அப்படி எந்த பொறியில் போய் சிக்கினேன் என்று கேட்கிறீங்களா. என் கிரகம் நேற்று இரவு சவுத்ரியின் தவப்புதல்வன் ஜீவா நடித்த "பொறி" படத்தை பார்த்து தொலைச்சுப்புட்டேன். அந்த "பொறி"யில் சிக்கின பிதி தெளிவதற்குள் நான் ஒரு வழியா ஆகிட்டேன்.
இந்த படத்தில் கதைனு ஒன்னு இருப்பதே பாதி படத்துக்கு மேல தான் தெரியுது. நேர்மையான ஆசிரியர் ஆன நாகேஷ் தன் ஒய்வுக்கு பிறகு கிடைக்கும் பணத்தை வைத்து மகன் ஜீவாக்கு ஒரு கடை வாங்கி தருகிறார். பிறகு அந்த இடம் எனக்கு சொந்தமான இடம் என்று சீமான் வரார். தாங்கள் போலி பத்திரத்தின் மூலம் ஏமாற்றப்பட்டது ஜீவாக்கு புரிய, பலரை பார்த்து மிரட்டி இதுக்கு எல்லாம் மூலக் காரணமான வில்லனை கண்டுப்பிடிக்கிறார். தன் நண்பர்களுடன் சேர்ந்து "மிக அருமையான" ஒரு திட்டத்தை போட்டு மொத்த கூட்டத்தையும் நீதிதுறையின் முன்னால் நிறுத்தி நியாயம் வாங்கி தருகிறார். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இதுக்கே கண்ண கட்டுதே.
ஜீவா - ராம், டிஸ்ஷும், ஈ னு நல்லா தானே நடிச்சுட்டு இருந்திங்க என்ன ஆச்சு. வேணாம் சாமி இந்த விஷப் ப்ரீட்சை. அம்புட்டு தான் சொல்ல முடியும். அப்பால் ஒரு மேட்டரு. ஒன்னு தாடி வளங்க. இல்லாட்டி அந்த நீளமான கிரிதாவை எடுத்து விடுங்க. தாங்கல சாமி. பெரியார் பக்தனா வந்து அவருக்கு சூடம் எல்லாம் காட்டுறார். தேவையில்லாம பெரியார் சிலை ஞாபகம் எல்லாம் எனக்கு வந்து தொலைக்குது, ஏன் வம்பு ஆள விடுங்க.
பூஜா - தாயே! நீ என்ன வேலை பாக்குறனு ஒரு சீன் வருது. அதுவும் படுமட்டமான கஜேந்திரனின் காமெடி சீன் அது. அதன் பிறகு நீ என்ன வேலை செய்யுறனு யாருக்கும் தெரியாம போச்சே. ஏதோ அப்ப அப்ப வந்து முகத்தை திரையில் காட்டிட்டு போற. அது தான் கொஞ்சம் குளுமையா இருக்கு. இதுக்காக நான் நன்றி எல்லாம் சொல்ல முடியாது. நீ தான் சொல்லி இருக்கியே இது மாதிரி சின்ன சின்ன உதவிக்கு எல்லாம் நன்றி எதிர்பாக்க கூடாதுனு, அதான். அது போகட்டும், இந்த படத்துல பல காட்சிகளில் தம்பி, தம்பினு ஜீவாவை கூப்பிடுற. தீடிர்னு அவர லவ் பண்ணுற. அது எப்படி. என்னமோ போ. நல்லா இரு.
தினா - இவரு தான் இந்த படத்துக்கு இசையாம். ஒரு பாட்டை தவிர மற்றவை எல்லாம் ரொம்ப சத்தமா இருக்கு சாமி. முடியல. தினா சார் மன்மத ராசா கொஞ்சம் எங்க நல்லதை நினைத்து மறந்து விடுங்களேன் ப்ளிஸ்.
