Monday, October 22, 2007

ஏன் இப்படி?



அவர்களா அப்படி?
இவர்களா இப்படி?
என்ற கேள்விகளில்
மூழ்கி "நான் எப்படி"
என திகைத்தேன்

அவர்கள் அப்படி தான்!
இவர்கள் இப்படி தான்!
என்ற பதிலில்
கரை ஏறினால்
"நான் எப்படியோ "
இருக்கலாம்
என தெளிந்தேன்.

நன்றி : ஏன் இப்படித்துவம்

80 comments:

நாகை சிவா said...

இது யாரையும் மனதில் வைத்துக் கொண்டு போட்ட பதிவு இல்லை.
நேற்று ஏற்பட்ட தலைவலி உச்சத்தை அடைந்த காரணத்தால் தலையை அழுத்தி பிடித்து விட்டத்தை வெறித்து பார்த்த நேரத்தில் தோன்றி எண்ணங்கள்.

மீண்டும் சொல்லுறேன், இது யாரையும் மனதில் கொண்டு போட்ட பதிவு இல்லை. முக்கியமா அமீரகத்தில் இருக்கும் பதிவர்களை மனதில் நிறுத்தி போட்ட பதிவு அல்ல.. அல்ல.. அல்லவே அல்ல..

நாகை சிவா said...

ஹலோ வேதா....

நன்றி - படத்துக்கு ..

ஆனா இது கவுஜு இல்லை.. அதை நல்லா மனசுல வச்சுட்டு படிங்க...

குசும்பன் said...

"மீண்டும் சொல்லுறேன், இது யாரையும் மனதில் கொண்டு போட்ட பதிவு இல்லை. முக்கியமா அமீரகத்தில் இருக்கும் பதிவர்களை மனதில் நிறுத்தி போட்ட பதிவு அல்ல.. அல்ல.. அல்லவே அல்ல.."

குறிப்பாக தம்பியை இல்லவே இல்ல!!! சரிதானே புலி.

குசும்பன் said...

பதிலில்
கரை ஏறினால்///

எப்படிய்யா அப்படி கரை ஏற முடியும்?
ஒன்னு குளத்து படியில் கரை ஏறலாம், அல்லது ஆற்று கரையில் கரை ஏறலாம் அது என்னா புச்சா பதிலி கரை ஏறுவது?

கதிர் said...

சக்கரவள்ளி கெழங்கு மாமா சமஞ்சது எப்படி என்ற அற்புதமான பாடலை நினைவு"படுத்துகிறது" இந்த கவிதை.

நாகை சிவா said...

//நல்ல வேளை சொன்னீங்க இல்லேன்னா அதை கவிதைன்னு தப்பு கணக்கு போட்ருப்போம் :D//

கொஞ்ச நேரம் பயப்பட வச்சுட்டீங்க... இப்ப தான் நிம்மதியா இருக்கு :)

கதிர் said...

//குறிப்பாக தம்பியை இல்லவே இல்ல!!! சரிதானே புலி.//

குசும்பா உன் அறிவு முதிர்ச்சியை நினைத்து ஆனந்தப்படாமல் இருக்க முடியவில்லை. இத்தனை நுணுக்கமான புத்திசாலியை அமீரகத்தில் போட்டு அமுக்கிவிட அந்த ஆண்டவனுக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. விரைவில் நீ ஆப்பிரிக்கா சென்று புலியுடன் பணியாற்ற வேண்டும். உலக அறிவை மேலும் பெருக்கி கூட்டி வாரி கழிக்க வேண்டும்.

நாகை சிவா said...

//எப்படிய்யா அப்படி கரை ஏற முடியும்?
ஒன்னு குளத்து படியில் கரை ஏறலாம், அல்லது ஆற்று கரையில் கரை ஏறலாம் அது என்னா புச்சா பதிலி கரை ஏறுவது?//

குசும்பா... கேள்வியில் மூழ்குவது மெய் என்றால் பதிலில் கரை ஏறுவதும் மெய் தான் ராசா....

மல்லாக்க படுத்து விட்டத்த வெறிச்சு பாரு.. உனக்கு புரியும்

கதிர் said...

புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதென்று கேள்விப்படலாம்
ஆனால் பூனையை பார்த்து
புலி சூடு போட்டுக்ககூடாது.

