Monday, January 08, 2007

இது உண்மையாங்க?

இந்திய மொழிகளில் அதிக வலைப்பதிவர்களைக் கொண்ட மொழி தமிழ் என்று தயங்காமல் சொல்லலாம். இலக்கியம், அரசியல், தொழில்நுட்பம், சமூகம் என பல துறைகளைப் பற்றியும் இங்கே அடிதடியுடன் விவாதிக்கிறார்கள். நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் படிக்க முடியாத பல சுவாரஸ்யமான படைப்புகள் வலைபதிவுகளில் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால், இதையே மேடையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சமூக விரோத, வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்பும் கும்பலும் தமிழ் இலக்கிய உலகில் காணப்படும் குழு மனப்பான்மையும் இங்கேயும் உண்டு. மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள் ஆபாசமாகத் திட்டுவது பரஸ்பர ஷொட்டுகளும் இங்கே சகஜம்.

இந்த வார இந்தியா டூடே இதழில் "கலக்கல் வருடம் - புதிய சிந்தனைகள்" என்ற பகுதியில் "விரியும் விவாத வெளி" என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டவை தான் நீங்கள் மேலே பொட்டியில் பார்த்தது. அது உண்மை தானே?

26 comments:

நாகை சிவா said...

//இந்திய மொழிகளில் அதிக வலைபதிவர்களைக் கொண்ட மொழி தமிழ் என்று தயங்காமல் சொல்லலாம். //

கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

//இலக்கியம், அரசியல், தொழில்நுட்பம், சமூகம் என பல துறைகளைப் பற்றியும் இங்கே அடிதடியுடன் விவாதிக்கிறார்கள்.//

ஆமாம். ஆமாம். இல்லையா பின்ன. இது ரத்த பூமி ஆச்சே.


//நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் படிக்க முடியாத பல சுவாரஸ்யமான படைப்புகள் வலைபதிவுகளில் படிக்கக் கிடைக்கின்றன.//

உண்மை தானுங்க. அதிலும் சில சமயம் செய்திகளை அநியாயத்துக்கு முன்னாடியே தந்து விடுவார்கள். அதே போல வார இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் தொடாத பல விசயங்களை நம் பதிவர்கள் தொட்டு கலக்கி உள்ளார்கள்.

//ஆனால், இதையே மேடையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சமூக விரோத, வகுப்புவாத சிந்தனைகளைப் பரப்பும் கும்பலும் தமிழ் இலக்கிய உலகில் காணப்படும் குழு மனப்பான்மையும் இங்கேயும் உண்டு. //

ரொம்பவே இருக்கு. அதும் இல்லாமல் மற்றவர்களையும் அந்த வளையத்தில் உள்ளே இழுத்து விடுவதில் நம் ஆட்கள் பலே கில்லாடிகள்.


//மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள் ஆபாசமாகத் திட்டுவது பரஸ்பர ஷொட்டுகளும் இங்கே சகஜம்.//

இது எல்லாம் நடப்பதால் தானே இது யுத்த பூமி. பதிவர் வாழ்வில் இது எல்லாம் சாதாரணம்ப்பா........

Anonymous said...

அப்படி போடு... தமிழா ... கொக்கா

Anonymous said...

iso 9001 : 2007 உண்மை..ஹிஹி..எவ்வளவு நாள் அக்மார்க் உண்மைன்னு சொல்றதாம்?

நாகை சிவா said...

வாங்க சுந்தர் மற்றும் சந்தனமுல்லை. இருவருக்கும் முதல் வருகை என்று நினைக்கின்றேன். நன்றிகள் பல.

சந்தன முல்லை - ஐ.எஸ்.ஒ. எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சா? :-)

Syam said...

சத்தியமான உண்மை பங்கு... :-)

நாமக்கல் சிபி said...

புலி என்ன ஏதோ தெரியாத மாதிரி இது உண்மையானு கேக்கற???

இந்த ரத்த பூமில பல மாசமா விளையாடிக்கிட்டு இருக்கிற நீ இதை கேக்கலாமா? ;)

Arunkumar said...

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து ப்ளாகடா"னு சும்மாவா
சொன்னாங்க :)

நாகை சிவா said...

//சத்தியமான உண்மை பங்கு... :-) //

நீ சொன்னா சரியா தான் இருக்கும் பங்கு ;-)

நாகை சிவா said...

//இந்த ரத்த பூமில பல மாசமா விளையாடிக்கிட்டு இருக்கிற நீ இதை கேக்கலாமா? ;) //

யோவ் இது என்னய்யா புதுசா இருக்கு. நான் அப்படியே ஒரு ஒரமா வர்கார்ந்து வேடிக்கைதானே பாத்துக்கிட்டு இருக்கேன். நீ இது மாதிரி எல்லாம் சொல்லி ரத்தம் பாத்துட்டு தான் போவ போல இருக்கே......

