Monday, March 12, 2007

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இடம்: நாகை எங்க வீடு
நாள் : இரண்டரை ஆண்டுகள் முன்பு எந்த நாளாக இருந்தாலும்
நேரம் : காலை 11.30

நான் : அம்மா டிபன் எடுத்து வைங்கம்மா

அம்மா : ஏண்டா, காலையில் எழுந்ததே 9 மணி அப்பவே சாப்பாட்டு இருக்கலாம்ல, வெளியில் போயிட்டு 11.30 வந்து காலை சாப்பாடு சாப்பிட்டா மத்தியானம் எப்படா சாப்புடுவ, அதும் இல்லாம உனக்கு சாப்பாடு வைப்பேனா, இல்ல மத்தியான சாப்பாடு செய்வேனா?

நான் : எனக்கு வச்சுட்டு அப்புறம் சமைங்க, மத்தியான சாப்பாட்டு 3, 4 மணிக்கு சாப்பிட்டா போகுது

அம்மா : 3, 4 மணிக்கு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு டா ஆகும்.

நான் : அம்மா, வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக் கூடாது.

அம்மா : அப்படிடா சொல்லுவ, எங்கயாச்சும் போய் காய்ஞ்ச தாண்டா தெரியும்.

நான் : சரி சரி வைங்க மணியாகுது, பசங்க அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க

(சுட சுட ஆப்பம், தேய்காய் பால் பறிமாறப்படுகின்றது.)

நான் : ஏம்மா, போதும்மா

அம்மா : இத ஒன்னு வச்சுக்கடா

நான் : ஏம்மா, போதும்மா சொன்னா கேட்கவே மாட்டீங்களாம்மா, எப்ப பாத்தாலும் இத தாம்மா செய்வீங்க நீங்க.

அம்மா : டேய், இந்த ஒன்னு மட்டும் சாப்பிட்டுட்டு போடா, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நான் : போயிட்டு வரேன்ம்ம்ம்ம்ம்ம்மா

அம்மா : டேய், மத்தியானம் சீக்கிரம் சாப்பிட வந்துடு

நான் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரீஈஈஈஈஈஇ

நேரம் : மதியம் 3.30

நான் : மம்மிமீஈஈஈஈஈ

அம்மா : புள்ளையாட நீ.... உன்ன சீக்கிரம் வாடா சொன்னா 3.30 மணிக்கு வர.......

நான் : ஏம்மா, மாசத்துக்கு நாலைஞ்சு தடவை தான் நான் ஊருக்கு வரேன், அதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்களே..... நீங்க சாப்பிட்டீங்களா..

அம்மா : ம்ம்ம்ம் உனக்காக இவ்வளவு நேரம் பாத்துட்டு இப்ப தான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தேன், நீ வந்துட்ட

நான் : சரி சரி, பசிக்குது, வைங்கம்மா

அம்மா : சரி, டைனிங் டேபிள்க்கு வாடா

நான் : அம்மா, இங்க கொண்டு வாங்கம்மா

அம்மா : டேய், அவ்வளத்தையும் தூக்கிட்டு வரனும்டா, அங்க வந்து 10 நிமிசம் சாப்பிட்டு வந்து இந்த டிவிய பாத்தா என்ன?

நான் : நான் டிவி பாக்குறதே, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான், அதுவும் உங்களுக்கு பொறுக்காதே, போட்டு எடுத்துட்டு வாங்கம்மா

(சிக்கன் குழம்பு, இறால் வறுவல் பறிமாறப்படுகின்றது)

நான் : ஏம்மா, சிக்கன் வாங்கிட்டு இறால் வேற ஏம்மா. சரி இறால் வச்சிங்களே, ரசம் வச்சிங்களா...

அம்மா : ஹ்ம் வச்சு இருக்கு. முட்டை வேணுமா என்ன?

நான் : நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்...

அம்மா : அந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கும்டோ உனக்கு?

நான் : ஏம்மா, நானா கேட்டேன், நீங்க கேட்டதால் கொடுங்கனு சொன்னேன். நீங்களே கேட்டுட்டு என்னய குறை சொல்லுங்க?

அம்மா : இந்தாடா இறால் இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ

தம்பி : ம்ம்ம் ஊட்டி விடுங்கம்மா, பச்ச குழந்தை பாருங்க அவன், அந்த கட்டு கட்டிக்கிட்டு இருக்கான். அவன் வந்தா மட்டும் தாம்மா நீங்க இப்படி வகை வகையா சமைக்கிறீங்க

அம்மா : ஆமாம்டா உனக்கு நான் சமைச்சு போட்டதே இல்ல பாரு

நான் : அம்மா, அவன் கிடக்குறாம்மா, நீங்க ரசத்தை ஊத்துங்க... என்னமா ரசத்தில் உப்பு அதிகமா இருக்கு, இவ்வளவு வருசம் சமைக்குறீங்க, இன்னும் உங்களுக்கு உப்பு சரியா போட தெரிய மாட்டேங்குது.

அம்மா : டேய், நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் சரியா தான் இருந்துச்சு. உனக்கு மட்டும் அதிகமா இருக்கும்டா. சரி இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு மோர் ஊத்திக்கோ...

நான் : மோரா! வேணாம். போதும்

நேரம் :இரவு 10.00

நான் : வெளிய போறேன், சீக்கிரம் சாப்பாடு போடுங்க

அம்மா : இத்தன மணிக்கு மேல எங்கடா போற? தோசை தான் இரு ஊத்துறேன்.

நான் : தோசையா, என்னமா நீங்க, சாதம் வைக்க கூடாதா?

அம்மா : எனக்கு என்னடா தெரியும், நீ வீட்டுக்கு சாப்பிட வருவீயா இல்ல வெளியில் சாப்பிட்டு வருவீயானு, சாதம் வைச்சு நீ வராட்டி வேஸ்டா போயிடும் தான் வைக்கல.

அப்பா : ஏண்டி, அவனுக்கு சாதம் கொஞ்சம் வச்சி இருக்கலாம்ல, நீயும் இப்படி தாண்டி பண்ணுவ

அம்மா : உடனே, என்ன சொல்லிடுவீங்களே? இப்ப தோசை சாப்பிட்டா என்ன ஆயிட போகுது.

நான் : சரி, சரி விடுங்க, நான் வெளியில் சாப்பிட்டுக்குறேன். வரேன்ம்மா

அம்மா : 1 மணிக்கு வந்து நிக்காம சீக்கிரமா வந்துடு.........