நண்பர் குசும்பர் இதுகுறித்து விளக்கமாக 3D திருடி அனிமேசன் செய்வார்.

நாகை சிவா said...

//குறிப்பாக தம்பியை இல்லவே இல்ல!!! சரிதானே புலி.//

குசும்பரே!

தம்பியண்ணனை குறி வைத்து எல்லாம் என்னால் பதிவு போட முடியுமா சொல்லுங்க....

Geetha Sambasivam said...

ஹய்யோ, நல்லா இருந்த என்னைக் கூப்பிட்டு பார்க்கச் சொல்லி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புலி, அந்தத் தலைவலி இப்போ எனக்கு வந்தாச்சு! :P

நாகை சிவா said...

//சக்கரவள்ளி கெழங்கு மாமா சமஞ்சது எப்படி என்ற அற்புதமான பாடலை நினைவு"படுத்துகிறது" இந்த கவிதை.//

சமுதாய கருத்துகள் புகைந்து கிடக்கும் அந்த பாடலை நினைப்படுத்தியமைக்கு நன்றி தம்பிண்ணனே...

படுத்துவது தங்களுக்கு புதிது அல்ல என்பதையும் மீண்டும் தெளிவுப்படுத்தி வீட்டீர்கள்.

கோவி.கண்ணன் said...

சிவா,
எனக்கு மட்டும் தனி மின்னஞ்சலில் சொல்லுங்க. என்ன நடந்தது ! ஏன் ஏன் ஏன் ?
:)

Anonymous said...

:((

கதிர் said...

நான் அன்றே சொன்னேன்.
புலி உன்னால அருமையான கவிதைகளை எழுத முடியும்னு. ஆனா அன்னிக்கு என்ன நம்பல நீ. ஆனா இன்னிக்கு பார் எத்தனை பேர் உன்னொட கவிதைய புகழ்ந்திருக்காங்கன்னு. அதனால மேலும்மேலும் கவிதைகள எழுதி இம்சை கூட்டாம இத்தோட முடிச்சிக்கடா கண்ணா....

நாகை சிவா said...

//புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதென்று கேள்விப்படலாம்
ஆனால் பூனையை பார்த்து
புலி சூடு போட்டுக்ககூடாது. //

நியாயம் தான்.. ஆனா சில சமயம் நம்மள மீறி பொங்கிடுது.

//நண்பர் குசும்பர் இதுகுறித்து விளக்கமாக 3D திருடி அனிமேசன் செய்வார்.//

ஆர்வமுடன் காத்து இருக்கேன் :)

Unknown said...

எப்படி? இப்படி !!!

கோபிநாத் said...

வேற வழியில்ல அதனால இப்படி....

http://gopinath-walker.blogspot.com/

Viji said...

eppadi irundha neenga kadasila ippadi ayttinga....... :D

நாகை சிவா said...

//eppadi irundha neenga kadasila ippadi ayttinga....... :D//

என்ன அதுக்குள்ள கடைசினு சொல்லிட்டிங்க... இது ஆ"ரம்பம்" தான். இன்னும் போக போக பாருங்க... எப்படி எப்படியெல்லாம் ஆக போறேன் என்று ;)

G3 said...

Guruvin guruvae.. nethu varaikkum nalla thanae irundheenga.. unga sishyai oru pullayaaru kudukka maatennu sonnadhukkae ippadiya? :(

நாகை சிவா said...

//வேற வழியில்ல அதனால இப்படி....

http://gopinath-walker.blogspot.com///

@ கோபி... என்னால பதிவுலகுக்கு மறுபடியும் வந்துட்ட... இந்த பாவசெயலுக்கு என்ன பரிகாரம் பண்ண போறேனோ தெரியல ;)

நாகை சிவா said...

@ காய்த்ரி

//Guruvin guruvae.. nethu varaikkum nalla thanae irundheenga.. unga sishyai oru pullayaaru kudukka maatennu sonnadhukkae ippadiya? :(//

ஆமாம் நேத்து வரைக்கும் நல்லா இருந்தேன்.. இப்ப ரொம்ப நல்லா இருக்கேன்... அதான் இப்படி ;)

சே... சே... அதுக்கு எல்லாம் பீல் பண்ண முடியுமா... ஒரு பிள்ளையார் இல்லாட்டி ஒரு ராதாகிருஷ்ணர்..... அது வேறு.. இது வேறு... :)

நாகை சிவா said...

