Tuesday, October 30, 2007

எல்லாம் ஒரு விளம்பரம் தான்~

கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் கவுண்டமணி கிட்ட எல்லாம் ஒரு விளம்பரம் தான் என்று சொல்லுவார், அதுக்கு அவரு உனக்கு ஏன் இந்த விளம்பரம் அப்படினு சொல்லுறத வச்சு விளம்பரத்தை அவ்வளவு சாதாரணமா எடுத்துக்க முடியாதுங்க. எந்த அளவுக்கு விளம்பரம் செய்யுறோமோ அந்த அளவுக்கு அதன் பலன் கிடைக்கும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. ஒரு விளம்பரத்தின் மூலம் மட்டுமே ஒரு பொருளை மக்களிடம் வெற்றி பெற வைத்து விட முடியுமா என்றால் முடியும் என்பது தான் என் பதில். ஆனால் அந்த வெற்றியை தக்க வைக்கும் அளவுக்கு கொஞ்சமாச்சும் சரக்கு இருக்கனும். (தரம் போன்ற இன்ன பிற அயிட்டங்கள்). சரி என்னத்துக்கு நாம் எப்படி டெக்னிகலா பேசிக்கிட்டு, அதை எல்லாம் பேச நிறைய பெயர் இருக்காங்க. நாம நம்ம கதைக்கு வருவோம்.

டிவியில் விளம்பரங்களுக்கு நடுவில் கிரிக்கெட் பாக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே நமக்கு விளம்பர படத்தின் மேல் ஒரு காதல் உண்டு. ஒரு ஒவரில் முதல் பந்தையும் கடைசி பந்தையும் முழுங்கி முழுங்கி விளம்பரங்கள் போட்டு நமக்கு அப்படி ஒரு காதலை வர வைத்த தூர்தர்சனுக்கு தான் நன்றி சொல்லனும். ஒரு ஒவருக்கும் அடுத்த ஒவருக்கும் இடையில் 4, 5 விளம்பரங்கள் போட்டு விடுவார்கள். அப்படி பார்த்து பார்த்து ஆரம்பிச்ச நம்ம காதல் ஒரு நிமிடத்திற்க்குள் சொல்ல வேண்டிய விசயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் இந்த கண்கட்டி வித்தை பார்த்து கிறங்கி காதல் கன்னாபின்னானு பெருகி போச்சு. அப்படி நான் ரசிச்ச சில விளம்பரங்களை பத்தி பேச தான் இந்த பதிவு.

இந்திய விளம்பரங்களை பற்றி மட்டும் இந்த பதிவுல பாப்போம்.

சமீபகாலமாக வரும் ஹைடெக் ஆன விளம்பரங்கள் நாம் இப்ப அடிக்கடி பாத்து கொண்டு இருப்பது தான். அதனால் சில காலங்களுக்கு முன்பு வந்த சில விளம்பரத்தை பார்ப்போம், அதுவும் போக இப்பொழுது வர விளம்பரங்களில் பல ஆண்களையும், பெண்களையும் செம கவர்ச்சி காட்டி எடுக்கப்படுது, அந்த நேரத்தில் வாய் பிளந்து பாத்தாலும்,சில காலம் கழித்து இந்த விளம்பரங்கள் எல்லாம் மனதில் இருக்குமா என்றால் சந்தேகம் தான்.

* விளம்பரத்திலே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஊருல இருக்குற அம்புட்டு பேர் வாயில் அந்த பெயர புரள வைத்த புள்ளிராஜா விளம்பரம் உண்மையிலே ஒரு சூப்பர் விளம்பரம் தாங்க... புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமானு அந்த ஒத்த வார்த்தை வச்சு பட்டைய கிளப்பிட்டாங்க நம்ம ஆளுங்க. பல விமர்சனத்துக்கு உள்ளான விளம்பரம் அது. இருந்த போதிலும் அனைவரையும் சென்ற அடைந்த விளம்பரத்தில் இதுவும் ஒன்னு.

* நீங்க எந்த காலேஜ், காலேஜ் ஜா நானா... மம்மி.. அப்படினு ஒரு விளம்பரம், மைசூர் சாண்டல் சோப்பா.. சரியா தெரியல... அது ஒரு அழகான கவிதை. இப்ப அதே விளம்பரம் மாதவனை வச்சு வருது போல, ரீமிக்ஸ் எடுப்படல.

* சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய், என்ன வெண்மையோ ஆஹா என்ன வெண்மையோ இருந்த ரீகல உஜாலா விளம்பரம் ஒரேடியா கவுத்துடுச்சு. நாங்க உஜாலாவுக்கு மாறிட்டோம், அப்ப நீங்கனு, கேட்டு கொக்கு ஏன் வெள்ளையா இருக்கு, அது உஜாலாவுக்கு மாறிடுச்சுனு நம்மிடைய காமெடி பண்ணும் அளவுக்கு உஜாலா விளம்பரம் இருந்துச்சு.

* காபினா நரசுஸ் காபி தான் பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு

* சூ.. சூ... அந்த சுகர் பாய்ய வர சொல்லு (ப்ரூ)

மேல சொன்ன விளம்பரங்கள் எல்லாம் எந்த ஒரு பெரிய விசுவல் கான்சாப்ட்டும் இல்லாம வெறும் வார்த்தைகளை வைத்து ஹிட்டான விளம்பரங்கள். இது போல ஏகப்பட்ட விளம்பரங்கள் இருக்கு. சில சமயம் மொக்கையான சில வார்த்தைகளை வச்சுக்குட ஹிட் குடுத்து இருக்காங்க. உ.தா. குளிக்காத (ஏதோ ஒரு சோப் விளம்பரம்), இது எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்.

அந்த விளம்பரங்கள் எல்லாம் ஒரு வகைனா, விஸ்வல் மூலமும் அழகான ஒரு கவிதையை நம் முன் கொண்டு வருவது இன்னொரு வகை. எனக்கு பிடித்தவையும் கூட. இந்த வகையில் ஏகப்பட்ட அழகான விளம்பரங்கள் இருக்கு. பஜாஜ், ஹட்ச், ஏர்டெல், நெஸ்கபே, டைட்டன், கேட்பரீஸ், பெச்சி, கோக் போன்ற நிறுவனங்களில் விளம்பரங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதுமையாக வரும். ரூம் போட்டு யோசிச்சா கூட இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று திணறும் அளவுக்கு இருக்கும் அவர்களின் சில விளம்பரம். ஒவ்வொரு நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தே ஒவ்வொரு பதிவு போடலாம்.

பதிவின் நீளத்தை கருதி அவற்றை விரிவாக பேசாமல் எனக்கு மிகவும் பிடித்த சில விளம்பரங்கள் கீழே இணைத்து உள்ளேன். கண்டு மகிழுங்கள். உங்கள் கருத்தையும் உங்களை கவர்ந்த சில விளம்பரங்கள் பற்றியும் பின்னூட்டங்களின் கூறுங்கள். கடைசியாக உள்ள வீடியோ காட்சியை காணத் தவறாதீர்கள்.
Bajaj Avenger


என்னிடம்(தம்பி) உள்ள வண்டி. வண்டி வாங்க முடிவு செய்த பிறகு தான் இந்த விளம்பரம் பார்த்தேன். இசை, வார்த்தைகள், காட்சி படம் ஆக்கிய விதம் என அனைத்தும் என்னை கவர்ந்தது. அதிலும் ஐ பார்கேவ் மை பார்பர் என்ற வரியும் காட்சியும் சூப்பர். நமக்கும் அது போல ஒரு வெட்டு உண்டு, கழுத்தில்.

Airtel


சொல்ல ஒன்றும் இல்லை. இது அனுபவிக்க வேண்டிய விளம்பரம். Express Yourself என்ற வார்த்தைகளை அழகாக புரிய வைத்த விளம்பரம். நானும் ஏர்டெல் கஸ்டமர் தான். :)

Hamara Bajaj


நமது கலாசாரத்தை அழகாக காட்டிய விளம்பரம் இது. ஆல் டைம் பேவரைட் ல ஒன்னு.

Cadburys DiaryMilk


இந்த விளம்பரத்தை பத்தி என்ன சொல்லுறது, மெலிதாக பூக்கும் புன்சிரிப்பை தவிர்த்து. கையில் மருதாணி, பஸ்யில் போகும் காதலிக்கு சாக்லெட் கொடுக்கும் விளம்பரங்கள் அந்த வகையை சார்ந்தது தான்.