இது போக இந்த படத்தில் நாகேஷ், டெல்லி கணேஷ், கருணாஸ், மணிகண்டன் போன்ற பலர் இருக்காங்க அப்படிங்குறது தவிர வேற ஒன்னும் விசயம் இல்ல. கருணாஸ், மணிகண்டன், கானா உலகநாதன், கஜேந்திரன் போன்றவர்கள் காமெடிங்குற பேர்ல நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறாங்க. பேய்காமன் போலீஸ் அதிகாரியா வரார், ஏன் வரார்னு சத்தியமா புரியல. நல்ல நடிகரை சும்மா வந்து போக வச்சு இருக்காங்க. காதல் தண்டபாணி அமைச்சரா வரார். அவர ஏதோ பிக்னிக் போற மாதிரி கடத்துறாங்க. அவரும் கூட போறார். நல்ல கூத்து தான். படத்தின் வில்லனை பத்தி சொல்லனும் என்றால் நல்ல உயரமா திடாத்திரமா இருக்கார். ஆந்திரா பக்கம் ஒதுங்கினால் அவருக்கு எதிர்காலம் உண்டு.
திருடா திருடி எடுத்த டைரக்டர் தான் இதுக்கும் டைரக்டருனு படத்தின் காட்சியமைப்பை பார்த்தாலே தெரிந்து விடுகின்றது. அதே போல் ஹீரோ ஹீரோயின் சண்டை, டப்பாங்குத்து பாடல்கள், மன்மத ராசாவை போன்ற ஒரு பாடல், அதே மெட்டு, அதே டான்ஸ் யப்பா தாங்கல சாமி. நல்ல கதைக்கரு கிடைத்தும் திரைக்கதை, காட்சியமைப்பில் இப்படி கோட்டை விட்டதும் இல்லாமல் எங்களையும் இப்படி பொறியில் சிக்க வச்சுட்டிங்களே.
இந்த பொறியில் நான் மட்டும் சிக்கல இன்னொருத்தரும் நல்லா சிக்கி இருக்காரு, அவர் பெயர் சம்பந்தம் கார்த்தி. அந்த அப்பிராணி வேற யாரும் இல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் தான்.
39 comments:
/இந்த பொறியில் நான் மட்டும் சிக்கல இன்னொருத்தரும் நல்லா சிக்கி இருக்காரு, அவர் பெயர் சம்பந்தம் கார்த்தி. அந்த அப்பிராணி வேற யாரும் இல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் தான்./
:-)))
இந்தப் படத்துல "பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்..."் அப்படினு ஒரு மெலடி பாட்டு நல்லா இருக்கிறதா சொன்னாங்களே!!!
//:-)))//
அருள், இப்படி எல்லாம் மனக்கவலையில் இருப்பவர்களை பார்த்து சிரிக்க கூடாது.
ஆமாங்க அந்த ஒரு பாட்டு மட்டும் தான் நல்லா இருக்கு. மற்றவை எல்லாம் ஒரு 10 தடவை கேட்ட பிறகும் கூட மனதில் நிற்கவில்லை.
//இந்த படத்துல பல காட்சிகளில் தம்பி, தம்பினு ஜீவாவை கூப்பிடுற. தீடிர்னு அவர லவ் பண்ணுற. அது எப்படி. என்னமோ போ. நல்லா இரு.//
நெசமாவா சொல்ற?
நல்லா இருன்னு சொன்னதுக்கு நன்றி.
ஏன்யா இந்த மாதிரி படத்துக்கு போய் விமர்சனம் வேற எழுதி எங்களையும் கஷ்டப்படுத்தற? போகறதுக்கு மின்னாடி எங்களாண்ட ஆலாசனை பண்ண வேண்டாமா?
என்ன போ
'பேருந்தில் நீ எனக்கு' பாட்டை கேட்டு நம்பி இந்த படத்தை பார்த்து ஏமாந்த ஆள் தான் நானும்.
ஆனா,
பதிவு டைட்டில் சூப்பரா பொருந்தி வருது .:-)
//ஏன்யா இந்த மாதிரி படத்துக்கு போய் விமர்சனம் வேற எழுதி எங்களையும் கஷ்டப்படுத்தற? போகறதுக்கு மின்னாடி எங்களாண்ட ஆலாசனை பண்ண வேண்டாமா?//
யோவ் எனக்கு என்னய்யா தெரியும். ஜீவா இப்ப எல்லாம் நல்லா நடிக்கிறார் அப்படினு சொல்லி இந்த சிடிய கொடுத்தான் ஒரு நாதாரி. நேத்துனு பாத்து எனக்கு தூக்கம் வரலனு இந்த படத்தை போட்டேன். சுத்தமா தூக்கம் இல்லாம போச்சு..........