நான் : ம்ம்ம்ம்ம் பாக்கலாம்.

இடம் : சூடான் நேரம் : கடந்த வெள்ளி, அதிகாலை 11.00

VHF ரேடியாவில் கால் வருகின்றது

நான் : F.Q. 8.1.1 தான் விசயத்தை சொல்லு

எதிர்முனை : இண்டர் மிஷன் நெட்வொர்க் ல பிரச்சனை, கொஞ்சம் வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

நான் : அட என்னய்யா, வெள்ளிக்கிழமை காலாங்காத்தாலே தொல்லை பண்ணுறீங்க, சரி இரு ஒரு அரை மணி நேரத்தில் வரேன்.

ப.பெண் : சிவா, பிரேட் இருக்கு, சாப்பிட்டு போ.

நான் : பிரட்டா, எனக்கு உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு. மத்தியானம் வந்து சாப்பிடுக்குறேன். மதியம் என்ன?

ப.பெண் : சாப்பாத்தி, பர்த்தா.

நான் : சரி, ஒகே.

ஆபிஸ்ல எப்பவும் போல கடமையில் முழ்கிட்டோம்.

நேரம் : மாலை 4.25, நம்ம மொபைல் பாடுது

நான் : சொல்லுங்க தாப்பா

எதிர்முனை : எங்க இருக்க, நாங்க எல்லாம் கிரவுண்டுக்கு வந்தாச்சு. பேட், ஸ்டம்பு எல்லாம் உன் வண்டியில் தான் இருக்கு.

நான் : இன்னும் 10 நிமிசத்தில் அங்க இருப்பேன். (மனதிற்க்குள் இன்னிக்கு சாப்பாட்டு போச்சுடா)

நேரம் : மாலை 7.00 ,மொபைல் பாடுது

நான் : சொல்லு மச்சி என்ன விசயம்

எதிர்மனை : மச்சி பிஸியா இல்லாட்டினா இங்க வந்துட்டு போயேன், நம்ம XXXXX பத்தி ஒரு மேட்டரு பேசனும்.

நான் : கிரவுண்டல இருக்கேன் மச்சி. ஒரு 15 நிமிசத்தில் அங்க இருப்பேன்.

எதிர்முனை : இன்னிக்கு இங்க பீப், உனக்கு வேற எதாச்சும் சமைக்கட்டுமா?

நான் : பீப்பா! இல்ல மச்சி, கசகசனு இருக்கு, குளிச்சுட்டு சாப்பிட்டா தான் சரியா வரும். அதனால் எனக்கு வேணாம்.

நேரம் : இரவு 9.30

கோயல்: வா, சாப்பிட்டு வந்துட்டியா, இல்ல இங்க தானா

நான் : இல்ல இங்க தான், காலையில் இருந்து சாப்பிடல, இரு குளிச்சுட்டு பிரஷா வரேன்

கோயல் : போ, போ உனக்காக தான் நாங்களும் வெயிட்டிங்

(மனதுக்குள், இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கே, சே..சே... இவனுக்கு இது எல்லாம் தெரியாது) சிறிது நேரம் பிறகு

நான் : வாங்க, சாப்பிடலாம்

கோயல் : நீ சாப்பிடு, நாங்க அப்புறம் சாப்பிடுறோம்.

நான் : என்னடா இது புதுசா இருக்கு. எட்டு மணிக்கே சட்டிய எம்டி ஆக்கிடுவாங்க, இன்னிக்கு என்ன ஆச்சு பசங்களுக்கு..

திறந்து பாத்தால், குண்டு அரிசியும்(எகிப்து அரிசி, நம் கேரளா அரிசி விட பெரிசா இருக்கும்), தால்லும் இருந்துச்சு.

நான் : யாரு இந்த அரிசிய சமைக்க சொன்னது. வர வர இந்த பொண்ணு பண்ணுறது நல்லாவே இல்ல. வேற வழி இல்ல, இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுறேன். அட பாவிங்களா, தால் என்னடா இவ்வளவு உப்பு.

கோயல் : அதான், நாங்க சாப்பிடாம வர்கார்ந்து இருக்கோம். பிரட் இருக்கு சாப்பிடுறீயா, முட்டை பொறித்து தரேன்.

நான் : டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே.

கோயல் : டயர்டா இருந்துச்சு. அதான் முடியல.

நான் : நமக்கும் அதே கதி தான், நீ முட்டைய ஒத்து, இதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன்

ப்ரிட்ஜில் இருந்து தயிர், ஊறுகாய் வெளி வருகின்றது. விதி ய நொந்து தயிர் சாதம் சாப்பிடுறேன்.

பழமொழி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நம்ம கருத்து : நல்லாவே விளையுதுடோய்.... மாப்பு கேட்டுகுறேன் மம்மி, மாப்பு

107 comments:

மு.கார்த்திகேயன் said...

ஏதோ பெரிய கதை சொல்லி, கருத்து சொல்ற மாப்பி.. மெதுவா வந்து படிக்கிறேன்.. அட்டென்டன்ஸ் குறிச்சுக்கோப்பா

மு.கார்த்திகேயன் said...

அட! நாம தான் முதலா.. சூடா ஒரு சுடான் டீ பார்சல்

கோவி.கண்ணன் [GK] said...

சரி சிவா ?
இந்த பதிவை மொக்கைன்னு தானே வகைப்படுத்தினிங்க ?
:)))))))))))

கதிர் said...

இந்த மாதிரி நக்கல் விட்டாலே இப்படிதான் புலி..
என்ன செய்யிறது நம்ம தலையில எழுதி இருக்கு.

கதிர் said...

கொடுத்தவனே பறிச்சிகிட்டாண்டி....
மானே கொடுத்தவனே பறிச்சிக்கிட்டாண்டி...

ஹ்ஹே கொடுத்தவனே பறிச்சிக்கிட்டாண்டி

கதிர் said...

//தம்பி : ம்ம்ம் ஊட்டி விடுங்கம்மா, பச்ச குழந்தை பாருங்க அவன், அந்த கட்டு கட்டிக்கிட்டு இருக்கான். அவன் வந்தா மட்டும் தாம்மா நீங்க இப்படி வகை வகையா சமைக்கிறீங்க//

நல்லா கேட்டடா தம்பி நீ.

கதிர் said...

நீ ஏன் ஒரூ ஆப்பிரிக்க பிகரை கல்யாணம் பண்ணி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை குடுக்க கூடாது..

அப்பால நல்ல சாப்பாடு கிடைக்கும்ல நீயே நல்லா வேற சமைப்ப அப்படியே சொல்லிக்குடுத்துடு

கதிர் said...

//டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே//


நகம் இருக்கறவரைக்கும்தாண்டி புலி

இப்பதான இந்த கண்டிசனுக்கு வந்துருக்க இனிமேல் இத விட கேவலமான நிலைக்கு வருவ.
அதுக்கு முன்னாடி ஒரு கல்யாணத்த பண்ணிக்கோ.

வெட்டிப்பயல் said...

//நான் : டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே.//

இதுதான்யா வீரனுக்கு அழகு

Syam said...

என்ன பங்கு நீயும் என்ன மாதிரியே அநியாயத்துக்கு காஞ்சு போய் இருக்க போல....ஆடாதடா ஆடாதடா மனிதா னு இத தான் சொன்னாய்ங்க போல இருக்கு...

ஜி said...

//தம்பி said...
நீ ஏன் ஒரூ ஆப்பிரிக்க பிகரை கல்யாணம் பண்ணி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை குடுக்க கூடாது..

அப்பால நல்ல சாப்பாடு கிடைக்கும்ல நீயே நல்லா வேற சமைப்ப அப்படியே சொல்லிக்குடுத்துடு//

நானும் இதை வழிமொழிகிறேன்

வெட்டிப்பயல் said...

எலேய் தம்பி,
இங்க ஆட்டம் போடறத நிறுத்திட்டு ஒழுங்கா நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...

Syam said...

மூனு வேளையும் நம்ம சாப்பிடுறதுக்கு பண்ணுன அட்டகாசத்துக்கு...இங்க தெனமும் ஆஸ்பித்திரில இருக்கற மாதிரி பிரட் சாப்பிட வேண்டி இருக்கு :-)

Syam said...

//பிரட்டா, எனக்கு உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு//

சேம் பிளட்...பிரட்ட பாக்குறப்ப எல்லாம் ஏண்டா நான் நல்லா தான இருக்கேன்னு தோனும் :-)

வெட்டிப்பயல் said...

ஜி,
உன்னை தம்பி பதிவிற்கு பாசமுடன் அழைக்கிறோம்... உனக்காக அங்கே ஒரு கடமை காத்திருக்குது...

ஜி said...

தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் இப்படி செண்டியா போட்டுத் தாக்கி நமக்கு வீட்டு நெனப்ப வர வச்சாவ...

இப்ப நீயுமா??? நல்லா இருங்கவே.. நல்லா இருங்க...

கதிர் said...

//அட! நாம தான் முதலா.. சூடா ஒரு சுடான் டீ பார்சல்//

கார்த்தி ஏன் சொந்த செலவில சூனியம் வெச்சிக பாக்கறிங்க. அங்கவே ரொம்ப கஸ்டபட்டு புலி புல்ல தின்னுகிட்டு இருக்கு அந்த கஸ்டத்த நீங்கவேற படணுமா

Syam said...

//நீ ஏன் ஒரூ ஆப்பிரிக்க பிகரை கல்யாணம் பண்ணி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை குடுக்க கூடாது..//

தம்பி நீங்க புலி மேல ஒரு கொலைவெறியோட இருக்கீங்கன்னு தெரியுது :-)

கதிர் said...

//எலேய் தம்பி,
இங்க ஆட்டம் போடறத நிறுத்திட்டு ஒழுங்கா நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு... //

எங்க போனாலும் வந்துறாங்கய்யா பின்னாடியே ஒரு இடத்துல நிம்மதியா உக்கார முடியலையே...

கதிர் said...

//இதுதான்யா வீரனுக்கு அழகு//

அது வீரனுக்கு...

வெட்டிப்பயல் said...
This comment has been removed by the author.
நாமக்கல் சிபி said...

வெரி குட்!

கதிர் said...

//நான் : ஏம்மா, சிக்கன் வாங்கிட்டு இறால் வேற ஏம்மா. சரி இறால் வச்சிங்களே, ரசம் வச்சிங்களா...//

அந்த மாதர்குல மாணிக்கத்த பாடு படுத்தினதுக்குதான் இப்படி மாட்டிகிட்ட..

உன்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சாம்

இலவசக்கொத்தனார் said...

சும்மா வேலை விளையாட்டுன்னு இல்லாம வகையா சமைக்கவும் கத்துக்கிடலாமுல்ல. பிற்காலத்துக்கும் உபயோகப்படும்!!

கதிர் said...

யோவ் வெட்டி ஏன்யா கமெண்ட டெலிட் பண்ணிட்ட!

அங்க போட வேண்டிய கமெண்ட இங்க போட்டுட்டயா நீ...

வெட்டிப்பயல் said...

// தம்பி said...

யோவ் வெட்டி ஏன்யா கமெண்ட டெலிட் பண்ணிட்ட!

அங்க போட வேண்டிய கமெண்ட இங்க போட்டுட்டயா நீ... //

எலேய்,
அங்க போட்ட கமெண்டை காப்பி பண்ணி தான் இங்க போட்டேன்...

உன் ப்ளாக்ல கமெண்ட் போடறவங்களை தான் நீ மதிக்க மாட்டீங்கற...

ஜி said...

தம்பியின் பதிவில் என்னுடைய பின்னூட்டங்களை போட்டு ஐந்து நிமிடமாகியும் வெளியிடாத தம்பியை வன்மையாகக் கண்டிக்கிறோம்...

ஜி said...

என்ன புலி... நீ புலி கறி சாப்டுத்தான் புலின்னு பட்ட பேரு வந்திச்சுன்னு அரசல் புரசலா செய்திகள் வந்துக்கிட்டு இருக்குது.. நீ என்னடானா இதுக்கே சலிச்சிக்கிட்டு....

துளசி கோபால் said...

இப்படியா விளைஞ்சது? அடக் கடவுளே (-:

Trust said...

வெட்டி ஏன் இந்த கொலை வெறி ஒரு முடிவோட தான் இறங்கி இருக்கிங்க போல. தம்பி இங்கன புலிக்கு டின்னு கட்ட புலி அங்க தம்பிக்கு டின்னு கட்ட என்னமோ போங்க நடத்துங்க நடத்துங்க. :))
//டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே//
கொட்டை எடுத்ததா எடுக்காததா? இந்த வீரப்போட தமிழ்நாட்டுப்பக்கம் போகாதடேய் உள்ள புலியை எல்லாம் புடிச்சி போடுதாங்களாம்.
//தம்பி said...
நீ ஏன் ஒரூ ஆப்பிரிக்க பிகரை கல்யாணம் பண்ணி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை குடுக்க கூடாது..