Bajaj Caliber


வண்டியின் செயல்பாடு அந்த அளவுக்கு இல்லாட்டியும், இந்த விளம்பரம் சிம்பிளி சூப்பர். காட்சி அந்த அளவுக்கு தெளிவாக இல்லை. இருந்தாலும் பார்க்கலாம். இதே போல ஒரு நாள் நம்ம தம்பி(கதிர்) வண்டி எடுத்துட்டு போய் பாவனாவுக்கு நாய் குட்டி பரிசாக கொடுக்காமல் இருந்தா சரி தான்.

Respect your National Anthem, Respect your Nation


இந்த விளம்பரத்தை பார்த்து சத்தியமா எழுந்து நின்று விட்டேன். நீங்கள் எப்படி?

47 comments:

லொடுக்கு said...

புலி சார்,

'அழகான காலை மாலை ருசி' என்ற பாடலுடன் வரும் கவித்துமான சக்ரா கோல்ட் டீயின் விளம்பரம் உங்களுக்கு பிடிக்காதா? என்னோட ஆல் டைம் ஃபேவரைட் அது தான்.

ஜே கே | J K said...

//கொஞ்சமாச்சும் சரக்கு இருக்கனும்//

என்னா சரக்கு சொன்னா நல்லாயிருக்கும்???

நாகை சிவா said...

லொடுக்கு அண்ணனே... நமக்கு எல்லா விளம்பரமுமே பிடிக்கும், எதை சொல்ல எதை விடனு ஏகப்பட்டது ஆகி போச்சு. சக்ரா கோல்ட் டீ விளம்பரத்த மறக்க முடியுமா என்ன.

கதிர் said...

//நீங்க எந்த காலேஜ், காலேஜ் ஜா நானா... மம்மி.. அப்படினு ஒரு விளம்பரம், மைசூர் சாண்டல் சோப்பா.. சரியா தெரியல... அது ஒரு அழகான கவிதை//

அது சந்தூர்டா அம்பி!

கதிர் said...

வெண்ணிற பற்கலுக்கு கோபால் பல்பொடி கேட்டு வாங்குங்க கோபால் பல்பொடி.

புன்னகையும் பொன்னகையும்
நீங்காத செல்வமாய்
வளமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன்
உளமார வாழ்த்துகிறேன்.
லலிதா ஜ்வல்லரி

ஊக்கமுள்ளோருக்கு பரமதிருப்தி
சிசர்ஸ் பில்டர்.

பதினாலு முப்பொத்தொன்னு பயோரியா பல்பொடி பலே பலே பல்பொடி.

வாஷிங் பவுடர் நிர்மா
(ஆயா வூட்ல குருமா..)
பாலின் வண்ணம் போல
நிர்மாவாலே வருமே
வண்ணத்துணிகள் எல்லாம் பளபளப்பு பெறுமே எல்லோரும் போற்றும் நிர்மா.
(அந்த பிகர் இப்ப வளர்ந்துருக்கும்ல)

தலைவலியா?
மூக்கடைப்பா?
ஜலதோஷா?

ஆமாப்பா ஆமா!

அப்ப விக்ஸ் ஆக்ஷன் 500 எடுத்துக்கோங்க.

ஜண்டுபாம் இதே மாதிரிதான்.
பாம் ஒன்று செயல் மூன்று.

எனக்கு ரேடியோ விளம்பரம்தான் ஞாபகம் இருக்கு. டீவி விளம்பரம்லாம் உடனே உடனே மறந்து போயிடுது.

நாகை சிவா said...

@ ஜெ.கே.

//என்னா சரக்கு சொன்னா நல்லாயிருக்கும்???//

சரக்கு விளம்பரத்தில் கிங் பிஷ்சர், ராயல் சேலஞ்ச், 8 PM, பக்கார்டி விளம்பரங்கள் நல்லா இருக்கும். :)

கதிர் said...

எனக்கு பிடிச்சது தூர்தர்ஷன் நியூஸ் விளம்பரம்தான். :)

கதிர் said...

//சரக்கு விளம்பரத்தில் கிங் பிஷ்சர், ராயல் சேலஞ்ச், 8 PM, பக்கார்டி விளம்பரங்கள் நல்லா இருக்கும். :)//

பேக்பைப்பர் கோல்ட விட்டுட்டியே புலி!

CVR said...

சூப்பரு!!
விளம்பரத்துறை எனக்கும் முகவும் பிடித்தமான துறை!!
நல்ல சான்ஸு கிடைத்தால் விட்டு ஓடி விடலாம் என்று நான் கனவு காணும் துறைகளில் இதுவும் ஒன்று.