அப்புறம் இன்னிக்கு தீபாவளி பாக்கலாம் என்று இருக்கேன். உன் விமர்சனைத்தை படித்தும் பாக்க போறேன் என்றால் அதுக்கு ஒரே காரணம் தான். அது உனக்கே தெரியும்.
//நெசமாவா சொல்ற?//
அப்புறம்... நான் என்ன பொய்யாஆஆஆஆஅ சொல்லுறேன்.
//பதிவு டைட்டில் சூப்பரா பொருந்தி வருது .:-) //
ஆமாங்க, பொறி வச்சு புடிச்சுப்புட்டானுங்க.... :-(
முதல் வருகை, தொடர்ந்து வருகை புரியவும்.
முதல் வருகை இல்லீங்க முதல் பின்னூட்டம்ன்னு வேணா சொல்லலாம்.நான் வந்தப்போ நட்சத்திரம் பகுதியில் எழுதிட்டு இருந்தீங்கன்னு நினைக்கிறேன் .பின்னூட்டம் போட அப்பல்லாம் கொஞ்சம் தயக்கம். படிக்கறது தான் உங்க பதிவும்.[நாகை அப்படிங்கறதால ஊர்ப்பாசம்கொஞ்சம் ]
//ஒரு நாதாரி. நேத்துனு பாத்து எனக்கு தூக்கம் வரலனு இந்த படத்தை போட்டேன். சுத்தமா தூக்கம் இல்லாம போச்சு..........//
எலே சி.டில பாக்கும்போதே இந்த எபெக்ட் குடுக்கற, இன்னும் காசு குடுத்து தியேட்டர்ல பாத்திருந்தா ஆட்டோல டைரக்டர் வீட்டுக்கே போய் அடிச்சிட்டு வந்துருப்ப போலருக்கு.
கோவக்காரனப்பா நீ!
தீபாவளி பாக்கணும்னா ஒரே ரீசன்.
"சுசி"தான்
அந்த பேரை மட்டும் படத்துல லட்சக்கணக்கான முறை சொல்றான் ரவி!
புலி,
நல்லப்படியா குகை'க்குள்ளே போயி சேர்ந்துட்டிய்யா???
குகைக்குள்ளே யாருக்கோ வெச்ச பொறியிலே நீ போயி மாட்டிட்டியா???
:)
//ராம், டிஸ்ஷும், ஈ னு நல்லா தானே நடிச்சுட்டு இருந்திங்க என்ன ஆச்சு//
இதே தான் பங்கு நானும் நினைச்சேன்...
ஒரு பதினஞ்சு நிமிசம் என்னால பாக்க முடியல...எப்புடித்தேன் முழு படத்தயும் பாத்தயோ....தெறமதேன் :-)
ஒரே ஆறுதல் "பேருந்தில் நீ எனக்கு" பாட்டு... :-)
:-)
//இந்த பொறியில் நான் மட்டும் சிக்கல இன்னொருத்தரும் நல்லா சிக்கி இருக்காரு, அவர் பெயர் சம்பந்தம் கார்த்தி. அந்த அப்பிராணி வேற யாரும் இல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் தான்.//
பாவம் அவரு.. அதுவும் இந்த விமர்சனத்த படிச்சாரு.. அவ்வளோதான்..
//பின்னூட்டம் போட அப்பல்லாம் கொஞ்சம் தயக்கம். //
அம்புட்டு மோசமாக எழுதினேன். :-(
//.[நாகை அப்படிங்கறதால ஊர்ப்பாசம்கொஞ்சம் ] //
ஆஹா, அப்படியாங்க. நாகையில் எங்க?
//"சுசி"தான்
அந்த பேரை மட்டும் படத்துல லட்சக்கணக்கான முறை சொல்றான் ரவி!//
ஆமாய்யா, நமக்கே கடுப்பாயிடுது.