//எப்படி? இப்படி !!!//

@ தேவ்

எல்லாம் தானா வருதுண்ணனே... குட்டிசுவர்ல நாங்களும் வர்கார்ந்து யோசிச்சு இருக்கோம்ல... ;)

Viji said...

//இன்னும் போக போக பாருங்க... எப்படி எப்படியெல்லாம் ஆக போறேன் என்று ;)//- காட்டுன வரைக்கும் செம காட்டு, இது உன் ரூட்டு... :P

நாகை சிவா said...

////இன்னும் போக போக பாருங்க... எப்படி எப்படியெல்லாம் ஆக போறேன் என்று ;)//- காட்டுன வரைக்கும் செம காட்டு, இது உன் ரூட்டு... :P//

இரண்டு நாள் லீவுல ஏதும் விஜய டி. ஆர் படம் பாத்தீங்களா... இல்ல வேற ஏதும் ஆச்சா.... :)

நாகை சிவா said...

/அதனால மேலும்மேலும் கவிதைகள எழுதி இம்சை கூட்டாம இத்தோட முடிச்சிக்கடா கண்ணா....//

இதுல என் பங்கு ஏதும் இல்லை தம்பிண்ணனே... எல்லாம் உங்க கையில் தான் இருக்கு... பாத்து பக்குவமா நடந்துக்கோங்க...

ALIF AHAMED said...

ரொம்ப கோவ படாதிங்க

தண்ணி குடிங்க :)

நாகை சிவா said...

//:((//

@ துர்கா...

ஏன் இந்த சோகம்... எல்லாரும் இன்புற்று இருக்க வேண்டும் என எண்ணும் என் பதிவில் இப்படி நீங்க சோகப்பான் போடலாமா? எந்த பிரச்சனையாக இருந்தாலும் சொல்லுங்க.. பேசி சரி பண்ணிடலாம் :)

ramachandranusha(உஷா) said...

நாசி! மாடர்ன் ஊக்கு ஓவியம் சூப்பர்

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா. நல்லாத்தானே இருந்த. என்ன இப்படி திடீருன்னு கவுஜ? சீக்கிரம் குணமாயி நல்லபடியா எழுதத் தொடங்குடே.

கப்பி | Kappi said...

aavvvvvvvvvvvvvvv :((((((

கப்பி | Kappi said...

nightu veetuku vandhu pudikaranya unnai..

Dreamzz said...

kavidha nalla irukku..

ACE !! said...

நீங்க இப்படி இல்லயே.. அப்புறம் ஏன் இப்படி?? எப்போதிலிருந்து இப்படி?? இல்லை எப்போதுமே அப்படிதானா??

ஜி said...

ஆஹா.. என்னே ஒரு ஞானம்.. என்னே ஒரு ஞானம்...

வெட்டிப்பயல் said...

ஏன்?

வெட்டிப்பயல் said...

ஏன் இப்படி???

ILA (a) இளா said...

ஓஹ் அப்படியா?

ILA (a) இளா said...

ஒரு முறை எதுக்கு குத்தாலம் பக்கம் போயி எலுமிச்சம் பழம் சாப்பிட்டுட்டு வரவும். சங்கத்து சிங்கத்துக்கு இப்படி ஆனதுல இரு வருத்தமே.

இதே மாதிரி சிபி ஒரு கவிதை எழுதிட்டாரு, அதைப் பார்த்து காப்பி தானே அடிச்சு இருக்கீங்க?

Anonymous said...

சூப்பரப்பு!

இப்படிப்பட்ட ஆளைத்தான் ஆசிரமத்துக்கு தேடிகிட்டிருக்கேன்!

Arunkumar said...

ethana peruya
hmm
innum
ethana peru
ippidi kelambirkinga?

அபி அப்பா said...

புலி புலி தான், தலைகீழா நின்னு தண்ணி குடிச்சும் பதிவு போட மாட்டேன்னு அடம் பிடிச்ச கோபிய ஒரு பினாநானா போட்டு மெரட்டி போட வச்சிட்டீரேப்பா, புலி நீ ஒரு சிங்கம்யா!:-))

அபி அப்பா said...

