Saturday, November 04, 2006

திருநாகை அழகியார்

நாகையை சுற்றி அனைத்து மதத்தையும் சார்ந்த பல கோவில்கள் உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோவில்கள் - வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், செளந்தரராஜப் பெருமாள், எட்டுக்குடி முருகன், திருநள்ளாறு சனீஸ்வரன் போன்ற பல கோவில்களை சொல்லாம். என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு கோவிகளை பற்றியும் இங்கு தர முயற்சிக்கின்றேன். முதலில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவிலை பற்றி காண்போம்.

சிறு குறிப்பு

மூலவர் : ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீ செளந்தரவல்லி
உத்ஸ்வர் : நாகை அழகியார்
மூன்று கோலங்கள் : கிடந்தான், இருந்தான், நின்றான்
சிறப்பு அர்ச்சாமூர்த்திகள் : அஷ்டபுஜ நரசிம்மன், கருடன்
அமர்ந்தநிலை, பச்சைவண்ணன், பவழவண்ணன்
பூஜை : ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்மசம்ஹிதை பிரகாரம்
விமானம் : பத்ரகோடி விமானம்
புஷ்கரணி : சாரபுஷ்கரணி செளந்தர்ய புஷ்கரணி
ஸ்தலவிருட்ஷம் : மாமரம்

நாககன்னிகைக்கும் சாலீசுக மகராஜனுக்கும், பெருமாள் கன்னிகாதானம் செய்து கொடுத்த ஸ்தலம்.


திவ்யதேசங்கள் நூற்றெட்டு ஆகும். இதில் சோழ நாட்டில் உள்ளவை நாற்பது தலங்கள். இந்த நாற்பதில் நாகை வட்டத்தில் அமைந்த உள்ளவை இரண்டு. ஒன்று நாகப்பட்டினத்திலும் மற்றது திருக்கண்ணங்குடியில் உள்ளது. இத்திருகோவில் நாகை புகைவண்டி நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. பெருமாள் கோவிலுக்கு பஸ்நிறுத்தமும் உள்ளது.

கோவிலின் முகப்பில் ஒரு நாற்கால் மண்டபமும், அதனை அடுத்து தொண்ணூறு அடி உயரமுள்ள எழுநிலை கோபுரமும், விளங்க நாற்புறம் உயர்ந்த மதில்களும் உள்ளன. மேற்புற மதிலில் சிறு கோபுரத்துடன் கூடிய மேற்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. மதில்களைச் சூழ நான்கு மாட வீதிகளும், இராஜ கோபுர வாயிலுக்கு நேரே நீண்டதொரு சன்னதித் தெருவும், நாற்புறமும் தேர் ஒடும் பெரிய வீதிகளும் பொருந்தியுள்ளன.

மேற்கூறிய இடம் தான் எங்களில் எவர்கீரின் ஸ்பாட். இந்த நாலு தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் தான் இருப்போம். கோவிலுக்கு எதிரில் இருக்கும் ராஜா டீ கடையும் நம்ம ஸ்பாட்டில் ஒன்று. நம்ம சக பதிவர் "வடவூர் குமார்" மடவிளாகம் என்று தன் பதிவிற்கு பெயர் வைத்ததும் இந்த கோவிலின் மடவிளாகத்தை குறிக்கும் பொருட்டு தான் என்று எண்ணுகின்றேன். என்ன குமார் அண்ணன் சரி தானே? இது போக இந்த பகுதியில் இருந்து வந்து இருக்கும் மற்ற சக பதிவர்கள் நாம் அனைவரும் அறிந்த "கிழக்கு பதிப்பகம்" பத்ரி மற்றும் நண்பர் "அறுசுவை" பாபு. கோவிலை சுற்றியுள்ள தெருகளில் தான் நாங்க சிறு வயதில் கிரிக்கெட், கிட்டிபுல், பம்பரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவோம். தெருவில் இருக்கும் அனைவரின் சாபத்தையும் வாங்குவோம். ஹும் அது எல்லாம் ஒரு காலம். இன்றும் அங்கு நின்று சேட்டைகள் செய்தாலும் அந்த அறியா வயதில் செய்த சேட்டைகளே தனி தான். சரி சரி மீண்டும் கோவிலுக்கு போவோம்....