//கோவக்காரனப்பா நீ!//
சீ... நான் ரொம்ப நல்லவன்ப்பா
//குகைக்குள்ளே யாருக்கோ வெச்ச பொறியிலே நீ போயி மாட்டிட்டியா???//
அட ஆமாப்பா.....:-((((((
//ஒரு பதினஞ்சு நிமிசம் என்னால பாக்க முடியல...எப்புடித்தேன் முழு படத்தயும் பாத்தயோ....தெறமதேன் :-) //
அதான் பொறியில் நல்ல வசமா சிக்கிட்டேனே அப்புறம் எப்படி தப்பிப்பது. :-(
/************************
நல்ல கதைக்கரு கிடைத்தும் திரைக்கதை, காட்சியமைப்பில் இப்படி கோட்டை விட்டதும் இல்லாமல் எங்களையும் இப்படி பொறியில் சிக்க வச்சுட்டிங்களே.
************************/
Why Blood, Same Blood.
(Naanum Intha Padattha Paarthen)
18ஆ? :)
என்னமோ போட்ட கமெண்ட் சேர்ந்துச்சா இல்லியா ஒண்ணும் புரியல. :-(
//Why Blood, Same Blood.
(Naanum Intha Padattha Paarthen) //
:-))))))))
யாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இவ்வையகம்.
முதல் வருகையா சாரே!
//என்னமோ போட்ட கமெண்ட் சேர்ந்துச்சா இல்லியா ஒண்ணும் புரியல. :-( //
பொற்கொடி நீங்க போட்ட கமெண்ட் வராம இருக்குமா என்ன?
சுகம் தானே? :-)))))))))))
நீங்க நல்லாத்தான் எழுதறீங்க...புதுசா உள்ள நுழைஞ்சதால எனக்கு பின்னூட்டம் இட தயக்கமா இருந்தது என்று சொல்லவந்தேன்.நாகை மாவட்டம் தான்.மாயூரம்.
சும்மா தமாசுக்கு கேட்டதுங்க... ஆனா அடிக்கடி அந்த சந்தேகம் வரது ;-)
மாயவரம் மாபியாவா நீங்க? :-)))))))))
//இந்த பொறியில் நான் மட்டும் சிக்கல இன்னொருத்தரும் நல்லா சிக்கி இருக்காரு, அவர் பெயர் சம்பந்தம் கார்த்தி. அந்த அப்பிராணி வேற யாரும் இல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் தான்.
//
:))))
இந்த கலக்கு கலக்குதிய? நல்லாருங்கப்பூ
//இந்த கலக்கு கலக்குதிய? நல்லாருங்கப்பூ //
ஆஹா.... பெரியவா எல்லாம் வந்து இருக்கீங்களே இங்குட்டு....
எல்லா புகழும் பாலாவுக்கே....
ரொம்ப நன்றிங்க
/இந்த பொறியில் நான் மட்டும் சிக்கல இன்னொருத்தரும் நல்லா சிக்கி இருக்காரு, அவர் பெயர் சம்பந்தம் கார்த்தி. அந்த அப்பிராணி வேற யாரும் இல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் தான்.
//
மாம்ஸ், பாவம் இந்த மாதிரி படங்கள் எடுக்கின்ற தயாரிப்பளர்கள்.. கடைசியில் தலையில் போட துண்டுகூட கிடைக்காது இவங்களுக்கு
படத்தின் டைரக்டரும் இசையமைப்பாளரும் இன்னும் திருட திருடியை விட்டு வெளிலயே வரல.. அப்படிப் பாத்தா அவங்களும் அந்த பொறிலதான் இன்னும் சிக்கிக் கிடக்குறாங்க மாம்ஸ்..
மனமார்ந்த வாழ்த்துக்கள், பொறியில் மாட்டினதுக்கு, சொல்லவே இல்லையே? :-)))))))
//பாவம் அவரு.. அதுவும் இந்த விமர்சனத்த படிச்சாரு.. அவ்வளோதான்.. //
பாவம் தான் என்ன பண்றது. சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிட்டாரே!