நாகை சிவா said...

//"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து ப்ளாகடா"னு சும்மாவா
சொன்னாங்க :) //

கண்டிப்பா இத சும்மா சொல்லி இருக்க மாட்டாங்க ;-)...

ஆமா இது எப்பவுல இருந்து ஆரம்பிச்சிங்க....

இலவசக்கொத்தனார் said...

மீசை மட்டும் இருந்திச்சு, சும்மா முறுக்கி விட்டுருப்போமில்ல.... :D

Anonymous said...

கருத்து்ப் பறிமாற்றம் இருக்கட்டும்.சூடும் சுவையும் நகைச்சுவையும் இருக்கட்டும்.கிண்டலும் கேலியும் இருக்கட்டும்.ஆனால் நாகரீகமாக நயமான வார்த்தைகள் வலம் வரட்டும்.
ஆண் பெண் அனைவரும் ஆவலுடன் படிக்கட்டும்,அருவருப்பு வேண்டாமே.
அனைவரும் முயலுவோமா?

நாகை சிவா said...

//மீசை மட்டும் இருந்திச்சு, சும்மா முறுக்கி விட்டுருப்போமில்ல.... :D //

அப்ப இல்லையா, சரியா போச்சு போங்க.... ;-)
நாங்க எல்லாம் சிங்கமுல.....

நாகை சிவா said...

//அனைவரும் முயலுவோமா?//

தமிழன் மிக அருமையாக சொல்லி உள்ளீர்கள். அனைவரும் முயன்றால் இதை அடுத்த கட்டத்திற்கு மிகவும் வெற்றிகரமாக நகர்த்தி செல்ல முடியும்.

வேதா said...

இந்த செய்தியை நான் பார்க்காம விட்டுட்டேன்:) நான் இந்தியா டுடேயில் படிக்கறதுக்கு முன்னாடி நீங்க இங்க கொடுத்துட்டீங்க, இதிலிருந்தே தெரியலை தமிழரோட வேகம்:) எதுவா இருந்தாலும் நல்ல நோக்கத்தோட இருந்தா சரி தான்:)

இலவசக்கொத்தனார் said...

யப்பா உம்ம பின்னூட்டங்களில் அலைண்மெண்ட் இன்னும் ஜஸ்டிபைடாகவே இருக்கே. நெருப்பு நரியில் படிக்க முடியலை. கொஞ்சம் தயவு பண்ணுங்கப்பா...

Anonymous said...

அட இன்னும் கொஞ்சம் பொறு அப்பு பி.பி.சி வரைக்கும் நம்ம புகழ் பரவிரும் வேணும்ன்னா பாரு...

Anonymous said...

அட இன்னும் கொஞ்சம் பொறு அப்பு பி.பி.சி வரைக்கும் நம்ம புகழ் பரவிரும் வேணும்ன்னா பாரு...

Anonymous said...

அட இன்னும் கொஞ்சம் பொறு அப்பு பி.பி.சி வரைக்கும் நம்ம புகழ் பரவிரும் வேணும்ன்னா பாரு...

Syam said...

//இந்த ரத்த பூமில பல மாசமா விளையாடிக்கிட்டு இருக்கிற நீ இதை கேக்கலாமா//

@வெட்டி,

ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு :-)

மு.கார்த்திகேயன் said...

சத்தியமான உண்மைங்க மாம்ஸ்

கீதா சாம்பசிவம் said...

அட, கொஞ்சல்ஸ் ஆஃப் நாகை, பதிவு கூட எழுதி இருக்கா? கொஞ்சல் கூடவே பதிவுமா? சொல்லவே இல்லையே?

Anonymous said...

ahmmm.பல மாதங்களாக இங்கே இருக்கும் உங்களுக்குத் தெரியாத விஷயமா என்ன!

நாகை சிவா said...

//பல மாதங்களாக இங்கே இருக்கும் உங்களுக்குத் தெரியாத விஷயமா என்ன! //

தெரியலேயேங்க தெரியலே :-)

யாரு மாதிரி படிக்கனும் என்பது உங்களுக்கே தெரியும்...

நாகை சிவா said...

//அட, கொஞ்சல்ஸ் ஆஃப் நாகை, பதிவு கூட எழுதி இருக்கா? கொஞ்சல் கூடவே பதிவுமா? சொல்லவே இல்லையே? //

இது எல்லாம் ரொம்ப சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//யப்பா உம்ம பின்னூட்டங்களில் அலைண்மெண்ட் இன்னும் ஜஸ்டிபைடாகவே இருக்கே. நெருப்பு நரியில் படிக்க முடியலை. கொஞ்சம் தயவு பண்ணுங்கப்பா... //

தலைவா, தயவு பண்ணியாச்சு. பார்த்து சொல்லுங்க. சரியா இருக்கானு :-)