இக்கோவிலை சுற்றி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீ தேசிகர் கோவில், அனுமன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சர்ச் மதில் சுவற்றை ஒட்டி பவழக்காளி அம்மன் கோவிலும் உள்ளன.

கி.பி. 8 நூற்றாண்டில் திருமங்கையாழ்வார் எம்பெருமானை கண்டு வழிபட நாகை வந்தார், நின்ற கோலத்தில் உள்ள கருமாணிக்க கள்வனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தான் ஒரு தலைவி நிலையை அடைந்து தலைமகனாகிய பெருமானிடம் காதல் பூண்டார். அக்காம நோய் பலவாறு தன்னை நலிய அதனால் அப்பெருமானை உருவெளிப்பாட்டில் கண்டு மயங்கிக் கூறியதாக அகத்துறை பாசுரங்கள் அமைந்த பதிகம் ஒன்று அருளியுள்ளார்.

இக்கோயிலில் புராணம் சிற்பம் சரித்திரம் ஆகிய நிலைகளில் காணத்தக்க உருவங்கள் பல உள்ளன. ஸ்ரீ பெருமான் மூலவராக நின்ற நிலையிலும், அரங்க பெருமான் எனக் கிடந்த நிலையிலும் கோவிந்தராஜனாக இருந்த நிலையிலும் ஆக முவகைக் கோலங்களில் கோவில் கொண்டுள்ளார். நாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீ பெருமாள் சன்னதிக்கு செல்லும் தேர்வாயிலின் இருபுறமும் திருவாசியுடன் கூடிய எட்டடி உயரமுள்ள இரு துவார பாலகர்களின் சுதை உருவங்கள் அரிய சிற்ப அழகு வாயந்தது. திரிபங்கி நிலையில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை மூன்று கரங்களில் தாங்கிக் கொண்டு ஒரு கையால் காவல் முத்திரை காட்டிக் கொண்டு அமைதி தவழும் முகத்துடன் பல அணிகளைப் பூண்டு நிற்கும் இப்படைப்பு உருவம் பதினேழாம் நூற்றாண்டின் கலைப்படைப்பாகும். இது போன்ற பல சிற்பங்கள் இருந்தாலும் கட்டுரையின் நீளத்தை கருத்தில் கொண்டு அத்தோடு விடுகின்றேன். அடுத்த கட்டுரையில் இக்கோயிலில் நடைப்பெறும் பூஜைகள், விழாக்கள், கோவில் உள் இருக்கும் சன்னதிகளை பற்றி எழுதுகிறேன்.

எம்பெருமானை நாகை அழகியார் என்று அழைப்பார்கள். அந்த சற்றும் மிகை கிடையாது. ஒரு முறை எம்பெருமானை வந்து தரிசித்து பாருங்கள். அவன் அழகில் கண்டிப்பாக நீங்களும் மயங்கி விடுவீர்கள். வரும்போது நம்ம வீட்டுக்கும் ஒரு வருகை கொடுத்துட்டு போங்க.....

18 comments:

நாகை சிவா said...

சோதனை

நாகை சிவா said...

மீண்டும் சோதனை பின்னூட்டம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா...நாகை அழகியாருக்கு இப்போது பின்னூட்ட முடிகிறதே!
எம்பெருமான் திருவடிகளே சரணம்!
ப்ளாகரே உனக்கும் சரணம்!! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிவா
மூலவர் நீலமேகப் பெருமாளும், அவருக்குப் போட்டியாய் உற்சவர் செளந்தரராஜப் பெருமாளும் (நாகை அழகியார்) அழகோ அழகு!
செளந்தர ராஜன் = அழகுக்கே அரசன் ஆயிற்றே!