ரொம்ப நல்ல பதிவு!
வாழ்த்துக்கள்!! :-)

Sumathi. said...

ஹாய் சிவா,

//விளம்பரங்கள் போட்டு நமக்கு அப்படி ஒரு காதலை வர வைத்த தூர்தர்சனுக்கு தான் நன்றி சொல்லனும்.//

அட நீங்களுமா? நான் கூட ஒரு பயங்கர விளம்பரப் ப்ரியை, அதுவும் இந்த குழந்தைகள் வர்ற விளம்பரம்னா நான் நிஜமாவெ ஐக்கியமாயிடுவேன்.

இந்த நூடுல்ஸ் எங்கே, அப்பறம் snugy இப்படி இன்னும் நிறைய்ய இருக்கு. gud nice to read.

மங்களூர் சிவா said...

ம்

தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்துலன்னு நினைக்கிறேன்

'வாஷிங் பவுடர் நிர்மா'
அடிக்கடி வரும் அந்த மியூசிக் ரொம்ப நல்லா இருக்கும்

இப்போதைக்கு இந்த விளம்பரம் பாத்தமாதிரியே ஞாபகம் இல்லை.

இப்பல்லாம் நிறைய விளப்பரங்கள் நல்ல 'ரிச்'சாவும் குழந்தைகளை குறி வைத்தும் இருக்கு.

இப்படி எல்லாம் ஊரை ஏமாத்தலைனா இந்த lays, maaggi, etc.. எல்லாம் எப்படி பொழப்பு நடத்துவாங்க

MyFriend said...

புலிண்ணே,

எனக்கு பிடிச்ச விளம்பரங்களை லிஸ்ட் போட ஆரம்பிச்சேனா, எதுக்கு புரியாத மொழியில திட்டுறேன்னு கேட்பீங்க.. அதான், வேண்டாம்ன்னு விட்டுடுறேன். :-P

கோபிநாத் said...

\\நமது கலாசாரத்தை அழகாக காட்டிய விளம்பரம் இது. ஆல் டைம் பேவரைட் ல ஒன்னு\\

சிவா எனக்கும் இது ரொம்ப பிடிச்ச விளம்பரம்.

சின்ன சின்ன ஆசை...ஆசை சாக்லெட் விளம்பரம்

மீரா சீயக்காய் படவுருக்கு ஒரு சின்ன பெண்ணு அவுங்க அம்மா, பாட்டி மூணு தலைமுறை வச்சி ஒரு விளம்பரம் வரும்.

டாட்டா உப்பு விளம்பரம் கூட நல்லாயிருக்கும்.

கோபிநாத் said...

"காலம் வகுத்ததை யார் அறிவாரோ
நானோ நீயோ சொல்லவும் தகுமோ
காலம் வகுத்ததை எதிர் கொண்டிடவே
ஒவ்வொரு கனமும் காத்திருப்போமே
காத்திருப்போமே ".....
என்ற பாடலுடன் ஒரு விளம்பரம் வரும். அதில் அந்த நாயகன் ராணுவத்தில் வேலை செய்வான். ஏதோ வண்டி விளம்பரம் தான்னு நினைக்குறேன் அதனோட வரிகள் அழகான கவிதை ;)

இன்னும் நிறைய இருக்கு....;)))

வடுவூர் குமார் said...

பஜாஜ்க்கு கீழ எந்த வீடியோவையும் பார்க்கமுடியவில்லை.
எனக்கென்னவோ அந்த Bru தான் அழகாக இருந்தது போல் தெரிகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

நல்லவேளை! நீ தப்பிச்ச! அந்த பஜாஜ் (நாய்க்குட்டி பரிசளிக்கும்) விளம்பரத்தை மட்டும் போடாம இருந்திருந்தா உன் கூட பேசியே இருக்கமாட்டேன் :-)

வல்லிசிம்ஹன் said...

ஐ லவ் யு ரச்னா,

அமிர்தாஞ்சனின் போயிந்தே,

குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்,

லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே..
நான் சின்னக் குழந்தையா இருந்தப்போ....இதெல்லாம் மறக்கமுடியுமா:))
அந்தக் கடைசி விளம்பரம் தூள் சிவா.

கோவி.கண்ணன் said...

சிவா,

நாகை திரையரங்கில் லா....லல.......லா....லலல்லா...லாலால்லா !

