Wednesday, February 21, 2007

நைல் நீர் வேண்டுமா?

ஐயா, நான் ஒரு உலக ஜல்லிங்க. என்னை போன்ற உலக ஜல்லிகள் எல்லாம் இந்தியன் என்ற அடையாளத்தை தொலைத்து வருவதாக இப்ப தானுங்க கேள்விப்பட்டேன். ஐய்யகோ, என்ன கொடுமை இது இந்திய நாட்டின் பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு இந்தியன் என்ற அடையாளத்தை தொலைப்பதா? நான் இந்தியன் என்ற அடையாளத்தை தொலைக்க விரும்பலங்க. அதனால் ஒரு முடிவு பண்ணிட்டேனுங்க......

இப்ப என்ன பிரச்சனை நைல் நீரை வாங்கி தர வேண்டும், அம்புட்டு தானே... சரிங்க நான் வாங்கி தருவதாக முடிவு பண்ணிட்டேன். ஆமாங்க.... ஆனா இதுல பாருங்க இங்கன தான் ஒரு பிரச்சனை இல்ல இல்ல நாலு விதமான பிரச்சனை இருக்கு. அது என்னனு சொல்லிடுறேன், எது சரியா வருது சொல்லுறிங்களோ அத முடிச்சிடலாம்.

1, வொய்ட் நைல் நீர்
2, ப்ளு நைல் நீர்
3, நைல் நீர்
4, நைல் மினரல் நீர்

இந்த வொய்ட் நைலுங்க உகாண்டா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. ப்ளு நைல் எத்தோப்பியா நாட்டில் இருந்து சூடானுக்கு வருது. இது இரண்டும் சூடான் தலைநகரத்துக்கு முன்னால் கலந்து அதன் பிறகு பொதுவான நைலாக எகிப்துக்கு போகுது. இந்த மூனுல ஏது ஒகே பாத்து சொல்லுங்க, உடனே சூடான் அதிபர்வுடன் அமர்ந்து பேசி முடிவு பண்ணிடலாம். நாம் கேட்டா அவரு உடனே கொடுத்து விடுவார். நம்ம மேல அவருக்கு அம்புட்டு பிரியம். அது ஏன் என்று இன்னொரு நாள் சொல்லுறேன்.

இந்த நாலாவது நைல் இருக்கு பாருங்க, அது நம்ம திருச்சிக்கு பக்கத்துல அரியமங்கலம் நினைக்கிறேன். அங்குட்டே கிடைக்குது. நம்ம நாகப்பட்டினத்தில் நம்ம நெருங்கிய தோஸ்து தான் இந்த நைலுக்கு நீருக்கு டீலர்ஷிப் எடுத்து இருக்கார். இந்த நீர் வேண்டும் என்றால் நான் நம்ம பயக்கிட்ட பேசி சிறப்பு தள்ளுபடி வாங்கி தரேனுங்க.

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, நானு ரொம்ப பிஸி பாருங்க, இந்த ஒரே பிரச்சனையை ரொம்ப நேரத்துக்கு பாக்க முடியாது. எந்த நீர் வேண்டும் என்று சொல்லுங்க, எம்புட்டு வேணும் சொல்லுங்க, நான் வாங்கி தரேன். ஆனா அந்த நீரை நீங்க தான் வந்து எடுத்துட்டு போகனும்.

தொடர்புடையப் பதிவுகள்

1, $ செல்வன்
2, லக்கி லுக்
3, செந்தழல் ரவி

35 comments:

கீதா சாம்பசிவம் said...

என்னத்தைச் சொல்றது? தண்ணி தான் கிடைக்கலைன்னா பதிவும் திறக்காமல் கொடுமைடா சாமி, அது சரி, நான் தான் ப்ர்ஸ்டா? என்னை நினைப்பு இருக்கா? :D

அபி அப்பா said...

நா செகெண்டு!!!

Hari said...

அடிங்கடா, அடிங்கடா

வளைச்சு வளைச்சு அடிங்கடா

அபி அப்பா said...