நெல்லுக்கடை அம்மனும், வேளாங்கண்ணி அம்மையும் அருள் சிந்தும் நாகைக்கு மீண்டும் செல்லும் ஆசையைக் கிளறி விட்டீர்கள்!
அருமையாக, ரத்தினச்சுருக்கமாக கூறியுள்ளீர்கள்! நட்சத்திர வாழ்த்துக்கள்!! மின்னுக பொலிவுடன்!!

"அச்சோ ஒருவர் அழகியவா" என்று ஒவ்வொரு அடியிலும் அழகில் உருகி நிற்கிறார் திருமங்கை ஆழ்வார்!
இதோ நாகைப் பாசுரம் (பத்தி பிரித்து எளிதாக):

அன்னமும் கேழலும் மீனும்ஆய
ஆதியை நாகை அழகியாரை

கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்
காமரு சீர்க்கலி கன்றிகுன்றா

இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை
ஏழும்இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்

மன்னவராய் உலகாண்டு மீண்டும்
வானவராய் மகிழ்வு எய்துவரே!!

Geetha Sambasivam said...

எல்லாம் படிச்சு வச்சுக்கிட்டேன். ஒரு "உள்ளேன் ஐயா" போட்டுட்டு ஒதுங்கிக்கறேன். அப்புறம் வரேன்.

Geetha Sambasivam said...

மேலே உள்ளது நேத்திக்குப் பதிவுக்கானப் பின்னூட்டம். நேத்திக்கு என்னமோ உங்க வீட்டு வாசல் திறக்கவே இல்லை. ஒரே அடம்.
ம்ம்ம்ம்ம்ம், நீங்களும் மெதுவா ஆன்மீகம் எழுத ஆரம்பிச்சிருக்கிங்க. நல்லாவே தகவல் சேகரிச்சு விவரமா எழுதி இருக்கீங்க. பக்கத்திலே உள்ள திருக்கண்ணபுரம் (திருக்கண்ணங்குடி இல்லை) செளரி ராஜப் பெருமாள் பத்தியும் எழுதுங்க. நான் அங்கே போனப்போ உங்க ஊர் வந்து அங்கே இருந்து தான் ஆட்டோவிலே போனேன்.

வடுவூர் குமார் said...

சகோலி ஆடியதிலிருந்து கோலி போட்டது வரை!! செளந்திராஜப்பெருமாளை சுற்றி தான் சிவா.
படங்களை தனிமெயிலில் போட்டுள்ளேன் பாருங்க.ளந்தரராஜப் பெருமாள்

குமரன் (Kumaran) said...

சிவா. நாகை அழகியாரைப் பற்றி நிறைய தகவல்களுடன் மிக நன்றாக மிக மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். முன்பு நாகை அழகியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது தான் அதிக சேதியை அறிந்தேன். திருமங்கையாழ்வாரின் பாசுரங்களையும் எடுத்து அடுத்தப் பதிவுகளில் இடுங்கள்.

நாகை சிவா said...

//சிவா
மூலவர் நீலமேகப் பெருமாளும், அவருக்குப் போட்டியாய் உற்சவர் செளந்தரராஜப் பெருமாளும் (நாகை அழகியார்) அழகோ அழகு!
செளந்தர ராஜன் = அழகுக்கே அரசன் ஆயிற்றே!//

மிக்க உண்மை ரவி. படங்களை ஒரு பதிவாக போட்டு உள்ளேன். காணவும்.


பாசுரத்தை போட்தற்கு மிக்க நன்றி. நீங்கள் போட்ட பாசுரத்தின் தலைப்பு "வல்லவர் வானவராவர்". பத்தி பிரித்து எழுதியதற்கும் மிக்க நன்றி. மத்த பாசுரங்களை விரைவில் போடுகின்றேன்.

நாகை சிவா said...