Liril சோப் கிளுகிளு விளம்பரத்தை எப்படி மறந்தீர்கள் ?

:)

கோபிநாத் said...

\\இந்த விளம்பரத்தை பார்த்து சத்தியமா எழுந்து நின்று விட்டேன். நீங்கள் எப்படி?\\

பின்னிட்டாங்க....நின்று கொண்டு ரசிச்சேன்....பின்னனியில் அமிதாப் குரலும் அருமை...;)))

மங்கை said...

சிவா

நாடுப்பண் அருமை..
இன்றைய தலைமுறையினருக்கு கண்டிப்பா போட்டுக்காட்டனும்.. அருமையா வந்திருக்கு... நட்டுப்பற்றை அழகா சொல்லி இருக்காங்க..

நீண்ட நாட்களுக்கு பிறகு நேத்து கல்லூரியின் ஸ்போர்ட்ஸ் டேல நாட்டுப்பண்ணுக்கு எழுந்து நின்னப்ப மனசு லேசான மாதிரி ஒரு உணர்வு...மனசார இதை உணர்ந்தேன்...

Sanjai Gandhi said...

//பல விமர்சனத்துக்கு உள்ளான விமர்சனம் அது//
"விமர்சனத்துக்கு உள்ளான விளம்பரம் அது" வருனுமோ?

அட விளம்பரத்துக்கு இவ்ளோ ரசிகர்படையா? நான் டிவில அதிகம் பாக்கரதே விளம்பரம் தானுங்கோ. அதும் இந்த குட்டி பசங்க( என்ன மாதிரி) வர விளம்பரங்கள் இருக்கே... ச்சும்மா பாத்துக்கிட்டே இருக்கலாம்பா... நான் அதிகம் ஹம் பன்றதே விளம்பரத்துல வர பாட்டுங்கள தான்.
இப்போ சமீபமா..
ஆசை அதற்கு மேலே - ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் , கோவை.
மத்தாப்பு சுத்தி சுத்தி போடத்தான் வேணும் - சென்னை சில்க்ஸ்.

எப்பொவுமே ,
G for H for winner for health..

Sanjai Gandhi said...

//எப்பொவுமே ,
G for H for winner for health..//

Gold Winner :P

Avanthika said...

Kodumai paartheengla

Hockey Playwers and Cricket Players kootu Rashrapathi Bhawan la honour pannaanga innaikku... athula last la National Anthem kku munnaadiyea ellaa playersum elundhu veliya poitaanga.. players mattum illai.. anga irundha mathavangalum elundhu veliyta poittaanga...according to Protocol President pona piragu thaan ellarum poganumaam...aana inga President mattum thaniya ukkaandhuttu irukkaanga...

players representing India behaving in such a disgraceful manner...it is a shame

Anonymous said...

அது சந்தூர் சோப்ன்னு நினைக்கிறேன் (காலேஜா நானா)

ரொம்ப சரிங்க. ரொம்ப சவாலான விஷயம் இந்த விளம்பரம்.

எனக்கும் விளம்பரங்கள்னா ரொம்ப பிடிக்கும். என்ன பண்ணப் போறோம்ன்னு தெரியாத காலத்துல இதுல ஒரு வேலைக்கு முயற்சி பண்ணி...கடைசி ரவுண்டு வரைக்கும் வந்து கவுத்திரிச்சு. அப்புறம் மீடியா கோர்ஸ் பண்ணலாம்ன்னு விலையக் கேட்டவன் அப்பிடியே ஓடி வந்துட்டேன். ஹூம்...:)))

KC! said...

officela utkarndhu videos parka mudiyala, but nalla collection vachirukeenga

rv said...

இது அலுக்காத டாபிக்...

இப்போதைக்கு பேவரிட்னா அந்த

1. MTR gulab jamoon - ரேஸ்ல எத்தன பேரு ஓடினாங்க? ரெண்டுனு கைகாட்டிட்டு ஓடும் பையன்

2. ப்ரூ சிறிய பேக்

3. ம்மா.... நூடீடீல்ஸ்... :)))

4. ராஜு கைய வச்சுகிட்டு சும்மா இரு!

-------------
இதுபற்றிய பழைய பதிவு

வித்யா கலைவாணி said...

