மக்களே!
எந்த போட்டிய பத்தி சொல்கிறேன் என்பது உங்களில் பல பெயருக்கு தெரிந்து இருக்கும். பலரும் போட்டியில் கலந்து கொண்டு உங்க படைப்புகளை அனுப்பி கொண்டு தான் உள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் சென்று அடையாத மற்ற நண்பர்களுக்கும் சொல்லும் பொருட்டு ஏற்கனவே சங்கத்தில் செய்த அறிவிப்பை இங்கு மறுபடியும் வெளியிடுகின்றேன்.
எங்களுக்கு(முக்கியமாக - கைப்புள்ள) தான் கவுஜ் ஆகாது என்று சொல்வதை விட வராது. வராத விசயத்திற்கு நாங்க என்னிக்குமே ஆசைப்பட மாட்டோம். அதுவும் இல்லாம அப்படி எல்லாம் எங்களால் பீல் பண்ண முடியாது. நம் தமிழ்மணத்தில் தான் பீல் பண்ணும் மக்கள் ஏகப்பட்ட நபர்கள் உள்ளீர்களே. அப்படிப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் பதிவுகளில் இருந்து பொதுவான ஒரு தளத்திற்கு வருவதற்க்கான வாய்ப்பு. வாய்ப்பை பயன்படுத்தி மிக அருமையான உங்கள் படைப்புகளை அளித்து எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகின்றோம். அந்த ஊக்கத்தை கொண்டு பல ஆக்கங்களை (முயற்சிகளை) செய்யும் எண்ணம் உள்ளது. கவிதை எழுதும் திறன் உள்ள அனைவரும் கலந்து கொள்ளுங்கள். எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்புங்கள். வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
இனிமையான அறிவிப்பு:
தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப் பெறும் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் படைப்புகளை, கவிஞர் மு.மேத்தா அவர்கள் தேர்வு செய்து தர இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
* போட்டிக்கான தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்"
* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)
* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல் முகவரி - kavithai.tsangam@gmail.com
விதிமுறைகள்:
1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது
4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.
5. படைப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும்.
6. தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)
7. உங்கள் படைப்பு, தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.
Tuesday, August 29, 2006
போட்டிக்கு தயாரா?
புகுந்து ஜமாயுங்கள் தோழர்களே!
போட்டிக்கு வந்த க"விதை"களை காண தமிழ் சங்கத்திற்கு வருகை புரியவும்.
சொன்னது நாகை சிவா என்னிக்குனா Tuesday, August 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
தயார் தான்...ஆசை இருக்கு யானை மேய்க்க அம்சம் இருக்கு கழுதை மேய்க்க..என்ன பன்றது...யாராவது கோயில்ல எழுதி குடுத்தாங்கனா நல்லா இருக்கும்.... :-)
போட்டிக்கு கவிதை அனுப்பரவங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
கவிதையா!!! எனக்கு எல்லாம் படிக்க மட்டும் தான் தெரியும் :(
//யாராவது கோயில்ல எழுதி குடுத்தாங்கனா நல்லா இருக்கும்.. :-)//
பங்காளி நான் வேண்டும் என்றால் எழுதி தரட்டுமா?
//கவிதையா!!! எனக்கு எல்லாம் படிக்க மட்டும் தான் தெரியும் :( //
பொற்கொடி! கவிதை படிப்பது தான் கவிதை எழுதுவதற்கு ஆனா ஆரம்பம்.
இந்த கவிதை போட்டி ஒரு ஆரம்பம் என்று நினைத்து எழுத ஆரம்பிங்கள்.
க"விதை" எல்லாம் என்னாலே எழுத முடியாது. யாராவது எழுதினால் படிப்பேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்ன, பதிவு பிரிச்சுக் கொடுத்தாப் பின்னூட்டம் போட வரக்கூடாது ஏதாவது சட்டமா? ஆளே காணலை அந்தப் பக்கம்?
//என்ன, பதிவு பிரிச்சுக் கொடுத்தாப் பின்னூட்டம் போட வரக்கூடாது ஏதாவது சட்டமா? ஆளே காணலை அந்தப் பக்கம்? //
ஊருக்கு போறேன் சொன்னீங்களே. போயி இருப்பீங்க பாத்தேன். இன்னும் இல்லயா, வரேன் வரேன்....