//சூடான் அதிபர்வுடன் அமர்ந்து பேசி முடிவு பண்ணிடலாம். நாம் கேட்டா அவரு உடனே//

ஒன்னியும் செய்ய முடியாது. சூடான் அதிபர் "உட்காரமுடியாத" நிலையில் இருப்பதாக GULF NEWS ல் போட்டிருந்தாக!!!

செந்தழல் ரவி said...

ஆகா...இப்போதுதான் அட்லீஸ்ட் நைல் நதி நீராவது கிடைக்கும் என்று தளராத மனம் கிடைக்கிறது...

தயவுசெய்து எங்க ஊர் திருக்கோவிலூருக்கு முதலில் அனுப்பவும்...

எங்கள் வீட்டின் எதிரே உள்ள பெண்ணை ஆற்றில் 'அதுக்கு' கூட தண்ணியில்லாமல் மக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது...

:)))))))))))))))))

மனதின் ஓசை said...

புலி.. நல்லா இருக்கியா? இங்கன வந்துட்டு போனியாமே?

Hariharan # 26491540 said...

நைல்நதி மற்றும் செவ்வாய் கிரக நீரை தண்ணிடாங்கர் லாரியில் எடுத்துவரும் காண்டிராக்டுக்கு வட்ட மாவட்டங்கள் டிவி/கேஸ் அடுப்பு ரேஞ்சில் நேற்று நள்ளிரவில் இருந்து கட்டிங் முன்பதிவு ஆரம்பிச்சாச்சாம்.

நைல்நதி நீர் நைட்ல வருமா பகல்ல வருமா?

ப்ளூநைல் நதி நீரா? வொய்ட் நைல் நதிநீரா? எது தமிழ்நாட்டுக்கு வரும்?

தமிழன் சூஸ் செய்ய வாய்பிருக்குமா?
இருந்தா ப்ளூநைல் நதிநீர் தான் தமிழ்நாட்டுக்கு வரணும்...

ப்ளூ(நைல்) வாட்டர் குடிச்சுட்டுத் தூங்கப்போனா தமிழனின் தண்ணித்தாகம் மட்டுமில்லை எல்லாதாகமும் அடங்கும் இல்லியா...:-))

நாகை சிவா said...

தமிழ்மணத்தில் எனக்காக இந்த வகைப்படுத்திய நல்ல உள்ளத்திற்கு என் நன்றிகள்

நாகை சிவா said...

//நான் தான் ப்ர்ஸ்டா? //

ஆமாம், நீங்க தான் 1st. அதுனால உங்களுக்கு 2 லிட்டர் நைல் மினரல் வாட்டர் பாட்டில் ப்ரீ.

//என்னை நினைப்பு இருக்கா? :D //

என்ன கேள்வி இது. மறக்க முடியாம உங்கள.......

நாகை சிவா said...

//நா செகெண்டு!!! //

இது என்ன புது விளையாட்டு இருக்கு. இது எல்லாம் நம்ம பங்கு ஷாம் பதிவுல. இங்குட்டு புளியோதரை எல்லாம் தரப்படாது. ;-)

நாகை சிவா said...

//அடிங்கடா, அடிங்கடா

வளைச்சு வளைச்சு அடிங்கடா //

ஏன் ஹரி என்னாச்சு. நான் எல்லாம் ரொம்ப சாதுங்க. யாராவது அடிச்சா வாய் மூடிக்கிட்டு வாங்கிட்டு வர அப்பிராணி. நான் போய் யார அடிப்பது.

நாகை சிவா said...

//ஒன்னியும் செய்ய முடியாது. சூடான் அதிபர் "உட்காரமுடியாத" நிலையில் இருப்பதாக GULF NEWS ல் போட்டிருந்தாக!!! //

இது மாதிரி பல காலமாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா அவரு சீனா மற்றும் இந்தியா துணைக்கு இருக்கும் தைரியத்தில் ரொம்பவே தெம்பா இருக்காரு.

நாகை சிவா said...

//எங்கள் வீட்டின் எதிரே உள்ள பெண்ணை, ஆற்றில் //

ரவி, உங்க வீட்டுக்கு எதிர் வீட்டு பெண்ணை ஆற்றில், அப்புறம் என்ன சொல்லுங்க :-)

நீங்க மனம் தளர ஆளா ரவி!!!!