49

அபி அப்பா said...

.

அபி அப்பா said...

அப்பாடா 51

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன ஒரு தேடல் இந்த வரிகளில்..
நான் எப்படின்னு ஒரு ஒருத்தர் தன்னையே கேட்டுகிட்டா நல்லா தெளியலாமே.. ஆஹா .. அருமையான தத்துவத்தை சொல்லி இருக்கீங்க சிவா .. இந்த வயசில் என்ன ஒரு தெளிவு உங்களுக்குத்தான்.

நாகை சிவா said...

//ஹய்யோ, நல்லா இருந்த என்னைக் கூப்பிட்டு பார்க்கச் சொல்லி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புலி, அந்தத் தலைவலி இப்போ எனக்கு வந்தாச்சு! :P//

@ கீதா...

உங்க பதிவ படிச்சு எங்களுக்கு வராத தலைவலியா... அதை எல்லாம் நாங்க வெளியே சொன்னோமா.... பின் நீங்க மட்டும் ஏன்... இப்படி...

நாகை சிவா said...

//சிவா,
எனக்கு மட்டும் தனி மின்னஞ்சலில் சொல்லுங்க. என்ன நடந்தது ! ஏன் ஏன் ஏன் ?
:)//

நடந்தது என்ன... குற்றம் ரிப்போர்ட் போடுற அளவுக்கு மேட்டரு இருக்கு... கண்ணன்... சொல்லுறேன்.. சொல்லுறேன்.. உங்ககிட்ட சொல்லாம பின்ன வேற யாருக்கிட்ட சொல்ல போறேன்.

நாகை சிவா said...

//ரொம்ப கோவ படாதிங்க

தண்ணி குடிங்க :)//

கோவம் எல்லாம் இல்லயேண்ணனே... சும்மா நினைச்சதுக்குகே இப்படி.. கோபப்பட்டா தாங்குது... :)

நாகை சிவா said...

@ உஷா...

//நாசி! மாடர்ன் ஊக்கு ஓவியம் சூப்பர்//

நன்றிங்கோ... நாசி சொன்ன வுடன் என்ன சொல்ல வறீங்க என்றே புரியல... அப்பால தான் புரிஞ்ச்சு... சிவாவே கூப்பிடுங்க... அது இலக்கியதனமாக இருக்கு.. புரிய மாட்டேங்குது :)

நாகை சிவா said...

//ஏம்பா. நல்லாத்தானே இருந்த. என்ன இப்படி திடீருன்னு கவுஜ? சீக்கிரம் குணமாயி நல்லபடியா எழுதத் தொடங்குடே.//

@ இலவச கொத்தனார்...

அப்படி ஆகட்டும் தலைவரே!

நாகை சிவா said...

@கப்பி!

//aavvvvvvvvvvvvvvv :((((((//

நோ ஹார்ட் பீலிங்க்ஸ்....

//nightu veetuku vandhu pudikaranya unnai..//

பிடிச்சு வாக்கும் கொடுத்தாச்சு.. போதும்ல... :)

நாகை சிவா said...

//Dreamzz said...
kavidha nalla irukku..
//

நல்லா கிண்டல் வருது உங்களுக்கு... ஆனா ஸ்மைலி போட மறந்துட்டீங்க... :)

நாகை சிவா said...

//சிங்கம்லே ACE !! said...
நீங்க இப்படி இல்லயே.. அப்புறம் ஏன் இப்படி?? எப்போதிலிருந்து இப்படி?? இல்லை எப்போதுமே அப்படிதானா??
//

எப்போதும் அப்படி இல்லை... அப்ப அப்ப அப்படி... ஆனா இப்ப அப்படி இல்லை.. பின்ன எப்படினு கேட்க கூடாது ;)

நாகை சிவா said...

//ஜி said...
ஆஹா.. என்னே ஒரு ஞானம்.. என்னே ஒரு ஞானம்...
//

மெய்ஞானம் அடைவதற்கான வழி தான் இது எல்லாம்...

நீங்க போட்டு கொடுத்த வழியில் சரியா போய்கிட்டு இருக்கேனா தல...

நாகை சிவா said...

