அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் புலி :-)
புலி நீ செண்டம் போட்டுட்டியா??? :)
//The Tiger - William Blake
Tiger Tiger. burning bright,
In the forests of the night;
What immortal hand or eye.
Could frame thy fearful symmetry?
In what distant deeps or skies.
Burnt the fire of thine eyes?
On what wings dare he aspire?
What the hand, dare seize the fire?
And what shoulder, & what art,
Could twist the sinews of thy heart?
And when thy heart began to beat.
What dread hand? & whatdread feet?
What the hammer? what the chain,
In what furnace was thy brain?
What the anvil? what dread grasp.
Dare its deadly terrors clasp?
When the stars threw down their spears
And watered heaven with their tears:
Did he smile His work to see?
Did he who made the lamb make thee?
Tiger Tiger burning bright,
In the forests of the night:
What immortal hand or eye,
Dare frame thy fearful symmetry?//
பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீயே ராசா... :))
100 அடிச்ச புலிக்கு வாழ்த்துக்கள் :))
ஆனாலும் மூச்சு வுடாம பேசிட்டீங்க. போய் ஒரு சோடா குடிச்சிட்டு வாங்க :)
//டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
எங்க நாகை புலி சூப்பர் ஸ்டார்!!!//
புலி, குசும்பன் அக்கவுண்டுக்கு எம்புட்டு ட்ரான்ஸ்பர் ஆச்சு ;)
//நீ புலியானாலும் சங்கத்து சிங்கம்லே. அதனால எது ஒசத்தினாலும் நீயும் ஒசத்திதான். (ஒரே கல்லுல ரெண்டு மாங்கா)//
Repeatu
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சிவா :-)
இந்தப் பதிவு படிக்க சுவாரஸ்யமாப் இருந்துச்சுங்கறதை விட உனக்கு இம்புட்டு பேராங்கறதுப் படிச்சி தெரிஞ்சுப் புல்லரிச்சுப் போச்சுப்பா... ஆமா உன்னை எதுக்கு அரிசின்னு கூப்பிட்டாங்க.. அந்த மத்தப் பெயர் காரணங்களையும் ஒரு தனிப் பதிவாப் போடுப்பா...
வாழ்த்துக்கள்ண்ணே :)))
அட, இவ்வளவு பெரிய "கதை"யே இருக்கா, புலிக்குள்ளே, நல்லாத் தான் இருக்கு! அது சரி, யாரு எழுதிக் கொடுத்தாங்க, அந்தக் கவிதையை! எங்கே இருந்து ஜி3 பண்ணினீங்க? இத்தனை நாள் நினைப்பு இருந்துச்சுன்னு எல்லாம் புருடா விடாதீங்க! :P :P
நூறாவது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கூடவே தீபாவளி வாழ்த்துக்களும்.
100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் புலி....
ஆமா அதென்ன அரிசின்னு பட்ட பெயர்?
100vathu pathivu pota ungaluku engaludaya vaazhthukal..inda mathiri niraya kosu varuthi sutha vendum
100 ஆவதற்கு வாழ்த்துக்கள் ! :)))
//அப்ப தலையில், முதுகில் தொட்டால் லைட்டா கோவம் வரும், அதான்.//
போடா பன்னி!னு திட்டுவியா? :p
//எதோ ஒரு வாத்தியார் நல்லா டவுசரை கழட்டி இருக்கார்னு தெரியுது.//
டவுசரை மட்டும் தானா? :p
100vadhu pathivukku vazhththukkal:)
Pulikku pinnadi ivalavu paeriya falshbackaa...
வாழ்த்துக்கள் புலி சிவா:)
100,1000,10000னு பதிவுகள் வரும்போதும் வந்து வாழ்த்தறேன்.
புலிப்படம் ப்ரமாதமா இருக்கு.
எங்க சின்ன வயசில புலி லேபல் சேர்த்து வைப்ப்போம் அந்த ஞாபகம்தான் வருது உங்க பதிவை ப்பார்த்து.
மீண்டும் வாழ்த்துகள்.
நூறுக்கு வாழ்த்துக்கள் சிவா...
ஓ...
இந்தப் பதிவு ஒரு புலியின் டைரிக் குறிப்பா?
கலக்கறீங்க புலி!
100-க்கு வாழ்த்துக்கள்!
//ILA(a)இளா said...
நீ புலியானாலும் சங்கத்து சிங்கம்லே. //
அதானே
புலி தனியா வந்தா புலி!
புலி கூட்டா வந்தாச் சிங்கம்!!
எப்பிடி ராசா, இப்படி புலி டு சிங்கம் கூடு விட்டு கூடு பாயறீங்க? :-)
மீ தி 50!!!!
பதிவின் தலைப்பில் இருக்கும்
"காதல்"
பதிவுக்குள்ள எங்க போச்சுது?
வேர் இஸ் த காதல்?
புலி, வயிற்றில் கரைக்காதே புளி-னு தனிப் பதிவு போடப் போறேன்! :-))
கொஞ்சம் லேட்டாகிவிட்டது,தீபாவளி நேரம் என்பதால்.
100 எல்லாம் ஒரு விஷயமா? உங்களுக்கு?
Anyway வாழ்த்துக்கள்.
100 வது பதிவுக்கு முதலில் வாழ்த்துக்கள்!
டெம்ப்ளேட் பொருத்தமா கூடவே சூப்பராவும் அமைஞ்சிடுச்சு! அதுக்கும் என்னோட வாழ்த்துக்கள்!
நீ எப்பவுமே புலிதான்யா! அதுல சந்தேகமே இல்லை!
தீபாவளி வாழ்த்துக்கள் மாப்ஸ்!
Belated Happy Diwali! nalla puli kadhai sollaareenga!
Belated Diwali Wishes nga siva:)
எல்லா ஜனத்துக்கும் நன்றி :)
பதில் சொல்ல முடியாம போச்சு... ஆனால் பலரின் கமெண்ட்டை நான் ரொம்பவே ரசித்தேன். மீண்டும் நன்றிகள் பல :)
Post a Comment