நாகை சிவா said...

//புலி.. நல்லா இருக்கியா? இங்கன வந்துட்டு போனியாமே? //

நல்லா இருக்கேன் ஹமீது. ஆமாம் அங்குட்டு வந்து போனேன். உன்ன கண்டுக்காம வந்தது தப்பு தான். இந்த சின்ன புள்ள மேல கோபம் கொண்டு விடாதே நண்பா..........

நாகை சிவா said...

//ப்ளூ(நைல்) வாட்டர் குடிச்சுட்டுத் தூங்கப்போனா தமிழனின் தண்ணித்தாகம் மட்டுமில்லை எல்லாதாகமும் அடங்கும் இல்லியா...:-)) //

இதுல ஏகப்பட்ட உள்குத்து இருக்கு போல

:-)))))))))

சந்தோஷ் aka Santhosh said...

என்ன மாப்பி வந்த உடனே அடிச்சி ஆட ஆரம்பிச்சிட போல கலக்குடீ நீயி..

Samudra said...

மை காட். ஏமி இதி நீலுக்கு இந்த பிராபளம் சேஸ்தா உன்னாரு ? மேமு தான் ஆந்திராவுல உன்டி கிர்ஷ்னா தீர்த்தம் அம்புத்தாமே? :)

Syam said...

என்னமோ போ பங்கு...வேனுமின்னா சொல்லு...நயாகரா நீர் வீழ்ச்சிய தமிழ்நாட்டோடு இனைக்க புஷ்கிட்ட பேசரேன்...பாசக்கார பயபுள்ள நான் சொன்னா தட்டமாட்டான் :-)

Syam said...

//பாசக்கார பயபுள்ள நான் சொன்னா//

ஆனா நீ சொல்ல முடியுமானு எல்லாம் சின்ன புள்ள தனமா திருப்பி கேக்கபிடாது :-)

கவிதா|Kavitha said...

//மை காட். ஏமி இதி நீலுக்கு இந்த பிராபளம் சேஸ்தா உன்னாரு ? மேமு தான் ஆந்திராவுல உன்டி கிர்ஷ்னா தீர்த்தம் அம்புத்தாமே? :)//

சிவா என்ன இவரு உங்களை இந்த பதிவு போட்டதுக்கு திட்டறாரா?

வடுவூர் குமார் said...

எங்க நாகப்பட்டிணம் வீட்டு கிணற்றுக்கு வேண்டாம், பெருமாள் கோவில் கிணத்துக்கு சூடானில் இருந்து குழாய் போட முடியுமா? அப்போது தான் சொல்வேன்.
ஏனென்றல் நான் சின்ன பையனாக இருந்த போது கோடைகாலத்துக்கு இந்த கிணறு தான் உதவியது.
ஆமாம்,கிணத்துல இப்பெல்லாம் தண்ணீர் இருக்கா?

கவிதா|Kavitha said...

//ஆனா நீ சொல்ல முடியுமானு எல்லாம் சின்ன புள்ள தனமா திருப்பி கேக்கபிடாது :-)//

ஷ்யாம், chance ஏ இல்ல.. சிவா வுக்கும், புஷ்' க்கும் ஆகாது, உங்களுக்கு விஷயமே தெரியாதா?

வேதா said...

எனக்கு ஒன்னும் புரியல, அப்புறம் வந்து படிக்கறேன்:) காணாமல் போனவர்கள் அறிவிப்புல உங்களை சேர்க்க யோசிச்சேன் அதுக்குள்ள வந்துட்டீங்க:)

நாகை சிவா said...

//என்ன மாப்பி வந்த உடனே அடிச்சி ஆட ஆரம்பிச்சிட போல கலக்குடீ நீயி.. //

தட்டி தான் மாப்பு ஆரம்பிச்சி இருக்கேன். போக போக அப்படியே பிடிச்சிக்க வேண்டியது தான்.

நாகை சிவா said...