//பரிசுக்குரிய கவிதையை தேர்ந்தெடுக்க பெரிய ஆளா தான் பிடிச்சிருக்கீங்க:)//
எங்கள் சங்கத்தின் மூத்தவர் எடுத்த முயற்சியின் பலனாக கிட்டய பாக்கியம். எல்லா புகழும் அவருக்கே.
//சங்கத்துப் பக்கம் ஒரே கவிதை மழையா பொழியுது:) //
ஆமாம், ஆமாம். நீங்களும் பொழியுங்கள். எத்தனை கவிதை வேண்டுமானுலும் அனுப்பலாம்.
காப்பியடித்த கவிதையை அனுப்பலாமா ? எனக்கு என்னைக்குமே சொந்தமா எழுதற பழக்கம் கிடையாது ..
:))))
ரவி!
காப்பி அடித்தது வேண்டாம். உங்களுக்கு தெரிந்தவர்களை எழுதி தர சொல்லி அதை அனுப்புங்க. ;)
Nice tiger.
you should once traveln in SQ and Royal air thai. azhagu... hmmm parrappa kannalla appuramm irrukkkku thukkama appadinaa
ellarkkkum all the best!
என்ன பங்கு புதுசு ஒன்னும் கானோம்....லீவ்ல போய்டியா :-)
தல results eppa announce பண்ணுவீங்க!
long time no hear Siva..
hope all is well with you
romba naal leave potinga bench mela ethirven.. seekram vandrunga.. :)
என்ன ஆச்சு புலிக்கு, ஒரு மாசமா சொல்லாத லீவா? அல்லது உடம்பு சரியில்லையா? புலி, வீறு கொண்டு எழுக!
Kavithai anupara ellarukum All the Best.. Apdye vara kavithai le onnu rendu post pannunga padikalam.
atlst once u blog in engalees pa...
//Peace said...
Nice tiger. //
Peace, என்னை தானே சொல்லுறீங்க, ரொம்ப தாங்க்ஸ் :)
//you should once traveln in SQ and Royal air thai. azhagu... hmmm parrappa kannalla appuramm irrukkkku thukkama appadinaa //
அப்படியா, எப்படியாச்சும் ஒரு தடவை அதில் எல்லாம் போயி விட வேண்டியது தான். ;0)
//ellarkkkum all the best! //
நன்றி சுபா!
//Kavithai anupara ellarukum All the Best.. Apdye vara kavithai le onnu rendu post pannunga padikalam. //
நன்றி ஜனனி. கவிதை எல்லாம் தமிழ் சங்கத்தில் உள்ளது. சுட்டி என் பதிவிலே உள்ளது. சென்று அனைத்து கவிதைகளை படிக்கவும்.
//என்ன பங்கு புதுசு ஒன்னும் கானோம்....லீவ்ல போய்டியா :-) //
லீவு எல்லாம் இல்ல பங்கு, சூழ்நிலை அப்படி ஆகி போச்சு. வந்தாச்சு இப்ப. இனி மேல் அடிச்சு ஆட வேண்டியது தான். :)
//தல results eppa announce பண்ணுவீங்க! //
தேவதை! முதல் முயற்சி என்பதால் சிறிது கால தாமதம் ஆகி விட்டது. விரைவில் அறிவித்து விடுவோம்.
//long time no hear Siva..
hope all is well with you //
ராஜீ! மறக்காமல் ஞாபகம் வைத்து கேட்டதற்கு மிக்க நன்றி. மிக்க நலமே. தாங்கள் எப்படி உள்ளீர்கள்?
//romba naal leave potinga bench mela ethirven.. seekram vandrunga.. :) //
ஆத்தாடி, பெஞ்சு மேலயா? வேணாங்க. இதோ வந்தாச்சு.....
//என்ன ஆச்சு புலிக்கு, ஒரு மாசமா சொல்லாத லீவா? அல்லது உடம்பு சரியில்லையா? புலி, வீறு கொண்டு எழுக! //
ஒன்னும் ஆகல, உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு. வீறு கொண்டு தான் வரனுமா, சரி வரேன் ;)
//atlst once u blog in engalees pa... //
பாரதி, என்னங்க சொல்லுறீங்க. சத்தியமா ஒன்னும் புரியல. ஆனா என்னை திட்டலனு மட்டும் புரியுது. சரி தானே.
Post a Comment