சாப்பல் - ஹாட்லி ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து ஆஸ்திரேலியாவை விழ்த்தியது. இன்று நடந்த கடைசி ஆட்டத்தில், முதலில் பேட் செய்த ஆஸி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது. ஹைடன் அதிகபட்சமாக 181 * ரன்கள் எடுத்தார். கடின இலக்கு போல் தோன்றிய 347 ரன்களை நியூஸி மெக்மில்லன்(117), மெக் கல்லம் (86*) துணையுடன் 49.3 ஓவர்களில் நியூஸி சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதற்கு முன்பு நடந்த இரண்டு ஆட்டங்களிலும் நியூஸி வெற்றி பெற்று இருந்தது.
ஆட்டநாயகன் - மெக் மில்லன்.
முதல் ஒரு நாள் ஆட்டம் (16-2-07)
ஆட்டநாயகன் - மெக் மில்லன்.
முதல் ஒரு நாள் ஆட்டம் (16-2-07)
ஆஸி - 148 / 10 (49.3 ஓவர்கள்) ஹுஸ்ஸி - 42 , பாண்ட் - 9.3 - 2 - 23 - 5
நியூஸி - 149 / 0 (27 ஓவர்கள்) பிளமிங் - 70 * , வின்செண்ட் - 73 *
10 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி வெற்றி.
ஆட்டநாயகன் - பாண்ட்
இரண்டாம் ஒரு நாள் ஆட்டம் (18 - 02 - 07)
ஆஸி - 336 / 4 ( 50 ஓவர்கள்) ஹுஸ்ஸி - 105 , ஹாட்ஜ் - 97
நியூஸி - 340 / 5 (48.4 ஓவர்கள்) டெய்லர் - 117, புல்டன் - 76, மெக் மில்லன் - 52
5 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி வெற்றி.
ஆட்டநாயகன் - டெய்லர்
* இன்று நடந்தது ஆட்டத்தில் மொத்தம் 26 சிக்ஸ்சர்கள் அடிக்கப்பட்டன. (உலக சாதனை சமன்)
* உலக கோப்பைக்கு முன்பு நடந்த கடைசி ஒரு நாள் ஆட்டம் இது. இந்த தொடர் வெற்றியின் மூலம் நடக்க இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடர் மிகந்த பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
22 comments:
பீட்டா கொதறிடுச்சு போலிருக்கு...
செந்தழல் ரவி
சிவா, உங்க ப்ளாக் ல ஏதோ பிரச்சன..எழுத்து சரியா வரல.. அப்புறம் எங்க எங்கயோ என்ன என்னவோ இருக்கு.. பாருங்க ப்ளீஸ்
ஓ! இப்படித்தானா!!
Anna I am very Happy that Newzi won
புலி, எழுத்து பூச்சி பூச்சியா தெறியுது.(கண்ணாடி போட்டும்தான்) புலி ஊர்லயா? காட்டுலயா?
//பீட்டா கொதறிடுச்சு போலிருக்கு...
செந்தழல் ரவி //
ஆமாம் ரவி, அநியாயத்துக்கு :-(
//சிவா, உங்க ப்ளாக் ல ஏதோ பிரச்சன..எழுத்து சரியா வரல.. அப்புறம் எங்க எங்கயோ என்ன என்னவோ இருக்கு.. பாருங்க ப்ளீஸ் //
ரொம்ப நாள் ஆச்சுல, அதான் கவனிக்காம போஸ்ட் போட்டுட்டேன். முடிஞ்ச அளவு சரி பண்ணி உள்ளேன். சரியா இருக்கானு பார்த்து சொல்லுங்க.
//ஓ! இப்படித்தானா!! //
ஆமாங்க, என்னமா கொடுத்தாங்க தெரியுமா, அதுவும் தொடர்ந்து மூன்று முறையாக.........
//Anna I am very Happy that Newzi won //
வாங்க அவந்திக்கா, எனக்கும் மகிழ்ச்சி தான். நியூஸி பல மேட்சகளில் நல்லா விளையாடினாலும் தொடரை மிக சொற்பமாக தான் வெல்வார்கள். இதில் இருக்கும் பல வீரர்களுக்கு இது தான் கடைசி உலக கோப்பையாக இருக்கும். எப்படி கலக்குகிறார்கள் என்று பார்ப்போம்.....
//புலி, எழுத்து பூச்சி பூச்சியா தெறியுது.(கண்ணாடி போட்டும்தான்) //
:-(((((
//புலி ஊர்லயா? காட்டுலயா? //
சூடானில் :-((((
சிவா,இப்போ நல்லாயிடுச்சு. ஒக்கே சூடான் வந்தாச்சா? ஊர் போட்டோல்லாம் இருந்தா நெறய போடுங்க
என்ன பங்கு திரும்பி களத்துக்கு வந்தாச்சா...இனி நியூசி மாதிரி நீயும் அடிச்சு ஆடு :-)
மாம்ஸ்.. சூடான் வந்தாச்சு போல.. வந்தவுடனே ஒரு கிரிக்கட் பதிவை போட்டு சிக்ஸர் அடிச்சாச்சு..
sema aapu aaasikku :)
adhuvum 330+ and 340+ chase panradhu ellam theliya vachi theliya vachi adikkira maathiri :)
என்னப்பா புலி,
எப்ப ஊருக்கு வந்தே. ஆளே காணோம்.
சிவா, இப்ப சரியா இருக்கு.. ஆனா..சைட் பார் ல நீங்க போட்டு இருக்கற புல்லட்ஸ் டிசைன் பூச்சி மாதிரி இருக்கு.. அதுவே..கமெண்ட் லயும் at ' க்கு முன்னாடி வருது பாருங்க.. இது மாத்தினா..நல்லா இருக்க்கும்னு நினைக்கிறேன்.. பூச்சி குறைஞ்சிடும். .மத்தபடி ஓகே..!!
//இனி நியூசி மாதிரி நீயும் அடிச்சு ஆடு :-) //
உங்க ஆசிர்வாதத்துடன் ஆரம்பித்து விடுவோம் பங்கு.
//மாம்ஸ்.. சூடான் வந்தாச்சு போல.. வந்தவுடனே ஒரு கிரிக்கட் பதிவை போட்டு சிக்ஸர் அடிச்சாச்சு.. //
ஆமாம் மாம்ஸ். வந்தாச்சு. வந்து இப்ப மறுபடியும் நல்லா செட்டில் ஆயாச்சு.
//adhuvum 330+ and 340+ chase panradhu ellam theliya vachi theliya vachi adikkira maathiri :) //
ஏற்கனவே இங்கிலாந்து செம ஆப்பு கொடுத்தாங்க. அடுத்து நியுஸி சும்மா தெளிய தெளிய கொடுத்து இருக்காங்க. தெளிந்தார்களா இல்லையா என்பது உலக கோப்பையில் தெரியும்.
//என்னப்பா புலி,
எப்ப ஊருக்கு வந்தே. ஆளே காணோம். //
என்ன பங்கு, உனக்காக கேள்வி எல்லாம் கேட்டு, அதுக்கு நீயும் பதில் சொல்லிட்டு இப்ப ஆள காணாம் கேட்கிறியே?
நீங்க சூடான் புலியா?
இல்ல..
சூடான புலியா???
சும்மா அறிமுகத்துக்குத்தான் இந்த மொக்கை... கண்டுக்கிடாதீங்க...
//நீங்க சூடான் புலியா?
இல்ல..
சூடான புலியா???//
தெரியலயேப்பா தெரியலயே !!!!
:-)))))))))
Post a Comment