அப்பால நல்ல சாப்பாடு கிடைக்கும்ல நீயே நல்லா வேற சமைப்ப அப்படியே சொல்லிக்குடுத்துடு//
நானும் இதை வழிமொழிகிறேன்.

Arunkumar said...

கரெக்டா சொன்னீங்க புலி. வீட்ல ஓவரா ஆடிட்டு இங்க கடந்து காய வேண்டி இருக்கு !!!

இந்த வீக்கெண்ட் இங்கயும் அதே கதி தான். கொஞ்சம் டயர்டா இருக்குனு சமைக்கல.. பிரட் தவிர எதுவுமில்ல ஆனா எனக்கும் பிரட் சாப்பிட்டா ஏதோ ஒடம்புக்கு முடியலியோனு தான் தோனும் !!!

Porkodi (பொற்கொடி) said...

adhu!!! :) seekiram settle aagidunga! konjam thappikalam :)

வடுவூர் குமார் said...

இந்த பதிவை உங்க அம்மா படிச்சாங்களா?
நம்ம பையன் ஊர் விட்டு ஊர் போய் பட்டினியா கிடந்திருக்கே என்று.படிச்ச மறுநாள் செம வெட்டு வெட்டலாம்.:-))
என்ன "தம்பி" உங்க பதிவை ஹைஜேக் பண்ண மாதிரி தெரிகிறது.

நாகு (Nagu) said...

வேலைக்கு சேர்ந்த புதிதில் டில்லியில் தீபாவளி அன்று எல்லா கடையையும் பராக்கு பார்த்துவிட்டு போனால், லோதிகாலனி மதறாஸ்கபே மூடிவிட்டிருந்தார்கள். தெருக்கடையில் கிடைத்தது ஆளுக்கு இரண்டு அவிச்ச முட்டை :-(
அதைப் பங்கு போட கல்லூரியிலிருந்து இன்னும் இருவர் வந்து சேர்ந்தனர்!

நாகு (Nagu) said...

உங்கள் கதையை படித்தவுடன் அந்த ஞாபகம் வந்தது. நல்ல பதிவு. அம்மாவின் அருமை சூடானில் தெரியும். மேலே யாரோ ஆலோசனை சொல்லியபடி ஆப்பிரிக்க பிகரை பிக்ஸ் பண்ணிவிடுங்கள். புலிக்கறியே கிடைத்தாலும் கிடைக்கலாம் :-)

கவிதா | Kavitha said...

//நான் : டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே.//

இதுதான்யா வீரனுக்கு அழகு//

Repeattttuuuuuu!!
Aana..Thayir saadham saapittu.. kavuthuteengalea.. PULI..

(excuse me -font probs.. no tamil today)

அபி அப்பா said...

நல்லா வேணும் புலி! இங்க இப்போ எனக்கு மதிய சாப்பாடு என்ன தெறியுமோ!!

தக்காளி சூப், அவரைக்காய் சாம்பார், தக்காளி ரசம், சுண்டு விரல் மொத்தமா உள்ளங்கைவிட கொஞ்சம் பெருசா 2 வஞ்சனை மீன் வருவல், முட்டை ஆஃப் பாலிப் 2, பொன்னி அரிசி சாதம் 1கப், 1கப் கெட்டி தயிர், கிடாரங்காய் ஊருகாய் கொஞ்சம், ஒரு வாழைப்பழம்...அவ்வளவு தான்.

(அப்பா என்ன சாப்பிடனும்னு நெனச்சனோ அதை சொல்லிவிட்டேன்.. ஹும்)

அபி அப்பா said...

//தம்பியின் பதிவில் என்னுடைய பின்னூட்டங்களை போட்டு ஐந்து நிமிடமாகியும் வெளியிடாத தம்பியை வன்மையாகக் கண்டிக்கிறோம்...//

ஆமா ஜி! நானும் தம்பிய கடிக்கிறேன்

அபி அப்பா said...

சிவா! புலி குழம்பு வைக்க தெறியுமா? (கொத்ஸ்! பாய்ந்து வரக்கூடாது. நான் கேட்டது original tiger குழம்புதான்)

அபி அப்பா said...

அப்பாடா புலி 40 ஆயிடுச்சு! குகைக்கு புலி போயிடுச்சு:))

அபி அப்பா said...

எதுக்கும் குகை உள்ளே தள்ள இந்த 41. நா வர்டா..

கோபிநாத் said...

\\தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் இப்படி செண்டியா போட்டுத் தாக்கி நமக்கு வீட்டு நெனப்ப வர வச்சாவ...

இப்ப நீயுமா??? நல்லா இருங்கவே.. நல்லா இருங்க...\\

ரிப்பீட்டேய் ;((((

ஆனாவூன்னா கொசுவத்திய சுத்திடுறீங்க மக்கா

கோபிநாத் said...

கூட இருக்கும் போது அருமையை உணராமால் இருந்தா இப்படி தான் புலி.....இங்கையும் இதே கதை தான் ;(((

கோபிநாத் said...

\\Syam said...
மூனு வேளையும் நம்ம சாப்பிடுறதுக்கு பண்ணுன அட்டகாசத்துக்கு...இங்க தெனமும் ஆஸ்பித்திரில இருக்கற மாதிரி பிரட் சாப்பிட வேண்டி இருக்கு :-)\\

நாட்டாமை உங்களுக்கு என்ன ஆச்சு....இது வாலிபர்களின் கவலை.... உங்களுக்கு மா????

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எதுக்கும் குகை உள்ளே தள்ள இந்த 41. நா வர்டா..\\

அங்க தம்பி பதிவுல ஆளையே காணோம் இங்க என்னடான்னா புலியை குகைக்கு அனுப்பிக்கிட்டுயிருக்கீங்க...

Syam said...

//adhu!!! :) seekiram settle aagidunga! konjam thappikalam :) //

பங்கு இந்த பொற்கொடி சொல்றத நம்பாத....இது சொ.செ.சூ :-)

Syam said...

//இது வாலிபர்களின் கவலை.... உங்களுக்கு மா???? //

கோபிநாத்,

நாக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி தாங்க :-)))))

rv said...

அட புலி,
எப்டி இருந்த நீ இப்டி ஆயிட்ட?

அதுசரி, எல்லா இடத்துலயும் நடக்குறதுதானே.. உனக்காவது ஆப்ரிக்கா சமையற்காரி அகப்பட்டுருக்கா. :)))

இந்தப் பிரச்சனையை சமாளிக்க எனது யோசனை.