/வெட்டிப்பயல் said...
ஏன் இப்படி???
//

சில நேரங்களில் அது அப்படி தான் ராசா... :)

நாகை சிவா said...

//ஒரு முறை எதுக்கு குத்தாலம் பக்கம் போயி எலுமிச்சம் பழம் சாப்பிட்டுட்டு வரவும். சங்கத்து சிங்கத்துக்கு இப்படி ஆனதுல இரு வருத்தமே. //

நம்ம மாவட்டம் தான் குத்தாலம்.. போயிட்டு வந்தா போச்சு...

வருத்தப்படாத வாலிப சங்கத்தில் இருந்து இப்படி வருத்தப்படுவது சரியில்லை இளா... எல்லாம் போக போக சரியாகிடும் விடுங்க...

நாகை சிவா said...

//பித்தானந்தா-கீழ்ப்பாக்கம் said...
சூப்பரப்பு!

இப்படிப்பட்ட ஆளைத்தான் ஆசிரமத்துக்கு தேடிகிட்டிருக்கேன்!
//

தலைமை பதவி என்றால் பரீசிலனை பண்ணுறேன்... :)

நாகை சிவா said...

//Arunkumar said...
ethana peruya
hmm
innum
ethana peru
ippidi kelambirkinga?
//

ஏற்கனவே ஏகப்பட்ட பேர் கிளம்பிட்டாங்க... அதுல லேட்டஸ்டா நானு... ;)

நாகை சிவா said...

//புலி புலி தான், தலைகீழா நின்னு தண்ணி குடிச்சும் பதிவு போட மாட்டேன்னு அடம் பிடிச்ச கோபிய ஒரு பினாநானா போட்டு மெரட்டி போட வச்சிட்டீரேப்பா, புலி நீ ஒரு சிங்கம்யா!:-))//

@ அபி அப்பா...

நன்றி... அதுவும் சங்கத்து சிங்கம் ஆச்சே... :)

நாகை சிவா said...

//என்ன ஒரு தேடல் இந்த வரிகளில்..
நான் எப்படின்னு ஒரு ஒருத்தர் தன்னையே கேட்டுகிட்டா நல்லா தெளியலாமே.. ஆஹா .. அருமையான தத்துவத்தை சொல்லி இருக்கீங்க சிவா .. இந்த வயசில் என்ன ஒரு தெளிவு உங்களுக்குத்தான்.//

@ முத்துலட்சுமி... இதுல ஏதும் உள்குத்து இல்லல.... :)

காரூரன் said...

எப்படியோ! அப்படி, இப்படி, எப்படி என்று உருப்படியாய் ஒரு கருத்தடிப்பு.

cheena (சீனா) said...

//தமிழ்நாட்டில் மும்மதத்தின் சங்கமம் ஆன நாகையில் இருந்து பல இடங்களுக்கு சென்று பல விதமான தேடல்களில் இருக்கும் ஒரு சாதாரண(மற்றவர்களுக்கு) இந்திய பிரஜை
//
சிவா , மற்றவர்கள் எப்படி இருந்தால் என்ன ? நீங்கள் நீங்களாக இருங்கள். அவர்கள் அப்படியே, இவர்கள் இப்படியே, எவர் எப்படியேனும் இருந்து விட்டுப் போகட்டும்.

Raji said...

Pudhiya tahthuvam 10,111..
Annan correctaa number sollitaenaaa?

Raji said...

Pudhiya tahthuvam 10,111..
Annan correctaa number sollitaenaaa?

Raji said...

Padam sutadha suyama eduthadha?

Padathukku etha thathuvam or thathuvathukku etra padam

Epidi vaenumunaalum vachukalaam:)

Raji said...

BTW nice thathuvam..Even naan kooda ipdi yoichadhu undu.

இராம்/Raam said...

புலி,

ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட இந்த கவுஜ'ய வடிச்சதின் மூலம் நீயும் ஒரு எழுத்தாள சிங்கம்,புலின்னு நிருபிச்சிட்டே... :)

ஜொள்ளுப்பாண்டி said...

ஏம்ம்மா?? என்ன ஆச்சு ?? :)))

மங்களூர் சிவா said...