:-(
//கடைசியில் தலையில் போட துண்டுகூட கிடைக்காது இவங்களுக்கு //
மாம்ஸ், இதுல பெரிய காமெடி என்னானா, திருடா திருடி படத்தை பாத்துட்டு அதே மாதிரி ஒரு படம் எனக்கு பண்ணிக் கொடுங்கனு தயாரிப்பாளர் தான் டைரக்டர் கேட்டு இருக்கார். அவரும் அதே மாதிரி(!!!) எடுத்துட்டு கொடுத்துட்டார்.
எனக்கு இன்னும் திருடா திருடி படம் மிக பெரிய வெற்றி படமா எப்படி ஆச்சுனு ஒரு கேள்வி இருந்துக்கிட்டே இருக்கு.........
புலி,
நல்ல வேளை படத்தை பாக்கலாம் அப்படின்னு நினைச்சேன் தப்பிச்சேன். தாங்க்ஸ் புலி
இன்னுமா பொறியிலே இருந்து வெளியே வரலை? :D
//புலி,
நல்ல வேளை படத்தை பாக்கலாம் அப்படின்னு நினைச்சேன் தப்பிச்சேன். தாங்க்ஸ் புலி //
ஏதோ விளம்பரத்தில் வர மாதிரி தான் பாக்காதே பாக்காதே அப்படினு கத்தனும் போல
//நல்ல வேளை தப்பிச்சேன் இந்த படம் பார்க்காம, அப்டியே இந்த மாதிரி நீங்க பார்த்து நொந்து போன படங்களோட லிஸ்ட் கொடுத்தீங்கன்னா நாங்கெல்லாம் எஸ்கேப் ஆகிப்போம்:D //
அந்த லிஸ்ட் ரொம்ப பெரிசுங்க. அப்ப அப்ப தரேன்......
//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இதுக்கே கண்ண கட்டுதே.//
அண்ணே எனக்கும் முடியலண்ணே.. 2 மணி நேரம் ஆகும் போல கண்ண தொறக்கவே..!!
//பூஜா - தாயே!//
சொல்லவே இல்ல..?!!
யார் யாரோ வராங்க..போறாங்க.. என்னவோ..நாங்க போன..திருப்ப நல்லபடியா வரமாட்டோம் போல.. அதனால.. பொறி யில் எங்களை சிக்காமல் காப்பாற்றிய அண்ணன்.. புலி..வாழ்க... வாழ்க..வாழ்க...
(சிவா:-அணிலு போதும் போதும்.. இந்தா கமிஷன புடி..கிளம்பு சீக்கிரம்..யாராவது பாக்க போறாங்க..)
////பூஜா - தாயே!//
சொல்லவே இல்ல..?!! //
ஒரு வார்த்தைக்கு சொல்ல கூடாதே... தாயே என்பதற்கு நேரடியான அர்த்தம் எடுத்துக்க கூடாது. உள்ளூர் அம்மன், வெளியூர் அம்மன் சொல்லுறது இல்லையா, அது போல...
//அணிலு போதும் போதும்.. இந்தா கமிஷன புடி..கிளம்பு சீக்கிரம்..யாராவது பாக்க போறாங்க..) //
அதானே குடுத்து காசுக்கு மேல கூவுற. ஒடு சீக்கிரம்..........
ஐயோ நானும் இந்த படத்த பாத்தேன்... எனக்கும் அதுக்கப்பறம் தூக்கமில்ல.. நல்ல கதை இருந்தும் வெட்டி பண்ணிட்டாங்க :(
பூஜா கூட அவளோ நல்லாயில்ல :(
பேருந்து பாட்டு மட்டும் தான் ஆறுதல் :)
(லேட்டஸ்டா பாலிடிக்ஸ் பதிவு போட்டுர்க்கீங்க , நமக்கு அவளோ அறிவு பத்தாது)
//லேட்டஸ்டா பாலிடிக்ஸ் பதிவு போட்டுர்க்கீங்க , நமக்கு அவளோ அறிவு பத்தாது) //
அருண் இப்ப என்ன சொல்ல வறீங்க. ஏதோ உள்குத்தோட சொல்லுற மாதிரியே இருக்கே
Post a Comment