நாகை சிவா said...

//ஏதோ பெரிய கதை சொல்லி, கருத்து சொல்ற மாப்பி.. மெதுவா வந்து படிக்கிறேன்.. //

இது கதை இல்ல மாம்ஸ், வாழ்க்கை பாடம்.....

//அட! நாம தான் முதலா.. சூடா ஒரு சுடான் டீ பார்சல் //

சூடான்ல செம்பருத்தி இலை டீ தான் பேமஸ், ஒன்னு என்ன இரண்டாவே பார்சல் பண்ணுறேன்.

நாகை சிவா said...

//சரி சிவா ?
இந்த பதிவை மொக்கைன்னு தானே வகைப்படுத்தினிங்க ?
:))))))))))) //

கண்ணன், அவ்வளவு மொக்கையாவா இருக்கு என் சோகம்....:-((((((

நாகை சிவா said...

//இந்த மாதிரி நக்கல் விட்டாலே இப்படிதான் புலி..
என்ன செய்யிறது நம்ம தலையில எழுதி இருக்கு. //

புத்தி சொல்லுறாராம் இந்த வார நட்சத்திரம்.

//ஹ்ஹே கொடுத்தவனே பறிச்சிக்கிட்டாண்டி //

அடுத்த வாரம் உன்க்கிட்ட இருந்து பறிச்சிடுவாங்க...

//நல்லா கேட்டடா தம்பி நீ. //

நாயணம்.... இருக்குடி உனக்கு....

நாகை சிவா said...

//நீ ஏன் ஒரூ ஆப்பிரிக்க பிகரை கல்யாணம் பண்ணி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை குடுக்க கூடாது..//

அவளுக்கு நல்ல வாழ்க்கையா இருக்கும், என் பாடு பத்தி கொஞ்சம் நினைச்சு பாருய்யா!!!

//இப்பதான இந்த கண்டிசனுக்கு வந்துருக்க இனிமேல் இத விட கேவலமான நிலைக்கு வருவ.
அதுக்கு முன்னாடி ஒரு கல்யாணத்த பண்ணிக்கோ. //

உன் திருவாய கொஞ்சம் மூடிட்டு, நாங்க கேட்ட கேள்விக்கு போய் பதில் சொல்லுற வழிய பாரு...

நாகை சிவா said...

//இதுதான்யா வீரனுக்கு அழகு //

நாம் எல்லாம் ஒரே இனம்டா வெட்டி...

நாகை சிவா said...

//என்ன பங்கு நீயும் என்ன மாதிரியே அநியாயத்துக்கு காஞ்சு போய் இருக்க போல....//

என்ன பங்கு, நீயும் இப்படி சோக கீதம் வாசிக்குற.... உன் நிலைமையும் அதானா? :-(

//ஆடாதடா ஆடாதடா மனிதா னு இத தான் சொன்னாய்ங்க போல இருக்கு... //

பழமொழி எல்லாம் அந்த காலத்துல சரியா தான் சொல்லி வச்சுருகானுங்க...

நாகை சிவா said...

//நானும் இதை வழிமொழிகிறேன் //

ஜியா, தம்பி சகவாசம் வேணாம், நல்லவங்க சொல்லுறத கேளுங்க...

நாகை சிவா said...

//எலேய் தம்பி,
இங்க ஆட்டம் போடறத நிறுத்திட்டு ஒழுங்கா நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு... //

விடு வெட்டி, எவ்வளவு தான் ஆட்டம் போடுகிறார் நம் நட்சத்திரம் என்பதை பார்ப்போம்.

நாகை சிவா said...

//மூனு வேளையும் நம்ம சாப்பிடுறதுக்கு பண்ணுன அட்டகாசத்துக்கு...இங்க தெனமும் ஆஸ்பித்திரில இருக்கற மாதிரி பிரட் சாப்பிட வேண்டி இருக்கு :-) //

ரொம்ப ஆடிட்டோமோ????

//பிரட்டா, எனக்கு உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு//
சேம் பிளட்...பிரட்ட பாக்குறப்ப எல்லாம் ஏண்டா நான் நல்லா தான இருக்கேன்னு தோனும் :-) //

எனக்கு கோவம் வருது பங்கு :-(

நாகை சிவா said...

//ஜி,
உன்னை தம்பி பதிவிற்கு பாசமுடன் அழைக்கிறோம்... உனக்காக அங்கே ஒரு கடமை காத்திருக்குது... //

ஜி... அங்க போங்க, இங்கன எப்ப வேண்டும்னாலும் ஆடிக்கலாம். நட்சத்திர வாரத்தில் ஆடுவது தான் முக்கியம்....

நாகை சிவா said...

//தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் இப்படி செண்டியா போட்டுத் தாக்கி நமக்கு வீட்டு நெனப்ப வர வச்சாவ...

இப்ப நீயுமா??? நல்லா இருங்கவே.. நல்லா இருங்க... //

என்ன பண்ணுறது ஜியா, நாம வாங்கி வந்த வரம் அப்படி....

நாகை சிவா said...

//கார்த்தி ஏன் சொந்த செலவில சூனியம் வெச்சிக பாக்கறிங்க. அங்கவே ரொம்ப கஸ்டபட்டு புலி புல்ல தின்னுகிட்டு இருக்கு அந்த கஸ்டத்த நீங்கவேற படணுமா //

சொந்த செலவில் சூனியமா இருந்தா உனக்கு என்னா, அடுத்தவன் செலவில் சூனியமா இருந்தா உனக்கு என்ன. உன் வேலைய பாருய்யா...

நாகை சிவா said...

//தம்பி நீங்க புலி மேல ஒரு கொலைவெறியோட இருக்கீங்கன்னு தெரியுது :-) //

அது எல்லாம் ஒன்னும் இல்ல பங்கு, பழி வாங்குறாராம் சார்.... வாங்கட்டும் வாங்கட்டும்...

நாகை சிவா said...

//எங்க போனாலும் வந்துறாங்கய்யா பின்னாடியே ஒரு இடத்துல நிம்மதியா உக்கார முடியலையே... //

ஆமாம் இவரு பெரிய ஹாலிவுட் ஸ்டார். பின்னாடியே துரத்திக்கிட்டு வந்து ஆட்டோகிராப் கேட்குறாங்க....

//அது வீரனுக்கு... //

இப்ப என்ன சொல்ல வர???

நாகை சிவா said...

//வெரி குட்! //

தள, எதுக்கு இந்த குட், என் சோகத்தை கண்டா????