//
"மீண்டும் சொல்லுறேன், இது யாரையும் மனதில் கொண்டு போட்ட பதிவு இல்லை. முக்கியமா அமீரகத்தில் இருக்கும் பதிவர்களை மனதில் நிறுத்தி போட்ட பதிவு அல்ல.. அல்ல.. அல்லவே அல்ல.."

குறிப்பாக தம்பியை இல்லவே இல்ல!!! சரிதானே புலி.

//
ரிப்பீட்டேய்

மங்களூர் சிவா said...

//
பித்தானந்தா-கீழ்ப்பாக்கம் said...
சூப்பரப்பு!

இப்படிப்பட்ட ஆளைத்தான் ஆசிரமத்துக்கு தேடிகிட்டிருக்கேன்!
//
:-))))))))

நாகை சிவா said...

//காரூரன் said...
எப்படியோ! அப்படி, இப்படி, எப்படி என்று உருப்படியாய் ஒரு கருத்தடிப்பு.//

நான் ஏங்க கருத்து சொல்லி அடி வாங்க போறேன்... :)

முதல் வருகைக்கு நன்றி... :)

நாகை சிவா said...

//cheena (சீனா) said...
சிவா , மற்றவர்கள் எப்படி இருந்தால் என்ன ? நீங்கள் நீங்களாக இருங்கள். அவர்கள் அப்படியே, இவர்கள் இப்படியே, எவர் எப்படியேனும் இருந்து விட்டுப் போகட்டும்.//

அந்த முடிவுக்கு வந்தாச்சு சீனா.... அப்படி தோணிய போது தான் இந்த தத்துவம் வந்துச்சு... அதான் பட்னு பதிவா போட்டாச்சு....

நாகை சிவா said...

@ ராஜி...

//Raji said...
Pudhiya tahthuvam 10,111..
Annan correctaa number sollitaenaaa?//

நீங்க கணக்கு வீக்னு சொன்னது இப்ப நல்லாவே தெரியுது... இதுக்கு தான் நோட் போட்டு எழுதனும் என்று சொல்லுறது.... ;)

//Padam sutadha suyama eduthadha?//

சுட்டது தான் :)

//Padathukku etha thathuvam or thathuvathukku etra padam//

தத்துவத்துக்கு (???) ஏற்ற படம் தான்

//Epidi vaenumunaalum vachukalaam:)//

நீங்க சொன்னா அப்பீல் ஏது விடுங்க... பீஷ்மர் கையால்(டைப்பியதால்) பாராட்டப்பட்ட மாதிரி இருக்கு :)

நாகை சிவா said...

//Raji said...
BTW nice thathuvam..Even naan kooda ipdi yoichadhu undu.//

ஆஹா... வெல்கம் டூ த போர்ட்...

உங்களுக்கும் மல்லாக்க படுத்து விட்டத்த வெறிச்சு பார்க்கும் வழக்கம் உண்டா ;)

நாகை சிவா said...

//புலி,

ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட இந்த கவுஜ'ய வடிச்சதின் மூலம் நீயும் ஒரு எழுத்தாள சிங்கம்,புலின்னு நிருபிச்சிட்டே... :)//

@ ராம்

தன்யன் ஆனேன்... ;)

நாகை சிவா said...

//ஜொள்ளுப்பாண்டி said...
ஏம்ம்மா?? என்ன ஆச்சு ?? :)))//

அதான் தெரியல பாண்டிண்ணனே....

உசுப்பேத்தி விட்டுட்டாங்க... அதான் இப்படி...

நாகை சிவா said...

@ சிவா...

வருக்கைக்கும் ஸ்மைலிக்கும் நன்றிங்கோ.. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//@ ராம்
தன்யன் ஆனேன்... ;)//
தன்யன்-ன்னா என்ன சிவா? :-)

ராயலு
புலி என்ன சொல்ல வந்தாருன்னா, தன்யா-வின் ரசிகனானேன்-ன்னு சொல்ல வந்தாரு!

ஷ்ரேயா...ச்சே...சரியா சொல்ல வந்ததைச் சரியா புரிஞ்சிக்கலின்னா, சரியா மாட்டிப்பீங்க! சரியா?

//ஏன் இப்படித்துவம்//

ஏன் இப்படித் துவம்-சம் பண்ணறீங்க தல? :-)