//மை காட். ஏமி இதி நீலுக்கு இந்த பிராபளம் சேஸ்தா உன்னாரு ? மேமு தான் ஆந்திராவுல உன்டி கிர்ஷ்னா தீர்த்தம் அம்புத்தாமே? :) //

மெய்யாலுமா? என்ன நைன தண்ணீ தண்ணீ மாறி மாறி புலம்புறாங்களேனு, இவ்வளவு சிரமப்பட்டு ஒரு டீல் பேசினா...... அட போங்கப்பா

நாகை சிவா said...

//நயாகரா நீர் வீழ்ச்சிய தமிழ்நாட்டோடு இனைக்க புஷ்கிட்ட பேசரேன்...//

அட அவசரப்படாத பங்கு. இப்படி நாம் அவசரப்பட்டு எதாவது செய்ய போக அப்புறம் அளவுக்கு அதிகமான நீரை வச்சு நம் மக்கள் என்ன பண்ணுவாங்க?

நாகை சிவா said...

//ஆனா நீ சொல்ல முடியுமானு எல்லாம் சின்ன புள்ள தனமா திருப்பி கேக்கபிடாது :-) //

நான் கேட்டேனா பங்கு. எப்படி பாத்தாலும் அவன் நம்ம பய தானே. நீ சொன்னா அவன் தட்டவா போறான்.

நாகை சிவா said...

//சிவா என்ன இவரு உங்களை இந்த பதிவு போட்டதுக்கு திட்டறாரா? //

சே..சே... சமுத்ரா என்னய திட்டுவாரா என்ன. வெட்டிப்பயல் பதிவுக்கு போயிட்டு அப்படி இங்க வந்து இருப்பார் போல அதான் கொஞ்சம் தெலுங்கு வாடை வீசுது.

நாகை சிவா said...

//சூடானில் இருந்து குழாய் போட முடியுமா? //

சூடானுக்கு முன்னாடி இருக்குற ஈரானில் இருந்தே குழாய் போட விட மாட்டேங்குறாங்க. இதுல சூடானில் இருந்தா. சரி பேசி பாக்குறேன்.

குமார் அண்ணன், இப்ப எல்லாம் நம்ம ஏரியாவில் குழாயில் இருந்து தண்ணீர் சும்மா அருவி மாதிரி வருது

நாகை சிவா said...

//ஷ்யாம், chance ஏ இல்ல.. சிவா வுக்கும், புஷ்' க்கும் ஆகாது, உங்களுக்கு விஷயமே தெரியாதா? //

எனக்கும் அவருக்கும் தான் ஆகாது. ஆனா அந்த பயபுள்ள நம்ம பங்குக்கு ரொம்பவே தோஸ்துங்க

நாகை சிவா said...

//எனக்கு ஒன்னும் புரியல, அப்புறம் வந்து படிக்கறேன்:)//

எங்களுக்கும் மட்டும் புரியுதா என்ன, ஏதோ புரிகிற மாதிரி நடிக்கிறோம். அம்புட்டு தான்.


//காணாமல் போனவர்கள் அறிவிப்புல உங்களை சேர்க்க யோசிச்சேன் அதுக்குள்ள வந்துட்டீங்க:) //

அட கஷ்டக்காலமே...... ஒரு விளம்பரம் மிஸ் ஆயிடுச்சே....

இலவசக்கொத்தனார் said...

மயிலிறகா மயிலிறகான்னு வர பாட்டுதான் ஞாபகம் வந்தது.

நைல் நதியா நைல் நதியான்னு பாடிக்கிட்டே இருக்கேன். :)

நாகை சிவா said...

//மயிலிறகா மயிலிறகான்னு வர பாட்டுதான் ஞாபகம் வந்தது. //

இந்த பாட்டு ஏன் ஞாபகத்துக்கு வருது???

//நைல் நதியா நைல் நதியான்னு பாடிக்கிட்டே இருக்கேன். :) //

"நைல் நதி"ய பத்தி பாடுறீங்களா.... இல்ல நதியா நினைச்சு பாடுறீங்களா....

நல்ல பாதிக்கிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் பயமுறுத்துனீங்கன்னா அப்புறம் உங்க பேச்சு கா!

நாகை சிவா said...

//இப்படி எல்லாம் பயமுறுத்துனீங்கன்னா அப்புறம் உங்க பேச்சு கா! //

சரி சரி... வந்து பழம் விட்டுட்டு போங்க....