நாகை சிவா said...

//அந்த மாதர்குல மாணிக்கத்த பாடு படுத்தினதுக்குதான் இப்படி மாட்டிகிட்ட..
உன்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சாம் //

சரி நான் பாடு படுத்தினே அனுபவிக்குறேன்.

நீ ஏன் அனுபவிக்குற, அத சொல்லு..

நாகை சிவா said...

//சும்மா வேலை விளையாட்டுன்னு இல்லாம வகையா சமைக்கவும் கத்துக்கிடலாமுல்ல. பிற்காலத்துக்கும் உபயோகப்படும்!! //

கொஞ்சம் கொஞ்சம் செய்ய தெரியும் கொத்துஸ். வீக் எண்ட்ல எங்க ராஜ்ஜியம் தான்.

இந்த பிற்காலத்துக்கும் என்பதில் ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல....:-)

நாகை சிவா said...

//யோவ் வெட்டி ஏன்யா கமெண்ட டெலிட் பண்ணிட்ட!

அங்க போட வேண்டிய கமெண்ட இங்க போட்டுட்டயா நீ... //

அங்க தான் நீ பதில் சொல்ல மாட்டங்குற, இங்கயாச்சும் சொல்வியா என்று தான்...

//உன் ப்ளாக்ல கமெண்ட் போடறவங்களை தான் நீ மதிக்க மாட்டீங்கற... //

அப்படி சொல்லுறா என் சிங்க குட்டி!!!!

நாகை சிவா said...

//தம்பியின் பதிவில் என்னுடைய பின்னூட்டங்களை போட்டு ஐந்து நிமிடமாகியும் வெளியிடாத தம்பியை வன்மையாகக் கண்டிக்கிறோம்... //

அதை ஏன்ப்பா இங்க வந்து கண்டிக்குற, நீங்க வந்தது தெரிஞ்சு இங்கனு இருந்து தம்பி ஒடிட்டார்....

//என்ன புலி... நீ புலி கறி சாப்டுத்தான் புலின்னு பட்ட பேரு வந்திச்சுன்னு அரசல் புரசலா செய்திகள் வந்துக்கிட்டு இருக்குது.. நீ என்னடானா இதுக்கே சலிச்சிக்கிட்டு.... //

என்னைய உள்ள் வச்சு பாக்க வேண்டும் என்பதில் உனக்கு அப்படி என்ன ஒரு ஆசை. மானுக்கே 10 வருசம் சொல்லுறாங்க, புலினா வேண்டாம்ப்பா ராசா வேண்டாம். என்னைய வாழ விடுங்க...

நாகை சிவா said...

//இப்படியா விளைஞ்சது? அடக் கடவுளே (-: //

ஆமாங்க, வர வர கன்னா பின்னானு விளையுது....

நாகை சிவா said...

//வெட்டி ஏன் இந்த கொலை வெறி ஒரு முடிவோட தான் இறங்கி இருக்கிங்க போல. தம்பி இங்கன புலிக்கு டின்னு கட்ட புலி அங்க தம்பிக்கு டின்னு கட்ட என்னமோ போங்க நடத்துங்க நடத்துங்க. :))//

எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே... நான் கொஞ்சம் அதிகமா கொடுத்து தான் பழக்கம். அதிலும் தம்பிக்கு ரொம்ப அதிகமாவே செய்யனும்.... செஞ்டுவோம்...

நாகை சிவா said...

//இந்த வீக்கெண்ட் இங்கயும் அதே கதி தான். கொஞ்சம் டயர்டா இருக்குனு சமைக்கல.. பிரட் தவிர எதுவுமில்ல ஆனா எனக்கும் பிரட் சாப்பிட்டா ஏதோ ஒடம்புக்கு முடியலியோனு தான் தோனும் !!! //

அருண், அம்புட்டு பேருக்கும் சேம் ப்ள்ட்டா வருது.... எல்லாம் ஒரே இனமோ!!!!

நாகை சிவா said...

//adhu!!! :) seekiram settle aagidunga! konjam thappikalam :) //

பொற்கொடி, எல்லாரையும் விடு என் மேல் அப்படி என்ன கோவம் உங்களுக்கு...

தப்பிக்குறது வழி சொல்லுறீங்களோ இல்லையோ நல்லா மாட்டி விடுறதுக்கு வழி சொல்லி இருக்கீங்க....

நாகை சிவா said...

//இந்த பதிவை உங்க அம்மா படிச்சாங்களா?
நம்ம பையன் ஊர் விட்டு ஊர் போய் பட்டினியா கிடந்திருக்கே என்று.படிச்ச மறுநாள் செம வெட்டு வெட்டலாம்.:-))
//

படித்து இருப்பார்கள் குமார். நல்ல சாப்பிட சொல்லி அட்வைஸ் வரும்....

நாகை சிவா said...

//அதைப் பங்கு போட கல்லூரியிலிருந்து இன்னும் இருவர் வந்து சேர்ந்தனர்! //

பகிர்ந்து உண்டு வாழ்ந்து இருக்கீங்க :-)

//புலிக்கறியே கிடைத்தாலும் கிடைக்கலாம் :-) //

நாகு, என்னது இப்படி கிளம்புறீங்க....

முதல் வருகை, தொடரவும்.

நாகை சிவா said...

//Repeattttuuuuuu!!
Aana..Thayir saadham saapittu.. kavuthuteengalea.. PULI..//

உடம்ப மெயின் டன் பண்ண வேண்டாமா? அதுவும் இல்லாட்டி எலி ஆயிடுவேன்...

நாகை சிவா said...

//தக்காளி சூப், அவரைக்காய் சாம்பார், தக்காளி ரசம், சுண்டு விரல் மொத்தமா உள்ளங்கைவிட கொஞ்சம் பெருசா 2 வஞ்சனை மீன் வருவல், முட்டை ஆஃப் பாலிப் 2, பொன்னி அரிசி சாதம் 1கப், 1கப் கெட்டி தயிர், கிடாரங்காய் ஊருகாய் கொஞ்சம், ஒரு வாழைப்பழம்...அவ்வளவு தான்.//

அவ்வளவு தானா, அஞ்சப்பர், சரவணபவன் இரண்டிலும் ஆர்டர் பண்ணி உங்களுக்கு அனுப்ப சொல்லுறேன். அது போகட்டும் அது என்ன தக்காளி சூப் சாப்பிட்டு, மறுபடியும் தக்காளி ரசம்....