1.முதன் முதலில் மோட்டரோலா போன் விளம்பரம் (உணவகத்தில் ஒரு பெண் செல்பேசியில் பேச ஒரு வயதானவர் ஏமாறும் காட்சி, கண்ணாடி உடையும் சத்தத்துடன்)
2. ஒரு கண்ணாடிக்கான விளம்பரம். ( தண்ணீரை கண்ணாடியில் ஒரு பெண் ஊற்றிக் கழுவார்)

Anonymous said...

ellor kangalum enthan melay...antha ad pathi potrupeenganu nenachu fulla scroll panna athu missing...enna koduma ithu...

~gils

Anonymous said...

'என்ன ஆச்சு?
குழந்தை அழுதுது!
உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் குடு, நீ குழந்தையா இருக்கறச்சே அதான் குடுத்தேன்.'
இதையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க...
மல்லி

Anonymous said...

See this blog please

http://creativecriminal.blogspot.com/

More intellectual ads screened everywhere in the world

ACE !! said...

vilambarathukke vilambaram kuduthirukeenga.. :))

Pepsi's "nothing official about it" oru sama raja thanthira vilambaram

G3 said...

Aaha.. evlo pesinaalum alukkaadha topic aachey.. ennoda favouritesum list potta 4 post onna podalaam :)

Romba pudichu naan you tubela thedi kedaikaama pona vilambaram fortune refined sunflower oil. Munnadi idhukku oru 3 ads varum (oru thatha pesara maadiri, oru young girl pesara maadiri and oru working person pesara maadiri) Romba fav. Ippo adhoda continuationa 2nd part podaraan.. adhu suthama pudikala :(

G3 said...

@Gopi

//மீரா சீயக்காய் படவுருக்கு ஒரு சின்ன பெண்ணு அவுங்க அம்மா, பாட்டி மூணு தலைமுறை வச்சி ஒரு விளம்பரம் வரும். //

Naan annikkae ungalukku sonnen.. adhu hamam nalangumaavu soapkaana adnu :P

G3 said...

@Gils,

//ellor kangalum enthan melay...antha ad pathi potrupeenganu nenachu fulla scroll panna athu missing...enna koduma ithu...

~gils//

Jolsaanandhannu perfecta prove pandreenga :)

ரசிகன் said...

எல்லாமே சும்மா நச்சினு இருக்கு சிவா.. நானுங்க்கூட அறுவை தொடர்ர்ர்ர்ர் சீரியலை விட்டுட்டு விளம்பர இடைவேளையில டீவி பக்கம் திரும்பறதுண்டு..
அதிலும் அந்த கடைசி ஓளித்துண்டு அருமை..நாம..உதாரணமா நடந்துக் காட்டனாக்கா.. நம்ப வருங்கால சமுதாயம் உண்மையிலேயே அத பின்பற்றும்..இல்ல..

ஜி said...

:))))

antah Surf Excel ad... "Karai nallathuthaan".. antha kutti paiyan mudoda sanda podum vilambaram... athuthaan namma favourite :))

Anonymous said...

எனக்கு இன்னமும் மனதில் நிற்கும்
விளம்பரப்பாடல் இது.ஆல் இந்திய
ரேடியோவில் ஒலிபரப்பான ஒரு
விளம்பரம்.இப்போது வருதோ
தெரியவில்லை.

என் அத்தானின் வயல்தனிலே அருவிபோல் தண்ணீரு பாயுது
பினலக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே
தங்கமிது.
மனதை கொள்ளை கொண்ட இசையுடன்
கூடிய விளமபரம்.பலருக்கு
ஞாபகம் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

Unknown said...

மனித உறவுகளையும் உணர்வுகளையும் மையமாக விளம்பரம் எடுப்பதில் ராஜீவ் மேனன் கைதேர்ந்தவர்.
அந்த ஏர்டெல் விளம்பரம் அவர் எடுத்ததுதான்.
அந்த தேசிய கீதம் விளம்பரமும், பஜாஜ் கலாச்சார விளம்பரமும் கூட அவர் எடுத்ததுதான்னு நினைக்கிறேன் சரியாத்தெரியல.

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருங்கய்யா
இதெல்லாம் எதுக்கு இப்போ? எதனா விளம்பரம் செய்யற மாதிரி சேதி சொல்லப் போறீகளா?

இலவசக்கொத்தனார் said...

இப்போ அடுத்த டேப்புக்குப் போயிடுமில்ல!!

Geetha Sambasivam said...