//ம்ம்ம்ம்ம்ம், நீங்களும் மெதுவா ஆன்மீகம் எழுத ஆரம்பிச்சிருக்கிங்க. //

மெதுவாகவோ, விரைவாகவோ, ஒரு நாள் அனைவரும் அதை நோக்கி போய் தானே ஆக வேண்டும்.

// பக்கத்திலே உள்ள திருக்கண்ணபுரம் (திருக்கண்ணங்குடி இல்லை) செளரி ராஜப் பெருமாள் பத்தியும் எழுதுங்க.//

இந்த தடவை ஊருக்கு செல்லும் போது எழுதுகின்றேன்.

நாகை சிவா said...

//சகோலி ஆடியதிலிருந்து கோலி போட்டது வரை!! செளந்திராஜப்பெருமாளை சுற்றி தான் சிவா.படங்களை தனிமெயிலில் போட்டுள்ளேன் பாருங்க.//

அதே தான் இங்கும். என்றும் நம்முடன் இருப்பவன் அவன்.

படங்கள் வந்தது. தனி பதிவாகவே போட்டு விட்டேன். மிக்க நன்றி குமார்

நாகை சிவா said...

//முன்பு நாகை அழகியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது தான் அதிக சேதியை அறிந்தேன். //

ஒரு முறை வருகையும் புரிங்க குமரன்

//திருமங்கையாழ்வாரின் பாசுரங்களையும் எடுத்து அடுத்தப் பதிவுகளில் இடுங்கள். //

விரைவில் கண்டிப்பாக(உங்களுக்காவே)
இடுகின்றேன்.

இராம்/Raam said...

//எம்பெருமானை நாகை அழகியார் என்று அழைப்பார்கள். அந்த சற்றும் மிகை கிடையாது. ஒரு முறை எம்பெருமானை வந்து தரிசித்து பாருங்கள். அவன் அழகில் கண்டிப்பாக நீங்களும் மயங்கி விடுவீர்கள். வரும்போது நம்ம வீட்டுக்கும் ஒரு வருகை கொடுத்துட்டு போங்க..... //

கண்டிப்பா சிவா,

திருத்தலத்தை தரிசிக்கனுமின்னு தூண்டிவிட்டது உன்னுடைய இப்பதிவு.

இராம்/Raam said...

அப்படி வர்றப்போ தங்கறதுக்கு உன்னோட வீட்டுக்குதான் வருவோம்ப்பா!!!!!!

நாகை சிவா said...

//திருத்தலத்தை தரிசிக்கனுமின்னு தூண்டிவிட்டது உன்னுடைய இப்பதிவு. //

வாப்பா வா, சீக்கிரம் வா

வீட்டில் தங்குவதற்கு எல்லாம் கேட்கனுமா என்ன...

கஸ்தூரிப்பெண் said...

ஊர்ஸ், உள்ளேன் அய்யா!!!!

என்னா நம்ம ஊர், நீலாயதாக்ஷிய மறந்துட்டீங்க?

இங்க நம்ம ஊரப்பத்தி பீத்திக்கிற்தெல்லாம்
காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி, நாகை நீலாயதாக்ஷி-ன்னு....

எப்படியோ,மலரும் நினைவுகள ஆரம்பியுங்கோ!!!

Anonymous said...

thambi enna nagapattinama.
enna romba villakama ella koilayum vilakirukinga.
romba santhosam.
ippa enaku ninaivukku varuvathellam angineyar koil sundal than.
matrum panchi kaikaka perumal koil poosoriyai noki kallu vittathu than gabakathu ku varuthu.
matrum nellu kadai mari amman .

nama veduum kadembodi yil than iruku.

Thambi sandana mariyammaniyum maranthitingaley

Alfred.

Anonymous said...

Thambi entha school la padichinga?
Elementary, middle, mattrum higher secodary school kalai iyum pathi koncham eluthungo. enna indha payanum london vanthathu antha schools la onnula padichi than.

Alfred-London