//ஆமா ஜி! நானும் தம்பிய கடிக்கிறேன் //

நேராக போய் கடித்து விட்டு வர வேண்டுகிறேன்....

நாகை சிவா said...

//சிவா! புலி குழம்பு வைக்க தெறியுமா? (கொத்ஸ்! பாய்ந்து வரக்கூடாது. நான் கேட்டது original tiger குழம்புதான்) //

தெரியாது. தெரிஞ்க்கவும் விருப்பம் இல்லை. :-)

//அப்பாடா புலி 40 ஆயிடுச்சு! குகைக்கு புலி போயிடுச்சு:)) //
எதுக்கும் குகை உள்ளே தள்ள இந்த 41. நா வர்டா.. //

இதில் ஒரு ஆனந்தமா? நல்லா இருங்க சாமி, நல்லா இருங்க...

நாகை சிவா said...

//ஆனாவூன்னா கொசுவத்திய சுத்திடுறீங்க மக்கா //

இதாம்ப்பா முத கொசுவத்தி!!!!

//அங்க தம்பி பதிவுல ஆளையே காணோம் இங்க என்னடான்னா புலியை குகைக்கு அனுப்பிக்கிட்டுயிருக்கீங்க... //

அதானா, அவரு அங்கன கொஞ்சம் தள்ளிக்கிட்டு போங்கப்பா!!!

//இங்கையும் இதே கதை தான் ;//

சேம் ப்ள்ட் விடு கோபி!!!

//நாட்டாமை உங்களுக்கு என்ன ஆச்சு....இது வாலிபர்களின் கவலை.... உங்களுக்கு மா???? //

அவரும் வாலிபன் தான்ய்யா, யாரும் நம்ப மாட்டேன் இப்படி அடம் பிடிக்குறீங்களேப்பா!!!

நாகை சிவா said...

//பங்கு இந்த பொற்கொடி சொல்றத நம்பாத....இது சொ.செ.சூ :-) //

அனுபவஸ்தன் நீ சொல்லுற, நான் மறுப்பேனா சொல்லு பங்கு...

//நாக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி தாங்க :-))))) //

அடிச்சான் பாருய்யா என் பங்கு!!!

நாகை சிவா said...

//அட புலி,
எப்டி இருந்த நீ இப்டி ஆயிட்ட?//

:-((((((((

//அதுசரி, எல்லா இடத்துலயும் நடக்குறதுதானே.. உனக்காவது ஆப்ரிக்கா சமையற்காரி அகப்பட்டுருக்கா. :)))//

இருக்கு, அதுக்கு ஏன் சிரிப்பான். கற்பனைகளை கன்னா பின்னானு ஒட விடக்கூடாது சொல்லிட்டேன்.

//இந்தப் பிரச்சனையை சமாளிக்க எனது யோசனை. //

இத ஏற்கனவே விக்கி ல படிச்சு இருக்கேன். டெட்ராபேக் பாத்தாலே தலை தெறிக்க ஒடுவேன், அதன் வாசனைக்காக!!!

MyFriend said...

80.. ஒரு ரவுண்டா ஆரம்பிக்கலாம்.. ;-)

MyFriend said...

ரொம்பவே பட்டு எழுதியிருக்கீங்க போல?

MyFriend said...

புலி படித்தாலும் புல்லைதான் திங்காதுன்னு நினைச்சேன்.. ஆனா, இங்கே????

நாகை சிவா said...

//80.. ஒரு ரவுண்டா ஆரம்பிக்கலாம்.. ;-) //

இது என்னங்க புதுசா இருக்கு.

60 தான் ஒரு ரவுண்ட் னு சொல்லுவாங்க. உங்க ஊருல 80ய்யா????

நாகை சிவா said...

//ரொம்பவே பட்டு எழுதியிருக்கீங்க போல? //

ஆமாங்க ரொம்பவே பட்டாச்சு. பட்டா தான் புத்தி வருது நமக்கு எல்லாம், என்ன பண்ணுறது. :-(

//புலி படித்தாலும் புல்லைதான் திங்காதுன்னு நினைச்சேன்.. ஆனா, இங்கே???? //

படிக்காத புலியும் புல்லை திங்காதுங்க....;-)

இலவசக்கொத்தனார் said...

என்னய்யா எனக்குப் பதிலே சொல்லலை?

நாகை சிவா said...

உமக்கு பதில் சொல்லாமலா?

அப்பவே சொல்லிட்டேனே!!!!

மறுக்கா போடுறேன்...

////சும்மா வேலை விளையாட்டுன்னு இல்லாம வகையா சமைக்கவும் கத்துக்கிடலாமுல்ல. பிற்காலத்துக்கும் உபயோகப்படும்!! //

கொஞ்சம் கொஞ்சம் செய்ய தெரியும் கொத்துஸ். வீக் எண்ட்ல எங்க ராஜ்ஜியம் தான்.

இந்த பிற்காலத்துக்கும் என்பதில் ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல....:-)

Porkodi (பொற்கொடி) said...

enna naatamai, Mcdonalds bun venuma?? idho thangamanikku oru call poduren :)

puli, ivanga ellam summa bayamurutharanga! nisama kanaalam kattina oralavu nalla saapadu urudhi. idhukku mela yaravadhu pesinaa, veliya varum avanga kurudhi!
onnum illa TR padam paaka aasai, adhan!

Anonymous said...

அய்யோ பாவம்.பார்த்து சிவா.அமுல் பேபி மாதிரி இருப்பீங்கன்னு கேள்விபட்டேன்.இந்தியா போய் சேரும் பொழுது காய்ந்து போக போறீங்க.நல்ல சாப்பிடனும்.என்ன?

ஜொள்ளுப்பாண்டி said...

அட சிவா இதுகெல்லாம் கவலைப் படாதீங்க மக்கா!!! :)))))) புலி பசிசாலும் "full" ஐ திங்காதுன்னு மாத்தீடுவமா மப்பூ சீய் மாப்பூ?? ;)))))))))))))))

Anonymous said...

@jollz
//அட சிவா இதுகெல்லாம் கவலைப் படாதீங்க மக்கா!!! :)))))) புலி பசிசாலும் "full" ஐ திங்காதுன்னு மாத்தீடுவமா மப்பூ சீய் மாப்பூ?? ;))))))))))))))) //

சிவா மாதிரி நல்ல பசங்கள கெடுப்பதே நீங்கதான்:)

Geetha Sambasivam said...

அம்மாகிட்டே நேர்லே சொல்லி இருக்கணும். சொன்னீங்களா இல்லையா?

Syam said...