எழுந்து நிற்க வைச்சக் கடைசி விளம்பரமும் சரி, கோலத்தை மிதிக்காமல், அழிக்காமல் போகும் இரு வண்டிகளும் வரும் விளம்பரமும் சரி, மனதைத் தொட்டது.
அது சரி, எங்க வீட்டிலே காலிபர் தான் இருந்துச்சு, அது தெரிஞ்சு தான், சரியா ஓடலைனு சொல்றீங்களோனு ஒரு சந்தேகம்! :P

எனக்குப் பிடிச்ச விளம்பரம், ரேமண்ட்ஸின் அப்பாவும், அவர் குழந்தையைக் கொஞ்சுவதும், அப்போது பின்னணியில் வரும் "eh, feeling heavens! isn't it?" என்ற வாக்கியமும் தான். அது தவிர, விஐபி சூட்கேஸுக்கு வரும் விளம்பரங்களும் (இப்போ வரக் காணோம்) இன்னும், சு சு, சுகர் பாயும் பிடிக்கும். நிறையவே இருக்கு சொல்ல, அப்புறம் என்ன இங்கேயே பதிவு போட ஆரம்பிசுட்டீங்கனு கேட்பீங்க! :P
அது என்ன இவ்வளவு லேட்டாத் தகவல் கொடுக்கறீங்க? :P

Unknown said...

நேத்து (30.10.2007) www.tubetamil.com ங்கற வெப்சைட் ல பார்த்தேன் . சிம்பு ரஜினி மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா கிட்ட போன்ல மகா மட்டமா பேசுற மாதிரி ஒரு ஆடியோ ரிக்கார்டிங் போஸ்ட் பண்ணி இருந்தாங்க... prank கால் மாதிரி டைப். கிட்ட தட்ட நிஜமோ ன்னு நினைக்க தோணுது... அங்க இல்லாட்டி www.டமில்க்லிப்ழ்.com ல தேடி பாருங்க ... கிடைக்கலாம்...

இதுவும் விளம்பரமா ?? எந்த கேட்டகோரியில சேக்கிறது ?

இஞ்சி தின்ற குரங்கு....

கோபிநாத் said...

\\G3 said...
@Gopi

//மீரா சீயக்காய் படவுருக்கு ஒரு சின்ன பெண்ணு அவுங்க அம்மா, பாட்டி மூணு தலைமுறை வச்சி ஒரு விளம்பரம் வரும். //

Naan annikkae ungalukku sonnen.. adhu hamam nalangumaavu soapkaana adnu :P\\

இன்னிக்கும் மறந்துட்டேன்..;;))

Dreamzz said...

nalla alasal.
youtube ellam veetula poi thaan pakkanum :)

JB said...

தூர்தர்ஷன் பார்த்த ஒரு பீலிங்...:) நன்றி சிவா..

Divya said...

Vicco Turmeric Aturvedic cream - அந்த விளம்பர பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்,
அருமையான பதிவு!

இம்சை அரசி said...

எனக்கு கூட இந்த dairy milk ad எல்லாமே ரொம்ப பிடிக்கும்.

இதே மாதிரி முன்ன ஒரு வண்டி விளம்பரம் வரும். பேரு மறந்து போச்சு. மூணு வண்டி ஒட்டிட்டு பொவாங்க. நடுவுல இருக்கற வண்டில பின்னாடி செஸ் போர்டு வச்சு ஓரத்துல இருக்கற ரேண்டு வண்டியிலயும் பின்னாடி உக்காந்திருக்கறவங்க செஸ் விளையாடிட்டே போவாங்க. அட்டகாசமா எடுத்திருந்தாங்க.

அப்புறம் ப்ரின்ஸ் ஜுவல்லரி விளம்பரம். பொண்ணு கல்யாணத்தப்போ அப்பா ஒரு வளையல் எடுத்துட்டு வரும்போது சின்ன வயசுல சைக்கிள் ஓட்டக் கத்துகுடுத்தத நினைச்சுட்டே வருவார். அந்த பாட்டு கூட
"என்னருமை மகளே! என் பெருமைக்குரியவளே! இன்றுனது மண நாள். என்னை விட்டு செல்லும் நாள்" லாஸ்ட் லைன் அப்போ அவர் கண்ணு கலங்கும். அட்டகாசமான விளம்பரம். இன்னும் நிறைய லிஸ்ட் போடலாம் :)))