//nisama kanaalam kattina oralavu nalla saapadu urudhi//

@பொற்கொடி,

நல்ல சாப்பாடு கிடைக்கும் அது உறுதி...ஆனா மன்புழுக்கு ஆசைபட்டு மீன் தூண்டில்ல மாட்டுற மாதிரிதான் இதுவும் :-)

நாகை சிவா said...

//enna naatamai, Mcdonalds bun venuma?? idho thangamanikku oru call poduren :)//

பங்கு உன் நிலைமை இப்படியா ஆகனும்.

//puli, ivanga ellam summa bayamurutharanga! nisama kanaalam kattina oralavu nalla saapadu urudhi.//

ஒரளவு தானா? இது இப்பவே நான் சமைக்கும் போது கிடைக்குதே!!!!

//idhukku mela yaravadhu pesinaa, veliya varum avanga kurudhi!
onnum illa TR padam paaka aasai, adhan! //

பாக்க ஆசைப்பட்டதுக்கே இப்படியா, பாத்தா........

நாகை சிவா said...

//அய்யோ பாவம்.பார்த்து சிவா.அமுல் பேபி மாதிரி இருப்பீங்கன்னு கேள்விபட்டேன்.//

அமுல் பேபியா......இத கேட்டா எங்க அம்மாவே சிரிப்பாங்க.... இது எல்லாம் டூ மச்....

//இந்தியா போய் சேரும் பொழுது காய்ந்து போக போறீங்க.நல்ல சாப்பிடனும்.என்ன? //

பெரியவங்க நீங்க சொல்லிட்டிங்களா, நல்லா சாப்பிட்டா போச்சு.

நாகை சிவா said...

//அட சிவா இதுகெல்லாம் கவலைப் படாதீங்க மக்கா!!! :))))))//

கவலைப்படல மக்கா, நினைச்சு பாத்துக்குறேன்.

// புலி பசிசாலும் "full" ஐ திங்காதுன்னு மாத்தீடுவமா மப்பூ சீய் மாப்பூ?? ;))))))))))))))) //

நீர் சொன்னதுக்கு அப்புறம் மறுப்பேச்சு ஏது, சொல்லும்.... :-))))

நாகை சிவா said...

//சிவா மாதிரி நல்ல பசங்கள கெடுப்பதே நீங்கதான்:) //

துர்கா, நான் நல்ல பையன் அப்படினு நீங்க சொன்னதை கேட்கும் போது உள்ளம் அப்படியே பூரிச்சு போகுது...

பாண்டி, நல்லா கேட்டுக்க மேன்....

நாகை சிவா said...

//அம்மாகிட்டே நேர்லே சொல்லி இருக்கணும். சொன்னீங்களா இல்லையா? //

அட அத ஏன் கேட்குறீங்க, இத அவங்க படிச்சுட்டு ஒரே அழுக்காச்சியாம், வேலையே வேண்டாம் இங்க வர சொல்லுங்க என்று. அப்புஸ் திட்டுறார் என்னய, ஏண்டா இத எல்லாம் எழுதுறேனு.... :-((((

நாகை சிவா said...

//@பொற்கொடி,
நல்ல சாப்பாடு கிடைக்கும் அது உறுதி...//

பங்கு, உனக்கு நல்ல சாப்பாடு கிடைக்குதா, அண்ணி ரொம்ப நல்லவங்க போல.........உன்னைய கண் கலங்காம பாத்துக்குறாங்க....

//ஆனா மன்புழுக்கு ஆசைபட்டு மீன் தூண்டில்ல மாட்டுற மாதிரிதான் இதுவும் :-) //

அனுபவம் பேசுற மாதிரி இருக்கு. பொற்கொடி நீங்க வந்து பதில் சொல்லனும். அப்பால நான் ஒரு முடிவுக்கு வரேன்....

மு.கார்த்திகேயன் said...

நல்ல கதை சிவா.. இப்படித் தான் நமக்கு.. இருக்கிறப்போ சில விஷயத்தோட அருமை தெரியாது.. இல்லாதப்போ தான் தெரியிறது..

மு.கார்த்திகேயன் said...

இதை படிச்சவுடனே எனக்கு ரன் பட விவேக் காமெடி தான் ஞாபகத்திற்கு வந்தது, மாப்ஸ்..

மு.கார்த்திகேயன் said...

அப்புறமா வர்றேன்னு சொல்லிட்டு, எவ்ளோ லேட்டா வந்ததுக்கு மன்னிச்சுக்கோப்பா மாப்ஸ்

மு.கார்த்திகேயன் said...

அட! நாம தான் இன்னைக்கு சச்சின் போல..

முத ரன்னும் நாம தான்! 100-உம் நாம தான்..

அபி அப்பா said...

//சிவா மாதிரி நல்ல பசங்கள கெடுப்பதே நீங்கதான்:) //

சகோதரி துர்கா! நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு! என் பாராட்டுகள்:-))

நாகை சிவா said...

////சிவா மாதிரி நல்ல பசங்கள கெடுப்பதே நீங்கதான்:) //

சகோதரி துர்கா! நல்ல நகைசுவை உணர்வு உங்களுக்கு! என் பாராட்டுகள்:-)) //

தொல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதுல என்ன நகைச்சுவை கண்டீர்கள் நீங்க..... நாம் எல்லாம் ஒரே ஊர், அத மறக்க கூடாது என்ன....

நாகை சிவா said...

//நல்ல கதை சிவா..//

மாம்ஸ், இது கதை அல்ல நிஜம்.


// இப்படித் தான் நமக்கு.. இருக்கிறப்போ சில விஷயத்தோட அருமை தெரியாது.. இல்லாதப்போ தான் தெரியிறது.//

சரியா சொன்ன மாம்ஸ்...

நாகை சிவா said...

//இதை படிச்சவுடனே எனக்கு ரன் பட விவேக் காமெடி தான் ஞாபகத்திற்கு வந்தது, மாப்ஸ்.. //

நான் அந்த அளவுக்கு எல்லாம் மோசம் இல்ல மாம்ஸ்... அதுல விவேக் ஒவர் லூட்டி...

//அட! நாம தான் இன்னைக்கு சச்சின் போல..

முத ரன்னும் நாம தான்! 100-உம் நாம தான்.. //

சதம் கண்ட கோமகன் வாழ்க!

வாழ்க!!!

Geetha Sambasivam said...

அதான் பெரிசா விளைச்சல் கண்டிருக்கே, இன்னுமா புதுசா ஒண்ணும் எழுதலை? ஆணி அதிகமா இருக்கோ?